Friday, August 28, 2009

தலைமைப்பதவியை துறந்தார் பாண்டிங்.

அவுஸ்திரேலிய அணியின் தலைவராக வீறு நடை போட்டு நெஞ்சை நிமித்தி கடந்த சில மாதங்களாக வலம் வந்த ரிக்கி பாண்டிங் இன்று வெறும் நடைப்பிணமாக வாழ்கின்றார்.

இருபத்தோராவது வயதில் கிரிக்கெட்டில் தடம் பதித்த பாண்டிங் தன் அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே 96 ஓட்டங்களை பெற்று தன் வரவை அவர் நிரூபித்துக் காட்டினார். அதன் பின்னர் அவர் திறமை இன்றுவரை மங்கவில்லை என்பது உண்மையே. அதேநேரம் தன் முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெறும் ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று அதிர்ச்சியுடன் ஆரம்பித்தார் தன் பயணத்தை.ஆனால் போட்டிகளில் அதிரடியாக ஓட்டங்களை பெற்று சாதனையோடு ஆரம்பித்தார்
. பாண்டிங் இப்போது மற்ற அணி வீரர்களையும் அணிகளையும் வாட்டும் பழக்கம் அவரின் ஆரம்பகாலத்தின் பழக்க வழக்கத்தின் மூலமே நாங்கள் அறியக்கூடியதாக இருக்கும். தன் ஆரம்பகாலத்தில் அடிக்கடி மது அருந்திவிட்டு பிரச்சனை கொடுப்பதென எப்படியெல்லாம் பெயரை கெடுக்க முடியுமோ அவ்வளவிற்கு கெடுத்துக்கொண்டார். அணிக்குள் இருக்கவே தகுதி அற்றவர் என எல்லோரும் தூற்றிய நேரம் ஓரளவிற்கு தன்னை மாற்ற ஆரம்பித்த நேரமே 2002ஆம் ஆண்டு ஒருநாள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அப்படி இருப்பினும் தன் வழக்கமான குழப்படிகளை குறைத்துக்கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்த ஆரம்பித்தார்.அதன் பிரதிபலனாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அணியை வழி நடத்தும் பொறுப்பு பொண்டிங்கிடம் வழங்கப்பட்டது. ஸ்டீவ் வாவின் தலைமையில் வெற்றிபெறும் வழியை தெரிந்து கொண்ட அணி, பொண்டிங்கின் தலைமையில் வெற்றிக் கோட்டைகளை கட்டத் தொடங்கியது.

பாண்டிங்க்கு தொட்டதெல்லாம் துலங்க தொடங்கியது. வெற்றி மேல் வெற்றி குவிந்தது.வெற்றிக்கே பிறந்தவர் என்னும் மமதையில் பொண்டிங்கும் அவர் சகாக்களும் ஆடிய ஆட்டம் இன்னும் கண் முன் நிற்கிறது. ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதற்கேற்ப இந்தியாவின் கங்குலி அவுஸ்திரேலியர்களை அடக்கும் வேலையை அவர்கள் பாணியிலேயே ஆரம்பித்து வைத்தார். அதன் பின் வந்த தோனியின் தலைமையிலான இளம்படை, சாட்டை அடியுடன் இடியைக்கொடுக்க தென் ஆபிரிக்க இலங்கை என எல்லா அணிகளும் பொண்டிங்கின் சகாக்களை வறுத்தெடுக்க பழகிக்கொண்டனர்.

அவுஸ்திரேலியாவில் வைத்தே அவர்களை மண்கவ்வ வைத்து இந்திய அணி அவர்களின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டிவைத்து. அதன் பின்னும் அடிபட்ட புலி போல எழுவதும் வீழ்வதுமாக பாண்டிங் குழுவினர் தங்கள் வழக்கமான விளையாட்டையும் விளையாடி வந்தனர். இந்த நேரம் பார்த்து நீண்ட நாட்களாக அணியின் முதுகெலும்பாய் இருந்த பலர் ஓய்வு பெற அணியும் ஆட்டம் காண தொடங்கியது. இம்முறையும் ஆஷசில் வெற்றி கிடைக்கும் அன்ற இறுமாப்புடன் இங்கிலாந்தில் காலடி வைத்த பாண்டிங் குழுவினருக்கு இறுதியில் ஆப்படித்தது அனுப்பிவிட்டது இங்கிலாந்து அணி. எத்தனை முறை தான் அடிக்க அடிக்க வாங்குவது என முடிவெடுத்து விட்டாரோ என்னவோ இந்த தோல்வியோடு ஒருநாள் மற்றும் போட்டிகளின் தலைமைப்பொறுப்பை துறந்து டெஸ்டில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக சொல்லி இருக்கின்றார்.
இதுவரை நல்ல தலைவராக வழி நடத்தியவர் இறுமாப்பு காரணமாகவே இறுதிக்காலங்களில் தோல்வியை சந்திக்கிறார். அந்த இறுமாப்பை தவிர்த்து விளையாட்டை விளையாட்டாய் விளையாடி இருக்கலாம். யாருக்கு பயந்தாரோ இப்போது தலைமை என்னும் கிரீடத்தை இழக்க துணிந்து விட்டார். என்ன தான் பாண்டிங் மற்றவர்களை ஒரு பொருட்டாக மதிக்காவிட்டாலும் அவர் ஒரு சிறந்த தலைவரே. அப்படிப்பட்ட ஒருவரை இழப்பது அவுஸ்திரேலியாவிற்கு மட்டுமல்ல முழு கிரிக்கெட் உலகிற்கும் இழப்பே.
Share:

12 கருத்துரைகள்:

Anonymous said...

When did Ricky Ponting step down from captaincy?.

முரளிகண்ணன் said...

ஷேன் வார்ன், கில்கிறிஸ்ட், மெக்ராத,ஹெய்டன், லாங்கர் ஆகியோர் ஆடிய அணிக்கு கழுதை கேப்டனாக இருந்தாலும் ஜெயித்திருக்கும்.
(டேமியன் மார்ட்டின்,சிமண்ட்ஸ் வேறு)

இந்த லெஜண்டுகள் இல்லாத சாதரண அணி என்பதால் பாண்டிங் சாயம் வெளுத்து விட்டது.

அவர் இம்ரான்கான் போலவோ, ரணதுங்கா போலவோ இன்ஸ்பயரிங் கேப்டனோ அல்லது மைக் பியர்லி போல வியூக வித்தகரோ கிடையாது.

அரு சராசரி கேப்டன். பிரஷர் சிட்சுவேஷனில் எல்லாம் அவர் தோற்றுத்தான் போயிருக்கிறார்.

Nimalesh said...

wat ever said & that he is classy captain, not only to Aussie, to world cricket..... & world class player...

ARV Loshan said...

விபரம் எல்லாம் சரி தான்.. ஆனால் விஷயம் மட்டும் பிழை..

பாண்டிங் இன்னும் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கவில்லை.. ஒருநாள், டெஸ்ட் அணிகளுக்கு தனித்தனித் தலைவர்கள் என்றாலும் தான் தயார் என்று தான் சொல்லி இருக்கிறார்..

பாண்டிங் உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீர.. ஆனாலும் சராசரி தலைவர் மட்டுமே.. அவரது அதீத உணர்ச்சிவசப்படுதலே அவரின் பலவீனம்.

SShathiesh-சதீஷ். said...

பெயரில்லா கூறியது...
When did Ricky Ponting step down from captaincy?.

உத்தியோக பூர்வமாக் அவர் விலகவில்லை ஆனால் சிட்னியில் வைத்து தான் அந்த பதவிகளை துறக்க தயார் என சொல்லி இருக்கின்றார்.

SShathiesh-சதீஷ். said...

முரளிகண்ணன் கூறியது...
ஷேன் வார்ன், கில்கிறிஸ்ட், மெக்ராத,ஹெய்டன், லாங்கர் ஆகியோர் ஆடிய அணிக்கு கழுதை கேப்டனாக இருந்தாலும் ஜெயித்திருக்கும்.
(டேமியன் மார்ட்டின்,சிமண்ட்ஸ் வேறு)

இந்த லெஜண்டுகள் இல்லாத சாதரண அணி என்பதால் பாண்டிங் சாயம் வெளுத்து விட்டது.

அவர் இம்ரான்கான் போலவோ, ரணதுங்கா போலவோ இன்ஸ்பயரிங் கேப்டனோ அல்லது மைக் பியர்லி போல வியூக வித்தகரோ கிடையாது.

அரு சராசரி கேப்டன். பிரஷர் சிட்சுவேஷனில் எல்லாம் அவர் தோற்றுத்தான் போயிருக்கிறார்

:=))உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள்.

SShathiesh-சதீஷ். said...

யோ வாய்ஸ் கூறியது...
:)

நன்றிகள்

SShathiesh-சதீஷ். said...

Nimalesh கூறியது...
wat ever said & that he is classy captain, not only to Aussie, to world cricket..... & world class player...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

SShathiesh-சதீஷ். said...

LOSHAN கூறியது...
விபரம் எல்லாம் சரி தான்.. ஆனால் விஷயம் மட்டும் பிழை..

பாண்டிங் இன்னும் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கவில்லை.. ஒருநாள், டெஸ்ட் அணிகளுக்கு தனித்தனித் தலைவர்கள் என்றாலும் தான் தயார் என்று தான் சொல்லி இருக்கிறார்..

பாண்டிங் உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீர.. ஆனாலும் சராசரி தலைவர் மட்டுமே.. அவரது அதீத உணர்ச்சிவசப்படுதலே அவரின் பலவீனம்

;==))அண்ணா உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் சொன்னது சரி இன்னும் அவர் உத்தியோக பூர்வமாக பதவியை துறக்க வில்லை ஆனால் துறக்க தயாராகிவிட்டார். தலைப்பின் சூட்டுக்காக அப்படிப்போட்டேன் உள்ளடக்கம் விளக்கமாக இருக்கின்றது என நம்புகின்றேன். இருப்பினும் இந்த விடயத்தை தெளிவு படுத்தியமைக்கு நன்றிகள்.

Nimalesh said...

ungaa Topica parthu konjam shock.. coz morning VILAYATTU THIDAL la. ithu parthi onnume solla.. apparam yeppadi nu... even i checked some sites too.........

SShathiesh-சதீஷ். said...

Nimalesh கூறியது...
ungaa Topica parthu konjam shock.. coz morning VILAYATTU THIDAL la. ithu parthi onnume solla.. apparam yeppadi nu... even i checked some sites too........

மன்னிகவ்ம் நிமலேஷ் நேற்று விளையாட்டு திடலில் சொன்னேன். நீங்கள் கவனிக்கவில்லை.

Nimalesh said...

ohh okzz.. bro.. thx for the infor...

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive