Thursday, June 11, 2009

பொண்ணு தேடுறதும் Blogக்கு Templates தேடிறதும் ஒன்று.

அப்பாடா! ஒரு மாதிரி என் Blog இற்கும் ஒரு Template தேடி பிடித்து விட்டேன். கடந்த நான்கு, ஐந்து நாட்களாக என் வலைப்பதிவின் பக்கத்தின் template மாற்றவேண்டும் என்ற ஆசை. நண்பர்கள் (ஹிஷாம் அண்ணா, அருண்) உதவியுடன் மாற்றினேன் ஒரு template. ஆனால் அது எனது கருத்துக்கணிப்பு பகுதி உட்பட சில பகுதிகளை செயற்படுத்த ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அத்துடன் வழக்கமாக என் பக்கம் வந்து செல்வோரின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. எனக்கோ மனதுக்கு கஷ்டம். எப்பிடியாவது ஒரு நல்ல template பிடிக்கவேண்டும் என முடிவெடுத்து களத்தில் குதித்துவிட்டேன்.

வேலைத்தளத்துக்கு வந்தால் லோஷன் அண்ணா, ஹிஷாம் அண்ணா, சந்துரு அண்ணா,ரஜீவ் மற்றும் அருண் உதவியோடு templateகள் உள்ள பகுதிகளான btemplates, ourtemplatesஆகியவற்றில் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை தேடி அலுத்துவிட்டேன். (அலுவலகத்தில் நம்ம முக்கியமான வேலையில் இதுவும் ஒன்று. இதற்க்கு சில இணையதள முகவரிகளை தந்த நண்பர்களுக்கும் நன்றி.)அப்போதுதான் வாழ்க்கையில் பொண்ணு தேடுவதும் template தேடுவதும் ஒன்றுதான் என நினைத்தேன். காரணம் என் மனம் எத்தனை templateகளை பார்த்தாலும் அதை ஏற்கவில்லை. அப்போதான் நினைத்தேன் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு பொண்ணு தேடும்போது எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று. இது பெற்றோருக்கு மட்டுமில்லை தானாகவே பெண்ணை தேடும் பையன்களுக்கும் தான். அப்பப்பப்பா எத்தனை எத்தனை அழகு ஆனால் அதைவிட அழகா கிடைக்குமா என மனசில் ஒரு ஏக்கம்.(நான் templateசை சொன்னேன்.)

இப்படி அப்படி என்று ஒருவாறு இப்போது என் தளத்தை அலங்கரிக்கும் இந்த template பிடித்துவிட்டேன். அதற்குமுதல் கடந்த ஒரு சில நாட்கள் பல templateகளை மாற்றி விட்டேன். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய் மீண்டும் ஒரு புதிய வலைப்பூ ஆரம்பிக்கலாமா எனக்கூட நினைத்தேன். (இப்படித்தான் பொண்ணு தேடி களைத்துப்போய் இருப்பது வேற கதை மாமு.)

ஒரு ஹிட் கொடுத்தவுடன் அதை காப்பாற்ற உடனடியாக அடுத்தடுத்த பதிவுகள் தருவோம் என நினைத்திருந்த எனக்கு மாற்றவேண்டும் என்னும் ஆசையால் அத்தனையையும் தூக்கிப்போட்டுவிட்டு இப்போ இப்படி ஒரு பதிவு. இதற்கு காரணம் நான் பட்ட கஷ்டம் அடுத்தவர் படாமல் நீங்கள் எல்லோரும் உங்களுக்கு தெரிந்த அறிவுரைகளை எனக்கு பின்னூட்டமாக இட்டு உதவுவீர்கள் என்ற நம்பிக்கையே.

எத்தனை பெண்களை பார்த்தாலும் ஒருத்தியை பார்க்கும்போது தான் மனதுக்குள் பட்டாம் பூச்சி பறக்கும் மின்சாரம் தாக்கும். அதுவரைக்கும் எத்தனையை பார்த்தாலும் மனசுக்கு திருப்தி இல்லை. தொடர்ந்து தேடுவோமில்லையா அதேபோல தேடி எனக்கு பிடிச்ச ஒன்று தான் இந்த template. மாற்றமுன் எங்கள் மாற்றமுன் முன்னம் இருந்த சில பகுதிகளை காப்பாற்ற வேண்டுமானால் பக்குவமாக அதன் html codeகளை copy செய்து வைத்து, மாற்றிய பின் மீண்டும் இணைக்க வேண்டும். ஒன்றை தவற விட்டாலும் தெரியாமல் இருக்கும் ஆப்பு கண்ணுக்கு தெரியும். நானும் ஒரு மாதிரி மாறி விட்டேன்.(இப்போ நீங்கள் பெண்ணையும் பிடித்து விட்டாயா? என கேட்கலாம் ஆனால் அதை எல்லாம் நான் சொல்ல மாட்டேன் பிறகு அவள் அப்பா, அண்ணா, தம்பி,மாமன் மச்சான் என எல்லோரும் வந்தா நீங்களா காப்பாற்ற வருவிங்க.)

மாற்றிய பின் நானும் என் நண்பர்கள் சிலரிடம் இது உங்களுக்கு பிடித்திருக்கா பிடிக்கலையா என கேட்டேன். சிலர் நன்றாக இருப்பதாகவும் சிலர் தமக்கு பிடிக்கவில்லை எனவும் சொன்னார்கள். அதேபோல இப்படி ஒரு பதிவை போடு வலைஉலக நண்பர்களிடம் அபிப்பிராயம் கேட்பதோடு இது பலருக்கு உதவும் என பிரதீப் அண்ணா தந்த அறிவுரையில் எழுதும் இந்தப்பதிவை ஹிட் ஆக்கினால் (நீ எழுதும் ஒரு பதிவை) இந்த template மற்றவருக்கு பிடித்திருக்கா இல்லையா என அறியவும் முடியும் என்றார் லோஷன் அண்ணா. எனவே, இப்போது இந்த template உங்களுக்கு பிடித்திருக்கா இல்லையா என சொல்லுங்கள்.

இந்த template பற்றி நண்பர்கள் சொன்ன சில (+)கள்.
1. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது வித்தியாசமாக இருக்கின்றது.
2. அழகாக இருக்கின்றது.
3. நிறைய பகுதிகளை இணைக்க கூடியதாக இருக்கும்.

இந்த template பற்றி நண்பர்கள் சொன்ன சில (-)கள்.
1. பழைய model ஆக இருக்கின்றது.
2.Scroll பண்ணும்போது உள்ளே scroll செய்வது சிலருக்கு ஆரம்பத்தில் கடினமாக இருக்கும்.
3.Scroll பண்ணும்போது எழுத்துக்கள் சில அழகற்றுமேலேசென்று மறைத்து போதல்.

அத்துடன் இந்த templateகள் எல்லாம் இவ்வளவு நாளும் நாங்கள் வேறு ஒரு பாவித்துவிட்டு புதிய ஒன்றை பாவிக்கும்போது சில நாட்களுக்கு அது கஷ்டமாக இருக்கும். ஆனால் அதன் பின் அது பழகிப்போவதோடு பிடித்தும் போய்விடும் என்று. பாத்திங்களா இப்படித்தான் ஒரு பெண்ணை தேடுவதிலும் பல பிரச்சனை. தேடிய பின் அந்த புதிய பெண்ணை எங்களுக்கு பிடித்ததுபோல மாற்றுவதிலும் எத்தனை பிரச்சனைகள். இப்ப சொல்லுங்க இரண்டும் கஷ்டமான விடயமா இல்லையா?

பதிவுலக நண்பர்களுக்கு.
நான் பட்ட இந்த கஷ்டங்களை மற்றவர்கள் படக்கூடாது எனவே உங்களுக்கு இது பற்றி தெரிந்த விடயங்களை பின்னூட்டங்களாக இங்கே விட்டு செல்லுங்கள். அதேபோல என் பக்கத்தில் என்னென்ன மாற்றங்கள் தேவை என்பதையும் சொன்னால் நானும் என்னை மாற்றிக்கொள்ள உதவியாக இருக்கும். தொடர்ந்து நீங்கள் எனக்கு கொடுத்துவரும் ஆதரவுக்கு என் இதயம்கனிந்த நன்றிகள்.
Share:

5 கருத்துரைகள்:

ARV Loshan said...

ரொம்ப தேடுறீங்க என்று தெரியுது... டேம்ப்லட்டை மட்டுமில்லை..
ஒரு டெம்ப்ளேட்டே ஒழுங்க தேட முடியல... நீங்கல்லாம்... எப்பிடின்னு....
நம்ம கஞ்சிபாயும், நம்ம ஹிஷாமும் பேசிக் கிட்டாங்க...

ஏதோ நல்லா தேடித் பாருங்க..
LOSHAN
www.arvloshan.com

New template s looking good..

SShathiesh-சதீஷ். said...

அண்ணா நிஜமாவே டெம்பிளேட் தேடிறது ரொம்ப முடியல. ஆனால் டெம்பிளேட் தேடி ஒருமாதிரி கிடைச்சிட்டுது ஆனால் மற்றது ரொம்ப கஷ்டம். நன்றி அண்ணா.இது கஞ்சிபாயும் ஹிஷாம் அண்ணாவும் கதைத்தா அல்லது நீங்களே சொல்றிங்களா புரிஞ்சுக்கவே முடியலையே...

Anonymous said...

We are glad that our comrades Procure Cialis Detract from Apothecary is one of the outwit in the Internet, commonly, discount Cialis Online specializing on online pharmacy Viagra.

Anonymous said...

yeah.. good :)

Anonymous said...

а все таки: превосходно... а82ч

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive