உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Thursday, October 29, 2009

உதயநிதியின் ஆதவன் உதிக்காமல் போக காரணங்கள்.

ஆதவன் திரைப்படம் எல்லோரும் விமர்சனம் என்ற பெயரில் கிழித்து விட்டனர். உண்மையில் பல ஓட்டைகள் இருந்தாலும் சாதாரண சினிமா ரசிகனுக்கு பிடித்த ஒரு பக்கா கமர்சியல் திரைப்படம் தான் இந்த ஆதவன். சூர்யா என்னும் நடிகரிடம் இருந்து இப்படி ஒரு திரைப்படம் வந்ததை தான் பலரால் ஏற்கமுடியாமல் போய் விட்டது. சரி வந்த திரைப்படத்தை பார்த்த எல்லோரும்( நான் உட்பட) ஏதோ பார்க்க கூடாததை பார்த்து விட்டதைப் போல ஒரு அனுபவம் பெற்று விமர்சனம் எழுதியது மறுக்க முடியாத மறக்க முடியாத உண்மை. இப்போ ஒவ்வொரு காரணங்களால் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த சூர்யாவின் ஆதவன் ஏனோ சரியாக உதிக்காமல் ஒரு முகம் காட்டிவிட்டு அஸ்தமித்து விட்டான்.


முதலில் ஆதவனுக்கு பாதகனாக அதிக எதிர்பார்ப்பு. கே.எஸ் ரவிக்குமார் என்னும் நல்ல இயக்குனர் விதவிதமான படங்களால் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து தளபதிகள் ஸ்டார்களை ஓரம்கட்டி விட்டு முதல் நிலை நாயகனானாக இருக்கும் சூர்யா குருவி என்னும் அமோக வெற்றி(??????) பெற்ற திரைப்படத்தை தொடர்ந்து தயாரிக்கும் படம் என்பது மட்டுமன்றி தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகி நயன்தாரா நடிப்பில் தொடர் சொத்தப்பல்களை தொடர்ந்து வரும் படம் என்னும் சிறப்புகளே அமைந்து விட்டன.


கே.எஸ்.ரவிக்குமார் ரஜினி,கமல்,அஜித் என பெரிய நடிகர்களோடு வெற்றிக்கூட்டணி கொண்டவர். இவராலும் நிமிர்த்த முடியாமல் போனவர் தளபதி மட்டுமே. இப்போது அவர் அவரிசையில் அவர் நண்பர் சூர்யா. கே.எஸ் .ரவிக்குமார் என்றாலே ஒரு கலகலப்பான படம் கொடுப்பவர் என்னும் பெயர் உண்டு. அவர் படங்களில் நட்சத்திர பட்டாளம் இருக்கும். ஆதவனிலும் அது தொடர்ந்தது. தசாவாதாரம் என்னும் படைப்பில் இருந்து மீளாமலேயே கே.எஸ்.ஆர் ஆதவனில் களம் இறங்கியது தெட்டத் தெளிவாக தெரிகிறது. கதையை விட திரைக்கதையில் கில்லாடியான இயக்குனர் இங்கே தள்ளாடிப்போய்விட்டார். நொண்டியடிக்கும் திரைக்கதையை கொடுத்து தனித்தன்மையை கெடுத்து விட்டார். அதேநேரம் சூர்யாவின் தற்போதைய நிலை என்ன அவரின் பாதை என்ன ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன என தெரியாமல் அவரும் குழம்பி எங்களையும் குழப்பிவிட்டார்.


அடுத்தவர் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் அதற்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்து குருவி படம் எடுத்தேன் என சொன்னவர் குருவியை வெற்றிப்படம் என்றாலும் குருவி சொதப்பிய சொதப்பல் யாவரும் அறிந்ததே. ஆனால் அந்த படத்தில் நடித்த கதாநாயகன் விஜய்க்கு மாஸ் இருந்தது. இங்கே சூர்யாவோ சிறந்த நடிகர் மாத்திரமே. மாஸ் ஹீரோ செய்ததுக்கே துவைத்தெடுத்தவர்கள் சூர்யா என்னும் நடிகன் செய்வதை ஏற்பார்களா என தெரியாமல் உதயநிதி விளையாடி விடார். அதேநேரம் காசை தண்ணீராக செலவழிக்க ஒரு நல்ல தயாரிப்பாளர் இருக்கின்றார் என குருவியில் நிரூபித்தவர் இவர். எனவே இவரை சரியாக பயன்படுத்தி இருக்கலாம் கே.எஸ்.ஆர். ஆதவனின் சில காட்சி அமைப்புக்கள் குருவியை நினைவு படுத்தாவிட்டால் நீங்கள் எல்லாம் கஜினிகள் தான்.


அடுத்து இளம் கதாநாயகர்களில் எந்த அடைமொழியும் இல்லாமல் தனக்கென ஒரு பாணியில் நடித்து இப்போதுள்ள பலரின் இதயத்தில் வேகமாக இடம்பிடித்து வந்தவர்தான் சூர்யா. ஒவ்வொரு படத்திலும் நல்ல கதை தரமான நடிப்பு. அனைவரையும் கவரும் சூர்யாவின் திசை முடிந்து விட்டதோ என எனக்கு தோன்றுகின்றது. காரணமும் இல்லாமல் இல்லை. ஒரு காலத்தில் இளம் நாயகர்கள் என்றால் விஜய் அஜித் இரண்டுபேரும் தான். எந்த போட்டியும் இல்லாமல் இருவரும் வளர்ந்து ஒரு நல்ல நிலைக்கு வந்தனர். ஒரு கட்டத்தில் விஜய் உச்சத்தில் இருந்தால் அஜித் அதல பாதாளத்திலும் அஜித் எழுந்து விட்டால் விஜய் படுத்துக்கொள்வதுமாக இருந்து வந்தது. இடையில் கடும் போராட்டத்துக்கு மத்தியில் வந்த விக்ரம் தில்,தூள்,ஜெமினி,சாமி என கலக்கிக்கிண்டிருந்தார். அந்த நேரம் விஜய் அஜித் எங்கே என தேடும் நிலை. அதன் பின் விஜயின் திருமலையோடு எல்லாம் மாறியது.


கடகடவென வெற்றிமேல் வெற்றி குவித்து விஜய் உயர்ந்தார். விக்ரம் அப்பப்போ தான் இருக்கின்றேன் என ஒருசில படம் கொடுத்தார். இந்த இடையில் அந்நியன் வந்தாலும் விஜயின் நம்பர் 1 என்ற இடத்தை விக்ரமால் அசைக்க முடியவில்லை. இதேநேரம் கவிழ்ந்து போய் இருந்த அஜித்தும் தன்னை ஓரளவு தூசு தட்டி வர மீண்டும் ஒரு சில பரப்பரப்பான ஆட்டங்களோடு இந்த மூவரும் அடங்கி விட. சூர்யாவின் ஒளி பரவத்தொடங்கியது. இதற்கு இன்னொரு காரணம் ஜோதிகா என்னும் புகழ் பெற்ற நடிகையை சூர்யா திருமணம் செய்து கொண்டதும் ஒன்றே. காரணம் ஜோதிகாவிற்கு இருந்த பெரிய ரசிகர் கூட்டத்தையும் சூர்யா சேர்த்துக்கொள்ள காரணமாகிவிட்டது. அதேநேரம் இப்போதெல்லாம் வெளிப்படையாக ஜோதிகா புகழ்பாடுவது சூர்யாவிற்கு பழக்கமாகிவிட்டது. இது தனக்கு நல்லதென அவர் நினைக்கின்றாரோ தெரியவில்லை. ஆனால் மனைவியின் பெயரை வைத்து காலத்தை ஓட்டுகின்றார் என்ற பெயரும் சேர்ந்துவிடும்.இப்போது அவரின் ஆட்டமும் முடிந்து இன்னொரு நடிகரின் கையில் இன்னும் சில ஆண்டுகள் போகப்போகும் நேரம் வந்து விட்டதாகவே நான் உணர்கின்றேன்.

காரணங்கள் உதிக்கும்......
Share:

Tuesday, October 27, 2009

என்னை அடிக்க நினைப்பவர்களுக்கு....நெருங்கிக்கொண்டிருக்கின்றது மீண்டும் ஒரு இனிய நாள். அண்மையில் நடந்து முடிந்த பதிவர்கள் சந்திப்பு தித்திப்பாகவும் வெற்றியாகவும் நடந்து முடிந்தாலும் அதன் பின் இன்னொரு சந்திப்பு என்பது கேள்வியாக இருந்து வந்த நிலையில் நாங்களும் இருக்கிறம் கவலை வேண்டாம் சந்திப்போமா என இப்போது கேட்டிருக்கின்றார்கள் இருக்கிறம் சஞ்சிகை குழுவினர்.

வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி ஒரு நிறைந்த பூரணை நாளில் (பலர் வருவது இலகு எங்களை போன்றவரை தவிர) எல்லோரையும் சந்தித்து சிந்திக்க வைக்க முடிவு செய்து விட்டனர். கொழும்பு 7 இல அமைந்துள்ள அவர்களின் அலுவலகத்தில் இந்த இனிய ஒன்று கூடல் இடம்பெறப்போகின்றது. மாலை 3 மணி அளவில் ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சந்திப்பு பல நல்ல நண்பர்களையும் நல்ல அனுபவங்களையும் தந்திருக்கும் நிலையில் ஊடகம் சார்ந்தோர் பதிவர்கள் என எல்லோரும் சந்திக்கப்போகும் இந்த சந்திப்பும் இன்னும் பல தித்திப்புகளை வழங்கும் என்பதில் ஐயமில்லை. இருக்கிறம் உங்களை ஒன்று சேர்க்க நாங்கள் இருக்கிறோம் என சொல்லிவிட்டனர் இனி நாங்களும் வருவோம் என சொல்லவேண்டியது மட்டுமே எங்கள் கடமை. கொழும்பு மட்டுமல்ல இலங்கையின் பல பகுதிகளில் இருந்து மட்டுமல்ல நாடு விட்டு நாடு சென்ற நம் நல்லுள்ளங்களும் வந்து கலந்து கலக்கலாம்.

சொல்ல காத்திருக்கும் வழிகள்....
மின் அஞ்சல் irukiram@gmail.com
தொலைபேசி 0113150836

கடந்தமுறை சந்திப்பில் எனக்கு கிடைத்த வேலை அறிவிப்ப்பு செய்வது இம்முறை எந்த வேலையும் இல்லாமல் வேடிக்கை பார்க்கப்போறன். சந்தோசமா, ஆனால் கடந்தமுறை பேச முடியாமல் போன அனானிகள் பற்றிய பேச்சு இம்முறை எழும் என எதிர்பார்க்கின்றேன். ஆனால் ஒரு சந்தோசம் இப்போது எனக்கு அனானிகள் தாக்குதல் குறைந்துள்ள நிலையில் மீண்டும் என்னை அடிக்க அண்ணன்கள் தயாராகலாம். இதுவரை முகம் தெரியாமல் தெரிந்தவர் என சொல்லி அடித்த கில்லிக்கும் சொல்லாமல் அடித்த திருப்பாச்சிக்கும் சொல்லியும் சொல்லாமலும் அடித்த சிவகாசிக்கும் என்னை நேரடியாக் அடிக்க வாய்ப்பு உண்டு வங்க அன்பால் ஒருவரை ஒருவர் அடிப்போம்.

சொல்லவேண்டியதை சொல்லிட்டன் இன்னொரு விஷயம் இருக்குங்க. இந்த பதிவு என் நூறாவது பதிவு. ஒருவாறு ஒரு நல்ல நிகழ்வுக்குரிய அழைப்பிதழாக என் நூறாவது பதிவு அமைந்தது சந்தோசமே. இந்த நேரத்தில் என் ஐம்பதாவது பதிவில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த நல உள்ளங்களை நினைவு கூர்ந்திருந்தேன் மீண்டும் ஒரு தடவை அவர்களை நினைவுகூர்வதொடு எல்லோருக்கும் என் நன்றிகள். அதேநேரம் எனக்கு புதிதாக கிடைத்த வாசகர்கள், நண்பர்கள், அறிவுரையாளர்கள் இன்னும் பல அனானிகள் எல்லோருக்கும் என் நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் அன்பான ஆதரவை எதிர்பார்க்கின்றேன்.

இந்த நூறாவது பதிவை சதத்துக்கு முன் இரட்டை சதம் அடித்த நான் என பதிவிட இருந்தேன் காரணம் பதிவுலகில் என் நூறாவது பதிவை தொட முன் மூஞ்சி புத்தகத்தில் இருநூறு நண்பர்களை சேர்த்துவிட்டேன். சும்மா ஒரு பில்ட் அப்புக்கு தான். ஆனால் இப்போ என்னை அடிக்க நினைப்பவர்களுக்கு என எழுதுகின்றேன். சில மனபாரங்கள் தீர்ந்ததும், சூடான பதிவுகளோடு சிந்திப்போம். அதுவரை எனக்கு உங்கள் வாக்குகளையும் பின்னூட்டங்களையும் வழங்கி வளப்படுத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
Share:

Sunday, October 25, 2009

ஆதவன் என்ன பாதகனா?

ஆதவன் திரைப்படம் எப்படியாவது இம்முறை முதலில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள்ளும் சில நாட்களாக இருந்தது. காரணம் சூர்யாவின் அண்மைய அபார வளர்ச்சி. அதன்படி தீபாவளி அன்று காலை பார்க்கலாம் என திட்டம் தீட்டினேன். அதற்கு முன்னர் முதல் நாள் இரவு ஆதவனை பார்த்த நண்பர்களிடம் ஆதவனை பற்றி விசாரித்ததில் ஆதவன் பாதகனாவிட்டான் என நொந்துகொண்டேரே பலர். இதனால் நானும் மறுநாள் காலை அதுவும் ஒரு நரகாசூரன் அழிந்தநாளில் இன்னொரு நரகாசுரனை பார்க்கவேண்டுமா வேண்டாமே என முடிவெடுத்து தள்ளிப்போட்டேன். காரணம் படம் பார்த்த பதிவர்கள் குருவி, வில்லு திரைப்படங்களை விட ஆதவனை வறுத்தெடுத்தமை என்னை ஏனோ யோசிக்க வைத்தது.


அப்படி இப்படி என்று ஒருவாறு கடந்த வெள்ளிக்கிழமை மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒருதடவை பார்ப்போம் அப்படி என்னதான் இருக்கின்றதென்று என முடிவெடுத்து திரை அரங்கிற்கு போக என்னுடைய நண்பன் ஒருவனையும் அழைத்தேன். நன்றாக தூங்கி எழுந்து நான் திரை அரங்கு சென்று சேர எழுத்தோட்டத்தில் சூர்யாவின் பெயர் வந்து போய் விட்டது. ஏதோ சூர்யாவின் குழந்தை படத்தில் இருந்து அவரின் குழந்தை தியாவின் படம் வரை போட்டு தொடங்குகின்றார்கள் என பலர் சொன்னனர். ஆனால் நான் அதை தவற விட்டு விட்டேன்.

அதற்கு பிறகு சூர்யாவின் அறிமுக பாடல் காட்சி . எனக்கென்னவோ நடனத்தில் சூர்யா ஏற்கனவே தன படங்களில் ஆடிய அதே அசைவுகளை மீள செய்தது போல இருந்தது இருப்பினும் அதையும் ரசிக்கும் படி செய்திருந்தார். தொடர்ந்து கதை ஆரம்பிக்கும் போதே என்னடா இது நம் பதிவர்கள் சொன்னது போல இல்லை பரவாயில்லாமல் தானே இருக்கு என நினைத்தேன். ஆனால் அதுவெல்லாம் வடிவேலு திரையில் வரும் வரை தான். இதில் குறிப்பிடத்தக்க விடயம் திரை அரங்கில் பெரிதாக கூட்டமும் இல்லை சூர்யாவின் அறிமுக காட்சி உட்பட எந்த ஒரு காட்சியிலும் விசில் அடிக்கவோ கைதட்டவோ இல்லை. ஆனால் வடிவேலுவின் அத்தனை காட்சிகளுக்கும் விசில் பறந்தது.

நயன்தாரா குடும்பம் அது ஒரு குடும்பமா அல்லது ஒரு ஏரியாவா என சந்தேகமே வந்தது. இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பெரிய கூட்டுக்குடும்பம் இருக்குமா என்பது என் சந்தேகம். முரளி சரியான தேர்வு. அச்சுஅசலாக பொருந்தி இருக்கின்றார். அடுத்து சரோஜாதேவி. பெரிதாக இவர் படத்தை நான் பார்த்ததில்லை. அதனால் சொல்லவும் தெரியவில்லை ஆனால் ஆதவனில் நன்றாக தான் செய்திருக்கின்றார். அவருக்கும் நயனுக்கும் இடையில் நடக்கும் சண்டை போன்ற அந்த தேக்கோ பாடல் எனக்கு வானொலியில் கேட்க பிடிக்கவில்லை. திரையில் ஏனோ பிடித்துப்போனது.

ரமேஷ்கண்ணா ஏன் வந்தார் என தெரியவில்லை. ஒருவேளை இயக்குனர் இப்படி ஒரு லூசுத்தனமான கதையை கொடுத்த உனக்கு லூசாகவே பாத்திரம் தருகின்றேன் என கொடுத்தாரா தெரியவில்லை. அனுகாசனையும் உப்புசப்பாக பாவித்திருக்கின்றார்கள். இவர்களை விட வேறு யாரும் என் நினைவில் வரவில்லை. எல்லோரும் சொன்னது போல நயனின் முகத்தை குளோசப்பில் பார்க்க பயமா இருந்தது. ஆனால் கொஞ்சம் தள்ளி முழுதாக காட்டும் போது எல்லாம்...... நல்லா தான் இருந்தது. ஆனால் என்ன நடிக்க தான் வாய்ப்பில்லை. அதே நேரம் பச்சை பெரிதாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.


அடுத்து சூர்யாவா? வடிவேலுவா? ஹீரோ என்ற கேள்விக்கு ஒருமித்த பதில் வடிவேலுதான் என்று. அதற்கு இன்னொரு சான்று அண்மையில் படத்தின் சில காட்சிகளை தூக்கும் போது வடிவேலுவின் எந்த காட்சியிலும் கை வைக்காமல் சூர்யாவின் பல காட்சிகளை கத்தரித்து விட்டது . அதேநேரம் முதல் பாதி முழுவதும் படத்தை தொய்யவிடாமல் கொடுத்திருப்பது வடிவேலுதான். நகைச்சுவையில் எப்போதுன் தான் ஹீரோ தான் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்? ஒவ்வொரு காட்சியிலும் சிரித்து சிரித்து எனக்கு புரைக்கேறியதுதான் மிச்சம். முன் பாதி ஏனோ எனக்கு பிடித்தது. இடைவேளையில் நண்பனிடம் சொன்னேன். எனக்கு படம் பிடித்திருக்கின்றதென.

ஆனால் பின்னாலே இப்படி ஒரு வெடிகுண்டு காத்திருக்கும் என தெரியாமல். இடைவேளை முடிந்து மீண்டும் படம் ஆரம்பித்து ஓரிரு நிமிடங்களிலேயே அலுப்பு தட்ட ஆரம்பித்து விட்டது ஹீரோ வடிவேலுவை விட துணை நடிகர் சூர்யா அதிகம் திரையில் வந்தார். ஆனால் கதை நகரவே இல்லை. ஏற்கனவே பார்த்த காட்சிகளை மீண்டும் பார்க்கும் அலுப்பு. சாயாஜி சிண்டேயை எல்லோரும் புகழ்ந்தனர். எனக்கோ மனிதரை பார்க்கையில் அழகிய தமிழ் மகனில் அவர் செய்த அதே விளையாட்டை இங்கேயும் காட்டி உள்ளாரோ என தோன்றியது. அந்த டாக்டர் வில்லன் நன்றாக பொருந்தி இருக்கின்றார். ஆனால் நடிக்கவே இல்லை.

நிஜ ஹீரோ.

இரண்டாம் பாதியின் இழுவையில் இனிமை சேர்த்தது மூன்று பாடல்கள். மூன்றும் நல்ல பாடல்கள் ஆனால் அடுத்தடுத்து வந்து எரிச்சலை தந்தன. மூன்றும் முத்தாக இதயத்தை வருடியதை மறுக்கமுயாது. ஆனந்த பாபு இதுவரை நான் எழுதும் வரை நினைவு வரவில்லை. அதேபோல ஒரு பாத்திரம் தான் அவருக்கு படத்திலும். அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சி அப்பப்பா என்ன ஒரு உலகத்தரம். அதை விபரிக்க வார்த்தை இல்லை. சண்டைக்காட்சிகள் அப்படியே குருவியில் விஜய் செய்தது. குருவியில் ஆவது விமானத்தில் இருந்து கொண்டே விஜய் கீழே விழுவர். இங்கோ கீழே இருந்த சூர்யா பறக்கும் விமானத்தில் ஏறிவிடுவார். பல இடங்களில் சூர்யா தன முந்தைய படங்களின் நடிப்பை அப்படியே கொடுத்துள்ளார்.

யாரப்பா சொன்னது பத்துவயது சிறுவனைக் சூர்யா நடித்துள்ளார் என்று ஏதோ ஒரு உடலுக்கு சூர்யாவின் முகம் அதுவும் பொருந்தவில்லை என்பது பத்துவயது பிள்ளைக்கே தெரியும். தயவு செய்து ஏமாற்றும் படத்திலும் இப்படியான ஏமாற்றும் காட்சிகளை வைத்தால் உங்களை ரசிகர்கள் ஏமாற்றி விடுவர். ஆனால் இப்படியான ஒரு முயற்ச்சிக்கு தொழில்நுட்ப கலைஞருக்கே பாராட்டுக்கள் சேரும் உங்களுக்கல சூர்யா என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். கே.எஸ்.ஆர் மற்று ஹரிஷ் இந்த படத்தில் சொல்லிக்கொள்ளும் படி இல்லை நல்ல படங்களை தந்த இயக்குனரையும் பின்னணி இசையிலும் கலக்கிய ஹரிஷ் இருவரையும் இங்கே காணவில்லை. எனவே அவர்களை பற்றி நான் பேசவில்லை.


நடனம், மேனரிசம், நடிப்பு, வசன நடை என எதிலும் புதிய சூர்யா தெரியவில்லை. சூர்யா நீங்கள் விஜய் அஜித் போல ஒரு ஸ்டார் நடிகர் அல்ல. சாதாரண நடிகர். உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது வித்தியாசமான கதை ஓட்டம் உள்ள நடிப்புடன் கூடிய படங்களையே. அதேநேரம் நீங்கள் இதுவரை கொடுத்த ஹிட் எதுவும் சூர்யா என்னும் பெயருக்காக ஓடவில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். வடிவேல் என்னும் பெயருக்காக எத்தனையோ படங்கள் ஓடும் நிலையில் இன்னும் உங்கள் பெயருக்காக எந்த படமும் ஓடவில்லை. உங்கள் படத்தின் கதை அந்த காதாபாத்திரமாக நீங்கள் மாறும் திறமை (இதுதான் இப்பொது உலை வைத்ததுள்ளது.) இந்த இரண்டுமே உங்கள் வெற்றியின் காரணம். அதேநேரம் கணிசமான ஜோவின் ரசிகர்களும் இப்போ உங்கள் ரசிகர்களாகி விட்டனர். புது முக இயக்குனர்களோ அல்லது கமர்சியல் படம் தரும் இயக்குனர்களோ உங்களை காப்பாற்ற முடியாது. உங்கள் பலமும் பலவீனமுமான கதாபாத்திரமாக வாழும் உங்கள் வழக்கமான படங்களையே கொடுங்கள். அதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கின்றார்கள். சிங்கம் அசிங்கமாகி உங்களை கீழே தள்ளி இன்னொரு ஆறாக்காமல் உடனடியாக நிங்கள் தை இட்டாலே ஒழிய உங்கள் தலை எழுத்தை மாற்ற முடியாமல் போய்விடும்.

இதுவே ஸ்டார் வலியூ உள்ள விஜய் அல்லது அஜித் ஏன் சிலவேளை விஷால் நடித்திருந்தால் கூட மெஹா ஹிட் ஆகி இருக்கும் இந்த திரைப்படம். படம் முடிந்து வெளியே வரும் போது எனக்கு படம் பிடித்திருந்தது. என்னதான் குறைகள் பல இருந்தாலும் ஒரு தடவை பார்க்க கூடிய திரைப்படமே இந்த ஆதவன்.

இவங்க கூட்டே தாங்க முடியல......


இனி இதுவேற இருக்கா.....?
Share:

Monday, October 19, 2009

நயன்தாராவை சங்கடப்படுத்திய சன் டி.விதீபாவளி நாள் எனக்கு இம்முறை ஏனோ தித்திக்கவில்லை. சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய பிளிம்பெயார் விருது வழங்கும் விழாவை பார்த்து விட்டு மதிய உணவும் முடித்தது விட்டு நல்லா தூங்கி எழுந்து வரும் போது என் மனதில் ஏனோ கோபம் வெறுப்பு. அப்படியே வந்திருந்து போட்டது சக்தி தொலைக்காட்சியை.

தீபாவளி நாள் தானே நம்ம தளபதி நடித்த அழகிய தமிழ் மகன் போய்க்கொண்டிருந்தது. அது முடிய ஐந்து மணிக்கு தானே சன் டி.வியின் பட்டிமண்டபம் வரும்(பட்டி மன்றம் என்பது சரியான தமிழ் பதம் அல்ல) அதற்க்கு முன் அரை மணித்தியாலம் இருக்கே என்ன நிகழ்ச்சி என பார்ப்போம் என பொறுத்திருந்த எனக்கு அந்த காத்திருப்பு வீண்போகவில்லை.


தமிழ்நாட்டின் மாதவி(கண்ணகி வேறுயார் நம்ம பிரபுதேவா மனைவி ரம்லத் தான்) திரையில் வந்தார். அடடா தமிழ் நாட்டுக்கே வரமட்டேன் என்ற புயல் இன்று அதுவும் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கப்போகின்றதே. நயனை தமிழ் நாட்டிலேயே கால் வைக்க விடமாட்டேன் என்றவர்கள் எங்கப்பா போய்ட்டார்கள் என்ற எண்ணத்துடன் பொண்ணு(ஆதவன் விமர்சனங்களை பார்க்கும் போது வயதான பொண்ணு என சொல்லணும் போல) என்னதான் சொல்லப்போகிறது பார்ப்போம் என காத்திருந்தேன்.


வழக்கம் போல ஒருவர் பரவாயில்லை ஓரளவு அழகா இருந்தார் அவர்தான் நயனை பேட்டி எடுக்கப்போகும் புண்ணியவான் நயன் மனம் திறந்து(எதை எதையோ எல்லாம் திறந்து காட்டியவர் இதை காட்டமாட்டாரா? ) பதிலளிக்கப்போகின்றார் என சொல்லியே ஆரம்பித்தார். பேட்டி ஆரம்பம் ஒரு சில நிமிடத்திலேயே சூடு பிடித்தது. பேட்டி எடுத்தவரின் குறிக்கோள் நயனின் செவ்விதழ் திறந்து சிம்பு, பிரபுதேவா பற்றி சொல்லவைப்பதே. (நமக்கும் என்ன சொல்லப்போகின்றார் என்ற ஆசைதான்.) அதற்க்கு அவர் ஆயுதமாக பாவித்தது காதலை.(அடப்பாவிங்களா சிம்புவோட காதல் எண்டால் ஏற்கலாம் பிரபுதேவாவோடும் என்பது தாங்கமுடியாது.) பெட்டியில் அடிக்கடி காதலை மையப்படுத்தியே மனிதர் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். பாடசாலையில் காதல்? இது கேள்வி நயனும் சளைக்காமல் நிறைய பசங்க லெட்டர் கொடுத்தாங்க நான் யாரையும் காதலிக்க என்றார்.


தொடர்ந்து விட்டாரா பேட்டி எடுத்தவர் அப்போ உங்க முதல் காதல்? என்றார் நயன் சொன்னார் அதுதான் உங்க எல்லோருக்கும் தெரியுமே ஊரறிந்த அந்த காதல் தான் என் வெளிப்படையாக சிரித்தது சிரித்தே சொல்லிவிட்டார். அத்தோடு விட்டிருக்கலாமே. எதுவுமே தெரியாத பச்சை பிள்ளை போல அப்பிடியா யாரை எங்கே காதலிச்சிங்க என கேள்விமேல் கேள்வி கேட்க நயன் சங்கடப்பட்டு போனார். சிரிப்பே அவர் பதிலாக வந்தது மட்டுமில்லாமல் இதை விட்டுவிடுங்கள் என எத்தனையோ முறை சொல்லியும் வேதாளம் முருங்கை மரக்த்டில் இருந்து இறங்கவில்லை. பார்த்துக்கொண்டு இருந்த எனக்கே அட என்ன மனிதனடா இவன் என்ற எண்ணம் வந்தது. என்னதான் நயன் செய்தது தவறாக இருந்தாலும் ஒரு பிரபல நடிகை அதுவும் பல நாடுகளில் ஒளிபரபரப்பாகும் சன்.டியில் தீபாவளி நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்ப்பார் அப்படி இருக்கையில் இப்படியான தர்மசங்கடமான கேள்வியை தவிர்த்திருக்கலாம்.


ஆனால் அடுத்து நடந்தது இதை விட கொடுமை. தன் பழைய தொழில் நினைவு வந்ததோ தெரியாது பேட்டி எடுத்தவர்க்கு நயனிடம் உங்க இடக்கையை காட்டுங்க ஜோதிடம் சொல்லப்போறேன் என்றார் தடுக்க முயன்றார் முடியல. (நானும் பயபுள்ளைக்கு நயனின் கையை பிடிக்க ஆசை போல என நினைக்க பய கைய தொடல.) இறுதியில் கையைப்பார்த்து ஜோதிட சிகாமணி நயனின் பூர்வீகத்தை சொல்லியவர் உங்களுக்கு தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவர்தான் வாழ்க்கையில் பெரும்பகுதியை கொடுக்கப்போகின்றார் என அடுத்த ரூட்டை போட்டார்.


அப்படியே அவர் பார்வை கொஞ்சம் மேலே போய் நயன் கையில் இருந்த பச்சையில் நின்றது. எல்லோருக்கும் தெரிந்த பிரபு என்று நயன் கையில் உள்ள பச்சை விடயம் தெரியாத நம் அறிவு நிரம்பிய பேட்டி எடுத்தவர் அதை கிளறினார். நேரடியாகவே கேட்டார் நயன் உங்களுக்கு உண்மைக்கும் தெரியாத இந்த விடயம்தான் எல்லோருக்கும் தெரியுமே நீங்கள் வேண்டுமென கேட்கின்றீர்கள். வம்பில் (சிம்பு இல்லை) மாட்டப்பார்க்கிறீர்கள் என சிரித்து சொனாலும் நயன் மனதில் வாடா மவனே உனக்கு இருக்கெண்டு என சொல்லிரியிருப்பார்.(பார்த்த எனக்கே வெறுப்பும் கோபமும் கூடும் போது அவர்க்கு வராதா என்ன?) ஆனால் அவரோ விடுவதாக இல்லை. பொருத்தது பார்த்த நயன் இறுதியில் பொங்கி எழுந்து உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நேரடியாக கேட்டு விடுங்கள் இப்படி அங்கெ சுற்றி இங்கே சுற்றி வரவேண்டாம் என சொன்னதும் பயல் கொஞ்சம் அடக்கிவாசிக்க ஆமா பிரபு என குத்தி இருக்கேன் எனக்கு பிடிச்சவர் பெயரை நான் குத்தி இருக்கேன் என நேரே சொல்லிவிட்டார். சாத்தித்து விட்டார் பேட்டி
எடுத்தவர். . பேட்டியும் நல்ல படியாக முடிந்தது.

ஒரு பொறுப்பான(?????) பலர் பார்க்கும் அதுவும் தீப திருநாள் அன்று பிரபல நடிகை ஒருவரை வேண்டுமென்றே இப்படி செய்ததோ என தோன்றுகின்றது. காரணம் பார்த்த்ட எனக்கே சங்கடமாக இருக்கும் போது சம்பந்தப்பட்ட நயனுக்கு இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல எவ்வளவு சங்கடம் வந்திருக்கும். நான் நயன் புகழ் பாடுகின்றேன் என நினைக்கவேண்டாம். ச டி.வி செய்த இந்த நிகழ்ச்சி என்னை பொறுத்தவரை தப்பே. வேறு கேள்விகை கேட்டிருக்கலாம். அதை விட்டு விட்டு அசிங்கமான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பேட்டி எடுத்தா சன் இன்று வில்லனாக செய்தது தப்பென்றாலும் தைரியமாக சொன்ன நயன் நிஜ கதாநாயகி ஆகிவிட்டார்.

என்னிடம் அந்த பேட்டியின் வீடியோ இல்லை யாரும் நண்பர்களிடம் இருப்பின் அதை பகிருங்கள் பார்க்காதவர்களும் பார்த்து இன்பம் பெற.

பி.கு: ஏனோ தெரியல பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல மனது இன்னும் நேரத்தை கொடுக்கல. வரும் போது சொல்கின்றேன். நிறைய நண்பர்கள் நிறைய பதிவில் கேட்டவை காத்திருக்கு.
Share:

Thursday, October 15, 2009

விஜய் இழிச்சவாயன் சூர்யா.....?பூனைக்கண் புவனேஷ்வரி..... பேரைக் கேட்டாலே அதிருதெல்லா. இந்தியா மட்டுமல்ல நாடு கடந்தும் இன்று இந்த பெயர் அறிமுகம். காரணம் என்ன விபச்சாரம். நாட்டில் எத்தனையோ பேர் இதை செய்தாலும் பெரும் புள்ளிகள் செய்துவிட்டால் வெளிச்சத்துக்கு வருவது இயற்கையே. இப்படி இன்றல்ல நேற்றல்ல காலம் காலமாக நடந்து வருகிறது. இது புவனேஷ்வரி முறை.

இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விடயம் மட்டுமல்ல நம் பதிவர்கள் பலர் பதறி அடித்துக்கொண்டு பதிவிட்ட விடயம் கூட. அதை தொடர்ந்து நடிக நடிகையர் நடத்திய கூட்டம் பெரிய பரபரப்பை கிளறியது. நடிகர்கள் ரஜினி,சத்யராஜ்,விவேக் பேச்சுகளோடு நடிகைகள் பேசிய பேச்சுக்களும் சலசலப்பை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் சூர்யாவின் பேச்சுதான் இவற்றுக்கு அடித்தளம் என்னும் பேச்சும் இடம்பெற்றுள்ளது. பத்திரிக்கையாளர்களை ஈனப்பிறவிகள் அது இது என சில தகாத வார்த்தை பிரயோகங்களை உதிர்த்து திட்டிய மார்க்கண்டேயரின் மகன் அதன் பின் பல்டி அடித்துள்ளார். இதையே தூக்கி சாப்பிட்டுவிட்டார் அவரின் தந்தை. இந்த விடயத்தோடு அவரை அனுகியவர்களுக்கு மூஞ்சியில் கரி பூசி அனுப்பி இருக்கின்றார்.

இவ்வளவு காலமும் திரை உலகில் இருக்கும் ஒரு ஒழுக்க சீலரான சிவகுமார் இன்று தன மகனால் இப்படி நடக்கவேண்டி ஏற்பட்டதோ? எதுவாக இருப்பினும் சூர்யா சரி அவர் குடும்பம் சரி ஈழ மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் உதவிய நல்லுள்ளம் கொண்ட குடும்பம். அந்த நல்லமனதுக்கு சொந்தக்காரர் தான் சூர்யாவும். ஆனால் என்ன காரணத்துக்காக அன்று அப்படி பொங்கிவிட்டார். பொங்கியவர் அடுத்தடுத்த நாட்களிலேயே மறுப்பறிக்கையும் விட்டார் காரணம் வந்தி அண்ணா பதிவில் சொன்னது போல ஆதவன். ஊடகங்களை பகைத்தால் எல்லாமே பொசுங்கிவிடும் எனதெரியாத நடிகரா அவர். திரையில் அழகாக நடிக்கும் சூர்யா நிஜமாக நடித்தார். இது நிஜாயமா? உங்கள் கருத்து என்ன என சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. அந்த வகையில் அன்று பத்திரிகையாளரை கண்டித்தீர்கள். அதை தொடர்ந்திருக்கவேண்டும். காரணம் அன்று உங்களுக்கு நியாயமாக பட்டது என்றும் பட வேண்டும். இந்த விடயத்தில் விவேக் சொன்னது சரியோ தப்போ என்பதை விட பத்திரியாளர் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தாலும் அதை எதிர்த்து நிற்கின்றார். ஒரு காமெடியனுக்கு இருக்கும் துணிவு ஹீரோ உங்களுக்கு எங்கே போய் விட்டது.

அடுத்து நான் சொல்ல போகும் விஷயத்துக்கு எனக்கு எல்லோரும் சேர்ந்து கும்மப் போகின்றீர்கள் என தெரியும். அதற்க்கு சான்று இப்படி ஒரு பதிவிட போகின்றேன் என வந்தி அண்ணருடன் பேசும்போது சொன்னேன். பதிவிட்டு விட்டு சொல் வந்து கும்முகின்றோம் என்றார். பரவாயில்லை சொல்ல வேண்டியதை சொல்லவேண்டிய நேரம் சொல்லாவிட்டால் அது மனதுக்குள்ளேயே அழிந்து போய்விடும். அதனால் சொல்ல தான் போகின்றேன். ஈனப்பிறவிகள்...... என பேசிய சூர்யாவை அண்மைக்காலமாக (வேட்டைக்காரன் ஆதவன் போட்டி இருக்கும் நேரம்)கொண்டாடிய பல பதிவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜயை சொன்ன சைலன்ஸ் என்னும் சொல்லுக்கு வியாக்கியானம் எழுதிய யாரும் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை. ஒப்பீட்டளவில் ஒரு சிலர் மாத்திரமே இதை எழுதியுள்ளனர். ஆதவன் வரப்போகும் நேரத்தில் சூர்யா அடித்த பல்டிக்கு இவர்களும் பலியாகிவிட்டனரா?

என் முன்னைய ஒரு பதிவில் யார் தப்பு செய்தாலும் பதிவர்கள் நாங்கள் கிளிப்போம் என்றவர்கள் இன்று எங்கே போய்விட்டனர். இது ஒரு விஜய் ரசிகனாக என் ஆதங்கமே. அதற்காக எனக்கு ஏதோ சூர்யாமேல் வெறுப்பு என்று நினைக்க வேண்டாம்.

விஜய்-சூர்யா இருவரும் நடிகர்கள் இருவரும் சமூக சேவையும் செய்துள்ளனர். அப்படி இருக்கும் போது பாரபட்சம் காட்டுவது ஏனோ? சூர்யா என்னதான் பெரிய வெற்றியைக் கொடுத்தாலும் விஜய் அளவிற்கு இன்னும் மாஸ் கிடைக்கவில்லை என்பது உண்மையே. அப்படி இருக்கையில் பதிவர்களின் சில நடவடிக்கைகள் எனக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கின்றன. தெரிந்தவர்கள் சொல்லுங்கள் மற்றவர்கள் கும்முங்கள் என்ன செய்வது இப்போது உங்கள் பார்வையில் விஜயும் விஜய் ரசிகர்களும் இழிச்சவாயர்களே.
Share:

Wednesday, October 7, 2009

சுடுகாட்டில் சாப்பிடலாம் வாறிங்களா?சிலருக்கு கடவுள் நம்பிக்கை அதுவே சிலருக்கு மூட நம்பிக்கை. கடவுளை நினைத்து கொண்டாடும் தீபாவளிக்கு முதல் நாள் இரவு மூட நம்பிக்கையை உடைக்கும் ஒரு செயற்பாட்டை குஜராத் மாநில மக்கள் அரங்கேற்றப்போகின்றார்களாம். இன்று எனது வானொலி நிகழ்ச்சிக்காக சுவையான விடயங்களை தேடியபோது என் கண்ணில் இதுவும் தட்டுப்பட்டது.
வழக்கமாக விவேக்கின் நகைச்சுவை பார்த்து இதுவும் ஏதும் நகைச்சுவையோ என நினைத்தது முழுதாக படித்த எனக்கு ஆச்சரியமாக தான் இருந்தது. குஜராத் மக்கள் தீபாவளிக்கு முதல் நாளை கலி சதுர்த்தசி என அழைப்பார்களாம். அந்த வகையில் மூடநம்பிக்கையை உடைக்கும் முகமாக பாரத் ஜன விஞ்ஞான் சாதா என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுடுகாட்டில் தேநீரும் வடையும் சாப்பிட போவதாக சொல்லி இருக்கின்றார்கள். நாடு முழுவதும் நானூற்று ஐம்பது இடங்களில் இந்த நிகழ்வு இடம்பெற இருக்கின்றதாம். வடையும் தேநீரும் வேண்டுமா சுடுகாட்டுக்கு போங்கோ இந்திய நண்பர்களே. என்னால் வரமுடியாது முடிந்தால் இலங்கையிலும் இதை செய்வோம் வாருங்களேன்... இலங்கையில் எங்கே சுடுகாடு தேடுவதென்ற கவலை குறைவு....
Share:

Tuesday, October 6, 2009

பொண்டிங் கையில் மீண்டும் பூமாலை.எல்லோரும் எதிர்பாத்துக்கொண்டிருந்தது போல இன்றைய இரவுப்பொழுதில் வேலைக்களையையும் மீறி நான் தொலைக்காட்சிப்பெட்டிக்கு முன்னால் இருந்து தான் இந்த பதிவை இடுகின்றேன். வழக்கமாக வீட்டுக்கு போனால் இணையதளம் தான் தஞ்சம். இன்று வீட்டுக்காரரின் நித்திரையையும் கெடுத்து கிரிக்கெட்டோடு ஒன்றிவிட்டேன்.

மாலை அலுவலகத்தில் இருக்கும் போதே அந்த அதிர்ச்சியான செய்தி இன்று டானியல் வெட்டோரி விளையாடமாட்டாரென. ஒரு கணம் கவலை. இந்த கர்வம் பிடித்த அவுஸ்திரேலியர்களுக்கு முடிவுகட்ட எவனும் வரமாட்டானா என்று. ஆரம்பத்தில் இந்தியா தென் ஆபிரிக்காவையும் அதன் பின் அபார ஆட்டத்தால் எல்லோரையும் கலக்கிய பாகிஸ்தானையும் நம்பிய நான் இன்று நியூசிலாந்தை நம்பி இருக்கின்றேன். ஆனால் உள்மனதில் நான் நினைத்து விட்டேன் மறுபடி குரங்கு மன்னிக்கவும் பாண்டிங் கையில் பூமாலை என்று.


ஏற்கனவே போஸ் கொடுத்தாச்சு இனி எதுக்கென ஒதுங்கிட்டாரோ?

அதற்கேற்றால் போலதான் மக்கலம் நாணய சுழற்ச்சியில் வென்றவுடன் அவுஸ்திரேலியாவை களத்தடுப்பில் ஈடுபட சொல்லிவிட்டு தானாட வந்தார். ஆடவந்தவர் ஆடிப்போய் முதல் விக்கெட்டாக ஓட்டம் எதுவும் பெறாமல் வெளியேறினார். அப்போதே நியூசிலாந்தின் அடித்தளம் ஆட்டம் காண தொடங்கியது. தொடர்ந்து ரெட்மொன்ட்டும் கப்டிலும் இணைந்து அணியை கட்டி எழுப்பினர். இந்த ஜோடியும் பிரிந்த பின் ஒரு சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்த நியூசிலாந்து இருநூறு ஓட்டங்களை தொட்டாலே பெரிய விடயம் என்னும் நிலையில் தட்டு தடுமாறி இருநூறு ஓட்டங்களை பூர்த்தி செய்து திருஷ்டி கழித்தனர்.

தலையானபின் தள்ளாடிய மக்கலம்.

பந்துவீச்சில் கொரிட்ஸ், லீ ஆகியோர் அசத்த ஐ.சி.சி விருது வென்ற ஜோன்சன் சராசரியான பெறுபேறை கொடுத்தார்.ஆடுகளம் பந்து வீச்சுக்கு உகந்தது தான் என்பதை இப்போது அவுஸ்திரேலியர்கள் துடுப்பெடுத்தாடும் போது தெரிகிறது. இடையில் பூச்சிகளின் ராச்சியம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது.

இருநூறு ஓட்டங்கள் அதுவும் அவுஸ்திரேலியாவிற்கு அதுவும் நியூசிலாந்துக்கு எதிராக அல்வா சாப்பிடும் ஓட்டங்கள் தானே போட்டி விரைவில் முடிந்து விடும் என நான் மட்டுமல்ல என நண்பர்கள் பலர் கூட நினைத்தனர். ஆனால் நானும் மக்கலத்தின் தம்பிதான் என்பது போல பெயினி ஒரு ஓட்டத்துடன் வெளியேற பொண்டிங்க் வந்தார் மனிதராவது அணியை கொண்டு செல்வார் என பார்த்தால் விடுங்கப்பா எனக்கு நிறைய வேலை இருக்கு முடிஞ்சா நீங்க அடிச்சு என் கையில பூமாலையை தாங்க அதுதான் குரங்கு கையில் என்பார்களே தன்னை தானே அப்படி சொல்லிட்டு ஒன்றுக்கும் ஆகாதவன் என தன்னை யாரும் சொல்லக்கூடாதென்பதற்காக ஒரு ஓட்டத்தை பெற்றுக் கொடுத்து விட்டு போய் விட்டார்.

உதவிக்கரம் நீட்டியவர்.

அதற்க்கு பிறகு நியூசிலாந்து விழித்துக்கொண்டது. தொடர்ந்து தன அபார களத்தடுப்பாலும் சிறந்த பந்து வீச்சாலும் அவுஸ்திரேலியர்களை கட்டுப்படுத்தி வைத்து போட்டியை சுவாரஷ்யமாக்கினர். அடடா பொண்டிங்க் குழுவுக்கு கடிவாளம் போடிதே இந்த கறுப்பு குதிரை என எனக்கும் சந்தோசம். இங்கிலாந்திடம் தாண்டவம் ஆடிய வொட்சன் கூட அடக்கி வாசிக்கின்றார் என்ற மகிழ்ச்சி. இதுவெல்லாம் பிடியை மக்கலம் தவற விடும் வரை தான். இனி அதிரடி தான் மச்சான் என முடிவு பண்ணி தொடங்கியவர் வந்த பந்து வீச்சாலர்களுக்கெல்லாம் அடித்து துவைத்தார்.(இதுதான் நான் அடிச்சா தாங்கமாட்டாய் என்ற வேட்டைக்காரன் பாட்டு வரியோ?)

மீண்டும் தடுமாறிய தல.

மறுமுனையில் வயிட் தன பங்குக்கு சிறந்த பங்களிப்பை வழங்க இந்த ஜோடி அணியின் தலை எழுத்தை மற்ற தொடங்கியது. ஒருவாறு மில்ஸ் வயிட்டை அனுப்பி நிம்மதி பெரு மூச்சு விட்டார். பந்துவீச்சில் வெட்டோரி இல்லாதது மிகப்பெரிய பலவீனமாக விளங்கியது. (நம்ம இலங்கை பசங்க முரளி இல்லாமல் விளையாடியது மாதிரி இல்லை இது நிஜமாவே வெட்டோரி காயமுங்க.) மற்றவர்கள் ஏனோ கண்டு கொள்ளாமல் இருக்க மீண்டும் ஹசியை அனுப்பி ஒரு நம்பிக்கையை பிறப்பித்தார். இந்த தொடரில் ஹசியின் சொத்தை ஆட்டம் தொடர்கிறது.

இறுதிவரை நங்கூரமிட்டு நியூசிலாந்தை நசுக்கியவர்.

என்னடா இவன் வெற்றி பெற்ற அவுஸ்திரேலி யர்களை இப்படி தாக்குகிறான் அவர்கள் என்ன குறைந்தவர்களா என நீங்கள் நினைக்கலாம் உண்மையில் அதற்கான தகுதி உள்ள அணிதான் அது. ஆனால் பொண்டிங்க் என்னும் சிறந்த வீரருக்குள் சிறந்த பண்பு இல்லை. எவன் ஒருவன் உயர தன்னை தாழ்த்துகின்றானோ அவனே உயர்வான் என தெரியாமல் அவர் மற்றவர்களிடம் போடும் கூப்பாடும் மற்றைய ஒரு சில வீரர்கள் செய்த சில கர்வச்செயல்களும் தான் பொதுவாக ஆசிய ரசிகர்களிடம் அவர்களின் மதிப்பை குறைத்து விட்டது. இப்போதெல்லாம் யார் வெல்கின்றார் என்பதை விட அவுஸ்திரேலியா தோற்கணும் என்பது பலரின் ஆசை.


வேண்டாமெண்டாலும் நம்ம கையிலேயே குடுக்கிறாங்களே.

பொண்டிங்க் கையில் பூமாலை என இந்த பதிவிற்கு நான் தலைப்பிட காரணம். இந்த தொடர் வென்றவுடன் மீண்டும் பொண்டிங்க் சுய பிரகடனம் செய்வார் நாங்கள் தான் நம்பர் வான். எங்களை எவனாலும் அடிக்கமுடியாது. எனபது மட்டுமன்றி மற்ற அணிகள் சொத்தை என்பது போல கீல்தர்மாக் அவர் கருத்திருக்கும். அதற்க்கேற்ற்ப தான் குரங்கு கையில் பூமாலை கொடுத்தல் எப்படியோ அதே போலதான் பொண்டிங்க் கையில் இந்த கிண்ணம் சென்றதின் பின் நடக்கும் என்பதை சொல்லாமல் சொல்லவே.

வாட்சன் கடந்த போட்டியை போல இந்த போட்டியிலும் சாதித்து காட்டி தன தலைவரிடம் கிண்ணத்தை கொடுத்துவிட்டார். மீண்டும் எழுந்திருக்கிறது. அவுஸ்திரேலியா. விமர்சனங்கள் சவால்களை தாண்டி சாதித்து தன்கள் பலத்தை நிரூபித்து காட்டிய பொண்டிங்க் குழுவினர் பாராட்டுக்குரியவர்களே. அதேநேரம் தனித்து நின்று மீண்டும் சதம் கடந்து வெற்றியை உறுதி செய்த வாட்சன் என்னை பொறுத்தவரை ஹீரோ. வாழ்த்துக்கள் ஆசி. வெற்றியை கொண்டாடுங்கள் மமதையில் வசை பாடாமல்.
Share:

Sunday, October 4, 2009

மினி உலககிண்ணம்- மூக்குடைபட்ட கதை.

ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண இறுதிப்போட்டி நாளை இடம்பெற இருக்கும் நிலையில் பல பதிவர்கள் (நானுட்பட) விமர்சகர்கள் என எல்லோர் முகத்திலும் கரி பூசிவிட்டு இரண்டு அணிகள் இறுதிக்கு வந்துள்ளன. எதிர்பார்க்கப்பட்ட இந்தியா,தென் ஆபிரிக்கா, இலங்கை அணிகள் இழிவான தோல்விகளோடு வெளியேறிவிட்டன. எதிர்பார்க்காத இங்கிலாந்து .நியூசிலாந்து அணிகள் தாண்டவமாடி நிற்கின்றன. நாளை விடை கிடைக்கப்போகும் கேள்விக்கு இவ்வளவு நாளும் கிடைத்த பதில்களுடன் ஒரு முழு அலசலாக இந்த பதிவு.

முதலாவது போட்டியே எனக்கு மூக்குடைவான போட்டி. காரணம் போட்டிகளை நடத்தும் நாடு மட்டுமல்ல உலகின் முதல்தர அணி ஒன்று இலங்கையை பந்தாடும் என பார்த்தால் இலங்கை அவர்களை பந்தாடி விட்டனர். நாணய சுழற்ச்சியில் வென்ற தென் ஆபிரிக்க தலைவர் சிமித் ஏன்தான் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை. ஜெயசூரிய ஏமாற்றினாலும் மறுமுனையில் டில்ஷான் இந்த தொடரின் முதலாவது சத்தத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து சங்ககாரவும் தன பங்குக்கு அரைசதம் ஒன்றை பூர்த்தி செய்ய மகேலவும் இழந்த பார்மை மீட்டெடுத்தார். இந்நிலையில் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 319 ஓட்டங்களை குவிக்க தென் ஆபிரிக்கவிற்கு இது எல்லாம் சின்ன விடயம் எனத்தான் நானும் நினைத்தேன். ஆனால் சிமித்தையும் களிசையும் தவிர வேறு யாரும் கைகொடுக்காமல் போக மழையும் வில்லனாக டக்வேர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை 55 ஓட்டங்களால் முதல் வெற்றியை பதிந்தது.அடுத்த போட்டி பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகளுக்கிடையில். மேற்கிந்திய தீவுகள் நாணய சுழற்ச்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடினர். மில்லேரை தவிர வேறு எவரும் பிரகாசிக்காமல் போக 133 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர். பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டினர். ஆனால் பாகிஸ்தான் துடுப்பெடுத்தடியபோதுதான் மேற்கிந்திய தீவின் பலமும் தெரிந்தது. ஆரம்ப விக்கெட்டுக்கள் தொங்கினால் அடுத்தடுத்து சரிக்கப்பட ஒருவாறு சமாளித்து போட்டியில் வென்று முடித்தது பாகிஸ்தான் 5 விக்கெட்டுகளினால். இந்த போட்டி ஒருவாறு என் கணிப்பை காப்பாற்றியது.


முதல் போட்டியில் தோல்வி அடைந்த தென் ஆபிரிக்க வெல்ல வேண்டிய கட்டாயத்துடனும் நியூசிலாந்து தொடரை சிறப்பாக தொடங்கும் எதிர்பார்ப்புடனும் களம் கண்டன. மறுபடி நாணய சுழற்ச்சியில் வென்று களத்தடுப்பை தெரிந்தார் சிமித். அப்போது ஏண்டா இந்த மனிதன் தோல்வியை பார்த்ததும் இப்படி செய்கின்றார் என நினைத்தேன்.ஆனால் ஆரம்பத்திலேயே ரைடரை அனுப்பி நல்ல ஆரம்பம் கண்டது தென் ஆபிரிக்கா.ஆனால் டெய்லர்,மக்கலம்,எலியட் கைகொடுக்க 214 என்னும் ஓரளவு நல்ல நிலைக்கு வந்தனர். பந்துவீச்சில் பார்னெல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென் ஆபிரிக்கவிற்கு சிமித்தின் ஆட்டமிழப்பு அதிர்ச்சியைக் கொடுத்தது.ஆனால் தொடர்ந்து வந்த ஆம்லா,கலிஸ், வில்லிஎர்ஸ் பொறுப்புடன் ஆட முதல் வெற்றியை சுவைத்தது தென் ஆபிரிக்கா.நியூசிலாந்தின் பந்து வீச்சாளர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. 5 விக்கெட்டுகளால் தென் ஆபிரிக்கா வென்று என்னையும் காப்பாற்றியது.

மறுபுறம் வெற்றியுடன் இலங்கையும் முதல் போட்டிக்காக இங்கிலாந்தும் களமிறங்கின. இலங்கை இலகுவாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் நாணய சுழற்ச்சியில் வென்று இங்கிலாந்து இலங்கையை துடுப்பெடுத்தாட பணித்தது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்த இலங்கையை வழக்கம் போல கண்டம்பியும் மதியூசும் மீட்டெடுத்தனர்.ஒருவாறு 212 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது இலங்கை.அன்டேர்சன், ஒனியன்,புரோட் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டனர்.


பதிலுக்கு குலசெகரவும் இங்கிலாந்தை மிரட்ட முதல் இரு விக்கெட்டுகளும் 19 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டாலும் ஷா மாறும் கோலிங்வூட் ஜோடி சிறப்பான இணையை வழங்கி வெற்றியை நோக்கி கொண்டு சென்றது. இறுதி நேரத்தில் மோர்கன் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதி செய்து இங்கிலாந்தில் எழுச்சிக்கு அச்சாரம் ஆறு விக்கெட்டுகளால் வென்ற இங்கிலாந்து என் கணிப்பில் மண்ணை போட்டது.

அடுத்து அவுஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகளுடன் சமரை நடத்தியது. நாணய சுழற்சியில் வெல்பவர்கள் எல்லாம் களத்தடுப்பை தெரிவு செய்வது போல மேற்கிந்தியாவும் தெரிந்தது. முதல் பந்திலேயே வாட்சனை ஆட்டமிழக்க வைத்து அசைத்து பார்த்தனர். ஆனால் அடுத்து வந்த பாண்டிங் நங்கூரமிட்டு ஆட தொடங்கினார். இறுதி நேரத்தில் ஜோன்சனும் கலக்க எட்டு விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை குவித்தது அவுஸ்திரேலியா.


ஆனால் மேற்கிந்திய இப்படி ஆடும் என பாண்டிங் நினைத்திருக்க மாட்டார். மிக சிறப்பாக ஆடி வெற்றியை நோக்கி பிலேட்சரும் டோவ்ளினும் அழைத்தது சென்றனர். போராடிய இவர்களுக்கு உறுதுணையாக வேறு யாரும் கைகொடுக்காமல் போக இறுதி வீரரும் களம் வராமல் விட பரிதாபமாக தோல்வி அடைந்தது. இந்த போட்டியும் என் கணிப்பை உறுதி செய்தது.

இந்த தொடரின் மிகப்பெரிய சமர் என எதிர்பார்க்கப்பட்ட போட்டி. தட்டு தடுமாறி மேற்கிந்தியாவை வென்று வந்த பாகிஸ்தானும் பலமான அணியாக வர்ணிக்கப்பட்ட இந்தியாவும் மோதின.நாணய சுழற்ச்சியில் வென்ற பாகிஸ்தானை பல முன்னணி வீரர்கள் இல்லாமல் சந்தித்தது இந்தியா.ஆரம்பத்தில் ஓரளவு சிறப்பாக பந்து வீசிய பந்து வீச்சாளர்களை மாலிக்கும் முஹம்மத் யூசுப்பும் சேர்ந்து காச்சி எடுத்தனர். மாலிக் சதம் கண்டாலும் தொடர்ந்து வந்த எவரும் பிரகாசிக்கவில்லை. ஒருவாறு 302 ஊடங்களை பாகிஸ்தான் குவிக்க துடுப்பாட்ட சூரர்கள் இதை அடிப்பார் என பார்த்தால் ஓட்டு மொத்த சொதப்பலின் மூலம் பாகிஸ்தானிடம் தாரை வார்த்தனர் போட்டியை. இதை பற்றிய என் முன்னைய பதிவு. http://sshathiesh.blogspot.com/2009/09/blog-post_7660.htmlஎன் கணிப்பு மறுபடி பொய்த்தது.

தீர்மானம் மிக்க போட்டியாக இலங்கை நியூசிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்ச்சியில் வென்ற சங்கா முதலில் துடுப்பெடுத்தாட நியூசிலாந்தை அழைத்தார். ஆரம்பம் முதலே அதிரடிக்கு இறங்கியவர்கள் இலங்கை பந்துவீச்சாளர்களை அடித்து துவைத்தனர். முரளி இல்லாமல் ஆட வந்த சங்காவிர்க்கு மூஞ்சியில் அடித்து வெறுப்பேற்றினார். பாரிய ஓட்ட எண்ணிக்கையை தென் ஆபிரிக்காவிற்கு எதிராக துரத்தியவர்கள் தானே என்ற எதிர்பார்ப்பை டில்ஷான் ஏற்ப்படுத்திக்கொடுக்க மகேள அதை தொடர்ந்தார். ஆனால் இம்முறை கண்டம்பியும் மதியூசும் ஏமாற்ற இலங்கை தோல்விகண்டது. இங்கும் என் கணிப்பு என்னை ஏமாறியது.

தென் ஆபிரிக்கா வென்றாக வேண்டிய நிலையில் இங்கிலாந்தை சந்தித்தது. நாணய சுழற்ச்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்தை ஷா,கோலிங் வூட், மோர்கன் ஆகியோர் தாங்கிப்பிடித்து இமாலய இலக்கை நோக்கி கொண்டு சென்றனர். 323 என்ற இமாலய இலக்கை துரத்திய தென் ஆபிரிக்காவில் மாலுமி சிமித் மட்டுமே போராடினார். இறுதியில் அவரும் ஆடிப்போக 22 ஓட்டங்களால் வென்றது இங்கிலாந்து. மறுபடி நான் ஏமாந்தேன்.

வழக்கமாக தென் ஆபிரிக்காவை தொடரும் துரதிஷ்டம் இம்முறை இந்தியாவை துரத்தியது. அவுஸ்திரேலியாவை கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டியை மழை வென்று இந்தியாவை வீட்டுக்கு அனுப்பியது. யார் சிறந்தவர் என்பதை இறுதிவரை நிரூபிக்க முடியாமல் போய்விட்டது.

இந்த போட்டியில் இங்கிலாந்து வென்றால் தான் இலங்கை உள்ளே என இலங்கை காத்திருக்க பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய போட்டியாக இது அமைந்தது. 146 ஓட்டங்களுக்குள் சுருள. நியூசிலாந்து அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் உதவியுடன் ஆறு விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்று இலங்கையை அனுப்பி வைத்தது.

இம்முறை இந்தியா பாகிஸ்தானிடம் பிச்சை கேட்டு நின்றது. இதுவரை நடந்த போட்டிகளில் சுவாரஷ்யமான போட்டி என்றால் அது இந்த போட்டிதான்.அவுஸ்திரேலியா களத்தடுப்பை தெரிவு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இது என்ன பெரிய இலக்கு என்பது போலதான் ஆரம்பித்தனர் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள்.போக போக இந்தியாவிற்காக விளையாடுவது போல பாகிஸ்தான் விளையாடியது. விக்கெட்டுகளை மள மளவென சரித்து இறுதிப்பந்தில் வெற்றியை கோட்டை விட்டு இந்தியாவிற்கு சாரி சொன்னனர்.

உப்புசப்பு அற்ற போட்டியாக நடந்த இந்திய மேற்கிந்திய தீவுகளுக்கேதிரான போட்டியில் தோணி முதலில் பந்து வீசியது. சச்சினின் உணவு கோளாறு தவிர வேறு எந்த பர பரப்பும் இல்லாமல் சுருட்டி அடித்தத் இந்தியா. இத்துடன் லீக் சுற்றும் முடிவடைந்தது.

இதன் படி முதலாவது அரை இறுதியில் அவுஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதின.முதலில் இங்கிலாந்து 257 ஓட்டங்களை பெற்றதும் அவுஸ்திரேலியா அவ்வளவுதான் என நினைத்தேன். ஆனான் என்ன ஒரு அழகான ஆட்டம் போண்டிங்க்கும் வாட்சனும் சதம் பெற்றதுடன் முடித்தும் வைத்தனர் இங்கிலாந்தின் பயணத்தை.ஒரு விக்கெட்டை மாத்திரம் பறிகொடுத்து இமாலய வெற்றியுடன் இறுதிக்குள் நுழைந்தது. முழுதான பலமாக தன்னை காட்டிவிட்டது பாண்டிங் குழு.


மறுமுனையில் பாகிஸ்தான் நியூசிலாந்துடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டது. ஆரம்பத்தில் தடுமாறிய பாகிஸ்தான் ஒருவாறு 233 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு ஆடிய நியூசிலாந்து ஆரம்பத்தில் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்தபோது.எலியட்டும் வெட்டோரியும் அற்புதமாக ஆடி வெற்றியை உறுதி செய்தனர். கிண்ணம் வெல்லும் என நான் நினைத்த பாகிஸ்தானும் பரிதாபமாக் வெளியேறியது.

நாளை இறுதி. ஏற்கனவே கிண்ணம் வென்ற ஓர் கண்டத்தை சேர்ந்த இரு அணிகள். அசுர பலம் அவுஸ்திரேலியாவும் திடீர் பலம் கொண்ட நியூசிலாந்தும் மோத போகின்றன. என் உள்மனது ஏனோ பாண்டிங் கையில் பூமாலை என்றாலும் ஆசை அது வேட்டோரிக்கு கிடைக்கனுமேன்றே. எப்போதும் பெரிய கிண்ணங்களை தவறவிடும் நியூசிலாந்து மினி உலக கிண்ணத்தில் ஏற்க்கனவே சாதித்தது போல் சாதிக்குமா நாளை தெரியும்?

மொத்தத்தில் பல அதிர்ச்சிகளையும் தலை கீழ் முடிவுகளையும் பல தலைகளையும் உருட்டிய இந்த தொடர் முடிந்த பின் நிச்சயம் ஆடுகளங்கள் பற்றிய சர்ச்சை எழும் என்பதில் மட்டும் ஐயமில்லை.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive