நடிப்பில் நல்லா நடிப்பார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசத்துவார். நடிகராக திறமையானவராக இருந்தாலும் வணிக ரீதியாக பெரிய வெற்றியாளர் இல்லை.அறிந்தும் அறியாமலும் தான் இதுவரை இவரின் மிகப்பெரிய வெற்றிப்படம் ஆனால் அதுதான் முதல்படமும் கூட. ஆனால் நடிப்பில் சிகரம் தொட்டது. பாலாவின் நான்கடவுள் தான் இவரின் நடிப்பு பசியை தீர்த்தது. அப்போதும் அந்தப்படத்துக்கு அதிககாலத்தை செலவழித்த களைப்பு தீரமுதலே படம் பெட்டியைக்கட்டியது.ஆனால் அதன் பின் இன்னுமொரு பரீட்சாத்தமாக மதராசுப்பாட்டனம் என்னும் சரித்திர படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். அடுத்ததாக சிக்குபுக்கு படமும் வரபோகின்றது. நடிப்பில் சாதிக்க எவ்வளவோ இருக்கும் போது விஜய் அஜித் கூட செய்யாத ஒரு அரிய முயற்சியை(இது எத்தனை நாளைக்கோ தெரியல) இப்போது செய்யப்போகின்றார். நடிக்கவே நேரம் ஒதுக்க முடியாத நிலையில் இவருக்கு "த ஷோ பீப்பிள்" என்னும் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து படம் தயாரிக்கப்போகின்றாராம்.
படித்துறை என்னும் இந்த படத்துக்கு இளையராஜா இசை அமைப்பது தான் மிகப்பெரிய அதிசயம். முதல் படத்திற்கே இசைஞானி இசை அமைப்பது அவருக்கு வெற்றியே. படமும் வெற்றி அடைந்தால் அதன் பின் நல்ல படங்களை கொடுத்தல் விஜய், அஜித்தை ஆர்யா மிஞ்சுவார்தானே சொல்லுங்க.









0 கருத்துரைகள்:
Post a Comment