Sunday, August 2, 2009

சிலோன்காரன் காக்கா பிடிக்கின்றவனா?-ஒரு சீரியஸ் பதிவு.


வலைப்பதிவர்களுக்கான சுவாரஷ்ய பதிவர் விருதை நான் ரசித்து படித்து சுவைக்கும் பதிவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தேன். அதற்கு பல்வேறு பின்னூட்டங்களும் வந்தன. அப்படி வந்த ஒரு பின்னூடத்தில் பெயரில்லாத ஒருவர் பின்வருமாறு தன் கருத்தை விட்டுச் சென்றிருந்தார்.

பெயரில்லா கூறியது...

சிலோன்காரங்கள் இப்படி ஜால்ரா அடிக்ககூடாது. உங்கள் மேலதிகாரி லோஷனுக்கு நீங்களே விருது கொடுப்பதா?

அந்த நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது எனக்கு தெரியாது ஒருவேளை அவர் இலங்கையராக கூட இருக்கலாம். அப்படி யாரென்றே தெரியாத ஒருவருக்கு என்னை பற்றி நன்றாக தெரிந்திருக்கின்றது.பதிவுலகில் பதிவிட எங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அதேநேரம் பதிவிற்கு பின்னூட்டமிட்டு அந்த கருத்தை ஏற்கவோ அல்லது எதிர்க்கவோ அத்தனை பேருக்கும் உரிமை உண்டு. ஆனால் இதில் அடுத்தவரை சங்கடப்படவைக்காமல் கருத்துகளை பரிமாரிக்கொள்வதே நல்ல மனிதப்பண்பு. அப்படி இருக்கும் இருக்கும் போது தன் பெயரைக் கூட துணிந்து சொல்ல தெரியாதவர் ஊடகங்களைப் பற்றியும் கருத்து இட்டு விட்டு போயிருப்பது செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்கும் எவருக்கும் கோபத்தை வரவழைக்கும் என்பது உண்மையே. அந்த கோபமும் மனதில் இருக்கும் கவலையையும் சக பதிவர்களோடு பகிர்வதன் மூலம் மனதுக்கு ஒரு ஆறுதலுடன் இப்படிப்பட்ட கீழ்த்தரமான சிந்தனைகளோடு பின்னூட்டமிடும் ஒரு சிலருக்கு பதிவர்கள் ஒரு நல்ல பாடம் புகட்டவேண்டும் என்பதே என் கருத்து.

முதலில் இது என் தனிப்பட்ட தளம் இங்கே இடும் அனைத்து இடுகைக்களுக்கும் பொறுப்பாளி நான் மட்டுமே. அப்படி இருக்கும்போது அந்த குறித்த நபர் தன் கருத்தை எனக்கு மட்டுமே விட்டுச் சென்றிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு சிலோன்காரங்கள் எனக்குறிப்பிட்டு ஒரு நட்டு மக்களை இப்படி கூறுவது சரியா? (நீங்களும், நீங்கள் சிலோன் என இப்போது வழக்கத்தில் உள்ள பெயரை அறியாமல் சொல்லும் இலங்கையில் தான் பிறந்துள்ளீர்களா? யார் கண்டார்?) என் தளத்தில் நான் எழுதியதற்கு கருத்து சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு அதை எனக்கு மட்டும் சொல்லிவிட்டு போங்கள் நண்பரே என்பதே என் கருத்து.

லோஷன் அண்ணா எனக்கு மேலதிகாரிதான் ஆனால் வலைப்பதிவில் இங்கே யாரும் யாருக்கும் மேலதிகாரிகள் இல்லையே.நானென்ன வானொலியில் வைத்தா விருது கொடுத்தேன். மேலதிகாரி என்றால் விருது வழங்கக்கூடாது என்று ஏதும் சட்டம் இருக்கா? இன்றைய பிரபல பதிவர்களில் அவரும் ஒருவராக இருக்கும்போது அவருக்கு நான் விருதை கொடுத்தது தப்பே இல்லை. அதேபோல கொடுத்தவருக்கு திருப்பி கொடுக்கிறீர்கள் என்றீர்கள் நண்பரே உண்மைதான் ஏற்றுக்கொள்கிறேன், அதற்கு காரணம் எனக்கு இப்போதுதான் அந்த விருது கிடைத்துள்ளது. நான் வலை உலகில் நுழைந்து சிறிது காலம் தான் அதற்குள் எனக்கு பல வலை பதிவர்களுடன் பழக்கமில்லை. அப்படி இருக்கும் போது நான் பார்த்து ரசித்தவர்களுக்கு தானே கொடுக்கமுடியும். வலை பதிவுலகில் என் உலகம் சின்னதுதான் புதியவன் நான் அதை திருத்தி பலருடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்றேன்.

பெயரில்லா கூறியது...

நல்லா திரும்பி திரும்பி கொடுக்கிறீங்க.. அப்படியே வெச்சிகங்க.. உங்க உலகம் எவ்வளவு சின்னது.. எவ்வளவு காக்காய் பிடிப்புகள் உள்ளது என்று வெளிச்சமாகுது.. இப்படியானவங்க கையிலயா ஊடகம் இருக்குது?

ஊடகத்தை பற்றி பேசி இருக்கின்றீர்கள். ஊடகத்தில் இருப்பவனுக்கு அறிவும், துணிவும் நேர்மையும் அவசியம். என் மனதில் பட்டத்தை இங்கே நான் எழுதி வருகின்றேன். அதேபோல பெயரே இடாது நீங்கள் என்னைப்பற்றி அவதூறாக இட்ட பின்னூட்டத்தைக் கூட இட்டிருக்கின்றேன். நான் நினைத்திருந்தால் உங்கள் பின்னூட்டங்கள் தோன்றாமல் செய்திருக்கலாம். அப்படி செய்யாது நான் பதித்தது கூட ஒரு ஊடக சுதந்திரம் தான். அதே நேரம் சவாலை ஏற்று தான் அவற்றை நான் பதித்தேன். ஆனால் உங்களுக்கு துணிவில்லை என்பதுதானே இந்த பெயரில்லாதவன் என்னும் அடையாளத்துடன் நீங்கள் இட்ட பின்னூட்டங்கள். இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு எங்கே போனது துணிவு, உங்கள் பெற்றோர் வைத்த பெயரை மறைத்து பெயரே இல்லாமல் பின்னூட்டமிட்டது.

பெயரில்லா கூறியது...

ஜால்ராவுக்கு அடுத்த ஜால்ரா ஆதரவு.. ஒரு பின்னூட்டத்தையே பத்து பின்னூட்டமா இடுற ஆள் எல்லாம் வக்காலத்தா.. சின்ன காக்காய்.. பெரிய காக்காய்.. ஒன்றுக்கு கல்லிறிந்தால் மொத்தமாக கரையுது.

காக்கைக்கு இருக்கும் ஒற்றுமை தெரியாமல் அவற்றை இழிவாக கூறிய நண்பரே, நீங்கள் தவறாக கூறிய கருத்துக்கு தான் சந்ரு அப்படி கூறினார். உண்மையில் லோஷன் அண்ணாவை காக்கா பிடிக்க வேண்டிய அவசியம் எனக்குமில்லை. காக்கபிடிப்பவர்களை நம்பும் பழக்கம் அவருக்கும் இல்லை. மேலதிகாரி என்பதை விட எங்களுக்கு நல்ல அண்ணாவாக வழிகாட்டியாக இன்றும் இருக்கிறார் என்பதே உண்மை. உண்மைகள் தெரியாமல் பேசுவது நியாயமா?

பெயரில்லா கூறியது...

சமாக மதித்து அவர் பெருந்தன்மை காட்டிகிறார்.. காக்காய் பிடித்து நீங்கள் சிறுமைப்படுகிறீர்கள்.

எல்லோரையும் சமமாக மதிப்பது அவர் பெருந்தன்மைதான். நான் எப்போதும் சிறியவன்தான் அதில் சந்தேகம் இல்லை. அதே நேரம் காக்கா பிடித்து எனக்கு எந்த நன்மையும் இல்லை. திறமை இருப்பவருக்கே ஊடகம் அல்ல எங்கும் இடம் இருக்கும் அப்படி இருப்பவர்களை இன்றல்ல நேற்றல்ல பல வருடங்களாக் ஏற்றிவிட்டவர்தான் அவர். எனக்கு என் மேல் நம்பிக்கை உண்டு, அப்படி நான் என்னை நிரூபிக்கும் போது என்னை மேலே தூக்கி விட அவருக்கும் மகிழ்வாயிருக்கும். அதன்படியே அவருக்கு கீழ் நான் வானொலியில் வேலை செய்கின்றேன்.

ஆனால் உண்மையில் உங்கள் பிரச்சனை என்ன தான் என தெரியவில்லை நண்பரே முதலில் சிலோன்காரர் என எல்லோரையும் இழுத்து கேவலப்படுத்தினீர்கள் . அதன் பின் ஊடகத்தை இழுக்கின்றீர்கள். இந்த இரண்டும் நான் ஒருவன் சம்பந்தப்பட்டதல்ல எனவே இனியாவது இப்படியான கருத்துக்களை வைக்கும் போது யார் மனதையும் புண்படுத்தாமல் வையுங்கள். அதுவே நீங்கள் ஒரு நேர்மையானவர் என்பதற்கு முதல் சான்று.
பெயரில்லா

நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே.. உங்கள் மனச்சாட்சி அறியும் காக்காயா இல்லயா என்று.. எதுக்கு 51 ஆவது பதிவு.. சுத்த வேஸ்ட்..

ஊக்கப்படுத்துவதாக இருந்தால் எத்தனையோ பதிவருக்கு கொடுக்கலாம்.. சுத்தி சுத்தி லோசனுக்கு குடுத்து என்னத்த கண்டீங்களோ.. மரியாதை காட்ட ஆயிரம் வழி இருக்கு.. ஒரு வண்ணாத்து பூச்சி படம் குடுத்து என்ன கண்டனீங்க?

இது நான் இந்த பதிவை பதிக்க தயாரானபோது எனக்கு வந்த பின்னூட்டம். அவர் கருத்தில் தளம்புவது தெரிகிறது. முன்னர் காக்கா என்றார். இப்போது மரியாதை காட்ட வேறு ஆயிரம் வலி இருக்கு என்கின்றார் அந்த ஆயிரத்தில் ஒன்றுதான் இது நண்பரே. அதேபோல பட்டாம்பூச்சி என்கிறீர்கள் நான் கொடுத்ததோ பட்டாம்பூச்சி அல்ல. நீங்கள் நல்ல தெளிவாக் இருப்பது தெரிகின்றது. நெற்றிக்கண்ணை திறந்து பார்த்தாலும் உங்கள் குற்றம் உங்களுக்கு தெரியாது. உங்கள் மனட்சாட்சியாவது இதற்க்கு பதில் சொல்லும்.

என் சக பதிவர்களே!

இந்த பின்னூட்டமிடும் பெயர் தெரியா நண்பர்கள் சிலர் எனக்கு மட்டுமல்ல உங்களில் பலருக்கும் இதைவிட பல சர்ச்சைக்குரிய விடயங்களை கூட விட்டு சென்றிருப்பார். இவர்களுக்கு நாம் என்ன செய்யப்போகின்றோம். முதலில் பெயர் குறிப்பிடாமல் வரும் பின்னூட்டவாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.சிலர் சொல்லலாம் எங்களுக்கு இல்லை எனவே அப்படி வருகின்றோம் என்று சரி அப்படி வருபவர்கள் கருத்துகளோடு தங்கள் பெயரையும் இட்டு செல்லலாமே. எனவே பலர் இந்த நடைமுறையை தவறாக பயன்படுத்த முனைக்கின்றனர். இவர்களை நாம் தொடர்ச்சியாக அனுமதித்தால் இன்னும் பல எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடுமோ எனத்தெரியவில்லை. அதேநேரம் பதிவுலகமும் இவர்களை போல ஒரு சிலரால் கேட்டு விடுமோ என்ற ஆதங்கமுமுண்டு. நண்பர்களுக்கு! இன்றைய தினம் உலகம் முழுவதும் நட்பு என்னும் அற்புத உறவிற்கு ஒரு கொண்டாட்ட நாள். நான் பிறந்தது முதல் இன்று வரை நான் சந்தித்த நண்பர்களுக்கும் இனி என் வாழ்வில் சந்திக்கப்போகும் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
Share:

12 கருத்துரைகள்:

வந்தியத்தேவன் said...

சதீஷ் நீங்கள் வலையுலகிற்க்கு புதியவர் என்பது புரிகிறது. இதையெல்லாம் சகஜமாக எடுக்கவேண்டும். அத்துடன் உங்கள் பதிவுகள் படிக்கப்படுகின்றன என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். காய்க்கின்ற மரம் தான் கல்லடி படும். இதற்கெல்லாம் கலங்குவதா?

Admin said...

இந்த உலகத்திலே நாகரிகமற்ற சிலர் இருப்பது உண்மையே. அதிலும் தமது பெயரைக்கூட சொல்ல தயங்கும் கோழைகளை நினைக்கும்போது சிரிப்பு வருகின்றது....

சதீஸ் உங்கள் பதிவிலே பெயரில்லாமல் பின்னூட்டம் இட்டவரின் உலகம் எந்தளவு சிறியதாக இருக்கின்றது என்பதைப் பாருங்கள்.... அவருக்கு உண்மையாகவே பதிவுலகம் பற்றியோ பதிவர்களுக்குள்ளேயோ பரிமாறப் படுகின்ற விருது பற்றியோ எதுவும் தெரியாத ஒருவர் என்பது மட்டும் புரிகிறது.

இந்த விருதுகள் வழங்குவதற்கு மேலதிகாரி கீழதிகாரி என்ற பாகுபாடு பதிவர்களுக்குள் இல்லை என்பதை இவர் அறியாத ஒரு சுத்த சூனியம் என்பது புலனாகின்றது.


விமர்சனம் என்பது எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இந்த கீழ்தரமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் அளவிலும் நாம் இல்லை. தன் பெயரே தெரியாத இவருக்கு எங்களைப்பற்றிக் கூற என்ன அருகதை இருக்கிறது.

Admin said...

எந்த இடத்திலே காகத்தைபற்றி சொல்லவேண்டும் என்று தெரியாத பெயரில்லாதவரே எங்களுக்குள் நாங்கள் யாரையும் காக்கை பிடிக்கவேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்குள் இருப்பது பதிவர்கள் என்ற ஒரு உறவே. நான் லோஷன் அண்ணாவை காக்கை பிடிக்கவேண்டிய அவசியம் இல்லை நான் அவருக்கு கீழ் வேலை செய்பவனல்ல. நானோ வேறு இடத்தில் வேலை செய்பவன்...

தன் பெயரே தெரியாதவருக்கு சொல்கிறேன் நீங்கள் முதலில் வலையுலகம் பற்றியும் பதிவர்கள் பற்றியும் நன்றாக அறிந்துவிட்டு பினூட்டமிடப்பழகுங்கள் இப்போது உங்களுக்கு இருக்கும் அறிவுக்கு நீங்கள் ஒரு மூலையில் ஒதுங்கி கிடக்க வேண்டிய ஒருவர்...

தன் பெயரே தனக்குத் தெரியாதவரிடம் கேட்கின்றேன் நான் ஒரு பினூட்டத்தை பத்துப் பின்னூட்டமாக இட்டதை நிருபிக்க முடியுமா...

நாங்கள் உங்களைப்போல் கோழைகள் இல்லை என்பதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

SShathiesh-சதீஷ். said...

வந்தியத்தேவன் கூறியது...
சதீஷ் நீங்கள் வலையுலகிற்க்கு புதியவர் என்பது புரிகிறது. இதையெல்லாம் சகஜமாக எடுக்கவேண்டும். அத்துடன் உங்கள் பதிவுகள் படிக்கப்படுகின்றன என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். காய்க்கின்ற மரம் தான் கல்லடி படும். இதற்கெல்லாம் கலங்குவதா?

வந்தியத்தேவன் நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்கின்றேன். உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் வாழ்த்துக்கள்.

SShathiesh-சதீஷ். said...

சந்த்ரு நீங்கள் சொன்னது மிகச்சரியானது. இதுவரை வாய் திறக்காத அந்த நண்பர் இனி என்ன சொல்லப்போகின்றாரோ? பார்ப்போம்.

Admin said...

அவரின் பதிலுக்காகவே காத்திருக்கிறேன்...

Nimalesh said...

ITHUYELLAM KANDU KOLLTHINGA THOLA.......... ITHU YELLAM PARHTAA MUDIUMAAA....

Anonymous said...

பெயர் சொன்னால் இடிந்து போய்விடுவீர்கள் அதுதான்.. உங்க பக்கத்துல இருக்கும் ஒருவர்.

//இல்லை இங்கு திருப்பி கொடுப்பதுதான் பிரச்சினை.. இதுகூட இன்னும் புரியலயா? மேலதிகாரி என்றால் விருது வழங்கக்கூடாது என்று ஏதும் சட்டம் இருக்கா?//

//வலை உலகில் நுழைந்து சிறிது காலம் தான் அதற்குள் எனக்கு பல வலை பதிவர்களுடன் பழக்கமில்லை//

கொஞ்ச காலம் படிச்சு பாத்திட்டு எழுதுங்கோ அப்பு.. அரங்கில் ஆடியே அம்பலத்தில் ஆட வேண்டும்..

காக்காய் என்றால் என்ன கருதப்படுகிறது என்று அறிக.. தமிழ் தெரியாதோ உமக்கு?

//ஒரு பினூட்டத்தை பத்துப் பின்னூட்டமாக இட்டதை நிருபிக்க முடியுமா...//

லோஷனின் வலைப்பூவில் அதைதானே செய்கிறீர் நீர்?

SShathiesh-சதீஷ். said...

பெயரில்லா சொன்னது…
August 3, 2009 5:49 AM
பெயர் சொன்னால் இடிந்து போய்விடுவீர்கள் அதுதான்.. உங்க பக்கத்துல இருக்கும் ஒருவர்.

//இல்லை இங்கு திருப்பி கொடுப்பதுதான் பிரச்சினை.. இதுகூட இன்னும் புரியலயா? மேலதிகாரி என்றால் விருது வழங்கக்கூடாது என்று ஏதும் சட்டம் இருக்கா?//

//வலை உலகில் நுழைந்து சிறிது காலம் தான் அதற்குள் எனக்கு பல வலை பதிவர்களுடன் பழக்கமில்லை//

கொஞ்ச காலம் படிச்சு பாத்திட்டு எழுதுங்கோ அப்பு.. அரங்கில் ஆடியே அம்பலத்தில் ஆட வேண்டும்..

காக்காய் என்றால் என்ன கருதப்படுகிறது என்று அறிக.. தமிழ் தெரியாதோ உமக்கு?

//ஒரு பினூட்டத்தை பத்துப் பின்னூட்டமாக இட்டதை நிருபிக்க முடியுமா...//

லோஷனின் வலைப்பூவில் அதைதானே செய்கிறீர் நீர்?

உங்கள் பெயரை கேட்டால் சொல்ல துணிவில்லாமல் சும்மா பம்மாத்து காட்டும் கதைகள் சொல்லவேண்டாம். என் பக்கத்தில் இருக்கும் ஒருவர் என்கிறீர் அப்படியானால் நீங்களும் ஊடகத்தோடு சம்பந்தப்பட்டவரே இப்போது சொல்லுங்கள் உங்களைப்போன்ற தைரியமற்றவர்கள் ஊடகத்தில்????? முதலில் மேலதிகாரிக்கு கொடுத்தது பிரச்சனை என்றீர்கள் இப்போது திருப்பி கொடுப்பது பிரச்சனை என்கிறீர்கள். உங்கள் பிரச்சனை உங்களுக்கு தரவில்லை என்பது தானே. உங்கள் தளத்தை சொல்லுங்கள் பலர் உங்களுக்கு விருது வழங்க தயார். அப்பு.... நாங்கள் அரங்கில் ஆடி அம்பலத்தில் ஆடுகின்றோம் நீங்கள் அம்பலத்தில் அம்மணமாக ஆடுவதுபோல உங்கள் பெயரற்று ஆடுகின்றீர்கள். படிப்பது எழுதுவதும் செய்ய செயக்த்டான் வளரும் என்பது தமிழ் அறிந்த உங்களுக்கு தெரியாத. சொல்லவேண்டியவை சொல்லிவிட்டேன். இதற்க்கு மேலும் நீங்கள் நாகரிகமற்று செயற்ப்பட்டால் உங்களை கணக்கில் கொள்ளும் நிலையில் நானில்லை. உங்கள் கருத்துகளுக்கும் வருகைக்கும் என்னை எதிர்மறையான கருத்தோடு அணுகிய உங்கள் எண்ணத்துக்கும் வாழ்த்துக்கள். உங்கள் எதிர்ப்பு என்னை மேலும் பலப்படுத்தியது.....

Anonymous said...

//சொல்லுங்கள் உங்களைப்போன்ற தைரியமற்றவர்கள் ஊடகத்தில்?//

யார் என்பது முக்கியமில்லை.. என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்.. ஊடகத்து வெட்டு குத்து உமக்கு தெரியாதா? என் பணி கூட வெளியில் முகம் தெரியாமல் நடக்க உங்களுக்கு தானே பெயர் வருகிறது? பிறகு எதுக்கு இதுக்கு மட்டும் பெயர்?

//உங்கள் மேலதிகாரி லோஷனுக்கு நீங்களே விருது கொடுப்பதா? //
அது என்னுடைய கருத்தல்ல.. சொன்னவர் பதில் சொல்வார்.. ஒருவர்தான் இதை எல்லாம் சொல்கிறார் என்று நினைத்தால் அது என் பிழை இல்லை.. கூடி நின்று கும்முறாங்க என்று புரிக..

ARV Loshan said...

இந்த சர்ச்சை இன்னும் போகுதா? நான் தான் மத்தளமா?
நடக்கட்டும் நடக்கட்டும்

// வந்தியத்தேவன் கூறியது...
சதீஷ் நீங்கள் வலையுலகிற்க்கு புதியவர் என்பது புரிகிறது. இதையெல்லாம் சகஜமாக எடுக்கவேண்டும். அத்துடன் உங்கள் பதிவுகள் படிக்கப்படுகின்றன என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். காய்க்கின்ற மரம் தான் கல்லடி படும். இதற்கெல்லாம் கலங்குவதா?
//

ஆமோதிக்கிறேன்.. பதிவுலகில் புதிதாக வருகையில் எல்லோரும் ஒரு கட்டத்தில் இது தாண்டித்தான் வரவேண்டும்.. ;)

SShathiesh-சதீஷ். said...

LOSHAN சொன்னது…

இந்த சர்ச்சை இன்னும் போகுதா? நான் தான் மத்தளமா?
நடக்கட்டும் நடக்கட்டும்

// வந்தியத்தேவன் கூறியது...
சதீஷ் நீங்கள் வலையுலகிற்க்கு புதியவர் என்பது புரிகிறது. இதையெல்லாம் சகஜமாக எடுக்கவேண்டும். அத்துடன் உங்கள் பதிவுகள் படிக்கப்படுகின்றன என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். காய்க்கின்ற மரம் தான் கல்லடி படும். இதற்கெல்லாம் கலங்குவதா?
//

ஆமோதிக்கிறேன்.. பதிவுலகில் புதிதாக வருகையில் எல்லோரும் ஒரு கட்டத்தில் இது தாண்டித்தான் வரவேண்டும்.. ;

என்ன செய்வது அண்ணா இப்பதானே கொஞ்சம் கொஞ்சமாக என்னை பண்படுத்திக்கொண்டு வருகின்றேன். ஆரம்பத்தில் உணர்ச்சிவசப்பட்டவன் இப்போது இதை கணக்கெடுக்காமல் விட என்னை தயார் படுத்திக் கொண்டேன். இந்த பிரச்சனைக்கு உங்கள் கருத்துகளோடு முற்றுப்புள்ளி வைத்து விடுவோம். நன்றி அண்ணா உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive