உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

Sunday, June 27, 2010

எழுந்திட்டேன்! இதோ வர்றன்



வணக்கம் மக்கள்ஸ்,

இப்படி ஆரம்பித்து திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகளுக்கான இறுதி முடிவுகளை தந்திருக்க வேண்டியவர்களில் நானும் ஒருவன் ஆனால் காலம் செய்த கோலம கடந்த சனி தொடக்கம் என்னை அதை செய்யவிடாமல் செய்துவிட்டது. இதனால் சூடானா சில பதிவுகள் எழுதமுடியாமல் போய்விட்டது. முக்கியமாக விஜய் பிறந்தநாள் வாழ்த்து பதிவு. பெரிதாய் ஒரு காரணமும் இல்லை. காய்ச்சல் தாங்க ஆனால் ரொம்ப மோசமாய் வந்திட்டிது. என்ன என்ன எல்லாம் இருக்கா என டாக்டர் கேட்கும்போது இல்லை என்று சொன்னேனா ஆனால் அவை எல்லாம் அதன் பின் வந்து இறுதியில் இன்று எழும்பி இருக்கின்றேன்.

கடந்த சனி இரவே என் உடல் நிலை மோசமாகின்றது என புரிந்து கொண்டு விட்டேன். இருப்பினும் அடுத்த நாள் மாலை இடம்பெறும் குட்டி பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வேன் என கூரியிருந்த நான் மதியமளவில் பதிவர் கான்கொனுக்கு அலைபேசி இன்று வரமாட்டேன் என சொல்லிவிட்டு. இரவு சகல வேலைகளையும் முடித்து முடிவுகளை சொன்ன நேரத்துக்கு அறிவித்து விடுங்கள் என சொல்லி விட்டேன். குளிர் நடுக்கம், காய்ச்சல் தலைவலிக்கு நடுவே இடையிடையே நண்பர்களுடன் தொலைபேசியில் பேச முயன்றும் முடியாமல போக என் இணைய தளத்தை இயங்க செய்து மெயிலையும் திறந்து விட்டு முடிவுகளை அறிவித்தவுடன் எனக்கு சொல்லவும் என சொல்லிவிட்டு படுத்திருந்தேன். இரவு ஒன்பது முப்பது அளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டதாக வந்த தொலை பேசி அழைப்பை தொடர்ந்து பெரிய ஒரு வேலை முடிந்தது என்ற நம்பிக்கையில் படுத்தவன் இன்றுதான் மீண்டும் இன்னொரு பதிவுடன் சந்திக்கின்றேன்.

ஆரம்பத்தில் இந்த முயற்ச்சியை நான் ஆரம்பித்த வேலை என்னுடன் கரம கோர்த்த கோபி,பவன் இரண்டுபேரின் பங்கும் இதில் முக்கியமானது. அதன் பின்னர் பலர் எங்களுடன் இணைந்தனர். அவர்கள் எல்லோரிடமும் நாங்கள் தெரிவுகளை விசாரிக்கும் நேரம் நான் கோபமாக பேசியது சில விதண்டாவாதன்களை பேசியதற்கு மன்னிப்பு கேட்கின்றேன். தொழில் நுட்ப விடயங்களில் புகுந்து விளையாடி வாக்களிப்பு படைகளை உருவாக்கிய கோபி, வலைப்பூ விருது லோகோ,வலைபூ லோகோ என பல உருவாக்கி உழைத்த பவன் இதற்கான விளம்பரப்படுத்தலில் ஈடுபட்ட அனுதிணன் என எல்லோரும் என் நன்றிக்குரியவர்கள். இதை விடுத்து சுபாங்கன் அண்ணா,மது அண்ணா, வந்தி மாமா, லோஷன் அண்ணா, ஆதிரை அண்ணா, இந்தியாவின் சவுந்தர், தமிழ் மதுரம் மெல்பேர்ன் கமல், அகசியம் வரோ, பங்குச்சந்தை அச்சுதன், மருதமூரான் அண்ணா, மதுரகன் அண்ணா என நேரடியாய் எம்முடன் தொடர்பு கொண்டு ஆதரவளித்தொருக்கும் இன்னும் எமக்கே தெரியாமல் தம நல்ல மனதால் ஆதரவளித்த எல்லோருக்கும் என் நன்றிகள்.

ஒரு கை ஓசை கடந்தமுறை பெரிதாய் கேட்கவில்லை. இம்முறை பல கை சேர்ந்த போது அது பாரெல்லாம் ஒலித்தது சந்தோசம். இதற்க்கு இலங்கை பதிவர்கள் மட்டுமன்றி சில இந்திய பதிவர்களும் தனிப்பட்ட ரீதியில் என்னுடன் தொடர்பு கொண்டு ஆதரவளித்தனர்.(அங்கே நடந்த பதிவுலக சாக்கடையால் தம பெயர் இதற்குள் அடிபட்டு இந்த நல்ல முயற்ச்சிக்கு சேறு பூச விரும்பாமால் அவர்கள் நேரடியாய் பதிவுகளை இடவில்லை) அவர்களுக்கும் என் நன்றிகள. கடந்தமுறை ஒரு வாக்காளார் நூறு வாக்குகளை பெற்றதே பெருமையாய் எண்ணிய நிலையில் இம்முறை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் போட்டியாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என்றால் அது எந்தளவு பிரமாண்டத்தை கண்டிருக்கின்றது என உங்களுக்கே தெரியும்.

முக புத்தகம்,டுவிட்டர் மற்றும் தங்கள் வலைத்தளம் என தங்கள் ஆதரவை தனிப்பட்டோர் வழங்க தமிலிஷ்,யாழ்தேவி,தலைவன் திரட்டிகள் தங்கள் அமோக ஆதரவை வழங்கியுள்ளன. எல்லோருக்கும் நன்றி சொல்லும் அதே நேரம் இதுவரை முடிவுகளை அறியாதவர்கள் கீழுள்ள லிங்கை சொடுக்கி பார்க்கவும்.....


நன்றி என்னும் ஒரு வார்த்தை மட்டுமே என்னால் தரமுடியும் நண்பர்களே. நான் படுக்கையில் கிடக்கும் போதே வெற்றிகரமாய் ஒரு முடிவுகளை அறிவித்த என் அன்புத்தம்பிகளுக்கும் என் நன்றிகள். இன்னும் பெயர் சொல்ல மறந்த எல்லோருக்கும் என் நன்றிகள்.
Share:

Wednesday, May 26, 2010

திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் 2010 - முன்னோட்டம்.



வணக்கம் மக்கள்ஸ்,

மீண்டும் ஒரு தடவை ஒரு பிரமாண்டமான அறிவிப்புடன் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. கடந்த வருடம் என்(SSHATHIESH in பார்வை) வலைப்பூவில் தனியாக சினிமா கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக உங்கள் வாக்குகள் மூலம் அபிமானம் பெற்றவர்களை தெரிவு செய்து மகிழ்ந்தேன். நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து தங்கள் அபிமானிகளை தெரிவு செய்தனர். அதன் பின் அண்மையில் தான் அதை தமிலிஷில் பிரசுரிக்க உங்கள் அமோக ஆதரவுடன் பிரபல இடுகையாகியது. விளையாட்டாக நான் ஆரம்பித்த ஒரு விடயம் உங்கள் பலரின் அபிமானம் பெற இம்முறை அதை கொஞ்சம் விரிவாக்கி சிலர் சேர்ந்து செய்யலாமா என்ற எண்ணம் தோன்றவே சில பதிவர்களுடன் இதை கலந்துரையாடினேன்.

கலந்துரையாடலில் கிடைத்த ஊக்கம் தொடர்ந்து இந்த முயற்சியில் தங்களையும் இணைத்துக்கொண்டுள்ள பதிவர் கான்கொன், எரியாத சுவடுகள் பவன், என் உளறல்கள் வந்தியத்தேவன் மாமா, ஐந்தறைப்பெட்டி சுபாங்கன், நா எழுதும் கெளவ்பாய் மது அண்ணா ஆகியோரின் ஒத்துழைப்புடனும் இன்னும் சில பதிவுலக நண்பர்களுடனும் இணைந்து இந்த முயற்சியை ஆரம்பிக்கின்றோம். வழக்கமாக நல்ல முயற்சிகளுக்கு ஆதரவு தரும் நீங்கள் நிச்சயம் இந்த முயற்சிக்கும் கை கொடுப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

இங்கே எங்கள் குழுவில் சேராது வெளியில் இருந்து ஆதரவு தர சில பதிவர்கள் தயாராக இருக்கும் நிலையில் ஒரு சில திரட்டிகளும் இதற்கு நல்ல சமிக்கை காட்டியுள்ளன. எனவே திரட்டிகளின் பங்கும் இங்கே மிகப்பெரிய பங்காக இருக்கும் என நம்புகின்றோம். எனவே அவர்களுக்கும் இந்த இடத்தில் நன்றியை தெரிவிப்பதோடு சக பதிவர்கள், வாசகர்கள் எல்லோரிடமும் இதற்கு ஆதரவு கேட்கின்றோம். பதிவுலகம் இன்று மிகப்பெரிய சக்தியாக மாறி உள்ளது. பல நிறுவனங்கள்,அமைப்புக்கள் திரை உலகிற்கு விருது வழங்கி வரும் நிலையில் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பதிவுலகில் வரும் காலத்தில் பிரமாண்ட விழாக்களுடன் இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. எனவே பூனைக்கு மணியைக் கட்டுவது யார்? நாங்கள் கட்டி இருக்கின்றோம்.

இந்த விருதுகளை நாம் வழங்க யார் என கேட்கலாம். சாதாரண ரசிகர்கள் தான் நாங்கள். ஆனால் பதிவர்கள் என்னும் மிகப்பெரிய சக்திகள். இது ஒரு குறிபிட்ட பிரதேசத்துக்கோ அல்லது குறிப்பிட்ட நாட்டுக்கோ அல்லது கண்டத்துக்கோ உரியதல்ல. நம் பதிவர்கள் எல்லோரும் இதன் பங்காளிகள். எனவே எங்களுக்குள் போட்டியாளர்களுக்காக தெரிவுகளுக்கான விவாதம்(நலன் விரும்பிகளும் பங்கு பெறுகின்றனர்) நடை பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் நீங்களும் எங்களுடன் தாராளமாக கை கோர்க்கலாம். இடம் காலம் மறந்து பதிவர்கள் என்ற ஒரு குடையின் கீழ ஒன்றாவோம். சாதிப்போம்.
Share:

Monday, September 14, 2009

நண்பர்களுக்காக...............


விருதுகளால் பல பதிவர்கள் அலங்கரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் எனக்கும் யோ வாய்ஸ் சார்பாக எனக்கு மீண்டும் ஒரு விருது கிடைத்தது. அதன் தொடரை நான் தொடர காலம் எடுத்துக்கொண்டிருக்க இப்போது சற்று நாட்களுக்கு முன் மீண்டும் சந்ருவினால் அந்த விருது எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. விருதுகளை கொடுப்பதும் பெறுவதும் பற்றி பலர் பல்வேறு விதமாக கூறினாலும் எனக்கு விருது கிடைத்தது சந்தோசமே. இப்போது நான் கொடுக்கப்போவாதும் மகிழ்ச்சியே.

இம்முறை விருது வழங்கும் போது எனக்கு நிறைய பதிவர்களை படிக்க முடிந்தது. அதற்கு காரணம் பதிவர் சந்திப்பு. நிறைய பதிவுகளை படித்தேன் அப்படிப்படிக்கும் போது எல்லோரும் என்னை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்து விட்டனர். அதில் பத்துபேரை தெரிந்து இந்த விருதை வழங்கப்போகின்றேன். அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கின்றேன்.

1. ௧.கனக கோபி.
தன்னைப்பற்றி என்ன சொல்வதென்பதற்கே யோசிக்கும் இவர் பதிவுகளில் சொல்லவேண்டியவற்றை சொல்லி விடுவார். பல்சுவை கலந்த எழுத்தில் நான் இவரை ரசிக்கின்றேன்.

2. பால்குடியின் தாய்மடி.
உங்கள் எண்ணங்களை மீட்டு அரவணைப்புடன் ஆறுதல் தேட நீங்கள் தாரளமாக இவர் தளம் செல்லலாம். தன் வாழ்வில் இருக்கும் யதார்த்தங்கள் அதிகம் பிரதிபலிக்கப்படும்.

3. கவ்பாய் மது.
நாவினால் நாட்டையே அசையவைக்கும் அசகாய சூரன். பதிவுகளோ பாரினை சுற்றிவரும். பேருந்தில் பயணித்து பேயறைந்து போய் நிற்கின்றார்.

4. த கிரேட் புல்லட்.
பெயரிலேயே வில்லங்கம் என்றால் முதலில், தலைப்பிலும் புல்லட்டின் டுமீல். ஏதோ சீரியஸ் பதிவர் என பார்த்தால் சுண்டக்காயையும் சூத்தைக்கத்தரிக்கயையும் கூட சுவையாக சமைக்கும் வல்லமை பொருந்திய சுவாரஸ்ய பதிவர். இப்படி சொல்ல காரணாம் சின்ன விடயங்களையும் எதிர்மறையான விடயங்களை கூட நகைச்சுவையாக தரக்கூடியவர். பதிவர் சந்திப்பின் பின் நெருங்கிய நண்பர் ஆகிவிட்டார். என்ன செய்வது வந்தி அண்ணருக்கு போட்டியாக இப்பவே தனக்கு பொண்ணு பார்க்க தொடங்கி விட்டார்.

5. டயானா
அறிந்ததும் அறியாததும் என எல்லாவற்றையும் எழுதும் இவர் அடிக்கடி காணாமல் போய்விடுவார். தனக்கு தானே காணவில்லை என எழுதி பரபரப்பூட்டும் பதிவாயினி.(எல்லாம் கவிதாயினி என்னும் பெண்பாலில் இருந்து செட்டது.)அப்பப்போ எழுதினாலும் அறிவாக எழுதும் கெமிஸ்ட்ரி (இவரின் ரொம்பநாள் பிரச்சனை ) தெரிந்தவர்.

6. ஹரன்.
சாமானியன் என சொல்லிக்கொண்டே சகலதும் எழுதும் சகலகலாவல்லவர். கவிதை முதல் காரசாரம் வரை கலந்து கலக்குபவர்.

7.மருதமூரான்.
பதிவர் சந்திப்பில் நாயகன். கடலையும் வானத்தையும் கூட உடைத்தெறிந்து எல்லை வகுத்தவர். சாம்பாரை சகலதும் வரும் சத்துணவை. படித்தால் கிடைத்திடும் எல்லோருக்கும் புத்துணர்ச்சி.

8.சுபானு.
சொல்வதற்கு ஏதும் இல்லை என்று விட்டு சொல்லவேண்டிய எல்லாவற்றையும் ஊஞ்சல் ஆட்டியே சொல்லிவிடுவார். சுயமும் சுவாரஸ்யமும் தான் இவரின் ஊஞ்சலின் இரண்டு கயிறுகள்.

9.பனையூறான்.
ஏதேனும் எழுதவேண்டும் என்பதற்காக எழுவது என சொல்லி விட்டு எல்லாவற்றையும் எழுதிவிடுவார். தேடியதும் தெரிந்ததும் தொட்டதும் தொடாததும் வடலிக்குள் மறைந்திருக்கும் ரகசியங்களும் இந்த பனையூரானின் உச்சத்திலே பளிச்சென தெரிந்து விடும். பட்டத்தை பட்டென சொல்லும் பனையூரான்.

10. வந்தியத்தேவன்.
என் உளறல்கள் என உள்வீட்டு ரகசியங்களை உளறித்தள்ளும் ஒரு உளறல் நாயகன். சக பதிவர்களை காளியாக்கியே பதிவிடும் அன்பு நெஞ்சன். மூத்த பிரபல பலம் தின்று கொட்டை போட்ட பதிவர் என தன்னை தானே சொல்லல் சொல்லும் உண்மையிலேயே மூத்த பதிவர்.(பூட்டனை காணும் வயதில் இருக்கும் உங்கள் வயதை சொன்னேன்.) எல்லாவற்றுக்கும் மேலாக பதிவர் சந்திப்பில் அறிமுகமாகி இன்று என் பதிவுகளிலும் தளத்திலும் மாறா அக்கறை உடைய யானைப்பலம் கொண்ட புண்ணியவான். கண்டதும் கேட்டதும் நக்கலும் நையாண்டியும் கலந்து வரும் கள்ளம் கபடமற்று. அதுவே இவரின் பெரிய வெற்றி.

அப்பாடா நீண்டகாலமாக என் மனதை உறுத்திக்கொண்டிருந்த ஒரு உணர்வை இப்போது பதிந்து விட்டேன். பெற்றவர்கள் தொடர்வார்கள் என்றும். மற்றவர்கள் வாழ்த்துவார்கள் எனவும் எண்ணி எல்லோருக்கும் மீண்டும் மீண்டும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, மீண்டும் சந்திப்போம். வரட்டா...........
Share:

Thursday, August 6, 2009

வைரமாகின்றது மைக்கல் ஜாக்சனின் முடி.

மறைந்தவரின் மரணத்தின் சர்ச்சைகளே இன்னும் அடங்கவில்லை அதற்குள் அவரின் முடியே இன்னுமொரு சரித்திரம் படைக்க தயாராகிவிட்டது. சிலருக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு அதிசய வாழ்க்கை இது. இறந்தபின்னும் வாழும் பொப் இசை சக்கரவர்த்தி அதை தன் வாழ்விலும் நிரூபித்து இந்த உலகம் உள்ளவரை தன் பெயர் நிலைத்திருக்கும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றார்.

அமெரிக்காவில் இருக்கும் வைரங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று மைக்கல் ஜாக்சனின் முடியிலிருந்து பத்து வைரங்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளது. இதில் இன்னுமொரு சுவாரஷ்யம் மூன்று வைரங்களை ஜாக்சனின் பிள்ளைகளுக்கு கொடுக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர்.(காசு வாங்கிக்கொண்டா இல்லையா என யோசிக்காதிங்க இலவசமாத்தானாம்.) லைப் ஜெம் என்னும் இந்த நிறுவனத்தின் முக்கியமான ஒரு தொழிலே பிரபலங்களின் முடிகளிலிருந்து வைரங்களை தயாரிப்பது என்பது அதிசயமான உண்மை.

1984ஆம் ஆண்டில் பெப்சி விளம்பரம் ஒன்றில் மைக்கல் ஜாக்சன் நடித்தபோதே தலைமுடியில் தீ பற்றிக்கொண்டது. அதில் ஒரு தொகுதியை ஜன் ரேஷ்னிக்கொப் என்பவர் எடுத்து வைத்திருக்கின்றார்.(பாருங்கப்பா முடியைகூட விட்டு வைக்கல.) இப்போது அந்த முடியை வைத்துதான் இந்த முயற்சியில் தாம் ஈடுபடப்போவதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்திருக்கின்றார்.

பூகம்பம் மற்றும் இதர காரணங்களால் பூமிக்குள் போகும் மரங்கள் பல நூற்றாண்டுகள் கழித்து எப்படி அழுத்தத்தின் காரணமாக நிலக்கரியாகவோ அல்லது வைரப்படிகங்களாகவோ மாறுகின்றனவோ அதிலும் நிலக்கரி மற்றும் வைரங்கள் கரிப்படிமானங்கள் என்பது ஒரு குறிப்பிடத்தக்க விடயம். அந்த வகையில் மனிதரின் தலைமுடியைக்கூட டிகிரி வெப்பநிலையில் கருக்கி காற்பனாக்கி வைரமாக்கலாம் என்கின்றார்கள் இவர்கள். இசை உலகின் வைரம், இப்போது அவரின் முடியின் வைரமாக அவரின் குழந்தைகளோடு உரசிக்கொண்டிருந்தாள் அது அவருக்கும், குழந்தைகளுக்கும் மட்டுமல்ல அந்த இசை மன்னனை மனதார நேசித்த அத்தனை பேருக்கும் சந்தோசமே.

இன்னும் ஒரு சில நாட்களே விருதை யார் வெல்லப் போகின்றார் என்னும் முடிவை அறிவிக்க. உங்களுக்கு பிடித்தவர்கள் தோற்கலாமா` நீங்களே வாக்களியுங்கள் உங்கள் அபிமான நட்சத்திரங்களுக்கு விருது வழங்கி மகிழுங்கள்.
Share:

Sunday, August 2, 2009

சிலோன்காரன் காக்கா பிடிக்கின்றவனா?-ஒரு சீரியஸ் பதிவு.


வலைப்பதிவர்களுக்கான சுவாரஷ்ய பதிவர் விருதை நான் ரசித்து படித்து சுவைக்கும் பதிவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தேன். அதற்கு பல்வேறு பின்னூட்டங்களும் வந்தன. அப்படி வந்த ஒரு பின்னூடத்தில் பெயரில்லாத ஒருவர் பின்வருமாறு தன் கருத்தை விட்டுச் சென்றிருந்தார்.

பெயரில்லா கூறியது...

சிலோன்காரங்கள் இப்படி ஜால்ரா அடிக்ககூடாது. உங்கள் மேலதிகாரி லோஷனுக்கு நீங்களே விருது கொடுப்பதா?

அந்த நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது எனக்கு தெரியாது ஒருவேளை அவர் இலங்கையராக கூட இருக்கலாம். அப்படி யாரென்றே தெரியாத ஒருவருக்கு என்னை பற்றி நன்றாக தெரிந்திருக்கின்றது.பதிவுலகில் பதிவிட எங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அதேநேரம் பதிவிற்கு பின்னூட்டமிட்டு அந்த கருத்தை ஏற்கவோ அல்லது எதிர்க்கவோ அத்தனை பேருக்கும் உரிமை உண்டு. ஆனால் இதில் அடுத்தவரை சங்கடப்படவைக்காமல் கருத்துகளை பரிமாரிக்கொள்வதே நல்ல மனிதப்பண்பு. அப்படி இருக்கும் இருக்கும் போது தன் பெயரைக் கூட துணிந்து சொல்ல தெரியாதவர் ஊடகங்களைப் பற்றியும் கருத்து இட்டு விட்டு போயிருப்பது செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்கும் எவருக்கும் கோபத்தை வரவழைக்கும் என்பது உண்மையே. அந்த கோபமும் மனதில் இருக்கும் கவலையையும் சக பதிவர்களோடு பகிர்வதன் மூலம் மனதுக்கு ஒரு ஆறுதலுடன் இப்படிப்பட்ட கீழ்த்தரமான சிந்தனைகளோடு பின்னூட்டமிடும் ஒரு சிலருக்கு பதிவர்கள் ஒரு நல்ல பாடம் புகட்டவேண்டும் என்பதே என் கருத்து.

முதலில் இது என் தனிப்பட்ட தளம் இங்கே இடும் அனைத்து இடுகைக்களுக்கும் பொறுப்பாளி நான் மட்டுமே. அப்படி இருக்கும்போது அந்த குறித்த நபர் தன் கருத்தை எனக்கு மட்டுமே விட்டுச் சென்றிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு சிலோன்காரங்கள் எனக்குறிப்பிட்டு ஒரு நட்டு மக்களை இப்படி கூறுவது சரியா? (நீங்களும், நீங்கள் சிலோன் என இப்போது வழக்கத்தில் உள்ள பெயரை அறியாமல் சொல்லும் இலங்கையில் தான் பிறந்துள்ளீர்களா? யார் கண்டார்?) என் தளத்தில் நான் எழுதியதற்கு கருத்து சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு அதை எனக்கு மட்டும் சொல்லிவிட்டு போங்கள் நண்பரே என்பதே என் கருத்து.

லோஷன் அண்ணா எனக்கு மேலதிகாரிதான் ஆனால் வலைப்பதிவில் இங்கே யாரும் யாருக்கும் மேலதிகாரிகள் இல்லையே.நானென்ன வானொலியில் வைத்தா விருது கொடுத்தேன். மேலதிகாரி என்றால் விருது வழங்கக்கூடாது என்று ஏதும் சட்டம் இருக்கா? இன்றைய பிரபல பதிவர்களில் அவரும் ஒருவராக இருக்கும்போது அவருக்கு நான் விருதை கொடுத்தது தப்பே இல்லை. அதேபோல கொடுத்தவருக்கு திருப்பி கொடுக்கிறீர்கள் என்றீர்கள் நண்பரே உண்மைதான் ஏற்றுக்கொள்கிறேன், அதற்கு காரணம் எனக்கு இப்போதுதான் அந்த விருது கிடைத்துள்ளது. நான் வலை உலகில் நுழைந்து சிறிது காலம் தான் அதற்குள் எனக்கு பல வலை பதிவர்களுடன் பழக்கமில்லை. அப்படி இருக்கும் போது நான் பார்த்து ரசித்தவர்களுக்கு தானே கொடுக்கமுடியும். வலை பதிவுலகில் என் உலகம் சின்னதுதான் புதியவன் நான் அதை திருத்தி பலருடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்றேன்.

பெயரில்லா கூறியது...

நல்லா திரும்பி திரும்பி கொடுக்கிறீங்க.. அப்படியே வெச்சிகங்க.. உங்க உலகம் எவ்வளவு சின்னது.. எவ்வளவு காக்காய் பிடிப்புகள் உள்ளது என்று வெளிச்சமாகுது.. இப்படியானவங்க கையிலயா ஊடகம் இருக்குது?

ஊடகத்தை பற்றி பேசி இருக்கின்றீர்கள். ஊடகத்தில் இருப்பவனுக்கு அறிவும், துணிவும் நேர்மையும் அவசியம். என் மனதில் பட்டத்தை இங்கே நான் எழுதி வருகின்றேன். அதேபோல பெயரே இடாது நீங்கள் என்னைப்பற்றி அவதூறாக இட்ட பின்னூட்டத்தைக் கூட இட்டிருக்கின்றேன். நான் நினைத்திருந்தால் உங்கள் பின்னூட்டங்கள் தோன்றாமல் செய்திருக்கலாம். அப்படி செய்யாது நான் பதித்தது கூட ஒரு ஊடக சுதந்திரம் தான். அதே நேரம் சவாலை ஏற்று தான் அவற்றை நான் பதித்தேன். ஆனால் உங்களுக்கு துணிவில்லை என்பதுதானே இந்த பெயரில்லாதவன் என்னும் அடையாளத்துடன் நீங்கள் இட்ட பின்னூட்டங்கள். இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு எங்கே போனது துணிவு, உங்கள் பெற்றோர் வைத்த பெயரை மறைத்து பெயரே இல்லாமல் பின்னூட்டமிட்டது.

பெயரில்லா கூறியது...

ஜால்ராவுக்கு அடுத்த ஜால்ரா ஆதரவு.. ஒரு பின்னூட்டத்தையே பத்து பின்னூட்டமா இடுற ஆள் எல்லாம் வக்காலத்தா.. சின்ன காக்காய்.. பெரிய காக்காய்.. ஒன்றுக்கு கல்லிறிந்தால் மொத்தமாக கரையுது.

காக்கைக்கு இருக்கும் ஒற்றுமை தெரியாமல் அவற்றை இழிவாக கூறிய நண்பரே, நீங்கள் தவறாக கூறிய கருத்துக்கு தான் சந்ரு அப்படி கூறினார். உண்மையில் லோஷன் அண்ணாவை காக்கா பிடிக்க வேண்டிய அவசியம் எனக்குமில்லை. காக்கபிடிப்பவர்களை நம்பும் பழக்கம் அவருக்கும் இல்லை. மேலதிகாரி என்பதை விட எங்களுக்கு நல்ல அண்ணாவாக வழிகாட்டியாக இன்றும் இருக்கிறார் என்பதே உண்மை. உண்மைகள் தெரியாமல் பேசுவது நியாயமா?

பெயரில்லா கூறியது...

சமாக மதித்து அவர் பெருந்தன்மை காட்டிகிறார்.. காக்காய் பிடித்து நீங்கள் சிறுமைப்படுகிறீர்கள்.

எல்லோரையும் சமமாக மதிப்பது அவர் பெருந்தன்மைதான். நான் எப்போதும் சிறியவன்தான் அதில் சந்தேகம் இல்லை. அதே நேரம் காக்கா பிடித்து எனக்கு எந்த நன்மையும் இல்லை. திறமை இருப்பவருக்கே ஊடகம் அல்ல எங்கும் இடம் இருக்கும் அப்படி இருப்பவர்களை இன்றல்ல நேற்றல்ல பல வருடங்களாக் ஏற்றிவிட்டவர்தான் அவர். எனக்கு என் மேல் நம்பிக்கை உண்டு, அப்படி நான் என்னை நிரூபிக்கும் போது என்னை மேலே தூக்கி விட அவருக்கும் மகிழ்வாயிருக்கும். அதன்படியே அவருக்கு கீழ் நான் வானொலியில் வேலை செய்கின்றேன்.

ஆனால் உண்மையில் உங்கள் பிரச்சனை என்ன தான் என தெரியவில்லை நண்பரே முதலில் சிலோன்காரர் என எல்லோரையும் இழுத்து கேவலப்படுத்தினீர்கள் . அதன் பின் ஊடகத்தை இழுக்கின்றீர்கள். இந்த இரண்டும் நான் ஒருவன் சம்பந்தப்பட்டதல்ல எனவே இனியாவது இப்படியான கருத்துக்களை வைக்கும் போது யார் மனதையும் புண்படுத்தாமல் வையுங்கள். அதுவே நீங்கள் ஒரு நேர்மையானவர் என்பதற்கு முதல் சான்று.
பெயரில்லா

நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே.. உங்கள் மனச்சாட்சி அறியும் காக்காயா இல்லயா என்று.. எதுக்கு 51 ஆவது பதிவு.. சுத்த வேஸ்ட்..

ஊக்கப்படுத்துவதாக இருந்தால் எத்தனையோ பதிவருக்கு கொடுக்கலாம்.. சுத்தி சுத்தி லோசனுக்கு குடுத்து என்னத்த கண்டீங்களோ.. மரியாதை காட்ட ஆயிரம் வழி இருக்கு.. ஒரு வண்ணாத்து பூச்சி படம் குடுத்து என்ன கண்டனீங்க?

இது நான் இந்த பதிவை பதிக்க தயாரானபோது எனக்கு வந்த பின்னூட்டம். அவர் கருத்தில் தளம்புவது தெரிகிறது. முன்னர் காக்கா என்றார். இப்போது மரியாதை காட்ட வேறு ஆயிரம் வலி இருக்கு என்கின்றார் அந்த ஆயிரத்தில் ஒன்றுதான் இது நண்பரே. அதேபோல பட்டாம்பூச்சி என்கிறீர்கள் நான் கொடுத்ததோ பட்டாம்பூச்சி அல்ல. நீங்கள் நல்ல தெளிவாக் இருப்பது தெரிகின்றது. நெற்றிக்கண்ணை திறந்து பார்த்தாலும் உங்கள் குற்றம் உங்களுக்கு தெரியாது. உங்கள் மனட்சாட்சியாவது இதற்க்கு பதில் சொல்லும்.

என் சக பதிவர்களே!

இந்த பின்னூட்டமிடும் பெயர் தெரியா நண்பர்கள் சிலர் எனக்கு மட்டுமல்ல உங்களில் பலருக்கும் இதைவிட பல சர்ச்சைக்குரிய விடயங்களை கூட விட்டு சென்றிருப்பார். இவர்களுக்கு நாம் என்ன செய்யப்போகின்றோம். முதலில் பெயர் குறிப்பிடாமல் வரும் பின்னூட்டவாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.சிலர் சொல்லலாம் எங்களுக்கு இல்லை எனவே அப்படி வருகின்றோம் என்று சரி அப்படி வருபவர்கள் கருத்துகளோடு தங்கள் பெயரையும் இட்டு செல்லலாமே. எனவே பலர் இந்த நடைமுறையை தவறாக பயன்படுத்த முனைக்கின்றனர். இவர்களை நாம் தொடர்ச்சியாக அனுமதித்தால் இன்னும் பல எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடுமோ எனத்தெரியவில்லை. அதேநேரம் பதிவுலகமும் இவர்களை போல ஒரு சிலரால் கேட்டு விடுமோ என்ற ஆதங்கமுமுண்டு. நண்பர்களுக்கு! இன்றைய தினம் உலகம் முழுவதும் நட்பு என்னும் அற்புத உறவிற்கு ஒரு கொண்டாட்ட நாள். நான் பிறந்தது முதல் இன்று வரை நான் சந்தித்த நண்பர்களுக்கும் இனி என் வாழ்வில் சந்திக்கப்போகும் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
Share:

Saturday, August 1, 2009

விஜய் அஜித்தை முந்திய சதீஷ்.-ஐம்பதாவது பதிவு.

என்னுடைய பெயர் சத்தியமூர்த்தி சதீஷன். வயதில் ரொம்ப சின்னவனுங்கோ. வாழ்க்கையில சில நேரங்களில் சில தடுமாற்றங்கள் சிலருக்கு. அப்படி தடுமாறிய பொழுது சுபாஷ் என்னும் என் உடன் பிறவா சகோதரன்(இதை அவரே வானொலியில் சொல்லி இருக்கின்றார் அதனால் நான் துணிந்து சொல்கின்றேன்.) மூலம் வெற்றி வானொலியில் இணையும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.

ஆரம்பகால பயிற்சிகள் எல்லாம் முடிந்த பின் எங்கள் வானொலியின் வலைப்பதிவை எழுதும் பொறுப்பை லோஷன் அண்ணாவும்,ஹிஷாம் அண்ணாவும் சேர்ந்து என்னிடம் கொடுத்தனர். அதன் பின்னர் என் வலை உலகில் பதிவெழுதும் பயிற்சியை அங்கேயே நான் பெற்றுக்கொண்டேன். அந்த தளத்தில் நான் எழுதிக்கொண்டிருக்கும் போதே எனக்கு தேவையான் ஆலோசனைகள் வழங்குவது இந்த இரண்டுபேருமே.

அதன் பின்னர் ஆசை யாரைத்தான் விட்டது. எனக்கு நானும் சொந்தமாக ஒரு தளம் தொடங்கவேண்டும் என்ற ஆசையில் எங்கள் செய்திப்பிரிவில் இருக்கும் நண்பன் அருண் பிரசாத் மூலம் வலை உலகில் நான் பல விடயங்களை அறிந்து கொண்டேன். அந்த முயற்சியில் வேறு ஒரு பெயரில் ஒரு தளத்தை ஆரம்பித்து அதில் கிளறிக் கிண்டிக்கொண்டிருந்த காலம். ஒருநாள் லோஷன் அண்ணா பார்த்து விட்டு நீயும் பதிவு எழுதப்போகின்றாயா எனக்கேட்க நானும் ஆமாம் போட, அவரின் துணையுடன் திடீரென ஒரு புதிய தளம் தொடக்கி ஒரு புதிய பதிவையும் இட்ட நாள் மார்ச் மாதம் முதல் நாள்.

அன்று முதல் லோஷன் அண்ணா,அருண்,ஹிஷாம் அண்ணா, சந்துரு அண்ணா விஜய் என அத்தனை போரையும் துளைத்து துளைத்தது கேட்டு பதிவுலகம் பற்றி அறிந்து கொண்டேன். இந்த நேரத்தில் எனக்கு துணை நின்று வழிகாட்டிய அவர்களுக்கு என் நன்றிகள் கோடி. என் பிரியமானவர்களுக்கு நான் இட்ட முதல் அறிமுகப்பதிவில் முதல் பின்னூட்டமிட்டு என்னை வரவேற்ற பங்களாதேஷில் இருக்கும் சிந்துவை இந்த நேரம் நினைவு கூர வேண்டும். தொடர்ந்து லோஷன் அண்ணா. துஷா, ராகலை கலை என நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களோடு நானும் காலடி வைத்தேன். அதன் பின்னர் பல சந்தேகங்கள் வரும் அப்போதெல்லாம் என் சந்தேகங்களை தீர்த்து வைத்த அத்தனைபேருக்கும் நன்றிகள்.

என் அடுத்த பதிவின் தலைப்பு என்ன வைக்கலாம் என நான் குழம்பி ஏழு, எட்டு தலைப்புகளோடு லோஷன் அண்ணாவிடம் போய் நிற்க முட்கிரீடம் யாருக்கு என அவர் தெரிந்த தலைப்பில் எழுதினேன், தமிலிஷில் எனக்கு கிரீடம் சூட்டினர் சக நண்பர்கள். அந்த வெற்றி தந்த உற்சாகம் என்னையும் மேலும் எழுதத் தூண்ட எல்லாவற்றையும் எழுதினேன். வெற்றியும் தோல்வியும் என்னை மாறி மாறி அரவணைத்தன.

இப்படியே போய்க்கொண்டிருந்த என் பதிவுலக பயணத்தில் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். நான் ரசித்தவர்கள் என்னை ரசித்தவர்கள் என பலர். அதன் பின் என் தளத்தை முற்றாக அழகுபடுத்த நான் துடித்த போது ஆரம்பத்தில் எனக்கு அத்திவாரம் இட்ட கைகள் இப்போது தோள் கொடுத்தன. உங்கள் ஆதரவிற்கு மீண்டும் மீண்டும் நன்றிகள். இடையில் பதிவர் சந்ரு வானொலி கட்ஜெட்டை தந்துதவியது மடுமில்லாமல் பட்டாம் பூச்சி விருதையும் அளித்து என்னை கொஞ்சம் திரும்பி பார்க்க வைத்தார். அதன் பின் நானிட்ட பதிவிற்கு வந்து பல பிரபல பதிவர்கள் பின்னூட்டமிட்டது என் இனிய நினைவுகள்.

இப்படியே போய்க்கொண்டிருக்கும் என் பதிவுலக வாழ்க்கையில் ஒரு வெற்றியாக என்னை மீண்டும் புத்துணர்ச்சி தந்தது பூச்சரம் நடத்திய போட்டியில் நான் வெற்றி பெற்றது. இந்த நேரத்தில் அந்த போட்டியில் பங்குபற்றிய மற்றைய பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். அதனைத்தொடர்ந்து கடலேறி ஆதிரையின் சுவாரஷ்ய பதிவர் விருதென விருதுகளும் வரத்தொடங்கி இருக்கின்றன. ஏதோ ஒரு சந்தோசம், நானும் ஓரளவிற்கு எழுத்துகின்றேன் என்று. இப்போது ஐம்பதை தொட்டுவிட்டதால் இன்னும் பொறுப்புக் கூடி இருக்கின்றது. எனவே தரமான நல்ல படைப்புகளை எழுதும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றேன்.

அதேநேரம் இதுவரை வந்த பின்னூட்டங்களில் இரண்டு பின்னூட்டங்கள் மட்டுமே என்னை சீண்டிப்பார்த்தவை என்பதில் ஒரு சந்தோசம். (இப்போது நான் இந்த பதிவை இடும் நிலையில் பெயரில்லாமல் ஒருவர் தன் கருத்துகளை விட்டுச் சென்றிருக்கின்றார் என் கடந்த பதிவில் அதற்கு என் சக பதிவர்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் நான் மிக விரைவில் அவருக்கு பதில் சொல்லி பதிவிட பெயர் தெரியா அந்த நண்பர் என்னை தூண்டி விட்டிருக்கின்றார்.)நமக்கும் கல்லடி கொடுக்க நண்பர்கள் இருக்கின்றார்கள் என்று.

என் தளம் இப்போது முன்னேறி வருவது சந்தோசம். அதேநேரம் தொடர்ந்து நீங்கள் விரும்பும் பதிவுகளை கொடுக்காமல் இருப்பது கவலை. என்ன செய்வது எல்லோருடைய விருப்பமும் ஒரே மாதிரி இருப்பதில்லையே. எனக்கு பிடித்தவற்றையும் நான் படித்ததில் என்னை கவர்ந்தவையையும் என் சொந்த ஆக்கங்களையும் தொடர்ச்சியாக எழுதப்போகின்றேன். இதுவரை எனக்கு ஆதரவு தந்த பின்னூட்ட நண்பர்கள் சக பதிவர்கள், வாக்களித்த வாசகர்கள், இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் என்னை வளர்த்துவிட்ட அத்தனை அன்புள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

என்னடா இவ்வளவும் தன்னை பற்றியே சொல்றான் விஜய் அஜித்துக்கும் தனக்கும் இடையான தொடர்ப்பை சொல்லலையே எனப்பார்க்கிறிங்களா.பெரிசா என்னங்க இருக்கப்போகிறது அவங்களைப் போல என் பதிவுலகில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருகிறது. இன்னுமொன்று அவர்கள் இரண்டு பெயரையும் விட நான் முந்திக்கொண்டு அரைசதத்தை கடந்து விட்டேன். அவர்கள் இன்னும் காத்திருக்கின்றார்கள். இப்போ சொல்லுங்க தலைப்புக்கும் நான் இட்ட பதிவிற்கும் தொடர்பு இருக்கு தானே.

வரட்டா....

பி.கு:நன்றி மறப்பது நன்றன்று என்பதற்கிணங்க என்னை வளப்படுத்திய அத்தனை பேருக்கும் நன்றிகளை சொல்லி இருக்கின்றேன். யாரையும் தவற விட்டிருந்தால் இந்த சிறியவனின் மனமார்ந்த நன்றிகளை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
Share:

Thursday, July 30, 2009

விருது வாங்கலயோ விருது.

பதிவுலக நண்பர்களுக்கு!

திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுக்கான வாக்கை செலுத்த மறக்காதீர்கள். என் தளத்தில் என்னைப்பற்றி என்னும் பகுதிக்கு கீழ் உள்ள தேர்தல் களத்தில் நீங்களும் குதியுங்கள். மேலதிக விபரங்கள்.http://sshathiesh.blogspot.com/2009/07/blog-post_14.html

பதிவர்கள் பதிவர்களுக்கு விருது வழங்கி உற்சாகப்படுத்தும் காலம் இது.ஒரு சிலருக்கு இதில் உடன்பாடு இல்லை. ஆரம்பத்தில் எனக்கு கூட இதற்கு தகுதி உண்டா என எனக்குள்ளேயே பல கேள்விகள். இப்போது யார் மனதையும் காயப்படுத்தாமல் நானும் பதிவுலகில் ஒரு இடத்தை பிடிக்கவேண்டும் என்ற ஆசை(சுயநலம் என நினைச்சிடாதிங்கப்பா). இதோ நண்பர் Shathru எனக்கு தந்த பட்டாம்பூச்சி விருது நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் தளங்களில் பறக்கப்போகின்றது.

நான் தெரிவு செய்தவர்கள் என்னவோ எனக்கு தெரிந்தவர்களே தான். ஏதோ ஒரு விதத்தில் என்னை கவர்ந்தவர்கள். சாதிக்க நினைப்பவர்கள் சாதித்துக்காட்டியவர்கள். எனவே நான் வழங்கும் இந்த விருதினை ஏற்று இந்த விருதுப்பணியை தொடருமாறு அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.(தயவுசெய்து அட நம்ம பெயர் இல்லையே என யாரும் கோவிக்காதீங்கோ. இன்னும் நிறைய விருது இருக்குங்கோ இப்பிடித்தான் நம்ம பிரபா எனக்கும் பின்னூட்டத்தில சொன்னார் )

உண்மையாக சொல்கின்றேன் இந்த ஐவரை தெரியும் போது நான் பட்ட பாடு இருக்கே இனிமேல் எனக்கு யாரும் விருது கொடுத்தால்(கொடுக்கிறிங்களா தெரியலப்பா?) சந்தோசப்படுவதைவிட சங்கடம் தான் அதிகம் வருமோ தெரியல, யாருக்கு விருதை நான் கொடுப்பதென்று. ஒருவாறு பட்டாம் பூச்சிக்கு ஐவர் சுவாரஷ்யபதிவர் அறுவர் என தெரிந்து விட்டேன். மறுபடி ஒரு விருதில் மற்றவர்களை கவனத்தில் கொள்கின்றேன்.(எஸ்கேப் ஆக வேற வழி தெரியலங்கோ) பட்டாம்பூச்சியை பிடித்துக்கொண்ட கீழ்வரும் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

1.ஹிஷாம் - என் உணர்வுகள்.
என்னுடைய பதிவுலக பிரவேசத்துக்கு காரணமான ஒருவர். பல விடயங்களை மற்றவர்களோடு பகிரும் தீராத அவா கொண்ட இவர் இப்போது இடும் பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. தரமான நல்ல பதிவுகளை தந்த நீங்கள் மீண்டும் மீண்டு வரவேண்டும். தன் தளத்தில் எதற்கும் அஞ்சாமல் மனதில் உள்ளதை உள்ளபடி இடும் ஒருவர்.

2. கடலேறி-ஆதிரை.
இவரை முதலில் எனக்கு முகப்புத்தகம் அதாங்க Face book மூலம் தான் தெரியும். அதன்பின் இவரின் தளத்தில் மையம் கொண்டவன் நான். எல்லா விடயங்களையும் பஞ்சாமிர்தமாக தந்து ரசிக்க வைப்பார். எனக்கு சுவாரஸ்ய பதிவர் விருது தந்த பரந்த மனசுக்காரர். சரித்திரம் முதல் சகலதும் அலசும் சகலகலா வல்லவன்.

3.கலை-ராகலை.
பசுமைக்குள் ஒளிந்திருக்கும் ரணங்களையும் வேதனைகளையும் ரசைனையோடு சொல்லும் கலை தெரிந்தவர் இந்தக்கலை. நீண்ட நாட்களின் பின் மீண்டு வந்திருக்கின்றார். தொடர்ந்து கலை களைகட்ட வாழ்த்துக்கள்.

4.அருண்பிரசாத்.
இவருடய பதிவுலகம் என்னைப்பொறுத்தவரை வேறுபட்டது. நாங்கள் சிலர் மசாலா கலந்து எழுதிக்கொண்டிருக்க, இவரோ கமல் போல பல தரமான முயற்சிகளை எடுப்பவர்.மிகமுக்கியமாக நான் பதிவுலகில் கால்வைக்க எனக்கு பலவிடயங்களை சொல்லிக்கொடுத்தவர். வித்தியாசமான கோணங்களில் பல விடயங்கள் தரும் ஒருவர். தெரியாத பல விடயங்களை தேடி அலசி ஆராய்ந்து தரும் என் நண்பன்.
http://aprasadh.blogspot.com/

5.VSINTHU.

இவர் பதிவில் ஒரு குழந்தைத்தனம் இருக்கும்.(நான் சொல்வது ரசனையை அவர் பதிவின் தரத்தை அல்ல) கவித்துவமும் தன வாழ்வின் அனுபவங்களும் எழுத்தாக வரும் தளம் இவருடையது. இவர் பதிவுகளை படிக்கும் பொது ஏனோ நம் வாழ்வின் சில கட்டங்கள் வந்து போவது தவிர்க்க முடியாத ஒன்று. நீங்கள் இன்னும் பல பதிவுகளை உங்கள் தளத்தில் சிந்தவேண்டும்(எழுதவேண்டும்)

விருது பெற்றோருக்கு மீண்டும் வாழ்த்துகள். இந்த சங்கிலியை அறுத்திடாமல் நீங்களும் கொடுங்களேன்.நான் விருது வழங்கிய சிலருக்கு ஏற்க்கனவே இந்த விருது கிடைத்திருந்தாலும் அன்பாக நான் வழங்கும் இந்த விருதையும் ஏற்ப்பார்கள் என நம்புகின்றேன். காரணம் எனக்கு தெரிந்த என்னைக் கவர்ந்தவர்களுக்கே நான் விருது கொடுக்க முடியும் நண்பர்களே. மீண்டும் சிந்திப்போம் சுவாரஸ்ய பதிவர் விருதுகளோடு.
Share:

Friday, July 24, 2009

அட எனக்கும் வெற்றியுங்கோ -நன்றி உங்களுக்கு.

பதிவுலக நண்பர்களுக்கு!
திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுக்கான வாக்கை செலுத்த மறக்காதீர்கள். என் தளத்தில் என்னைப்பற்றி என்னும் பகுதிக்கு கீழ் உள்ள தேர்தல் களத்தில் நீங்களும் குதியுங்கள். மேலதிக விபரங்கள்.http://sshathiesh.blogspot.com/2009/07/blog-post_14.html

விருது கொடுக்க நான் தகுதி அற்றவனா என்ற பதிவை இட்டிருந்தேன். அந்தப்பதிவிற்கு பல பிரபல பதிவர்கள் வந்து உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றிகள். உங்கள் வருகையின் பின் சரி,ஏதோ நாம் எழுதிறதை பார்த்து ரசித்து ஊக்கப்படுத்த நல்ல நண்பர்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. இந்த நேரத்தில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

விருது வழங்கும் கலாசாரத்தில் இருந்து ஒதுங்கி இருந்த எனக்கு முதல் விருதை வழங்கினார் நண்பர் shanru. பட்டாம்பூச்ச்சியாய் அவர் தந்த விருதை என்னால் தொடர்ந்து பறக்க விடமுடியாமல் போனது. அதன் பின் கடலேறி(ஆதிரை) வழங்கிய சுவாரச்யபதிவர் விருது என்னையும் விருதுலகத்திலிருந்து வெளியே நீ போகமுடியாது என சொல்லவைத்த்தது. இந்த இரண்டு விருதையும் வழங்கிய நண்பர்களுக்கு நன்றிகள்.

அதை தொடர்ந்து பூசரத்தில் இடம்பெற்ற போட்டியில் அமோக வெற்றி ஈட்ட காரணமாக இருந்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள். இந்த வெற்றிகள் என்னையும் பதிவுலகம் ஒரு அளவிற்கு நல்ல பதிவுகளை தருபவனாக ஏற்று இருக்கின்றது என்பதற்கு சான்றாக கருதுகின்றேன். எனவே என் விரதத்தை முடித்த்துக் கொண்டு இந்த சின்னைப்பையன் படித்து ரசிக்கும் என் அபிமான பதிவர்களுக்கு பட்டாம்பூச்ச்சி விருதுகளை பறக்க விட இருப்பதோடு, சுவாரஸ்ய பதிவர்கள் அறுவரை தெரிந்து அவர்களுக்கும் என் சார்பாக விருதை வழங்க நானும் களத்தில் குதித்துவிட்டேன். மிக விரைவில் அந்த விருதுகளோடு சந்திப்போம்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox