உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label வலைப்பதிவு. Show all posts
Showing posts with label வலைப்பதிவு. Show all posts

Sunday, August 2, 2009

சிலோன்காரன் காக்கா பிடிக்கின்றவனா?-ஒரு சீரியஸ் பதிவு.


வலைப்பதிவர்களுக்கான சுவாரஷ்ய பதிவர் விருதை நான் ரசித்து படித்து சுவைக்கும் பதிவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தேன். அதற்கு பல்வேறு பின்னூட்டங்களும் வந்தன. அப்படி வந்த ஒரு பின்னூடத்தில் பெயரில்லாத ஒருவர் பின்வருமாறு தன் கருத்தை விட்டுச் சென்றிருந்தார்.

பெயரில்லா கூறியது...

சிலோன்காரங்கள் இப்படி ஜால்ரா அடிக்ககூடாது. உங்கள் மேலதிகாரி லோஷனுக்கு நீங்களே விருது கொடுப்பதா?

அந்த நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது எனக்கு தெரியாது ஒருவேளை அவர் இலங்கையராக கூட இருக்கலாம். அப்படி யாரென்றே தெரியாத ஒருவருக்கு என்னை பற்றி நன்றாக தெரிந்திருக்கின்றது.பதிவுலகில் பதிவிட எங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அதேநேரம் பதிவிற்கு பின்னூட்டமிட்டு அந்த கருத்தை ஏற்கவோ அல்லது எதிர்க்கவோ அத்தனை பேருக்கும் உரிமை உண்டு. ஆனால் இதில் அடுத்தவரை சங்கடப்படவைக்காமல் கருத்துகளை பரிமாரிக்கொள்வதே நல்ல மனிதப்பண்பு. அப்படி இருக்கும் இருக்கும் போது தன் பெயரைக் கூட துணிந்து சொல்ல தெரியாதவர் ஊடகங்களைப் பற்றியும் கருத்து இட்டு விட்டு போயிருப்பது செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்கும் எவருக்கும் கோபத்தை வரவழைக்கும் என்பது உண்மையே. அந்த கோபமும் மனதில் இருக்கும் கவலையையும் சக பதிவர்களோடு பகிர்வதன் மூலம் மனதுக்கு ஒரு ஆறுதலுடன் இப்படிப்பட்ட கீழ்த்தரமான சிந்தனைகளோடு பின்னூட்டமிடும் ஒரு சிலருக்கு பதிவர்கள் ஒரு நல்ல பாடம் புகட்டவேண்டும் என்பதே என் கருத்து.

முதலில் இது என் தனிப்பட்ட தளம் இங்கே இடும் அனைத்து இடுகைக்களுக்கும் பொறுப்பாளி நான் மட்டுமே. அப்படி இருக்கும்போது அந்த குறித்த நபர் தன் கருத்தை எனக்கு மட்டுமே விட்டுச் சென்றிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு சிலோன்காரங்கள் எனக்குறிப்பிட்டு ஒரு நட்டு மக்களை இப்படி கூறுவது சரியா? (நீங்களும், நீங்கள் சிலோன் என இப்போது வழக்கத்தில் உள்ள பெயரை அறியாமல் சொல்லும் இலங்கையில் தான் பிறந்துள்ளீர்களா? யார் கண்டார்?) என் தளத்தில் நான் எழுதியதற்கு கருத்து சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு அதை எனக்கு மட்டும் சொல்லிவிட்டு போங்கள் நண்பரே என்பதே என் கருத்து.

லோஷன் அண்ணா எனக்கு மேலதிகாரிதான் ஆனால் வலைப்பதிவில் இங்கே யாரும் யாருக்கும் மேலதிகாரிகள் இல்லையே.நானென்ன வானொலியில் வைத்தா விருது கொடுத்தேன். மேலதிகாரி என்றால் விருது வழங்கக்கூடாது என்று ஏதும் சட்டம் இருக்கா? இன்றைய பிரபல பதிவர்களில் அவரும் ஒருவராக இருக்கும்போது அவருக்கு நான் விருதை கொடுத்தது தப்பே இல்லை. அதேபோல கொடுத்தவருக்கு திருப்பி கொடுக்கிறீர்கள் என்றீர்கள் நண்பரே உண்மைதான் ஏற்றுக்கொள்கிறேன், அதற்கு காரணம் எனக்கு இப்போதுதான் அந்த விருது கிடைத்துள்ளது. நான் வலை உலகில் நுழைந்து சிறிது காலம் தான் அதற்குள் எனக்கு பல வலை பதிவர்களுடன் பழக்கமில்லை. அப்படி இருக்கும் போது நான் பார்த்து ரசித்தவர்களுக்கு தானே கொடுக்கமுடியும். வலை பதிவுலகில் என் உலகம் சின்னதுதான் புதியவன் நான் அதை திருத்தி பலருடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்றேன்.

பெயரில்லா கூறியது...

நல்லா திரும்பி திரும்பி கொடுக்கிறீங்க.. அப்படியே வெச்சிகங்க.. உங்க உலகம் எவ்வளவு சின்னது.. எவ்வளவு காக்காய் பிடிப்புகள் உள்ளது என்று வெளிச்சமாகுது.. இப்படியானவங்க கையிலயா ஊடகம் இருக்குது?

ஊடகத்தை பற்றி பேசி இருக்கின்றீர்கள். ஊடகத்தில் இருப்பவனுக்கு அறிவும், துணிவும் நேர்மையும் அவசியம். என் மனதில் பட்டத்தை இங்கே நான் எழுதி வருகின்றேன். அதேபோல பெயரே இடாது நீங்கள் என்னைப்பற்றி அவதூறாக இட்ட பின்னூட்டத்தைக் கூட இட்டிருக்கின்றேன். நான் நினைத்திருந்தால் உங்கள் பின்னூட்டங்கள் தோன்றாமல் செய்திருக்கலாம். அப்படி செய்யாது நான் பதித்தது கூட ஒரு ஊடக சுதந்திரம் தான். அதே நேரம் சவாலை ஏற்று தான் அவற்றை நான் பதித்தேன். ஆனால் உங்களுக்கு துணிவில்லை என்பதுதானே இந்த பெயரில்லாதவன் என்னும் அடையாளத்துடன் நீங்கள் இட்ட பின்னூட்டங்கள். இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு எங்கே போனது துணிவு, உங்கள் பெற்றோர் வைத்த பெயரை மறைத்து பெயரே இல்லாமல் பின்னூட்டமிட்டது.

பெயரில்லா கூறியது...

ஜால்ராவுக்கு அடுத்த ஜால்ரா ஆதரவு.. ஒரு பின்னூட்டத்தையே பத்து பின்னூட்டமா இடுற ஆள் எல்லாம் வக்காலத்தா.. சின்ன காக்காய்.. பெரிய காக்காய்.. ஒன்றுக்கு கல்லிறிந்தால் மொத்தமாக கரையுது.

காக்கைக்கு இருக்கும் ஒற்றுமை தெரியாமல் அவற்றை இழிவாக கூறிய நண்பரே, நீங்கள் தவறாக கூறிய கருத்துக்கு தான் சந்ரு அப்படி கூறினார். உண்மையில் லோஷன் அண்ணாவை காக்கா பிடிக்க வேண்டிய அவசியம் எனக்குமில்லை. காக்கபிடிப்பவர்களை நம்பும் பழக்கம் அவருக்கும் இல்லை. மேலதிகாரி என்பதை விட எங்களுக்கு நல்ல அண்ணாவாக வழிகாட்டியாக இன்றும் இருக்கிறார் என்பதே உண்மை. உண்மைகள் தெரியாமல் பேசுவது நியாயமா?

பெயரில்லா கூறியது...

சமாக மதித்து அவர் பெருந்தன்மை காட்டிகிறார்.. காக்காய் பிடித்து நீங்கள் சிறுமைப்படுகிறீர்கள்.

எல்லோரையும் சமமாக மதிப்பது அவர் பெருந்தன்மைதான். நான் எப்போதும் சிறியவன்தான் அதில் சந்தேகம் இல்லை. அதே நேரம் காக்கா பிடித்து எனக்கு எந்த நன்மையும் இல்லை. திறமை இருப்பவருக்கே ஊடகம் அல்ல எங்கும் இடம் இருக்கும் அப்படி இருப்பவர்களை இன்றல்ல நேற்றல்ல பல வருடங்களாக் ஏற்றிவிட்டவர்தான் அவர். எனக்கு என் மேல் நம்பிக்கை உண்டு, அப்படி நான் என்னை நிரூபிக்கும் போது என்னை மேலே தூக்கி விட அவருக்கும் மகிழ்வாயிருக்கும். அதன்படியே அவருக்கு கீழ் நான் வானொலியில் வேலை செய்கின்றேன்.

ஆனால் உண்மையில் உங்கள் பிரச்சனை என்ன தான் என தெரியவில்லை நண்பரே முதலில் சிலோன்காரர் என எல்லோரையும் இழுத்து கேவலப்படுத்தினீர்கள் . அதன் பின் ஊடகத்தை இழுக்கின்றீர்கள். இந்த இரண்டும் நான் ஒருவன் சம்பந்தப்பட்டதல்ல எனவே இனியாவது இப்படியான கருத்துக்களை வைக்கும் போது யார் மனதையும் புண்படுத்தாமல் வையுங்கள். அதுவே நீங்கள் ஒரு நேர்மையானவர் என்பதற்கு முதல் சான்று.
பெயரில்லா

நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே.. உங்கள் மனச்சாட்சி அறியும் காக்காயா இல்லயா என்று.. எதுக்கு 51 ஆவது பதிவு.. சுத்த வேஸ்ட்..

ஊக்கப்படுத்துவதாக இருந்தால் எத்தனையோ பதிவருக்கு கொடுக்கலாம்.. சுத்தி சுத்தி லோசனுக்கு குடுத்து என்னத்த கண்டீங்களோ.. மரியாதை காட்ட ஆயிரம் வழி இருக்கு.. ஒரு வண்ணாத்து பூச்சி படம் குடுத்து என்ன கண்டனீங்க?

இது நான் இந்த பதிவை பதிக்க தயாரானபோது எனக்கு வந்த பின்னூட்டம். அவர் கருத்தில் தளம்புவது தெரிகிறது. முன்னர் காக்கா என்றார். இப்போது மரியாதை காட்ட வேறு ஆயிரம் வலி இருக்கு என்கின்றார் அந்த ஆயிரத்தில் ஒன்றுதான் இது நண்பரே. அதேபோல பட்டாம்பூச்சி என்கிறீர்கள் நான் கொடுத்ததோ பட்டாம்பூச்சி அல்ல. நீங்கள் நல்ல தெளிவாக் இருப்பது தெரிகின்றது. நெற்றிக்கண்ணை திறந்து பார்த்தாலும் உங்கள் குற்றம் உங்களுக்கு தெரியாது. உங்கள் மனட்சாட்சியாவது இதற்க்கு பதில் சொல்லும்.

என் சக பதிவர்களே!

இந்த பின்னூட்டமிடும் பெயர் தெரியா நண்பர்கள் சிலர் எனக்கு மட்டுமல்ல உங்களில் பலருக்கும் இதைவிட பல சர்ச்சைக்குரிய விடயங்களை கூட விட்டு சென்றிருப்பார். இவர்களுக்கு நாம் என்ன செய்யப்போகின்றோம். முதலில் பெயர் குறிப்பிடாமல் வரும் பின்னூட்டவாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.சிலர் சொல்லலாம் எங்களுக்கு இல்லை எனவே அப்படி வருகின்றோம் என்று சரி அப்படி வருபவர்கள் கருத்துகளோடு தங்கள் பெயரையும் இட்டு செல்லலாமே. எனவே பலர் இந்த நடைமுறையை தவறாக பயன்படுத்த முனைக்கின்றனர். இவர்களை நாம் தொடர்ச்சியாக அனுமதித்தால் இன்னும் பல எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடுமோ எனத்தெரியவில்லை. அதேநேரம் பதிவுலகமும் இவர்களை போல ஒரு சிலரால் கேட்டு விடுமோ என்ற ஆதங்கமுமுண்டு. நண்பர்களுக்கு! இன்றைய தினம் உலகம் முழுவதும் நட்பு என்னும் அற்புத உறவிற்கு ஒரு கொண்டாட்ட நாள். நான் பிறந்தது முதல் இன்று வரை நான் சந்தித்த நண்பர்களுக்கும் இனி என் வாழ்வில் சந்திக்கப்போகும் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
Share:

Saturday, August 1, 2009

விஜய் அஜித்தை முந்திய சதீஷ்.-ஐம்பதாவது பதிவு.

என்னுடைய பெயர் சத்தியமூர்த்தி சதீஷன். வயதில் ரொம்ப சின்னவனுங்கோ. வாழ்க்கையில சில நேரங்களில் சில தடுமாற்றங்கள் சிலருக்கு. அப்படி தடுமாறிய பொழுது சுபாஷ் என்னும் என் உடன் பிறவா சகோதரன்(இதை அவரே வானொலியில் சொல்லி இருக்கின்றார் அதனால் நான் துணிந்து சொல்கின்றேன்.) மூலம் வெற்றி வானொலியில் இணையும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.

ஆரம்பகால பயிற்சிகள் எல்லாம் முடிந்த பின் எங்கள் வானொலியின் வலைப்பதிவை எழுதும் பொறுப்பை லோஷன் அண்ணாவும்,ஹிஷாம் அண்ணாவும் சேர்ந்து என்னிடம் கொடுத்தனர். அதன் பின்னர் என் வலை உலகில் பதிவெழுதும் பயிற்சியை அங்கேயே நான் பெற்றுக்கொண்டேன். அந்த தளத்தில் நான் எழுதிக்கொண்டிருக்கும் போதே எனக்கு தேவையான் ஆலோசனைகள் வழங்குவது இந்த இரண்டுபேருமே.

அதன் பின்னர் ஆசை யாரைத்தான் விட்டது. எனக்கு நானும் சொந்தமாக ஒரு தளம் தொடங்கவேண்டும் என்ற ஆசையில் எங்கள் செய்திப்பிரிவில் இருக்கும் நண்பன் அருண் பிரசாத் மூலம் வலை உலகில் நான் பல விடயங்களை அறிந்து கொண்டேன். அந்த முயற்சியில் வேறு ஒரு பெயரில் ஒரு தளத்தை ஆரம்பித்து அதில் கிளறிக் கிண்டிக்கொண்டிருந்த காலம். ஒருநாள் லோஷன் அண்ணா பார்த்து விட்டு நீயும் பதிவு எழுதப்போகின்றாயா எனக்கேட்க நானும் ஆமாம் போட, அவரின் துணையுடன் திடீரென ஒரு புதிய தளம் தொடக்கி ஒரு புதிய பதிவையும் இட்ட நாள் மார்ச் மாதம் முதல் நாள்.

அன்று முதல் லோஷன் அண்ணா,அருண்,ஹிஷாம் அண்ணா, சந்துரு அண்ணா விஜய் என அத்தனை போரையும் துளைத்து துளைத்தது கேட்டு பதிவுலகம் பற்றி அறிந்து கொண்டேன். இந்த நேரத்தில் எனக்கு துணை நின்று வழிகாட்டிய அவர்களுக்கு என் நன்றிகள் கோடி. என் பிரியமானவர்களுக்கு நான் இட்ட முதல் அறிமுகப்பதிவில் முதல் பின்னூட்டமிட்டு என்னை வரவேற்ற பங்களாதேஷில் இருக்கும் சிந்துவை இந்த நேரம் நினைவு கூர வேண்டும். தொடர்ந்து லோஷன் அண்ணா. துஷா, ராகலை கலை என நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களோடு நானும் காலடி வைத்தேன். அதன் பின்னர் பல சந்தேகங்கள் வரும் அப்போதெல்லாம் என் சந்தேகங்களை தீர்த்து வைத்த அத்தனைபேருக்கும் நன்றிகள்.

என் அடுத்த பதிவின் தலைப்பு என்ன வைக்கலாம் என நான் குழம்பி ஏழு, எட்டு தலைப்புகளோடு லோஷன் அண்ணாவிடம் போய் நிற்க முட்கிரீடம் யாருக்கு என அவர் தெரிந்த தலைப்பில் எழுதினேன், தமிலிஷில் எனக்கு கிரீடம் சூட்டினர் சக நண்பர்கள். அந்த வெற்றி தந்த உற்சாகம் என்னையும் மேலும் எழுதத் தூண்ட எல்லாவற்றையும் எழுதினேன். வெற்றியும் தோல்வியும் என்னை மாறி மாறி அரவணைத்தன.

இப்படியே போய்க்கொண்டிருந்த என் பதிவுலக பயணத்தில் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். நான் ரசித்தவர்கள் என்னை ரசித்தவர்கள் என பலர். அதன் பின் என் தளத்தை முற்றாக அழகுபடுத்த நான் துடித்த போது ஆரம்பத்தில் எனக்கு அத்திவாரம் இட்ட கைகள் இப்போது தோள் கொடுத்தன. உங்கள் ஆதரவிற்கு மீண்டும் மீண்டும் நன்றிகள். இடையில் பதிவர் சந்ரு வானொலி கட்ஜெட்டை தந்துதவியது மடுமில்லாமல் பட்டாம் பூச்சி விருதையும் அளித்து என்னை கொஞ்சம் திரும்பி பார்க்க வைத்தார். அதன் பின் நானிட்ட பதிவிற்கு வந்து பல பிரபல பதிவர்கள் பின்னூட்டமிட்டது என் இனிய நினைவுகள்.

இப்படியே போய்க்கொண்டிருக்கும் என் பதிவுலக வாழ்க்கையில் ஒரு வெற்றியாக என்னை மீண்டும் புத்துணர்ச்சி தந்தது பூச்சரம் நடத்திய போட்டியில் நான் வெற்றி பெற்றது. இந்த நேரத்தில் அந்த போட்டியில் பங்குபற்றிய மற்றைய பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். அதனைத்தொடர்ந்து கடலேறி ஆதிரையின் சுவாரஷ்ய பதிவர் விருதென விருதுகளும் வரத்தொடங்கி இருக்கின்றன. ஏதோ ஒரு சந்தோசம், நானும் ஓரளவிற்கு எழுத்துகின்றேன் என்று. இப்போது ஐம்பதை தொட்டுவிட்டதால் இன்னும் பொறுப்புக் கூடி இருக்கின்றது. எனவே தரமான நல்ல படைப்புகளை எழுதும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றேன்.

அதேநேரம் இதுவரை வந்த பின்னூட்டங்களில் இரண்டு பின்னூட்டங்கள் மட்டுமே என்னை சீண்டிப்பார்த்தவை என்பதில் ஒரு சந்தோசம். (இப்போது நான் இந்த பதிவை இடும் நிலையில் பெயரில்லாமல் ஒருவர் தன் கருத்துகளை விட்டுச் சென்றிருக்கின்றார் என் கடந்த பதிவில் அதற்கு என் சக பதிவர்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் நான் மிக விரைவில் அவருக்கு பதில் சொல்லி பதிவிட பெயர் தெரியா அந்த நண்பர் என்னை தூண்டி விட்டிருக்கின்றார்.)நமக்கும் கல்லடி கொடுக்க நண்பர்கள் இருக்கின்றார்கள் என்று.

என் தளம் இப்போது முன்னேறி வருவது சந்தோசம். அதேநேரம் தொடர்ந்து நீங்கள் விரும்பும் பதிவுகளை கொடுக்காமல் இருப்பது கவலை. என்ன செய்வது எல்லோருடைய விருப்பமும் ஒரே மாதிரி இருப்பதில்லையே. எனக்கு பிடித்தவற்றையும் நான் படித்ததில் என்னை கவர்ந்தவையையும் என் சொந்த ஆக்கங்களையும் தொடர்ச்சியாக எழுதப்போகின்றேன். இதுவரை எனக்கு ஆதரவு தந்த பின்னூட்ட நண்பர்கள் சக பதிவர்கள், வாக்களித்த வாசகர்கள், இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் என்னை வளர்த்துவிட்ட அத்தனை அன்புள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

என்னடா இவ்வளவும் தன்னை பற்றியே சொல்றான் விஜய் அஜித்துக்கும் தனக்கும் இடையான தொடர்ப்பை சொல்லலையே எனப்பார்க்கிறிங்களா.பெரிசா என்னங்க இருக்கப்போகிறது அவங்களைப் போல என் பதிவுலகில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருகிறது. இன்னுமொன்று அவர்கள் இரண்டு பெயரையும் விட நான் முந்திக்கொண்டு அரைசதத்தை கடந்து விட்டேன். அவர்கள் இன்னும் காத்திருக்கின்றார்கள். இப்போ சொல்லுங்க தலைப்புக்கும் நான் இட்ட பதிவிற்கும் தொடர்பு இருக்கு தானே.

வரட்டா....

பி.கு:நன்றி மறப்பது நன்றன்று என்பதற்கிணங்க என்னை வளப்படுத்திய அத்தனை பேருக்கும் நன்றிகளை சொல்லி இருக்கின்றேன். யாரையும் தவற விட்டிருந்தால் இந்த சிறியவனின் மனமார்ந்த நன்றிகளை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox