Tuesday, August 11, 2009

பதிவர்களுக்கிடையில் சந்திப்பு தேவையா?

பதிவர்கள் பல நாடுகளில் பல இடங்களில் இருந்து தங்கள் கருத்துக்களை பதிவாக இட எங்கோ ஒரு மூலையில் இருந்து இன்னொருவர் படித்துக்கொண்டிருக்கின்றார். ஒரு முனையும் இன்னொரு முனையும் எழுத்து-வாசிப்பு என்னும் இரு காரணங்களுக்காக இணைகின்றன. இப்படி இருக்கும் போது எழுதுபவரின் முகம் தெரியாமல் படிக்கும் பலர் இதில் பெயரில்லாதவர்கள் வேறு பின்னூட்டவாதிகளாக.(அனுபவமுங்கோ...) அதனால் தான் கேட்கின்றேன் பதிவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பு அவசியமா?

என் பதில் ஆம்.

இதுவரை காலமும் தெரியாமல் ரசித்தவர்கள்,முட்டி மோதியவர்கள்,கருத்து யுத்தம் நடத்தியவர்கள் நேரடிக்கலத்தில் சந்த்தித்தால் எவ்வளவு சுவையா இருக்கும்? கற்பனையே கரும்பாக இனிக்கிறது.

கடந்த எட்டாம் திகதி(என் இருபத்தோராவது பிறந்தநாள்.) எனக்கு வாழ்த்து சொன்ன அத்தனை நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள். என்னை தெரிந்தும் தெரியாமலும் வாழ்த்து சொன்னோர் பலர்.இதை கொடுத்த பதிவுலக முகப்புத்தக(Face Book) நண்பர்களுக்கும் ஏனைய நண்பர்கள் உறவுகளுக்கும் நன்றிகள். எங்கள் வானொலி ஏற்பாடு செய்திருந்த புட்சால் கால்ப்பந்து சுற்றுப்போட்டியில் கடமையில் இருந்த நேரம் லோஷன் அண்ணாவின் தொலைபேசி அழைப்பை கேட்டு மைதானத்துக்கு வெளியில் நான் சென்றபோது அங்கே மூன்று பேர்.

ஒருத்தர் புல்லேட்டோடு என்னை நெருங்க மற்றவர் வாந்தி எடுத்துக்கொண்டிருக்க வழக்கமா கடல் ஏறுபவர் இங்கே தரையில் நிற்கின்றார். இந்த மூவரையும் சந்தித்தது எனக்கும் சந்தோசம். அங்கே வைத்து பதிவர்கள் சந்திப்பை பற்றி பேசி பலநாள் கனவொன்றை நனவாக்க முடிவுசெய்து கொண்டாயிற்று.

இதோ இப்போது அந்த நாளுக்காக ஆரம்பமாகி விட்டது Count Down. எதிர்பார்த்துக் காத்திருப்போம் அந்த நன்னாளுக்கு. இந்த அழைப்பு பதிவர்கள் அத்தனைபேருக்கும் மட்டுமன்றி பதிவுலகில் ஈடுபாடுள்ள வாசகர்கள், பின்நூட்டவாதிகள், பெயரில்லாமல் வந்து பின்னூட்டமிடும் தைரியசாலிகள் என அத்தனை பேருக்குமே. இதோ உங்களுக்கான அழைப்பிதளோடு மேலதிக விபரங்கள்.

காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)
கொழும்பு 06.

நோக்கங்கள் :

இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.
பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.

பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்

வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.
லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.
இங்ஙனம் ஏற்பாட்டுக் குழுவினர்.

பிற்குறிப்பு : மின்னஞ்சலினூடாக பலரை நாம் தொடர்புகொண்டோம் சிலரின் மின்னஞ்சல் முகவரிகள் எமக்கு கிடைக்கவில்லை ஆகவே தயவு செய்து மின்னஞ்சலில் இதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்காதவர்கள் எந்தவித தயக்கமின்றி எம்மைத் தொடர்பு கொள்ளவும். ஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபணைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

உங்களுக்கு தெரிந்த வலைப்பதிவாளர்கள், ஆர்வமுள்ளவர்களையும் அழைக்கவும்; உங்கள் வருகை பற்றி உறுதிப் படுத்தவும். யாரையும் தவறவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாயுள்ளோம்.. யாராவது ஆரம்பிக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.. எம்முடன் இணைந்து முன்னெடுக்க ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள்.

இருவாரங்கள் தாராளமாக இருப்பதால் இலங்கை முழுவதும் இருந்து பங்கேற்பை எதிர்பார்க்கிறோம். உங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.. நன்றி ஏற்பாட்டுக் குழுவினர்.

தொடர்பதிவு மிகவிரைவில் வரும் புட்சால்,தேர்தல் என கொஞ்சம் வேலைப்பளு. மீண்டும் விரைவில் சந்திக்கின்றேன். நேரிலும் சந்திப்போம் மறக்காமல் வாருங்கள் மகிழ்வாக உரையாடுங்கள் மன நிறைவோடு செல்லுங்கள்.
Share:

21 கருத்துரைகள்:

photoulakam said...

இன்று இலங்கையின் பதிவர்கள் பதிவர்கள் சந்திப்புக்கான நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். சந்திப்புக்காக அனைத்து பதிவர்களையும் அழைப்பதோடு. வாழ்த்துக்களும்,

ஆதிரை said...

இலங்கையில் முதன்முதலாக இச்சந்திப்பு நடைபெற உள்ளது மகிழ்வளிக்கின்றது. அதிகரிக்கும் வரவேற்பும் ஆதரவும் இந்நிகழ்வு சிறப்பாக அமையும் என்பதை கட்டியம் கூறுகின்றன.

சுபானு said...

இணைய நண்பர்களுடன் ஓர் இனிய இணைவு.. !

சுபானு said...

கலக்குவோம்.. நண்பர்களே..

Anonymous said...

அண்ணே உங்கள ஒருதரம் பார்க்க கெடைக்குமாண்ணே?

புல்லட் said...

சும்மா அதிருதில்ல...

Nimalesh said...

CHUMMAAA TOPICA PARTHAVUDAN ATHIRUTHULAAAAAA..........

வேந்தன் said...

வலைப்பதிவர்கள் சந்திப்புக்கு வழ்த்துக்கள்.

Asfar said...

வழ்த்துக்கள். before not consider about the matter, but now eager to attend, will try to meet all
Greeting

Admin said...

சந்திப்போம்... சிந்திப்போம்...

S.Lankeswaran said...

ஆம் நானும் கலந்து கொள்ள ஆவலாக உள்ளேன்

SShathiesh-சதீஷ். said...

ஆதிரை கூறியது...
இலங்கையில் முதன்முதலாக இச்சந்திப்பு நடைபெற உள்ளது மகிழ்வளிக்கின்றது. அதிகரிக்கும் வரவேற்பும் ஆதரவும் இந்நிகழ்வு சிறப்பாக அமையும் என்பதை கட்டியம் கூறுகின்றன.

கடைசிநேரத்தில யாரும் கவிழ்க்காமல் இருந்தால் சந்தோசமே. சந்திப்போம் சம்பாசிப்போம்.

SShathiesh-சதீஷ். said...

சுபானு கூறியது...
இணைய நண்பர்களுடன் ஓர் இனிய இணைவு.. !

கண்டிப்பாக அந்த இனிய நினைவுக்காக காத்திருக்கின்றோம்.

SShathiesh-சதீஷ். said...

சுபானு கூறியது...
கலக்குவோம்.. நண்பர்களே..

கலக்கிறம் நன்றி.

SShathiesh-சதீஷ். said...

பெயரில்லா கூறியது...
அண்ணே உங்கள ஒருதரம் பார்க்க கெடைக்குமாண்ணே?

வங்க தம்பி பாக்கிறது மட்டுமில்லை பழகலாம்.

SShathiesh-சதீஷ். said...

புல்லட் கூறியது...
சும்மா அதிருதில்ல...

கவனம் பிறகு இருக்கிறதுக்கு கதிரைகள் கூட இல்லாமல் போய்விடும் அதிராமல் பாருங்க

SShathiesh-சதீஷ். said...

Nimalesh கூறியது...
CHUMMAAA TOPICA PARTHAVUDAN ATHIRUTHULAAAAAA..........

கவனம் பிறகு இருக்கிறதுக்கு கதிரைகள் கூட இல்லாமல் போய்விடும் அதிராமல் பாருங்க

SShathiesh-சதீஷ். said...

வேந்தன் கூறியது...
வலைப்பதிவர்கள் சந்திப்புக்கு வழ்த்துக்கள்.

நன்றிகள். நீங்களும் வருவீர்களா?

SShathiesh-சதீஷ். said...

Asfar கூறியது...
வழ்த்துக்கள். before not consider about the matter, but now eager to attend, will try to meet all
Greeting

நன்றிகள். உங்கள் வருகையை எதிர்பார்க்கின்றோம்.

SShathiesh-சதீஷ். said...

சந்ரு கூறியது...
சந்திப்போம்... சிந்திப்போம்...

ஹ்ம் பார்க்கலாம் நன்றிகள்.

SShathiesh-சதீஷ். said...

ச.இலங்கேஸ்வரன் கூறியது...
ஆம் நானும் கலந்து கொள்ள ஆவலாக உள்ளேன்

உங்கள் வரவு நல்வரவாகுக.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive