Monday, July 12, 2010

உலககிண்ண கால்பந்து-மொக்கை பதிவு.நேற்று இரவு எத்தனை மணிக்கு உலக கிண்ண கால்பந்து போட்டி என்று ஒரு குழப்பம் வர இலங்கையில் நடமாடும் போட்டி அட்டவணை(நிறைய பேரை நடு ராத்திரி தூக்கத்தில் இருந்து எழுப்பி போட்டியை பார் என்றாராம்.) சுபாங்கன் தாத்தாவிடம் கேட்கலாம் என்ற ஆவலில் அவருக்கு அழைப்பு எடுத்தால், மனிதர் என் மேல் கோபப்படுகின்றார். அண்மைக்காலமாய் என் பதிவுகள் எண்ணிக்கை குறைந்து விட்டதாம். நானும் வழக்கமாய் எல்லோரும் சொல்லும் காரணம் சொன்னேன்(அதுக்காக நான் பிசி மான் என்று யாரும் தப்பாய் நினைக்கப்படாது.) அப்படியே பேசிக்கொண்டிருக்கும் போது உலககிண்ண கால்பந்து பற்றி ஒரு பதிவிடலாமே என்றார். நமக்கு தான் கால்பந்து சுத்த சூனியம் ஆச்சே என்று சொல்ல பவனை போல தெரிந்த கிரிக்கெட்டை வைத்து தெரியாத கால்பந்துக்கு பதிவு ஒன்று போடு என அடி எடுத்துக் கொடுத்துள்ளார். அவர் அடியுடன் குரு பவனின் ஆசி(எந்த விதத்தில் என்று கேட்கப்படாது) வழங்க இந்த பதிவை எழுதுகின்றேன்.

நேற்று நடைபெற்ற உலககிண்ண கால்பந்து போட்டியின் ஸ்பெயின் வெற்றி பெற்றது எல்லோருக்கும் தெரியும். இதை வைத்துக்கொண்டு ஒரு மொக்கை பதிவு போடுகின்றேன். இது முழு மொக்கை. மொக்கை இல்லாவிட்டாலும் மொக்கை என்று எடுத்துக்கொள்ளுங்கள் அப்புறம் எனக்கு வலிக்குமெல்லா.சரி நேரே மேட்டருக்கு போவோமா?

ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான Footket(Cricket போல) போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஸ்பெயின் அணி தலைவர் தங்களுக்கு ஒரு பக்க கிரவுண்ட் வேண்டும் என்றும் நெதர்லாந்து அணியை பந்தினை எடுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர். அதற்க்கிணங்க முதலில் காலாட்டத்தை(துடுப்பாட்டம் போல) தொடங்கிய நெதர்லாந்து அணி மிகவிரைவிலேயே தங்கள் அடித்தாடும் பாணியை தொடங்கவில்லை. மறுபுறம் தங்கள் நிதானமான அடித்தாடும் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்பெயின் அணி நெதர்லாந்துக்கு பாரிய சவாலை வழங்கியது.

இந்த நேரத்தில் போட்டியை பார்க்கும் போது சின்ன பிள்ளைகளை விளையாட்டுக்காட்ட பெரியவர்கள் பந்தை தூக்கி எறிய அதை பிடிக்க சிறுவர்கள் ஓட உடனே அந்த பந்தை இன்னொரு இடத்துக்கு தூக்கி எறிய அதை பிடிக்க பிள்ளை ஓடுவது போல இருந்தது. ஆனால் சிறிது நேரத்தின் பின் ஓரளவு சுதாகரித்துக்கொண்ட நெதர்லாந்து அணி தன் ஓட்ட வேகத்தை சராசரியாக அதிகரித்தாலும் இரண்டு அணியினராலும் ஒரு ஓட்டத்தைக் கூட பெற முடியவில்லை. தொடர்ந்து இரண்டு அணி வீரர்களும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்தினாலும் மறு புறம் இரண்டு அணியின் பிரதான களத்தடுப்பாளர்களும் (கோல் காப்பாளர்களும்) பறந்து பறந்து பந்தினை பிடித்து எதிரணியினர் ஓட்டத்தினை பெற முடியாமல் கட்டுப்படுத்தினர்.

இடை இடையே தன் பொகெட்டில்இருந்த மஞ்சள் நிற அட்டையை எடுத்து காட்டி வீரர்களை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். இடையிடையே வீரர்கள் ஓட்டங்களை பெற முடியாமல் களத்தடுப்பாளர்கள் தங்கள் கால்களால் நெஞ்சில் உதைத்தும் கால்தடம் போட்டு விழுத்தியதும் நாம் வயல் வெளியில் ஆடிய ஆட்டத்தை நினைவு படுத்தியது. அடிக்கடி எல்லைக்கோட்டுகருகே பந்து சென்று வந்தாலும் எந்த அணியாலும் ஓட்டங்களை பெற முடியவில்லை. ஆனாலும் பாருங்கோ சில நேரங்களில் பந்து மைதானத்தி விட்டு வெளியே சென்றாலும் சிக்ஸ் போர் கொடுக்காமல் பந்தினை எதிரணி வீரரிடம் கொடுத்து மைதானத்துக்குள் கையால் எறியச்சொன்னார் அம்பயர். ஆனாலும் பாருங்கோ காலாலும் தலையாலும் பந்தை களத்தடுப்பு செய்ய அனுமதிப்பவர்கள் கையால் செய்யவிடாதது என் கவலை.

கடுமையாகவும் சுவாரஸ்யமாகவும் நடைபெற்ற போட்டியில் முழு ஓவரும் ஆடி முடித்தும் இரு அணியும் ஒரு ஓட்டத்தையும் பெற முடியாமல் போக இன்னும் சில ஓவர்கள் ஆடலாம் என்று பால்வர்த்தார் அம்பயர். ஆனால் பாருங்கோ பதினைந்து நிமிடம் ஆடியும் மீண்டும் யாரும் ஓட்டத்தை பெறாமல் போக மீண்டும் ஒரு தடவை ஓவர் அதிகம் கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் தான் பாருங்கோ யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இனியேஸ்டா என்ற வீரர் அற்ப்புதமான ஒரு சிக்ஸ் அடித்து தன் அணியை முன்னிலை பெற வைத்தார். எனவே தாங்கள் அபாரமாக ஆடி இதே போல இரண்டு அடி விட்டால் தான் முடியும் என்ற நிலையில் ஆக்ரோசமாக நெதர்லாந்து ஆடினாலும் இறுதியில் ஓவர் முடிவடைந்த காரணத்தால் ஸ்பெயின் வெற்றி பெற்றது.

அடிக்கடி offside offside என்றார்கள் ஆனால் பாருங்கோ கடைசிவரை legside காட்டவில்லை.(கண்டு பிடிப்பு உதவி பவன்) Ballலை காட்டியவர்கள் Batறை காட்டவில்லை. பந்து மைதானத்தை விட்டு வெளியே போனாலும் ஆறு நான்கு ஓட்டங்கள் வழங்கப்படவில்லை. நடுவர் கையை மேலே தூக்கி காட்டினாலும் ஆறு ஓட்டம் கொடுக்காப்படாமல் வீரர் எச்சரிக்கப்படுகின்றார். என்ன ஒரு கவலை இந்த சியர் லீடர்ஸ் ஆடவில்லை என்பதுதான். ஆனால் நேற்று போட்டி பார்த்த பின் வரும் உலக கிண்ண போட்டியில் நான் விளையாடும் அறிவு கிடைத்திருக்கு என நம்புகின்றேன். என்ன சொல்றிங்க இந்த அறிவு போதாதா எனக்கு அப்புறம் என் குரு பவனிடம் இதை பற்றி ஒரு கோர்ஸ் செய்யப்போறேன். நேரம் ஆச்சு குரு கோவிப்பார் வரட்டா.....

பி.கு: படம் எப்பிடி இருக்கு. கட்டாயம் சொல்லிட்டு போங்கோ.
Share:

23 கருத்துரைகள்:

Subankan said...

:)))

கன்கொன் || Kangon said...

// அடிக்கடி offside offside என்றார்கள் ஆனால் பாருங்கோ கடைசிவரை legside காட்டவில்லை. //

நீங்களள் வடிவாப் பாக்கேல...
நேர்முக வர்ணனையாளர் இடக்கிடை onside என்று அறிவித்துக் கொண்டிருந்தாரே?
உறங்கிவிட்டீர்களா?

ஹா ஹா...
என்றாலும் வித்தியாசமாக் கிடக்கு...
எல்லாரும் வரவர யோசிச்சுப் பதிவு போடுறியள்.
நானும் இனி என்ர இருப்ப காப்பாற்றிக் கொள்ள பதிவு போடோணும் போல கிடக்குது.

நல்லா இருக்குது உங்கட சந்தேகங்கள். :D

anuthinan said...

குருவே பதிவு கலக்கல்!!!

உங்கள் அறிவிதிறனை போலவே உங்கள் பதிவும் அமைந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி!!!!

தொடரவும் உங்கள் இப்படியான பதிவுகள்!!!

REPEAT
//எல்லாரும் வரவர யோசிச்சுப் பதிவு போடுறியள்.
நானும் இனி என்ர இருப்ப காப்பாற்றிக் கொள்ள பதிவு போடோணும் போல கிடக்குது.//

ஆதிரை said...

:)
;)
:p

ARV Loshan said...

/ அடிக்கடி offside offside என்றார்கள் ஆனால் பாருங்கோ கடைசிவரை legside காட்டவில்லை. //

நீங்களள் வடிவாப் பாக்கேல...
நேர்முக வர்ணனையாளர் இடக்கிடை onside என்று அறிவித்துக் கொண்டிருந்தாரே?
உறங்கிவிட்டீர்களா?//

காலை அடிக்கடி காட்டி லெக் சைடும் காட்டப்பட்டது என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.


//உங்கள் அறிவிதிறனை போலவே உங்கள் பதிவும் அமைந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி!!!!//
அனுத்தினன் சதீசை இப்படிக் கிண்டல் பண்ணப்படாது. கண்டனங்கள்


அடப் பாவி சதீசு இப்பிடித்தான் நேற்று Final பார்த்தீயா? விளங்கீரும்.

அந்தப் படமும் கால்பந்தோடு சம்பந்தப்பட்டதா? ;)

ARV Loshan said...

கும்மியில் என் பதிலைக் கொப்பியடித்து பின்னூட்டமாகப் போட்டிருக்கும் ஆதிரைக்குக் கண்டனங்கள்.

:8)

SShathiesh-சதீஷ். said...

@Subankan

இதுவே இப்போ வாடிக்கையாய் போச்சு பின்னூட்டம் போட கூட நேரம் இல்லாமல் சார் பிசி போல

SShathiesh-சதீஷ். said...

@கன்கொ
ன் || Kangon


//// அடிக்கடி offside offside என்றார்கள் ஆனால் பாருங்கோ கடைசிவரை legside காட்டவில்லை. //

நீங்களள் வடிவாப் பாக்கேல...
நேர்முக வர்ணனையாளர் இடக்கிடை onside என்று அறிவித்துக் கொண்டிருந்தாரே?
உறங்கிவிட்டீர்களா?
//

இக்கி இக்கியா

//ஹா ஹா...
என்றாலும் வித்தியாசமாக் கிடக்கு...
எல்லாரும் வரவர யோசிச்சுப் பதிவு போடுறியள்.
நானும் இனி என்ர இருப்ப காப்பாற்றிக் கொள்ள பதிவு போடோணும் போல கிடக்குது.
//

என்னது யோசிச்சு போடிறமா? சும்மா போங்கையா....அதுசரி உங்கள் பதிவு எப்போதும் ஒரு பெரிய பரபரப்புடன் வரும் ரஜினி படம் போல அதனால் க்ளவலை வேணாம்

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan S

//குருவே பதிவு கலக்கல்!!!//

நன்றி சிஷ்யா

//உங்கள் அறிவிதிறனை போலவே உங்கள் பதிவும் அமைந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி!!!!//

என் அறிவு போலதானே என் சிஷ்யன் உன் அறிவும் இருக்கும்

//தொடரவும் உங்கள் இப்படியான பதிவுகள்!!!
//

வாய்ப்பு வந்தால் சிக்ஸ் அடிக்க நான் ரெடி

//REPEAT
//எல்லாரும் வரவர யோசிச்சுப் பதிவு போடுறியள்.
நானும் இனி என்ர இருப்ப காப்பாற்றிக் கொள்ள பதிவு போடோணும் போல கிடக்குது.///

நீங்கள் தான் அடிக்கடி பதிவு போடிறியலே அப்புறம் என்ன

SShathiesh-சதீஷ். said...

@ஆதிரை

அவ்வ்வ்வ்வ்வ்வ்

:((

SShathiesh-சதீஷ். said...

@LOSHAN

//காலை அடிக்கடி காட்டி லெக் சைடும் காட்டப்பட்டது என்பதை ஞாபகப்படுத்துகிறேன்//

ஓ அதுவா லெக் சைட் தகவலுக்கு நன்றி

////உங்கள் அறிவிதிறனை போலவே உங்கள் பதிவும் அமைந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி!!!!//
அனுத்தினன் சதீசை இப்படிக் கிண்டல் பண்ணப்படாது. கண்டனங்கள்
//

என்ன்னை கிண்டல் பண்ணியதர்க்காக லேமன் பாப பிச்கட்டுடன் லோஷன் அண்ணா உண்ணாவிரதம் இருக்கப்போராராம். எல்லோரும் ரெடி பண்ணுங்க....

//அடப் பாவி சதீசு இப்பிடித்தான் நேற்று Final பார்த்தீயா? விளங்கீரும்.
//

அப்புறம் எப்பிடி நீங்க வேற பெரிய பந்தை காட்டி வேற பயப்பிடுத்திட்டாங்க

//அந்தப் படமும் கால்பந்தோடு சம்பந்தப்பட்டதா? ;)//

அதில் என்ன சந்தேகம் என்னமா பிடிக்கிறா பாருங்கோ கால்பந்தை

Bavan said...

நல்ல அலசல்... ஆனால் இப்போட்டியில் ஸ்பெயின் பத்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்றிருந்தது என்பதையும், நெதர்லாந்து அணிக்கு ஒரு ஆட்டமிழப்பு வழங்கப்பட்டது என்பதையும் சேர்த்திருக்கலாம்..:P

//பவனிடம் இதை பற்றி ஒரு கோர்ஸ் செய்யப்போறேன்.//

இந்த பவன் நானின்லை என்பதை அறியத்தருகிறேன்..:P

//பி.கு: படம் எப்பிடி இருக்கு. கட்டாயம் சொல்லிட்டு போங்கோ.//

படமா? பாக்கவே இல்லையே..:P

SShathiesh-சதீஷ். said...

@LOSHAN

கண்டனம் மட்டும் போதாது உண்ணாவிரதம் இருங்கோ அண்ணா

SShathiesh-சதீஷ். said...

@Bavan

//நல்ல அலசல்... ஆனால் இப்போட்டியில் ஸ்பெயின் பத்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்றிருந்தது என்பதையும், நெதர்லாந்து அணிக்கு ஒரு ஆட்டமிழப்பு வழங்கப்பட்டது என்பதையும் சேர்த்திருக்கலாம்..:P
/

குருவே தகவலுக்கு நன்றி

////பவனிடம் இதை பற்றி ஒரு கோர்ஸ் செய்யப்போறேன்.//

இந்த பவன் நானின்லை என்பதை அறியத்தருகிறேன்..:P/

கிரிக்கெட் = புட்பால் என்று பதிவு போட்டது நீங்கள் தானே அப்போ நீங்கள் தான் என் குரு

////பி.கு: படம் எப்பிடி இருக்கு. கட்டாயம் சொல்லிட்டு போங்கோ.//

படமா? பாக்கவே இல்லையே..:P//

படத்திலிருக்கும் அக்கா உங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

வந்தியத்தேவன் said...

லெமன் ஃபவ் உண்ணாவிரதம் என அரசியல் வரிகள் வருவதால் நான் இந்தப் பதிவைப் புறக்கணிக்கின்றேன்.

யோ வொய்ஸ் (யோகா) said...

கலக்கல் சதீஸ்..

படம் கொஞ்சம் ஓவர் இல்ல ரொம்பவே ஓவர்ர்ர்ர்

Vathees Varunan said...

புட்பால் விளையாட்டை கண்டுபிடிச்சவனுகள் நல்லகாலம் இப்ப உயிரோட இல்லை. எப்புடியெல்லாம் யோசிக்கிறீங்கள் மேலும் ஏதாவது கால்ப்பந்து விளையாட்டு பற்றிய சந்தேகம் இருந்தால் சாவ-கச்சேரி கண்டெடுக்கப்போகும் முத்து த(ர)ங்கத் தலைவனை அணுகவும்

Vathees Varunan said...

.

Anonymous said...

அருமையா எழுதி இருக்கீங்க(உங்க மனசு நோக கூடாது பாருங்க)

SShathiesh-சதீஷ். said...

@வந்தியத்தேவன்

மொக்கையை அரசியல் என்ற உங்களை கண்டிக்கிறேன்.

SShathiesh-சதீஷ். said...

@யோ வொய்ஸ் (யோகா)

நன்றி.படம் எத்தனை ஓவர் இருபதா ஐம்பதா

SShathiesh-சதீஷ். said...

@வதீஸ்-Vathees

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி

SShathiesh-சதீஷ். said...

@rasarasachozhan

உங்களுக்கு என்ன ஒரு மனசு நீங்கள் தான் தங்கம் நீங்கள் தான் வைரம் உங்கள் மனசு நோகக்கூடாது பாருங்கோ

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive