Friday, August 14, 2009

பிரபலமாகிவரும் பாம்பு மசாஜ்.

பல இடங்களில் பலவகையான மசாஜ்கள் இருக்கின்றன. அதில் ஒரு வகையாக இப்போது பாம்பைக்கொண்டு மசாஜ் செய்யும் பழக்கம் இஸ்ரேல் நாட்டில் பிரபலமாகி வருகின்றது.(அட நிஜமாங்க பயப்படாமல் படிச்சு பாருங்க.)

வடக்கு இஸ்ரேல் பகுதியில் இருக்கும் அடாபராக் என்பவர்தான் பாம்புகளை கொண்டு மசாஜ் செய்யும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளார்.(அழகிய பெண்கள் செய்துவந்த கலை இப்போ பாம்புகளிடம்....... யாரும் பெண்பாம்புதான் வேணும் என அடம்பிடிக்கலையோ?)

பாம்பு மூலம் மசாஜ் செய்யவிரும்புவோருக்கு தலா ஆறு பாம்புகளை அவர்களின் முதுகில் ஊர்ந்து செல்லச் செய்து மசாஜ் செய்கின்றார் இவர். உங்களுக்கு தில் இருந்தால் எவ்வளவு நேரமானாலும் இந்த மசாஜ் செய்யலாம். மசாஜ் செய்யும் நேரத்தின் அளவு உங்கள் கைகளில். அதேபோல கட்டணமும் உங்கள் நேரத்தை பொறுத்து அதிகமாக வசூலிக்கப்படுகின்றதாம்.

பாம்புக்கு விஷம் இருக்குமா என சந்தேகப்படுபவர்களுக்கு தெளிவான பதில் அமெரிக்காவின் கலிபோர்னியா,புளோரிடா பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் விஷமற்ற கிங், சோளப், பால் வகைப்பாம்புகள் தானாம் இதற்காக பயன்படுகின்றனவாம். இஸ்ரேலில் மட்டுமே இப்போது இருக்கும் இந்த மசாஜ் உடனடியாக உங்களுக்கு வேண்டுமேநடால் இஸ்ரேல் போங்கள் இல்லையோ இன்னும் காத்திருங்கள் நம் நாட்டுக்கும் வந்தாலும் ஆச்சரியமில்லை.
Share:

12 கருத்துரைகள்:

கோவி.கண்ணன் said...

பாம்புகள் பார்க்க அருவெறுப்பாக இல்லாவிட்டாலும் அது உடலில் ஊர்வது உவ்வ்வ்வ்வ்வ்வே !

சுபானு said...

நல்ல விடையம் தான்.. ஒருமுறை இஸ்ரேலுக்குப் போய்வந்தா நல்லதுதான்...

ஆதிரை said...

அச்சச்சோ மாட்டிக்கிட்டாரே... ஊர்ச்சனங்களே இவர் தான் இதுவரை நாம் தேடிக் கொண்டிருந்தவர்.
பாம்பு பிடிக்க ஆள் கிடைச்சிட்டாரப்பா...:P

தகவல்களுக்கு நன்றி சதீஸ். :)

Anonymous said...

aiyoo... pampukala oorvathal sila skin allegies varalam.
itha eanthan maha jananga purinchuka maatangalo......theriyala...

யோ வொய்ஸ் (யோகா) said...

இதே மாதிரி ஒரு விடயத்தை தானே அணு அளவும் பயமில்லை நிகழ்ச்சியில் காட்டினாங்க. பார்ப்போம் இங்க வந்தா போய்ட்டு வரணும், ஆனா ஒரு கண்டிசன் படத்தில மாதிரி அந்த அக்கா பக்கத்தில இருக்கணும்

Nimalesh said...

sri lanka vuke yeppa varm...... inthaa Pambu Massage.........

SShathiesh-சதீஷ். said...

கோவி.கண்ணன் கூறியது...
பாம்புகள் பார்க்க அருவெறுப்பாக இல்லாவிட்டாலும் அது உடலில் ஊர்வது உவ்வ்வ்வ்வ்வ்வே !

நீங்கள் உவ்வே என்பதற்கு அங்கே உம்மா கொடுத்து வரவேற்கின்றார்கள். இதுதான் உலகம் நன்றி உங்கள் வருகைக்கு.

SShathiesh-சதீஷ். said...

சுபானு கூறியது...
நல்ல விடையம் தான்.. ஒருமுறை இஸ்ரேலுக்குப் போய்வந்தா நல்லதுதான்...

போகும் போது என்னையும் கூட்டிப்போங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

SShathiesh-சதீஷ். said...

ஆதிரை கூறியது...
அச்சச்சோ மாட்டிக்கிட்டாரே... ஊர்ச்சனங்களே இவர் தான் இதுவரை நாம் தேடிக் கொண்டிருந்தவர்.
பாம்பு பிடிக்க ஆள் கிடைச்சிட்டாரப்பா...:P
தகவல்களுக்கு நன்றி சதீஸ். :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

SShathiesh-சதீஷ். said...

பெயரில்லா கூறியது...
aiyoo... pampukala oorvathal sila skin allegies varalam.
itha eanthan maha jananga purinchuka maatangalo......theriyala...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

SShathiesh-சதீஷ். said...

யோ (Yoga) கூறியது...
இதே மாதிரி ஒரு விடயத்தை தானே அணு அளவும் பயமில்லை நிகழ்ச்சியில் காட்டினாங்க. பார்ப்போம் இங்க வந்தா போய்ட்டு வரணும், ஆனா ஒரு கண்டிசன் படத்தில மாதிரி அந்த அக்கா பக்கத்தில இருக்கணும்

இவருக்கு ஆசையை பாரு. அக்கா பக்கத்தில வேணுமாம். நடக்கட்டும் நடக்கட்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

SShathiesh-சதீஷ். said...

Nimalesh கூறியது...
sri lanka vuke yeppa varm...... inthaa Pambu Massage.........

ஏன் நண்பா எப்ப வரும் என காத்திருக்கின்றீர்கள். பாம்பொன்றை நீங்களே தேடிப்பிடித்து மசாஜ் கொடுங்கள் ஆசை தீர்ந்து விடும்.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive