Monday, October 19, 2009

நயன்தாராவை சங்கடப்படுத்திய சன் டி.விதீபாவளி நாள் எனக்கு இம்முறை ஏனோ தித்திக்கவில்லை. சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய பிளிம்பெயார் விருது வழங்கும் விழாவை பார்த்து விட்டு மதிய உணவும் முடித்தது விட்டு நல்லா தூங்கி எழுந்து வரும் போது என் மனதில் ஏனோ கோபம் வெறுப்பு. அப்படியே வந்திருந்து போட்டது சக்தி தொலைக்காட்சியை.

தீபாவளி நாள் தானே நம்ம தளபதி நடித்த அழகிய தமிழ் மகன் போய்க்கொண்டிருந்தது. அது முடிய ஐந்து மணிக்கு தானே சன் டி.வியின் பட்டிமண்டபம் வரும்(பட்டி மன்றம் என்பது சரியான தமிழ் பதம் அல்ல) அதற்க்கு முன் அரை மணித்தியாலம் இருக்கே என்ன நிகழ்ச்சி என பார்ப்போம் என பொறுத்திருந்த எனக்கு அந்த காத்திருப்பு வீண்போகவில்லை.


தமிழ்நாட்டின் மாதவி(கண்ணகி வேறுயார் நம்ம பிரபுதேவா மனைவி ரம்லத் தான்) திரையில் வந்தார். அடடா தமிழ் நாட்டுக்கே வரமட்டேன் என்ற புயல் இன்று அதுவும் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கப்போகின்றதே. நயனை தமிழ் நாட்டிலேயே கால் வைக்க விடமாட்டேன் என்றவர்கள் எங்கப்பா போய்ட்டார்கள் என்ற எண்ணத்துடன் பொண்ணு(ஆதவன் விமர்சனங்களை பார்க்கும் போது வயதான பொண்ணு என சொல்லணும் போல) என்னதான் சொல்லப்போகிறது பார்ப்போம் என காத்திருந்தேன்.


வழக்கம் போல ஒருவர் பரவாயில்லை ஓரளவு அழகா இருந்தார் அவர்தான் நயனை பேட்டி எடுக்கப்போகும் புண்ணியவான் நயன் மனம் திறந்து(எதை எதையோ எல்லாம் திறந்து காட்டியவர் இதை காட்டமாட்டாரா? ) பதிலளிக்கப்போகின்றார் என சொல்லியே ஆரம்பித்தார். பேட்டி ஆரம்பம் ஒரு சில நிமிடத்திலேயே சூடு பிடித்தது. பேட்டி எடுத்தவரின் குறிக்கோள் நயனின் செவ்விதழ் திறந்து சிம்பு, பிரபுதேவா பற்றி சொல்லவைப்பதே. (நமக்கும் என்ன சொல்லப்போகின்றார் என்ற ஆசைதான்.) அதற்க்கு அவர் ஆயுதமாக பாவித்தது காதலை.(அடப்பாவிங்களா சிம்புவோட காதல் எண்டால் ஏற்கலாம் பிரபுதேவாவோடும் என்பது தாங்கமுடியாது.) பெட்டியில் அடிக்கடி காதலை மையப்படுத்தியே மனிதர் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். பாடசாலையில் காதல்? இது கேள்வி நயனும் சளைக்காமல் நிறைய பசங்க லெட்டர் கொடுத்தாங்க நான் யாரையும் காதலிக்க என்றார்.


தொடர்ந்து விட்டாரா பேட்டி எடுத்தவர் அப்போ உங்க முதல் காதல்? என்றார் நயன் சொன்னார் அதுதான் உங்க எல்லோருக்கும் தெரியுமே ஊரறிந்த அந்த காதல் தான் என் வெளிப்படையாக சிரித்தது சிரித்தே சொல்லிவிட்டார். அத்தோடு விட்டிருக்கலாமே. எதுவுமே தெரியாத பச்சை பிள்ளை போல அப்பிடியா யாரை எங்கே காதலிச்சிங்க என கேள்விமேல் கேள்வி கேட்க நயன் சங்கடப்பட்டு போனார். சிரிப்பே அவர் பதிலாக வந்தது மட்டுமில்லாமல் இதை விட்டுவிடுங்கள் என எத்தனையோ முறை சொல்லியும் வேதாளம் முருங்கை மரக்த்டில் இருந்து இறங்கவில்லை. பார்த்துக்கொண்டு இருந்த எனக்கே அட என்ன மனிதனடா இவன் என்ற எண்ணம் வந்தது. என்னதான் நயன் செய்தது தவறாக இருந்தாலும் ஒரு பிரபல நடிகை அதுவும் பல நாடுகளில் ஒளிபரபரப்பாகும் சன்.டியில் தீபாவளி நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்ப்பார் அப்படி இருக்கையில் இப்படியான தர்மசங்கடமான கேள்வியை தவிர்த்திருக்கலாம்.


ஆனால் அடுத்து நடந்தது இதை விட கொடுமை. தன் பழைய தொழில் நினைவு வந்ததோ தெரியாது பேட்டி எடுத்தவர்க்கு நயனிடம் உங்க இடக்கையை காட்டுங்க ஜோதிடம் சொல்லப்போறேன் என்றார் தடுக்க முயன்றார் முடியல. (நானும் பயபுள்ளைக்கு நயனின் கையை பிடிக்க ஆசை போல என நினைக்க பய கைய தொடல.) இறுதியில் கையைப்பார்த்து ஜோதிட சிகாமணி நயனின் பூர்வீகத்தை சொல்லியவர் உங்களுக்கு தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவர்தான் வாழ்க்கையில் பெரும்பகுதியை கொடுக்கப்போகின்றார் என அடுத்த ரூட்டை போட்டார்.


அப்படியே அவர் பார்வை கொஞ்சம் மேலே போய் நயன் கையில் இருந்த பச்சையில் நின்றது. எல்லோருக்கும் தெரிந்த பிரபு என்று நயன் கையில் உள்ள பச்சை விடயம் தெரியாத நம் அறிவு நிரம்பிய பேட்டி எடுத்தவர் அதை கிளறினார். நேரடியாகவே கேட்டார் நயன் உங்களுக்கு உண்மைக்கும் தெரியாத இந்த விடயம்தான் எல்லோருக்கும் தெரியுமே நீங்கள் வேண்டுமென கேட்கின்றீர்கள். வம்பில் (சிம்பு இல்லை) மாட்டப்பார்க்கிறீர்கள் என சிரித்து சொனாலும் நயன் மனதில் வாடா மவனே உனக்கு இருக்கெண்டு என சொல்லிரியிருப்பார்.(பார்த்த எனக்கே வெறுப்பும் கோபமும் கூடும் போது அவர்க்கு வராதா என்ன?) ஆனால் அவரோ விடுவதாக இல்லை. பொருத்தது பார்த்த நயன் இறுதியில் பொங்கி எழுந்து உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நேரடியாக கேட்டு விடுங்கள் இப்படி அங்கெ சுற்றி இங்கே சுற்றி வரவேண்டாம் என சொன்னதும் பயல் கொஞ்சம் அடக்கிவாசிக்க ஆமா பிரபு என குத்தி இருக்கேன் எனக்கு பிடிச்சவர் பெயரை நான் குத்தி இருக்கேன் என நேரே சொல்லிவிட்டார். சாத்தித்து விட்டார் பேட்டி
எடுத்தவர். . பேட்டியும் நல்ல படியாக முடிந்தது.

ஒரு பொறுப்பான(?????) பலர் பார்க்கும் அதுவும் தீப திருநாள் அன்று பிரபல நடிகை ஒருவரை வேண்டுமென்றே இப்படி செய்ததோ என தோன்றுகின்றது. காரணம் பார்த்த்ட எனக்கே சங்கடமாக இருக்கும் போது சம்பந்தப்பட்ட நயனுக்கு இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல எவ்வளவு சங்கடம் வந்திருக்கும். நான் நயன் புகழ் பாடுகின்றேன் என நினைக்கவேண்டாம். ச டி.வி செய்த இந்த நிகழ்ச்சி என்னை பொறுத்தவரை தப்பே. வேறு கேள்விகை கேட்டிருக்கலாம். அதை விட்டு விட்டு அசிங்கமான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பேட்டி எடுத்தா சன் இன்று வில்லனாக செய்தது தப்பென்றாலும் தைரியமாக சொன்ன நயன் நிஜ கதாநாயகி ஆகிவிட்டார்.

என்னிடம் அந்த பேட்டியின் வீடியோ இல்லை யாரும் நண்பர்களிடம் இருப்பின் அதை பகிருங்கள் பார்க்காதவர்களும் பார்த்து இன்பம் பெற.

பி.கு: ஏனோ தெரியல பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல மனது இன்னும் நேரத்தை கொடுக்கல. வரும் போது சொல்கின்றேன். நிறைய நண்பர்கள் நிறைய பதிவில் கேட்டவை காத்திருக்கு.
Share:

20 கருத்துரைகள்:

sanjeevan said...

நானும் இந்த நிகழ்ச்சியை ரசித்து பார்த்தேன்,எனினும் பச்சை குத்தியது பற்றி கேட்ட போது சற்றும்
டென்சன் ஆகாது பதிலளித்தது நயனின் திறமை தான்...

Anonymous said...

This seems to be a pre-planned Interview....Both channel and Nayan are mutually benefited...

யோ வொய்ஸ் (யோகா) said...

சன்டீவியிடம் எல்லாம் நீதி நியாயம் நேர்மை எல்லாம் எதிர்பார்த்த நீங்கள் இன்னும் சின்னப்பிள்ளைதான் சதீஷ்

Senthu said...

http://www.tamilmagix.com/watch.php?id=18465

Anonymous said...

இந்த லிங்கு


http://fr.video.yahoo.com/watch/6215491/16136416

வால்பையன் said...

லூசா இருப்பான் போல!

அடுத்தவங்க ப்ர்சனல் விசயத்தை தெரிந்து கொள்வதில் அப்படி என்ன ஆர்வம்!

Unknown said...

அதிசயமாக நானும் அந்த வேட்டியைப் பார்த்தேன்...
அவன் படுபாவி விடமாட்டன் எண்டு அடம்பிடிச்சு கேள்வி கேட்டான்.
ஆனா நணன்தாராவுக்கு பிடிக்கேல எண்டா நேர 'தனிப்பட்ட விஷயங்களப் பற்றிக் கேக் வேண்டாம்' எண்டு சொல்லியிருக்காலம். எனக்கென்னவோ நயன்தாராவுமட் அந்தக் கேள்விகளை விரும்பின மாதிரி ஒரு உணர்வு.
ஆனா அந்த லூஷன் (லோஷன் அல்ல. லூஷன்) தேவையில்லாத வேலை தான் பாத்தான்...

வந்தியத்தேவன் said...

இன்றைய ஊடகங்களில் பெரும்பாலானவை விபச்சாரம் தான் செய்கின்றன. சன் செய்தது படுபிழையான செயல். நயனின் வீட்டை நீங்கள் ஏன் எட்டிப்பார்க்கின்றீர்கள். நல்லதொரு பதிவு.

Nimalesh said...

http://www.youtube.com/watch?v=a24ukH1HGN0&feature=related
even i was watching this...... this seem to be pre planned, may be to Adhavan Realese...?????

SShathiesh-சதீஷ். said...

sanjeevan கூறியது...
நானும் இந்த நிகழ்ச்சியை ரசித்து பார்த்தேன்,எனினும் பச்சை குத்தியது பற்றி கேட்ட போது சற்றும்
டென்சன் ஆகாது பதிலளித்தது நயனின் திறமை தான்...

=>>
நயனிடம் அது மட்டுமா திறமை இருக்கு இன்னும் என்னென்னவோ எல்லாம் இருக்கே.

SShathiesh-சதீஷ். said...

பெயரில்லா கூறியது...
This seems to be a pre-planned Interview....Both channel and Nayan are mutually benefited...

=>>
நீங்கள் சொல்வது போல இருக்கவும் வாய்ப்புண்டு. யாருக்கு தெரியும் இந்த அரசியல்.

SShathiesh-சதீஷ். said...

யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
சன்டீவியிடம் எல்லாம் நீதி நியாயம் நேர்மை எல்லாம் எதிர்பார்த்த நீங்கள் இன்னும் சின்னப்பிள்ளைதான் சதீஷ்

=>>
உங்கள் கருத்துக்கு நன்றி ஆனால் என்னை சின்ன பிள்ளை என்றதற்கு கொலை வெறியுடன் இருக்கின்றேன். பச்சிளம் பாலகனான என்னை எப்படி இப்படி நீங்கள் சொல்லலாம்.

SShathiesh-சதீஷ். said...

Senthu கூறியது...
http://www.tamilmagix.com/watch.php?id=18465

=>>
ரொம்ப நன்றி உங்கள் லிங்க்குக்கு

SShathiesh-சதீஷ். said...

பெயரில்லா கூறியது...
இந்த லிங்கு


http://fr.video.yahoo.com/watch/6215491/16136416

=>>ரொம்ப நன்றி உங்கள் லிங்க்குக்கு

SShathiesh-சதீஷ். said...

வால்பையன் கூறியது...
லூசா இருப்பான் போல!

அடுத்தவங்க ப்ர்சனல் விசயத்தை தெரிந்து கொள்வதில் அப்படி என்ன ஆர்வம்!
=>>
பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிய யாருக்கு தான் ஆசை இல்லை. அனால் அதற்கும் ஒரு வரம்பு வேண்டாமா? உங்கள் கருத்துக்கு நன்றி.

SShathiesh-சதீஷ். said...

கனககோபி கூறியது...
அதிசயமாக நானும் அந்த வேட்டியைப் பார்த்தேன்...
அவன் படுபாவி விடமாட்டன் எண்டு அடம்பிடிச்சு கேள்வி கேட்டான்.
ஆனா நணன்தாராவுக்கு பிடிக்கேல எண்டா நேர 'தனிப்பட்ட விஷயங்களப் பற்றிக் கேக் வேண்டாம்' எண்டு சொல்லியிருக்காலம். எனக்கென்னவோ நயன்தாராவுமட் அந்தக் கேள்விகளை விரும்பின மாதிரி ஒரு உணர்வு.
ஆனா அந்த லூஷன் (லோஷன் அல்ல. லூஷன்) தேவையில்லாத வேலை தான் பாத்தான்...

=>>
இதற்குள் ஏனையா நயன்தாரா மன்ற இலங்கை தலைவரை இழுக்கின்றீர்கள். உங்கள் கருத்த்டுக்கு நன்றி.

SShathiesh-சதீஷ். said...

வந்தியத்தேவன் கூறியது...
இன்றைய ஊடகங்களில் பெரும்பாலானவை விபச்சாரம் தான் செய்கின்றன. சன் செய்தது படுபிழையான செயல். நயனின் வீட்டை நீங்கள் ஏன் எட்டிப்பார்க்கின்றீர்கள். நல்லதொரு பதிவு.

=>>
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி வந்தி அண்ணா

SShathiesh-சதீஷ். said...

Nimalesh கூறியது...
http://www.youtube.com/watch?v=a24ukH1HGN0&feature=related
even i was watching this...... this seem to be pre planned, may be to Adhavan Realese...?????

=>>
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி thanks for ur link

Prathap Kumar S. said...

ரொம்ப பயனுள்ள ஒரு நிகழ்ச்சியை பார்த்தது மட்டுமல்லாமல் அதை அதைப்பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் :-)

Prathap Kumar S. said...

ரொம்ப பயனுள்ள ஒரு நிகழ்ச்சியை பார்த்தது மட்டுமல்லாமல் அதை அதைப்பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் :-)

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive