உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label பிரபுதேவா. Show all posts
Showing posts with label பிரபுதேவா. Show all posts

Wednesday, November 4, 2009

மீண்டும் இணையும் சிம்பு-நயன்?




ஐயா படத்தில் அறிமுகமான நயனை ஐயகோ என்ன கொடுமை இது என சொல்ல வைத்த படம் வல்லவன். பல்லனாக நுழைந்த சிம்பு மன்மதனாகி பின் வல்லவனாகும் நேரம் நயன் வல்லவளாகி
பல்லனின் பல்லை உடைத்த கதை எல்லோருக்கும் தெரியும். அதன் பின் இரண்டுபேரும் காதல் தோல்வியில் வாட நயனோ பில்லாவில் பிகினியில் வந்து பிஞ்சு நெஞ்சுகளையும் கெடுத்தார். சிம்புவும் ஒருபுறம் தன் வழியில் போனாலும் பெரிய வெற்றிப்படங்கள் இன்றி போய்க்கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் தங்கள் சொந்தக்கதை சோகக்கதையை கெட்டவன் என்னும் பெயரில் தொடங்கிய சிம்பு அதை கெட்டுப்போகவே விட்டுவிட்டார். இடையில் சிம்பு வரலட்சுமி (சரத்குமார் மகள்) பக்கம் சாய(படத்துக்கு கதாநாயகி மட்டுமே) நயனம் பிரபுதேவாவில் சயனம் கொண்டது ஊரரிந்ததே. இப்போது இந்த கூட்டணியிலும் ஒரு சிறு விரிசல் மறுக்கமுடியா உண்மையே.

இந்த நிலையில் மீண்டும் தன் சகலகலாதன்மையை நிரூபிக்க சிம்பு தயாராகிவிடார். வாலிபன் படத்துக்கு கதை திரைக்கதை எழுதி நடிக்கப்போவதே அவரேதான்(வல்லவனிலும் இதே கதை தான்) ஆரம்பத்தில் சரத்தின் மகள் வரலட்சுமியை கதாநாயகியாக கேட்டு ஒப்புதல் வாங்கியபின் என்ன காரணமோ சாக்கு போக்கு சொல்லி பின்வாங்கி விட்டார் நாட்டாமையின் மகள். ஆனால் இப்போது மீண்டும் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில் சிம்புவின் பார்வை மீண்டும் நயனின் பக்கம் திரும்பி இருக்கிறது.

என்னடா ஆச்சரியம்? நம்பமுடியலையே, உங்களை கிள்ளிப் பார்க்கிறிங்களா? என்ன செய்வது சில உண்மைகள் நம்பமுடியாதுதானே. வாலிபனில் வாலிபி (சும்மா ஒரு டைமிங்க்கு தான் தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும் ) நாயனாக இருந்தால் நல்லம் என கெட்டவன் (சாரி வாலிபன் ) யோசிக்க ஆரம்பித்து விட்டார். அண்மையில் சென்னையில் நடந்த விழா ஒன்றில் அருகருகே இருந்தும் எதுவும் பேசிக் கொள்ளாத இந்த ஜோடி அதன் பின் தொலைபேசியில் தங்கள் அன்பை பொழிந்திருக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் இனி அவனுடன் தொடர்பில்லை என சீறிய நயனே சிம்புவுக்கு அழைப்பெடுத்து வம்பில் மாட்டி இருக்கின்றார். பத்து நிமிடம் உரையாடிய இந்த ஜோடிக்கு பழைய தீ பற்றியதோ தெரியவில்லை வாலிபனில் நடிக்கிறாயா என கேட்க நயனும் யோசித்து செல்வதாக சொல்லி இருக்கின்றாராம். அப்போ பிரபுதேவா???? அந்த யோசித்து என்பது பிரபுதேவாவிடம் கேட்டா அல்லது அவரை கட்டி விட்டா என்பது இன்னும் சில நாட்களில் தெரியும்.
Share:

Monday, October 19, 2009

நயன்தாராவை சங்கடப்படுத்திய சன் டி.வி



தீபாவளி நாள் எனக்கு இம்முறை ஏனோ தித்திக்கவில்லை. சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய பிளிம்பெயார் விருது வழங்கும் விழாவை பார்த்து விட்டு மதிய உணவும் முடித்தது விட்டு நல்லா தூங்கி எழுந்து வரும் போது என் மனதில் ஏனோ கோபம் வெறுப்பு. அப்படியே வந்திருந்து போட்டது சக்தி தொலைக்காட்சியை.

தீபாவளி நாள் தானே நம்ம தளபதி நடித்த அழகிய தமிழ் மகன் போய்க்கொண்டிருந்தது. அது முடிய ஐந்து மணிக்கு தானே சன் டி.வியின் பட்டிமண்டபம் வரும்(பட்டி மன்றம் என்பது சரியான தமிழ் பதம் அல்ல) அதற்க்கு முன் அரை மணித்தியாலம் இருக்கே என்ன நிகழ்ச்சி என பார்ப்போம் என பொறுத்திருந்த எனக்கு அந்த காத்திருப்பு வீண்போகவில்லை.


தமிழ்நாட்டின் மாதவி(கண்ணகி வேறுயார் நம்ம பிரபுதேவா மனைவி ரம்லத் தான்) திரையில் வந்தார். அடடா தமிழ் நாட்டுக்கே வரமட்டேன் என்ற புயல் இன்று அதுவும் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கப்போகின்றதே. நயனை தமிழ் நாட்டிலேயே கால் வைக்க விடமாட்டேன் என்றவர்கள் எங்கப்பா போய்ட்டார்கள் என்ற எண்ணத்துடன் பொண்ணு(ஆதவன் விமர்சனங்களை பார்க்கும் போது வயதான பொண்ணு என சொல்லணும் போல) என்னதான் சொல்லப்போகிறது பார்ப்போம் என காத்திருந்தேன்.


வழக்கம் போல ஒருவர் பரவாயில்லை ஓரளவு அழகா இருந்தார் அவர்தான் நயனை பேட்டி எடுக்கப்போகும் புண்ணியவான் நயன் மனம் திறந்து(எதை எதையோ எல்லாம் திறந்து காட்டியவர் இதை காட்டமாட்டாரா? ) பதிலளிக்கப்போகின்றார் என சொல்லியே ஆரம்பித்தார். பேட்டி ஆரம்பம் ஒரு சில நிமிடத்திலேயே சூடு பிடித்தது. பேட்டி எடுத்தவரின் குறிக்கோள் நயனின் செவ்விதழ் திறந்து சிம்பு, பிரபுதேவா பற்றி சொல்லவைப்பதே. (நமக்கும் என்ன சொல்லப்போகின்றார் என்ற ஆசைதான்.) அதற்க்கு அவர் ஆயுதமாக பாவித்தது காதலை.(அடப்பாவிங்களா சிம்புவோட காதல் எண்டால் ஏற்கலாம் பிரபுதேவாவோடும் என்பது தாங்கமுடியாது.) பெட்டியில் அடிக்கடி காதலை மையப்படுத்தியே மனிதர் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். பாடசாலையில் காதல்? இது கேள்வி நயனும் சளைக்காமல் நிறைய பசங்க லெட்டர் கொடுத்தாங்க நான் யாரையும் காதலிக்க என்றார்.


தொடர்ந்து விட்டாரா பேட்டி எடுத்தவர் அப்போ உங்க முதல் காதல்? என்றார் நயன் சொன்னார் அதுதான் உங்க எல்லோருக்கும் தெரியுமே ஊரறிந்த அந்த காதல் தான் என் வெளிப்படையாக சிரித்தது சிரித்தே சொல்லிவிட்டார். அத்தோடு விட்டிருக்கலாமே. எதுவுமே தெரியாத பச்சை பிள்ளை போல அப்பிடியா யாரை எங்கே காதலிச்சிங்க என கேள்விமேல் கேள்வி கேட்க நயன் சங்கடப்பட்டு போனார். சிரிப்பே அவர் பதிலாக வந்தது மட்டுமில்லாமல் இதை விட்டுவிடுங்கள் என எத்தனையோ முறை சொல்லியும் வேதாளம் முருங்கை மரக்த்டில் இருந்து இறங்கவில்லை. பார்த்துக்கொண்டு இருந்த எனக்கே அட என்ன மனிதனடா இவன் என்ற எண்ணம் வந்தது. என்னதான் நயன் செய்தது தவறாக இருந்தாலும் ஒரு பிரபல நடிகை அதுவும் பல நாடுகளில் ஒளிபரபரப்பாகும் சன்.டியில் தீபாவளி நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்ப்பார் அப்படி இருக்கையில் இப்படியான தர்மசங்கடமான கேள்வியை தவிர்த்திருக்கலாம்.


ஆனால் அடுத்து நடந்தது இதை விட கொடுமை. தன் பழைய தொழில் நினைவு வந்ததோ தெரியாது பேட்டி எடுத்தவர்க்கு நயனிடம் உங்க இடக்கையை காட்டுங்க ஜோதிடம் சொல்லப்போறேன் என்றார் தடுக்க முயன்றார் முடியல. (நானும் பயபுள்ளைக்கு நயனின் கையை பிடிக்க ஆசை போல என நினைக்க பய கைய தொடல.) இறுதியில் கையைப்பார்த்து ஜோதிட சிகாமணி நயனின் பூர்வீகத்தை சொல்லியவர் உங்களுக்கு தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவர்தான் வாழ்க்கையில் பெரும்பகுதியை கொடுக்கப்போகின்றார் என அடுத்த ரூட்டை போட்டார்.


அப்படியே அவர் பார்வை கொஞ்சம் மேலே போய் நயன் கையில் இருந்த பச்சையில் நின்றது. எல்லோருக்கும் தெரிந்த பிரபு என்று நயன் கையில் உள்ள பச்சை விடயம் தெரியாத நம் அறிவு நிரம்பிய பேட்டி எடுத்தவர் அதை கிளறினார். நேரடியாகவே கேட்டார் நயன் உங்களுக்கு உண்மைக்கும் தெரியாத இந்த விடயம்தான் எல்லோருக்கும் தெரியுமே நீங்கள் வேண்டுமென கேட்கின்றீர்கள். வம்பில் (சிம்பு இல்லை) மாட்டப்பார்க்கிறீர்கள் என சிரித்து சொனாலும் நயன் மனதில் வாடா மவனே உனக்கு இருக்கெண்டு என சொல்லிரியிருப்பார்.(பார்த்த எனக்கே வெறுப்பும் கோபமும் கூடும் போது அவர்க்கு வராதா என்ன?) ஆனால் அவரோ விடுவதாக இல்லை. பொருத்தது பார்த்த நயன் இறுதியில் பொங்கி எழுந்து உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நேரடியாக கேட்டு விடுங்கள் இப்படி அங்கெ சுற்றி இங்கே சுற்றி வரவேண்டாம் என சொன்னதும் பயல் கொஞ்சம் அடக்கிவாசிக்க ஆமா பிரபு என குத்தி இருக்கேன் எனக்கு பிடிச்சவர் பெயரை நான் குத்தி இருக்கேன் என நேரே சொல்லிவிட்டார். சாத்தித்து விட்டார் பேட்டி
எடுத்தவர். . பேட்டியும் நல்ல படியாக முடிந்தது.

ஒரு பொறுப்பான(?????) பலர் பார்க்கும் அதுவும் தீப திருநாள் அன்று பிரபல நடிகை ஒருவரை வேண்டுமென்றே இப்படி செய்ததோ என தோன்றுகின்றது. காரணம் பார்த்த்ட எனக்கே சங்கடமாக இருக்கும் போது சம்பந்தப்பட்ட நயனுக்கு இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல எவ்வளவு சங்கடம் வந்திருக்கும். நான் நயன் புகழ் பாடுகின்றேன் என நினைக்கவேண்டாம். ச டி.வி செய்த இந்த நிகழ்ச்சி என்னை பொறுத்தவரை தப்பே. வேறு கேள்விகை கேட்டிருக்கலாம். அதை விட்டு விட்டு அசிங்கமான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பேட்டி எடுத்தா சன் இன்று வில்லனாக செய்தது தப்பென்றாலும் தைரியமாக சொன்ன நயன் நிஜ கதாநாயகி ஆகிவிட்டார்.

என்னிடம் அந்த பேட்டியின் வீடியோ இல்லை யாரும் நண்பர்களிடம் இருப்பின் அதை பகிருங்கள் பார்க்காதவர்களும் பார்த்து இன்பம் பெற.

பி.கு: ஏனோ தெரியல பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல மனது இன்னும் நேரத்தை கொடுக்கல. வரும் போது சொல்கின்றேன். நிறைய நண்பர்கள் நிறைய பதிவில் கேட்டவை காத்திருக்கு.
Share:

Wednesday, July 1, 2009

நயன்தாராவிற்காய் ஏங்கிய மைக்கல் ஜாக்சன்.

எல்லோருமே "கிங் ஒப் போப்" மைக்கல் ஜாக்சனைப் பற்றி எழுதும்போது நான் அதை வாசிப்பதோடு மட்டுமே நிறுத்திவிடுவேன். அதற்கு இரண்டு காரணம், ஒன்று எனக்கு மைக்கல் ஜாக்சன் பற்றி பதிவிடும் அளவிற்கு அவர் பற்றிய அறிவு போதாது. இன்னொன்று எங்கேயும் அவர் பற்றிய பதிவுகளை பார்த்த சலிப்பு. (ஆனால் அவர் பற்றி நான் தெரியாத பல விடயங்களை தெரிய உதவிய நம் பதிவர்களுக்கு நன்றி.)

நீங்கள் எல்லாம் உலகை கலக்கிய மைக்கல் ஜாக்சனைப் பற்றி எழுதும்போது, நான் ஏதோ எனக்கு தெரிந்த நம் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் அதுதாங்க பிரபுதேவா பற்றி எழுதுகின்றேன். (அதற்கு முன் எனக்கு ஒரு நண்பன் இருக்கின்றான். அவன் என் வலைப்பதிவு பக்கம் வரவே மாட்டான், ஒருமுறை பேசும் போது சொன்னான் நீ என் செல்லம் நயனைப் பற்றி எழுது நான் வருகின்றேன் என்று. அவன் ஆசையையும் இப்போது நிறைவேற்றுகின்றேன்.)

03.04.1973 கர்நாடகாவில் பிறந்த நம் பிரபுதேவா, தமிழ் சினிமாவின் முக்கியமான நடன இயக்குனர் சுந்தரத்தின் மகன். ராஜு சுந்தரம், நாகேந்திர பிரசாத் இந்த இரண்டுபேரும் இவரின் சகோதரர்கள் மட்டுமல்ல பிரபல நடன இயக்குனர்கள். இப்படி இருக்கும் போது பிரபுதேவா மட்டும் என்ன செய்வார்? நடனம் அவர் ரத்தத்தில் கலந்திருக்காதா அதையே தன் தொழிலாக்கிக்கொண்டு வெற்றிவிழா படத்தில் தன் வெள்ளோட்டத்தை ஆரம்பித்தார். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பார்கள் அதற்க்கு இவர் மட்டும் என்ன விதிவிலக்கா? அக்கினி நட்சத்திரம் படத்தில் முதல் முறையாக நடனக்குழுவில் ஆடும் ஒருவராக திரையில் தோன்றினார். அதன் பின் காதலன் படம் மூலம் கதாநாயகனாக முழு அவதாரம் எடுத்தவருக்கு அது பெரிதாக கைகொடுக்கவில்லை. இருப்பினும் அந்தந்த கால முன்னணி கனவுக்கன்னிகள் அத்தனை பேருடனும் நடித்துவிட்டார். தன் சகோதரர்களுடன் படத்தில் நடித்திருக்கின்றார்.

இப்படியே போன இவரின் வாழ்க்கையில் பல கிசுகிசுக்கள் பலருடன். ஆனால் அத்தனையையும் கடந்துவந்துவிட்டார் இன்றுவரை. பல விருதுகளை நடன கலைஞராக குவித்தவருக்கு நடிப்பு காலை வாரிவிடவே, சற்று நாள் இடைவேளையின் பின் இயக்குனராக பரினமித்து வெற்றியும் பெற்றார். அதுவும் தமிழில் முதல் திரைப்படமே விஜயை வைத்து. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படமாக அது மாற இந்த கூட்டணிதான் இன்று அத்தனைக்கும் வித்திட்டு இருக்கின்றது.

மறுபக்கம் நம் கதையின் நாயகியும் வில்லியுமான நயன்தாரா. ஹரியின் ஐயா படம் மூலம் குடும்பகுத்துவிளக்காக அறிமுகமான இவர். சிம்புவினால் கசக்கிப்பிளியப்பட்டு சிக்கி சின்னா பின்னமாகி தமிழ் சினிமாவே வேண்டாமென போய்விட்டு மீண்டும் அஜித்தின் பில்லாவில் வந்து கிறங்கடித்து இன்று கலக்கி வருகின்றார். ஆரம்பத்திலேயே ரஜினியின் ஆஸ்தான நாயகியாக வலம் வந்த இவர் மேல் விஜய்க்கு ஒரு கண். அதற்கு ஏற்றால்போல வில்லு திரைப்படம் அமைய நாயகியாக ஒப்பந்தமாகி வந்தார். வந்தவர் விஜய்க்கு நாயகியாகவும் பிரபுதேவாவின் மனைவிக்கு வில்லியாகவும் வந்தார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தை நல்ல மனைவி என வாழ்ந்த பிரபுதேவாவும் ஆடிப்போய்விட்டார். பட கலந்துரையாடல் நன்றாகவே செய்து படமும் வந்தது. இதற்கிடையில் பிரபுதேவாவின் மகன் இறந்துவிட நயன் ரொம்ப அக்கறையோடு நம் மைக்கல் ஜாக்சனை கவனித்திருக்கின்றார். அதன் பின் நடந்த பல விடயங்கள் பி.பி.சியில் வராத குறையே.(விஜய் உங்கள் வில்லு ஊத்திக்கிட்டதுக்கு இதை ஒரு காரணமா சொல்லுங்கப்பா! படம் எடுக்கிறான் எண்டிட்டு இரண்டு பேரும் எதைஎதையோ எடுத்திட்டாங்க என.)

துபாயில் ஒன்றாக கூடிகும்மியடித்த இந்த ஜோடி மக்களிடம் மாட்டிய மறுநாளே விஜய் T.Vயின் யார் அடுத்த பிரபுதேவா? என்னும் நிகழ்ச்சியில் மைக்கல் ஜாக்சன் பங்கு பற்றவேண்டும். வருவாரா எனப்பார்த்தால் மனிதர் பக்காவா தயார்.(நயனுடன்தான்) எப்படியோ கை காலில் விழுந்து அந்த நிகழ்ச்சிக்கு நயனையும் விருந்தினராக அழைத்துவிட்டார் நம் மைக். இது எப்படியோ ஐயாவின் அம்மணிக்கு தெரிந்துவிடவே தன் மாமனாருடன் இணைந்து திட்டம் தீட்டி மைக்கை கவிழ்க்க தயாரானார்.

நிகழ்ச்சி அன்று மைக் நன்றாக உடுத்தி தயாராக தானும் அவருடன் வருவதாக் கூறி மனைவியும் கிளம்ப நிஜமாவே ஆடிவிட்டார் மைக்.(வாழ்க்கையில் அப்படி ஒரு ஆட்டம் ஆடி இருக்கமாட்டார் எந்த மேடையிலும்.) மனிதருக்கு என்னசெய்வதென்றே தெரிந்திருக்காது. காரணம் தொலைபேசி அழைப்புக்கூட எடுக்க முடியாதபடி பக்கத்தில் மானைவி. என்ன செய்வது அப்போது அவருக்கு கடவுள் எஸ்.எம்.எஸ் தான். ஒருவாறு நயனின் வருகையை நிறுத்திய நிம்மதியோடு ஒருகிளி தனியே சென்று வந்ததாம் அந்த நிகழ்விற்கு.

நிஜமான மைக்கல் ஜாக்சன் வாழ்வில் எவ்வளவு சர்ச்சைகள் சோதனைகள் இருந்ததோ(பெண்கள் விடயத்தில் மட்டுமே. அவர் போல இவர்மேல் யாரும் சிறுவர் துஷ்பிரயோகம் செய்ததாக சொல்லவில்லை.) அதேபோல தன் வாழ்விலும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் வைக்காது வாழும் பிரபுதேவா நிஜமாகவே இந்தியாவின் மைக்கல் ஜாக்சனே.

Share:

Saturday, March 21, 2009

எதிர்பாராத தாக்குதலில் சிக்கிய அசின்

மிகவும் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தில் இடம்பெறும் இறுதிப்பாடல் காட்சியை படமாக்கவேண்டும் மிகவும் சிறப்பாக நடன அரங்கு அமைக்கப்படுகிறது. ஒரூ இயற்கை வளத்தால் அலங்கரிக்கப்பட்ட சொர்க்கபுரியாக இருந்த அரங்கில் தான் அழகு தேவதை அசின் அந்த அசகாயசூரருடன் ஆடவேண்டும். இவர்களை ஆடவைத்து பார்ப்பவரும் ஒரு மேதை.

என்ன அழகு எத்தனை அழகு?

நடனக்குழு தயாராகியபின் ஹீரோவும் தயார் அசினும் தயார். கூடவே அந்த பாடலில் ஆடும் துணை நடிகர்களும் தயார். நடன இயக்குனர்களும் நடன அசைவுகளை சொல்லிக்குடுத்தாயிறு. இயக்குனர் Start Camera Action சொன்னதுதான் தாமதம் நாயகனுடன் சேர்ந்து அசினும் நடனத்தில் பிளந்து காட்டத்தொடங்கினார். ஆடிக்கொண்டிருந்தவரின் ஆட்டம் ஒரு சத்தத்துடன் மெதுவாக அடங்கியது. ரசிகர்களால் விலை மதிக்க முடியாத அசினின் ரத்தம் கசின்தொடத் தொடங்குகிறது.

நினைத்ததை நடத்தியே முடிப்பவள் நான்
தேவதை, ரசிக சிகாமணிகளின் தெய்வம், அழகுப் புயல் அசினின் கண்கள் சற்று கலங்கத்தான் செய்தது. சுற்றி இருந்தவர்கள் பதறிப்போனார்கள். காயப்பட்டு கண்கலங்கியது யார்? தமிழ் சினிமாவின் கனவுக்கன்னி அழகுப் பிசாசு அல்லவா?உடனடியாக பெரிய மருத்துவக்குழு ஒன்றை அவ்விடத்துக்கு அழைக்க ஏற்ப்பாடு நடக்கிறது. இருந்தாலும் வழங்கிய முதலுதவியில் திருப்திப்பட்ட அசினுக்கு என்ன நடந்தது என மற்றவர்களுக்கு அதன் பின் தான் தெரிய வருகிறது. அசினின் போர்ப்பாதங்களை அரங்கில் இருந்த ஒரு ஆணி நன்றாக பதம் பார்க்கிறது. (அந்த அரங்கை அமைத்த யாருக்கப்பா இந்த அழகான ராட்சசியை காயப்படுத்த மனம் வந்தது.

ஏன் இந்த பார்வை?

முதலுதவியின் பின் அசினின் இன்னொரு செயற்ப்பாடு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. சில நடிகைகள் கை நகம் ஒன்று முறிந்து விட்டாலும் படப்பிடிப்பை ரத்துச் செய்யும் நிலையில் காலில் கட்டுடன் தொடர்ந்தும் நடனமாட தயாரானார் அசின்.

என்னடா எல்லாவற்றையும் சொல்லிவிட்டு இன்னும் அந்தப்படம் எந்தப்படம் என்று சொலவில்லையே என பார்க்கிறிங்களா? படமா முக்கியம் அசினைப்ப்றி ஒரு செய்தி என்றவுடன் எவ்வளவு ஆர்வமா வாசிக்கிறிங்க ஒரு பழைய செய்தியை. இருந்தாலும் உங்கள் வாசிப்பு வேகத்திற்கும் அசின்மேல் கொண்ட பக்திக்கும் ஒரு சபாஷ்.

இது நடைபெற்றது போக்கிரி திரைப்படத்தின் மாம்பலம் பாடல் படப்பிடிப்பின்போது அசினுடன் இணையாக ஆடிய அந்த நடிகர் விஜய். இயக்குனர் பிரபுதேவா. இப்ப புரிதா இது எவ்வளவு பழைய செய்தி என்று! இது எப்பிடி இருக்கு?
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox