Friday, April 23, 2010

சுறா வெற்றி பெறும் என்பதற்கு ஒரு சுண்டக்கா காரணம்.இளைய தளபதி டாக்டர் விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் அவரின் ஐம்பதாவது படம் சுறா. எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி வெற்றியை இன்னும் போக்கிரிக்கு பின்னர் விஜய் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தான் வரப்போகின்றது சுறா. பாடல்கள் ஏற்கனவே வந்து ஹிட் ஆகியுள்ளன. ஆனால் பாடல்கள் மணிஷர்மா தான் ஏற்கனவே பயன்படுத்திய மெட்டை பயன்படுத்தியது ஏனோ கொஞ்சம் விமர்சனத்தைக் கொடுத்திருக்கின்றது. ஆனால் அதையும் மீறி விஜய் பாடல்கள் என்ற ரீதியில் வெற்றி அடைந்திருக்கின்றன.

சண் பிக்செர்ஸ் வாங்கியவுடன் படம் டப்பா அதனால் சன்னுக்கு கொடுத்தாயிற்று என்றவர்கள் படம் வென்றுவிட்டால் சண் புண்ணியம் என்பார்கள் என்ன செய்வது நாம் இப்போது இருக்கும் நிலையில் எதுவும் பேச முடியாது. எல்லோர் கிண்டல் கேலிகளையும் ஏற்கத்தான் வேண்டும். சுறா வெற்றி பெற வேண்டும் என்பது விஜய் ரசிகனாக என் ஆசை ஆனால் விஜய் மாறிப்படம் கொடுக்க வேண்டுமென்பதும் நம் ஆசை ஆச்சே. எல்லோரும் தங்கள் பதிவுகளில் சுறாவின் தோலை உரிக்க தொடங்கிவிட்டனர். ஊரோடு ஒத்துப்போகும் வகையில் கொஞ்சம் இப்படி நடக்காதா என்ற ஏக்கத்துடனான ஒரு பதிவு இது.

கொஞ்சம் விஜயின் பழைய படங்களுக்கு போகலாமா? துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தை பற்றி தெரியும் அதன் வெற்றியும் தெரியும். அந்த திரைப்பட பாடல்கள் எந்தளவு ஹிட் என்பதும் தெரியும். அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற தொடு தொடுவேனவே என்ற பாடலை கொஞ்சம் நினைவு படுத்துங்கள்....அப்படியே அடுத்த விடயத்துக்கு போகலாமா? அடுத்தது பிரியமானவளே திரைப்படம். நல்ல வசூலையும் விஜயின் தொடர் வெற்றியையும் உறுதி செய்த ஒரு படம். இந்த படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் வந்த அத்தனை பாடல்களும் இதமானவை. இங்கே நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய பாடல் என்னவோ என்னவோ என் வசம் நான் இல்லை....

அடுத்தது என்ன...பிரண்ட்ஸ் திரைப்படம் தான். சூர்யாவுடன் இணைந்து சித்திக்கின் இயக்கத்தில் வந்த நகைச்சுவைக்கதம்பம் எனலாம் இந்த படத்தை. இந்த பட பாடல்களும் ஏமாறவில்லை. பெண்களோடு போட்டி போடும் ஆண்கள் இங்கே யாரு என்ற பாடல் இப்போது நினைவில் கொள்ளுங்கள். இப்போ நாங்கள் நினைத்துப் பார்க்க வேண்டிய திரைப்படம் திருப்பாச்சி. இந்த படத்தில் வந்த கும்பிடபோன தெய்வம் பாடல் இன்றும் பட்டையை கிளப்பும் பாடல். சிவகாசி திரைப்படத்திலும் இடம்பெற்ற அட என்னாத்த சொல்வேனுங்கோ பாடல் முக்கியமான ஒரு பாடல். அடுத்து வேட்டைக்காரன் நம்மில் பலர் தோல்வி என்றாலும் இருப்பத்தைந்து கோடியில் தயாராகி எண்பத்தேழு கோடிக்கு மேல் வசூலித்த இந்த படத்தை தோல்வி என சொல்லமுடியாது. அந்த படத்தில் வந்த கரிகாலன் காலைப்போல இந்த பாடலையும் நினைவு படுத்திட்டிங்களா?

நான் ஒரு பெரிய உண்மையை சொல்லப்போறன் ரெடியா?

=>

=>

இந்த உண்மை இதுவரை யாருக்கும் தெரியாதது.....

=>

=>

இதை நீங்களும் யாருக்கும் சொல்லக்கூடாது.....

=>

=>

விஜய் கேட்டால் என்னை மாட்டி விடக்கூட்டாது.....

=>

=>

சொல்லவா....

சொல்லவா.....

சொல்றன்......

கவனமா பாருங்க.....

நான் சொன்ன அத்தனை பாடல்களும் ஒருவர் கேள்வி கேட்க மற்றவர் பதில் சொல்லும் படி அமைந்திருக்கும். இந்த பாடல்கள் இடம்பெற்ற அத்தனை படங்களும் விஜயின் வெற்றிப்படங்கள். அந்த வரிசையில் இப்போது நீங்கள் உங்கள் காது கிழிய கேட்கும் பாடல் என்ன? நம்ம சுறாவில் வந்த தஞ்சாவூர் ஜில்லாக்காரி மற்றும் வங்கக்கடல் எல்லை பாடல்கள் இந்த ரகம் தானே. அப்போ சுறா வெற்றிதானே....எப்புடி...? முப்பதாம் திகதிவரை காத்திருக்க தேவை இல்லை. இப்பவே சன்னில சொல்லுங்கப்பா.

யாரது அங்கே உருட்டுக்கட்டை சைக்கிள் செய்யின் எல்லாம் எடுக்கிறது....வேண்டாம் சொல்லிப்புட்டன் மவனே அப்பிடி யாரும் வந்திங்க வீட்டில வில்லு ஏகன் டி.வி.டி இருக்கு போட்டு பார்க்க வச்சிடுவன்.

Share:

22 கருத்துரைகள்:

நிரூஜா said...

அப்பு... எப்பிடி எண்டாலும் இந்தப்பக்கம் வரத்தானே வேணும் அப்ப வச்சிக்கிறன்... :P

Subankan said...

சுறா வெற்றிபெற வாழ்த்துகள். ஆனா சன் டீவில போடுற காட்சிகளைப்பார்த்தால் பழைய குருடி, கதவைத்திறடி கதைதான் போலத்தெரிகிறதே :(

SShathiesh-சதீஷ். said...

@நிரூஜா

முதலின் நீங்கள் எந்த அணி விஜய் எதிர்பா ஆதரவா என்பதை தெளிவாக சொல்லி விடவும். உங்கள் மிரட்டலுக்கு பயந்து நான் எலிசபெத் மாகாரானியின் அரண்மனையில் வாழலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன் அதை மீறியும் மிரட்டினால். உங்களுக்கு குருவி பட டி.விதிகள் அனுப்பப்படும்.

நிரூஜா said...

@SShathiesh-சதீஷ்.

நான் கடைசியா பாத்த விஜய் படம் வசீகரா இல்லாட்டி கில்லி. எது கடைசியா வந்தது எண்டு ஞாபகம் இல்லை. இப்ப விளங்குமே... :P

SShathiesh-சதீஷ். said...

@நிரூஜா

ஞாபகம் இல்லையா? அப்போ உங்களுக்கு மெமரி லாசா?

KANA VARO said...

வாரே வாவ்!

SShathiesh-சதீஷ். said...

@Subankan

வெற்றி பெற்றால் சந்தோசம்.....பழைய குருடி கதவை திறந்தாலும் அங்கு பூந்தோட்டம் அழகிய காட்சி அமைப்பு மாறி இருந்தால் சந்தோசம். பார்ப்போம். அதுவரை சண் டி.வி பார்க்காமல் விடுவோம்.

SShathiesh-சதீஷ். said...

@AKAM

நன்றி. வாறே வாறே வாராரே

நிரூஜா said...

@SShathiesh-சதீஷ்.
ஞாபகம் இருக்கிறமாதிரி படம் நடிச்சா ஞாபகம் இருக்கும் :P

SShathiesh-சதீஷ். said...

@நிரூஜா

அப்போ உங்களுக்கு என்ன படங்கள் ஞாபகம் இருக்கென்று சொல்லுங்க. அதுசரி உங்கள் பதிவில் லண்டன் வர இருக்கும் இன்னொரு பதிவரை சொன்னீர்கள் அவர் யார்?

நிரூஜா said...

@SShathiesh-சதீஷ்.
அது சத்தியமா நீங்க இல்லை...! போதுமா :P

SShathiesh-சதீஷ். said...

@நிரூஜா

அதுக்கு ஏனுங்க இம்புட்டு கோபம்.

Unknown said...

இந்த பாட்டையும் சுராவில சேருங்கோ


அரைச்ச மாவ அரைப்போமா .. துவைச்ச துனியபாவம் அப்பு நீ

கன்கொன் || Kangon said...

{{ 13 கருத்துரைகள்
இந்த விண்டோவை மூடுக கருத்துரை வடிவத்திற்கு தாவவும்

பெயரில்லா நிரூஜா கூறியது...

அப்பு... எப்பிடி எண்டாலும் இந்தப்பக்கம் வரத்தானே வேணும் அப்ப வச்சிக்கிறன்... :P}}

அப்பிடியே விழுந்து விழுந்து வழிமொழிய நினைச்சாலும் ஒருத்தரின்ர படம் தோத்து அதப் பாத்து நானேன் சந்தோசப் படோணும் எண்டதால வாழ்த்துக்கள் சொல்லி கழண்டு கொள்ளுறன்.... :)))

Aba said...

தூ.... நெனப்புத்தான் பொழப்ப கெடுக்குமாம்!

ஜானகிராமன் said...

சதிஷ், திருப்பாச்சியில் தொடங்கி வேட்டைக்காரன் வரைக்கும் விஜயோட படத்தின் அடிப்படை ஒன் லைன்ல 6 வித்தியாசத்தையாவது கண்டுபிடிக்கமுடியுமா? மனச தொட்டு சொல்லுங்க.

பாலா said...

கரிகாலன் கால போல - வேட்டைக்காரன்
ஒல்லி ஒல்லி இடுப்பே - ஆதி
பலானது பலானது - குருவி
நீ மர்லின் மன்ரோ - அழகிய தமிழ் மகன்
உள்ளிட்ட பாடல்கள் கூட அதே ரகம்தான் என்று நினைக்கிறேன்.
இந்த படங்கள் எல்லாம் இந்த செண்டிமேன்டையும் தாண்டி தோல்வி அடைந்தது

SShathiesh-சதீஷ். said...

@A.சிவசங்கர்

வேணாம் அண்ணே வலிக்கிறது.

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

அடப்பாவி நீ நல்லவனா? ரொம்ப சந்தேகமாய் இருக்கு.

SShathiesh-சதீஷ். said...

@ஜானகிராமன்.நா

நீங்கள் சொன்னது சரிங்க ஆனால் அதையும் மீறி திருப்பாச்சி சிவகாசி போன்ற படங்கள் வெற்றி என்பதை ஏற்கத்தானே வேண்டும்.

SShathiesh-சதீஷ். said...

@பாலா

என்ன அண்ணா நீங்க இப்படி உண்மை எல்லாம் சொல்லப்படாது. சொல்றத மட்டும் தான் கேட்கணும் அப்புறம் எனக்கு வலிக்குமேல்லா. அழுதிடுவன். வேணாம்.

Yoganathan.N said...

வேட்டைக்காரனின் பட்ஜெட் வெறும் இருப்பத்தைந்து கோடிதானா??? சந்தேகமாக உள்ளது. இன்றைய தேதியில் விஜய் படங்கள் பட்ஜெட் குறைந்தபட்சம் முப்பது கோடிகளாவது இருக்கும் என கேள்விப் பட்டிருக்குறேன்.
என்ன ஒரு ஆராய்ச்சி??? ஹிஹி ஐம்பதாவது படம் அல்லவா, அதற்காவது சுறா வெற்றி பெற வாழ்த்துகள். :)

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive