உங்கள்
சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்
உங்கள்
சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
எம்
சமூக கருத்துக்கள்
சதீஷ் தொகுத்த
பொது நிகழ்வுகள்
ஒரே தளத்தில்
இன்னும் பல
Showing posts with label சுறா. Show all posts
Showing posts with label சுறா. Show all posts
Tuesday, June 15, 2010
Wednesday, June 9, 2010
200+ பதிவு. சாக்கடைகளுக்கு ஒரு சாட்டையடி!

வணக்கம் பதிவுலக நண்பர்களே, எதிரிகளே, முதுகெலும்பில்லாத நரிகளே!
ஏன் இப்படி ஒன்று என பார்க்கின்றீர்களா. காரணம் இல்லாமல் இல்லை. கடந்த காலத்தில் நான் ஓய்வாக இருப்பதால் தினமும் ஒரு இடுகையை இட்டு வந்துள்ளேன் என் மனதுக்கே இப்போதுதான் நான் ஓரளவு நல்ல இடுகைகளை தருகின்றேன் என கடந்த முப்பது நாப்பது பதிவுகளை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தான் இப்படி ஒரு சூழ்ச்சி, நயவஞ்சகம், முதுகெலும்பில்லாத நரிகள் செய்த ஒரு வலையில் மாட்டாமல் வெளிவந்திருக்கின்றது இந்த சுறா.(சும்மா பில்ட் அப்புக்குதான் சுறா.)
நேற்று காலை நான் கண்விளித்ததே ஒரு சக பதிவரின் தொலைபேசி அழைப்பில் எனக்கு கிடைத்த தகவல் எனக்கு நம்ப முடியாமல் இருந்தது. அந்த தகவல் என்னவென்றால் என் தளத்துக்கு செல்ல முடியவில்லை. காரணம் இரண்டு ஒன்று சில தவறான தகவலை நான் பரப்ப முற்பட்டதற்காய் தளம் முடக்கப்பட்டிருக்க வேண்டும் இல்லை சில நய வஞ்சகர்களால்(கடுமையான கெட்ட வார்த்தைகளால் திட்டணும் என்றாலும் நாகரிகம் கருதி தவிர்க்கின்றேன்.) என் தளம் களவாடப்பட்டிருக்கணும். என்ன நடந்தது என தெரியாமல் இருக்கவே என் மினஞ்சல் இயக்க முற்பட்ட போது அதுவும் முடக்கப்பட்டது. உடனடியாய் ஒரு சக பதிவருடன் தொடர்பை ஏற்படுத்தி என் தளத்தையும் மினஞ்சலையும் ஒரு நிமிடத்தில் மீளப்பெற்றேன்.
இது நடக்க முதல் நாள் இரவு அதிகாலை மூன்று மணிவரை நான் என் மினஞ்சல் மற்றும் தளத்தை பாவித்துக்கொண்டே இருந்தேன். அதன் பின் காலை ஏழு மணிக்குள் இது நடந்தேறியுள்ளது. ஆனால் அவரின் துரதிஷ்டம் களவாட முற்பட்ட நிலையில் தானியங்கி முறையில் என் கணக்குகள் முடக்கப்பட்டு களவாடுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நான் தூங்கிக்கொண்டிருந்த போதும் கூட என் தளத்தை களவாடப்பட்டு இருப்பதைக் கண்டு அவரை இனம்காண உதவிய என் சக பதிவுலக நண்பர்களுக்கு என் நன்றிகள். அந்த முட்டாளுக்கு வெறுத்துப்போயிருக்கும். இன்னும் ஒரு சிலரிடமும் கைவைத்து தோல்வியில் முடிந்திருக்கின்றது அவர் முயற்சி.
என் தளம் களவாட காரணம் என்ன? பதிவுலகை பொறுத்தவரை எனக்கு எதிரிஎன்று யாரும் இல்லை. சரி நான் ஒரு பிரபல பதிவர் என்றாலும் பரவாயில்லை. வளர்ந்து வரும் ஒரு பதிவரான என் வலைப்பூவை முடக்கி என்ன இலாபம். ஆனால் முடக்க முயற்சித்த அந்த முடவனுக்கு ஒரு நன்றி. நீங்கள் முடக்க முயற்சித்த அன்று நான் ஒரு பதிவும் இடாமலே என் தளத்துக்கு பல நண்பர்கள் வந்து போய் உள்ளனர். வழக்கமாய் பதிவு போடாவிட்டால் வருவோர் எண்ணிக்கை குறையும் ஆனால் இங்கே மாறி நடந்தது.
தொலைபேசி வாயிலாக,மூஞ்சிப்புத்தக வாயிலாக என பல வகையிலும் என்னை தொடர்பு கொண்டு விசாரித்த சகல பதிவுலக நண்பர்களுக்கும் என் நன்றிகள். உங்கள் உதவியால் தான் மீண்டும் வந்துள்ளேன். இந்த தடையால் என் பதிவுகள் தளராது. தொடர்ந்து நான் எழுதிக்கொண்டிருப்பேன். எந்த இலாபமும் இன்றி நண்பர்களை மட்டும் கொடுத்திருக்கும் பதிவுலகத்தை விட்டு நான் ஒதுங்க மாட்டேன்.
தளத்தை முடக்க முற்பட்ட முட்டாளே,
ஒரு தடவை ஹக பண்ண முயலும் முன் நூறு தடவை யோசிச்சிட்டு செய் அப்புறம் யோசிக்கவே முடியாது. இப்போது கூட உன் நிலை அதுதான். பதிவுலகில் கருத்து மோதல் வரலாம் எழுத்தை எழுத்தால் மோதுங்கள். அதை விடுத்து முதுகெலும்பு இல்லாமல் ஒருவனை முடக்கி அதில் வெற்றி காண்பது அழகா? உனக்கு எழுத தெரியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது. நாங்கள் எழுதுகின்றோம் பிடித்தால் படி இல்லாவிட்டால் போய் ப.... பதிவுகள் பலர் எழுதுகின்றனர் எல்லோரின் எல்லாப்பதிவும் ஹிட் ஆவதில்லை இதில் யாழ் தேவியில் நான் இணைக்கும் பதிவுகளுக்கு வாக்குகள் விழுவதே அபூர்வம் இப்போது பல வாக்குகள் விழுகின்றன. ஆனால் மறை வாக்குகள். இதை பற்றி யாழ்தேவியுடன் பேசி அந்த நயவஞ்சகர்களையும் இனம் கண்டாயிற்று. இப்படி எல்லா இடமும் அடிக்கப்போய் கடைசியில் அடி வாங்கிடாதிங்க. உங்களை போல நான் அடிச்சால் தாங்க மாட்டிங்க. எழுத வந்த இடத்தில் எழுதுவம் பிடிச்சிருந்தா வாக்குப்போடுவம் இதுதான் எனக்கு தெரிந்த பதிவுலக அரசியல். அதை விட்டிட்டு சாக்கடையை இங்கேயும் கொண்டுவந்தால் நான் பேசமாட்டேன். ஏனென்றால் நாங்கள் சாக்கடை முன்னால் பேச மாட்டோம்.(உபயம் வேட்டைக்காரன்)
அப்புறம் இன்னொன்று சொல்ல மறந்திட்டன். இது என் 203வது பதிவு. இத்தனை நாள் எனக்கு ஆதரவளித்த வாசகர்கள்,சக பதிவர்கள்,வாக்காளர்கள்,பின்னூட்ட நண்பர்கள்,அனானிகள்,திரட்டிகள் என எல்லோருக்கும் என் நன்றிகள்.
இருநூறாவது பதிவில் இதை குறிப்பிடலாம் என எண்ணி இருந்தேன் இருந்தும் மறந்து விட்டேன். பரவாயில்லை. நம் நண்பர்கள் தானே இதை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றேன். நம்பிக்கையை கேடுப்பீர்களா என்ன.
என் பதிவுலக பயணம் தொடரும்............தடைகளை படிக்கற்களாக மாற்றி.
Monday, May 31, 2010
பாட்டி வடை சுட்ட கதை ரீமேக்கில் விஜய்.
நம்ம சின்ன வயசில பாட்டி வடை சுட்ட கதையை பாட்டி சொல்லவும் அம்மா அக்கா சொல்லவும் கேட்டிருப்போம் இல்லை பாடசாலையிலாவது அறிந்திருப்போம். இந்தக்கதை இப்போது ஒரு சரித்திர படமாக வரப்போகின்றது. அண்மைக்காலமாக இளைய தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளிவரும் படங்களில் கதை இல்லை என்பது மிகப்பெரிய குற்றச் சாட்டு. ஒரே மாதிரிப்படங்களில் நடிக்கின்றார் என்று இன்னொரு வசைபாடல். அதை எல்லாம் விட ஒரு சரித்திரக் கதையில் நடிக்கவில்லையே என்று விஜய் ரசிகர்கள் எங்களுக்கும் ஏன் விஜய்க்கு கூட ஒரு கவலை இருக்கும். இதை எல்லாம் தீர்க்க விஜய் கையில் எடுத்திருக்கும் கதை தான் இந்த பாட்டி வடை சுட்ட கதை ரீமேக். முதலே சொல்லிவிட்டேன் இது ரீமேக் என எனவே கதையில் பல திருப்பங்கள் இருக்கும். அதேநேரம் விஜய் படங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் வருகின்றது இந்தப்படம். வழக்கமாய் விஜய் படம் கிளைமாக்ஸ் சொதப்பலாய் இருக்கும் என்பர். இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கிளைமாக்ஸ் இருக்கு.
சரி இந்தப்படம் பற்றிய என் கற்பனை எப்படி உருவானது என்று சொல்லவேண்டாமா. நேற்று மூஞ்சிப்புத்தகத்தில் என் சிறுவயது முதல் அறிந்திருந்தும் அண்மையில் நண்பியான ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்(தான் தான் இந்தக்கதையின் மூலம் என தன் பெயரை குறிப்பிட வேண்டாம் என சொன்னார். எல்லாம் ஒரு தற்பாதுகாப்புக்குத்தான்.) அப்போதுதான் ஏதாவது சொல்லு என கேட்டபோது பாட்டி வடை சுட்ட கதை ரீமேக் சொல்றன் என சொன்னார். அவர் சொன்ன கதையில் இன்னும் சில மெருகேற்றலோடு இங்கே தரப்போகின்றேன். படத்தை இயக்குவது வெறு யாரும் இல்லை. சாட்சாத் எஸ்.ஏ.சந்திரசேகர் ஐயா தான்.(மனசுக்குள்ள நல்ல கெட்ட வார்த்தைகள் வரித்து இந்த பாவிப்பயலை திட்ட.)
அப்பிடியே ஓபன் பண்ணினால் பிரான்ஸ்(எல்லாம் அஜித்தின் பில்லா பாதிப்பு தான்.) அதிகாலை வேளை எல்லோரும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். வீதியில் பல வாகனங்கள் நெரிசலோடு இருக்க அப்பிடியே ஒரு சோடி காலுக்கு கமெரா சூம் போகிறது. அந்தக் கால்கள் ஓடிக்கொண்டிருக்க அப்பிடியே கமராவை மேலே கொண்டுவந்து முகத்தைக் காட்டினால் ஒரு சின்ன சிரிப்போடு அட நம்ம இளைய தளபதி.(எப்பிடி அறிமுகம் இதுவரை நீங்கள் எந்தப்படத்திலும் இதை பார்க்கமுடியாது.) ஓடிக்கொண்டிருக்கும் விஜயை ஒரு நபர் மறிக்கிறார் அவர் தான் இளவரசு.

இளவரசு: என்னப்பா ஈசா எங்கே இப்பிடி ஓடிக்கொண்டிருக்காய்?
விஜய்: என்ன சொன்னாய்? உலகத்திலேயே என்னை பாத்து இப்பிடி ஒரு கேள்வி கேட்கிறது நீயாய் தான் இருக்கும். ஓடிறதை பற்றி உனக்கு என்ன தெரியும். அதுவும் யாரை பாத்து ஓடிறதை பற்றி கேட்கின்றாய். நான் ரோட்டில ஓடிறது. என்னை பார்க்கும் தயாரிப்பாளர்கள் ஓடறது. என் படம் தியேட்டரை விட்டு ஓடிறது படத்தை பார்க்க வாரவங்க "தல"தெறிக்க ஓடிறது.(அப்பாட ஒரு மாதிரி தலைக்கு பன்ச் வைச்சாச்சு.) என்று ஆள் ஏரியாவிலும் ஓடவக்கிரவண்டா நான்.
இளவரசு: (மனசுக்குள்) பல்லு விளக்காமலே பன்ச் டயலாக் சொல்றானே. இவன்கிட இருந்து தப்பனும் என எண்ணிக்கொண்டு "சரிப்பா நீ போப்பா"
அப்படியே விஜய் ஓடிக்கொண்டிருக்கின்றார். உடனே பாட்டு வருது.......
இது .......(இதில் ஒரு சொல் வரும் இப்போ சொன்னா சஸ்பென்ஸ் போயிடும்) தேடிவந்த புழுகன் பெத்த பிள்ளை
ஓட்டம் என்ற ஒன்றை இவன் விட்டு வைத்ததில்லை.
கொடுப்பது தலைவலி இவன்பெயர் தளபதி என்றும் மொக்கை நாயகன்
இவனே எங்கள் வாழ்வில் இனிமேல் பிடித்த சனியன்.

பாடல் முடிய விஜய் அப்பிடியே ஒரு மிகப்பெரிய கட்டடத்துக்கு முன்னுக்கு நின்று அங்கேயும் இங்கேயும் பார்க்கிறார். வாசல் திறந்திருந்தும் உள்ளே போகல. அப்பிடியே வலது புறமாய் போய் ஒரு மதில மேல் ஏறி ஜம்ப் பண்ணி அந்தக்கட்டடத்துக்குள் போறார்(பிரான்சிலும் இப்பிடியா என கேட்கப்படாது இது விஜய் படம் இயக்குவது மிகப்பெரிய இயக்குனர் திருவாளர் எஸ்.ஏ. சந்திரசேகர் என்பதை மறக்கப்படாது.) அப்போ தான் எங்களுக்கு தெரியிது அது ஒரு சூப்பர் மாக்கட் என்று. அப்பிடியே அதிலே நிற்கும் தொழிலாளர் ஒருவருக்கு வணக்கம்னா என்ற போட்டிட்டு ஒரு இடத்தை நோக்கி போறார். அங்கே யாரையோ தேடிறார். அப்பிடியே தேடிக் கொண்டிருக்கும் போது வடிவேல் வாறார்.
வடிவேல்: என்னப்பா ஈசா வந்திட்டியா?
விஜய்:வாப்பா ரெயின் கோட்(அம்பிரல்லா என்று பெயர் வைப்பான்களாம் நாங்கள் ரெயின் கோட் என்று வைக்கக் கூடாதா.) எங்கேடா நம்ம பாட்டியை காணல.
வடிவேல்:ஆமா எல்லே. எங்கே போயட்டிது இந்த பாட்டி. ஒருவேளை ஒரேடியாய் போட்டிதோ? (இந்த இடத்தில் நீங்கள் சிரிக்கணும் இப்போ இதுதான் வடிவேல் ஜோக்.)
விஜய்: உனக்கு எப்ப பார்த்தாலும் இப்பிடித்தான்.....எங்கே போய்ட்டிது..............நேரம் வேற ஆச்சே....
வடிவேல்: ஏப்பா அங்கே பார் பாட்டி வருது. அடேய் பாட்டியோட இன்னுமொரு பாட்டி வருதுப்பா பார்.
விஜய்: அடேய் பாட்டியோட பாட்டி தானேடா வரும்.....பின்ன என்ன குமாரனா வருவான்......
வடிவேல்: இல்லைப்பா.........பாட்டியோட பூட்டி இதுவேற பாட்டி வருதடா?
விஜய் அப்பிடியே திரும்பி பார்க்கிறார். அங்கே தமன்னா அறிமுகமாகின்றார். அழகாய் காட்டிறாங்க.(முதல் முறையாய் சொல்றன் தமன்னா அழகென்று) விஜய் வாய் மூடாமல் கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டிருக்க.
வடிவேல்: ஏம்பா ஏம்பா ஈசா .......ஈசா.....ஈசு அப்பிடியெல்லாம் பார்க்கப்படாது. நாங்களும் பார்க்கணும்.
விஜய் இதை கவனிக்காமல் வடிவேலுக்கு கையாலே ஒரு அடி விட்டிடு அப்பிடியே பாட்டியை நோக்கி போறார். அந்த நேரம் பார்த்து தமன்னாவும் விஜயை பார்க்க.
இந்த இடத்தில் ஒரு பாட்டு.
சிறகடிக்கும் நிலவு என்ற பாட்டு போல பாடவும்
ஆண்: பாட்டியோட பேத்தி பார்த்துவிட்டேன் உன்னை
பெண்: பார்த்தவுடன் எனக்கு பிடித்துவிட்டு சனியன்
ஆண்: அப்படி நீ சொன்னால் வலிக்குமடி எனக்கு
பெண்: அவ்வே அவே அவ்வே நான் சிக்க மாட்டேன்
இப்படி ஆரம்பிச்சு ஒரு மாதிரி பாட்டு முடிகிறது.

அப்பிடியே இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து முடித்த பின்.
விஜய்: என்ன பாட்டி இண்டைக்கு லேட்.
பாட்டி: ஆமா ஈசா இண்டைக்கு என் பேத்தி பிறந்தநாள் அதுதான் கோவிலுக்கு போட்டு வாறம்.
விஜய்: (தமன்னாவை பாத்து) என்னது இண்டைக்கு உங்களுக்கு பிறந்தநாளா? (தமன்னா ஆம் என்பது போல தலை ஆட்ட) விஷ் யூ எ ஹாப்பி பெர்த் டே
தமன்னா: தாங்க்ஸ்.
விஜய்: என்ன பாட்டி நீங்க இப்பிடி ஒரு அழகான பேத்தி இருக்கிறதை சொல்லாமல் விட்டின்களே. (என்று சொல்லிக்கொண்டிருக்கவே பாட்டி மெதுவாய் வழக்கமாய் தான் பீசா வைத்து விற்கும் இடத்துக்கு போக விஜயும் தமன்னாவும் ஒருவரை ஒருவர் மீண்டும் பாத்துக் கொள்கின்றனர்.)
என்னது பாட்டி வடை சுட்ட கதையில் பீசா என்று கேட்கப்படாது. இது ரீமேக் எனவே அங்கே வடை இங்கே பீசா. எப்பிடி நம்ம யோசனை.
இப்பிடியே ஒருவரை ஒருவர் பாத்துக்கொண்டிருக்க. அங்கே வந்த திருடன் ஒருவன் பாட்டியின் பேர்ஸ்சை எடுத்துக் கொண்டு ஓட விஜய் அவனை திரத்திறார். அவன் மாடிப்படியால் ஏறி ஓட விஜய் கீழே இருந்து அப்பிடியே ஒரு ஜம்ப் பண்ணி அடுத்த தளத்துக்கு சென்று அந்த திருடனோட சண்டை போடிறார்.
விஜய்: நானே ஒரு கதை திருடன். எனக்கு முன்னாலேயே திருடிரியா என்று பன்ச் பேசி அவனை அடிக்க அவனோ பையைக் கொடுத்திட்டு ஓடிறான்.
பையை அப்பிடியே ஒரு லுக விட்டு சுற்றும் முற்றும் பார்க்க அங்கே இருக்கும் வெள்ளைக் காரன் கூட தன் வேலையை விட்டிட்டு விஜயை சுத்தி நின்று கைதட்டிறான்.(விஜய் மாக்கட் உலக லெவலில் என சொல்லலாம் எல்லா.) கை தட்டினால் பரவாயில்லை.
பாட்டு தொடங்கிறது ஆரம்பிக்கிறது பிரான்சுக்காரன் தான்.....
திருடன் கதை திருடன் திருடனை வென்ற திருடன்
உலக லெவலில் வந்தும் கதையை திருடுவான்
திட்டம் போட்டு அடிப்பான் திருடித் திருடி ஜெயிப்பான்
இவனைப் போல திருடன் இனிமேல் யார் வருவான்
பாட்டு முடிய முதலில் பாட்டியின் பேர்ஸ் அடித்த திருடன் மீண்டும் வந்து விஜயின் பேர்ஸ்சை அடித்துக் கொண்டு ஓட. இந்த முறை ஹீரோ பாத்து சிரிச்சிட்டு நிற்கிறார்.(ஏன் என்றெல்லாம் கேட்கப்படாது இது விஜய் படம் நான் தொடர்ந்து சீன கொண்டு போகணும்) இதை பாத்தா தமன்னா விஜயிடம் வாறார்.
இதில் இடை வேளை
தமன்னா: அவன் உங்க பேர்ஸ்சை அடிச்சிட்டு போறான். பாத்திட்டு நிக்கிறியள்.
விஜய்: அட விடுங்க அவனும் என்னை போல தான் எத்தனை தோல்வி வந்தாலும் தன்னை மாத்திக் கொள்ளல. முதலில என்னிடம் பிடிபட்டு தன் தொழிலில் தோற்றாலும் என்னைப்போல அதை காட்டிக் கொள்ளாமல் அசட்டை செய்யாமல் அதே போல என் பேர்ஸ் அடிச்சேன் எனக்கு அது பிடிச்சிருந்தது அதுதான் விட்டிட்டன்.
தமன்னா: யூ ஆர் சோ ஸ்வீட். உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு. இப்பிடி பட்ட ஒருவர் தான் எனக்கு வேணும்......ஐ.லவ்.யூ
வடிவேல்: இதென்ன சின்னப் பிள்ளை தனமாய் இஉக்கு. ஒரு ஹான்ட்சம்மான அழகான அறிவான ஒருத்தன் இங்கே இருக்கேக்கே இப்பிடி நான்சன்சா பேசப்படாது. வலிக்கிறது.
விஜய்:யாரடா அது?
வடிவேல்: கண்டிப்பாய் நீ இல்லை. உன்னை தான் எல்லா பதிவர்களும் போட்டு தாளிக்கிரான்களே. இன்னுமா நீ உன்னையை நம்பிறாய்.
தமன்னா: அப்போ யார் அது?
வடிவேல்: என்ன கேள்வி இது அவரை தெரியாதா.
தமன்னா: இல்லையே.
வடிவேல்: அது நான் தான்.....
தமன்னா: ஹீ ஹீ ஹீ. என்னது அது நீயா. எனக்கு அப்பிடிப்பட்டவரே வேணாம். இப்போ உன்னையை விட இவர்தான் அதிகம் மொக்கை போடிறார். இவரை பற்றி தான் அதிகம் பேசிறாங்க எனக்கு இவரே. போதும்.
தமன்னா: வேணாம் செல்லம வலிக்கிது.
விஜய்:போதும் போதும் நிறுத்து அடுத்த பாட்டு ஆடனும். எவ்வளவு நேரம் தான். நடிக்கிரமாதிரி நடிக்கிறது.
தமன்னா:அதுதானே இவ்வளவு நேரமாய் ஹீரோயின் நான் வரும் சீன் வருதே. வரக்கூடாதே. விஜய் படம் எண்டால ஹீரோயின் வந்தவுடன் பாட்டு வரும் என்றெல்லா எல்லோரும் காத்திருப்பாங்க. நானும் உடுப்பை அவுத்துப்போட்டிட்டு உள்ளுக்குள் போடும் உடுப்பு சைசில் துணியை சுத்திட்டு ஆடனும். இல்லாட்டில் இது விஜய் படம் இல்லையோ என்று சந்தேகம் வந்திடும்.
உடனே ஒரு பாட்டு வருது. அப்பிடியே ஒரு பிளைட் பிடிச்சு லண்டன் போய் ஆடிறாங்க
தஞ்சாவூர் ஜில்லாக்காரி பாடல் போல படிக்கணும்
ஆண்: பீசாவை விற்க வந்த பிசாசே நைசா வாயேண்டி
பெண்: போக்கிரி பயலே எந்தன் டவுசரைக் கலட்டி போடாதே....
ஆண்: பொம்மாயி பொம்மாயி இது ரீமேக் ரீமேக் மறக்காதே பொம்மாயி
பெண்: சூ மந்திர காளி இவன்கிட்ட மாட்டிக்கிட்டா நான் காலி
என்று பாட்டு ஆரம்பித்து முடிகின்றது.

இந்த நேரம் பாத்து விஜய்க்கு ஒரு தொலை பேசி அழைப்பு வருகிறது. அதற்கு விஜய் சொல்றார் இன்னும் ஐந்சே நிமிசத்தில அங்கே இருப்பேன்.. ஆமா கையோட கொண்டுவாறேன்......
உடனே விஜய் சுத்தும் முத்தும் பார்க்கிறார். தமன்னா வந்திருப்பதால் தமன்னாவின் பாட்டி கொண்டுவந்த பீசாவை சுட்டுக்(திருடிக்) கொண்டு தமன்னாவையும் ஒரு கையால் பிடித்துக் கொண்டு ஓட ஆரம்பிக்கின்றார்.(இதை தமன்னா கூட கவனிக்கல.) இதை பார்த்த அந்த பாட்டி கத்த முதல் வாசலுக்கு வரும் விஜயையும் தமன்னாவையும் அன்று புதிதாய் வேலைக்கு சேர்ந்த காவலாளி பிரகாஷ்ராஜ் மறிக்கிறார்.
பிரகாஷ்ராஜ்: நில்லுடா செல்லம். நில்லு அதெப்பிடி நீ ஓடுவாய். நீ ஒரு தங்க கட்டியை எடுத்திட்டு போ அந்த பாட்டி சம்பாதிச்சிடும். ஆனால் நீ அந்த கிழவி சாப்பிட்டு வைச்ச மிச்ச பீசாவையும் ஒரு சப்பை பிகரையும் கூட்டி ஓடிரியே. இது தாங்குமா செல்லம்.
விஜய்: இதோ பார் உனக்கும் எனக்கும் பிரச்சனை இல்லை. எவனுக்கும் எனக்கும் பிரச்சனை நடுவில நீ வந்து கத்தாத. இந்த சப்பை பிகரையும் சாப்பிட்டு போட்ட பீசாவையும் கொண்டு போறதுக்கா கத்திறாய்.
பிரகாஷ்ராஜ்: பின்னே என்னடா செல்லம். இதை மாதிரி ஒரு சப்பை பிகரை எங்கேடா போய் அந்த பாட்டி தேடும். எல்லோரும் அழகாய் எல்லா இருக்காளுகள். மவனே நான் அடிச்சன் நீ பீஸ் ஆகிடுவாய்.
விஜய்: நீ அடிச்சா பீஸ் நான் அடிச்சா(திருடினா) பீசா.
அப்பிடியே இரண்டு பேருக்கும் நடுவில ஒரு சண்டை. சண்டையில் விஜய் கடுமையாய் அடிவாங்கி நடக்க முடியாமல் போக அப்பிடியே சுருண்டு விழுகின்றார். முதல் முறையாக விஜய் படத்தில் வில்லன் ஜெயிக்கபோறார் என்று நீக்கள் கனவெல்லாம் காணப்படாது.
தமன்னா: (பிரகாஷ்ராஜிடம்) நீ வேணுமானால் அவரை அடிச்சு விழுத்தலாம். முடிஞ்சா அவரோட பாட்டை பாத்தா பின்னும் நீ உயிரோட இருந்தால் அவனென்ன நானே அவனோட போக மாட்டேன். இந்த பீசாவையும் உனக்கு ஊட்டி விடுறன். ஓகே வா?
பிரகாஷ்ராஜ்: எந்திரிச்சு பாடி ஆட சொல்லடி.
இப்போதான் கடைசி பாட்டு.
எழும்பிற விஜய்க்கு சும்மா அட்டகாசமாய் கோட் சூட எல்லாம் போட போட்டிருந்த டிறேசை குறைச்சுக்கொண்டு தமன்னா மறு பக்கம் நடந்து வந்து விஜய்க்கு ஒரு முத்தம் கொடுக்க.
நான் நடந்தால் அதிரடி பாடல் ஸ்டைலில் படிக்கணும் ஓகே.
ஆண்: நான் ஆடினால் கதகளி என் பேச்சு தலைவலி என்னை துரத்தும் சுண்டெலி நீ
பெண்: நீ நடிச்சால் வெறுப்படா நாளை சி.எம் நீயாடா அடிக்காதே என் கிட்ட ஜோக்கடா
ஆண்: நான் யார் அடுத்த பி.எம்மு
பெண்: நீ யார் இங்கே முழு லூசு
ஆண்: வேண்டாம் பேச்சு வெட்டிப் பேச்சு அவன் கதை இப்போ காலி ஆகிப்போச்சு.

இறுதிப் பாட்டும் முடிஞ்சிது. பாட்டு முடிஞ்சு பார்த்தால். பிரகாஷ்ராஜ் குற்றுயிரும் குலைஉயிருமாக கிடக்க. இதை விஜய் ஒரு மாதிரி பார்க்க.
சாகப்போற அந்த நேரத்தில் கூட பிரகாஷ்ராஜ் வசனம் பேசிறார்.
பிரகாஷ்ராஜ்: என்னடா அப்பிடி பார்க்கிறாய். மவனே இது என்னோட போகட்டும். இனிமேலும் பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி யாரையும் இப்பிடி கொல்லாதே. நல்ல காலம் தமன்னா அப்பிடி அரை குறையாய் ஆடினதால் கொஞ்சம் உயிர் இருக்கு. மவனே இங்கே இருந்து ஓடிடு.
விஜய் தமன்னாவை கூட்டிக்கொண்டு போக முற்பட தமன்னா விஜயை மறிக்கிறார்.
தமன்னா: ஒரு சப்பிய பீசாவையும் சப்பை பிகர் என்னையும் கூட்டிக்கொண்டு நீ ஓட என்ன காரணம் சொல்.
விஜய் உடனே தன் பிளாஷ் பக் சொல்ல ஆரம்பிக்கின்றார்.
விஜய்: நான் சின்ன வயசை இருக்கும் போதே என் பாட்டி இறந்திட்டா. இறக்கும் போது எனக்கு அவ சொன்ன ஒரு விஷயம். தனக்கு தன் திருமணத்தன்று சீதனமாய் வடைகள் பல செய்து கொடுத்தாங்களாம். உங்கம்மா ஓடிப்போய் கல்யாணம் செய்ததால அவளுக்கு என்னால இதை சீதனமாய் கொடுக்க முடியல. ஆனால் உன் தங்கச்சிக்கு கல்யாணம் செய்யும் போது நீ கட்டாயம் அவளுக்கு சீதனமாய் எங்கேயாவது இதை தேடிக்கொண்டுவந்து கொடுக்கணும் என்று சொன்னா. நானோ ஒரு வெட்டிப்பயல் வேலையும் இல்லை. அரசியலுக்கு வா என்று அப்பா சொல்லி சொல்லியே என் வாழ்க்கையை நாசமாக்கிறார். வேலை இல்லை அதை விட அரசியல் என்ற சாக்கடை என்று நான் இருக்கிறதால ஒருத்தனும் பொண்ணு குடுக்கிறானும் இல்லை.எவளும் பாக்கிறாளும் இல்லை. அப்பத்தான் இங்கே பாட்டியை ஏமாத்தி கொஞ்ச பீசா வாங்கிட்டு போகலாம் என வந்தான். பீசா வாங்க காரணம் இது ரீமேக் படம். வந்த இடத்தில நீ மடங்கிட்டாய். இந்த சப்பை பிகர் கூட கிடைக்காட்டில் இனி நம்ம வாழ்க்கை அப்படியே போய்டும் என்று உன்னையும் கூட்டிட்டு வந்திட்டன்.
தமன்னா: நீங்க தங்கச்சி மேல வச்சிருக்கிற பாசம் எனக்கு ரொம்ப புல்லரிக்கிது. ஐ.லவ்.யூ சோ மச்.......
அப்படியே சுபம்......
தங்கைக்கு கொடுத்தாரா இல்லையா என்று கேட்கப்படாது......நேரம் முடிஞ்சிது சோ படம் முடிஞ்சிது....அதுவா முக்கியம் நாலு பைட் ஐஞ்சு பாட்டு ஒரு துள்ளல் இரண்டு பறப்பு முடிஞ்சிது நேரமும் போய்ட்டு சரிதானே.
Tuesday, May 4, 2010
சுறா- அய்ய்ய்ய்ய் சனியன்.
எங்கள் இளைய தளபதி வருங்கால சூப்பர் ஸ்டார் டாக்டர் விஜய் அவர்களின் நடிப்பில் வெளிவந்த சுராவை பார்க்கும் வாய்ப்பை நானாக ஏற்படுத்திக்கொண்டேன் காரணம் நான் விஜய் ரசிகனல்லவா. வழக்கமாக வெற்றியில் வேலை செய்யும் போது அலுவலக நண்பர்கள் அண்ணன்மார்களுடன் செல்வது வழக்கமாக இருந்தாலும் இப்போது அங்கேயும் இல்லை என்பதால் சக பதிவரும் நண்பருமான மதுரகன் அண்ணாவுடன் செல்ல முடிவெடுத்தேன்.(மதுரகன் அண்ணா தீவிர தல ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.) இந்த படத்துக்கு எல்லோரும் விமர்சனம் எழுதியாகிவிட்டது இனி எதற்கு என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் நான் ஒரு தீவிர விஜய் ரசிகன் என் பார்வை இந்த படத்தில் எப்படி இருக்கின்றது என்று அறிய சில வலைப்பதிவர்களும் என் மூஞ்சிப்புத்தக நண்பர்களும் என்னோடு இன்றும் தொடர்பில் இருக்கும் என் வெற்றி நேயர்களும் சில நண்பர்கள் தனியாக பேசும் போது கேட்டுக்கொண்டதாலும் எழுதுகின்றேன்.


படம் இன்னும் பார்க்கப்போகலையா? உங்களுக்கு தான் இது. நீங்கள் திருப்பாச்சி சிவகாசி மதுர வேட்டைக்காரன் எல்லாம் பார்த்து ரசிச்சவங்களா? அப்போ கவலையை விடுங்க. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முழு அக்சன் படத்தையும் விஜயையும் ரசிக்கணும் என்று மட்டும் நினைத்தால் சுறா நல்ல பொழுதுபோக்கு அம்சமுள்ள படம் அதை விடுத்து நம் பதிவர்கள் பாசையில் சொன்னால் விஜய் படம் என்ன ஆஸ்கார் படமா?

காலை பத்து முப்பதுக்கு படம் காண்பிக்கப்படும் என்ற நிலையில் பத்து நிமிடத்துக்கு முன்னதாக திரை அரங்குக்கு சென்றால் பெரிய ஒரு லைன் நின்றது. டிக்கெட் கிடைக்குமா என்ற சின்ன சந்தேகம் வந்தாலும் கிடைக்கும் என்று நம்பிக்கை அளித்தார் மதுரகன் அண்ணா. சரி என்று கையில் ஒரு தண்ணீர் போத்தலை வாங்கிக்கொண்டு அந்த லைனில் நின்றால் ஒருவர் வந்து சொன்னார் இன்று படம் பதினோரு மணிக்காம் என்று. சற்று நேரத்தில் போலீசார் வந்து சின்ன ஒழுங்குபடுத்தல் செய்தனர் அங்கே நின்ற எம்மை. காரணம் ஒரு சிலர் லைனில் நிற்காமல் வழக்கமாக மோதகம் வடை வாங்கும் இடத்தில் முன்டியடிப்பதுபோல நின்றதே. அதிகம் ஆண்களாக காணப்பட்ட அந்த இடத்தில் சில முச்சக்கர வண்டிகளில் பெண்களும் குழந்தைகளும் வந்திறக்கி நம்ம தளபதியின் புகழை பரப்பினார்கள். (அந்த பிள்ளைகளுக்கு பெற்றோர் இந்த வயசிலேயே வாழ்க்கையில் இப்பிடி கஷ்டம் இருக்கென்று விஜய் படத்தை காட்டி பழக்கப்படுத்துகின்றார்கள் என்ன ஒரு பெற்றோர்.) ஒருவாறு டிக்கெட் வழங்கும் இடத்துக்கு செல்லும் அந்த கம்பிக்குள் நுழைந்தால் என்னால் உள்ளே செல்ல கடினமாக இருந்தது. அடபாருங்கப்பா இப்பிடி உடம்பு போடிதே. தளபதிகிட்ட தனியா ஒரு அட்வைஸ் கேட்கணும் உடம்பை சிக்கென்று வைத்திருக்க.(அட கான்கொன் இந்த கேள்வி உன்னிடம் தானப்பு என்னாலேயே போக முடியல உன்னாலே எப்பிடி மகனே?)
ஒருவாறு டிக்கெட்டோடு உள்ளே சென்று நமக்கு ஏற்ற இடத்தில் அமர்ந்து கொண்டால் எனக்கருகில் இருந்தவர்கள் சகோதர மொழி பேசுபவர்கள். மொழி தெரியாமல் இவர்கள் படம் பார்க்கப்போரார்களா என்று பார்த்தால் கொஞ்ச நேரத்திலேயே தமிழில் பேசி பாலை வார்த்தார்கள். அரங்கு நிறைய படம் ஆரம்பமானது. நவீன் செரமிக்கென்று நினைக்கின்றேன் ஒரு பெண் நடனமாடும் விளம்பரத்தை காட்ட விசில் பறந்தது. அதனை தொடர்ந்து நாணயத்தில் விஜயின் ஐம்பதாவது படம் என்று வந்தபோதும் கலாநிதி மாறன் பெயர் வந்தபோதும் விசில் காதைக்கிழித்தது.(கலாநிதி மாறனுக்கு இந்தியாவில் விசில் பறந்தால் அதில் கொஞ்சமேனும் ஆச்சரியமில்லை ஆனால் இலங்கையில் என்னும் போது கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன்.)
படத்தின் கதை உங்கள் எல்லோருக்கும் தெரியும். பலர் படத்தில் கதையே இல்லை என்றாலும் நான் இதை ஏற்கமாட்டேன். காரணம் இந்த படத்துக்காக எடுக்கப்பட்ட மையக்கருத்து சரியானதே. நல்ல கதை ஆனால் அதை சொன்ன விதம் தப்பாகிப்போனதால் தான் பலருக்கு இந்தப் படத்தில் கதை என்று ஒன்று இல்லாமல் போய்விட்டது என்ற எண்ணம் வரக்காரணம். அடுத்து அறிமுகக்காட்சி, குருவி படத்தில் அறிமுகக்காட்சி பார்த்தவுடனேயே இந்த படம் போணியாகாது என்று கணித்தவன் நான். ஆனால் இந்த அறிமுகம் எனக்கு உண்மையில் பிடித்தது. காரணம் இது விஜய் படம் லாஜிக் எல்லாம் பார்க்கப்படாது. அடுத்து முதல் பாடல் வழக்கத்தை விட குத்து குறைவு அதேபோல விஜயின் வேக நடனமும் இந்தப்பாட்டில் குறைவு. வழக்கமான விஜய் படமாக ஆரம்பிக்கின்றது எனவே ஏமாற்றம் இருக்காது என்று நம்பினேன். அதை மெய்பிப்பது போல அடுத்து வந்த காட்சிகள் நன்றாக இருந்தன. சரி பரவாயில்லை விஜய் சேப்டியாக பிளே பண்ணிறார் என்று நினைக்கின்றேன். காரணம் ஐம்பதாவது படம் படுத்துவிடக்கூடாதே என்று. உண்மையில் சுறா மிகப்பெரிய வெற்றி இல்லாவிட்டாலும் விஜய்க்கு தோல்வியாக அமையாது. ஓடிவிடும்.
விஜயை பொறுத்தவரை இந்த படத்தில் ஸ்டைலிஷாக இருக்கின்றார். நடனத்தில் வழக்கம் போல அசத்துக்கின்றார். என்னதான் இருந்தாலும் தமன்னாவின் ஜீன்சை இழுத்து இழுத்து விடுவதெல்லாம் ரொம்ப ஓவர். பார்ப்பதற்கே அருவருப்பாய் இருந்தது. அடுத்து நடிப்பு இதில் ஒரு விடயம் பலரின் கருத்தாக இருக்கின்றது விஜய்க்கு நடிக்கத் தெரியாதென்று. அதை உண்மையில் ஏற்கமுடியாது. காரணம் விஜய்க்குள்ளும் நல்ல நடிகன் இருக்கின்றார் அவரின் மசாலா படங்களில் அவரால் இதைவிட ஒன்றும் செய்ய முடியாமல் போகின்றது. வருகின்றார் கண்ணை உருட்டுகின்றார், பின்பக்கத்தை ஆட்டுகின்றார், நாலு நெளிப்பு நெளிக்கின்றார், ஒரு சில இடங்களில் ரஜினி விஜயகாந்த் போல பக்கம் பக்கமாய் வசனம் பேசுகின்றார், அப்புறம் வாயை திறக்காமல் போக்கிரி வேட்டைக்காரனில் பேசியதில் அச்சும் பிசகாமல் பன்ச் டயலாக் பேசுகின்றார். தமான்னாவை ஜொள்ளு விடுகின்றேன் என்று தன முந்தைய படங்களில் செய்த குரளி வித்தையை காடுகின்றார். (முன்னைய படங்களில் செய்யும் போது புதிதாக இருந்ததால் ரசித்தோம் இப்போது புளித்துப் போய்விட்டது தளபதி) இவை எல்லாவற்றையும் தாண்டி சுராவில் முழுதாய் தாங்குவது விஜய்தான்.
அடுத்து வடிவேல். வைகைப்புயல் நகைச்சுவைப்புயல் என்றெலாம் இனி கொண்டாட முடியாதோ. இப்போது இவரை விட சந்தானம் நன்றாக சிரிக்கவைக்கின்றார். கொஞ்சம் கூட சரக்கு இல்லை. ஆனால் அவரின் பிளஸ்சே திரையில் பார்த்ததுடன் நாம் சிரிப்பதுதான். அதுவும் விஜயும் வடிவேலுவும் சேரும் போது தானாகவே சிரிப்பு வருகின்றது. விஜய் வடிவேல் காம்பிநேசனில் நான் சச்சின்,பகவதி,வசீகரா போன்ற படங்களை அதிகம் ரசித்தேன் ஆனால் இதில் அந்த படங்களில் இருந்த சரக்கில் நூறில் ஐந்து கூட இல்லை. வடிவேல் தன சரக்கை புதுப்பிக்க வேண்டும் இல்லையேல் தமிழ் திரை உலகிற்கு பாரிய இழப்பு. காரணம் வடிவேல் போல அடுத்த தலைமுறை ஜாம்பவான் நகைச்சுவை நடிகர் என்று இன்னும் யாரும் வரவில்லை.
தமன்னா அக்கா. யார் இவரை தூக்கி வைச்சு கொண்டாடினாலும் எனக்கு தமன்னாவை பிடிப்பதில்லை. சுடுதண்ணீர் ஊற்றுப்பட்டு வெந்து போனது போன்ற தோல். அகண்ட வாய் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாத வெறுமை என்று கண்ணில் காட்டக்கூடாது. என்னை பற்றி நல்லாய் தெரிந்து வைத்திருப்பார் போல இயக்குனர் ராஜகுமார். அந்தளவிற்கு தமன்னாவை பயன்படுத்தி இருக்கின்றார். தமன்னா வந்தால் அடுத்து பாடல் வரப்போகின்றது என தெரிந்து விட்டது. இதை விட கதாநாயகியே இல்லாமல் நடிக்கலாம் தளபதி. பாடலுக்கு நாயகி வேண்டுமென்றால் ஒவ்வொரு பாடலுக்கு ஒவ்வொரு பெரிய நாயகியை ஒப்பந்தம் செய்யலாம். எப்பிடி என் புது ஐடியா? இதைவிட தமன்னாவை பற்றி சொல்ல எதுவும் இல்லை. அதுவும் அந்த மேக்கப் போட்டிட்டு சாகாப்போவது என்ன ஒரு கண்டு பிடிப்பு. இதில் இன்னொரு விடயம் சொல்லணும் நாய் ரமேஷை காணவில்லை என்று தமன்னா சாகவரும் போது காப்பாற்றி விட்டு விஜய் சொல்வாரே ஒரு டயலாக் ஒரு ரமேஷ் இல்லாட்டி என்ன ஒரு சுரேஷோ அல்லது தினேஷோ கிடைக்காமலா போய்டுவான் என்று. அப்போது ஒருவர் கத்தினார் அடோ என் பெயர் சுரேஷ் தான் வாடி தமன்னா செல்லம் என்று. நானும் கொஞ்சம் பயந்திட்டன் ரைமிங்கில்கில் சதீஷ் என்று சொல்லி தமன்னா பிசாசிடம் என்னையும் மாட்டி விடுவார் என்று. அப்பாடா தப்பிட்டன். தமன்னா ரசிக சிகாமணிகள் என்னை தேடுவது தெரிகின்றது. கூல்...
அடுத்து வில்லன் கில். பார்த்தவுடன் மதுரகன் அண்ணா சொன்னார் அபிஷேக் பச்சன் போல இருக்கின்றார் என்று. ஆனால் எனக்கோ அவர் வில்லத்தனம் பார்த்து நினைவுக்கு வந்தது நியூட்டனின் மூன்றாம் விதி அசல் படங்களில் வந்த வில்லன் ராஜீவ் கிருஷ்ணா. வில்லனிடம் சொல்வதற்கு ஏதுமில்லை. இவரைவிட பிரகாஷ்ராஜ் இந்த பாத்திரத்தை கூட சிறப்பாக செய்திருப்பார் என்பது என் கருத்து. வழக்கமான விஜய் பட வில்லன்களுக்கு கொஞ்சம் பவர் புல்லான கதாபாத்திரம் இருக்கும் இதில் அது மிஸ்ஸிங். ஸ்ரீமன் வழக்காமாய் விஜய் நண்பனாக வருபவர் இப்போது வில்லனின் கையாள். இளவரசு விஜய் புகழ் பாட வில்லனுடன். இந்த படம் பார்க்கும் போது எனக்கு நினைவு வந்தது அசல் காரணம் அதில் தல புராணம் இதில் தளபதி புராணம் முக்கியமானதாக இருந்தது மற்ற எல்லாவற்றையும் விட. தமிழ் சினிமாவின் இந்த தலைமுறை நாயகர்கள் இருவரும் இப்படி சுய புராணம் பாடுவது கொஞ்சமும் பிடிக்கவில்லை. யுவராணி இன்னும் அழகாக இருக்கின்றார்.
முன்பாதி பெரிதாக சோம்பல் அடிக்காமல் போய்விட்டது ஆனால் பார்த்துப் பார்த்துப் புளித்த திரைக்கதை கடுப்பேற்றிக் கொண்டிருந்தது. ஆனால் அதில் கூட சில ரசனை இருந்தது இதை கொடுக்க விஜய்யால் மட்டும் தான் முடியும் என்பதை மறுக்கமுடியாது. புளித்துப்போனதைக்கூட கொஞ்சம் ரசிக்கும்படி கொடுத்ததை தான் சொல்கின்றேன். எல்லாம் நன்றாக போய்கொண்டிருந்தது அந்த மீனவ கிராமத்தை சொல்ல மறந்திட்டன் யாழ் நகர் எரித்த பின் விஜய் எழுந்து வரும் காட்சி கொஞ்சம் நம்பும்படி இருக்க அந்த சிலையை விஜய் தூக்கிக்கொண்டு எழும்புவது ஓவர். அதில் சாமி என்று பாட்டு வேறு அந்த நேரம் மதுரகன் அண்ணா சொன்ன வார்த்தைகள் யதார்த்தம் அதாவது வர வர தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு ப்ரோமோசன் கூடிக்கொண்டே இருக்கின்றது என்றார். ஆனால் இதை எல்லாம் எம்.ஜி.ஆர்-ரஜினி செய்யவில்லையா அவர்கள் செய்ததை இப்போது அப்படியே விஜய் செய்கின்றார். சிவாஜியில் ரஜினி சிங்கம் சிங்கிளாதான் வரும் என்று பஞ்ச பேசிக்கொண்டு அடிப்பாரே எத்தனை பேரை ராஜா அதனுடன் ஒப்பிடும் போது சுறாவில் விஜய் அடிக்கும் வில்லன்கள் எண்ணிக்கை குறைவு. (வழக்கமாக விஜய் படங்களின் அடியாட்களை விட குறைவு.)
தமன்னாவுடன் காரில் வரும் போது வீதியில் பிடிக்கும் சண்டை ரொம்ப ஸ்டைலிஷா இருந்தது. எனக்கு படத்தில் பிடித்த ஒரு சில காட்சிகளில் இதுவும் ஒன்று. அதுக்காக படமே பிடிச்சுப்போச்சென்று தப்புக்கணக்கு போடப்படாது. முன்பாதி முடிய மதுரகன் அண்ணாவை பார்த்தேன். ஓரளவு பரவாயில்லை என்றார். விஜயின் வழக்கமான படம் என்பதே அவர் கருத்து. அதுசரி அவரும் அசல் பார்த்து நொந்து போனவர் ஆச்சே. இரண்டாம் பாதி தொடங்கியவுடன் விஜய் பணக்காரன் ஆகிவிடுகின்றார் அதன் பிறகு நடை உடை என்று எல்லாமே ஸ்டைலாக இருக்க கொஞ்சம் எழுந்து உட்கார்ந்த்தேன். ஏதோ ஒன்று படத்தில் இருக்குப்போல என்று. ஆனால் அடுத்தடுத்த நிமிடங்களிலேயே அப்பிடி எல்லாம் தப்பாய் நினைக்கப்படாது என்று சொல்லிவிட்டார் இயக்குனர். இருப்பினும் விஜய் இன்னும் அழகாய் இருக்கின்றார் அதை விட அந்த மேனரிசத்தை நான் ரசித்தேன்.
ரியாச்கானை டம்மி பீசாக்கி இருக்கின்றார்கள். விஜயும் ரியாசும் மோதி இருந்தால் நன்றாக இருக்கும் அதுவும் அந்த நீதி மன்ற காட்சி எங்களுக்கு பிடித்திருந்ததோ இல்லையோ குழந்தைகளுக்கு பிடித்திருக்கு போல அந்த திரை சத்தத்திலும் அந்த காட்சியில் ஒரு குழந்தை திரை அரங்கில் இருந்து போட்ட சத்தம் டண்டணக்கா டனக்கு டக்கா.(இது விஜய்க்காக போட்டதா அல்லாது விஜயை விட இப்போ குழந்தைகளுக்கு டி.ஆரை பிடிக்குதோ) கிளிமக்ஸ் பற்றி சொன்னால் படம் பார்த்த திருப்தியை கொடுக்கவில்லை. அந்தளவிற்கு சொதப்பல் கிளைமாக்ஸ். பின்னணி இசை என்ற ஒன்று படத்தில் இருந்ததா? யாராவது திரும்ப பார்த்தால் சொல்லுங்கள். சுருக்காமாக சொல்லப்போனால் சுறா விஜயை மட்டும் மட்டும் ரசிக்க ஒரு வலை. மற்றும் படி எதுவுமே இல்லை. என்னது விஜயின் ஐம்பதாவது படமா? அய்ய்ய்ய்ய்ய் யாரை ஏமாத்தப்பார்க்கிறிங்க இது விஜயின் முப்பத்தோராவது படம் என்ன பார்க்கிறிங்க? நீங்கள் தமிழன் படம் பார்த்திருக்கின்றீர்களா? பார்க்காட்டி போய் பாருங்க சுராவும் தமிழனும் ஒன்று.
தலைப்புக்கும் அர்த்தம் சொல்லணும் எல்லா ஒரு காட்சியில் விஜய் கைவிரல்களை ஒரு மாதிரி மடித்துக் கொண்டு வடிவேலுவை பார்த்து அய்ய்ய்ய் என்பாரே அப்பிடி தான் எனக்கு படம் பார்க்கும் போது இருந்தது அதாவது அய்ய்ய் நம்மளை எல்லாம் ஏமாற்ற முடியாது. அடுத்து சனியனுக்கும் அர்த்தம் இன்னொரு காட்சியில் வில்லனிடம் இளவரசு சொல்வார் அவன் உங்களுக்கு சனியன் என்று உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கு சுறா சனியன் அதிலும் பதிவர்கள் பலருக்கு. அதை விடுத்து விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்கும் கூட சனியன்தான். இந்த சனியன் எப்பதான் கலையுமோ?

படம் இன்னும் பார்க்கப்போகலையா? உங்களுக்கு தான் இது. நீங்கள் திருப்பாச்சி சிவகாசி மதுர வேட்டைக்காரன் எல்லாம் பார்த்து ரசிச்சவங்களா? அப்போ கவலையை விடுங்க. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முழு அக்சன் படத்தையும் விஜயையும் ரசிக்கணும் என்று மட்டும் நினைத்தால் சுறா நல்ல பொழுதுபோக்கு அம்சமுள்ள படம் அதை விடுத்து நம் பதிவர்கள் பாசையில் சொன்னால் விஜய் படம் என்ன ஆஸ்கார் படமா?
Friday, April 23, 2010
சுறா வெற்றி பெறும் என்பதற்கு ஒரு சுண்டக்கா காரணம்.

இளைய தளபதி டாக்டர் விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் அவரின் ஐம்பதாவது படம் சுறா. எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி வெற்றியை இன்னும் போக்கிரிக்கு பின்னர் விஜய் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தான் வரப்போகின்றது சுறா. பாடல்கள் ஏற்கனவே வந்து ஹிட் ஆகியுள்ளன. ஆனால் பாடல்கள் மணிஷர்மா தான் ஏற்கனவே பயன்படுத்திய மெட்டை பயன்படுத்தியது ஏனோ கொஞ்சம் விமர்சனத்தைக் கொடுத்திருக்கின்றது. ஆனால் அதையும் மீறி விஜய் பாடல்கள் என்ற ரீதியில் வெற்றி அடைந்திருக்கின்றன.
சண் பிக்செர்ஸ் வாங்கியவுடன் படம் டப்பா அதனால் சன்னுக்கு கொடுத்தாயிற்று என்றவர்கள் படம் வென்றுவிட்டால் சண் புண்ணியம் என்பார்கள் என்ன செய்வது நாம் இப்போது இருக்கும் நிலையில் எதுவும் பேச முடியாது. எல்லோர் கிண்டல் கேலிகளையும் ஏற்கத்தான் வேண்டும். சுறா வெற்றி பெற வேண்டும் என்பது விஜய் ரசிகனாக என் ஆசை ஆனால் விஜய் மாறிப்படம் கொடுக்க வேண்டுமென்பதும் நம் ஆசை ஆச்சே. எல்லோரும் தங்கள் பதிவுகளில் சுறாவின் தோலை உரிக்க தொடங்கிவிட்டனர். ஊரோடு ஒத்துப்போகும் வகையில் கொஞ்சம் இப்படி நடக்காதா என்ற ஏக்கத்துடனான ஒரு பதிவு இது.
கொஞ்சம் விஜயின் பழைய படங்களுக்கு போகலாமா? துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தை பற்றி தெரியும் அதன் வெற்றியும் தெரியும். அந்த திரைப்பட பாடல்கள் எந்தளவு ஹிட் என்பதும் தெரியும். அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற தொடு தொடுவேனவே என்ற பாடலை கொஞ்சம் நினைவு படுத்துங்கள்....அப்படியே அடுத்த விடயத்துக்கு போகலாமா? அடுத்தது பிரியமானவளே திரைப்படம். நல்ல வசூலையும் விஜயின் தொடர் வெற்றியையும் உறுதி செய்த ஒரு படம். இந்த படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் வந்த அத்தனை பாடல்களும் இதமானவை. இங்கே நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய பாடல் என்னவோ என்னவோ என் வசம் நான் இல்லை....
அடுத்தது என்ன...பிரண்ட்ஸ் திரைப்படம் தான். சூர்யாவுடன் இணைந்து சித்திக்கின் இயக்கத்தில் வந்த நகைச்சுவைக்கதம்பம் எனலாம் இந்த படத்தை. இந்த பட பாடல்களும் ஏமாறவில்லை. பெண்களோடு போட்டி போடும் ஆண்கள் இங்கே யாரு என்ற பாடல் இப்போது நினைவில் கொள்ளுங்கள். இப்போ நாங்கள் நினைத்துப் பார்க்க வேண்டிய திரைப்படம் திருப்பாச்சி. இந்த படத்தில் வந்த கும்பிடபோன தெய்வம் பாடல் இன்றும் பட்டையை கிளப்பும் பாடல். சிவகாசி திரைப்படத்திலும் இடம்பெற்ற அட என்னாத்த சொல்வேனுங்கோ பாடல் முக்கியமான ஒரு பாடல். அடுத்து வேட்டைக்காரன் நம்மில் பலர் தோல்வி என்றாலும் இருப்பத்தைந்து கோடியில் தயாராகி எண்பத்தேழு கோடிக்கு மேல் வசூலித்த இந்த படத்தை தோல்வி என சொல்லமுடியாது. அந்த படத்தில் வந்த கரிகாலன் காலைப்போல இந்த பாடலையும் நினைவு படுத்திட்டிங்களா?
நான் ஒரு பெரிய உண்மையை சொல்லப்போறன் ரெடியா?
=>
=>
இந்த உண்மை இதுவரை யாருக்கும் தெரியாதது.....
=>
=>
இதை நீங்களும் யாருக்கும் சொல்லக்கூடாது.....
=>
=>
விஜய் கேட்டால் என்னை மாட்டி விடக்கூட்டாது.....
=>
=>
சொல்லவா....
சொல்லவா.....
சொல்றன்......
கவனமா பாருங்க.....
நான் சொன்ன அத்தனை பாடல்களும் ஒருவர் கேள்வி கேட்க மற்றவர் பதில் சொல்லும் படி அமைந்திருக்கும். இந்த பாடல்கள் இடம்பெற்ற அத்தனை படங்களும் விஜயின் வெற்றிப்படங்கள். அந்த வரிசையில் இப்போது நீங்கள் உங்கள் காது கிழிய கேட்கும் பாடல் என்ன? நம்ம சுறாவில் வந்த தஞ்சாவூர் ஜில்லாக்காரி மற்றும் வங்கக்கடல் எல்லை பாடல்கள் இந்த ரகம் தானே. அப்போ சுறா வெற்றிதானே....எப்புடி...? முப்பதாம் திகதிவரை காத்திருக்க தேவை இல்லை. இப்பவே சன்னில சொல்லுங்கப்பா.
யாரது அங்கே உருட்டுக்கட்டை சைக்கிள் செய்யின் எல்லாம் எடுக்கிறது....வேண்டாம் சொல்லிப்புட்டன் மவனே அப்பிடி யாரும் வந்திங்க வீட்டில வில்லு ஏகன் டி.வி.டி இருக்கு போட்டு பார்க்க வச்சிடுவன்.
Monday, April 19, 2010
சீ போங்க வெட்கமாய் இருக்கு.
Monday, April 19, 2010அஜித், எந்திரன், ஐஸ்வர்யாராய்., கார்த்தி, சுறா, தமன்ன, ரஜினி, விஜய்
4 comments:
என் முதல் இரண்டு போட்டோ கொமண்ட்ஸ் பதிவுகளும் கிரிக்கெட் சம்பந்தமாக இருந்தது. அதற்கு உங்கள் ஆதரவும் அமோகமாக இருந்தது. அந்த சந்தோசத்தில் இப்போது முதல் முறையாக சினிமா பதிவொன்று....இம்முறை என்ன கேட்கப்போகின்றேன். நாங்கள் எப்போதும் ஒரே பேச்சு தான் இண்டைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒன்றில்லை. அதனால வாக்குப்போடுங்க கருத்து சொல்லுங்க...ப்ளீஸ் சீரியஸா எடுக்காமல் ரசித்து விட்டு போங்க.
இம்முறை பதிவில் முதல் மூன்று படங்களும் பார்ப்பதற்கு கொஞ்சம் எழுத்துக்கள் சிறிதாக இருக்கின்றன. எனவே படத்தில் மேல் சொடுக்கு பெரிதாக்கி பாருங்கள். அடுத்த முறை இந்த தவறை சரி செய்கின்றேன்.

Friday, April 16, 2010
காவல்காரன் அறிமுகப்பாடல் + எனக்காக மசாலாத்தனம் வேண்டாம்-விஜய்.

எத்தனை தமிழ் படம் வந்தாலும் இந்த மாஸ் ஹீரோக்கள் மாறப்போவதில்லை. சுராவை தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் காவல்காரன் திரைப்படத்திலும் தத்துவம் பொங்கும் அறிமுகப்பாடலோடு அறிமுகமாக இருக்கின்றாராம் விஜய். சுராவிலேயே வெற்றிக்கொடி ஏத்து பாடலில் கொஞ்சம் சுயபுராணம் குறைந்திருந்தது. இதன் தொடர்ச்சி இப்போது காவல்காரனில் நன்றாக பரிணமித்திருக்கின்றது.
மண்ணைக் காப்பான் ஒருவன் விண்ணைக்காப்பான் ஒருவன் என்னை உன்னை காக்கும் அவனே அவனே இறைவன்...... என்று ஆரம்பிக்கும் பாடலே விஜயின் அறிமுகப்பாடலாகின்றது. தன்னை பற்றி பாடாமல் இறைவனைப்பற்றியும் தன் கதாபாத்திரம் பற்றியும் விஜயின் பாடல்கள் வர ஆரம்பித்திருப்பது நல்ல மாற்றமாக தென்படுகின்றது. அண்மையில் இந்தப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது. விஜயுடன் பல நடனக்கலைஞர்களும் ஆட அசினும் படப்பிடிப்பில் இருந்ததாக சொல்லப்படுகின்றது.
இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் படி இருக்கின்றது விஜயின் அண்மைய அறிவித்தல் ஒன்று. 3 இடியட்ஸ் திரைப்படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகி இருக்கும் நிலையில் அவருடன் ஜீவா நடிப்பதும் ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தவர் உதயநிதியா அல்லது வேறு யாருமா விரைவில் தெரிந்து விடும். இந்த நிலையில் முதலில் இயக்குனர்களை விஜயே தெரிவு செய்ய முற்பட்டதாக செய்திகள் வெளியாகின. தேடிக்களைத்து விட்டாரோ என்னவோ. இப்போது நீங்களே இயக்குனரை சொல்லுங்கள் என ஜெமினி நிறுவனம்(தயாரிப்பாளர்கள்) சொல்லியும் வேண்டாம் நீங்களே தெரிவு செய்யுங்கள் என்றுவிட்டாராம் .
முக்கியமான ஒருவிடயம் இந்த படத்தில் எனக்காக எந்த மசாலாத்தனமான வேலையும் செய்யவேண்டாம். என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார். குருவி, வில்லு நேரம் விஜயை பார்த்தால் ஏனோ தூங்கு மூஞ்சி போல இருந்தது இப்போது சுறா ஆடியோ ரிலீசில் கொஞ்சம் தெளிவு தெரிகின்றது. திருந்திவிட்டார் போல தெரிகின்றது. வசீகரா சச்சின் போன்ற இயல்பான நடிப்பில் வரும் படங்கள் விஜயிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கலாம். 3 இடியட்சை விஜய் தன மசாலத்தனத்தால் நாசமாக்கி விடுவார் என்றவர்கள் வாயை இப்போது அடைத்திருக்கின்றார். மிகுதி எப்போதோ?



































