Wednesday, June 16, 2010

2012 திரைப்படம் உண்மையா? 2010 சொல்லும் சேதி இது.

உலகம் எப்போது அழியும்? இந்த கேள்விக்கு பலர் பல விதமாய் விடைகளை சொன்னாலும் எவராலும் எதையும் உறுதியாய் சொல்ல முடியாது என்பதே உண்மை. மாயன் கலண்டர் என்ற ஒன்றை ஆதாரமாய் சிலர் காட்டுகின்றனர். அப்படி பார்த்தால் இரண்டாயிரத்தில் உலகம் அழியும் என்று சொன்னது போல பல தடவைகள் உலகம் அழிந்து விட்டது. உலகத்தின் கடைசி நாள் இதுதான் என்று தெரியாவிட்டாலும் முன்னெப்போதும் இல்லாதவாறு ஒரு முடிவை நோக்கி நாம் வாழும் இந்த பூமி சென்று கொண்டிருக்கின்றதா? என்பது சந்தேகமாய் தான் உள்ளது.

அண்மையில் 2012 என்று ஒரு படம் வெளிவந்தது எல்லோருக்கும் தெரியும். அந்த படத்தை பார்க்கும் போது என் மனதில் ஒரு சிறு சந்தேகம் வந்து தான் சென்றது. அண்மைக்காலமாய் உலகில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் எல்லாமே ஒரு அறிகுறியோ என தோன்றுகின்றது. உலகம் அழிகின்றது என்றால் அது என்ன ஒரு நாளில் தான் நடக்க வேண்டுமா? அல்லது அது சாத்தியமா? இல்லையே....சிறுக சிறுக அழிவது தானே சாத்தியம்.கடந்த வருடம் தொடக்கம் விமான விபத்துக்கள் ஆரம்பித்து விட்டன. விமானத்தில் பறக்க முதல் சரியாக போய் இறந்குவோமா என்பதே தெரியாமல் இன்று பலர் பிரயாணம் செய்யும் நிலை. இப்படி ஆகாயம் தன் வன்மத்தைக் காட்ட மறுபுறம் நிலமோ தன் அதிர்வுகளை பல இடங்களில் காட்டிக்கொண்டிருக்கின்றது. சீனாவில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன். ஏன் இலங்கையில் நில நடுக்கம் ஏற்ப்படும் வாய்ப்பு இல்லை என புவியியல் ரீதியாக சின்ன வயசில் படித்த நினைவு ஒன்று உண்டு. ஆனால் இன்று? படுத்திருந்தவர்களின் கட்டில்கள் ஆடிய ஆட்டம் என்ன? எல்லோருக்கும் தெரியும். இப்படி சாத்தியமற்றது என சொல்லப்பட்டவை எல்லாம் சாத்தியமாகின்றன. சுனாமி என்ற சொல்லை கேள்விப்படாத நமக்கு சுனாமியால் ஒரு அழிவு. இன்று தினமும் கடல் பொங்கினால் அதுதான் நினைவு.

அண்மையில் அமெரிக்காவின் சில பிரதேசங்களிலும் இலங்கையின் பல பிரதேசங்களிலும் வெள்ளம ஏற்ப்பட்டு பாரிய அழிவினை கொடுத்தது. மக்கள் பலர் உணவுக்கு கஷ்டப்பட்டு பின் மீண்டதும் நினைவில் கொள்ள வேண்டும். ஆகாயம்,நீர்,நிலம் என மூன்று பூதங்கள் தங்கள் கைவரிசையை காட்ட அடுத்த இரண்டும் காட்டாமல் விடுமா என்ன? காற்று தன் பங்குக்கு இலங்கையின் சில பிரதேசங்களில் வீடுக்கூரைகளை கொண்டு போக இன்னும் சில பிரதேசங்களிலும் சூறாவளியாய் தாண்டவமாடியது. மறுபுறம் தீ எரிமலையாய் வெடித்து குமுறி பல இன்னல்களை கொடுத்துக்கொண்டிருக்கின்றது. இப்படி ஐம்பூதங்களும் தங்கள் அழிவை காட்டிக்கொண்டிருக்க உலகம் அழிந்து கொண்டிருக்கவில்லை என்றால் நாம் முட்டாள்கள் தான்.
சிறு சிறு அழிவாய் பல இழப்புக்களை இந்த மனித சமூகம் கண்டுகொண்டிருக்கின்றது. டைனோசர் என்ற ஒரு இனம் இல்லாமல் போனது என இன்று நாம் படிக்கின்றோம். மனித இனம் என்று ஒரு இனம் இருந்தது என இன்னொரு உயிரினம் படிக்கும் காலம் வந்துவிட்டாலும் ஆச்சரியமில்லை. மனிதன் மனிதனை அழித்துக்கொண்டு மகத்தான இயற்கையையும் தன் சுயநலத்துக்காய் அழித்துக்கொண்டிருக்கின்றான். ஒரு புறம வெப்பம் அதிகரித்து உயிரங்கிகளை வதைத்துக்கொண்டிருக்க துருவங்களும் பணிமலைகளும் உருகிக்கொண்டே இருக்கின்றன.

கடந்த காலத்தில் அரக்கர்கள் இருந்தனர் என படித்துள்ளோம் பின்னர் பரிணாம வளர்ச்சியில் இன்று இன்னொரு மனிதனை விஞ்ஞான ரீதியாக உருவாக்கும் வல்லமை படைத்தவனாக வளர்ந்து விட்டான் இது எல்லாம் மாற்றம் தான். எனவே இந்த உலகில் சில மாற்றங்கள் நடக்கிறன நடக்கும். அந்த மாற்றம் தான் இந்த உலக மாற்றமோ என்றும் தெரியவில்லை. நான் பிறக்க முதல் யாழில் என் பெற்றோர் இருந்த ஒரு காலத்தில் அந்த வழியால் வந்த ஒரு சித்தர் உனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் காலத்தில் திடல் கடலாவதையும் கடல் திடலாவதையும் பார்ப்பான் என என் அம்மா எனக்கு சொல்லி உள்ளார். இது நடந்ததா இது சாத்தியமா என நீங்கள் எள்ளி நகைக்கலாம். ஆனால் அவர் சொன்ன இரண்டும் நடந்து விட்டதே.


ஒன்று நான் பிறந்தது. அடுத்தது என் வாழ்க்கை காலத்திலேயே நிலம் நீராவதையும் நீர் நிலமாவதையும் பார்த்துவிட்டேன். சுனாமி வந்த நேரம் முதலில் கடல் உள்வாங்கியது உள் வாங்கும் போது நீர் நிலையாக நாம் பார்த்த கடலை நிலமாக காணும் வாய்ப்பு கிடைத்தது. அது மட்டுமன்றி நீர் பனை உயரமும் தண்டி எழுந்த நேரம் கடலில் மண்ணை காணும் வைப்பு பலருக்கு கிடைத்திருக்கும். அதே நீர் நிலத்தில் புகுந்து நிலத்தை நீர்நிலையாக்கியதையும் மறக்க முடியாது. சொன்னவர் இப்போதிருக்கும் கள்ள சாமியார் இல்லை சித்தர் சொன்னது இருபது வருடங்களின் முன்.

இதோ இந்த பதிவை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது பங்களாதேஷில் ஏற்ப்பட்ட அனர்த்தத்தில் பல வீடுகள் புதையுண்டிருக்கலாம் என ஒரு செய்தி. அங்கே எத்தனை உயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் என சொல்ல முடியவில்லை என சொல்கின்றார்கள். நாளொரு அனர்த்தம் யாதும் ஒரு நாட்டில் என்பது இப்போது வழக்கமாகி விட்டது.

அதை தான் விட்டாலும் நடப்பவை எல்லாம் வைத்துப்பார்த்தால் உலகம் நமக்கு ஏதோ ஒரு செய்தி சொல்கின்றது. 2010 இதை பாருங்கோ 20 இன் அரைவாசி 10 உலகின் பல வளங்கள் வாழ்வோடு விளையாடும் காலம். நம் வளங்களை பாதியாக்கும் காலம்.(இதை யாரும் சொல்லல நான் சும்மா ஒரு கணிப்பில் சொல்கின்றேன்.) உலகம் அழியுமோ? அழியாதோ? தெரியாது. இருக்கும் காலம் வரை எல்லோருடனும் உறவாடி உணர்வால் மகிழ்வாடி ஒற்றுமையாய் வாழ்வோம். அதுமட்டுமன்றி நமக்கு இயற்கை கொடுத்த வளத்தை வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை அழிகாமல் காப்போம். எத்தனை நாள் தான் பொறுப்பாள் இயற்கை தாய் நம் அட்டூழியங்களை.
Share:

19 கருத்துரைகள்:

கன்கொன் || Kangon said...

பதிவில் இருக்கும் அமானுசியி விடயங்களைத் தவிர்த்து மற்றைய அனைத்துக் கருத்துக்களோடும் எனக்கு உடன்பாடு உண்டு...

நாங்கள் பொறுப்பில்லாமல் நடந்ததன் விளைவ அனுபவிக்கத் தொடங்கிவிட்டோம்...

நல்ல பதிவு....
வாழ்த்துக்கள்.

shan shafrin said...

''எத்தனை நாள் தான் பொறுப்பாள் இயற்கை தாய் நம் அட்டூழியங்களை.'' ... என்னை போல் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எத்தனை நாள் தான் பொறுப்பான் கடவுள் நம் அட்டூழியங்களை....என்றும் வைத்துக்கொள்ளலாம்.... சில விடயங்களை தவிர்த்து மற்றைய விடயங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை.... நல்ல பதிவு அண்ணா....

Subankan said...

Whatever has happened, has happened for good.
Whatever is happening, is happening for good.
Whatever is going to happen, it will be for good.
What have you lost for which you cry?
What did you bring with you, which you have lost?
...What did you produce, which has destroyed?
You did not bring anything when you were born.
Whatever you have, you have received from Him.
Whatever you will give, you will give to Him.
You came empty handed and you will go the same way.
Whatever is yours today was somebody else's yesterday and will be somebody else's tomorrow.
Change is the law of the Universe.

ARV Loshan said...

ம்ம்.. நான் கூட இதையே மையமாக வைத்து அண்மையில் ஒரு நாள் விடியல் செய்த போதும் இதே கருத்துக்கள் தான் வந்திருந்தன..

இனி ஒன்றும் செய்ய முடியாது.
வாழும் வரை வாழ்வோம். அதுவரை வாழும் பூமியை எம்மால் இயன்றவரை அழிக்காமல் வாழ முயல்வோம்..

anuthinan said...

அடப்பாவிகளா எல்லா முதியவர்களும் சேர்ந்து உலகம் அளியப்போகுது எண்டே முடிவு பன்ணியாச்சா???

இளவட்டம் நான்,பவன்,கோபி,வந்தி அண்ணா இருக்கிறத நினச்சு பார்தியல!

சிறுசுகள பயமுறுத்திற மாதிரியே பதிவு போடுறது! கேட்டா உண்மையை சொல்லுறம் என்றது!

இந்த உலகம் இப்போதைக்கு அழியாது அண்ணே!


(ஆனாலும் பதிவில் சொல்லுவதை பார்த்தால் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கிறது)

anuthinan said...

அண்ணே பதிவு நல்லா இருக்கு

சௌந்தர் said...

நல்ல பதிவு உலகம் அழியாது நாடு நகரம் அழியலாம்

Bala said...

நண்பரே மாயன் காலண்டரை வைத்து கணித்ததன் படி 2012 இல் தொடங்கி 2016 வரை உலகம் அழியும் என்று சொல்கிறார்கள். பின் புது உலகம் உருவாகும் என்று சொல்கிறார்கள். ஒரு வேளை கொஞ்சம் அடவான்சாக 2010 லேயே அழிய தொடங்கி விட்டது போலும்.

அது சரி விஜய்யின் முதல்வர் கனவு என்ன ஆகும்?

"ராஜா" said...

என்னது விஜய் முதல்வர் ஆகபோறாரா? உலகம் அழியபோகுதுன்னு சொல்லுறீங்களே அதான் கேட்டேன்...

"ராஜா" said...

//உலகம் அழியாது நாடு நகரம் அழியலாம் - புதிய தத்துவம் 10,001

உங்களுக்கு மூக்கு கொஞ்சம் பொடப்பா இருக்குமோ?

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனலிஸ்ட்

SShathiesh-சதீஷ். said...

@shan shafrin

வருகைக்கு நன்றி தம்பி

SShathiesh-சதீஷ். said...

@Subankan

அவ்வ்வ்வ்வ்வ்வ் தோடா பீட்டர் விடிறார் பாரு

SShathiesh-சதீஷ். said...

@LOSHAN

வருகைக்கும் கருத்துக்கு நன்றி அண்ணா அன்றைய விடியலை கேட்க தவறிவிட்டேன். :(

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan

எவண்டா அவன் என்னை பெரியவர் என்றது. எடுடா சைக்கிள் செயினை....இளவட்டமா அந்த படம் நீ பார்த்ததில்லை போல போய் பாரு சிஷ்யா

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan

நன்றி தம்பி

SShathiesh-சதீஷ். said...

@soundar
உலகத்திலே தானே நாடு நகரம் இருக்கு....வேற என்கேயுமா

SShathiesh-சதீஷ். said...

@Bala

உங்கள் கருத்துக்கு நன்றி அதுதான் நீங்களே சொல்லிட்டியலே விஜயின் கனவு என்று

SShathiesh-சதீஷ். said...

@"ராஜா"

நீங்க வேற விஜய் படம் பார்த்தவர்கள் எல்லாம் அழிய மாட்டார்களாம் காரணம் அவர்கள் ஏற்க்கனவே பல அழிவுகளை பார்த்தவர்கள் ஆச்சே

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive