உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Friday, June 24, 2011

குரங்கால் முடிகிறது ஏன் எம்மால் முடியாது? - காணொளி

இந்த உலகில் மனிதன் மற்ற உயிரினங்களால் செய்ய முடியாததை செய்து சாதிக்கின்றான். அனால் இந்த குரங்கு தற்கால நிலையறிந்து இந்த மகத்தான சேவையை செய்கிறது. ஏன் எங்களால் முடியாது என கொஞ்சம் சிந்திப்போம்.....



இந்த காணொளியை அனுப்பி வைத்த நண்பர் பிரதீப்க்கு நன்றி.
Share:

Wednesday, July 7, 2010

உலகம் அழியும் உண்மை வீடியோ.

நான் முன்னர் உலக அழிவு பற்றி ஒரு பதிவு இட்டேன். அதை தொடர்ந்து பலருடன் கதைக்கும் போது உலக அழிவு என்பது இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது என்ற கருத்தையே சொல்கின்றார்கள். அதற்கு சான்றாக என் முகப்புத்தாக நண்பர் ஜோசெப் என்பவர் எனக்கு தந்த வீடியோ ஒன்றை இங்கே பகிருகின்றேன். அப்படியே 2012 படத்தை பார்ப்பது போல இருந்தாலும் இது படமல்ல நிஜம். இதை பார்த்த பின் இன்னும் கலக்குகின்றது. பார்த்து விட்டு நீங்களும் உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

Share:

Wednesday, June 16, 2010

2012 திரைப்படம் உண்மையா? 2010 சொல்லும் சேதி இது.

உலகம் எப்போது அழியும்? இந்த கேள்விக்கு பலர் பல விதமாய் விடைகளை சொன்னாலும் எவராலும் எதையும் உறுதியாய் சொல்ல முடியாது என்பதே உண்மை. மாயன் கலண்டர் என்ற ஒன்றை ஆதாரமாய் சிலர் காட்டுகின்றனர். அப்படி பார்த்தால் இரண்டாயிரத்தில் உலகம் அழியும் என்று சொன்னது போல பல தடவைகள் உலகம் அழிந்து விட்டது. உலகத்தின் கடைசி நாள் இதுதான் என்று தெரியாவிட்டாலும் முன்னெப்போதும் இல்லாதவாறு ஒரு முடிவை நோக்கி நாம் வாழும் இந்த பூமி சென்று கொண்டிருக்கின்றதா? என்பது சந்தேகமாய் தான் உள்ளது.

அண்மையில் 2012 என்று ஒரு படம் வெளிவந்தது எல்லோருக்கும் தெரியும். அந்த படத்தை பார்க்கும் போது என் மனதில் ஒரு சிறு சந்தேகம் வந்து தான் சென்றது. அண்மைக்காலமாய் உலகில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் எல்லாமே ஒரு அறிகுறியோ என தோன்றுகின்றது. உலகம் அழிகின்றது என்றால் அது என்ன ஒரு நாளில் தான் நடக்க வேண்டுமா? அல்லது அது சாத்தியமா? இல்லையே....சிறுக சிறுக அழிவது தானே சாத்தியம்.



கடந்த வருடம் தொடக்கம் விமான விபத்துக்கள் ஆரம்பித்து விட்டன. விமானத்தில் பறக்க முதல் சரியாக போய் இறந்குவோமா என்பதே தெரியாமல் இன்று பலர் பிரயாணம் செய்யும் நிலை. இப்படி ஆகாயம் தன் வன்மத்தைக் காட்ட மறுபுறம் நிலமோ தன் அதிர்வுகளை பல இடங்களில் காட்டிக்கொண்டிருக்கின்றது. சீனாவில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன். ஏன் இலங்கையில் நில நடுக்கம் ஏற்ப்படும் வாய்ப்பு இல்லை என புவியியல் ரீதியாக சின்ன வயசில் படித்த நினைவு ஒன்று உண்டு. ஆனால் இன்று? படுத்திருந்தவர்களின் கட்டில்கள் ஆடிய ஆட்டம் என்ன? எல்லோருக்கும் தெரியும். இப்படி சாத்தியமற்றது என சொல்லப்பட்டவை எல்லாம் சாத்தியமாகின்றன. சுனாமி என்ற சொல்லை கேள்விப்படாத நமக்கு சுனாமியால் ஒரு அழிவு. இன்று தினமும் கடல் பொங்கினால் அதுதான் நினைவு.

அண்மையில் அமெரிக்காவின் சில பிரதேசங்களிலும் இலங்கையின் பல பிரதேசங்களிலும் வெள்ளம ஏற்ப்பட்டு பாரிய அழிவினை கொடுத்தது. மக்கள் பலர் உணவுக்கு கஷ்டப்பட்டு பின் மீண்டதும் நினைவில் கொள்ள வேண்டும். ஆகாயம்,நீர்,நிலம் என மூன்று பூதங்கள் தங்கள் கைவரிசையை காட்ட அடுத்த இரண்டும் காட்டாமல் விடுமா என்ன? காற்று தன் பங்குக்கு இலங்கையின் சில பிரதேசங்களில் வீடுக்கூரைகளை கொண்டு போக இன்னும் சில பிரதேசங்களிலும் சூறாவளியாய் தாண்டவமாடியது. மறுபுறம் தீ எரிமலையாய் வெடித்து குமுறி பல இன்னல்களை கொடுத்துக்கொண்டிருக்கின்றது. இப்படி ஐம்பூதங்களும் தங்கள் அழிவை காட்டிக்கொண்டிருக்க உலகம் அழிந்து கொண்டிருக்கவில்லை என்றால் நாம் முட்டாள்கள் தான்.




சிறு சிறு அழிவாய் பல இழப்புக்களை இந்த மனித சமூகம் கண்டுகொண்டிருக்கின்றது. டைனோசர் என்ற ஒரு இனம் இல்லாமல் போனது என இன்று நாம் படிக்கின்றோம். மனித இனம் என்று ஒரு இனம் இருந்தது என இன்னொரு உயிரினம் படிக்கும் காலம் வந்துவிட்டாலும் ஆச்சரியமில்லை. மனிதன் மனிதனை அழித்துக்கொண்டு மகத்தான இயற்கையையும் தன் சுயநலத்துக்காய் அழித்துக்கொண்டிருக்கின்றான். ஒரு புறம வெப்பம் அதிகரித்து உயிரங்கிகளை வதைத்துக்கொண்டிருக்க துருவங்களும் பணிமலைகளும் உருகிக்கொண்டே இருக்கின்றன.

கடந்த காலத்தில் அரக்கர்கள் இருந்தனர் என படித்துள்ளோம் பின்னர் பரிணாம வளர்ச்சியில் இன்று இன்னொரு மனிதனை விஞ்ஞான ரீதியாக உருவாக்கும் வல்லமை படைத்தவனாக வளர்ந்து விட்டான் இது எல்லாம் மாற்றம் தான். எனவே இந்த உலகில் சில மாற்றங்கள் நடக்கிறன நடக்கும். அந்த மாற்றம் தான் இந்த உலக மாற்றமோ என்றும் தெரியவில்லை. நான் பிறக்க முதல் யாழில் என் பெற்றோர் இருந்த ஒரு காலத்தில் அந்த வழியால் வந்த ஒரு சித்தர் உனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் காலத்தில் திடல் கடலாவதையும் கடல் திடலாவதையும் பார்ப்பான் என என் அம்மா எனக்கு சொல்லி உள்ளார். இது நடந்ததா இது சாத்தியமா என நீங்கள் எள்ளி நகைக்கலாம். ஆனால் அவர் சொன்ன இரண்டும் நடந்து விட்டதே.


ஒன்று நான் பிறந்தது. அடுத்தது என் வாழ்க்கை காலத்திலேயே நிலம் நீராவதையும் நீர் நிலமாவதையும் பார்த்துவிட்டேன். சுனாமி வந்த நேரம் முதலில் கடல் உள்வாங்கியது உள் வாங்கும் போது நீர் நிலையாக நாம் பார்த்த கடலை நிலமாக காணும் வாய்ப்பு கிடைத்தது. அது மட்டுமன்றி நீர் பனை உயரமும் தண்டி எழுந்த நேரம் கடலில் மண்ணை காணும் வைப்பு பலருக்கு கிடைத்திருக்கும். அதே நீர் நிலத்தில் புகுந்து நிலத்தை நீர்நிலையாக்கியதையும் மறக்க முடியாது. சொன்னவர் இப்போதிருக்கும் கள்ள சாமியார் இல்லை சித்தர் சொன்னது இருபது வருடங்களின் முன்.

இதோ இந்த பதிவை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது பங்களாதேஷில் ஏற்ப்பட்ட அனர்த்தத்தில் பல வீடுகள் புதையுண்டிருக்கலாம் என ஒரு செய்தி. அங்கே எத்தனை உயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் என சொல்ல முடியவில்லை என சொல்கின்றார்கள். நாளொரு அனர்த்தம் யாதும் ஒரு நாட்டில் என்பது இப்போது வழக்கமாகி விட்டது.

அதை தான் விட்டாலும் நடப்பவை எல்லாம் வைத்துப்பார்த்தால் உலகம் நமக்கு ஏதோ ஒரு செய்தி சொல்கின்றது. 2010 இதை பாருங்கோ 20 இன் அரைவாசி 10 உலகின் பல வளங்கள் வாழ்வோடு விளையாடும் காலம். நம் வளங்களை பாதியாக்கும் காலம்.(இதை யாரும் சொல்லல நான் சும்மா ஒரு கணிப்பில் சொல்கின்றேன்.) உலகம் அழியுமோ? அழியாதோ? தெரியாது. இருக்கும் காலம் வரை எல்லோருடனும் உறவாடி உணர்வால் மகிழ்வாடி ஒற்றுமையாய் வாழ்வோம். அதுமட்டுமன்றி நமக்கு இயற்கை கொடுத்த வளத்தை வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை அழிகாமல் காப்போம். எத்தனை நாள் தான் பொறுப்பாள் இயற்கை தாய் நம் அட்டூழியங்களை.
Share:

Thursday, August 13, 2009

நானும் இடக்கை பழக்கம் கொண்டவனுங்கோ.

இன்றைய தினம் இடக்கை பழக்கம் கொண்டவர்களுக்கான நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இடக்கைப் பழக்கம் கொண்டவன் என்ற ரீதியில் எனக்கும் சந்தோசமே. இந்த உலகத்தில் எத்தனையோ விடயங்களுக்காக நாட்கள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இடது கை பழக்கம் உள்ளவர்களுக்காகவும் ஒரு நாள். எழுவது(இரண்டு கையாளும் ஓரளவிற்கு முடியும்) சாப்பிடுவதை தவிர என் பழக்கம் இடக்கையே.

என்ன காரணமோ தெரியாது, இடதுகையை பயன்படுத்துவதில் எனக்கு ஏதோ ஒரு பெருமை. ஆனால் சிலர் இந்த இடதுகைப் பழக்கத்தை விரும்புவதில்லை. உலகிலே ஆண்டவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையையும் சில முடியாத விடயங்களையும் கொடுக்கின்றான். அந்த வகையில் நாம் இடக்கையை ஒரு நல்ல கொடையாக எடுத்துக்கொண்டால் எங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

இடதுகைப் பழக்கவழக்கம் உள்ளவர்கள் பற்றிய சில விடயங்களை நண்பர் பிரபா தன் தளத்தில் http://prapaactions.blogspot.com/2009/08/blog-post_12.htmlஎழுதியுள்ளார். அதனையும் படித்துப்பாருங்கள். இடதுகைப் பழக்கம் உள்ள நண்பர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.
Share:

Saturday, July 4, 2009

உலகின் முதல் AC கடற்கரை உங்களுக்காக.

உலகிலேயே முதல் குளிரூட்டப்பட்ட(AC) கடற்கரை துபாயில் வரப்போகின்றது. உலக நாடுகள் எல்லாம் பொருளாதார சிக்கலில் சிக்கி சின்னாபின்னமாகும் போது கூட அசராத நாடுகளில் ஒன்று சவூதி அரேபியா. எனவேஅவர்களின் மற்றுமொரு சாதனையாகத்தான் இந்த அரிய முயற்சி எடுக்கப்படுகின்றது.

கடந்த 2008ஆம் ஆண்டு பிரமாண்டமான அருங்காட்சியகத்தோடு மிகப்பெரிய ஷாப்பிங் மால் ஒன்று திறந்துவைக்கப்பட்டது. அதிலே செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவு ஒன்றில் பல வீடுகள் கூட விற்பனைக்கு வந்திருக்கின்றன. இந்த நிலையிலே தான் பலேசோ வேர்சாஷ் ஹோட்டலுக்கு அருகில் கடற்கரை மணலுக்கு அடியிலே பைப்கள் மூலம் குளிரூட்டும் வசதி செய்யப்படுகின்றது. இதன்காரணமாக கோடைக்காலத்தில் கூட மணலின் வெப்பம் கட்டுப்படுத்தப்பட்டு நண்பகல் 12மணிக்கு கூட கடற்கரையில் நீங்கள் நிம்மதியாக படுத்தே தூங்கலாமாம்.

கோடை என்றாலே சவுதியில் வெயில் கொளுத்தும் ஐம்பது டிகிரிக்கு,ஆனால் பலேசா வெர்ஷாஷ் ஹோட்டலை சுற்றி இருக்கும் மணல் பகுதிகளோ சும்மா சில்லின்னு இருக்குமாம். ஆனால் இந்த வசதி இந்த ஆண்டோ அல்லது அடுத்த ஆண்ண்டோ தான் நடைமுறைக்கு வர வாய்ப்பிருப்பதாக சொல்கின்றார்கள்.

அப்படி நடைபெற்றால் உலகிலேயே முதலாவது குளிரூட்டப்பட்ட(AC) கடற்கரை என்னும் சாதனைப் பெயர் துபாய் கடற்கரைக்கு கிடைக்கும். உங்களுக்கும் ஆசையாய் இருக்கும் தானே ஒருமுறை போய்த்தான் பாருங்களேன்.
Share:

Friday, May 1, 2009

பலர்முன் நிர்வாணமாக தோன்ற தயாராகும் நடிகை.+ "தல"யின் பிறந்தநாள் ஸ்பெஷல்.+ மே தின வாழ்த்துக்கள்.


தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்ட அசல் நாயகன் தல அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு எல்லோரும் வாழ்த்தி ஓய்ந்த நேரத்தில் நான் வாழ்த்துகின்றேன்.(என் குரல் அவருக்கு தனியாக கேட்கட்டும் என்று.) தோல்விகள் கண்டாலும் தளராது வெற்றியை கொடுக்கும் தல ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள். அத்துடன் இலங்கைத் தமிழர்களுக்காக தன பிறந்தநாள கொண்டாட்டங்களை ரத்து செய்து எண்கள் துயரில் பங்கெடுத்த அவருக்கு இலங்கை தமிழர் சார்பில் நன்றிகள். 

உலகம் சுற்றுவதே தொழிலாளர்களால் தான். உழைத்து வாழும் உன்னத வர்க்கத்தின் உழைப்பிற்கும் முயற்சிக்கும் தலை வணங்கி என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். மே தினம் உங்களுக்கு மென்மேலும் சிறப்புகளை தர பிரார்த்திக்கின்றேன்.  

ஜெயம் ரவி நடித்த தாம் தூம் திரைப்படம் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அதில் நடித்த கங்கனாசெராவத் பலராலும் ரசிக்கப்பட்டவர். அழகும் சற்றே நடிக்கும் திறைமையும் கொண்ட இவர் தமிழ் சினிமாவை கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் ஏனோ கரை ஒதுங்கிவிட்டார். னால் புயல் எப்போது அடங்கி இராது என்பதற்கு அவரே இப்போது சாட்சியாக வருகின்றார்.

ஏற்கனவே ஒரு ஹிந்தி படத்தில் முக்கள் நிர்வாணமாக நடித்து ரசிகர்களை சூடு ஏற்றியவர். இப்போது தெலுங்கு ரசிகர்களுக்கு தன முழு விருந்தையும் படைக்க தயாராகின்றார். பூரி ஜெகன்னாத் இயக்கம் இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் தன பிறந்த மேனியுடன் முழு நிர்வாணமாக நடிக்க இருக்கிறார். அந்தக் காட்சிக்கு கட்டாயம் நிர்வாணமாக நடிக்கவேண்டும் என கேட்டவுடன் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்றுக்கொண்டு இப்போது அறுசுவை படையலுக்கு தயாராகிவிட்டார். 

இந்த காட்சியில் முழுக்க முழுக்க நிர்வாணமாக தொன்றபோகும் கங்கணாவுடன் வேறு எந்த நடிகரோ நடிகையோ தோன்றமாட்டாராம். முழுக்க முழுக்க கங்கனாவின் விருந்தாக இருக்கப்போகும் இந்தப்படம் தமிழிலும் வருமா என தெரியவில்லை. இருந்தாலும் நம்மவர்களுக்கு மொழியா முக்கியம். கங்கனா காட்டுவதை(மன்னிக்கணும் நடிப்பை) பார்க்க எல்லோரும் ஆவாலாக இருக்கின்றார்கள்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox