Friday, June 4, 2010

பண்ணித் தமிழ்.


தமிழ் மற்ற எந்த மொழிகளையும் விட சிறப்பானது என்று நாம் சொல்கின்றோம். தமிழர்களாகிய எங்களுக்கு எம் தாய் மொழி சிறப்பாய் இருப்பதை சொல்வதில் தப்பில்லை. ஆனால் நாம் இன்று நடக்கும் நடையை பார்த்தால் இப்படி சொல்ல நாம் தகுதியானவர்களா? அண்மைக்காலமாக நம் தமிழ் மொழியில் பல வேற்று மொழிகள் கலந்து வருகின்றன. இது கூட பரவாயில்லை நம் தமிழ் பண்ணித் தமிழ் ஆகிறதுதான் கவலை. என்ன குழப்பமாய் இருக்கா. கொஞ்சம் கீழே படியுங்கள் படித்த பின் உங்கள் மனச்சாடிசியை தொட்டுச் சொல்லுங்கள் பண்ணித் தமிழை வளர்ப்பதில் நீங்களும் ஒருவர் இல்லையா என்பதை.

Early Morning wake up பண்ணி
எழுந்திரிச்சு போய் brush பண்ணி
அதுக்கு பிறகு wash பண்ணி
அதுக்கு பிறகு Dress பண்ணி
முடிஞ்ச பிறகு Pray பண்ணி
அடுத்ததாய் eat பண்ணி

இவை எல்லாம் எல்லோருக்கும் பொதுவானவை இனி முதலில் ஒரு குடும்பத் தலைவனை பார்ப்போம்.

வந்த paper எல்லாம் read பண்ணி
officeக்கு போய் work பண்ணி
வேலை முடிஞ்சதும் sign out பண்ணி
வீட்டுக்கு வந்து மீண்டும் wash பண்ணி
பொண்டாட்டியோட நாலு வார்த்தை speak பண்ணி
முடிஞ்சால் பிள்ளைக்கு home work பண்ண help பண்ணி
அப்பிடியே போய் தூங்குவதில் முடிகின்றது ஒரு நாள்.

இனி ஒரு குடும்ப தலைவியின் செய்கை விட்ட இடத்தில் இருந்து.

பிள்ளைகளை ஒழுங்காய் வெளிக்கிடப் பண்ணி
அவர்களை பாடசாலைக்கு போகப்பண்ணி அல்லது drop பண்ணி
வீட்டு வேலைகளை சீக்கிரமே பண்ணி
பிள்ளைகள் வர முதல் lunch பண்ணி
drop பண்ணி இருந்தால் திருப்பி pick up பண்ணி
பிள்ளைகள் வந்தவுடன் சாப்பிட பண்ணி
மீண்டும் பிள்ளைகளை tution போகப் பண்ணி.
பக்கத்து வீட்டுக்கரரோட அலப்பறை பண்ணி
மீண்டும் கணவன் வர முன் மீதி வீட்டு வேலைகளை பண்ணி
கணவன் வந்தவுடன் tea பண்ணி
பிள்ளைகள் வந்தவுடன் அவர்களையும் welcome பண்ணி.
மீண்டும் dinner பண்ணி
பிள்ளைகளோடு time spend பண்ணி.
வெற்றிகரமாய் போய் தூங்குவாங்க

இதுவே ஒரு பாடசாலை போகும் பிள்ளையாக இருப்பின் விட்ட இடத்தில் இருந்து தொடருங்கள்.

schoolக்கு போய் classes attend பண்ணி
மீண்டும் வீடுவந்ததும் tution class attend பண்ணி
வீட்டுக்கு வந்து home work பண்ணி
பண்ணி பண்ணி களைச்சு போய் தூங்கிடுவாங்க.

இதுவே இப்படியென்றால் காதலர்களுக்கிடையில் எத்தனை பண்ணி இருக்கும் கற்பனை பண்ணி பாருங்கோ. கற்பனையில் பண்ணி போல பண்ணி வந்தால் நான் பொறுப்பில்லை.

இப்போ புரிந்திருக்குமே. நாம் ஒவ்வொருவரும் எப்படி தமிழை பண்ணி ஆக்கிக்கொண்டிருக்கின்றோம் என்று. என்ன செய்வது தன் மானம் மிக்க தமிழர்கள் பண்ணித்தமிழில் கட்டுண்டிருப்பது வேதனை தான். சிந்தித்து செயற்பட்டால் பண்பான தமிழ் பண்ணித்தமிழைக் கொன்றுவிடும்.

Share:

27 கருத்துரைகள்:

என்.கே.அஷோக்பரன் said...

:-D நல்ல சி்ந்தனை!
வாழ்த்துக்கள்!

சௌந்தர் said...

பண்ணி தமிழ் விளக்கம் நல்ல இருக்கு.
வார்த்தைகளை நன்றாக உபயோக படுத்த வேண்டும்

கன்கொன் || Kangon said...

கண்டிக்கிறேன்...
நான் உப்பிடி இல்ல.... :P


எண்டாலும் பல இடங்களில் இதுவே பொதுவானதாக அமைந்துவிட்டது என்பதையும், இதுவே நாகரிகம் என்றாவாறாக கருதப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற உறைக்கும் உண்மையும் ஏற்றுக் கொள்ளப்படவேண்டியன.... :(


நல்ல பதிவு...

சௌந்தர் said...

பண்ணி தமிழ் விளக்கம் நல்ல இருக்கு.
வார்த்தைகளை நன்றாக உபயோக படுத்த வேண்டும்

Bavan said...

பதிவைப்பார்த்ததும் லிங்க கிளிக் பண்ணி
அப்புறம் பதிவை ரீட் பண்ணி
தமிழ்மணத்தில வோட் பண்ணி
தமிழிஸ்லயும் வோட்பண்ணி இப்ப பின்னூட்டமும் பண்ணி
அப்புறம் போலோ அப் கமண்டை கிளிக் பண்ணி
பப்ளிஸ் யுவர் கமண்டை கிளிக் பண்ணி,
அப்புறம் இந்த விண்டோவை குளோஸ் பண்ணி...


ஸ்ஸ்ஸ்சப்பாஆஆஆ...
கலக்கல் தலிவா...:)))

சௌந்தர் said...

அட பவன் கமெண்ட் சூப்பர்

பதிவைப்பார்த்ததும் லிங்க கிளிக் பண்ணி
அப்புறம் பதிவை ரீட் பண்ணி
தமிழ்மணத்தில வோட் பண்ணி
தமிழிஸ்லயும் வோட்பண்ணி இப்ப பின்னூட்டமும் பண்ணி
அப்புறம் போலோ அப் கமண்டை கிளிக் பண்ணி
பப்ளிஸ் யுவர் கமண்டை கிளிக் பண்ணி,
அப்புறம் இந்த விண்டோவை குளோஸ் பண்ணி...

nimalesh said...

baas kalakufying pannitinga.....lol

வந்தியத்தேவன் said...

ஹாஹா எல்லோரும் பொதுவாக பயன்படுத்தும் இணைப்புச் சொல் பண்ணி. அடுத்து நமீதாவின் மச்சான்ஸ் தமிழ் பற்றியும் எழுதவும்.

வந்தியத்தேவன் said...

ஹாஹா எல்லோரும் பொதுவாக பயன்படுத்தும் இணைப்புச் சொல் பண்ணி. அடுத்து நமீதாவின் மச்சான்ஸ் தமிழ் பற்றியும் எழுதவும்.

ARV Loshan said...

ஆகா.. என்ன சிந்தனைடா..

இப்பிடி work பண்ணாம..
study பண்ணாம
வெட்டி வேளை மட்டும் பண்ணிக் கொண்டு வீட்டில் இருந்தால்
இப்பிடியெல்லாம் கோக்கு மாக்கு சிந்தனையெல்லாம்
think பண்ணாமலேயே வரும்..

இப்போ என்ன பண்ணலாம்..

நல காலம் பன்னித் தமிழ் என்று சொல்லாமல் விட்டாய்..
ஏதோ பண்ணு...


பவன் கமெண்ட் சூப்பர் // yeah yeah

ஹேமா said...

சதீஷ்....பண்ணித் தமிழ்.என்னடா இப்பிடி ஒரு தமிழ் இருக்குமா என்று வந்தால்..அசத்தல் தமிழ் !

நான் பார்த்த மட்டில் எங்கள் நாட்டில் உள்ளவர்கள் அதாவது ஊரில் வசிப்பவர்கள்தான் இப்படிப் பேசுகிறார்கள்.தொடர்பவர்கள் தமிழ்நாட்டுத்தமிழர்கள்.

புலம்பெயர்ந்த ஈழத்தவர்கள் இப்படிப் பேசுவது குறைவென்றே சொல்வேன்.
நான் இன்னும் சுத்தத் தமிழ்தான்.

Vathees Varunan said...

என்னா ஒரு"பண்ணி" சிந்தனை...
எப்புடி உங்களால மட்டும் இப்புடியானதுகள "பண்ணி" க்கொண்டு உலகத்தில இருக்க முடியுது...

சதீஷ் விடிக்காலை எழும்பி
Brush பண்ணி
கணணியை ON பண்ணி
இதைத்தான் பண்ணுறியளே


ஆனாலும் யோசிக்க வைச்சுட்டீயளே...:)

Subankan said...

இக்கி இக்கி, நல்லாத் திங் பண்ணுறாங்கப்பா

balavasakan said...

நைஸ் போஸ்ட்..

நமீதாவின் மச்சான்...

ஓ,,அவர்தானே...

யோ வொய்ஸ் (யோகா) said...

வெரி குட் போஸ்ட் யா. ஐ லைக் வெரி மச் யா

SShathiesh-சதீஷ். said...

@என்.கே.
அஷோக்பரன்


நன்றி அண்ணே

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

நீங்கள் இப்பிடி இல்லை என்றது சந்தோசம்....நாகரிகம் என நஞ்சை உண்பது சரியா?

SShathiesh-சதீஷ். said...

@soundar

நன்றி...எதையுமே பார்த்து தெரிந்து உபயோகப்படுத்தினால் நல்லம் தானே

SShathiesh-சதீஷ். said...

@Bavan

இவ்வளவு பண்ணியா?

நன்றி பண்ணி
சாரி நன்றி அண்ணே

SShathiesh-சதீஷ். said...

@nimalesh

அவ்வ்வ்வ்வ்வ்வ் நன்றி இப்பிடி ஏதும் எழுதினால் தான் வாரிங்க..

SShathiesh-சதீஷ். said...

@nimalesh

அவ்வ்வ்வ்வ்வ்வ் நன்றி இப்பிடி ஏதும் எழுதினால் தான் வாரிங்க..

SShathiesh-சதீஷ். said...

@வந்தியத்
தேவன்


மாமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

SShathiesh-சதீஷ். said...

@LOSHAN

அண்ணே பண்ணி உங்கள் கையிலும் விளையாடுதோ? ம்ம்ம்ம்
வருகைக்கு நன்றி

SShathiesh-சதீஷ். said...

@ஹேமா

நீங்கள் சுத்த தமிழ் பேசுவதற்கு என் வாழ்த்துகள். ஆனால் இப்போது இப்படித்தமிலை நாம் அடிக்கடி கேத்கமுடிகின்றது. அதுதான் கொடுமை

SShathiesh-சதீஷ். said...

@Subankan

இக்கி இக்கி நன்றி

SShathiesh-சதீஷ். said...

@Balavasakan

நமீதாவின் மச்சான் என அழைத்தது சந்தோசம்...ஆனால் அவருக்கு மச்சான் அதிகமே..

SShathiesh-சதீஷ். said...

@யோ வொய்ஸ் (யோகா)

தாங்க்ஸ் யா

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive