Saturday, July 17, 2010

3 இடியட்ஸ்சில் ஷங்கரின் தெரிவு சித்தார்த்,ஜீவா,விஜய்?அண்மைக்காலமாக தமிழ் சினிமாவில் பரபரப்பாக இருக்கும் ஒரு விடயம் 3 இடியட்ஸ் திரைப்படம் தான். என் முன்னைய பதிவில் கூட இதை பற்றி இட்டு உங்கள் கருத்தை கேட்டிருந்தேன். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் தமிழ் பதிப்பு பற்றி இன்னுமொரு பரபரப்பு செய்தி வெளிவந்துள்ளது. நேற்றைய தினம் ஒரு இணையதளத்தில் ஷங்கர் இந்த படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற நிலையில் இன்றைய தினம் பிஹைண்ட்ஸ் வூட்ஸ் தளத்தில் இன்னொரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

பொதுவாக தன் சொந்த படங்களை சீரியஸ் ஜோலி என கலந்து கட்டிக் கொடுத்து வந்த ஷங்கர் ஒரு ரீமேக் படத்தை இயக்க ஒப்புக்கொள்வாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதையே என் முன்னைய பதிவில் ஷங்கர் ரீமேக்கும் படம் படுத்தாலும் படுக்கலாம் என சொல்லி இருந்தேன். அதேபோல அஜித் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு குறைவு என்றும் சொல்லி இருந்தேன். இந்த நிலையில் ஷங்கர் தான் இந்த திரைப்படத்தை இயக்கப்போகின்றார் என்றால் அவர் தெரிவு யார் என்பதற்கு இப்போது ஓரளவு விடை கிடைத்துள்ளது.

விஜய் அமீர்கான் வேடத்தில் நடிக்கும் அதேநேரம் பாய்ஸ் திரைப்படத்தில் (இதுவும் ஷங்கர் இயக்கிய படம்) நடித்த சித்தார்த் மூன்றாவது நபராக நடிக்கும் வாய்ப்பை ஷங்கர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி இவர்கள் மூவரும் தான் என்னும் பட்சத்தில் ஜீவா, மாதவன் நடித்த வேடத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்தாகும். எது எப்படியோ இந்த படம் பற்றிய செய்திகள் இன்னும் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில் ஷங்கரோ அல்லது விஜயோ அல்லது ஜெமினி பிலிமா தம வாய் திறந்து இந்த படம் பற்றி சொன்னால் தான் எந்த செய்தியையும் உறுதிப்படுத்த முடியும்.
Share:

13 கருத்துரைகள்:

Vathees Varunan said...

செய்திகள் நன்றாகத்தான் இருக்கு. சங்கர் விஜயிடமிருந்து நல்ல ஒரு நடிப்பை பெறுவார் என்று தான் நினைக்கிறேன். அர்ஜினையே நடிக்க செய்தவருக்கு விஜயை நடிக்க வைக்க முடியாதா என்ன? பொறுத்திருந்து பார்ப்போம்
3 இடியட்ஸ் எப்படி இருக்கப்போகின்றது என்று

anuthinan said...

ஆனாலும் ஒரு விஜய் ரசிகராக அவரை எப்படியாவது தொல்வியில்லிருந்து வெளியில் கொண்டு வந்து விட வேண்டும் என்ற உங்கள் அயராத முயற்சிக்கு எனது பாராட்டு குருவே!!

Subankan said...

:))))))))

யோ வொய்ஸ் (யோகா) said...

////ஆனாலும் ஒரு விஜய் ரசிகராக அவரை எப்படியாவது தொல்வியில்லிருந்து வெளியில் கொண்டு வந்து விட வேண்டும் என்ற உங்கள் அயராத முயற்சிக்கு எனது பாராட்டு குருவே!!///

same blood

சி.பி.செந்தில்குமார் said...

விஜய் இதில் நடிப்பார் என எனக்கு தோன்றவில்லை..ஏன்னா அவர் ரேஞ்சே வேற..பல மொக்கை இயக்குனர்கள் அவருக்காக காத்திருக்கிறார்கள்

எப்பூடி.. said...

//அண்மைக்காலமாக தமிழ் சினிமாவில் பரபரப்பாக இருக்கும் ஒரு விடயம் 3 இடியட்ஸ் திரைப்படம் தான்//

ரொம்ப நாளைக்கப்புறம் மனம் விட்டு சிரிச்சேன், நன்றி தல.

ILA (a) இளா said...

கற்பனைதான். சித்தார்த் நடிப்பிலிருந்து விலகினது உங்களுக்கு தெரியாது போலிருக்கு. சித்தார்த் பத்தி தேடிப்பாருங்க

ILA (a) இளா said...

கற்பனைதான். சித்தார்த் நடிப்பிலிருந்து விலகினது உங்களுக்கு தெரியாது போலிருக்கு. சித்தார்த் பத்தி தேடிப்பாருங்க

SShathiesh-சதீஷ். said...

@Subankan

பாரடா வந்திட்டால் ஸ்மைல்புரி சிங்காரம்

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

நீங்கள் என்ன சுபாங்கன் தாத்தாவின் வாரிசா

SShathiesh-சதீஷ். said...

@சிபி.செந்தில்குமார்

உங்கள் நினைவின் ரேஞ்சே வேற தலைவா. எல்லாம் ஒரு நாள் மாறும் என்பது போல இப்போ விஜய் நடிக்கப்போகின்றார் என சொல்கின்றீர்கள்.

SShathiesh-சதீஷ். said...

@எப்பூடி..

ஹா ஹா சிரிச்சால் சந்தோசம். உங்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் அதில் தான் என்னும் சொல்ல்லை சேர்த்தது என் தவறு ஆனால் இந்த பட செய்திகள் எந்திரனை விஞ்சும் என கோடம்பாக்கமே சொல்கின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்

SShathiesh-சதீஷ். said...

@ILA(@)இளா

ஐயகோ தேடினால் வரும் செய்தி உண்மையா? அவர் நடிப்பில் இருந்து விலகவில்லை அவரின் அண்மைய டுவீட்டுக்கள் அதை சொல்லும்.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive