Sunday, July 18, 2010

ரஜினி என் குரு-விஜய் பல்டி+லோஷன் அண்ணாவுக்கு விருது.

நடிகர் விஜய்க்கு இது போதாத காலம். இவனெல்லாம் இனி சினிமாவுக்கு தேவையா என்ற ரீதியில் இன்று விஜய் நிலை. நடிக்கத்தேரியாது. கெட் அப் மாற்றுவதில்லை. பத்து படத்தில் ஒரே மாதிரி நடிப்பது என்ற விமர்சனங்கள் ஓரளவுக்கு உண்மையாக இருக்கும் நிலையில் இப்போது சித்திக், ராஜா என்று நம்பிக்கை தரும் இயக்குனர்களுடன் விஜய் சேர்ந்திருக்கும் நிலையில் இந்த களங்கங்கள் கடந்து மீண்டு எழுவாரா? அல்லது மீண்டும் அதே குட்டையில் இந்த இயக்குனர்களையும் கொண்டு சென்று தன்னையும் கேவலப்படுத்தி அவர் ரசிகர் எம்மையும் அவமானப்படுத்துவாரா தெரியவில்லை.

ஒரு விஜய் ரசிகர் என்றாலும் விஜயின் இந்த பெட்டியில் இருக்கும் பல்டி எனக்கும் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் தன் குரு ரஜினி என்றவர் அதன் பின் எம்.ஜி.ஆர் பக்கம் சாய்ந்து விட்டு. மீண்டும் இப்போது தன் குரு ரஜினி என்கிறார். வேண்டாம் விஜய் இந்த பல்டி. இது உங்களை மட்டுமல்லா உங்கள் ரசிகர் என சொல்லும் எமக்கும் கேவலம். உங்கள் முடிவில் நீங்கள் தான் தெளிவாய் இருக்க வேண்டும். ஆலோசனை கேட்பது சரியானது ஆனால் முடிவை சரியாய் தெளிவாய் நீங்கள் எடுங்கள் அதுவே நல்லது. இன்னும் நம்புகின்றோம் அந்த நம்பிக்கையை காப்பாற்றுவீர்கள் என்று.

பி.கு: இந்த பதிவை தயார் செய்து கொண்டிருந்த வேளை கொழும்பு பல்கலைக்கழகம் வழங்கும் இந்த வருடத்துக்கான சிறந்த பிளாக்கர் என்ற விருதை லோஷன் அண்ணா வென்று இருக்கின்றார். ரொம்ப சந்தோசம் எங்களுக்கும். அண்ணே ட்ரீட் வேணும். முக்கியமான விஷயம். மீண்டும் ஒருதடவை விருதை வென்ற அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். இன்னொரு விஷயம் இந்த பதிவுக்கு நான் அவரிடம் திட்டு வாங்குவது உறுதி ஏன் தெரியுமா? முடிந்தால் யாரும் சொல்லுங்கள்.
=>


=>


=>


=>


=>


=>


=>


=>


=>


வேற ஒன்றும் இல்லை விஜய் பற்றிய பதிவுடன் தன்னையும் போட்டிட்டாயே என்று கோபப்படுவார். ஏனென்றால் விஜய் மீது அவருக்கு ரொம்ப பாசம். அப்பிடி கொபிச்சால் உங்களுக்கு தனி பதிவு போட்டு கும்மிடமாட்டோம். எவ்வளவோ பண்றம் இதை பண்ண மாட்டமா?


Share:

70 கருத்துரைகள்:

கன்கொன் || Kangon said...

விஜய் - அவ்வ்வ்வ்...
எப்பயய்யா திருந்தப் போறீங்கள்? :(
விடுங்கோ... :(
விஜய் வாழ்க...
இளைய தளபதி வாழ்க... :)

லோஷன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள். :)

Vathees Varunan said...

:)

Vathees Varunan said...

விஜய் திருந்தமாட்டார். அத்தோடு மேலும் மேலும் தன்னுடைய இரசிகர்களுக்கு அவமானத்தினையே தந்துகொண்டிருப்பார். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள். நீங்கள்(அதாவது விஜயின் இரசிகர்கள்) எப்ப திருந்திறியளோ அப்பதான் விஜயும் திருந்துவார். சிலவேளை அவருடைய அப்பாவால அப்பவும் திருந்தாமல் விடுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகின்றது.

லோஷன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளுகிறேன்

Ramesh said...

லோஷனுக்கு வாழ்த்துக்கள்
மேலே என்னவல்லாம் எழுதியிருக்க நான் பார்த்தும் பார்க்காமலும் :)

Bavan said...

விஜய் - NO COMMENTS

லோஷன் அண்ணாக்கு வாழ்த்துக்கள்...:)))

anuthinan said...

விஜய் வேனுமேன்டாலும் ரஜனி தன் குரு என்று சொல்லி கொண்டு திரியட்டும்!!!

ஆனா, ரஜனி தனது சிஷ்யனாக தலையைத்தான் ஏற்று கொண்டு இருக்கிறார்.

ஆனாலும், அண்ணா விஜய் எப்போதுமே தன் ரசிகர்கள் மனதை அறிந்து நடப்பவர் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்!!!


லோசஹ்ன் அண்ணாவுக்கு எனது வாழ்த்துக்கள்!!!!! (ட்ரீட் வேணும்)

Vathees Varunan said...

பவன் சதீஷிண்ட பதிவுக்கு கட்டாயம் அதுவும் விஜயை பற்றி ஏதாவது பின்னுட்டல் இடவேண்டும் இப்படி No Comments என்று சொல்லப்படாது மரியாதையாக வந்து ஏதாவது சொல்லிவிட்டு போகவும்
இது எச்சரிக்கையல்ல கட்டளை!

கன்கொன் || Kangon said...

// ஆனா, ரஜனி தனது சிஷ்யனாக தலையைத்தான் ஏற்று கொண்டு இருக்கிறார். //

ஹா ஹா...
அடுத்தவர்....
முடியல....

ஏன் இப்பிடி எல்லாரும்? :(


// ஆனாலும், அண்ணா விஜய் எப்போதுமே தன் ரசிகர்கள் மனதை அறிந்து நடப்பவர் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்!!! //

தல எதச் செய்ய முதலும் உங்களுக்கு அலைபேசியில அழைச்சிற்றோ செய்யிறவர்? :-o

Bavan said...

@வதீஸ் அண்ணா - ஒரு தடவை முடிவு பண்ணிட்டம்னா என் பேச்ச நானே கேக்கமாட்டேங்ணா..:P

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan S

நான் இப்போதே சூப்பர் ஸ்டார் தான் வேண்டுமேண்டால் அடுத்த மக்கள் திலகம் என சொல்லுங்கள் என்று ஒருமுறையும் பின்னர் சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டுமெனவும் கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்களுக்கு முன்னரே சொன்னவர் தான் தல.

அனுதிணன் இன்னொரு முக்கியவிசயம் உங்களுக்கு தெரியுமா? எம்.ஜி.ஆர் தன் சிஷ்யனாக வாரிசாக அறிசித்தது பாக்கியராஜை ஆனால் அடுத்ததாய் வந்தது யாரென தெரியும் தானே. விஜயோ அஜித்தோ இல்லை வேறு ஒருவரோ தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ரஜினியால் கூட சொல்ல முடியாது ஏன் ரஜினி வளர்க்க கூட முடியாது. அதை தீர்மானிப்பது நான் நீங்கள் போன்ற ரசிகன் தான். இதை மறக்க கூடாது.

கன்கொன் || Kangon said...

ஆ!
இப்ப அனுதினன் நேரம்...

வந்து விளக்கமளியுங்கள்....
வாருங்கள்...

தலயா தளபதியா?
போர் போர் போர்...

Subankan said...

லோஷன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்:)

கன்கொன் || Kangon said...

விஜய்க்கு வாழ்த்துத் தெரிவிக்காத சுபாங்கன் அண்ணாவிற்குக் கண்டனங்கள்.

#அகில உலக விசய் இரசிகர் மன்றத்துக்கு பக்கத்து வீட்டில் இருப்போர் சங்கம்.

anuthinan said...

//ஹா ஹா...
அடுத்தவர்....
முடியல....

ஏன் இப்பிடி எல்லாரும்? :(//

:))))))

//தல எதச் செய்ய முதலும் உங்களுக்கு அலைபேசியில அழைச்சிற்றோ செய்யிறவர்? :-0//

அவர் எந்த காலத்திலும் எதையும் சொல்லி கொண்டு செய்வது இல்லை என்பதை கவனிக்கவும்!

//அனுதிணன் இன்னொரு முக்கியவிசயம் உங்களுக்கு தெரியுமா? எம்.ஜி.ஆர் தன் சிஷ்யனாக வாரிசாக அறிசித்தது பாக்கியராஜை ஆனால் அடுத்ததாய் வந்தது யாரென தெரியும் தானே. விஜயோ அஜித்தோ இல்லை வேறு ஒருவரோ தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ரஜினியால் கூட சொல்ல முடியாது ஏன் ரஜினி வளர்க்க கூட முடியாது. அதை தீர்மானிப்பது நான் நீங்கள் போன்ற ரசிகன் தான். இதை மறக்க கூடாது//

உங்கள் கருத்துக்கு நான் அடிபநிகிறேன் குருவே!!! ரஜனி சிஷ்யனாக ஏற்று கொண்டு உள்ளார் என்று சொன்னேன் தவிர, அவர் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று எங்குமே சொன்னது இல்லை.

//ஆ!
இப்ப அனுதினன் நேரம்...

வந்து விளக்கமளியுங்கள்....
வாருங்கள்...
//

உங்க எல்லாருக்கும் விளக்கம் சொல்லி சொல்லியே ............!

கன்கொன் || Kangon said...

// அவர் எந்த காலத்திலும் எதையும் சொல்லி கொண்டு செய்வது இல்லை என்பதை கவனிக்கவும்! //

{{ சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டுமெனவும் கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்களுக்கு முன்னரே சொன்னவர் தான் தல. }}

அப்ப இது?
இதைச் சொல்லித்தானே இருக்கிறார்?

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan S

தல சொல்வதில் எண்டால விஜய் சொல்லி செய்யணுமா?

தலையை சிஷ்யனாக ரஜினி ஏற்றாரா எனக்கு இரண்டு சந்தேகம். ஒன்று முணர் விஜய் படங்கள் வெல்லும் போது விஜயை தூக்கி வைத்திருந்தார் ரஜினி அப்புறம் விக்ரம் நடித்த சாமி விழாவில் பேசியது மறந்து போச்சா? விஜயையும் விக்ரமையும் பார்க்க தன்னையும் கமலை போலவும் இருக்கு என ரஜினி சொல்ல விக்ரம் சொன்னார் விஜய் ரஜினியாக இருந்து விட்டு போகட்டும் என்று. அப்போ இதுக்கு என்ன அர்த்தம்..


விஜய் பாம் வரும் போது விஜயும் தனுஷும் மொத வழி செய்தது யார்?

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

//// அவர் எந்த காலத்திலும் எதையும் சொல்லி கொண்டு செய்வது இல்லை என்பதை கவனிக்கவும்! //

{{ சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டுமெனவும் கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்களுக்கு முன்னரே சொன்னவர் தான் தல. }}

அப்ப இது?
இதைச் சொல்லித்தானே இருக்கிறார்?//

கோபி நீங்கள் தப்பாக விளங்கி விட்டீர்கள் அவர் சொல்லிக்கொண்டு செய்வதில்லை. சொன்னார் ஆனால் செய்யவில்லை தானே

anuthinan said...

//தலையை சிஷ்யனாக ரஜினி ஏற்றாரா எனக்கு இரண்டு சந்தேகம். ஒன்று முணர் விஜய் படங்கள் வெல்லும் போது விஜயை தூக்கி வைத்திருந்தார் ரஜினி அப்புறம் விக்ரம் நடித்த சாமி விழாவில் பேசியது மறந்து போச்சா? விஜயையும் விக்ரமையும் பார்க்க தன்னையும் கமலை போலவும் இருக்கு என ரஜினி சொல்ல விக்ரம் சொன்னார் விஜய் ரஜினியாக இருந்து விட்டு போகட்டும் என்று. அப்போ இதுக்கு என்ன அர்த்தம்..//

அண்ணா விஜயின் வெற்றியின் போது ரஜனி தூக்கி வைத்து கொண்டாடி இருக்கலாம். விக்க்ரம்முக்கு ஒரு விழாவில் சொல்லி கூட இருக்கலாம்.

ஆனால், தோல்வியில் கூட அஜித் கூட இருந்தவர் ரஜனி. பில்லாவில் அஜித்தி நடிக்க அனுமதித்தவர் அவர். ஏன்!!! அஜித்தின் எந்த விழாவையும் தவற விடுவதில்லை.

Vathees Varunan said...

அடுத்த Supre Star நாற்காலி அஜித்துக்கா விஜய்கா? சூடான விவாதம்...

கன்கொன் || Kangon said...

அவ்வ்வ்வ்...
ஏன் இப்பிடி?

ரஜினி என்பவர் ஒரு நபர்.
விஜய் என்பவர் இன்னொரு நபர்.
அஜித் என்பவர் இன்னொருவர்.

இவர்கள் யாருக்கும் சுயம் கிடையாதா?
தனித்தன்மை கிடையாதா?

அவர்களுக்குத்தான் கிடையாது என்றால் உங்களுக்கு கிடையாதா?

anuthinan said...

//{{ சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டுமெனவும் கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்களுக்கு முன்னரே சொன்னவர் தான் தல. }}

அப்ப இது?
இதைச் சொல்லித்தானே இருக்கிறார்?////

அதை பிழை என்று ஒத்து கொண்டுதான் தல கிடத்தட்ட ஏழு வருடங்கள் வரை ஊடகங்களில் மூன் வருவதில்லை. அப்படி வந்த போது கூட விஜய் தொலைகாட்சியில் விளக்கமும் தந்து இருந்தார்.

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan S

//அண்ணா விஜயின் வெற்றியின் போது ரஜனி தூக்கி வைத்து கொண்டாடி இருக்கலாம். விக்க்ரம்முக்கு ஒரு விழாவில் சொல்லி கூட இருக்கலாம்.

ஆனால், தோல்வியில் கூட அஜித் கூட இருந்தவர் ரஜனி. பில்லாவில் அஜித்தி நடிக்க அனுமதித்தவர் அவர். ஏன்!!! அஜித்தின் எந்த விழாவையும் தவற விடுவதில்லை.
//

அஜித் தண்ணிப் போல் எந்த பின்னணியும் இல்லாமல் ஒரு இடத்துக்கு வந்துள்ளார் என்பதும் விஜய் தன்னை விட்டு எம்.ஜி.ஆர் பக்கம் தாவியது தனுசை வளர்ப்பது போன்ற காரணங்களே ரஜினி அஜித்தை பகடையாக பயன்படுத்த காரணம். அஜித்துக்கு ஒரு திறமை உண்டு அதற்க்கு ரஜினி தேவை இல்லை அவர் தான் சூப்பர் ஸ்டார் என சொல்ல.

நீங்கள் சொல்வது போல ரஜினி அஜித் விழாவுக்கு போனால் அவர் தான் அடுத்த ரஜினி என்றால் விஜய் அடுத்த கமலா காரணம் தசாவதாரத்துக்கு விஜய் போக கமல் போக்கிரிக்கு வந்தார் இன்றும் கமல் ஆதரவு விஜய்க்கு உண்டு. எல்லாம் அரசியல் ஐயா.

கன்கொன் || Kangon said...

{{ ஆனால், தோல்வியில் கூட அஜித் கூட இருந்தவர் ரஜனி. பில்லாவில் அஜித்தி நடிக்க அனுமதித்தவர் அவர். ஏன்!!! அஜித்தின் எந்த விழாவையும் தவற விடுவதில்லை. }}

படத்தை இயக்குவது இயக்குனரா நடிகரா? #சந்தேகம்.
ஒரு படத்தின் உரிமை நடிகரிடமிருக்குமா இல்லை தயாரிப்பாளரிடமிருக்குமா? #சந்தேகம்2

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

//இவர்கள் யாருக்கும் சுயம் கிடையாதா?
தனித்தன்மை கிடையாதா?//

மீண்டும் சொல்கின்றேன் சுயம் என்று யாரும் இல்லை. தனித்தன்மை இருக்கும்.

Vathees Varunan said...

நான் அறிய தயாரிப்பாளருக்கே அனைத்து உரிமையும் இருப்பதாக நினைக்கிறேன். ஆனாலும் அதற்குள்ளுமம் பல சிக்கல்கள் இருக்கிறது

anuthinan said...

//நீங்கள் சொல்வது போல ரஜினி அஜித் விழாவுக்கு போனால் அவர் தான் அடுத்த ரஜினி என்றால் விஜய் அடுத்த கமலா காரணம் தசாவதாரத்துக்கு விஜய் போக கமல் போக்கிரிக்கு வந்தார் இன்றும் கமல் ஆதரவு விஜய்க்கு உண்டு. எல்லாம் அரசியல் ஐயா. //

விஜய்க்கு கமல் செய்வது கைம்மாறு!!! அவர் வந்தார் இவர் போனார். ரஜனி அஜித்துக்கு அப்படி இல்லை!!

//அஜித் தண்ணிப் போல் எந்த பின்னணியும் இல்லாமல் ஒரு இடத்துக்கு வந்துள்ளார் என்பதும் விஜய் தன்னை விட்டு எம்.ஜி.ஆர் பக்கம் தாவியது தனுசை வளர்ப்பது போன்ற காரணங்களே ரஜினி அஜித்தை பகடையாக பயன்படுத்த காரணம். அஜித்துக்கு ஒரு திறமை உண்டு அதற்க்கு ரஜினி தேவை இல்லை அவர் தான் சூப்பர் ஸ்டார் என சொல்ல. //

:)))

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan S

////{{ சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டுமெனவும் கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்களுக்கு முன்னரே சொன்னவர் தான் தல. }}

அப்ப இது?
இதைச் சொல்லித்தானே இருக்கிறார்?////

அதை பிழை என்று ஒத்து கொண்டுதான் தல கிடத்தட்ட ஏழு வருடங்கள் வரை ஊடகங்களில் மூன் வருவதில்லை. அப்படி வந்த போது கூட விஜய் தொலைகாட்சியில் விளக்கமும் தந்து இருந்தார்//

சொன்னது சொன்னது தானே. அதற்க்கு பிறகு விளக்கம் கொடுத்தல் என்னவென்று சொல்வது. கருணாநிதி இரங்கல் கவிதை படித்து விட்டு அதை வேறு ஒருவர் செய்தால் அவர்களை பிடித்து உள்ளே போடுவது போல இருக்கு இது.

அப்புறம் பில்லாவில் அஜித் இல்லை அர்ஜூன் நடிக்க கேட்டிருந்தாலும் ரஜினி ஓம் என சொல்லி வாழ்த்தி இருப்பார். காரணம் அது அவருக்கு பெருமை. ரஜினி இன்று தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு உச்ச நடிகர் அவர் எல்லோரையும் வாழ்த்துவது அவர் பெருந்தன்மை

anuthinan said...

//அவ்வ்வ்வ்...
ஏன் இப்பிடி?

ரஜினி என்பவர் ஒரு நபர்.
விஜய் என்பவர் இன்னொரு நபர்.
அஜித் என்பவர் இன்னொருவர்.

இவர்கள் யாருக்கும் சுயம் கிடையாதா?
தனித்தன்மை கிடையாதா?

அவர்களுக்குத்தான் கிடையாது என்றால் உங்களுக்கு கிடையாதா//

ஏன் திடீரெண்டு சீரியசுக்கு மாறிரிங்க!!! இங்காவது பேசுவோமே!!!

SShathiesh-சதீஷ். said...

@வதீஸ்-Vathees

//நான் அறிய தயாரிப்பாளருக்கே அனைத்து உரிமையும் இருப்பதாக நினைக்கிறேன். ஆனாலும் அதற்குள்ளுமம் பல சிக்கல்கள் இருக்கிறது //

அப்போ அனுதிணன் சொல்கின்றார் ரஜினி தான் பில்லாவுக்க் அனுமதி வழங்கினார் என்று.

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan S

ஒன்று நினைவில் கொள்க ரஜினி கையால் இசை தட்டு வெளியிட வேண்டுமென எண்ணி முழுமையாய் முடிக்காமல் அவர் வீட்டில் வைத்து வெளியிட்டனர்.

ஜக்குபாய் படம் ரஜினி நடிக்க இருந்து பின் சரத் நடித்த படம் அந்த படத்துக்கே ரஜினி ஆறுதல் விழாவில் சொன்னதை வெட்டி ஒட்டி விளம்பரம் செய்த உலகம் ஐயா இது அப்படி இருக்கையில் ரஜினி நடித்த படத்தை விடுமா என்ன

anuthinan said...

//படத்தை இயக்குவது இயக்குனரா நடிகரா? #சந்தேகம்.
ஒரு படத்தின் உரிமை நடிகரிடமிருக்குமா இல்லை தயாரிப்பாளரிடமிருக்குமா? #சந்தேகம்//

இயக்குவது இயக்குனர். பெரிய நடிகர்களின் படத்தை ரீமேக் செய்வது சாதாரண காரியம் அல்லவே!!

உரிமை தயாரிப்பாளரிடம் இருக்கும். கருத்துகளை யார் வேணுமானாலும் சொல்லலாம். அதனால்,நடிகரிடமும் அனுமதி கேக்கபடும்

கன்கொன் || Kangon said...

@வதீஸ் அண்ணா:

அப்ப பில்லா (ரஜினியின்) இன் உரிமை யாரிடம்?
தயாரிப்பாளரிடம் தானே?
அப்ப தயாரிப்பாளர் தானே விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்?

கன்கொன் || Kangon said...

{{ அடுத்த Supre Star நாற்காலி அஜித்துக்கா விஜய்கா? சூடான விவாதம்... }}

தனித்தன்மை அதிகம் இல்லாதது யார்?
விசயா? அசித்தா?
அதுதான் இங்கு நடக்கிறது.

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan S

////நீங்கள் சொல்வது போல ரஜினி அஜித் விழாவுக்கு போனால் அவர் தான் அடுத்த ரஜினி என்றால் விஜய் அடுத்த கமலா காரணம் தசாவதாரத்துக்கு விஜய் போக கமல் போக்கிரிக்கு வந்தார் இன்றும் கமல் ஆதரவு விஜய்க்கு உண்டு. எல்லாம் அரசியல் ஐயா. //

விஜய்க்கு கமல் செய்வது கைம்மாறு!!! அவர் வந்தார் இவர் போனார். ரஜனி அஜித்துக்கு அப்படி இல்லை!//

ஹா ஹா அது ஆவது கைம்மாறு என கொள்வோம். அப்போ இது அக்கறையா? ரஜினி உண்மையில் அஜித் மேல் அக்கறை என்றால் ஏன் தன் பட விழாக்களுக்கு அழைக்கவில்லை. சந்திரமுகிக்கு விஜய் வந்தார். அஜித் வந்தாரா? ஏனுன்கையா இது...

anuthinan said...

//ஒன்று நினைவில் கொள்க ரஜினி கையால் இசை தட்டு வெளியிட வேண்டுமென எண்ணி முழுமையாய் முடிக்காமல் அவர் வீட்டில் வைத்து வெளியிட்டனர்.

ஜக்குபாய் படம் ரஜினி நடிக்க இருந்து பின் சரத் நடித்த படம் அந்த படத்துக்கே ரஜினி ஆறுதல் விழாவில் சொன்னதை வெட்டி ஒட்டி விளம்பரம் செய்த உலகம் ஐயா இது அப்படி இருக்கையில் ரஜினி நடித்த படத்தை விடுமா என்ன//

ஏன் அண்ணா!! பில்லாவை மட்டும் பிடித்து கொண்டு இருக்கிறிர்கள்!!! அஜித்தின் பல தோல்வி படங்களின் இசை வெளியீடு, பட தொடக்கக் விழா எல்லாவற்றிலுமே ரஜனி இருக்கிறார்.

கன்கொன் || Kangon said...

பொறுங்கோ வாறன்...

சுப்பர் ஸ்ரார் என்பது திறமைக்காக வழங்கப்படுவது என்று யார் சொன்னது?
அந்தப் பட்டத்தை யார் வழங்குவது?

அதை எதனடிப்படையில் பயன்படுத்துகிறார்கள்?

Vathees Varunan said...

அதுதானே ரஜனி எப்புடி அஜித் பில்லா நடிப்பதற்கு அனுமதி வழங்க முடியும்? இப்படியே ஆளாளுக்கு எதையோ சொல்லி குழப்புறாங்களைய்யா

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan S

//ஏன் அண்ணா!! பில்லாவை மட்டும் பிடித்து கொண்டு இருக்கிறிர்கள்!!! அஜித்தின் பல தோல்வி படங்களின் இசை வெளியீடு, பட தொடக்கக் விழா எல்லாவற்றிலுமே ரஜனி இருக்கிறார்//

அந்த படங்களை சொல்ல முடியுமா?

பல தொல்விப்படம் கொடுத்தவர் சூப்பர் ஸ்டாரா? உண்மையில் மக்கள் தான் சூப்பர் ஸ்டாரை தெரிவு செய்ய வேண்டும். ரஜினி இருக்கும் வரை விஜய் இல்லை அஜித் இல்லை அவராலும் அவர் சாதனையை நெருங்க முடியாது. ரஜினியின் சக போட்டியாளர் கமல் தசாவதாரத்தில் அந்த சாதனையை உடைத்தார் என நம்புகின்றேன்.

கன்கொன் || Kangon said...

{{ உரிமை தயாரிப்பாளரிடம் இருக்கும். கருத்துகளை யார் வேணுமானாலும் சொல்லலாம். அதனால்,நடிகரிடமும் அனுமதி கேக்கபடும் }}

எனது ஒரு பொருளை விற்க நான் அதை செய்தவனிடம் போய் 'ஐயா! இந்தப் பொருளை நீங்கள் தான் செய்தீர்கள். உங்களிடமிருந்து தான் பணம் செலுத்தி வாங்கினேன். இப்போது இதை விற்கப் போகிறேன்.
விற்கலாமா?' என்று கேட்க வேண்டுமா?

(நடிகரிடம் கருத்துக் கேட்டால் அது 'அனுமதி' கேட்கதாக அமையுமா?)

anuthinan said...

//@வதீஸ் அண்ணா:

அப்ப பில்லா (ரஜினியின்) இன் உரிமை யாரிடம்?
தயாரிப்பாளரிடம் தானே?
அப்ப தயாரிப்பாளர் தானே விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்? //

தயாரிபாலரிடமிருந்து உரிமை முன்பே வாங்கபட்டு விட்டது கோபி அண்ணே! ஆனால், நடிகராக யாரை போடுவது என்பதில் ராஜனியே சிபாரிசு செய்தவர்தான் அஜித்

கன்கொன் || Kangon said...

{{ உண்மையில் மக்கள் தான் சூப்பர் ஸ்டாரை தெரிவு செய்ய வேண்டும். }}

மக்களா?
அப்போது ரஜினியை மக்களா தெரிவு செய்தார்கள்?
தேர்தலேதும் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டாரா?

anuthinan said...

//{{ உரிமை தயாரிப்பாளரிடம் இருக்கும். கருத்துகளை யார் வேணுமானாலும் சொல்லலாம். அதனால்,நடிகரிடமும் அனுமதி கேக்கபடும் }}

எனது ஒரு பொருளை விற்க நான் அதை செய்தவனிடம் போய் 'ஐயா! இந்தப் பொருளை நீங்கள் தான் செய்தீர்கள். உங்களிடமிருந்து தான் பணம் செலுத்தி வாங்கினேன். இப்போது இதை விற்கப் போகிறேன்.
விற்கலாமா?' என்று கேட்க வேண்டுமா?

(நடிகரிடம் கருத்துக் கேட்டால் அது 'அனுமதி' கேட்கதாக அமையுமா?) //

பொருளுக்கும் படத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது!!!

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

//{{ உரிமை தயாரிப்பாளரிடம் இருக்கும். கருத்துகளை யார் வேணுமானாலும் சொல்லலாம். அதனால்,நடிகரிடமும் அனுமதி கேக்கபடும் }}

எனது ஒரு பொருளை விற்க நான் அதை செய்தவனிடம் போய் 'ஐயா! இந்தப் பொருளை நீங்கள் தான் செய்தீர்கள். உங்களிடமிருந்து தான் பணம் செலுத்தி வாங்கினேன். இப்போது இதை விற்கப் போகிறேன்.
விற்கலாமா?' என்று கேட்க வேண்டுமா?//

ஒரு நடிகருக்கு சம்பளம் இவ்வளவு என பேசப்படுகின்றது அது கொடுக்கப்பட்ட பின் பட வெற்றியின் பின் இலாபம் கொடுக்கப்படுவதில்லை. நஷ்டம் வந்தாலும் உண்மையில் அவன் பொறுப்பில்லை என்று சொல்லும் நடிகர்களுக்கு எப்படி ஒரு பட உரிமை இருக்கும் என அனுதினனுக்கு புரியவில்லை

கன்கொன் || Kangon said...

{{ ஆனால், நடிகராக யாரை போடுவது என்பதில் ராஜனியே சிபாரிசு செய்தவர்தான் அஜித் }}

ஆனால்,
முன்னர்,
// பில்லாவில் அஜித்தி நடிக்க அனுமதித்தவர் அவர் //

அனுமதி என்றீர்களே?

கன்கொன் || Kangon said...

முக்கிய கருத்து.
இன்று நான் சிறிது வேலையற்று இருக்கிறேன்.
அதனால் தான் இங்கு நேரஞ் செலவழிக்கிறேன்.
மற்றும்படி தனிப்பட்ட ரீதியில் நான் ரஜினிக்கோ, அசித்திற்கோ, விசயிற்கோ எதிரானவன் அல்லன்.

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan S

//தயாரிபாலரிடமிருந்து உரிமை முன்பே வாங்கபட்டு விட்டது கோபி அண்ணே! ஆனால், நடிகராக யாரை போடுவது என்பதில் ராஜனியே சிபாரிசு செய்தவர்தான் அஜித் //

இந்த கருத்து தவறு. அஜீத்தே இதை பற்றி சொல்லி இருக்கின்றார். அமிதாப் நடித்த டான் படத்தை ஷாருக் நடிக்க முதலே தனக்கு இப்படி ஒரு ஆசை இருந்தது என்றும் ஆனால் இப்போது தான் கைகூடியதேன்ரும் பில்லாபடத்தில் நடித்த ரஜினியை மரியாதை நிமித்தம் தான் சந்தித்ததாகவும். சொன்னது தல அப்போ சொன்னது பொய்யா

anuthinan said...

//ஒரு நடிகருக்கு சம்பளம் இவ்வளவு என பேசப்படுகின்றது அது கொடுக்கப்பட்ட பின் பட வெற்றியின் பின் இலாபம் கொடுக்கப்படுவதில்லை. நஷ்டம் வந்தாலும் உண்மையில் அவன் பொறுப்பில்லை என்று சொல்லும் நடிகர்களுக்கு எப்படி ஒரு பட உரிமை இருக்கும் என அனுதினனுக்கு புரியவில்லை //

அண்ணே படத்தின் வெற்றியை பொருது லாப விகிதமும் வழங்கபடுகிறது!!! இது பெருமாளும் தெரிவது இல்லை. அதை அவர்கள் வெளியீட்டு உரிமை என்ற பெயரில் பெறுகிறார்கள். எனக்கு தெரிந்து கமல்,ரஜனி,விக்ரம் போன்ற சிலர் பெறுவது இல்லை

Vathees Varunan said...

அப்படி சிபாரிசு செய்ய ரஜனிக்கு என்ன உரிமை இருக்கிறது. அதை புதிய பில்லா தயாரிப்பாளரே தெரிவு செய்யவேண்டும்....டேய் கேக்கிறவன் கேனையன் என்றால் கேபி சுந்தராம்பாள் ஆர்பி சௌத்ரி தயாரிச்ச படத்தில நடிச்சவா என்று சொல்லுவியள்

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

//{{ உண்மையில் மக்கள் தான் சூப்பர் ஸ்டாரை தெரிவு செய்ய வேண்டும். }}

மக்களா?
அப்போது ரஜினியை மக்களா தெரிவு செய்தார்கள்?
தேர்தலேதும் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டாரா?//

ஹா ஹா

அப்படி இல்லை கோபி ஒரு நடிகரின் பட வெற்றிகள் தியேட்டர் உரிமையாளர் விநியோகஸ்தர் தயாரிப்பாளர்களின் செல்ல பிள்ளை. மற்றும் ஆறில இருந்து அறுபதுவரை மக்களை கவர்ந்து அதிக ரசிகருடன் உச்ச நட்சத்திரமாக எம்.ஜி.ஆருக்கு அப்புறம் ரஜினியால் தான் வர முடிந்தது. இதை மக்களும் ஏற்றுக்கொண்டனர். கமலின் டிராக் வேராகிப்போனதும் ஒரு காரணம்.

anuthinan said...

//இந்த கருத்து தவறு. அஜீத்தே இதை பற்றி சொல்லி இருக்கின்றார். அமிதாப் நடித்த டான் படத்தை ஷாருக் நடிக்க முதலே தனக்கு இப்படி ஒரு ஆசை இருந்தது என்றும் ஆனால் இப்போது தான் கைகூடியதேன்ரும் பில்லாபடத்தில் நடித்த ரஜினியை மரியாதை நிமித்தம் தான் சந்தித்ததாகவும். சொன்னது தல அப்போ சொன்னது பொய்யா //

தனக்கு ஆசை இருந்தது என்று சொன்னது உணமி. அதற்க்கு பிறகு எப்படி என்ன சொனார் என்று நீங்கள் சொல்லுவது தவறு. அவரது உத்தியோகபோர்வ தளத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்று பாருங்கள்.

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan S

//பொருளுக்கும் படத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது!!! //

அதற்கும் அனுமதி கேட்பதற்கும் என்ன சம்பந்தம் விளக்கம் வேண்டும்

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

//முக்கிய கருத்து.
இன்று நான் சிறிது வேலையற்று இருக்கிறேன்.
அதனால் தான் இங்கு நேரஞ் செலவழிக்கிறேன்.
மற்றும்படி தனிப்பட்ட ரீதியில் நான் ரஜினிக்கோ, அசித்திற்கோ, விசயிற்கோ எதிரானவன் அல்லன்.//

நம்பிட்டம்...

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan S

//அண்ணே படத்தின் வெற்றியை பொருது லாப விகிதமும் வழங்கபடுகிறது!!! இது பெருமாளும் தெரிவது இல்லை. அதை அவர்கள் வெளியீட்டு உரிமை என்ற பெயரில் பெறுகிறார்கள். எனக்கு தெரிந்து கமல்,ரஜனி,விக்ரம் போன்ற சிலர் பெறுவது இல்லை//

ஹா ஹா அப்படியா எனக்கு தெரியாது. வெளியீட்டு உரிமை படம் வெளியிடும் போது வாங்குவது அதில் நட்டம் வந்தாலும் லாபம் வந்தாலும் அவருக்கே பாதிப்பு அதுக்கும் பட உரிமைக்கும் சம்பந்தம் இல்லை. அடுத்து அந்த உரிமையை ரஜினி வாங்குவதில்ல இஎன்றிங்க அப்புறம் எப்பிடி ரஜினிக்கு பில்லாவில் உரிமை உண்டு

Vathees Varunan said...

///முக்கிய கருத்து.
இன்று நான் சிறிது வேலையற்று இருக்கிறேன்.
அதனால் தான் இங்கு நேரஞ் செலவழிக்கிறேன்.
மற்றும்படி தனிப்பட்ட ரீதியில் நான் ரஜினிக்கோ, அசித்திற்கோ, விசயிற்கோ எதிரானவன் அல்லன்///

Any threat?????

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan S

///இந்த கருத்து தவறு. அஜீத்தே இதை பற்றி சொல்லி இருக்கின்றார். அமிதாப் நடித்த டான் படத்தை ஷாருக் நடிக்க முதலே தனக்கு இப்படி ஒரு ஆசை இருந்தது என்றும் ஆனால் இப்போது தான் கைகூடியதேன்ரும் பில்லாபடத்தில் நடித்த ரஜினியை மரியாதை நிமித்தம் தான் சந்தித்ததாகவும். சொன்னது தல அப்போ சொன்னது பொய்யா //

தனக்கு ஆசை இருந்தது என்று சொன்னது உணமி. அதற்க்கு பிறகு எப்படி என்ன சொனார் என்று நீங்கள் சொல்லுவது தவறு. அவரது உத்தியோகபோர்வ தளத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்று பாருங்கள்.//

என்ன சொன்னார் சொல்லுங்கள் நீங்கள் எனக்கு அந்த தள முகவரி தெரியாது.

anuthinan said...

//அதற்கும் அனுமதி கேட்பதற்கும் என்ன சம்பந்தம் விளக்கம் வேண்டும் //

அண்ணா தயாரிப்பாளர் தனிச்சையாக கொடுத்து விட முடியாது. அதுவும் ரஜனி போன்றவர்களின் படத்தை மீள பண்ணும போது அவரிடம் கேட்காமல் என்பது எப்படி?? இதற்குமேலும் விளக்கம் சொல்லணுமோ

anuthinan said...

//இன்று நான் சிறிது வேலையற்று இருக்கிறேன்.
அதனால் தான் இங்கு நேரஞ் செலவழிக்கிறேன்.
மற்றும்படி தனிப்பட்ட ரீதியில் நான் ரஜினிக்கோ, அசித்திற்கோ, விசயிற்கோ எதிரானவன் அல்லன்///

:)) நான் அஜித் ரசிகன் என்பது உண்மை!!! அதற்காக அவர் செயும் எல்லாவற்றுக்கும் அல்ல!!!

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan S

////அதற்கும் அனுமதி கேட்பதற்கும் என்ன சம்பந்தம் விளக்கம் வேண்டும் //

அண்ணா தயாரிப்பாளர் தனிச்சையாக கொடுத்து விட முடியாது. அதுவும் ரஜனி போன்றவர்களின் படத்தை மீள பண்ணும போது அவரிடம் கேட்காமல் என்பது எப்படி?? இதற்குமேலும் விளக்கம் சொல்லணுமோ//

அதற்க்கு காரணம் மரியாதையே தவிர உரிமை இல்லை நண்பரே. இதை உங்களால் விளங்க முடிகின்றதா?

anuthinan said...

//{{ ஆனால், நடிகராக யாரை போடுவது என்பதில் ராஜனியே சிபாரிசு செய்தவர்தான் அஜித் }}

ஆனால்,
முன்னர்,
// பில்லாவில் அஜித்தி நடிக்க அனுமதித்தவர் அவர் //

அனுமதி என்றீர்களே?//

கோபி அண்ணா இங்கு மட்டும் அனுமதி சிபாரிசு என்ற இரேண்டுக்கும் ஒரே அர்த்தம் எடுத்து கொள்ளவும்!!! வேகமாக கருத்து போட்டதால் ஒரே வார்த்தையை போடா முடியவில்லை

கன்கொன் || Kangon said...

அனுதினன் பிடிபட்டார்...

பில்லா 2007 படத்திற்காக அசித்தை ரசினி ஒன்றும் சிபாரிசு செய்யவில்லை.

அசித் விசிறிகள் தளத்தில் போட்டிருக்கிறார்கள், வாசிக்கவும்.

{{ An important thing to note here is Ajith and Vishnuvardhan approached superstar Rajnikanth to discuss about this issue of remakes. Well, they were delighted when Rajni asked which one they would like to do with. And it was Billa that they wanted and Rajni installed their ideas and innovativeness showering his blessings. }}

ஆகவே அசித்தும், விஸ்ணுவர்த்தனுமே ரசினியை அணுகினார்கள்.
http://www.ajithfans.com/news/2007/11/24/ajith-dedicates-billa-to-rajnikanth/

முழுமையாக வாசிக்கவும்.

anuthinan said...

//அதற்க்கு காரணம் மரியாதையே தவிர உரிமை இல்லை நண்பரே. இதை உங்களால் விளங்க முடிகின்றதா? //


சினிமா கொஞ்சம் வித்தியாசமான உலகம் அண்ணா

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan S

//சினிமா கொஞ்சம் வித்தியாசமான உலகம் அண்ணா //

அப்பிடியா இப்பதான் தெரியுமா? சமாளிக்ககூடாது சிஷாய் அடிச்சாலும் தாங்கணும் குருவை போல ஓகே

Vathees Varunan said...

//படத்தின் வெற்றியை பொருது லாப விகிதமும் வழங்கபடுகிறது!!! இது பெருமாளும் தெரிவது இல்லை. அதை அவர்கள் வெளியீட்டு உரிமை என்ற பெயரில் பெறுகிறார்கள். எனக்கு தெரிந்து கமல்,ரஜனி,விக்ரம் போன்ற சிலர் பெறுவது இல்லை//

என்னது காந்தியை யாரோ சுட்டுட்டாங்களோ??
கமல் விக்ரம் போன்றோரை பற்றி எனக்கு சரியாக தெரியாது ஆனாலும் ரஜனி சேவ் எடுத்தாலே 20 கோடி சம்பாதிக்கிறவர் என்று கோடம்பாக்கத்தில் கூறுவார்களாம். சென்னை நகர வினயோக உரிமையும் கட்டாயம் அவருடைய படங்களுக்கு கொடுக்கவேண்டுமாம் இதுபற்றி யாருக்காவது தெரிஞ்சால் சொல்லுங்கோ

anuthinan said...

//அப்பிடியா இப்பதான் தெரியுமா? சமாளிக்ககூடாது சிஷாய் அடிச்சாலும் தாங்கணும் குருவை போல ஓகே //

என்ன குருவே மரியாதை என்று நீங்கள் விளங்கி வைத்ததுக்கு நான் அர்த்தம் தந்து மாற்ற முடியாது அல்லவா? இதுக்கு போய் இவ்வளவு பெரிய வார்த்தையா

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan S

கோபி அஜித்தின் தள முகவரியும் செய்தியும் தந்து கெட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள். அஜித் தான் ரஜினியை தேடிப்போய் உள்ளார் என்கிறது அந்த செய்தி. நீங்கள் சொன்னது இல்லை ரஜினி தான் அஜித்தை போட ஐடியா கொடுத்தார் என்று பதில் வேண்டும்

Bala said...

// விஜய் சேர்ந்திருக்கும் நிலையில் இந்த களங்கங்கள் கடந்து மீண்டு எழுவாரா? அல்லது மீண்டும் அதே குட்டையில் இந்த இயக்குனர்களையும் கொண்டு

வேலாயுதம் பட பஞ்ச டயலாக்
"வேலாயுதம் சீண்டினா அணு ஆயுதம்"

நீங்களே முடிவு பண்ணிக்கோங்க, படம் எப்படி இருக்கும்னு...

கன்கொன் || Kangon said...

{{ வேலாயுதம் பட பஞ்ச டயலாக்
"வேலாயுதம் சீண்டினா அணு ஆயுதம்"

நீங்களே முடிவு பண்ணிக்கோங்க, படம் எப்படி இருக்கும்னு... }}

உங்கள் அருமையான தகவலுக்கு நன்றி...

anuthinan said...

//கோபி அஜித்தின் தள முகவரியும் செய்தியும் தந்து கெட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள். அஜித் தான் ரஜினியை தேடிப்போய் உள்ளார் என்கிறது அந்த செய்தி. நீங்கள் சொன்னது இல்லை ரஜினி தான் அஜித்தை போட ஐடியா கொடுத்தார் என்று பதில் வேண்டும் //

குருவே ரஜனியின் உத்தியோகபூர்வ இனையதளம் இப்போதுதான் மருசீரமைக்கபடுவதால், என்னால் பழைய செய்தியை எடுக்க முடியவில்லை.....! மன்னிக்கவும்!

ARV Loshan said...

நன்றி சதீஸ்..

சொன்னால் கேட்கமாட்டியே.. ;)

ரஜினி,விஜய்,அஜித் பற்றிய தகவல் கும்மிக்கு நன்றி..
அதுசரி இதெல்லாம் அவங்களுக்கு தெரியுமா? ;)

G said...

உங்க எண்ணம் தவறு என்று புரிய வைத்த எங்கள் இதய தளபதிக்கு தொடர் வெற்றி காண வாழ்த்துக்கள்....... எவனாலயும் தளபதியை எதிர்க்கவோ வெல்லவோ முடியாது.....

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive