Sunday, August 22, 2010

விஜய் படத்தில் அஜித் பாட்டு.- ஒரு வில்லங்கம்தமிழ் சினிமாவில் ரஜினி-கமல் அடுத்த தலைமுறை நடிகர்களாக இருக்கும் விஜய்- அஜித் ஆரம்பகாலத்தில் சேர்ந்து நடித்த இந்த இரண்டுபேரும் அதன் பின் பிரிந்து பின்னர் பகை மூண்டு அது திரையிலும் எதிரொலித்து அஜித்தின் மகள் பிறப்புடன் எல்லாம் ஓய்ந்து இந்த மானும் புலியும் ஒன்றாய் தேநீர் குடித்து அதுதாங்க விஜய் நேரடியாய் வைத்தியசாலைக்கு சென்று ஷாலினியும் அவர் பேபியையும் பார்த்து அஜித்தை குடும்ப சமேதரராய் அழைத்து விருந்து கொடுத்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தனர். ரஜினி கமல் போல தாங்களும் நல்ல நண்பர்கள் என காட்டிக்கொண்டதுடன் அன்புடன் நடந்ததோடு ஒருவரை ஒருவர் பாராட்டினர். இதற்க்கு கண்ணு பட்டது போல குருவியில் அஜித்தை வாரும் வேலையை விஜய் செய்தாலும் அதன் பின் பெரிதாக எந்த எதிர்ப்பும் இருபுறமும் இருந்து கிளம்பாததால் அப்படியே அடங்கிப்போனது. இந்த நிலையில் தான் அஜித், கருணாநிதியிடம் எங்களை கட்டாயப்படுத்தி விழாக்களுக்கு அழைக்கின்றார்கள் என முறையிட அதற்க்கு எதிர்ப்புக்கிளம்ப விஜய், அஜித்துக்கு ஆதரவாக வி.சி.குகநாதனிடம் பேசியதாகவும் ஒரு கதை உண்டு.

இப்படி இவர்களுக்குள் நட்பு இருக்கின்றதா இல்லையா என்பதையும் தாண்டி ஒரு போட்டி இருக்கும் நிலையில். ரசிகர்கள் நாங்கள் நினைக்க வேண்டிய விடயம் என்னவென்றால் உண்மையில் நடிகர்களுக்கிடையில் எந்த பிணக்கும் இருக்காது. அதேபோல விஜய் ரசிகர்கள் அஜித்தை எதிரியாய் பார்ப்பதும் இல்லை அதேபோல அஜித் ரசிகர்கள் விஜயை எதிரியாய் பார்ப்பதும் இல்லை(ஒரு சில வக்கிர எண்ணம் கொண்டவர்களை தவிர்த்தால்) இடையில் இருந்து கொண்டு சில சுண்டைக்காய் பயலுகள் தான் உந்த உசுப்பேத்தும் வேலையை செய்கின்றார்கள். முதலில் அவர்களுக்கு வைக்கணும் ஒரு பெரிய ஆப்பு. சரி இவர்கள் தான் இப்படி செய்கின்றார்களே நடிகர்கள் ஆவது இதை கண்டிக்கலாமே என்று பார்த்தால் வரலாறு இதற்க்கு பதில் சொல்லும். எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் காலம் தொட்டு சிம்பு-தனுஷ் வரை போட்டி நடிகர்கள் தங்கள் விளம்பரம் படம் ஓடனும் மற்றும் ஊடக பார்வையை கருத்தில் கொண்டு இந்த மாயையை கண்டும் காணாமல் இருக்கின்றார்கள். அவர்கள் ரசிகர்கள் நாங்கள் தான் உசுப்பிக்கொண்டு திரிகின்றோம்.

இந்த பதிவை நான் எழுத முக்கிய காரணம். நான் இப்போது இருப்பது இங்கிலாந்தில். என் படிப்புக்காய் வந்த இடத்தில் ஒரு சந்தோஷ செய்தியும் உண்டு அதை ஆறுதலாக ஒரு பதிவில் சொல்கின்றேன். அதை விடுத்து இங்கே இருக்கும் சுட்டிப்பிளைகளை பார்த்தால் அவர்கள் விஜய் ரசிகர்களாக தான் இருக்கின்றார்கள். போடும் உடையில் இருந்து அவர்களை விஜய் ஆக்கிரமித்திருக்கின்றார். அந்த வகையில் வில்லு படத்தை பார்க்கும் நிலை எனக்கு ஏற்ப்பட்டது. அந்த மரண மொக்கையை கூட அந்த சின்ன பிள்ளைகள் ரசித்து பார்த்தது விஜய் என்னும் பெயருக்கு. இந்த படத்தை முன்னர் ஒரு தடவை நான் பார்த்திருந்தாலும் இன்று தான் இன்னொரு விடயத்தை கவனித்தேன். விஜய் தான் குளிக்கப்போகும் நேரம் அவர் வாயில் முணு முணுத்த பாடலை கேட்டதும் எனக்கு தூக்கி வாரிப்போட்டது. அது வேறு ஒரு பாடலும் அல்ல. அஜித்தின் வாலி பட ஓ சோனா ஓ சோனா பாடல்.........தன சக போட்டி நடிகர் ஒருவரின் பாடலை வேண்டுமென்றே படத்தில் இடம்பெற வைத்தாரோ அல்லது எதேர்ச்சையாய் வந்ததோ தெரியாது. ஆனால் நடிகர்கள் ஒரு போதும் ஒருவருக்கு ஒருவர் எதிரி இல்லை. எனவே ரசிகர்களே ஏமாறாதீர்கள் என்று தான் தோணியது.

அப்புறம் லண்டன், வந்து சிரித்து அழுது கொஞ்சம் சுத்திப்பார்த்து நாட்கள் போகிறது. ...போக போகத்தான் தெரியும் என பயப்படுத்திரான்கள் போக போக நானும் சொல்லுறன். நேரம் கிடைக்கும் போது வாறன்...இப்போ வரட்டா ......
Share:

6 கருத்துரைகள்:

anuthinan said...

குருவே நீண்ட நாட்களின் பின்பு நீண்ட பதிவு!!!

நடிகர்கள் தங்கள் நலனை ரொம்பவே பார்க்கிறார்கள்!!! ரசிகர்கள்தான் அவர்களுக்காக தங்கள் நலனை விட்டு விடுகிறார்கள்!!! நல்லா சொன்னீங்க விஜய் லண்டன் ரசிகர் மன்ற தலைவரே!!

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan S


உண்மை தான் நண்பா. இங்கே நான் விஜய் ரசிகன் நீ அஜித் ரசிகன் நமக்குள் பிணக்கு ஏது....அப்புறம் என்னது நான் தான் லண்டன் விஜய் ரசிகர் மன்ற தலைவரோ? சொல்லவே இல்லை. எவன்டா அது விஜய் ரசிகர் மன்றத்தை பற்றி பேசும் தறு தல சாரி தோளுக்கு மேல உள்ள தல உள்ள தல.

சௌந்தர் said...

வாங்க நண்பா அஜித் ரசிகன் என்ற முறையில் அந்த பாட்டு வைத்தது ஒன்றும் எனக்கு தவறாக தெரியவில்லை தொடர்ந்து பதிவு போடுங்கள்...

"ராஜா" said...

//அதை விடுத்து இங்கே இருக்கும் சுட்டிப்பிளைகளை பார்த்தால் அவர்கள் விஜய் ரசிகர்களாக தான் இருக்கின்றார்கள்.

ரஜினிக்கு அப்பறம் கடல் கடந்து பெரிய??????!!!!! ரசிக பட்டாளம் இருக்கிறது தளபதிக்குதான்.....

ஜாவா கணேஷ் said...

வணக்கம் அண்ணே... போகப்போக தெரியும் என்று பயப்படுத்துறானுகளா? அதையும்தான் பார்த்துவிடுங்களேன். அப்புறம் நேற்றுத்தான் நானும் Blog எழுதும் கோதாவில ஜம்ப் ஒன்று கொடுத்தேன் ரைம் இருந்தால் இடைக்கிடை வந்து சிரித்துட்டு போங்க.

ராசராசசோழன் said...

அருமையா சொன்னீங்க...நாலு பேர் கேட்டா நல்ல இருக்கும்....

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Get Some Cool Stuff
in your inbox

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox