உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label அஜித். Show all posts
Showing posts with label அஜித். Show all posts

Saturday, January 15, 2011

ரஜினி,கமல்,விஜய், சதீஷ் பொங்கல்!

பொங்கல் வாழ்த்து எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் சொல்கின்றனர். இது என் இரண்டாவது முறை. நடிகர்கள் உட்பட சில பாடல் தொகுப்புக்களால் வாழ்த்துக்கள். (ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தால் தாமதமாக வருகின்றது.)

போடா எல்லாம் விட்டு தள்ளு பழசை எல்லாம் சுட்டு தள்ளு புதுசாய் இன்று பிறந்தோம் என்று எண்ணிக் கொள்ளடா,
தை பிறக்கும் நாளை விடியும் நல்ல வேளை - ரஜினி





தை பொங்கலும் வந்தது பாலும் வந்தது -கமல்




மழை காலத்தில் குடிசை எல்லாம் தண்ணீரில் மிதக்கின்ற கட்டுமரம்.......
போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்.....விஜய்




ரஜினி கமல் விஜய் எல்லாம் தங்கள் பாட்டுகளால் வாழ்த்திவிட்டார்கள். அட நானும் பிரபலம் தாங்க வாழ்த்த கூடாதா. இதோ you tube தயவில் ஒரு பாடல்.



பாடல்களை தேடிக்கொண்டிருந்த போது எனக்கு கிடைத்த இன்னொரு அற்ப்புத பாடல். தமிழர்களுக்கு பொதுவான ஒரு பண்டிகையை பற்றி மதம் கடந்தி கிறிஸ்தவ மதத்தினர் பாடி கொண்டாடி மகிழ்கின்றனர். பாருங்கோ.



பாடல்களை தர உதவிய youtubeக்கு நன்றி.
Share:

Sunday, August 22, 2010

விஜய் படத்தில் அஜித் பாட்டு.- ஒரு வில்லங்கம்



தமிழ் சினிமாவில் ரஜினி-கமல் அடுத்த தலைமுறை நடிகர்களாக இருக்கும் விஜய்- அஜித் ஆரம்பகாலத்தில் சேர்ந்து நடித்த இந்த இரண்டுபேரும் அதன் பின் பிரிந்து பின்னர் பகை மூண்டு அது திரையிலும் எதிரொலித்து அஜித்தின் மகள் பிறப்புடன் எல்லாம் ஓய்ந்து இந்த மானும் புலியும் ஒன்றாய் தேநீர் குடித்து அதுதாங்க விஜய் நேரடியாய் வைத்தியசாலைக்கு சென்று ஷாலினியும் அவர் பேபியையும் பார்த்து அஜித்தை குடும்ப சமேதரராய் அழைத்து விருந்து கொடுத்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தனர். ரஜினி கமல் போல தாங்களும் நல்ல நண்பர்கள் என காட்டிக்கொண்டதுடன் அன்புடன் நடந்ததோடு ஒருவரை ஒருவர் பாராட்டினர். இதற்க்கு கண்ணு பட்டது போல குருவியில் அஜித்தை வாரும் வேலையை விஜய் செய்தாலும் அதன் பின் பெரிதாக எந்த எதிர்ப்பும் இருபுறமும் இருந்து கிளம்பாததால் அப்படியே அடங்கிப்போனது. இந்த நிலையில் தான் அஜித், கருணாநிதியிடம் எங்களை கட்டாயப்படுத்தி விழாக்களுக்கு அழைக்கின்றார்கள் என முறையிட அதற்க்கு எதிர்ப்புக்கிளம்ப விஜய், அஜித்துக்கு ஆதரவாக வி.சி.குகநாதனிடம் பேசியதாகவும் ஒரு கதை உண்டு.

இப்படி இவர்களுக்குள் நட்பு இருக்கின்றதா இல்லையா என்பதையும் தாண்டி ஒரு போட்டி இருக்கும் நிலையில். ரசிகர்கள் நாங்கள் நினைக்க வேண்டிய விடயம் என்னவென்றால் உண்மையில் நடிகர்களுக்கிடையில் எந்த பிணக்கும் இருக்காது. அதேபோல விஜய் ரசிகர்கள் அஜித்தை எதிரியாய் பார்ப்பதும் இல்லை அதேபோல அஜித் ரசிகர்கள் விஜயை எதிரியாய் பார்ப்பதும் இல்லை(ஒரு சில வக்கிர எண்ணம் கொண்டவர்களை தவிர்த்தால்) இடையில் இருந்து கொண்டு சில சுண்டைக்காய் பயலுகள் தான் உந்த உசுப்பேத்தும் வேலையை செய்கின்றார்கள். முதலில் அவர்களுக்கு வைக்கணும் ஒரு பெரிய ஆப்பு. சரி இவர்கள் தான் இப்படி செய்கின்றார்களே நடிகர்கள் ஆவது இதை கண்டிக்கலாமே என்று பார்த்தால் வரலாறு இதற்க்கு பதில் சொல்லும். எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் காலம் தொட்டு சிம்பு-தனுஷ் வரை போட்டி நடிகர்கள் தங்கள் விளம்பரம் படம் ஓடனும் மற்றும் ஊடக பார்வையை கருத்தில் கொண்டு இந்த மாயையை கண்டும் காணாமல் இருக்கின்றார்கள். அவர்கள் ரசிகர்கள் நாங்கள் தான் உசுப்பிக்கொண்டு திரிகின்றோம்.

இந்த பதிவை நான் எழுத முக்கிய காரணம். நான் இப்போது இருப்பது இங்கிலாந்தில். என் படிப்புக்காய் வந்த இடத்தில் ஒரு சந்தோஷ செய்தியும் உண்டு அதை ஆறுதலாக ஒரு பதிவில் சொல்கின்றேன். அதை விடுத்து இங்கே இருக்கும் சுட்டிப்பிளைகளை பார்த்தால் அவர்கள் விஜய் ரசிகர்களாக தான் இருக்கின்றார்கள். போடும் உடையில் இருந்து அவர்களை விஜய் ஆக்கிரமித்திருக்கின்றார். அந்த வகையில் வில்லு படத்தை பார்க்கும் நிலை எனக்கு ஏற்ப்பட்டது. அந்த மரண மொக்கையை கூட அந்த சின்ன பிள்ளைகள் ரசித்து பார்த்தது விஜய் என்னும் பெயருக்கு. இந்த படத்தை முன்னர் ஒரு தடவை நான் பார்த்திருந்தாலும் இன்று தான் இன்னொரு விடயத்தை கவனித்தேன். விஜய் தான் குளிக்கப்போகும் நேரம் அவர் வாயில் முணு முணுத்த பாடலை கேட்டதும் எனக்கு தூக்கி வாரிப்போட்டது. அது வேறு ஒரு பாடலும் அல்ல. அஜித்தின் வாலி பட ஓ சோனா ஓ சோனா பாடல்.........தன சக போட்டி நடிகர் ஒருவரின் பாடலை வேண்டுமென்றே படத்தில் இடம்பெற வைத்தாரோ அல்லது எதேர்ச்சையாய் வந்ததோ தெரியாது. ஆனால் நடிகர்கள் ஒரு போதும் ஒருவருக்கு ஒருவர் எதிரி இல்லை. எனவே ரசிகர்களே ஏமாறாதீர்கள் என்று தான் தோணியது.

அப்புறம் லண்டன், வந்து சிரித்து அழுது கொஞ்சம் சுத்திப்பார்த்து நாட்கள் போகிறது. ...போக போகத்தான் தெரியும் என பயப்படுத்திரான்கள் போக போக நானும் சொல்லுறன். நேரம் கிடைக்கும் போது வாறன்...இப்போ வரட்டா ......
Share:

Friday, July 16, 2010

3 இடியட்ஸ்சில் விஜயுடன் இணைவாரா அஜித்?



3 இடியட்ஸ் திரைப்படம் அமீர்கான், மாதவனுடன் இன்னுமொரு வளர்ந்து வரும் ஹீரோ நடித்து வெளிவந்து சக்கை கட்டு கட்டிய திரைப்படம். இதில் அமீர்கான் எவ்வளவு பெரிய ஹீரோ என்று சொல்லதேவையில்லை. அதேநேரம் தமிழ், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் மாதவனுக்கு என்று ஒரு பெயர் உண்டு. ஆனால் அமீர்கானுடன் ஒப்பிட்டால் மாதவன் கீழே தான். அடுத்து ஜோஷி, இவர் ஒரு வளர்ந்து வரும் நாயகன் தான். இவர்கள் இணையில் வந்து தான் வசூல் சாதனை படைத்தது இந்த படம். இப்போது இதை தமிழில் கொண்டுவரும் முயற்சி.

தமிழில் இந்த படத்தை கொண்டுவர ஜெமினி பிலிம்ஸ் உரிமையை வாங்கியது முதல் விஜய் இந்த படத்தில் நடிப்பார் என்ற பேச்சு இருந்து வருகின்றது. இதை விஜய் உறுதி செய்யாதவிடத்தும் அவருக்கு தேவைப்படும் மிகப்பெரிய ஒரு வெற்றி அவரை நடிக்க வைக்கும் என்றே சொல்ல தோன்றுகின்றது. இந்த நிலையில் தான் விஜயுடன் யார் யார் நடிக்க வாய்ப்பு உண்டு என்ற கேள்வியை கேட்டு நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன். வாசிக்க இங்கே சொடுக்குங்கள். அடுத்து இந்த படத்தில் நடிக்க தன் ஆசையை வெளியிட்டார் ஜீவா. ஆனால் இதற்க்கு பச்சை சிவப்பு என எந்த விளக்கும் எந்த பக்கமும் இருந்தும் இன்னும் ஒளிரவில்லை.

இந்த நிலையில் தான் தமிழ் படத்தை இயக்க பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டதை உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது ஜெமினி. ஷங்கர் என்றால் எப்படி பிரமாண்டமாய் இருக்கும் என சொல்ல தேவையில்லை. ஆனால் முதல் முறையாக ஷங்கர் ஒரு ரீமேக் படத்தை இயக்கப்போகின்றார். எனவே அந்த படம் எப்படி வரும் என்பது எனக்கு சொல்ல தெரியாது. தன் சொந்த படங்களில் அசத்திய ஷங்கர் ரீமேக்கில் சொதப்பினாலும் ஆச்சரியம் இல்லை.

இயக்கம் இப்படி இருக்கையில் விஜய் இந்த படத்தில் நடிப்பது நல்லது என கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நேரடியாகவே தெரிவித்திருக்கும் நிலையில் ஷங்கர் தான் இந்த படத்தை இயக்க இருக்கின்றார் என்ற செய்தி வந்திருப்பது அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க தூண்டும். இதேநேரம் முன்னர் ஒருமுறை விஜய் இந்த படத்தில் உறுதி செய்யப்பட்டதாகவும் இயக்குனர் கதாநாயகி உள்ளிட்டோரை நீங்களே முடிவு செய்யுங்கள் என விஜயிடம் ஜெமினி நிறுவனம் சொன்னபோது எனக்காக இந்த படத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்றும் இயக்குனர் ஹீரோயின் எல்லாவற்றையும் நீங்களே தெரிவு செய்யுங்கள் என ஜெமினியிடம் விஜய் சொன்னதாகவும் செய்தி வந்தது. எனவே தான் இப்போது ஷங்கர் தெரிவு செய்யப்பட்டாரா என்ற கேள்வியும் உண்டு?


ஏற்கனவே விஜயும் ஷங்கரும் இணைய தங்கள் விருப்பங்களை தெரிவித்துள்ள நிலையில் இப்போது வாய்ப்பும் வந்திருக்கும் நிலையில் இருவரும் அதை தவிர்க்க மாட்டார்கள் என எதிர்பார்க்கலாம். விஜய் நடிப்பது ஓரளவு உறுதியாகி இருக்கும் நிலையில் அடுத்த இருவர் யார் என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை. மாதவன் வேடத்தில் நடிக்க மாதவன் மறுத்த பின்(ஒரே வேடத்தை திருப்பி செய்ய விருப்பம் இல்லை என காரணம் சொன்னார்.) அந்த இடத்தில் அஜித்தை நடிக்க வைக்க பேச்சு நடப்பதாக சொல்லப்படுகின்றது. ஆனால் இது சாத்தியமா? என்றால் எனக்கு இல்லை என்று பதில் வருகின்றது. காரணம் அஜித் இந்த படத்தில் நடிக்கும் பட்சத்தில் அவர் அமீர்கான் வேடத்தை செய்யவே ஆசைப்படுவார். அவர் ரசிகர்களும் அதையே விரும்புவர். அதேநேரம் விஜயும் விட்டுக்கொடுக்க தயாராக மாட்டார். அப்படி இருக்கையில் இந்த பேச்சில் வெற்றி கிடைக்கும் என நினைக்கவில்லை. சிலவேளை விஜய் இந்த படத்தில் நடிக்காமல் போனால் அஜித் நடிக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் ஏகன் படத்தில் தன்னை தானே கொலிஜ் மாணவனா என அஜித் நக்கலடித்த பின்னும் ஒரு கல்லூரி மாணவனாக நடிக்க ஒத்துக்கொள்வாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கின்றது.

விஜய்-அஜித் கூட்டு நடந்தால் சந்தோசம். ஆனால் இருவருமே இதை செயற்படுத்துவர்களா? படம் இமாலய வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த வெற்றிக்கு காரணம் விஜயா அல்லது அஜித்தா என்ற கேள்வி வரும். இருவருக்குள்ளும் இருவர் ரசிகர்களுக்குள்ளும் ஈகோ மோதல் வரும். இதை இருவரும் விரும்பமாட்டார்கள். இவை எல்லாம் தாண்டி விஜயை விட அடுத்த இடத்தில் அஜித்தோ அஜித்தை விட முக்கியம் குறைந்த பாத்திரத்தில் விஜயோ நடிக்க வாய்ப்பு இல்லை என்று நான் சொல்கின்றேன். ஆனால் அதையும் மீறி இவர்கள் நடிக்க சம்மதித்தால். மூன்றாவதாக நடிக்க ஜீவா தயாராக இருக்கும் நிலையில். விஜய்-அஜித்-ஜீவா-ஷங்கர்-ஜெமினி பிலிம்ஸ் இவர்களோடு ஏ.ஆர்.ரஹ்மான் அல்லது இன்னொரு நல்ல இசை அமைப்பாளர் உள்ளிட்ட ஷங்கரின் பிரமாண்ட கூட்டணியுடன் இணைய இருக்கும் ஹீரோயின் யார்? என்ற கேள்வியும் உண்டு. அப்படி எல்லா பிரமாண்டங்களும் தல தளபதி இணைந்தால் தமிழ் சினிமா கண்ட மிகப்பெரிய வெற்றி படமாக அது அமையும் அதே நேரம் தமிழ் சினிமாவின் போக்கும் மாறி மிகப்பெரிய வளர்ச்சி ஏற்ப்படும் என்பதில் ஐயமில்லை.



இந்த பதிவை எழுத சற்று முன்னர் என் மூஞ்சி புத்தகத்தில் இந்த இணைப்பு சாத்தியமா என கேட்டிருந்தேன் நண்பர்கள் சொன்ன பதிலை இங்கே இணைக்கின்றேன். நீங்களும் சொல்லுங்கள்.

Sathiamoorthy Shathieshan ‎3 இடியட்சில் விஜயுடன் சேர்வாரா அஜித்? உங்கள் கருத்தென்ன

about an hour ago · ·
Manoj Bose
Manoj Bose
செம காமெடி .........
about an hour ago · ·
Sellathuri Sarath
Sellathuri Sarath
அஜித் 3idiots la studient ta செம காமடீ மச்சீ (அதான் உலகம்2012அழியுதுனு சொன்னாங்கலா)
about an hour ago · ·
Gopikrishna Kanagalingam
Gopikrishna Kanagalingam
‎2 முட்டாள்கள் சேர்ந்தாயிற்று.
மூன்றாமவர் யார்?
விஷால்? பரத்?
about an hour ago · ·
Sathiamoorthy Shathieshan
Sathiamoorthy Shathieshan
கோபி அஜித் விஜய் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதா? இல்லையே பேச்சு தானே நடக்கின்றது.
about an hour ago · ·
Anuthinan Suthanthiranathan
Anuthinan Suthanthiranathan
அஜித் இணைவார் என்பதை அவரது ரசிக மன்ற தலைவர் என்ற ரீதியில் சொல்லி கொள்ள விரும்புகிறேன்
about an hour ago · ·
Gopikrishna Kanagalingam
Gopikrishna Kanagalingam
அப்ப மூன்றாவது முட்டாள் ஒருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தவும்.
விஷால் அல்லது பரத் ஐ பரி்ந்துரைக்கிறேன்.
about an hour ago · ·
Sathiamoorthy Shathieshan
Sathiamoorthy Shathieshan
மூன்றாவது முட்டல் தான் ஜீவா ஆச்சே
about an hour ago · ·
Manoj Bose
Manoj Bose
சரி.. அமீர்கான் ரோல் யாருக்கு?
about an hour ago · ·
Sathiamoorthy Shathieshan
Sathiamoorthy Shathieshan
இதுவரைக்கும் விஜய் என்ற பேச்சு இருக்கிறது.. இதை பற்றி பதிவு எழுதிக்கொண்டிருக்கின்றேன் இன்னும் ஒரு மணி நேரத்தில் வாசிக்க ரெடியாகுங்கள்
58 minutes ago · ·
Vathees Varunan
Vathees Varunan
‎3 இடியட்ஸ்கு தமிழல எப்புடி பெயர் வைப்பாங்க நண்பர்களே? லோஷன் அண்ணா சொல்லுறாரு
3 மூதேவியள் என்று நீங்கள் எப்புடி பெயர் வைப்பீங்க?
54 minutes ago · ·
Manoj Bose
Manoj Bose
எழுதுங்கள் எழுதுங்கள் ... மறக்காமல் அஜித் என்ன ரோல் என்றும் சொல்லிவிடுங்கள்.... மாதவன் ரோலா? ஸ்ர்மன் ஜோஷி ரோலா? இல்ல வைரஸ் professor ரோலா ?
49 minutes ago · ·
எவனோ ஒருவன்
எவனோ ஒருவன்
எண்டா அஜித்தின் பெயரை நாசமாக்கவா ?
30 minutes ago · ·

1. விஜயுடன் அஜித் சேர்வாரா?

2. அப்படி விஜய் அஜித் இணையும் சந்தர்ப்பத்தில் மூன்றாவது ஹீரோ யார் இணைவார்?

3. இந்த படத்துக்கு பொருத்தமான கதாநாயகி யார்?

4. பொருத்தமான இசையமைப்பாளர் யார்?

5. படத்துக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்றால் என்ன பெயர் வைக்கலாம்.?

மறக்காமல் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு போங்கள். சில நேரங்களில் உங்கள் ஆலோசனை ஷங்கருக்கு பயன்படலாம்.

தளபதியும் தலையும் சேர்ந்து ஒரு வெற்றி படம் தர வாழ்த்துவோம்.
Share:

Friday, June 18, 2010

வாக்களிப்பு நிறைவடைய இன்னும் இருப்பது ஒரு சில நிமிடங்கள்.



வணக்கம் மக்கள்ஸ்,

இதுவரை நாளும் உங்கள் அமோக ஆதரவில் நடைபெற்று வந்த திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகளுக்கான வாக்களிப்பு இன்னும் சில நிமிடங்களில் நிறைவுக்கு வர இருக்கின்றது. உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து இந்த வாக்களிப்புக்கு அமோக ஆதரவு வழங்கிய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.

இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில் இன்னும் வாக்களிக்காத நபர்கள் உங்கள் வாக்கினை அளிப்பதுடன் முடிவுகளை விரைவில் அறியக்கூடியதாக இருக்கும். நீக்கல் வாக்களித்தவர் தான் வெற்றியாளரா என்பதை உத்தியோக பூர்வமாக அறிய அந்த பொன்னான நேரத்துக்கு காத்திருங்கள்.

வாஞ்சையுடன் வாக்களிப்போம் விரும்பியவரை வெல்லவைப்போம்.


Share:

Monday, June 14, 2010

சிம்பு,அஞ்சலி,பிரகாஷ்ராஜ்,சந்தானம், அஜித் முன்னணியில்- வாக்களித்து முடிவுகளை மாற்றுங்கள்.



வணக்கம் மக்கள்ஸ்,

திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் 2010 வாக்களிப்புகள் அனல் பறக்க நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழ் சினிமாவுக்கும் பதிவுலகுக்குமான ஒரு பாலமாக இரண்டாவது வருடமாக நடைபெறும் இந்த வாக்களிப்புக்கு பல பதிவர்களின் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. பல நல்லுள்ளம் கொண்ட பதிவர்கள் தங்கள் வலைப்பூக்களில் வாக்களிப்பு நடைபெறும் வலைப்பூவின் லிங்க் கொடுத்து வாக்களிப்பை ஊக்குவித்துள்ளனர்.

எங்கள் இந்த அறிய முயற்சியின் இன்னொரு வெற்றியாக தமிலிஷ்,யாழ்தேவி, தலைவன் போன்ற பிரபல திரட்டிகள் கூட இந்த வாக்களிப்புக்காக விளம்பர லிங்க் கொடுத்து எம்மை தட்டி விடுகின்றனர். எனவே இம்முறை வாக்களிப்பு பிரமாண்டமானது என்று சொன்னால் மிகை இல்லை. வாக்காளர்களை பற்றி சொல்லவே தேவை இல்லை. அபிமானம் பெற்றவர்களுக்கு வாக்களிக்கும் அதேநேரம் திறமையானவர்களையும் முன்னணியில் திகழ வைக்க தவறவில்லை.

வரும் வெள்ளி (18.06.2010) இரவுடன் வாக்களிப்புகள் நிறைவடைந்து ஞாயிறு மிக பிரமானமான முறையில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. முடிவுகளை அறிய தயாராகுங்கள். முடிவுகள் எந்த கணமும் எப்படியும் மாறலாம் ஆனால் அது உங்கள் கைகளிலேயே. இதுவரைக்கும் கமலை பின்தள்ளி சிம்பு முன்னுக்கு ஓடுகின்றார். மறுபுறம் திரிஷாவை வீழ்த்தி அஞ்சலி முன்னணியில். மறுபுறம் பிரகாஷ்ராஜ் முன்னணியில் திகழ வடிவேலுவை பின்தள்ளிவிட்டு சந்தானம் முன்னேறி வருகின்றார். இசை அமைப்பாளரில் எந்த ஒரு சவாலும் இன்றி ரஹ்மான் முன்னணியில் திகழ்கின்றார்.

பாடலாசிரியர் வகையில் கடுமையான ஒரு போட்டி நடக்கிறது. நா.முத்துக்குமாரா? தாமரையா? என்பது விரைவில் தெரிந்துவிடும். பாடகர் பாடகியில் பெரிய போட்டிகள் இன்றி கார்த்திக், ஸ்ரேயா கோஷல் முன்னணியில் ஆதிக்கம் செலுத்தும் நாயகர்கள் இதுவரை அதிக வாக்குகள் பெற்ற ஒரு வகை ஆரம்பத்தில் சூர்யா முன்னணியில் இருந்து பின்னர் விஜய் முந்த அதன் பின் இப்போது எட்டிப்பிடிக்க முடியாத வித்தியாசத்தில் அஜித் முன்னணியில் உள்ளார். படங்களில் அங்காடித்தெரு விண்ணை தாண்டிவருவாயா இரண்டும் முட்டி மோதினாலும் தற்போது விண்ணை தாண்டி வருவாயா முன்னணியில் இருக்கின்றது. இதே கதை தான் சிறந்த இயக்குனரிலும் இருக்கின்றது. எனவே வேற்றியாலறி உங்கள் அபிமாணியை திறமையானவரை வெற்றி பெற வைப்பது நீங்கள் தான்.

இன்னும் இருக்கும் ஒரு சில நாட்களை தவற விடாது உடனடியாய் வாக்களியுங்கள். இந்த முயற்ச்சியில் நீங்களும் ஒரு பங்குதாரர் ஆகுங்கள். உங்கள் நட்சத்திரம் வெற்றியாளரை ஜொலிப்பது உங்கள் கையில். என்ன தோற்க விட்டு விடுவீர்களா?


பதிவுலக நண்பர்களே!

இந்த அறிய முயற்சிக்கு நீங்கள் வழங்கிய ஆதரவுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நன்றி சொல்லி உங்களை எங்களில் இருந்து பிரிக்க விரும்பவில்லை. வாக்களிப்பின் முடிவுகள் அறிவிக்கும் தருணம் அந்த முடிவுகளை உங்கள் தளத்திலும் பிரசுரிக்கும் வகையில் நாங்கள் சில விடயங்களை வழங்க தயாராக இருக்கின்றோம். எனவே உங்கள் வலைப்பூக்களில் பிரமாண்டமான முடிவை அறிவிக்க விரும்புவோர் எம்மை பின்னூட்டம் வாயிலாக தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் மின் அஞ்சல் முகவரியை அனுப்புங்கள். பாதுகாப்பு கருதி அவற்றை பிரசுரிக்காது உங்களிடம் தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொள்கின்றோம்.
Share:

Monday, April 19, 2010

சீ போங்க வெட்கமாய் இருக்கு.

என் முதல் இரண்டு போட்டோ கொமண்ட்ஸ் பதிவுகளும் கிரிக்கெட் சம்பந்தமாக இருந்தது. அதற்கு உங்கள் ஆதரவும் அமோகமாக இருந்தது. அந்த சந்தோசத்தில் இப்போது முதல் முறையாக சினிமா பதிவொன்று....இம்முறை என்ன கேட்கப்போகின்றேன். நாங்கள் எப்போதும் ஒரே பேச்சு தான் இண்டைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒன்றில்லை. அதனால வாக்குப்போடுங்க கருத்து சொல்லுங்க...ப்ளீஸ் சீரியஸா எடுக்காமல் ரசித்து விட்டு போங்க.

இம்முறை பதிவில் முதல் மூன்று படங்களும் பார்ப்பதற்கு கொஞ்சம் எழுத்துக்கள் சிறிதாக இருக்கின்றன. எனவே படத்தில் மேல் சொடுக்கு பெரிதாக்கி பாருங்கள். அடுத்த முறை இந்த தவறை சரி செய்கின்றேன்.










Share:

Thursday, April 15, 2010

பதிவர்களே! கட்டாயம் படியுங்கள் தவறு நடந்துவிடக் கூடாதென்பதற்காக!



கடந்த ஒரு சில நாட்களாக சில வலைப்பூக்களிலும் பிரபல இணையத்தளம் ஒன்றிலும் விஜயின் தொடர் தோல்விகளும் அஜித்தின் சுமாரான வெற்றியும் திரை உலகையும் தாண்டி இப்போது ஐ.பி.எல்லிலும் வியாபித்திருப்பதாக செய்திகள் வருகின்றன. அதாவது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்ட விஜய் போட்டி நடைபெறும் காலகட்டத்தில் மைதானத்துக்கு சென்று வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தாததால் அவரை நீக்கிவிட்டு அஜித்தை நியமிக்க இருப்பதாக அந்த செய்தியை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஏற்கனே விலகிய ஒருவரை எப்படி விலக்கமுடியும் என்பதே என் கேள்வி?

இந்த விடயம் நேற்று இன்று தான் இணையத்தில் நான் கண்டேன். ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தொலைக்கட்சியிலேயே இந்த செய்தியை நான் பார்த்து விட்டேன். உடனடியாக லோஷன் அண்ணாவிற்கு தொடர்பை ஏற்படுத்தி விசாரித்தரித்ததுடன் அதை நானும் தேடி உறுதிப்படுத்திக் கொண்டேன். அந்த உறுதிப்பாடு என்னவென்றால் கடந்த முதலாவது ஐ.பி.எல் தொடருடனே விஜயுடனான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது. இதில் இன்னொரு குற்றச்சாட்டு என்னவென்றால் விஜய் மைதானம் வரவில்லை என்பது. முதல் தொடரை பார்த்தவர்களுக்கு தெரியும் தொடக்க விழா முதல் தன் மகனுடன் வந்து சென்னையில் இடம்பெறும் போட்டிகளில் கலந்து கொண்டவர் விஜய். அதேநேரம் ஒப்பந்தம் செய்யும் போது அவர் போட்ட நிபந்தனைகளில் தனக்கு படப்பிடிப்பு உள்ளநாட்களில் கலந்து கொள்ள முடியாதென்றும் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் மாத்திரமே கலந்து கொள்வேன் என்றும் தெளிவாக சொல்லிவிட்டார். இதையும் இதே இணையத்தில் தான் படித்து தெரிந்தேன். இரண்டாவது தொடருக்கே வராத விஜய் இப்போது வரவில்லை என்று குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது.

மூன்றாண்டுகளுடன் ஒப்பந்தம் முடிந்து வீர்கள் முதல் முழு அணியும் மாறும் நேரத்தில் சென்னையும் தன் தூதராக அஜித்தை நியமிக்கலாம் அதில் தப்பில்லை. அதற்க்கு காரணம் வேறாக இருக்கலாம். சிலவேளை விஜய் ஒத்துக்கொள்ளவில்லை என்றும் வைத்துக்கொள்ளலாம். அல்லது அஜித்தின் அண்மைய பிரபலமாக கூட இருக்கலாம். ஆனால் ஒரு தப்பான செய்தியை சொல்லி அஜித்தை கொண்டுவருவது என்று செய்தியை வெளியிடுவது ஏன் என தெரியவில்லை. சாதாரண விழாக்களுக்கு வரவே களைத்துப்போகும் அஜித் விழாக்களில் பங்குபற்றாத அஜித் மைதானத்துக்கு வந்தா உற்சாகப்படுத்தப்போகின்றார் என்பது என் தனிப்பட்ட கேள்வி? ஒருவேளை இங்கே அதிக பணம் கிடைக்கின்றதென்று வருவாரோ தெரியாது? (விழாக்களில் கலந்து கொள்ள சிலருக்கு பணம் வழங்கினாலும் ரஜினி கமல் விஜய் அஜித் போன்ற நட்சத்திரங்கள் மரியாதை நிமித்தமே கலந்து கொண்டுவருகின்றனர்.)

அன்பார்ந்த என் சகோதர பதிவர்களே! ஒரு செய்தியை நாம் இடுகையாக இடும் முன்னர் அந்த செய்தி பற்றி கொஞ்சம் அலசி ஆராய்ந்து இடுவதே நமக்கு நல்லது. இல்லாவிட்டால் நம்மூலம் தவறான செய்திகள் வந்துவிடுமென்பது உங்கள் நன்பனில் ஒருவனாக என் கருத்து. கோபமின்றி ஏற்பீர்கள் என நம்புகின்றேன். இந்த இடுகையில் தவறிருந்தால் சொல்லுங்கள் நான் திருத்திக்கொள்கின்றேன்.

இன்று இன்னும் ஒரு விஜய் பற்றிய இடுகையும் ஒரு சில இடுகைகளும் இடலாம் என எண்ணியிருந்த நிலையில் இந்த செய்திகளை பார்த்தவுடன் இந்த இடுகையை நான் இடவேண்டும் என்ற அவசரத்தில் இடுகின்றேன். நேரம் கிடைப்பின் இன்றே அந்த இடுகைகளும் வரும்....
Share:

Sunday, February 28, 2010

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றும் விஜய்.?



எம்.ஜி-ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் இந்த இணைக்கடுத்து எத்தனை பேர் வந்தாலும் பிரகாசித்தாலும் நாம் மறுக்கமுடியாமல் ஏற்கவேண்டிய இணை விஜய்-அஜித் இணைதான். இரண்டு திலகங்களும் ஒரு திரைப்படத்தில் மட்டும் இணைத்து நடித்தனர். அடுத்த இருவரும் பல படங்களில் நடித்தனர். திலகங்களை போல ஒரே படத்துடன் நிறுத்திவிட்டனர் தளபதியும் தலையும். இதற்கு காரணம் தான் எல்லோருக்கும் தெரியுமே. மீண்டும் இணையும் வாய்ப்பில்லை என இவர்கள் சொல்லியே விட்டனர். ஆனால் இப்போது மீண்டும் அதற்கு வாய்ப்பு ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.(எல்லாம் ஆசைதான். இது நடக்காது என தெரியும்.)


இளையவர்களில் இப்போது முன்னணியில் இருக்கும் நால்வரும் ஒருவருடன் ஒருவர் இணைந்து நடிக்கதவர்கள் இல்லை. ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் விஜயுடன் அஜித் சேர்ந்து நடித்தார் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது விஜயின் தந்தை என்பது மட்டுமில்லாமல் விஜயின் தாயார் தயாரித்த உணவை இருவரும் ஒரே தட்டில் உண்டகாலம் அது. அதன் பின் பார்த்தாலே பத்தும் நிலையில் இருந்தவர்கள் இப்போது தங்கள் மனைவியர் சமைத்த உணவுகளை (முன்பு தாயார்) பரிமாறிக்கொள்ளும் அளவு நட்பு இருக்கின்றது. படங்களிலும் ஒருவரை ஒருவர் சாடல் குறைந்துள்ளது. இந்த நிலையில் இவர்களின் இணைவு. அதற்க்கு பிரமாண்டமாக தயாரிக்கும் இயக்குனர், நல்ல கதை, அள்ளிக்கொட்டும் தயாரிப்பாளர் ஜாம்பவான் கூட்டணி நிச்சயம் அமையவேண்டும். அது இப்போது அமைந்திருப்பது இவர்களை இணைக்காதா என்ற என் ஆசையை தூண்டி விட்டுள்ளது.


3இடியட்ஸ் எவ்வளவு பிரமாண்டமான வெற்றியை பெற்ற படம் என்பது உங்களுக்கு தெரியும்.அதேபோல அப்படி திரைப்படங்கள் வராதா என்ற ஆவலையும் தமிழர்களுக்கு தூண்டிய படம். ஏன் வராது இதோ தருகின்றோம் என விஜய் அதன் உரிமையை வாங்கியதாக ஒரு பேச்சு. இல்லை இல்லை ஜெமினி வாங்கி அதில் விஜயை நடிக்க வைக்க முயற்ச்சிபதாக கேள்வி. எதுவாய் இருப்பினும் இந்த முயற்சிக்கு பலன் வெகு தொலைவில் இல்லை. காரணம் விஜய்க்கும் இமாலய வெற்றி ஒன்று தேவைப்படுகின்றது.



அப்படி இருக்கையில் அஜித்துடன் கூட்டு? பதில் கேள்விக்குறியாக இருந்தாலும் அஜித் இரண்டு கதாநாயகர்கள் உள்ள படங்களில் நடித்த இளம் நடிகர் என்பதை மறக்கக்கூடாது. விக்ரமுடன் உல்லாசம், பார்த்தீபனுடன் நீவருவாய் என,கார்த்திக்குடன் ஆனந்த பூங்காற்றே, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பிரசாந்துடன் கல்லூரி வாசல், ரஞ்சிதோடு மைனர் மாப்பிள்ளை, சத்யராஜோடு பகைவன்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனில் மம்முட்டி,அப்பாஸ், தீனாவில் சுரேஷ் கோபி,உன்னைக்கொடு என்னை தருவேனில் பார்த்தீபன்,சாம்ராட் அசோகாவில் ஷாருக்கான் என தொடர்ந்தவர் அண்மைக்காலமாக தான் கொஞ்சம் இந்த பாலிசியை விட்டிருக்கின்றார் சிலவேளை இந்த கூட்டணி அமைந்தாலும் ஆச்சரியமில்லை. நடக்குமா????


மூவரில் இருவர் ஏறக்குறைய உறுதியாகிவிடும் என நினைக்கின்றேன். அமீர்கான் வேடத்தில் விஜயும் மாதவன் நடித்த வேடத்தை தமிழிலும் அவரே செய்வார் என ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சாத்தியதுக்கான வாய்ப்புக்கள் உண்டு. காரணம் மாதவனுக்கு விஜய் மேல் அன்பும் அதே நேரம் மதிப்பும் அதிகம். ஒரு பெட்டியில் சொல்லி இருந்தார் விஜயை பார்க்க பொறாமையாக இருக்கின்றது. மூன்று மாதங்களுக்கு ஒரு படம் நடிக்கின்றார் பெரிதாக மினக்கெடுவது இல்லை. அவரின் பெயரை வைத்தே படத்தி ஓட்டி விடுகின்றார். அவரை போல ஆடத்தெரிந்தால் நான் தமிழ் நாட்டின் நம்பர் வன் நாயகனாகிவிடுவேன் என்று. விஜய் பக்கம் பார்த்தால் மாதவனால் பிரச்சனை இல்லை. என்ற ரீதியில் இவர்கள் கூட்டணியில் விரிசல் சாத்தியமில்லை


அடுத்து சூர்யா. இப்போது தனி ஆவர்த்தனம் நடத்தினாலும் விஜயுடன் நேருக்கு நேரில் அறிமுகமானவர். அதன் பின் பிரண்ட்ஸ் படத்தில் நடித்தது மட்டுமன்றி இருவரும் நல்ல நண்பர்கள் எனவே இந்த இணைக்கான வாய்ப்பும் அதிகம் இருக்கின்றது. சூர்யாவை பொறுத்தவரை நடிப்பில் பின்னிவிடுவார் ஆனால் விஜய் தரப்பில் சூர்யாவேண்டாம் என்ற கதை எழும் வாய்ப்பு குறைவு காரணம் நட்பு. சூர்யாவும் காதலே நிம்மதியில் முரளி, பெரியன்னாவில் விஜயகாந்த், நந்தாவில் ராஜ்கிரண், மௌனம் பேசியதேயில் அறிமுகனாயகன் நந்தா, பிதாமகன் விக்ரம்,ஆயுத எழுத்தில் மாதவன் சித்தார்த் என கூட்டு சேர்ந்து கலக்கியவர் விஜயுடன் ஜோடி சேர்ந்தால் அமர்க்களம் தான். அனேகமாக இந்த ஜோடியின் வாய்ப்பே அதிகம்.

மறுபக்கம் விக்ரமும் விஜயும் எவ்வளவு நெருக்கம் என்பதும் ஊரறிந்ததே. இருவரும் ஒன்றாக ஜாலியாக பல விழாக்களில் கலந்துகொண்டது மட்டுமில்லாமல் அரட்டைகளிலும் பங்குபற்றியவர்கள். அப்போதே சரியான வாய்ப்பமைந்தால் சேர்ந்து நடிக்க தயார் என சொன்னவர்கள் இப்போது வாய்ப்பமைந்திருக்கின்றது இணைவார்களா என எதிர்ப்பாக்கின்றேன்? விக்ரமை பொறுத்தவரை கூட யார் நடித்தாலும் பரவாயில்லை தூக்கிச் சாப்பிட்டு விடுவார்.
அவருக்கு ஒரு பலமான கதாபாத்திரம் போதும் வில்லனாக கூட நடிக்க தயார் என்றவர். இவரின் பயணத்தில் மீராவில் சரத்குமாருடனும், உல்லாசத்தில் அஜீத்துடனும்,கவுஸ் புல்லில் பார்த்தீபனோடும், விண்ணுக்கும் மண்ணுக்குமில் மீண்டும் சரத்துடனும், பிதாமகனாக சூர்யாவுடனும், பசுபதியுடன் மஜாவிலும், இப்போது ராவணாவில் பிரிதிவிராஜ்,பிரபு,கார்த்திக் என எல்லோரும் கலந்து கட்டி அடித்துக்கொண்டிருக்கும் விக்ரம் நடித்தாலும் ஆச்சரியமில்லை. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலைகளில் வாய்ப்பு குறைவு.

இந்த முன்னணிகளை தவிர்த்துவிட்டு பார்த்தலால், தனுஷ்,சிம்பு நடிக்கும் வாய்ப்பும் அறவே இல்லை என்பேன். சிலவேளைகளில் விஷால், ஆர்யா நடிப்பார் என்றால் அவர்களோ பாலாவிடம் அவர் சொன்னபடி ஆறுமாதத்தில் முடித்தல் ஆர்யாவுக்கு வாய்ப்பதிகம். காரணம் விஷாலை விஜய்க்கு பிடிக்கதேன்பது வேறு கதை. அடுத்து விஜய் புகழ் பாடும் பரத்,ஜீவா இவர்களுக்கும் வாய்ப்புண்டு. ஏன் ஜெயம் ரவி கூட நடிக்கும் வாய்ப்பு சூர்யாவுக்கு அடுத்து உண்டென நான் சொல்வேன்.ஆனால் இவர்களை தவிர்த்துவிட்டு இரண்டாம் நிலை நாயகர்களில் ஒருவர் நடித்தாலும் ஆச்சரியமில்லை.

இவர்களை விட மற்றவர்களுக்கு வாய்ப்புக்குறைவாக இருந்தாலும் இடையில் வேறு யாரும் முந்தும் வாய்ப்பும் உண்டு. இவை எல்லாவறையும் பார்த்தாயிற்று. விஜய் இரட்டைக் கதாநாயகர் உள்ள படங்களில் அதிகம் நடித்திருக்கின்றாரா என தேடினால். ஆச்சரியம். ஆரம்பகாலங்களில் விஜயகாந்துடன் செந்தூரப்பாண்டி, அஜித்துடன் ராஜாவின் பார்வையிலே, நடிகர் திலகத்துடன் ஒன்ஸ்மோர்,சூர்யாவுடன் நேருக்கு நேர்,பிரண்ட்ஸ் என சொற்ப படங்களில் மட்டுமே நடித்தவர் சிறப்புத் தோற்றத்தில் ரவிக்ரிஷ்ணாவுடன் சுக்ரன், நிதின் சத்யாவுடன் பந்தயம் போன்ற படங்களில் மட்டுமே நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில் விஜய்-மாதவனோடு இணைவதே பெரிய விடயமாக இருக்கையில் மூன்றாவதாக ஒரு பெரிய நடிகரும் சேர்ந்தால் தமிழிலும் 3இடியட்ஸ் பிச்சிக்கிட்டு ஓடும். முன்னணி நாயகர்களாக மாறிய பின் இளம் நாயகர்கள் இணைந்து நடித்து தமிழ் சினிமாவின் புதிய பாதையை திறந்த பெருமையும் விஜய்க்கு வரும். இது நடக்குமா? அல்லது காத்தோடு போகுமா பார்ப்போம்?


நடிகைகளை பொறுத்தவரை பஞ்சம் நிலவும் காரணத்தால் மீண்டும் வந்த அசின், அலுத்துப்போன திரிஷா, முத்திப்போன நயன்தாரா, புதிய அக்கா அனுஷ்கா, இடையழகி இலியானா, அசல் நாயகி சமீரா ரெட்டி, புன்னகை அரசி(எத்தனை நாளைக்கு தான் இளவரசி வயசு போகுதெல்லா) சினேகா, நம்ம பாவனா இவர்களில் நான் சொன்ன வரிசையில் வாய்ப்பை அல்லும் சாத்தியம் உண்டு.

நான் சொன்னதெல்லாம் இருக்கட்டும் இந்த அதிசயம், ஆச்சரியம்.....நடந்தால் விஜய்-மாதவனுடன் இணையும் அந்த மூன்றாவது ஹீரோ யார்? மாற்றங்களை உண்டாக்கப்போகும் அந்த நிஜ நாயகன் யாராக இருக்கும் உங்கள் ஆருடங்களையும் சொல்லுங்கள். நடந்தால் எல்லோருமாக சேர்ந்து சந்தோசப்படுவோம்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox