Sunday, December 12, 2010

கொலைக்காற்று பாகம்-3

பதிவர்களினால் தொடர் கதையாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் கொலைக்காற்று கதையின் மூன்றாவது பகுதி என் கையில். ஏற்கனவே எழுதிய பகுதிகளை படிக்க இங்கே கீழே உள்ள சுட்டிகளுக்கு செல்லுங்கள்.




தொலைபேசி அழைப்பை தொடர்ந்து உடனடியாக கொலை நடந்த பீச்சுக்கு விரைந்த பொலிஸ் அதிகாரி சூர்யபிரகாஷ் சேகரின் உடலை கூர்ந்து கவனித்ததில் அவரின் ஆடையில் பெண்ணின் தலைமுடி சில இருந்ததை அவதானித்து விட்டார். இருப்பினும் அதை பெரிதாக காட்டிக்கொள்ளாது பிரேதத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு நேரடியாக காவல்நிலையம் சென்றுவிட்டார்.

"குட் ஈவினிங் சார்" - கான்ஸ்டபிள்

"சொல்லையா என்ன இண்டைக்கு ஒரே செத்த வீடாய் இருக்கு" இது சூர்யபிரகாஷ்.

"அதுதான் தெரியல என்ன சார் போன இடத்தில் ஏதும் சிக்கிச்சா" என காண்டபில் கேட்டதும் "அட போய்யா நீவேற என்ன கறுமமோ தெரியல ஏதும் கள்ள தொடர்போ தெரியாது. சும்மா போயா இந்த கேஸ் எல்லாம் நடத்தி என்னத்தை கிழிக்க போறோம். போ போய் எனக்கு ஒரு கொத்தும் சிகறேட்டும் வாங்கி வா" என அதட்டி விட்டு அப்படியே மெதுவாய் கண்ணயர்கின்றான் சூர்யபிர்காஷ்.

.......................................................................................................

மறுபுறம் தனது கையடக்க தொலைபேசியில் இருந்து தனது ஆருயிர் நண்பன் சேகரை தொடர்பு கொள்ள முயன்ற கெளதமுக்கு ஏமாற்றமே மிஞ்ச அப்படியே வர்ஷாவுக்கு பக்கத்தில் சாய்ந்து படுத்து கொண்டே கண்களை மூடினாலும் கெளதமை ஏனோ தூக்கம் அணைக்கவில்லை. புரண்டும் திரும்பியும் படுத்தும் தன் கணவன் தூங்கவில்லையே என அறிந்த வர்ஷா "என்னங்க தூக்கம் வரவில்லையா? என்னத்தை நினச்சுக்கொண்டு இருக்கிறிங்க" என கேட்க "ஒண்ணுமில்லை லேசா தலைவலிக்கிறது நீ படு" என சொல்லிவிட்டு மறு பக்கம் திரும்ப முயன்றவனை இழுத்து அணைத்து அன்பாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு "எதுக்குமே யோசிக்காதிங்க அதுதான் நான் கூட இருக்கிறேன் எல்லா. பிறகென்ன தலைவலி அப்புறம் போனில தட்டுறது" என வர்ஷா தட்டு தடுமாறி கேட்டுவிட "அப்போ நீ இன்னும் தூங்கலையா? நான் என்ன செய்கின்றேன் என பார்த்து கொண்டா இருந்தாய்?" என கோபமும் சந்தேகமும் கலந்து கெளதம் சொல்ல "என்ன சார் இப்போ கோபம் நான் ஒன்றும் அடுத்த வீட்டுக்காரி இல்லை. உங்க பொண்டாட்டி தான். நானொன்றும் ஒட்டுக்கேட்கவில்லை. உடல் அசதியில் வந்து படுத்தாலும் நீங்கள் எனக்கு அருகில் இருக்கிறதால மனதளவில் எனக்கு அசதியே வரவில்லை" என ஜொள்ளு விட்டபடியே வர்ஷா பேசினாலும் கெளதமால் அதற்க்கு இசைய முடியவில்லை.

ஒரு சில நிமிட நேர பேச்சுக்கு பிறகு சத்தம் குறைந்தது. ஒருவர் மற்றவர் தூங்கிவிட்டார் என்று நினைத்தார்களோ என்னவோ தங்களுக்குள் அணைக்க முயாவிட்டாலும் கால ஓட்ட கட்டளைக்கமைய இரவை அணைத்துக்கொண்டார்கள். வர்ஷா தூங்கிவிட்டதை உணர்ந்த கெளதம் மெதுவாய் அரவமின்றி எழுந்து வந்து தன் கையடக்க தொலைபேசியைஎடுத்து சேகரின் இலக்கத்துக்கு அழைப்பெடுக்க இம்முறை ஒரு ஆண்குரல் "ஹலோ ஐ ஆம் சேகர்" என்றது இருந்தாலும் அது தன் நண்பன் சேகரின் குரல் இல்லை என உறுதி செய்து கெளதம் அந்த அழைப்பை உடனடியாகக் துண்டித்ததுடன் அடுத்த கணமே ஜெனியின் நம்பருக்கும் அழைப்பை எடுத்தான். என்ன ஆச்சரியம் இம்முறையும் அதே குரல் ஆனால் "நான் ஜெனியின் அப்பா நீங்க"
"......................................."
"ஹலோ யாரடா அது"
".........................................."
"அந்த நம்பரும் இதுவும் ஒன்று தான் சார்"
டக் டக்

ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கிறது என புரிந்து கொண்ட கெளதம் அந்த அழைப்பை துண்டித்தது மட்டுமன்றி அந்த இலக்கத்தையும் துண்டித்துவிட்டான்.
..................................................................................................................

அதே நேரம்....கொழும்பு காவல் நிலையத்தில்.......

"சார் இரண்டு நம்பரும் ஒன்றுதான். யாரோ இரண்டுபேருக்கும் தெரிந்தவன் கோல் பண்ணுறான் போல..."
"அந்த நம்பர் யார் பெயரில் இருக்கு என்று எனக்கு இப்ப உடனே தெரியணும்...." - சூர்யபிரகாஷ்.
"இப்போ நைட் காலமைக்கு தான் எடுக்கலாம்."
"ஓகே ஓகே எனக்கு நாளைக்கு தெரிஞ்சாகணும்" இது சூர்யபிரகாஷ்.

........................................................................................

கண்டியில் கெளதம் அறையில்..........

தன் எந்த முயற்சியும் பலனளிக்காமல் வந்து கட்டிலில் சரிந்த கெளதமின் நினைவுகள் கடந்த காலத்தை மீட்டி பார்க்க தொடங்கியது.......

இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் மாணவர் விசாவில் லண்டன் சென்ற கெளதம் பல்கலைக்கழகத்தில் தன் கல்வியை சீராக ஆரம்பித்தான். ஒரு சில வார நகர்வுகளுக்கு பிறகு தானும் இன்னொரு மாணவியும் தான் அங்கே தமிழர் என்பதை இனங்கண்டு கொண்டு அவரை சந்திக்கின்றான்.

"ஹாய்"
"ஹாய்"
"ஐ ஆம் கெளதம் புறோம் ஸ்ரீ லங்கா. ஆர் யூ எ ஸ்ரீ லங்கன் தமிழ்?"
"எஸ். ஐ ஆம் ஜெனி. ஹவ் ஆர் யூ?"
"ஐ ஆம் ஓகே....ஹா ஹா ஹா"
"என்னங்க சிரிப்பு?"
"இல்லை நாங்க இரண்டுபேரும் தமிழர்கள் என்று அடையாளம் தெரிஞ்ச பிறகும். வி ஆர் டாக்கிங் இன் இங்கிலீஷ்."
ஜெனி விழுந்து விழுந்து சிரிக்கின்றாள்.
"ஏனுங்க சிரிக்கிரிங்க"
"இல்லை தமிழில கதைப்பம் எண்டு நீங்களே இங்கிலிஷில கதைக்கிறிங்க அதுதான்."
"என்னங்க பண்ணுறது இங்க நம்ம ஆட்கள் ஒரு மூஞ்சியை பார்க்கிறதே கஷ்டமாய் இருக்கு. உங்களை பார்த்தது சந்தோசம்"
"எனக்கும் தாங்க. வி ஆர் பிரண்ட்ஸ்."
"ஏங்க நான் ஒன்று சொன்னால் தப்பாய் எடுக்க மாட்டியலே"
"இல்லை சொல்லுங்க. அதுதான் சொல்ல வந்திட்டிங்க அப்புறம் என்ன கேள்வி."
"ஓகே சொல்லுறேன். சிரிக்கும்போது உங்களை பார்த்தால் லைலா மாதிரி இருக்குதுங்க"
"இது லைலாவுக்கு தெரியுமா? ஓகே ஓகே எனக்கு ஐஸ் வச்சது போதும் வாங்க கிளாஸ் தொடங்கபோகிறது"

இருவரும் ஒரே பாதையில் பயணிக்க இரண்டுபேருக்கும் இடையில் மலர்ந்த நட்பு காதலாகி பின்னர் லண்டனில் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் அளவிற்கு வந்தது. இந்த இளம் காதல் ஜோடியின் வாழ்வில் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் சுமுகமாக வாழ்க்கை போய் கொண்டிருக்க இருவரும் தங்கள் கல்வியை முடித்து பட்டம் பெற்றனர். அதன் பின் இரண்டு வருட வேலைவாய்ப்புக்கு வழங்கும் விசாவையும் பெற்று எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு கஷ்டப்பட்டு உழைத்து பணத்தையும் சேர்க்க தொடங்கினர். தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடங்களையும் ஒன்றும் விடாமல் தன் நண்பன் சேகருடன் தொலைபேசியிலும் மின் அஞ்சலிலும் பகிரும் கெளதம் தன் நண்பனை தன் வருங்கால மனைவுக்கும் நல்ல நண்பனாக மாற்றி இருந்தான். சில நேரங்களில் இருவருக்குள்ளும் செல்ல சண்டைகள் வரும் போதெல்லாம் சேகர் தான் பேசி தீர்த்து வைப்பான். அந்த நேரத்தில் சேகர் சில நேரங்களில் ஜெனியின் ஒரு நல்ல சகோதரன் போல இருந்து கெளதமை எதிர்த்து இவர்கள் பிணக்கை தீர்த்ததும் உண்டு.

இந்த நிலையில் கெளதம் மற்றும் ஜெனிக்கு இருவர் வீட்டிலும் திருமண பேச்சுக்கள் வந்தாலும் இருவராலும் தங்கள் காதலை பற்றி வீட்டில் சொல்ல முடியாமல் இருவர் மதமும் தடுத்துக்கொண்டே இருந்தது. இந்த நேரத்தில் கெளதமின் அம்மா வர்ஷாவை பார்த்து தன் மகன் வெளிநாட்டில் இருக்கின்றான் லண்டன் மாப்பிள்ளை என்ற பெயருடன் நிறைய சீதனத்துடன் பொண்ணும் கேட்டு எல்லாம் ஓகே செய்துவிட்டார். இதை கெளதம் பெரிதாக எடுக்காவிட்டாலும் விதி இவர்கள் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தது.

ஜெனி, கெளதம் இருவருக்கும் ஒரே நேரத்தில் விசா முடிய மேலும் லண்டனில் தங்க முடியாத சூழ்நிலை வர இருவரும் ஒரே நாள் ஒரே விமானத்தில் பறந்து தாயகம் திரும்பினர். விமான நிலையத்தில் வைத்து பிரியும் போதே....

"கெளதம் என்னை மறந்திட மாட்டியே?"
"ஆர் யூ (f)பூல்? உன்னை விட்டு என்னால வாழ முடியுமா? தைரியமாய் போ நானே உன் வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்கின்றேன்."

இருவர் கண்களும் பனிக்க நீண்ட நாட்களின் பின் அந்த காதல் ஜோடி தன் சிறகுகளை வேறு வேறு திசையில் பறக்க திருப்பியது.

வீட்டுக்கு வந்த கெளதம்,ஜெனியால் நேரடியாக சந்திக்க வாய்ப்புக்கள் இல்லாமல் போக தொலைபேசியில் மட்டுமே இவர்கள் காதல் வளர்ந்தது. இந்த நிலையில் தான்.
"டேய் உனக்கு நிச்சயம் பண்ணனும் அதுக்கு முதல் போய் பொண்ணை ஒருக்கா பார். உனக்கு பிடிக்காட்டில் வேண்டாம். ஆனால் பார்த்திட்டு சொல்லு" இது கெளதமின் அம்மா.

அவரின் நச்சரிப்பு தாங்காமலே சேகரையும் கூட்டிக்கொண்டு வர்ஷா வீட்டுக்கு போனவன். அவர்களின் வீட்டின் வசதிகளை பார்த்ததும் மனதில் சலனம் தோன்றுவதை உணர தொடங்கினான்.
"மச்சான் எவ்வளவு பெரிய வீடடா"?
"ம் உன் அம்மா உனக்கு பெரிய இடமாய் தான் பார்த்திருக்கா? சொத்து ஓகேடா ஆனால் பொண்ணு தான் எப்பிடி இருக்கோ?"

பேசிக்கொண்டே உள்ளே சென்றவர்களை இன்முகத்துடன் வரவேற்ற குடும்பம் வர்ஷாவை கோக் கொண்டு வா என சொல்ல பல திரிஷாக்களையும் அசின்களையும் அனுஷ்காக்களையும் ஒன்றாக சேர்த்த ஒரு அழகு சில வருவதை கண்டு அப்படியே சொக்கிப்போய்விட்டன் கெளதம். சம்பிரதாயமாய் பார்க்க போனவன் கூடிய சீக்கிரமே கல்யாணத்தை முடிப்போம் என தன் மாமா மாமியிடம் சொல்லிவிட்டு வெளியில் வர சேகர் இது சரியில்லையா ஜெனி பாவம் என எச்சரித்தான்.

"போடா போ. அது லண்டனில எல்லாம் முடிஞ்சிது. இங்கே இனி அவள் எதுக்கு. ஜெனியிடம் என்ன இருக்கு. வர்ஷா பார் எப்பிடி அழகாய் இருக்கா. அதைவிட நாலு தலைமுறைக்கு உட்காந்து சாப்பிட சொத்து இருக்கு" என்று கெளதம் சொல்லிமுடிக்க முன்னரே

"நான் இப்பவே ஜெனியிடம் எல்லாம் சொல்ல போறேன்" என சென்ற நண்பனை தன் தாயின் பேச்சை மீற முடியாது இவளை தான் திருமணம் செய்ய வேண்டும் என புதிய கீதை ஒன்றை உரைத்து சேகர் மனதையும் கலைத்தான்.

சொல்லி ஒருமாத்தத்தில் திருமணமும் இனிதாய் நடந்தேறியது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஜெனியுடன் கதைப்பதை கெளதம் தவிர்க்க முயன்றாலும் மீறி கதைக்கும் சந்தர்ப்பத்தில் இதை காட்டிக்கொள்ளாமல் நடக்க முயன்றான். ஆனால் கெளதமின் திருமண நாளன்று ஜெனியிடம் இனி நீ அவனை தொடர கூடாது அவன் இனி இன்னொருத்தனுக்கு சொந்தம் என சேகர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொல்லி வைக்க முதல் கெளதமின் அலைபேசி அலறியது.

அந்த அழைப்பை ஏற்றவன் சொன்ன வார்த்தைகள் மட்டுமே இங்கே எழுத்தில் வடிக்க கூடியவை. ஜெனி.....?

"நான் சொல்லுறத கேளு ஜெனி நான் வேணுமெண்டே செய்யல என் அம்மா கட்டாயப்படுத்தி செய்திட்டா. நீ கவலை படாதே நான் எப்பிடியும் இவளை டைவர்ஸ் பண்ணிட்டு உன்னோட தான் வாழ்வேன் நீ தான் என் மனைவி என சமாதனப்படுத்திக்கொண்டிருக்கவே அவன் அம்மா அந்த இடத்துக்கு வர தொடர்பை துண்டித்து விட்டான். பிறகு பல தடவை ஜெனி தொடர்புகொள்ள முயன்றும் முடியாமல் போய்விட்டது. ஆனால் மூன்று நாட்கள் கடந்த பின் வந்த அழைப்பை ஏற்று பேசிய கெளதம் உனக்காக அவளை கொலை செய்து விட்டு வந்து என்றாலும் வாழ்வேன். கொஞ்ச நாள் பொறு என சொல்லிவிட்டு வைத்துவிட்டான். இந்த நிலையில் தான் ஜெனி, சேகர் என இருவரின் கொலையும் நடந்தேறி இருக்கிறது.


மறு நாள் அதிகாலை.....

"வர்ஷா இண்டைக்கு நாங்கள் கொழும்புக்கு போகணும் சீக்கிரம் எழும்பு"
"என்னங்க இண்டைக்கு வேலை இல்லையா?"
"இருக்கு ஆனால் நம்ம சேகரை யாரோ கொன்னுட்டாங்களாம்"
"என்னது உங்க பிரென்ட் சேகர்? செத்திட்டாரா? எப்பிடிங்க? யாரு கொன்றதாம்? உங்களுக்கு எப்பிடி தெரியும்?"
"வா எல்லாம் போகும் போது சொல்லுறேன் இப்போ ரெடியாகு"
இருவரும் பேசிக்கொண்டே கொழும்பை நோக்கி விரைகின்றனர்.

இதற்கிடையில் கெளதம் முன்னர் சேகர் மற்றும் ஜெனியுடன் தொடர்பு கொண்ட நம்பர் யார் பெயரில் பதிவாகி இருக்கின்றது என்று தேடி பார்த்த போது அது சேகரின் பெயரில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. நாடு திரும்பிய வேளை சேகர் தன் பெயரில் இருந்த ஒரு சிம்மையே கெளதமிடம் கொடுக்க தொடர்ந்து கெளதம் அதையே பயன்படுத்தி வந்தான்.

நேராக சேகர் வீட்டுக்கு சென்றவர்கள் பகல் முழுவதும் அவர்களுடன் இருந்துவிட்டு இரவு ஒரு விடுதிக்கு சென்று அறை எடுத்து தங்கினர். விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனை என்று சூரியபிரகாசும் அடிக்கடி அங்கே வந்து சென்று கெளதமுக்கு நெருங்கிய நண்பராகிவிட்டார். இதனால் அவர்கள் தங்கும் ஹோட்டல் விபரங்களையும் பெற்றுக்கொண்டு அனுப்பிவைத்தார்.

ஹோட்டல் அறைக்கு வந்த இருவரும் பயண மற்றும் இறந்த வீட்டில் இருந்த களைப்பால் நேரத்துக்கே தூங்கிவிட்டனர். இடையில் தூக்கம் கலைந்து எழுந்த வர்ஷா,கெளதமுக்கு தெரியாமல் யாரோ ஒருவருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு தூங்கிவிட்டாள். இருவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கையில் ஒரு மர்மமான உருவம் அவர்கள் அறையை நெருங்குகின்றது. இந்த நேரம் சொல்லி வைத்தது போல அந்த உருவம் நெருங்கும் திசையை நோக்கியே வர்ஷாவும் எழுந்து நடக்க ஆரம்பிக்கின்றாள்.!!!!


இனி???????????????????????????????????????

கொலை குழப்பம் நிறைந்த இந்த கதையை நம் சக பதிவர் மது தொடர்வார்.

Share:

11 கருத்துரைகள்:

வந்தியத்தேவன் said...

இந்தக் கொலைக் காற்று லண்டனுக்கு வீசிவிட்டதோ. மதுவின் கையில் சிக்கி ஜெனியும் வர்ஷாவும் என்ன பாடுபடப்போகின்றார்களோ ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

நல்ல சஸ்பென்ஸுடன் முடித்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

முதல் இரண்டு பாகங்களை படிச்சிட்டு வரேன்... ஹி... ஹி... ஹி....

கன்கொன் || Kangon said...

அவ்வ்வ்வ்வ்...
என்ன கொலைவெறி...
இவ்வளவு பெரிய பதிவா....

ஆறுதலாய்ப் படிக்கிறேன். ;-)

Subankan said...

உஸ்ஸபா, நல்லவேளை சதீஷ் நான் முதலாவதா எழுதினது. கதையின் விறுவிறுப்பு எகிறுகிறது. கலக்கல் :)

Bavan said...

நேராப் போய்க்கிட்டிருந்த கதை அப்பிடியே U turn போட்டு,S turn, O turn எல்லாம் போட்டு எங்க போகப்போதுதோ, மது அண்ணாவிற்காக வெயிட்டிங்..:D

Jana said...

பிரித்து மேய்ந்துவிட்டீர்கள் சதீஸ். கதையை பவனிடம் இருந்து அருமையாக நகர்த்திச்சென்று மதுவிடம் கொடுத்திருக்கும் உங்கள் பாணி பாராட்டப்படவேண்டியது. சுவாரகசியம் குன்னறாமல் ஒரு நகர்வு. வாழ்த்துக்கள். மதுவின் கற்பனைகளுக்கு வெயிட்டிங்..

ARV Loshan said...

ஒரே கொலை வெறியாக இருக்கே..
லண்டன் போனாலே இப்படியா? ஐ மீன் கதையை சொன்னேன். ;)
மற்ற எல்லாரும் குறுக்கியது எல்லாம் சேர்த்து ஒரேயடியாக நீட்டி நிமிர்த்தி விட்டீர்களா?

ஆனால் சொடீஷோனைக் காணோமே? வாழ்த்துக்கள் ;)

மதுவிடம் 'நிறையவே' எதிர்பார்க்கிங் ;)

ARV Loshan said...

வந்தி,பவன் பின்னூட்டங்கள் ரசிக்ஸ் ;)

ம.தி.சுதா said...

கடவுளே இன்னும் எத்தனை கொலை விழுமோ.... புளொக் எல்லாம் ரத்த வெடுக்காயிருக்கு.. ஹஹ...ஹஹஹ...ஹஹஹஹ

அருமையாக நகர்த்தியுள்ளீர்கள் சதிஸ் வாழ்த்துக்கள்..

Ashwin-WIN said...

எப்டியோ தொடங்கிய கதை எப்டியோவேல்லாம் போயிட்டிருக்கு,, எங்க பொய் முடியபோதோ.. இன்னும் எந்தெந்த நாட்டுக்கு போக போதோ

யோ வொய்ஸ் (யோகா) said...

லண்டன் படிக்க போனால் நட்பு, காதலாகி பின்னர் லிவிங் டுகெதர் என வாழ்வது சகஜமோ? நான் கதையில் சொன்னேன் வேறு எந்த அர்த்தத்துடனும் பார்க்க வேண்டாம்

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive