Sunday, December 19, 2010

The making of பதிவர் சந்திப்பு! - வரலாற்று தடம்.

பதிவர் சந்திப்பை எல்லோருக்கும் ஏற்ற ஒரு நாளில் நடத்துவதே கஷ்டம் அதை விட கஷ்டம் இந்த பதிவு போடுறது. என்ன செய்வது வெளியே போகமுடியாமல் பனி மூடிக்கிடப்பதால் வீட்டுக்குள் இருந்து ஒரு அவசர பதிவு.

லண்டனில் முதன்முறையாக தமிழ் பதிவர்கள் ஒன்று கூட வேண்டும் என்ற ஆசை வந்தி அண்ணாவுக்கு எப்போதும் இருந்தது உண்டு(இப்போது மாம்ஸ் வேற விசயத்தில் பிசி) இதை நிரூஜாவும்(அட உடனே சந்தேகப்படாதிங்கோ) மாம்சும் பலமுறை பகிர்ந்து கொண்டாலும் நான் லண்டனில் காலடி வைத்த பின் தான் சந்திப்பு என அறிவித்துவிட்டார் நாடுகடந்த பதிவர்களின் அதிகாரமைய தலைவர் திரு வந்தி அவர்கள். இந்த நிலையில் நிரூஜா இலங்கை சென்று சந்திப்பை வெற்றிகரமாக நடத்தியும் விட்டார்.

நான் லண்டன் வந்தே நான்கு மாதங்கள் ஆகும் நிலையில் சந்திப்பு பற்றி எந்த பேச்சும் இன்றி நாட்கள் போக போகத்தான் மாம்ஸ்க்கும் கரவைக்குரலுக்கும் பிறந்த நாள் வந்தது. எனவே இருவரும் விருந்துவைப்பதாய் சொன்னதை நம்பி நானும் ஓகே என ஒரு நாள் சொன்னேன்.(கடைசிவரை ஏமாத்திட்டாங்க பயலுகள்) அப்போதுதான் ஏன் இதை மற்றைய சில பதிவர்களையும் சேர்த்து சந்திப்பாக்க கூடாது என எண்ணி ஒரு மாதத்துக்கு முன்னரே பேசி வைத்துவிட்டோம்.

லண்டனில் கல்வி நடவடிக்கை வேலை என எல்லாம் பார்த்து எல்லோருக்கும் சரியான நான் எது அமையும் என்றால் நூறு வருடம் சென்றாலும் அறியமுடியாது. இந்த நிலையில் திடீரென ஒரு நாளை பலரின் தெரிவில் செய்வோம் என்ற ரீதியிலும் இந்த கிறிஸ்மஸ் விடுமுறை அதற்க்கு பொருத்தமாக இருக்கும் என எண்ணினேன். அந்த வகையில் என்னுடன் என் உளறல்கள் வந்தி அண்ணா, கரவைக்குரல் தினேஷ், பங்குசந்தை அச்சு, இளங்கன், ஜனகன் மற்றும் முன்னாள் பதிவர்கள் கோசலன், பார்த்தி, ஷனா இவர்களுடன் பின்னூட்டங்களில் சில காலம் கலக்கிய செல்லம்மாவுக்கும் அழைப்பு விடுத்ததோடு இந்திய பதிவர்களையும் கலந்து கொள்ள வைக்கும் எண்ணத்தில் பதிவர்கள் சாளரம் கார்க்கி, ரசிகன் சௌந்தர் ஆகியோரிடமும் இதை பற்றி பேசி இருந்தேன்.

இலங்கை பதிவர்கள் என்பதையும் மீறி தமிழ் பதிவர்களின் சந்திப்பாக இது அமைந்தால் சந்தோசமாக இருக்கும் என்பது மட்டுமன்றி. தமிழ் பதிவர்கள் சந்திப்பு வரலாற்றில் முதன் முறையாக லண்டனில் நடக்கும் பொது அதற்க்கு பலர் வந்தால் உரம் சேர்க்கும் என்ற எண்ணம தான்.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் முதல் நாள் மதியம் தான் நாளை சந்திப்பது என ஐவர் முன் வந்த நிலையில் நாங்கள் இதை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போதே கரவைக்குரல் தினேஷ் தன கைவேலையை காட்டிவிட்டார். இதற்க்குபிறகும் நாங்கள் பின்னடிக்க முடியாது என முடிவெடுத்து ஓரளவுக்கு இடத்தையும் நேரத்தையும் முடிவெடுத்தோம். இந்த நிலையில் சிலர் தம்மால் இம்முறை பங்கு பற்ற முடியாது அடுத்தமுறை பார்ப்போம் என ஒதுன்கியதுடன் வாழ்த்துக்களை தெரிவிக்க இறுதியில் நால்வர் மட்டுமே சந்திக்க போகின்றோம் என்ற நிலை உருவானது. இங்கே கல்வியை கட் அடித்துவிட்டு வந்தாலும் வேலையை யாரும் கட் அடிக்க மாட்டார்கள். இருப்பினும் எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டும் தானே சந்தித்துவிடுவோம் என முடிவெடுத்து இரவு தூங்க போகும் நேரத்தில் மாம்ஸ் அழைப்பெடுத்து நேரம் கேட்டார். அந்த நேரம் எனக்கு காய்ச்சல் ஆனால் என்ன செய்யமுடியும் இதை நான் சொல்ல சந்திப்பை நிறுத்துவோம் என்றார் இருப்பினும் சந்திக்கணும் என்று முடிவெடுத்தாச்சு இனி நாங்களே எங்க பேச்சை கேட்ககூடாது என்ற நினைப்பில் நாளை காலநிலை என்ன என்று பார்த்தால் கடும் பனிப்பொழிவு. அப்படி ஏதும் சிக்கல் என்றாலே ஒழிய வேறு எந்த காரணத்துக்காகவும் சந்திப்பு நிக்காது என சொல்லிவிட்டு தொலைபேசியை மௌனத்தில் போட்டுவிட்டு தூங்கிவிட்டேன்.

பங்குசந்தை அழைப்பு எடுத்து பார்த்து என்னை தொடர்பு கொள்ள முடியாமல் போக கரவைக்குரலுடன் தொடர்பை ஏற்ப்படுத்தி எல்லோரும் மறுநாள் oxfrod circus இல 12.30 க்கு சந்திப்பதை ஏற்பாடானது. ஆனால் அன்றைய நாளோ லண்டனில் கடும் மழை. அப்புறம் தானே நம்ம பதிவர்கள் தங்கள் நிஜ முகங்களை காட்ட ஆரம்பித்தனர். இனி கரவைக்குரல், மாம்ஸ், அச்சு தொடர்வார்கள்.

குறிப்பு: பதிவுலக மார்க்கண்டேயன் லண்டன் அதிகார மைய தலைவர் என் மாம்ஸ் வந்தி அவர்கள்(தலைவர் ஆகிட்டார் எல்லா) இப்போது வேறு வேலைகளில் பிசியாக இருப்பதால் இன்னும் படங்களை அனுப்பவில்லை. இனி அதுவும் வருமா தெரியாது. சிலவேளை கடவுச்சொல் பறிபோனால்??????????? ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
Share:

9 கருத்துரைகள்:

ம.தி.சுதா said...

பொறுங்க வாறன்..

SShathiesh-சதீஷ். said...

@ம.தி.சுதா

என்ன இண்டைக்கு சுடுசோறு இல்லையா

ம.தி.சுதா said...

ஃஃஃஃஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.ஃஃஃ

எதிர் பார்க்கிறோம்... விரைவில் வரட்டும்...

ம.தி.சுதா said...

ஐஐஐஐஐஐ

எனக்குத் தான் சுடு சோறு..

SShathiesh-சதீஷ். said...

@ம.தி.சுதா

no u r late. எனக்கு தான்

Unknown said...

ஹிஹி...உங்கையுமா??ம்ம் நடத்துங்க

தேவன் மாயம் said...

வாழ்த்துகள்! படங்கள் போடவும்!

ஆகுலன் said...

அடுத்தது அமெரிக்காவா.....................

Philosophy Prabhakaran said...

என்னங்க சிவாஜி, தசாவதாரம், எந்திரன் ரேஞ்சுக்கு making of எல்லாம் போடுறீங்க... anyway வாழ்த்துக்கள்...

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive