சூப்பர் ஸ்டார் ரஜினி, இன்னும் எத்தனை பேர் வந்தாலும் அந்த இடம் என்னவோ ஒரு இமயம தான் அடுத்தவர் எல்லோருக்கும் ரஜினியின் நடிப்புத்துறையில் மட்டும். ஆனால் நிஜ வாழ்க்கையில் என்றுமே ஒரு குழப்பவாதியாக இருக்கின்றாரோ என எண்ணத்தோன்றுகின்றது.
அழகிரியின் மகன் திருமணத்தில் வைத்து 32 ஆண்டுகளுக்கு பின் தான் மதுரை மண்ணில் காலடி வைத்ததாக ரஜினி பேசியது இப்போது பலரிடையே சலசலப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. இந்த கணக்கு தப்பு ரஜினி இதற்கிடையே மதுரை வந்து போயுள்ளதை தன் ஆதார பூர்வமாக பதிவித்துள்ளார் சக பதிவர் உண்மைத்தமிழன். அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.
இந்த நிலையில் ரஜினி இறுதியாக மன நலம் பாதிக்கப்பட்டு உடல் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது தான் இறுதி மதுரை பயணம் என தட்ஸ்தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதை படிக்க இங்கே சொடுக்குங்கள்.
ஆனால் அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆரின் கைப்பொம்மையாக இருந்த நடிகை லதாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் சில்மிஷம் செய்யவும் ரஜினி முயன்றதால் எம்.ஜி.ஆர் குழுவினர் ரஜினியை அடித்து கொண்டு சென்று பைத்தியகார வைத்தியசாலையில் சேர்த்ததாகவும் ஒரு செய்தி உண்டு. அதே நேரம் எம்.ஜி.ஆர் அரசியலில் கோலோச்சிய நேரம் ரஜினி தன் பட பாடல்களில் தன் அரசியல் ஆசையை வெளிப்படுத்தியதும் இதற்க்கு ஒரு காரணமாகா சொல்லப்படுகின்றது. எது எப்படியோ 32 வருடங்கள் ரஜினி மதுரைக்கு வரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்?
என்னை வாழ வைத்தது தமிழ் மக்கள் என சொல்லும் ரஜினி தமிழ் வளர்த்த மதுரையில் கடந்த 32 வருடம் காலே வைக்கவில்லை என்றால் அது அந்த மக்களுக்கும் தன் ரசிகர்களுக்கும் செய்தது சரியா?
இல்லை இல்லை அவர் வந்திருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம் அப்படி என்றால் அதை மறைக்க காரணம் என்ன? எப்போதும் தன் மீது ஒரு மீடியா வெளிச்சம் படவேண்டும் என்பதற்காய் இப்படி பேசுகின்றாரா? அப்படியென்றால் தன்னை கடவுளாகவும் நேர்மையின் சிகரமாகவும் நினைக்கும் தன் ரசிகர்களை ஏமாற்றுவதுடன் தன்னையும் ஏமாற்றுகின்றாரா? ரஜினியின் இந்த குழப்பங்களுக்கு எல்லாம் என்ன காரணம்?
இமயத்தில் பாபா என்றார் இல்லை கோட்டையில் ராஜ்ஜியம் என்றார் இன்று சினிமாவே போதும் என நிற்கின்றார். விழாக்களுக்கு கட்டாயப்படுத்துகின்றார்கள் என அஜித் பேசியபோது கைதட்டினார் இன்று அழையா விருந்தாளியாய் பல விழாக்களில் சென்று கை கட்டி நிற்கின்றார். அஜித்தை உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்க்க நினைத்தாரா? இல்லை உண்மையிலேயே மனதார தட்டினாரா? ஆனால் இந்த உள்ளொன்று வைத்து புறம் பேசும் பேச்சு எதற்கோ. உண்மையில் இந்த விடயத்தில் கமலை போற்ற வேண்டும். மீடியாவுக்காக ஒரு பேச்சு ரசிகருக்கு என்று ஒரு பேச்சு இன்றி தன் படுக்கை அறை விடயங்களை கூட சரியோ பிழையோ உள்ளதை உள்ளபடி ஓரளவு சொல்கின்றார்.
இதேபோல தான் அண்மையில் வாலியின் விழாவிலும் ஒரு பரபரப்பு பேச்சு. சிலவேளை ரஜினி அப்படி பேசி இருக்காவிட்டால் அந்த விழாவே எமக்கு தெரியாமலும் போயிருக்கலாம். ஆனால் அங்கும் அவரின் பேச்சில் தடுமாற்றம். பெரிய மனிதர் பேசும் பாங்கா அது. அதுமட்டுமன்றி தன் வீட்டு கல்யாணத்துக்கு அழைத்தது மட்டுமன்றி வரவில்லை என கடிந்து கொண்ட ரஜினி தான் இவ்வளவு அக்கறை கொண்ட வாலியின் மனைவியின் இறந்த தினத்தை மறந்தாரா இல்லை மறந்தது போல நடித்தாரா? வந்தது தான் வந்துவிட்டார் சபைக்கு வழக்கம் போல வாழ்த்தி பேசிவிட்டு போயிருக்கலாமே. கருணாநிதியின் பேரக்குழந்தைகளையே வாழ்த்தும் இந்த பெரியவர் உண்மையில் பெரிய ஒரு மனிதனை இப்படி கடிந்தது தகுமா? அவர் வந்தால் தான் போவாராம். அதேபோலசிகர்கள் நாங்கள் காசு கொடுத்து படம் பார்ப்பதால் தான் தான் அரசியலுக்கு வந்து நல்லது செய்வதாக சொல்லுகின்றார். நீங்கள் இதுவரை செய்த ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு பாதிக்கப்பட்ட ஒருவன் இதே போல உங்களை மேடையில் ஏற்றி வைத்துக் கேட்டால் எப்படி இருக்கும். வாலியின் அனுபவம் என்ன என்பதை இந்த மன்னன் மறந்துவிட்டார் போல. மேலும் படிக்க.
இதுவரைக்கும் ரஜினி பேசிய செய்த செயகைகள் எல்லாம் ரஜினியின் இந்த ஒரு பேச்சுடன் காற்றில் போய்விடுமா? இல்லை மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு ரஜினி ரசிகர்கள் இதற்கும் சாக்கு போக்கு சொல்லப்போகின்றார்களா? இல்லையெனில் கடவுள் ரஜினி தான் தப்பாய் பேசிவிட்டேன் என மன்னிப்பு கேட்கப்போகின்றாரா? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
தன் பிறந்த மாநிலத்தையே எதிர்த்து பேசிவிட்டு பின் தன் படம் ஓடணும் என்பதற்காய் மன்னிப்பு கெட்ட மகான் தானே அவர். இப்போது நான் மகான் இல்லை என சொல்லப்போகின்றாரா? இல்லையேல் எந்திரன் ஓடணும் என்பதற்காய் ஐஸை IFA செல்ல விடாமல் மறித்ததையும் தன் மகள் திருமணத்தை முன்னிட்டு விருந்து கொடுப்பேன் என சொல்லிவிட்டு இன்றுவரை அதைப்பற்றி வாய்த்திறக்காமல் இருப்பதையும் சமாளிப்புகேசன் இல்லை என போகின்றாரா?
என் இந்த பதிவு நிச்சயம் ரஜினி ரசிகர்களை சூடு படுத்தும். ஆனால் இது நீங்கள் நான் என எல்லோரும் சிந்திக்க வேண்டிய ஒரு நேரம். திரையில் என்றுமே ஜாம்பவான் தான் ரஜினி ஆனால் நிஜத்தில் இல்லை இல்லை இல்லை என சொல்லாமல் சொல்கின்றார். அப்புறம் இன்னொரு விஷயம் இந்த பதிவை நான் எழுதியதால் ரஜினிக்கு 32 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது போல எனக்கும் இங்கே நடத்தனும் என நினைப்பவர்களுக்கு ஒரு விஷயம் CCTV in operation. ஹா ஹா ஹா ஹா மெ மெ மெ (இதுவும் திரையுலக சூப்பர் ஸ்டார் வசனம் தான்.உபயம் எந்திரன் )
குறிப்பு: என் சின்ன வயதில் நானும் ரஜினி ரசிகன் தான்.....
இங்கே கோர்த்து விட்டாச்சு அப்புறம் இன்னுமொரு சக்திவாய்ந்த இடம் இருக்கு எல்லா. நம் பதிவுலக சகாக்கள் பற்றிய மகா மொக்கை ஒன்று தயாராகின்றது. மிக விரைவில் டண்டனக்கா தான்