Friday, November 19, 2010சூப்பர் ஸ்டார் ரஜினி, இன்னும் எத்தனை பேர் வந்தாலும் அந்த இடம் என்னவோ ஒரு இமயம தான் அடுத்தவர் எல்லோருக்கும் ரஜினியின் நடிப்புத்துறையில் மட்டும். ஆனால் நிஜ வாழ்க்கையில் என்றுமே ஒரு குழப்பவாதியாக இருக்கின்றாரோ என எண்ணத்தோன்றுகின்றது.

அழகிரியின் மகன் திருமணத்தில் வைத்து 32 ஆண்டுகளுக்கு பின் தான் மதுரை மண்ணில் காலடி வைத்ததாக ரஜினி பேசியது இப்போது பலரிடையே சலசலப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. இந்த கணக்கு தப்பு ரஜினி இதற்கிடையே மதுரை வந்து போயுள்ளதை தன் ஆதார பூர்வமாக பதிவித்துள்ளார் சக பதிவர் உண்மைத்தமிழன். அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.

இந்த நிலையில் ரஜினி இறுதியாக மன நலம் பாதிக்கப்பட்டு உடல் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது தான் இறுதி மதுரை பயணம் என தட்ஸ்தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

ஆனால் அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆரின் கைப்பொம்மையாக இருந்த நடிகை லதாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் சில்மிஷம் செய்யவும் ரஜினி முயன்றதால் எம்.ஜி.ஆர் குழுவினர் ரஜினியை அடித்து கொண்டு சென்று பைத்தியகார வைத்தியசாலையில் சேர்த்ததாகவும் ஒரு செய்தி உண்டு. அதே நேரம் எம்.ஜி.ஆர் அரசியலில் கோலோச்சிய நேரம் ரஜினி தன் பட பாடல்களில் தன் அரசியல் ஆசையை வெளிப்படுத்தியதும் இதற்க்கு ஒரு காரணமாகா சொல்லப்படுகின்றது. எது எப்படியோ 32 வருடங்கள் ரஜினி மதுரைக்கு வரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்?

என்னை வாழ வைத்தது தமிழ் மக்கள் என சொல்லும் ரஜினி தமிழ் வளர்த்த மதுரையில் கடந்த 32 வருடம் காலே வைக்கவில்லை என்றால் அது அந்த மக்களுக்கும் தன் ரசிகர்களுக்கும் செய்தது சரியா?

இல்லை இல்லை அவர் வந்திருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம் அப்படி என்றால் அதை மறைக்க காரணம் என்ன? எப்போதும் தன் மீது ஒரு மீடியா வெளிச்சம் படவேண்டும் என்பதற்காய் இப்படி பேசுகின்றாரா? அப்படியென்றால் தன்னை கடவுளாகவும் நேர்மையின் சிகரமாகவும் நினைக்கும் தன் ரசிகர்களை ஏமாற்றுவதுடன் தன்னையும் ஏமாற்றுகின்றாரா? ரஜினியின் இந்த குழப்பங்களுக்கு எல்லாம் என்ன காரணம்?

இமயத்தில் பாபா என்றார் இல்லை கோட்டையில் ராஜ்ஜியம் என்றார் இன்று சினிமாவே போதும் என நிற்கின்றார். விழாக்களுக்கு கட்டாயப்படுத்துகின்றார்கள் என அஜித் பேசியபோது கைதட்டினார் இன்று அழையா விருந்தாளியாய் பல விழாக்களில் சென்று கை கட்டி நிற்கின்றார். அஜித்தை உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்க்க நினைத்தாரா? இல்லை உண்மையிலேயே மனதார தட்டினாரா? ஆனால் இந்த உள்ளொன்று வைத்து புறம் பேசும் பேச்சு எதற்கோ. உண்மையில் இந்த விடயத்தில் கமலை போற்ற வேண்டும். மீடியாவுக்காக ஒரு பேச்சு ரசிகருக்கு என்று ஒரு பேச்சு இன்றி தன் படுக்கை அறை விடயங்களை கூட சரியோ பிழையோ உள்ளதை உள்ளபடி ஓரளவு சொல்கின்றார்.

இதேபோல தான் அண்மையில் வாலியின் விழாவிலும் ஒரு பரபரப்பு பேச்சு. சிலவேளை ரஜினி அப்படி பேசி இருக்காவிட்டால் அந்த விழாவே எமக்கு தெரியாமலும் போயிருக்கலாம். ஆனால் அங்கும் அவரின் பேச்சில் தடுமாற்றம். பெரிய மனிதர் பேசும் பாங்கா அது. அதுமட்டுமன்றி தன் வீட்டு கல்யாணத்துக்கு அழைத்தது மட்டுமன்றி வரவில்லை என கடிந்து கொண்ட ரஜினி தான் இவ்வளவு அக்கறை கொண்ட வாலியின் மனைவியின் இறந்த தினத்தை மறந்தாரா இல்லை மறந்தது போல நடித்தாரா? வந்தது தான் வந்துவிட்டார் சபைக்கு வழக்கம் போல வாழ்த்தி பேசிவிட்டு போயிருக்கலாமே. கருணாநிதியின் பேரக்குழந்தைகளையே வாழ்த்தும் இந்த பெரியவர் உண்மையில் பெரிய ஒரு மனிதனை இப்படி கடிந்தது தகுமா? அவர் வந்தால் தான் போவாராம். அதேபோலசிகர்கள் நாங்கள் காசு கொடுத்து படம் பார்ப்பதால் தான் தான் அரசியலுக்கு வந்து நல்லது செய்வதாக சொல்லுகின்றார். நீங்கள் இதுவரை செய்த ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு பாதிக்கப்பட்ட ஒருவன் இதே போல உங்களை மேடையில் ஏற்றி வைத்துக் கேட்டால் எப்படி இருக்கும். வாலியின் அனுபவம் என்ன என்பதை இந்த மன்னன் மறந்துவிட்டார் போல. மேலும் படிக்க.

இதுவரைக்கும் ரஜினி பேசிய செய்த செயகைகள் எல்லாம் ரஜினியின் இந்த ஒரு பேச்சுடன் காற்றில் போய்விடுமா? இல்லை மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு ரஜினி ரசிகர்கள் இதற்கும் சாக்கு போக்கு சொல்லப்போகின்றார்களா? இல்லையெனில் கடவுள் ரஜினி தான் தப்பாய் பேசிவிட்டேன் என மன்னிப்பு கேட்கப்போகின்றாரா? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

தன் பிறந்த மாநிலத்தையே எதிர்த்து பேசிவிட்டு பின் தன் படம் ஓடணும் என்பதற்காய் மன்னிப்பு கெட்ட மகான் தானே அவர். இப்போது நான் மகான் இல்லை என சொல்லப்போகின்றாரா? இல்லையேல் எந்திரன் ஓடணும் என்பதற்காய் ஐஸை IFA செல்ல விடாமல் மறித்ததையும் தன் மகள் திருமணத்தை முன்னிட்டு விருந்து கொடுப்பேன் என சொல்லிவிட்டு இன்றுவரை அதைப்பற்றி வாய்த்திறக்காமல் இருப்பதையும் சமாளிப்புகேசன் இல்லை என போகின்றாரா?

என் இந்த பதிவு நிச்சயம் ரஜினி ரசிகர்களை சூடு படுத்தும். ஆனால் இது நீங்கள் நான் என எல்லோரும் சிந்திக்க வேண்டிய ஒரு நேரம். திரையில் என்றுமே ஜாம்பவான் தான் ரஜினி ஆனால் நிஜத்தில் இல்லை இல்லை இல்லை என சொல்லாமல் சொல்கின்றார். அப்புறம் இன்னொரு விஷயம் இந்த பதிவை நான் எழுதியதால் ரஜினிக்கு 32 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது போல எனக்கும் இங்கே நடத்தனும் என நினைப்பவர்களுக்கு ஒரு விஷயம் CCTV in operation. ஹா ஹா ஹா ஹா மெ மெ மெ (இதுவும் திரையுலக சூப்பர் ஸ்டார் வசனம் தான்.உபயம் எந்திரன் )

குறிப்பு: என் சின்ன வயதில் நானும் ரஜினி ரசிகன் தான்.....

இங்கே கோர்த்து விட்டாச்சு அப்புறம் இன்னுமொரு சக்திவாய்ந்த இடம் இருக்கு எல்லா. நம் பதிவுலக சகாக்கள் பற்றிய மகா மொக்கை ஒன்று தயாராகின்றது. மிக விரைவில் டண்டனக்கா தான்

14 கருத்துரைகள்:

தமிழ்வாசி said...

சதீசு! வெளிநாட்டுக்கு படிக்கத்தானே போயிருக்க? அப்புறம் ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை.... இப்ப ரஜினியை குற்றம் சொல்ல வந்திருக்க...
எங்க... நீ பொறந்ததுலயிருந்து உன்னோட ஹிஸ்டரியை தேதி, நேரம் தப்பில்லாம சொல்லு பார்ப்போம். ஏன்யா, ஒரு இருவது, முப்பது வருசத்துக்கு முன்னாடி நான் மதுரைக்கு வந்திருக்கேன்னு ரஜினி குத்துமதிப்பா சொல்லியிருந்தா, நீ எந்த வருசத்த நெனசிருப்ப? ஒனக்கு சப்போட்டுக்கு உண்மைத்தமிழன வேற கூப்புட்டிருக்க...

கன்கொன் || Kangon said...

// குறிப்பு: என் சின்ன வயதில் நானும் ரஜினி ரசிகன் தான்..... //

அப்ப இப்ப இல்லையா?
இப்ப இரஜினியைப் பிடிக்காதா?
அதால தான் இந்தப் பதிவா? #போட்டுக்கொடுப்போர் சங்கம்.

ம.தி.சுதா said...

சதிஸ் நிங்களுமா..??? யாராச்சும் சஜனி ரசிகன் விஜயிற்கு எதிராக போட வைக்கத் தானே இந்த முயற்சி... அவரை வச்ச காமடி கீமடி ஒண்ணும் பண்ணலியே....

Anonymous said...

ரஜினி பேர யூஸ் பண்ணி ப்ளாக் எழுதி அடுத்தவங்கள attract பண்ண நினைக்கிறியாடா பன்னாட!!!

Anonymous said...

ரஜினி பேர யூஸ் பண்ணி ப்ளாக் எழுதி அடுத்தவங்கள attract பண்ண நினைக்கிறியாடா பன்னாட!!!

Anonymous said...

அடேடே .... என்ன ஒரு அருமையான பதிவு .... படத்த ஓட வைக்க மாட்டை தானமாக கொடுத்து புப்ளிசிட்டி தேடும் பக்கிரிகளுக்கு மத்தியில் மேடையில் கூட பேச தெரியாத இந்த அப்பாவி ரஜினி எவ்வளவோ பரவா இல்லை ...

தமிழ்க் காதலன். said...

ஒரு மனிதனின் உண்மையான வாழ்வுக்கும்.... திரைப்படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.., வில்லனெல்லாம் வில்லன் இல்லை. கதா நாயகன் எல்லாம் கதாநாயகன் இல்லை என்கிற உண்மை தாத்பரியம் எமது மக்களுக்கு புரியும் வரை... இது மட்டுமல்ல இன்னும் இது போன்ற துரோகங்கள் தொடரும். தமிழ் நாடு "சம்பாத்தியக் களம்" அவ்வளவே. இங்கே ஏமாறுபவர்கள் எண்ணிக்கை அதிகம். பயன்படுத்துகிறார்கள். வந்து போங்க...( ithayasaaral.blogspot.com )

விக்கி உலகம் said...

எப்படியோ நீங்களும் அரசியல்வாதியாயிட்டீங்கஅவர வச்சி இது வரை 25 ஓட்டு வாங்கிட்டீங்க. இப்ப புரியுதா எப்பவுமே அவரு ஒரு ஓட்டு வங்கி என்பது.

சும்மா தான்

log said...

Satheesh unakku valai vetti illana. summa kunthikunu iru. Atha vittu eathukku en thalivar kitta vala kattara. Avaru correcta than irukkaru. Neenga than summa eathai aavathu kilapi vettnu kirainga.

R.Gopi said...

மிகவும் ரசனைக்குறைவான பதிவு....

தமிழ் பையன் said...

ரஜினியின் பேர் போட்டு ஹிட வாங்க முயற்சிக்கும் 'desparate bloggers' வரிசையில் நீங்களும் சேர்ந்ததற்கு வாழ்த்துகள்

Suman said...

ரஜனி ரசிகர்கள் முட்டாள்கள் என்பதை இந்தப் பதிவிற்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையில் இருந்து தெரிகின்றது. ஒருநாளைக்கு ரஜனி அனைவரையும் ஏமாற்றிவிட்டு கன்னடாவுக்கு ஓடுவான் அப்போ தெரியும் இந்த முதுகெலும்பு இல்லாதவனின் சுயரூபம்.

karthik said...

@Suman //MR SUMAN //
சரிங்க முதுகெலும்பு உள்ள அறிவாளி. ரஜினி கன்னடாவுக்கோ அல்லது கனடாவுக்கு போன உங்களுக்கு என்ன. அவர் நடிக்கிறார் நாங்க ரசிக்கிறோம் உங்களுக்கு ஏன் எரியுது

karthik said...

அதுசரி பதிவு எழுதிரவரே உங்க தலைவனே பித்தலாட்டகாரன் முதல்ல சின்ன விஜயகாந்த் எண்டான் பிறகு சின்ன ரஜினி எண்டான் பிறகு MGR ரசிகன் எண்டான் பிறகு தசவதார விழாவில கமல் ரசிகன் எண்டான் பிறகு படம் எல்லாம் பலாப் ஆக திரும்ப ரஜினி ரசிகன் என்கிறான் இத எண்ணண்டு சொல்றது? இலங்கை தமிழனாக இருக்கிற நீங்களே காங்கிரஸ் கட்சிக்கு கூஜா தூக்க போன விஜய்க்கு இரசிகன இருக்கிறதா நாங்க ரஜினிக்கு இரசிகன இருக்கிறது எவ்வளவோ மேல். (எங்களுக்கும் விஜயோட திரைக்கு பின்னல் இருக்கும் விஷயம் எல்லாம் தெரியும் எழுத வெளிக்கிட்டம் எட்டாம் எல்லாம் நாறிப்போய்விடும் எதுக்கும் பத்திரிகை (எழுத்து) தர்மம் எண்டு ஒண்டு இருக்கு பார்த்து எழதுங்க)

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts