என் விடயம் இதுதான். ஊடகம் என்பது மிக முக்கியமான ஒரு ஆயுதம். பதிவர்கள் நாங்களும் அந்த வகையில் பொறுப்பானவர்களே. எண்கள் ஒருவருக்கு ஒருவரை பிடிக்கும் ஒருவரை பிடிக்காமல் போகும். ஆனால் எனக்கு தெரிந்தவரை பதிவர்கள் எல்லோருக்கும் பிடிக்காத இரண்டு விடயங்கள் ஒன்று இளைய தளபதி விஜய் இன்னொன்று கந்தசாமி திரைப்படம். இந்த இரண்டிலும் பதிவர்களுக்கு என்ன பிரச்சனையோ எனக்கு தெரியவில்லை.(அடப்பாவி எங்களுக்கும் தான் தெரியவில்லை என நீங்கள் முனு முணுப்பது எனக்கு கேட்கின்றது.)
வில்லு திரைப்படம் வந்தபோது வரிந்து கட்டிக்கொண்டு எல்லோரும் விஜய் டி.வி மதன் போல விமர்சம் எழுதினார்கள். படம் படுத்துக்கொண்டது. என் இதற்கு முன் வந்த விஜய் படம் பர்க்காதவர்களா நீங்கள்? விஜய் படம் என்றால் இதுதான். நாலு சண்டை, ஆறு பாட்டு, நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த மசாலா தான் என கடந்த பத்துவருடமாக தெரியும். அப்படி விஜய் கொடுத்த கில்லி,திருப்பாச்சி,சிவகாசி எல்லாவற்றையும் வெற்றி ஆக்கிய ரசிக பதிவர்கள் இப்போது மட்டும் விஜய் கெட்டப் மாற்றவில்லை நடிக்கதெரியாது என்பது எந்த வகையில் நியாயம்?.
விஜய் விஜயாக வருவது தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடிக்கின்றது. அதேநேரம் தொடர்ந்து அவர் அப்படி நடித்த படங்கள் தானே வெற்றியும் பெற்றிருக்கின்றன. நீ என்ன விஜயின் கொள்கை பரப்புச் செயலாளரா என கேட்கலாம்.விஜய் மட்டுமல்ல விக்ரம் பற்றியும் பேசத்தான் போகின்றேன். எனக்கு தெரிந்த ஆரம்பத்தில் இருந்து வருகின்றேன். குருவி,வில்லு படங்களுக்கு பிறகு விஜய் என்பவர் ஒரு நடிக்கத்தெரியாதவர், என்னும் தோற்றப்பாடு மட்டுமில்லாமல் எள்ளிநகையாடும் ஒரு பொருளாக பதிவுலகில் பார்க்கப்படுகின்றார். விஜய் ரசிகர்கள் கூட எத்தனையோ பேர் இப்போது தங்கள் பதிவு ஹிட் ஆக வேண்டுமென விஜயை தாழ்த்தி பதிவிடுகின்றனர். பலரின் கேட்ட பழக்கத்தில் ஒன்று ஒரு பதிவர் ஒன்றை கெட்டதென்றால் அது எல்லோருக்கும் கெட்டது இல்லாவிட்டால் நல்லதென்றுவிட்டால் அது நல்லதுதான். ஒருவேளை கந்தசாமியை பற்றி நான் முதலில் பதிவிட்டிருந்தால் எல்லோரும் கந்தசாமியை போற்றிப்புகழ்ந்திருப்பீர்கள்.
இவ்வளவு சொல்கின்றாயே உனக்கு என்ன விஜய் மச்சானா அல்லது தாணு காசு கொடுத்தாரா என கேட்கலாம் கேட்டும் இருக்கின்றனர் சிலர். அவர்களிடம் கேட்கின்றேன் ஒருவரை தாழ்த்தி எழுதுவதால் உங்களுக்கு என்ன பயன். எழுத எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. ஆனால் இப்படியான வேலைகள் செய்யும் போது ஹிட், மற்றவர் இப்படி சொல்லிவிட்டாரே என எண்ணி செயற்படாதீர்கள்.
எவ்வளவுகால உழைப்பு. பிரமாண்டம். ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் செலவழித்து படமெடுப்பார். அதை எல்லாம் யோசிப்பதுமில்லை சிலர் படத்தை பார்ப்பதுமில்லை. பார்த்து புளித்து போனதுபோல இன்னொரு பதிவரின் பதிவை பார்த்து விமர்சனம் போட்டு விடுவார். உண்மையில் சில பதிவர்கள் தங்கள் நெஞ்சை தொட்டு சொல்லட்டும் மற்ற பதிவுகளை பார்த்து விட்டு அதேபோல தாங்கள் எழுதவில்லை என்று. இதில் என்ன கொடுமை என்றால் சிலர் வசன நடையை கூட மாற்றவில்லை. படம் வந்து ஒருவாரம் தாண்ட முதலே ஒரு படம் தோல்வி என சொல்ல நீங்கள் என்ன திரை உலக மேதாவிகளா?(நான் மேதாவி இல்லைங்கோ?)
ஷங்கரை பின்பற்றினார் என்கிறீர்கள் சுசி. ஏற்றுக்கொள்கிறேன். அதில் இரண்டு விடயம் இருக்கின்றது. சிவாஜி என்னும் அற்புத காவியம்(உங்கள் மொழியில்) தயாரான காலத்திலே தான் உங்கள் நொந்தசாமியும் கருப்பெற்றான். கொஞ்சம் தாமதமாக வந்துவிட்டான். சிவாஜி,ரமணாவின் நகல் என்னும் நீங்கள் தானே அன்று இதேபோல வந்த அந்தப்படங்களை வெற்றிபெற வைத்தீர்கள். இன்று அதேபோல வரும் கந்தசாமி சரியில்லையாம் என்ன நியாயம் இது. ஒருவேளை கந்தசாமி முதல் வந்து சிவாஜி பிந்தி வந்திருந்தால் சிவாஜியையும் இப்படி நாறடித்திருப்பீர்களா?
சிலரின் பதிவில் சுசி,இன்னொரு ஷங்கர் ஆக முயல்கின்றார் என போடப்பட்டிருந்தது. ஷங்கரை இன்று நல்ல இயக்குனர். பிரமாண்ட இயக்குனர் என கொண்டாடும் நீங்கள் அதேபோல பிரமாண்டத்தை தரும் இன்னொருவரை ஏன் ஏற்கமறுக்கின்றீர்கள்? பருத்தி வீரனை வெற்றி ஆக்கிய நீங்கள் பொக்கிஷத்தை சுருட்டினீர்கள். ஆனால் இதே பாணியில் தந்த ஆட்டோகிராப்பை வெல்ல வைத்தீர்கள்.கந்தசாமி விக்ரமின் காசி,சேது போன்ற படம் என யாரும் உங்களை சொல்லி ஏமாற்றினார்களா? முழுக்க முழுக்க வணிக ரீதியான படம் இது. அங்கே எங்களால் செய்ய முடியாத செய்ய நினைக்கும் விடயங்கள் தான் அதிகம் வரும். அதை ஏற்கும் பக்குவம் எம்மில் சிலரிடம்
இல்லையே என்பதே என் கருத்து.
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. நீங்கள் என்ன மாதிரி படங்களை ரசிக்கின்றீர்கள்? வணிக ரீதியாக எடுப்பதும் தப்பு யதார்த்தம் தந்தாலும் தப்பு என்றால் உங்கள் ரசனை என்ன? எப்படி படம் எடுத்தால் அத்தனை பதிவரும் ஆகா ஓகோ என புகழ்வீர்கள்.? விமர்சனங்கள் எழுதி பழக்கப்பட்ட உங்கள் கைகளால் இன்றாவது எந்த மாதிரி படம் எப்படி உங்களுக்கு வேண்டுமென கருத்து சொல்லிவிட்டு போங்கள். இல்லையேல் வழக்கம் போல என்னை கும்மி விட்டு போங்கள்.
படங்கள் அனைத்தும் சூடனர்வர்களை குளிர்விக்கவும் சூடாகாவிட்டால் இன்னும் சூடாகவும்.
அடடா எல்லாம் முடிந்ததே தலைப்புக்கு பதிலா காணமே எனப்பார்க்கிறிங்களா? கந்தசாமி பாருங்க ஸ்ரேயா விக்ரமின் அலுவலகத்தில் வந்து செய்யும் சேட்டையின் விளைவு தான் தலைப்பு. அப்பாடா எனக்கு ஒரு ஸ்ரேயா சிக்கிட்டாங்க.
48 கருத்துரைகள்:
ரொம்ப த்ராபையான கருத்துகள் :-(
கந்தசாமி படம் பற்றியோ, விஜய் பற்றியோ பதிவர்கள் காண்டாகி எழுதுகிறார்கள் என்ற உங்கள் சப்ஜெட்டுக்கே நான் வரவில்லை.
ஒரு சின்ன கேள்வி மட்டும்தான்.
பதிவர்கள் எழுதும் பதிவு புதிதாக வெளிவரும் சினிமாவின் எதிர்காலத்தையே பாதிக்கும் என் நிசமாகவே நம்புகிறீர்களா!
:-(((
உங்கள் வருகைக்கு நன்றிகள் யுவகிரிஷ்னா. அத்துடன் உங்கள் படங்கள் பற்றிய எதிர்பார்ப்புகளை சொல்லலாமே.
அண்மையில் வந்த நல்ல படங்கள் என்பவை நடோடிகள், பசங்க இரண்டும் மட்டுமே. ரசனை என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும் ஆனால் ஒரு படத்தின் ஒளிப்பதிவு அனைவரின் கண்ணுக்கும் ஒன்றாகத் தான் தெரியும். எனக்கு ஒளிப்பதிவு பிடிக்கவேயில்லை சிலவேளை ஒளிப்பதிவு நல்லாயிருந்திருந்தால் படத்தை ரசித்திருக்கலாம், உங்கள் குடும்பத்தவர்களுடன் அமர்ந்து ஸ்ரேயாவை இந்தப் படத்தில் பார்க்கமுடியுமா? அதிலும் மியாவ் மியாவ் பூனைக்குட்டி பாடல் ஆபாசத்தின் உச்சம்.
விக்ரம் நல்ல நடிகர் ஆனால் இப்படி கதை இல்லாத மொக்கைகளில் நடித்து என்ன பயன் ?
விஜய்க்கு வருவோம் விஜய் நல்ல நடிகரோ இல்லையோ ரஜனி போல் மாஸ் ஹீரோ ஆகிவிட்டார் அப்படிப்பட்டவர் கொஞ்சம் என்றாலும் தன் இமேஜைக் காப்பாத்த நல்ல கதை அம்சமுள்ள லாஜிக் மீறாத படங்களில் நடிக்கவேண்டும். செய்வாரா? இன்னொரு காதலுக்கு மரியாதை கிடைக்குமா?
இளைய கரிகாலன் கூறியது...
கந்தசாமி படம் பற்றியோ, விஜய் பற்றியோ பதிவர்கள் காண்டாகி எழுதுகிறார்கள் என்ற உங்கள் சப்ஜெட்டுக்கே நான் வரவில்லை.
ஒரு சின்ன கேள்வி மட்டும்தான்.
பதிவர்கள் எழுதும் பதிவு புதிதாக வெளிவரும் சினிமாவின் எதிர்காலத்தையே பாதிக்கும் என் நிசமாகவே நம்புகிறீர்களா!
:-(((
புதிதாக வெளிவரும் படத்தை தாக்குமோ இல்லையோ வந்த படங்களை தாக்கி இருக்கின்றது என்பது கண்கூடு. தமிழ் சினிமாவின் முக்கிய நபர் ஒருவர்.(எனக்கு சரியாக தெரியவில்லை அவர் யாரென.) வில்லும் கந்தசாமியும் பதிவர்களில் மட்டமான விமர்சனத்தால் நிலை குலைந்து போனதாக சொல்லி இருக்கின்றார். இப்போது சொல்லுங்கள் நான் சொன்னதில் என்ன தவறு.
தயவு செஞ்சு கொஞ்சம் சுமாராவாவது எழுதுங்க. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
அடடே. இது காமெடி பீசுன்னு தெரியாம பதிவை முழுசா படிச்சிட்டேனே?
வந்தியத்தேவன் கூறியது...
அண்மையில் வந்த நல்ல படங்கள் என்பவை நடோடிகள், பசங்க இரண்டும் மட்டுமே. ரசனை என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும்
ரசனை மாறுபடலாம் ஆனால் பல விமர்சனங்களில் மாற்றம் வரவில்லையே.அச்சமுண்டு அச்சமுண்டு என்று ஒரு படம் வந்து விருதுகளை வாங்கி குவித்தது அப்போ அது நல்ல படமில்லையா?
"உங்கள் குடும்பத்தவர்களுடன் அமர்ந்து ஸ்ரேயாவை இந்தப் படத்தில் பார்க்கமுடியுமா? அதிலும் மியாவ் மியாவ் பூனைக்குட்டி பாடல் ஆபாசத்தின் உச்சம்"
அப்படிப்பார்த்தால் குருதிப்புனலின் இறுதிக்காட்சியில் கொவ்தமியின் அந்த காட்சியை மட்டும் பார்க்கலாமா?
விக்ரம் நல்ல நடிகர் ஆனால் இப்படி கதை இல்லாத மொக்கைகளில் நடித்து என்ன பயன் ?
அந்த நல்ல நடிகர் கொடுத்த காசி திரைப்படத்தை ஏன் தோல்வி ஆக்கினீர்கள்? சேது பட்டதை ஆரம்பத்தில் பலர் வாங்கமுடியாமல் திண்டாடினார்கள். எந்த நல்ல நடிகரும் இப்படியான படங்களிலும் நடித்தாள் தான் அவர்கள் வண்டி ஓடும்.
விஜய்க்கு வருவோம் விஜய் நல்ல நடிகரோ இல்லையோ ரஜனி போல் மாஸ் ஹீரோ ஆகிவிட்டார் அப்படிப்பட்டவர் கொஞ்சம் என்றாலும் தன் இமேஜைக் காப்பாத்த நல்ல கதை அம்சமுள்ள லாஜிக் மீறாத படங்களில் நடிக்கவேண்டும். செய்வாரா? இன்னொரு காதலுக்கு மரியாதை கிடைக்குமா
உங்கள் கருத்து சரி ஆனால் காதலுக்கு மரியாதையை எதிர்பார்ப்பது தான் தப்பு. சச்சின் இன்னொரு குஷியாக வந்தது ஏற்றீர்களா? கால மாற்றம் நடிகனும் மாறித்தானே நடிக்கவேண்டும்.
C கூறியது...
தயவு செஞ்சு கொஞ்சம் சுமாராவாவது எழுதுங்க. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீ
சரி ஆனால் உங்கள் சொந்த பெயரில் தைரியமாய் வாருங்க இல்லாவிட்டால் நீங்கள் எல்லாம் கருத்து சொல்லாமல் ஒதுங்க்குங்கள் பிளீஸ் பிளீஸ் பிளீஸ்
பெயரில்லா கூறியது...
அடடே. இது காமெடி பீசுன்னு தெரியாம பதிவை முழுசா படிச்சிட்டேனே
சீரியஸ் அண்ணே நீங்கள் முதலில் உங்கள் பெயரை போட்டு காமெடி பண்ணுங்கள். காமெடிதான் அண்ணே உலக்த்தில கஷ்டம் பரவாயில்லை உங்கள் வாழ்த்துக்கு நன்றி. அடிக்கடி வங்க சந்திப்பம்.
பதிவுலகம் ஜால்ரா அடிச்சிதான் சினிமாவை வாழ வெக்கனுமா? நல்லதுன்னா நல்லது. இல்லாட்டி இல்லே. வேட்டைக்காரன் நல்லா வரட்டுமே. பாராட்டும். இல்லாட்டி நொட்டை சொல்லும். இதுல ஒன்னும் பெரிசில்லை. இதே பதிவுலகம்தான் குசேலனை காறித் துப்பியது..
ILA கூறியது...
பதிவுலகம் ஜால்ரா அடிச்சிதான் சினிமாவை வாழ வெக்கனுமா? நல்லதுன்னா நல்லது. இல்லாட்டி இல்லே. வேட்டைக்காரன் நல்லா வரட்டுமே. பாராட்டும். இல்லாட்டி நொட்டை சொல்லும். இதுல ஒன்னும் பெரிசில்லை. இதே பதிவுலகம்தான் குசேலனை காறித் துப்பியது.
அதுதான் எனக்கும் புரியவில்லை. நடுநிலைமையில் கூட இல்லாமல் கொதிக்கின்றார்களே.
எது நடுநிலைமைன்னு நினைக்கிறீங்க? நல்லா இருந்தா நல்லா இருக்கும்னு எழுதுவாங்க, இல்லாட்டி காறிதான் துப்புவாங்க. நடுநிலைமை எதுக்கு வகிக்கனும்? விஜய் ரசிகரா இருக்கிறது தப்பில்லே, ஆனா எல்லா விஜய் படங்களையும் தலை மேல தூக்கி வெச்சி ஆடுறது தப்பு. நானும் விஜய் ரசிகந்தான். ஆனாலும் சமீபத்திய படங்களைப் பார்த்த பின்னாடி கடுப்பானேன். காரணம். டப்பா படங்கள. ஒரு ரசிகன்னா நல்ல படத்தை ரசிக்கலாம். மொக்கைப் படத்தையும் ரசிக்கனும்னா.. Sorry Grow up Kid

உங்கள் கருத்து நியாயமானதே அப்படியெனில் அந்த படங்களில் என்னென்ன குறைகளை திருத்தனும் நீங்கள் எதிர்பார்க்கும் விடயங்களை சொல்லுங்களன்,அதேநேரம் பலர் ஒரேமாதிரி யாரும் ஒருவரை பின் பற்றி விமர்சிப்பது தவறுதான். கந்தசாமியில் இது வ்ளிப்படை தமிளிச்தில் ஒருவரின் விமர்சம் பார்த்தால் மற்றதுகள் பார்க்க தேவை இல்லை என்ற நிலை இருந்தது.
இது தாங்க என் சொந்த பேரு. கருத்தை மட்டும் கேளுங்க.
உங்களை தான் எங்க வீரத்தளபதி தேடிகிட்டு இருக்காரு.
- சந்துரு
//என்னென்ன குறைகளை திருத்தனும் நீங்கள் எதிர்பார்க்கும் விடயங்களை சொல்லுங்களன்/
அப்படிச் சொன்னா என்ன விஜய் படிக்கப்போறாரா? கருத்து சொல்றதெல்லாம் கதைக்கு ஆவாதுங்க. நாம கருத்தைச் சொன்னோம்னா “சொல்றதுக்கு நீ யாருடா வெளக்கெண்ணைய்”னு பேசுவாங்க. எல்லாரும் கருத்து கந்தசாமி ஆகிர கூடாதுங்களே.
இதோ ஒரு கருத்து சச்சின், வசீகரா மாதிரியான இலகுவான கதாபாத்திரங்கள் ஏத்து நடிச்சா நானும் ரசிப்பேன். அருவா எடுத்தா போடாங்கொய்யாலதான்
C கூறியது...
இது தாங்க என் சொந்த பேரு. கருத்தை மட்டும் கேளுங்க.
உங்களை தான் எங்க வீரத்தளபதி தேடிகிட்டு இருக்காரு.
- சந்துரு
:=)கருத்து சொல்லும்போது உங்கள் பெயரையும் போட்டு சொல்வதுதான் அழகு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். வீரத்தளபதியை கேட்டதை சொல்லுங்கள் அப்படியே உங்கள் தளத்தையும் சொன்னால் அங்கேயும் நாங்கள் கில்லி விளையாடலாமே.
ILA கூறியது...
//என்னென்ன குறைகளை திருத்தனும் நீங்கள் எதிர்பார்க்கும் விடயங்களை சொல்லுங்களன்/
அப்படிச் சொன்னா என்ன விஜய் படிக்கப்போறாரா? கருத்து சொல்றதெல்லாம் கதைக்கு ஆவாதுங்க. நாம கருத்தைச் சொன்னோம்னா “சொல்றதுக்கு நீ யாருடா வெளக்கெண்ணைய்”னு பேசுவாங்க. எல்லாரும் கருத்து கந்தசாமி ஆகிர கூடாதுங்களே.
இதோ ஒரு கருத்து சச்சின், வசீகரா மாதிரியான இலகுவான கதாபாத்திரங்கள் ஏத்து நடிச்சா நானும் ரசிப்பேன். அருவா எடுத்தா போடாங்கொய்யாலதா
:=)அப்படியல்ல நண்பரே. எங்களை நாங்களே ஏன் அப்படி நினைப்பான். நீங்கள் சொன்னது சரி. அதேபோல நீங்கள் விஜய் இதை படிப்பாரா என்றீர்கள். நிச்சயமாக இல்லைதான் ஆனால் எண்கள் சகபதிவர்கள் படிக்கும் போது எல்லோருக்கும் தோன்றும் கருத்த்டுக்க்லாய் பகிர்ந்து கொள்ள முடியுமே. தயக்கமின்றி உங்கள் கருத்தை பகிருங்கள். உங்கள் தளம் வந்தேன் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
அதேநேரம் இன்னுமொன்று சச்சின் வசீகரா போன்ற படங்கள் தோல்விப்படங்கள். அதை பலர் ரசிக்கவில்லையே என்ன காரணம்,
ILA சொன்னது…
August 26, 2009 12:52 PM
எது நடுநிலைமைன்னு நினைக்கிறீங்க? நல்லா இருந்தா நல்லா இருக்கும்னு எழுதுவாங்க, இல்லாட்டி காறிதான் துப்புவாங்க. நடுநிலைமை எதுக்கு வகிக்கனும்? //
இதுக்கு மேல மேட்டரே இல்லை சார்
SShathiesh கூறியது...
இளைய கரிகாலன் கூறியது...
கந்தசாமி படம் பற்றியோ, விஜய் பற்றியோ பதிவர்கள் காண்டாகி எழுதுகிறார்கள் என்ற உங்கள் சப்ஜெட்டுக்கே நான் வரவில்லை.
ஒரு சின்ன கேள்வி மட்டும்தான்.
பதிவர்கள் எழுதும் பதிவு புதிதாக வெளிவரும் சினிமாவின் எதிர்காலத்தையே பாதிக்கும் என் நிசமாகவே நம்புகிறீர்களா!
:-(((
புதிதாக வெளிவரும் படத்தை தாக்குமோ இல்லையோ வந்த படங்களை தாக்கி இருக்கின்றது என்பது கண்கூடு. தமிழ் சினிமாவின் முக்கிய நபர் ஒருவர்.(எனக்கு சரியாக தெரியவில்லை அவர் யாரென.) வில்லும் கந்தசாமியும் பதிவர்களில் மட்டமான விமர்சனத்தால் நிலை குலைந்து போனதாக சொல்லி இருக்கின்றார். இப்போது சொல்லுங்கள் நான் சொன்னதில் என்ன தவறு.//
காசு கொடுத்து படம் பாத்தவன் நிலை குலைந்து போய் எழுதுகிறான் என்ன தப்பு சார்.
பதிவில்...
//சிவாஜி,ரமணாவின் நகல் என்னும் நீங்கள் தானே அன்று இதேபோல வந்த அந்தப்படங்களை வெற்றிபெற வைத்தீர்கள். இன்று அதேபோல வரும் கந்தசாமி சரியில்லையாம் என்ன நியாயம் இது. //
பின்னூட்டத்தில்...
//உங்கள் கருத்து சரி ஆனால் காதலுக்கு மரியாதையை எதிர்பார்ப்பது தான் தப்பு. சச்சின் இன்னொரு குஷியாக வந்தது ஏற்றீர்களா? கால மாற்றம் நடிகனும் மாறித்தானே நடிக்கவேண்டும்.//
உங்கள் பதிவுக்கும் பின்னூட்டத்திற்கும் முறன்பாடு உள்ளது :(
ரசனை ஆளுக்கு ஆள் மாறுபடும். உங்களை மாதிரியே மற்றவருக்கும் ரசனை இருக்க வேண்டும் என்றால் உங்கள் காதலியைதான் மற்றவர்களும் காதலிக்க வேண்டும் என எதிர்பார்ப்பிங்களா? :)
பல திரைப்பட விமர்சனங்கள் பார்த்தேன். சிலர் திரைப் படங்களைப் பார்க்காமலேயே ஏனைய வலைப்பதிவுகளில் இருக்கும் விமர்சனங்களைப் பார்த்து எழுதி இருப்பது புரிந்தது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
//C கூறியது...
இது தாங்க என் சொந்த பேரு. கருத்தை மட்டும் கேளுங்க.
உங்களை தான் எங்க வீரத்தளபதி தேடிகிட்டு இருக்காரு.
- சந்துரு//
யாரப்பா இவர் மற்றுமொரு தொல்லையா .....
ahhaa sathis yaaruu paaa anthaaa lucky sherya ungakitta matunathu..... ungalukum office laa matunanga??????????? lol
நம்ம ஒன்னுமே சொல்லல ஒரு வருகையை பதிவு செஞ்சிட்டு போய்ட்டே இருக்கேன்.
inthaa topicke evaloo comments ahh?????? naa daily visit pannuvein... bt ithuke vanthaa comments vera yentha topic ke... parathaa illa.....
குடுகுடுப்பை கூறியது...
ILA சொன்னது…
எது நடுநிலைமைன்னு நினைக்கிறீங்க? நல்லா இருந்தா நல்லா இருக்கும்னு எழுதுவாங்க, இல்லாட்டி காறிதான் துப்புவாங்க. நடுநிலைமை எதுக்கு வகிக்கனும்? //
இதுக்கு மேல மேட்டரே இல்லை சார்
:=)இதுக்குமேல தான் மேட்டெர் இருக்கு சார். நீங்கள் தரமாற்றாதாக காறித்துப்பும் படங்கள் எப்பிடி வந்திருக்க வேண்டும். எந்த படம் ஏன் உங்கள் பார்வையில் நல்ல படம் சொல்லிவிட்டு போங்கள்.
வேந்தன் கூறியது...
பதிவில்...
//சிவாஜி,ரமணாவின் நகல் என்னும் நீங்கள் தானே அன்று இதேபோல வந்த அந்தப்படங்களை வெற்றிபெற வைத்தீர்கள். இன்று அதேபோல வரும் கந்தசாமி சரியில்லையாம் என்ன நியாயம் இது. //
பின்னூட்டத்தில்...
//உங்கள் கருத்து சரி ஆனால் காதலுக்கு மரியாதையை எதிர்பார்ப்பது தான் தப்பு. சச்சின் இன்னொரு குஷியாக வந்தது ஏற்றீர்களா? கால மாற்றம் நடிகனும் மாறித்தானே நடிக்கவேண்டும்.//
உங்கள் பதிவுக்கும் பின்னூட்டத்திற்கும் முறன்பாடு உள்ளது :?
:=)என் கருத்தில் மாற்றம் இல்லை நீகள் குழம்பி விட்டீர்கள் போல கிடக்கு. சிவாஜி ரமணாவின் பாதிப்பில் வந்த கந்தசாமியை ஏற்கவில்லை என்பது என் கருத்து. அதை தொடர்ந்து நண்பர் வந்தி இன்னொரு காதலுக்கு மரியாதை வேண்டும் என்றார் அதற்க்கு தான் சொன்னேன் விஜய் மச ஹீரோ ஆகிவிட்டார் அவரிடம் இருந்து அதிரடி படங்களை தான் எதிர்பார்க்கின்றார்கள். அதிரடிக்கு நடுவே மாபெரும் வெற்றி பெற்ற குஷியை நகலாக வைத்து வந்த சச்சினுக்கு என்ன ஆனது என்பதை தான் சொன்னேன்.
:=)))
ரசனை ஆளுக்கு ஆள் மாறுபடும். உங்களை மாதிரியே மற்றவருக்கும் ரசனை இருக்க வேண்டும் என்றால் உங்கள் காதலியைதான் மற்றவர்களும் காதலிக்க வேண்டும் என எதிர்பார்ப்பிங்களா? :)
:=))0அதைத்தான் நானும் சொல்கின்றேன். ஆளாளுக்கு மாறுபடும் ரசனையை விட்டு விட்டு ஏன் எல்லோரும் ஒரேமாதிரி ஈஅடிச்சான் கோப்பி போல கந்தசாமி விமர்சனம் எழுதினர். வில்லு படத்த்தை ஒரே மாதிரி கிழித்தனர் உங்கள் ரசனை மாற்றப்படி கிளித்த்டிருக்கலாமே. குருவியில் விஜய் பறக்கின்றார் அதுதப்பு. அயனில் சூர்யா பறந்ததை எல்லோரும் கொண்டாடவில்லையா?
குடுகுடுப்பை கூறியது...
SShathiesh கூறியது...
இளைய கரிகாலன் கூறியது...
கந்தசாமி படம் பற்றியோ, விஜய் பற்றியோ பதிவர்கள் காண்டாகி எழுதுகிறார்கள் என்ற உங்கள் சப்ஜெட்டுக்கே நான் வரவில்லை.
ஒரு சின்ன கேள்வி மட்டும்தான்.
பதிவர்கள் எழுதும் பதிவு புதிதாக வெளிவரும் சினிமாவின் எதிர்காலத்தையே பாதிக்கும் என் நிசமாகவே நம்புகிறீர்களா!
:-(((
புதிதாக வெளிவரும் படத்தை தாக்குமோ இல்லையோ வந்த படங்களை தாக்கி இருக்கின்றது என்பது கண்கூடு. தமிழ் சினிமாவின் முக்கிய நபர் ஒருவர்.(எனக்கு சரியாக தெரியவில்லை அவர் யாரென.) வில்லும் கந்தசாமியும் பதிவர்களில் மட்டமான விமர்சனத்தால் நிலை குலைந்து போனதாக சொல்லி இருக்கின்றார். இப்போது சொல்லுங்கள் நான் சொன்னதில் என்ன தவறு.//
காசு கொடுத்து படம் பாத்தவன் நிலை குலைந்து போய் எழுதுகிறான் என்ன தப்பு சார்
:=)))))
உங்கள் கருத்து நன்றாக உள்ளது. அதேபோன்ற பட்டதை முதல் பார்த்து நிலைகுலையாமல் இப்போதான் பார்த்து நிலை குலைந்ததுபோலவும் சில வேண்டாத விமர்சனங்களையும் எழுதுவதுதான் தப்பு என்கின்றேன்.
சந்ரு கூறியது...
பல திரைப்பட விமர்சனங்கள் பார்த்தேன். சிலர் திரைப் படங்களைப் பார்க்காமலேயே ஏனைய வலைப்பதிவுகளில் இருக்கும் விமர்சனங்களைப் பார்த்து எழுதி இருப்பது புரிந்தது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
//C கூறியது...
இது தாங்க என் சொந்த பேரு. கருத்தை மட்டும் கேளுங்க.
உங்களை தான் எங்க வீரத்தளபதி தேடிகிட்டு இருக்காரு.
- சந்துரு//
யாரப்பா இவர் மற்றுமொரு தொல்லையா ....
:=))))))படங்கள் கோப்பி அடிக்கப்படுகின்றன ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் அதன் விமர்சனங்களை எழுதும் பதிவர்கள் கோப்பி அடிக்காமல் எழுதுவதே நல்லது. பல பதிவுகள் ஒருவரினால் சிறு சிறு மாற்றங்களோடு எழுதப்பட்டு போஸ்டர் அடித்தது போல இருந்தது மறுக்க முடியாத உண்மையே.
Nimalesh கூறியது...
ahhaa sathis yaaruu paaa anthaaa lucky sherya ungakitta matunathu..... ungalukum office laa matunanga??????????? lol
:===))))
ஆஹா அப்படி இப்படி வம்பில் மாட்டி விடாதீர்கள். பதிவில் நான் கில்லி விளையாட எனக்கு ஒரு ஸ்ரேயா கிடைத்த்டுவிட்டார் அதைத்தான் சொன்னேன்.
யோ வாய்ஸ் கூறியது...
நம்ம ஒன்னுமே சொல்லல ஒரு வருகையை பதிவு செஞ்சிட்டு போய்ட்டே இருக்கேன்
:=))0உங்கள் வருகைக்கு நன்றி தலைவா. ஆனால் பாடங்களில் உங்கள் எதிர்பார்ப்பு பற்றி சிறிது சொல்லி இருக்காலாம்.
Nimalesh கூறியது...
inthaa topicke evaloo comments ahh?????? naa daily visit pannuvein... bt ithuke vanthaa comments vera yentha topic ke... parathaa illa.....
:===)))நன்றி உங்கள் வருகைக்கு. நண்பர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டிருக்கின்றீர்கள். அதேநேரம் நீங்கள் தரமற்ற படங்கள் என கூறும் படங்கள் எப்படி இருந்திருக்கலாம் அல்லது தரமான படம் என்றால் உங்கள் கணிப்பு என்ன என்பதை பின்நூடத்திலோ அல்லது உன்கள் தளங்களிலோ எழுதிவிடுங்கள்.
சமுகத்துக்கு நல்ல கருத்துக்களை சொல்லும் படங்களாக. இருக்கவேண்டும்.
வெறுமனே பணத்தை உழைக்கவேண்டும் என்ற நோக்கோடு எதனையும் செய்யலாம் என்று சில படங்கள் வெளிவருகின்றன. இன்று எத்தனை படங்கள் குடும்பத்தோடு சென்று பார்க்க முடிகின்றன. எந்த ஒரு நல்ல கருத்துக்களும் சொல்லாமல் நடிகைகளின் அரைகுறை ஆடைகளுக்காக ஓடிய படங்களும் உண்டு. இவ்வாறு வெற்றி பெற்ற படங்கள் நிலைத்து நிற்பது சிறிது காலம் மட்டுமே காலம் கடந்ததும் எல்லோரும் மறந்து விடுவார்கள்.
ஆனால் நல்ல கருத்துக்களை சொல்லும் படங்கள் வெற்றி பெற்றதோடு மட்டுமன்றி என்றும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கின்றன.
வெளிவரும் படங்கள் குடும்பத்தோடு சென்று பார்க்கக்கூடிய படங்களாக வெளிவர வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.
பதிவு நல்லாயிருக்கு..
விடையத்திற்கு வருவோம்.. உங்கள் பதிவின் கடைசி வரிகள் இங்கே இழுத்து வந்தன..
”அப்பாடா எனக்கு ஒரு ஸ்ரேயா சிக்கிட்டாங்க. ”
சொல்லவேயில்ல... வாழ்த்துக்கள்..!
சந்ரு கூறியது...
சமுகத்துக்கு நல்ல கருத்துக்களை சொல்லும் படங்களாக. இருக்கவேண்டும்.
வெறுமனே பணத்தை உழைக்கவேண்டும் என்ற நோக்கோடு எதனையும் செய்யலாம் என்று சில படங்கள் வெளிவருகின்றன. இன்று எத்தனை படங்கள் குடும்பத்தோடு சென்று பார்க்க முடிகின்றன. எந்த ஒரு நல்ல கருத்துக்களும் சொல்லாமல் நடிகைகளின் அரைகுறை ஆடைகளுக்காக ஓடிய படங்களும் உண்டு. இவ்வாறு வெற்றி பெற்ற படங்கள் நிலைத்து நிற்பது சிறிது காலம் மட்டுமே காலம் கடந்ததும் எல்லோரும் மறந்து விடுவார்கள்.
ஆனால் நல்ல கருத்துக்களை சொல்லும் படங்கள் வெற்றி பெற்றதோடு மட்டுமன்றி என்றும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கின்றன.
வெளிவரும் படங்கள் குடும்பத்தோடு சென்று பார்க்கக்கூடிய படங்களாக வெளிவர வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு
:==))
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பரே.
சுபானு கூறியது...
பதிவு நல்லாயிருக்கு..
விடையத்திற்கு வருவோம்.. உங்கள் பதிவின் கடைசி வரிகள் இங்கே இழுத்து வந்தன..
”அப்பாடா எனக்கு ஒரு ஸ்ரேயா சிக்கிட்டாங்க. ”
சொல்லவேயில்ல... வாழ்த்துக்கள்..
:==))அடப்பாவிகளா. பதிவர் சந்திப்பில் நயன்,நமிதா விடயம் அடிபட்டமாதிரி நமக்கு பதிவு தலைப்புகளுக்கு ஸ்ரேயா சிக்கியதை சொன்னேன் உடன ஆரம்பிச்சுடுவின்களே உங்க கச்சேரியை. நன்றி
ஒருவர் கந்தசாமிக்கு விமர்சனம் எழுதிவிட, அதேபோல் அல்லது அதைப் பின்பற்றி மற்றவர்கள் எழுதும் கந்தசாமி விமர்சனம் எவ்வாறு உங்களுக்குப் பிடிக்காது போனதோ...
அவ்வாறே சிவாஜி, ரமணா போன்ற ராபின்ஹூட் கதைகளின் சாயல் நிறையவே இருக்கும் கந்தசாமியும் கந்தல்சாமியானது ஒன்று அதிசயமில்லை.
இந்தக் காலத்தில் இந்த நிலையில் கந்தசாமி ஒரு மகா மொக்கை. இது பீயூ சின்னப்பா காலத்தில் வந்திருந்தால் சிறந்த படம்.(700 ரூபா குடுத்து முதற்காட்சி பார்த்த கடுப்பு வேற) ஸ்ரேயா வந்தால் நானே கிழிச்சுக் குதறிவிடுவன் போல :))
மதுவதனன் மௌ. / cowboymathu கூறியது...
ஒருவர் கந்தசாமிக்கு விமர்சனம் எழுதிவிட, அதேபோல் அல்லது அதைப் பின்பற்றி மற்றவர்கள் எழுதும் கந்தசாமி விமர்சனம் எவ்வாறு உங்களுக்குப் பிடிக்காது போனதோ...
அவ்வாறே சிவாஜி, ரமணா போன்ற ராபின்ஹூட் கதைகளின் சாயல் நிறையவே இருக்கும் கந்தசாமியும் கந்தல்சாமியானது ஒன்று அதிசயமில்லை.
இந்தக் காலத்தில் இந்த நிலையில் கந்தசாமி ஒரு மகா மொக்கை. இது பீயூ சின்னப்பா காலத்தில் வந்திருந்தால் சிறந்த படம்.(700 ரூபா குடுத்து முதற்காட்சி பார்த்த கடுப்பு வேற) ஸ்ரேயா வந்தால் நானே கிழிச்சுக் குதறிவிடுவன் போல :)
ஏனையா ஸ்ரேயாமேல் இப்படி ஒரு கொலைவெறி. நல்ல ஒரு கருத்தது. ஆனால் ஒன்றை விமர்சிக்க முதல் அவர்கள் இன்னொன்றை கோப்பி அடிக்காமல் விமர்சிக்கணும் என்பது என் கருத்து.
நான் ஒருமுறை இலங்கையின் மூத்த அரசியல்வாதி ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். மிகவும் ஓபனாக அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எனக்கொரு விஷயத்தைச் சொன்னார். திடீரென ஃபேமஸ் ஆகிறது என்பது கஷ்டம் அப்படி ஆனாலும் அது நின்று நலைப்பதில்லை. உதாரணத்துக்கு சமூகத்திலுள்ள எல்லோரும் ஒரு கருத்தைச் சொல்லிக்கொண்டிருக்கும் போது திடீரென அதற்கு மாற்றுக்கருத்தைச் சொல்லி தங்களைப் புரட்சிகரமான கருத்தாளர்கள் என்று காட்டிக்கொள்வதால் உடனடிப் பிரபலம் கிடைக்கும் ஆனால் அது நின்று நிலைக்கப்போவதில்லை என்றார். மேலும் சொன்ன அவர் “லொஜிக்கலா வாதாடினால் எதையும் நிரூபிக்கலாம் - ஆக அதை நாங்கள் விதண்டாவாதம் எண்டு சொல்லுவம் - ஆக எதைப்பற்றியும் எந்தப் பக்கத்துக்கும் கதைக்க முடியும், வாதாட முடியும் ஆனால் பேசுறவனுக்கே தெரியும் தான் சொல்லுவது தன்னுடைய மனச்சாட்சிக்கே ஏற்புடையதா என்று” இப்படி அவர் சொன்னது - உங்களுடைய பதிவைப் பார்த்ததும் என் மனத்திரையில் ஞாபகத்திற்கு வந்தது.
அப்ப எல்லாரும் கடைசியா என்ன சொல்லவாறியள்? ஓசியா இல்ல 1000 ரூபா குடுத்து கூப்பிட்டாலும் பாக்கப்போயிடாத எண்டா?
சதீஸ் ... என்ன ஏதாவது தமிழ் படத்தில நடிக்கிற ஐடியா இருக்கா? இவ்வளவுபரட்ட இத்தன அடிவாங்கியயும் உலுப்பிட்டு எழும்பி நிக்கிறீங்க.. அதுவே ஒரு குவாலிபிுகேசன்தான்.
//அப்படிப்பார்த்தால் குருதிப்புனலின் இறுதிக்காட்சியில் கொவ்தமியின் அந்த காட்சியை மட்டும் பார்க்கலாமா? //
தம்பி சதிஸ் குருதிப்புனல் வயது வந்தவர்களுக்கான படம் ஆனால் கந்தசாமியை குழந்தைகளுடன் சென்று பார்வையிடுங்கள் என விளம்பரம் செய்கிறார்கள். ஸ்ரேயாவை துவாயுடன் பார்க்கும் எந்தக் குழந்தையும் பயந்துபோம். பெரிய குழந்தைகளான நாமே பயப்படும்போது சிறுவர்கள் எனன் செய்வார்கள்.
ஸ்ரேயாவை கழங்கப்படுத்தினாரா விக்ரம்?
உங்கள் ஆதங்கம் புரிகிறது சதீஷ்...
இப்ப விஜய் தொடர்பாக வெளியான அரசியல் செய்தியால் அவரை பதிவர்கள் நாறடிக்கின்றார்கள்....
பதிவுலகில இதெல்லாம் சகஜமப்பா... அப்பிடீன்னு சொல்லிட்டு இருக்காமல் துணிந்து பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்....
நீங்களே சொல்லிட்டிங்க உங்க கேள்விகளுக்கான பதிலை.
விஜய் நடித்த கில்லி, சிவகாசி படங்களை ரசித்தோம். ஆனால் மறுபடியும் குருவி, வில்லு என்று இந்தப் படங்களையே திரும்பவும் ஏன் எடுக்க வேண்டும்? அப்படி எடுத்தால் அதையும் பாராட்டு, ரசி என்று எப்படி நீங்கள் சொல்லலாம்?
சிவாஜியைப் போலவே ஒரு படம் எடுக்கப்போகிறேன் என்று நீங்கள் வேண்டுமானால் கோடிக்கணக்கானா ரூபாய்களை செலவு செய்யலாம். நான் ஏன் என் 100 ரூபாயை செலவு செய்து அந்தப் படத்தை பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்?
இந்த வாதங்களை வைக்கின்ற அதே சமயம், நான் விமர்சனம் எழுதும் அத்தனை பதிவர்களுக்கும் வக்காலத்து வாங்குகிறேன் என்று எண்ணி விடாதீர்கள். இப்போது திட்டி எழுதினால்தான் பாப்புலாரிட்டி கிடைக்கும் என்று எதை எடுத்தாலும் திட்டிக் கொண்டிருக்கும் பலர் பல்கிப் பெருகிவிட்டார்கள். இவர்களால் ஒரு திட்டு விமர்சனம் மட்டும் தான் எழுத முடியும். பசங்க, நாடோடிகள்,சுப்பிரமணியபுரம் போன்ற நல்ல திரைப்படங்களைப் பாராட்டி ஒரு பதிவு போட மாட்டார்கள் (அது மார்க்கட் ஆகாதே)
மேலும் நீங்கள் குருதிப் புனல் படம் பற்றி சொன்னீர்கள். குருதிப் புனல் ஏ சர்டிபிகேட் பெற்ற திரைப்படம். கந்தசாமி UA - அனைவரும் பார்க்கத்தகுந்த திரைப்படம். அது மட்டுமல்ல, நீங்கள் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியான விக்ரமின் பேட்டியை சன் தொலைக்காட்சியில் பார்த்திருந்தீர்களென்றால், கந்தசாமி என்னவோ குழந்தைகளுக்காகவே எடுக்கப்பட்ட படம் என்று பேசிக்கொண்டே போகிறார். நெஞ்சில் கை வைத்து சொல்லுங்க்கள், உங்கள் குழந்தை பார்க்க வேண்டிய படமா அது?
நீங்கள் தரமாற்றாதாக காறித்துப்பும் படங்கள் எப்பிடி வந்திருக்க வேண்டும்//
ஒரு சாப்பாட்டுக்கடையில சாப்பிடப்போயிட்டு.. அங்கை சாப்பாடு சரியில்லையெண்டால் நான் கடைக்காரரை கூப்பிட்டு.. அண்ணை இந்தச்சாப்பாடு சரியில்லை என்றுதான் சொல்லமுடியுமே தவிர..
முதலில் அரிசியை அளவாக எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது தண்ணீரை கொதிக்கவைத்து உலையை வையுங்கள்.. உருளைக்கிழங்குகளை சீவிக்கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்ல முடியாதல்லவா.. :)
விஜய் படம் பாக்கும் போது விஜய் படம்னு பாருங்க!! அத விட்டுட்டு விஜய் படத்துல அவர் போலீஸ் மாதிரி ஆக்ட் பண்ணா அந்த இடத்துல சூரியா மாதிரி இல்ல விக்ரம் மாதிரி இல்லனு வேற ஒரு HERO kooda Compare pani pakathinga!!
Kuruvi,Villu Padam yen Makkal kita Reach aagula? Unwanted Scenes iruntha nala than elam Naara adichanga! Vijay ithuku Munadi nadicha padathula athu mathri scenes ilaya?antha padam elam Makkal kita reach aagalaya!
romba thairiyamana karuthukal.....anaithu pathivargalum miga kevalamana paathayil sellum bothu abaaya mani adithirukireergal....vaazthukal.....
நிறைய கும்மிகள் நடந்திருக்கின்றன போல...
ம்...
எனக்கு விஜயைப் பிடிக்கும்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை வில்லு என்ற படம் வெற்றி பெறக் கூடியளவுக்கு தகுதி இல்லை என நம்புகிறேன்.
ஆனால் தோல்வியடைந்த சச்சின் என்ற படம் எனக்குப் பிடித்திருந்தது.
கந்தசாமியில் ஆபாசம் அதிகம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
கந்தசாமியின் இயக்கத்த பெரிதாக குறை சொல்ல முடியாவிட்டாலும் அடுத்தது இது தான் நடக்கப் போகிறத என்பது உங்களுக்கு படம் பார்க்கும் போதே தெரிந்ததல்லவா... அதாவது suspence இல்லை...
நம்மவர்கள் விஜயை கொஞ்சம் அதிகமாகவே போட்டுத் தாக்குவதென்னவோ உண்மை தான்...
Post a Comment