உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Sunday, June 27, 2010

எழுந்திட்டேன்! இதோ வர்றன்



வணக்கம் மக்கள்ஸ்,

இப்படி ஆரம்பித்து திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகளுக்கான இறுதி முடிவுகளை தந்திருக்க வேண்டியவர்களில் நானும் ஒருவன் ஆனால் காலம் செய்த கோலம கடந்த சனி தொடக்கம் என்னை அதை செய்யவிடாமல் செய்துவிட்டது. இதனால் சூடானா சில பதிவுகள் எழுதமுடியாமல் போய்விட்டது. முக்கியமாக விஜய் பிறந்தநாள் வாழ்த்து பதிவு. பெரிதாய் ஒரு காரணமும் இல்லை. காய்ச்சல் தாங்க ஆனால் ரொம்ப மோசமாய் வந்திட்டிது. என்ன என்ன எல்லாம் இருக்கா என டாக்டர் கேட்கும்போது இல்லை என்று சொன்னேனா ஆனால் அவை எல்லாம் அதன் பின் வந்து இறுதியில் இன்று எழும்பி இருக்கின்றேன்.

கடந்த சனி இரவே என் உடல் நிலை மோசமாகின்றது என புரிந்து கொண்டு விட்டேன். இருப்பினும் அடுத்த நாள் மாலை இடம்பெறும் குட்டி பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வேன் என கூரியிருந்த நான் மதியமளவில் பதிவர் கான்கொனுக்கு அலைபேசி இன்று வரமாட்டேன் என சொல்லிவிட்டு. இரவு சகல வேலைகளையும் முடித்து முடிவுகளை சொன்ன நேரத்துக்கு அறிவித்து விடுங்கள் என சொல்லி விட்டேன். குளிர் நடுக்கம், காய்ச்சல் தலைவலிக்கு நடுவே இடையிடையே நண்பர்களுடன் தொலைபேசியில் பேச முயன்றும் முடியாமல போக என் இணைய தளத்தை இயங்க செய்து மெயிலையும் திறந்து விட்டு முடிவுகளை அறிவித்தவுடன் எனக்கு சொல்லவும் என சொல்லிவிட்டு படுத்திருந்தேன். இரவு ஒன்பது முப்பது அளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டதாக வந்த தொலை பேசி அழைப்பை தொடர்ந்து பெரிய ஒரு வேலை முடிந்தது என்ற நம்பிக்கையில் படுத்தவன் இன்றுதான் மீண்டும் இன்னொரு பதிவுடன் சந்திக்கின்றேன்.

ஆரம்பத்தில் இந்த முயற்ச்சியை நான் ஆரம்பித்த வேலை என்னுடன் கரம கோர்த்த கோபி,பவன் இரண்டுபேரின் பங்கும் இதில் முக்கியமானது. அதன் பின்னர் பலர் எங்களுடன் இணைந்தனர். அவர்கள் எல்லோரிடமும் நாங்கள் தெரிவுகளை விசாரிக்கும் நேரம் நான் கோபமாக பேசியது சில விதண்டாவாதன்களை பேசியதற்கு மன்னிப்பு கேட்கின்றேன். தொழில் நுட்ப விடயங்களில் புகுந்து விளையாடி வாக்களிப்பு படைகளை உருவாக்கிய கோபி, வலைப்பூ விருது லோகோ,வலைபூ லோகோ என பல உருவாக்கி உழைத்த பவன் இதற்கான விளம்பரப்படுத்தலில் ஈடுபட்ட அனுதிணன் என எல்லோரும் என் நன்றிக்குரியவர்கள். இதை விடுத்து சுபாங்கன் அண்ணா,மது அண்ணா, வந்தி மாமா, லோஷன் அண்ணா, ஆதிரை அண்ணா, இந்தியாவின் சவுந்தர், தமிழ் மதுரம் மெல்பேர்ன் கமல், அகசியம் வரோ, பங்குச்சந்தை அச்சுதன், மருதமூரான் அண்ணா, மதுரகன் அண்ணா என நேரடியாய் எம்முடன் தொடர்பு கொண்டு ஆதரவளித்தொருக்கும் இன்னும் எமக்கே தெரியாமல் தம நல்ல மனதால் ஆதரவளித்த எல்லோருக்கும் என் நன்றிகள்.

ஒரு கை ஓசை கடந்தமுறை பெரிதாய் கேட்கவில்லை. இம்முறை பல கை சேர்ந்த போது அது பாரெல்லாம் ஒலித்தது சந்தோசம். இதற்க்கு இலங்கை பதிவர்கள் மட்டுமன்றி சில இந்திய பதிவர்களும் தனிப்பட்ட ரீதியில் என்னுடன் தொடர்பு கொண்டு ஆதரவளித்தனர்.(அங்கே நடந்த பதிவுலக சாக்கடையால் தம பெயர் இதற்குள் அடிபட்டு இந்த நல்ல முயற்ச்சிக்கு சேறு பூச விரும்பாமால் அவர்கள் நேரடியாய் பதிவுகளை இடவில்லை) அவர்களுக்கும் என் நன்றிகள. கடந்தமுறை ஒரு வாக்காளார் நூறு வாக்குகளை பெற்றதே பெருமையாய் எண்ணிய நிலையில் இம்முறை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் போட்டியாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என்றால் அது எந்தளவு பிரமாண்டத்தை கண்டிருக்கின்றது என உங்களுக்கே தெரியும்.

முக புத்தகம்,டுவிட்டர் மற்றும் தங்கள் வலைத்தளம் என தங்கள் ஆதரவை தனிப்பட்டோர் வழங்க தமிலிஷ்,யாழ்தேவி,தலைவன் திரட்டிகள் தங்கள் அமோக ஆதரவை வழங்கியுள்ளன. எல்லோருக்கும் நன்றி சொல்லும் அதே நேரம் இதுவரை முடிவுகளை அறியாதவர்கள் கீழுள்ள லிங்கை சொடுக்கி பார்க்கவும்.....


நன்றி என்னும் ஒரு வார்த்தை மட்டுமே என்னால் தரமுடியும் நண்பர்களே. நான் படுக்கையில் கிடக்கும் போதே வெற்றிகரமாய் ஒரு முடிவுகளை அறிவித்த என் அன்புத்தம்பிகளுக்கும் என் நன்றிகள். இன்னும் பெயர் சொல்ல மறந்த எல்லோருக்கும் என் நன்றிகள்.
Share:

Saturday, June 19, 2010

சிங் is கிங் - இறுதிப்போட்டியில் இந்தியா.



உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் உலகை ஆக்கிரமித்துள்ள நிலையில் இலங்கையில் இடம்பெற்று வரும் ஆசிய கிண்ண போட்டிகளை கணக்கெடுக்க மறுத்த பலரையும் இன்று மீண்டும் கிரிக்கெட் பக்கம் திருப்பிய போட்டி ஒன்று இப்போதுதான் நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியை பார்த்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் கூட 50 ஓவர் போட்டி பற்றிய தங்கள் கருத்தை மீள் பரிசீலனை செய்வர் என சொல்கின்றது கிரிக இன்போ.

அப்படி என்ன தான் நடந்தது? என்று கேட்கிறீர்களா? வேறு என்ன கிரிக்கெட்டில் இரு துருவங்கள் மோதிய போட்டிதான். இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி வழமை போல விறு விறுப்பாக நடை பெற்று முடிந்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தலைவர் அப்ரிடி முதலில் பாகிஸ்தான் துடுப்பெடுத்தாடும் என முடிவெடுத்தார். அதற்கமைய ஆரம்பத்தை அமர்க்களமாக தான் ஆரம்பித்தனர் சல்மான் பட்டும் பர்ஹத்தும். நீண்ட போராட்டத்தின் பின் ஹர்பஜன் சிங் இந்த இணையை பிரிக்க அடுத்ததாய் ஜோடி சேர்ந்த சானியாவின் நாயகன் மாலிக்கும் பட்டும் இணைந்து மீள கட்டி எழுப்ப மீண்டும் அதை காண தகர்க்க அடுத்தடுத்து பாகிஸ்தானின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் விழ ஒரு கட்டத்தில் உமர அக்மலும் அப்பிரிடியும் இணைந்து அதிரடிக்கு மாற அப்ரிடி ஆட்டம் இழக்க மீண்டும் சோர்ந்தது பாகிஸ்தான். இருப்பினும் கம்ரன் அக்மாலின் தாண்டவத்தின் மூலம் 267 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது பாகிஸ்தான் அணி.

பந்துவீச்சில் இந்தியாவின் பிரவீன் குமார் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி மிரட்ட பஜ்ஜி தன் பங்குக்கு இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார். மறுமுனையில் பாரிய இலக்கொன்றை துரத்த ஆரம்பித்த இந்தியாவுக்கு அமைதியான ஒரு தொடக்கம் கொடுக்க முனைந்தனர் ஷேவாக்கும் கம்பீரும். இடையில் சேவாக் ஓட முடியாமல் அவதிப்பட்டு ரைனாவை ஓட பயன்படுத்தினாலும் சேவாக் இன்னும் போரிமில் இல்லை என்பதை இன்றைய போட்டி காட்டியது. மறுமுனையில் கடந்த போட்டி போல தொடர்கிறது காம்பீரின் அட்டகாசம்.இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அடுத்த டிராவிட், விராட் கோலி, கம்பீருக்கு பக்க பலமாக இருக்க ஓட்ட வேகம் அதிகரித்தது. பாகிஸ்தான் பந்துகள் பந்தாடப்பட்டுக்கொண்டிருக்க கோலி ஆட்டமிழந்தார். இதை தொடர்ந்து இணைந்த டோனி, கம்பீருடன் சேர்ந்து மிகப்பெரிய இணைப்பாட்டம் ஒன்றை வழங்க இந்தியா வெற்றியை நோக்கி நகர தொடங்கியது.

இம்முறையும் சதத்தை நெருங்கி அதை பெற முடியாமல் தவற விட்டு கம்பீர் ஆட்டமிழக்க சிறிது நேரம் ஷர்மா, தோனிக்கு கைகொடுத்தார். ஆனால் ஷர்மா வெளியேறிய உடன் தோனியும் வெளியேற இந்தியா ஆட்டம் காண தொடங்கியது. மறுமுனையில் ரைனாவும் ஜடேயாவும் போராடினாலும் ஓட்ட வேகம் மந்தமானதுடன் ஜடேயா வழக்கம் போல தேவையான நேரத்தில் சொதப்பினார். ஆனால் அவர் போனது நல்லது போல வந்த பஜ்ஜி அக்தர் பந்தில் ஒரு சிக்ஸ் அடித்து தன் கணக்கை ஆரம்பித்தார். இவர் தான் கணக்கை முடிக்கப்போகின்றார் என்று அப்போது தெரியவில்லை. வெற்றியை நோக்கி வீறு நடை போட்டுக்கொண்டிருந்த அணிக்கு பந்துகள் குறைய தொடங்க பதற்றமும் தொற்றிக்கொண்டது. இந்த பதற்றத்தில் ரைனா ரன அவுட் ஆக இந்தியா தோற்று விடும் என எதிர்பார்த்தேன். ஆனால் வந்த பிரவீன் குமார் கைகொடுக்க. பஜ்ஜி சில பந்துகளை முகம் கொடுக்க தடுமாறினார். இடையில் அக்தர், பஜ்ஜி வாக்குவாதம் சூடாக கம்ரன் அக்மல் அவர்களை பிரித்து அழைத்து சென்றதும் சூடு. அக்தர் இன்று விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை என்பதும் குறிப்பிட தக்கது.

இறுதியில் இரண்டு பந்துகள் மீதமிருக்க மூன்று ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இரண்டாவது ஓட்டத்தை ஓட வந்த பிரவீனை தடுத்து நிறுத்திய பஜ்ஜி அடுத்த பந்தில் இமாலய சிக்ஸ் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். சிக்ஸ் பறந்து கொண்டிருக்கும் போதே சிங்கம் கர்ஜிப்பது போல அக்தரை பார்த்து கர்ஜிக்க அதற்க்கு அக்தரும் கையில் V காட்டி விட்டு போடா போடா என்பது போல கையால் காட்டியதும் செம ஹாட் மச்சி. ஆனால் என்னதான் அவர்கள் சொல்லிக்கொண்டார்களோ தெரியல.

மொத்தத்தில் இறுதி நேரத்தில் ஹீரோவாகி இந்தியாவை காப்பாற்றிய சிங் தான் இன்றைய கிங்.

சில சுவாரஸ்யங்கள்.

இடையில் பந்து மாற்றும் நேரம் வரும் போது பந்தை மாற்ற வேண்டாம் என அப்ரிடி சின்ன பிள்ளை போல அடம பிடித்தார்.
அக்தர்-பஜ்ஜி சண்டை...

போட்டி நிறைவடைந்த பின் இதை பற்றி கூறிய அப்ரிடி இது ஒரு நல்ல போட்டி என்றும் தாங்கள் நன்றாக ஆடியதாகவும் அதை விட இந்திய வீர்கள் ஆட்டம் சிறப்பு என்றும் பெருந்தன்மையோடு பாராட்டினார்.

அதே நேரம் இந்த வெற்றி கூல் கப்டன் என ரவி சாஸ்திரி தொனியை அழைக்க தான் இன்று கூல் இல்லை என்றும் இந்தியா பாகிஸ்தான் ஆடும் போது எப்படி கூழை இருக்க முடியும் என கெட்ட தோணி பஜ்ஜி தன்னை காப்பாற்றிவிட்டார் என்றும் சொன்னார். அதேநேரம் இனி சிங்கை ஒரு ஆல்ரவுண்டர் என சொல்லலாம் எனவும் கூறினார். இன்று மட்டுமன்றி கம்பீருடன் இந்திய ஏ அணியில் ஆடும் போதே மின்னொளியில் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை தான் வழங்கியதாகவும் அவர் சொல்லி இருக்கின்றார்.

எது எப்படியோ மீண்டும் ஒரு தடவை ஐம்பது ஓவர் போட்டி ஒன்று உயிர் பெற்றிருக்கின்றது. இன்னும் இரு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு இந்திய மற்றும் இலங்கை அணிகள் தெரிவாகி உள்ளன. இதில் இறுதி லீக் போட்டியில் மொத இருக்கும் அணிகளே இறுதிப்போட்டியில் மோத உள்ளதால் ஆட்டம் சூடு பறக்கும் எனபதில் சந்தேகமில்லை.

பி.கு: எல்லோரும் ராவணன் படம் பார்த்து விட்டீர்கள் போல. விமர்சனங்கள் சூடாக வருகின்றன. படித்துள்ளேன். ஆனால் பலருக்கு பின்னூட்டம் இடவில்லை. காரணம் படம் பார்க்காமல் எப்பிடி....விரைவில் பார்ப்பேன் என நம்புகின்றேன்.
Share:

Friday, June 18, 2010

வாக்களிப்பு நிறைவடைய இன்னும் இருப்பது ஒரு சில நிமிடங்கள்.



வணக்கம் மக்கள்ஸ்,

இதுவரை நாளும் உங்கள் அமோக ஆதரவில் நடைபெற்று வந்த திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகளுக்கான வாக்களிப்பு இன்னும் சில நிமிடங்களில் நிறைவுக்கு வர இருக்கின்றது. உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து இந்த வாக்களிப்புக்கு அமோக ஆதரவு வழங்கிய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.

இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில் இன்னும் வாக்களிக்காத நபர்கள் உங்கள் வாக்கினை அளிப்பதுடன் முடிவுகளை விரைவில் அறியக்கூடியதாக இருக்கும். நீக்கல் வாக்களித்தவர் தான் வெற்றியாளரா என்பதை உத்தியோக பூர்வமாக அறிய அந்த பொன்னான நேரத்துக்கு காத்திருங்கள்.

வாஞ்சையுடன் வாக்களிப்போம் விரும்பியவரை வெல்லவைப்போம்.


Share:

ராவணன்- ஒரு சந்தேகம்.


ராவணன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ள நிலையில் எனக்கு ஒரு சந்தேகம் இந்த ரவாணன் மேலே. இது படத்தை பற்றியோ படத்தின் மையக்கருத்து பற்றியோ அல்லது இசை பற்றியோ இல்லை நடிப்பு பற்றியோ நான் பேசப்போவதும் இல்லை. ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் அண்ணே.

படம் எப்படியும் இருக்கட்டும். நல்ல படம் என பார்த்தவர்கள் சொல்லக்கேட்டு சந்தோசம். ஆனாலும் எனக்கொரு சந்தேகம். சரி அதுவும் இருக்கட்டும். விக்ரமுக்கு இன்னொரு தேசிய விருது கிடைக்குமா தெரியாது ஆனால் எனக்கொரு சந்தேகம் இருக்கு.

பீடிகை எல்லாம் போதும் விசயத்துக்கு வா என்பது புரிகிறது. வாறன் வாறன். ஆனால் எனக்கொரு சந்தேகம் அண்ணே. அதுவும் தமிழில் அண்ணே. அதுவும் நம் ஊடகத்துறையில் இருக்கும் ஒரு சில செய்தி வாசிப்பவர்கள் மீதும் இந்தியாவில் இருக்கும் சில தமிழ் அறிஞர்கள் மீதும் அண்ணே. அதாவது நான் என்ன சொல்ல வருகின்றேன் என்றால் நம் பாடசாலை புத்தகத்திலும் சரி இன்றைய தினசரி பத்திரிகையிலும் சரி “ர” எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் முன் “இ” போட்டு எழுதுவது மரபு. ஆனால் வாசிக்கும் போது அந்த “இ” காணாமல் போய்விடும். “இ” ஐ தவிர்த்து வாசிக்க வேண்டும் என்பதே எங்களுக்கு பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் காரணம் என்ன என எனக்கு தெரியவில்லை. யாரும் அறிந்தவர்கள் சொல்லுங்கள்.

ஆனால் இன்று சில செய்தி வாசிப்பாளர்கள் இதை கணக்கெடுப்பதாய் இல்லை. இது ஏன்? அவர்களுக்கு யாரும் சொல்லவில்லையா? இல்லை அதுதான் சரியா? ஆனால் எனக்கு சொல்லிக் கொடுத்தவர்கள் அதை தவிர்த்து வாசிக்கவே சொல்லிக்கொடுத்துள்ளனர். ஏன் நம் உறவினர்கள் பெயர் கூட “இ” யினால் அலங்கரிக்கப்படுகின்றது.இப்போது என் கேள்வி என்ன? திரைப்படம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் சக்தி கொண்டது. அதுவும் மணிரத்னம் போன்ற ஜாம்பவாங்களினால் பாரிய புரட்சியே செய்யமுடியும். அப்படி இருக்கையில் அவரின் திரைப்பட பெயர் “ராவணன்” என எழுதப்படுகின்றது. இது சரியா? அல்லது இதை அவர் கணக்கெடுக்கவில்லையா? தமிழ் தமிழ் என சாகும் மூத்த முத்திய தலைவர்கள் கலைஞர்கள் கண்ணில் இது படவில்லையா? அல்லது கண்டும் காணாமல் விடபட்டுள்ளதா? வரிச்சலுகை கொடுக்கும் கலைஞர் ஐயா அவர்களுக்குமா இது தெரியவில்லை?

இதை நான் பரபரப்புக்காகவோ அல்லது பிரபலத்துக்காகவோ எழுதவில்லை. காரணம் படம் நான் இன்னும் பார்க்கவில்லை. அப்படி இருக்கையில் படத்தை பற்றி சொல்ல எனக்கு எந்த அருகதையும் இல்லை. ஆனால் இந்த பட பெயர் தான் நீண்ட நாட்களாய் எனக்குள் இருந்த கேள்வியை மேலும் தூண்டியது. எனவே பதிவாக்கியுள்ளேன். படித்தவர்கள் கொஞ்சம் என் சந்தேகத்தை பூர்த்தி செய்து விடுங்கள்.

Share:

Thursday, June 17, 2010

நடிகைகளுடன் பிரபல பதிவருக்கு தொடர்பு. - ஒப்புதல் வாக்கு மூலம்.

சினிமா நடிகைகளுடன் பல பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதும் அதை இரு தரப்பும் மறுப்பதும் காலம் காலமாக கசப்பான உண்மைகள். இம்முறை அந்த சர்ச்சையில் சிக்கி இருப்பவர் ஒரு பிரபல பதிவர். ஆனால் இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் தனக்கும் நடிகைகளுக்கும் இடையில் இருக்கும் உறவினை பற்றி தன் வாயால் அவர் சொன்ன விடயங்கள் இவை. கொஞ்சம் சீரியசாய் படியுங்க. என்ன செய்றது இப்படி எல்லாம் இருக்குமா? அதுசரி இவர் மட்டும் என்ன விதி விலக்கா?


இலங்கையை சேர்ந்த பிரபல பதிவர் பவன். எரியாத சுவடுகள் என்ற பெயரில் வலைப்பூவினை எழுதும் இவர் பலரின் டவுசர்களை கிழித்துள்ளார். இம்முறை கிழியப்போவது அவர் டவுசர். ஒருத்தனின் டவுசரை கிழிப்பதில் என்ன ஒரு சந்தோசம். யாரும் திட்டப்படாது ஒழுங்காய் படிக்கணும் புரிதா?

உப்புடித்தாங்கோ நாங்கள் பல விஷயம் பேசுவோம். அட பதிவர்களை தான் சொன்னேன். அப்பிடி பேசினால் பல பேர் தங்கள் டவுசரை தாங்களே கிழிச்சிடுறாங்க. அதுக்கு நாமா பொறுப்பு என்ன செய்ய? பேசிக்கொண்டு இருக்கும் போது அவா எப்பிடி இருக்கா என கேட்க இவர் பலருக்கு காதலில் "அஞ்சலி" செய்த பாட்டி தானே சீக்கிரம் சொல்லிடுவாரா என்ன. ஆனால் அவர் விசாரிச்சு பாத்திருக்கிறார் அவா பற்றி ஆசை யாரை விட்டது. ஏற்கனவே இவர் இருக்கும் பிரதேசத்தில் இவருக்கு குறிப்பாக பெண் எதிரிகள் அதிகம் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றேன் அண்ணே என்றார். இனி உரையாடல் முறையாக பவனின் ஒப்புதல் வாக்கு மூலம்.



நான்: அடேய் நீ நல்லவனா?

பவன்: நான் நல்லவன்.

நான்: ஜோக் அடிக்காதே.

பவன்: அவ்வ்வ்வ்வ்வ் பிளீஸ் நம்புங்க நான் ரொம்ப நல்லவன்.

நான்: பிளீஸ் நான் நம்பமாட்டேன்.

பவன்: அவ்வ்வ்வ்வ் என்ன செய்தா நம்புவீங்க பிளீஸ்.

நான்: நம்பமாட்டேன்.

பவன்: எனக்கு இப்போதானே இருபது வயது. இனியும் காதலிக்கலாம் தானே.

நான்: காதலா எத்தனையாவது?

பவன்: ஒரு 16வது....சிம்ரனில் ஆரம்பிச்ச காதல் திரிஷா ஜெனிலியா தாண்டி இப்போ எமா வட்சனிட்ட வந்து நிற்குது.

நான்: அடேய் பாதகா கிராதகா அப்போ நாங்கள் எப்பிடி பார்க்கிரதாம்.

பவன்: திரிஷா இல்லைனா திவ்யா அண்ணே.

நான்: அடேய்

பவன்: என்னோட அடுத்த எயிம் ஏஞ்சலினா ஜூலி.

பவன்: அடோ வேற என்னடா ஐடியா வச்சிருக்காய்.

பவன்: தமிழில அங்காடி தெரு அஞ்சலிக்கு டிரை பண்ணலாம் என இருக்கு.

நான்: ஏன் திடீரென அந்த ......மேலே ஆசை

பவன்: அது .......?கொய்யாலே

நான்: தமன்னா என்ன ஆச்சு.

பவன்: அது விட்டிட்டு போயிடிச்சு.

இப்படி சொன்ன பவன் உடனே அஞ்சலியின் படம் ஒன்றை அனுப்பி வைத்தார். இதோ உங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக அந்த படம்.




எப்பிடி நம்ம செலேக்சன்.

நான்: இது நல்லாவா இருக்கு.

பவன்: மற்றவங்களுக்கு எப்பிடியோ எனக்கு நல்லாய் இருக்கு. நேற்றுக்கூட சுனைனா வந்து ஐ.லவ்.யூ சொன்னா.

நான்: அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம்.

பவன்: அஞ்சலியை கரெக்ட் செய்வதாய் உத்தேசம்.

நான்: உனக்கு டேஸ்ட் இல்லை. இதுக்கெல்லாம் வந்தி மாமாவை தான் கேட்கணும்.

பவன்: ஏன் எனக்கு டேஸ்ட் இல்லையா?

நான்: அஞ்சலியை எப்பிடி கரெக்ட் பண்ணப்போறாய்.

பவன்: இன்று மாலைக்குள் கரெக்ட் பண்ணி காட்டவா?

நான்: முடிஞ்சா காட்டு.

பவன்: ஆதாரத்துடன் காட்டுகின்றேன்.


நான்: ஓகே வேற என்ன செய்வாய்?(தப்பாய் நினைக்கப்படாது)

பவன்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏதோ ஆப்பு வைக்கப்படுவதாய் உணர்கின்றேன்.

நான்: இல்லை சொல்லடா.

பவன்: வேற ஒன்றும் செய்யல

நான்: அட போடா நிஜமாய் நீ யாரை கரெக்ட் பண்ணப்போறாய்.

பவன்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்பிடி யாரும் இல்லைண்ணே

நான்: ஏண்டா இப்பிடி நடிகளைகளை கரெக்ட் பண்ணியே காலத்தை ஓட்டப்போறாயா?

பவன்: காதலை தேடிக்கிட்டு போக முடியாது. அது நிலைக்காது.

நான்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பவன்: அப்போ ஒருத்தி தேடி வருவா என நம்புறேன்.

நான்: வேற ஏதும் சொல்ல இருக்கா?

பவன்: தினமும் கேட் வாசலில் நிக்கிறன்.

நான்: ஏன்?

பவன்: ஒரு நாய் குடும்பத்தோட போகும் வீட்டு வாசலால.

நான்: அந்த நாயை தான் இப்போ பார்க்கிறியா?

பவன்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நான்: அட சொல்லப்பு.

பவன்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


நான்: காதல் என்றால் என்னடா?

பவன்: இலங்கை பட்ஜெட் போல அண்ணே.

நான்: காதலிச்சா செலவு அதிகரிக்குமே தவிர குறையாது.

நான்: அடப்பாவி அனுபவமா?

பவன்: ஹீ ஹீ காதல் நாடகங்கள் பலவற்றை கண்கூடாக கண்ட பார்வையாளன்.

நான்: சரி இப்போ நடிகைகளில் உனக்கு அஞ்சலி தான் பிடிச்சிருக்கா?
நமீதா எப்பிடி?

பவன்: நமீதா நயன்தாரா எல்லாம் பொதுச்சொத்து.யார் வேண்டும் என்றாலும் உபயோகிக்கலாம்.

நான்: அடபபவி அப்போ உன் சொத்து எது?

பவன்: எனக்கு இன்னும் தனிச்சொத்து கிடைக்கல என் தலைவன் சிம்பு சொன்ன வழியில் தேடிவரும்

நான்: அப்போ நீ ட்ரை பண்ணியது?

பவன்: சிம்ரன்

நான்: ஓகே அடுத்து யார்?

பவன்: அது அறியாத வயசில புரியாத காதல்.

நான்: பருவ கால அடிப்படையில் ஒழுங்காய் சொல்.

பவன்: 6ம் ஆண்டு - சிம்ரன்.
7ம் ஆண்டு - ஜோதிகா

நான்: ஜோவை தான் சூர்யா கொண்டு போய்ட்டாரே கோபம இல்லையா?

இந்த கேள்விக்கு பயல சைலன்ஸ்.


பவன்: 8 ம் ஆண்டு நினைவில்லை............ஆஹ் லைலா அண்ணே.
9 ம் ஆண்டு ரோஜா.

நான்: அது ரொம்ப பழசேடா

பவன்: ம் ஆணா எனக்கு அப்போ தான் அதை தெரியும் பழைய படத்தை ரசிச்சு பார்த்தேன். 10 ம் ஆண்டு அசின்
11 ம் ஆண்டு நயன் திரிஷா 12 தொடக்கம் இப்போ வரை ஏமா வாட்சன் தான்.

ம் இனி வருபவை என பவன் சொன்னவை.
ஏஞ்சலினா ஜோலி.
அஞ்சலி.

நான்: அப்போ தமன்னா,சுனைனா?

பவன்: அது 13 இல் அப்பப்போ வந்து போனது. ஏமா வாட்சன் சூட்டிங் போன டைம் தமன்னாக்கு ரூட் போட்டு செட ஆகி கழட்டி விட்டாச்சு.

நான்: அப்போ சுனைனா?

பவன்: அது இன்கமிங்.அண்ட் ஐ ரிஜெக்ட்

நான்: வேற யாரையும் மிஸ் பண்ணிட்டாயா?

பவன்: ஆஹ் சுப்ரமணியபுரம் சுவாதி.

நான்: அதெப்போ?

பவன்: அந்த படம் வந்த டைமில்

நான்: ஒ வேற யாரும் இருக்காங்களா?

பவன்: இல்லை இம்புட்டும்தான்.

நான்: இன்று மாலைக்குள் இவர்களை கரெக்ட் பண்ணிய ஆதாரங்களை தரமுடியுமா?

அதற்க்கு அவர் அளித்த ஆதாரங்கள் தான் இங்கே நான் இட்டிருக்கும் படங்கள்.

அப்பாடா ஒரு பதிவு போட்டாச்சு. ஒருத்தன் டவுசரை கழட்டியாச்சு. அதில் என்ன ஒரு சந்தோசம் பாருங்கோ. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்திட்டன். இந்த பதிவு கற்பனை என்று சொல்லி உங்களை கடுப்பாக்க விரும்பல அதுக்காக உண்மை என்று சொல்லி தீ மூட்டவும் விரும்பல. எல்லாம் ஒரு மொக்கை தான். மொக்கை மொக்கை மொக்கை. புரிஞ்சிதா? என்னது ரஞ்சிதாவா என்று கேட்கபடாது அவா இப்போ மீண்டும் பிசி. நித்தியானந்தாவிடம் போகப்போறாவாம். நான் எழுதியதும் பவானந்தா பற்றி தான் என்ன ஒரு பொருத்தம் பாருங்கோ.

Share:

Wednesday, June 16, 2010

2012 திரைப்படம் உண்மையா? 2010 சொல்லும் சேதி இது.

உலகம் எப்போது அழியும்? இந்த கேள்விக்கு பலர் பல விதமாய் விடைகளை சொன்னாலும் எவராலும் எதையும் உறுதியாய் சொல்ல முடியாது என்பதே உண்மை. மாயன் கலண்டர் என்ற ஒன்றை ஆதாரமாய் சிலர் காட்டுகின்றனர். அப்படி பார்த்தால் இரண்டாயிரத்தில் உலகம் அழியும் என்று சொன்னது போல பல தடவைகள் உலகம் அழிந்து விட்டது. உலகத்தின் கடைசி நாள் இதுதான் என்று தெரியாவிட்டாலும் முன்னெப்போதும் இல்லாதவாறு ஒரு முடிவை நோக்கி நாம் வாழும் இந்த பூமி சென்று கொண்டிருக்கின்றதா? என்பது சந்தேகமாய் தான் உள்ளது.

அண்மையில் 2012 என்று ஒரு படம் வெளிவந்தது எல்லோருக்கும் தெரியும். அந்த படத்தை பார்க்கும் போது என் மனதில் ஒரு சிறு சந்தேகம் வந்து தான் சென்றது. அண்மைக்காலமாய் உலகில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் எல்லாமே ஒரு அறிகுறியோ என தோன்றுகின்றது. உலகம் அழிகின்றது என்றால் அது என்ன ஒரு நாளில் தான் நடக்க வேண்டுமா? அல்லது அது சாத்தியமா? இல்லையே....சிறுக சிறுக அழிவது தானே சாத்தியம்.



கடந்த வருடம் தொடக்கம் விமான விபத்துக்கள் ஆரம்பித்து விட்டன. விமானத்தில் பறக்க முதல் சரியாக போய் இறந்குவோமா என்பதே தெரியாமல் இன்று பலர் பிரயாணம் செய்யும் நிலை. இப்படி ஆகாயம் தன் வன்மத்தைக் காட்ட மறுபுறம் நிலமோ தன் அதிர்வுகளை பல இடங்களில் காட்டிக்கொண்டிருக்கின்றது. சீனாவில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன். ஏன் இலங்கையில் நில நடுக்கம் ஏற்ப்படும் வாய்ப்பு இல்லை என புவியியல் ரீதியாக சின்ன வயசில் படித்த நினைவு ஒன்று உண்டு. ஆனால் இன்று? படுத்திருந்தவர்களின் கட்டில்கள் ஆடிய ஆட்டம் என்ன? எல்லோருக்கும் தெரியும். இப்படி சாத்தியமற்றது என சொல்லப்பட்டவை எல்லாம் சாத்தியமாகின்றன. சுனாமி என்ற சொல்லை கேள்விப்படாத நமக்கு சுனாமியால் ஒரு அழிவு. இன்று தினமும் கடல் பொங்கினால் அதுதான் நினைவு.

அண்மையில் அமெரிக்காவின் சில பிரதேசங்களிலும் இலங்கையின் பல பிரதேசங்களிலும் வெள்ளம ஏற்ப்பட்டு பாரிய அழிவினை கொடுத்தது. மக்கள் பலர் உணவுக்கு கஷ்டப்பட்டு பின் மீண்டதும் நினைவில் கொள்ள வேண்டும். ஆகாயம்,நீர்,நிலம் என மூன்று பூதங்கள் தங்கள் கைவரிசையை காட்ட அடுத்த இரண்டும் காட்டாமல் விடுமா என்ன? காற்று தன் பங்குக்கு இலங்கையின் சில பிரதேசங்களில் வீடுக்கூரைகளை கொண்டு போக இன்னும் சில பிரதேசங்களிலும் சூறாவளியாய் தாண்டவமாடியது. மறுபுறம் தீ எரிமலையாய் வெடித்து குமுறி பல இன்னல்களை கொடுத்துக்கொண்டிருக்கின்றது. இப்படி ஐம்பூதங்களும் தங்கள் அழிவை காட்டிக்கொண்டிருக்க உலகம் அழிந்து கொண்டிருக்கவில்லை என்றால் நாம் முட்டாள்கள் தான்.




சிறு சிறு அழிவாய் பல இழப்புக்களை இந்த மனித சமூகம் கண்டுகொண்டிருக்கின்றது. டைனோசர் என்ற ஒரு இனம் இல்லாமல் போனது என இன்று நாம் படிக்கின்றோம். மனித இனம் என்று ஒரு இனம் இருந்தது என இன்னொரு உயிரினம் படிக்கும் காலம் வந்துவிட்டாலும் ஆச்சரியமில்லை. மனிதன் மனிதனை அழித்துக்கொண்டு மகத்தான இயற்கையையும் தன் சுயநலத்துக்காய் அழித்துக்கொண்டிருக்கின்றான். ஒரு புறம வெப்பம் அதிகரித்து உயிரங்கிகளை வதைத்துக்கொண்டிருக்க துருவங்களும் பணிமலைகளும் உருகிக்கொண்டே இருக்கின்றன.

கடந்த காலத்தில் அரக்கர்கள் இருந்தனர் என படித்துள்ளோம் பின்னர் பரிணாம வளர்ச்சியில் இன்று இன்னொரு மனிதனை விஞ்ஞான ரீதியாக உருவாக்கும் வல்லமை படைத்தவனாக வளர்ந்து விட்டான் இது எல்லாம் மாற்றம் தான். எனவே இந்த உலகில் சில மாற்றங்கள் நடக்கிறன நடக்கும். அந்த மாற்றம் தான் இந்த உலக மாற்றமோ என்றும் தெரியவில்லை. நான் பிறக்க முதல் யாழில் என் பெற்றோர் இருந்த ஒரு காலத்தில் அந்த வழியால் வந்த ஒரு சித்தர் உனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் காலத்தில் திடல் கடலாவதையும் கடல் திடலாவதையும் பார்ப்பான் என என் அம்மா எனக்கு சொல்லி உள்ளார். இது நடந்ததா இது சாத்தியமா என நீங்கள் எள்ளி நகைக்கலாம். ஆனால் அவர் சொன்ன இரண்டும் நடந்து விட்டதே.


ஒன்று நான் பிறந்தது. அடுத்தது என் வாழ்க்கை காலத்திலேயே நிலம் நீராவதையும் நீர் நிலமாவதையும் பார்த்துவிட்டேன். சுனாமி வந்த நேரம் முதலில் கடல் உள்வாங்கியது உள் வாங்கும் போது நீர் நிலையாக நாம் பார்த்த கடலை நிலமாக காணும் வாய்ப்பு கிடைத்தது. அது மட்டுமன்றி நீர் பனை உயரமும் தண்டி எழுந்த நேரம் கடலில் மண்ணை காணும் வைப்பு பலருக்கு கிடைத்திருக்கும். அதே நீர் நிலத்தில் புகுந்து நிலத்தை நீர்நிலையாக்கியதையும் மறக்க முடியாது. சொன்னவர் இப்போதிருக்கும் கள்ள சாமியார் இல்லை சித்தர் சொன்னது இருபது வருடங்களின் முன்.

இதோ இந்த பதிவை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது பங்களாதேஷில் ஏற்ப்பட்ட அனர்த்தத்தில் பல வீடுகள் புதையுண்டிருக்கலாம் என ஒரு செய்தி. அங்கே எத்தனை உயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் என சொல்ல முடியவில்லை என சொல்கின்றார்கள். நாளொரு அனர்த்தம் யாதும் ஒரு நாட்டில் என்பது இப்போது வழக்கமாகி விட்டது.

அதை தான் விட்டாலும் நடப்பவை எல்லாம் வைத்துப்பார்த்தால் உலகம் நமக்கு ஏதோ ஒரு செய்தி சொல்கின்றது. 2010 இதை பாருங்கோ 20 இன் அரைவாசி 10 உலகின் பல வளங்கள் வாழ்வோடு விளையாடும் காலம். நம் வளங்களை பாதியாக்கும் காலம்.(இதை யாரும் சொல்லல நான் சும்மா ஒரு கணிப்பில் சொல்கின்றேன்.) உலகம் அழியுமோ? அழியாதோ? தெரியாது. இருக்கும் காலம் வரை எல்லோருடனும் உறவாடி உணர்வால் மகிழ்வாடி ஒற்றுமையாய் வாழ்வோம். அதுமட்டுமன்றி நமக்கு இயற்கை கொடுத்த வளத்தை வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை அழிகாமல் காப்போம். எத்தனை நாள் தான் பொறுப்பாள் இயற்கை தாய் நம் அட்டூழியங்களை.
Share:

Tuesday, June 15, 2010

டாலர்! டாலர்! டாலர்! - வினோத கலையம்சம்.

டாலரை நாம் ஒரு பணமாக பார்த்திருப்போம். அந்த பணம் என்னும் தாளில் அழகிய கலை நயத்துடன் கூடிய உருவங்கள் இவை. நண்பர் ஒருவரால் மின் அஞ்சல செய்யப்பட்டதை உங்களிடம் பகிருகின்றேன்.


மீன்


வண்ணத்துப்பூச்சி


கமெரா


Battle Tank

Chinese Dragon



Crab


Dolphin
Jacket




Spider

Scorpion


Bat


Toilet Bowl


Shark



Jet





Share:

Monday, June 14, 2010

சிம்பு,அஞ்சலி,பிரகாஷ்ராஜ்,சந்தானம், அஜித் முன்னணியில்- வாக்களித்து முடிவுகளை மாற்றுங்கள்.



வணக்கம் மக்கள்ஸ்,

திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் 2010 வாக்களிப்புகள் அனல் பறக்க நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழ் சினிமாவுக்கும் பதிவுலகுக்குமான ஒரு பாலமாக இரண்டாவது வருடமாக நடைபெறும் இந்த வாக்களிப்புக்கு பல பதிவர்களின் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. பல நல்லுள்ளம் கொண்ட பதிவர்கள் தங்கள் வலைப்பூக்களில் வாக்களிப்பு நடைபெறும் வலைப்பூவின் லிங்க் கொடுத்து வாக்களிப்பை ஊக்குவித்துள்ளனர்.

எங்கள் இந்த அறிய முயற்சியின் இன்னொரு வெற்றியாக தமிலிஷ்,யாழ்தேவி, தலைவன் போன்ற பிரபல திரட்டிகள் கூட இந்த வாக்களிப்புக்காக விளம்பர லிங்க் கொடுத்து எம்மை தட்டி விடுகின்றனர். எனவே இம்முறை வாக்களிப்பு பிரமாண்டமானது என்று சொன்னால் மிகை இல்லை. வாக்காளர்களை பற்றி சொல்லவே தேவை இல்லை. அபிமானம் பெற்றவர்களுக்கு வாக்களிக்கும் அதேநேரம் திறமையானவர்களையும் முன்னணியில் திகழ வைக்க தவறவில்லை.

வரும் வெள்ளி (18.06.2010) இரவுடன் வாக்களிப்புகள் நிறைவடைந்து ஞாயிறு மிக பிரமானமான முறையில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. முடிவுகளை அறிய தயாராகுங்கள். முடிவுகள் எந்த கணமும் எப்படியும் மாறலாம் ஆனால் அது உங்கள் கைகளிலேயே. இதுவரைக்கும் கமலை பின்தள்ளி சிம்பு முன்னுக்கு ஓடுகின்றார். மறுபுறம் திரிஷாவை வீழ்த்தி அஞ்சலி முன்னணியில். மறுபுறம் பிரகாஷ்ராஜ் முன்னணியில் திகழ வடிவேலுவை பின்தள்ளிவிட்டு சந்தானம் முன்னேறி வருகின்றார். இசை அமைப்பாளரில் எந்த ஒரு சவாலும் இன்றி ரஹ்மான் முன்னணியில் திகழ்கின்றார்.

பாடலாசிரியர் வகையில் கடுமையான ஒரு போட்டி நடக்கிறது. நா.முத்துக்குமாரா? தாமரையா? என்பது விரைவில் தெரிந்துவிடும். பாடகர் பாடகியில் பெரிய போட்டிகள் இன்றி கார்த்திக், ஸ்ரேயா கோஷல் முன்னணியில் ஆதிக்கம் செலுத்தும் நாயகர்கள் இதுவரை அதிக வாக்குகள் பெற்ற ஒரு வகை ஆரம்பத்தில் சூர்யா முன்னணியில் இருந்து பின்னர் விஜய் முந்த அதன் பின் இப்போது எட்டிப்பிடிக்க முடியாத வித்தியாசத்தில் அஜித் முன்னணியில் உள்ளார். படங்களில் அங்காடித்தெரு விண்ணை தாண்டிவருவாயா இரண்டும் முட்டி மோதினாலும் தற்போது விண்ணை தாண்டி வருவாயா முன்னணியில் இருக்கின்றது. இதே கதை தான் சிறந்த இயக்குனரிலும் இருக்கின்றது. எனவே வேற்றியாலறி உங்கள் அபிமாணியை திறமையானவரை வெற்றி பெற வைப்பது நீங்கள் தான்.

இன்னும் இருக்கும் ஒரு சில நாட்களை தவற விடாது உடனடியாய் வாக்களியுங்கள். இந்த முயற்ச்சியில் நீங்களும் ஒரு பங்குதாரர் ஆகுங்கள். உங்கள் நட்சத்திரம் வெற்றியாளரை ஜொலிப்பது உங்கள் கையில். என்ன தோற்க விட்டு விடுவீர்களா?


பதிவுலக நண்பர்களே!

இந்த அறிய முயற்சிக்கு நீங்கள் வழங்கிய ஆதரவுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நன்றி சொல்லி உங்களை எங்களில் இருந்து பிரிக்க விரும்பவில்லை. வாக்களிப்பின் முடிவுகள் அறிவிக்கும் தருணம் அந்த முடிவுகளை உங்கள் தளத்திலும் பிரசுரிக்கும் வகையில் நாங்கள் சில விடயங்களை வழங்க தயாராக இருக்கின்றோம். எனவே உங்கள் வலைப்பூக்களில் பிரமாண்டமான முடிவை அறிவிக்க விரும்புவோர் எம்மை பின்னூட்டம் வாயிலாக தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் மின் அஞ்சல் முகவரியை அனுப்புங்கள். பாதுகாப்பு கருதி அவற்றை பிரசுரிக்காது உங்களிடம் தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொள்கின்றோம்.
Share:

Friday, June 11, 2010

பொலிகண்டி கந்தவனக்கடவை- நம்மூர் திருவிழா.

பொலிகண்டி அருள்மிகு கந்தவன சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் மூர்த்தி, தலம், தீர்த்தம் எல்லாம் ஒருங்கே கொண்டுள்ள மிகவும் பழமையனதும் அநாதியுமான ஆலயம் கந்தவனமாகும். மூர்த்தி சண்முகப்பொருமான், தலம் கந்தவனம், தீர்த்தம் நறுதீர் கேணி. இவ்வாலயம் மூன்று சண்முக மூர்த்திகளையும் விநாயகர், நாகதம்மிரான், மகாவிஷ்ணு, வேல், முத்துக்குமாரசுவாமி, கார்த்திகேயர், நால்வர் (நாயன்மார்) நவக்கிரக நாயகர், வயிரவர், மêரம், பலிபீடம், தம்பம், தம்பப்பிள்ளையர்,சுமித்திர சண்டேசுவரர் ஆகிய பரிவார மூர்த்திகளும் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், தர்சன மண்டபம், தம்ப மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவற்றுடன்வன்னிமரப்பெருமான்,திருக்குளம்என்பனவும்தன்னகத்தே கொண்டுள்ளது கந்தவன சுப்பிரமணியர் தேவஸ்தானம்.



இவ்வாலயம் அநாதியானது. இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆலயம் இருக்கின்ற தலம் ஓர் வெள்ளரித் தோட்டமாக இருந்தது என்றும் அத் தோட்டத்திலேயே ஒளிப்பிளம்பாக வேலதோன்றி காட்சியளித்தது. அன்றிலிருந்து அதனை ஊர் மக்கள் வணங்க ஆரம்பித்தனர். அந்த வேல்தான் இன்றும் ஆலயத்தின் வடக்கு வீதியில் உள்ள வேலவர் ஆலயமாக உள்ளது. இவ் ஆலயத்தின் தல விருட்ச்சமாக வன்னிமரமும் தோன்றியது. அவை இன்றும் ஆலயத்தின் வடக்கு திசையில் கம்பீரமாக அழகூட்டி அருள் பாலித்துக்கொண்டிருக்கின்றன. அருளும்,அழகும்,அநாதியுமாகிய கந்தவன சுப்பிரமணியர் தேவஸ்தானம் மிகவும் வளர்ச்சியடைந்து மகோற்சவ ஆலயமாக அருட்கடாட்சத்தினை வழங்கி கொண்டடிருக்கின்றது. இவ் ஆலயத்தில பலநூறு ஆண்டுகள் வரை காஞ்சி மாமரம்ஒன்று நின்றது அது ஒவ்வொரு காலப் புசைக்கும் ஒரு மாம்பழம் வீதம் ஒரு பழத்தைதந்து கொண்டிருந்ததாம். ஆனால் மரத்தில் மாம்பழம் இருப்பது யாருடைய கண்ணுக்கும் புலப்பட மாட்டாதாம். அக்காலப்பகுதியிலே திருக்குளத்தில் விளைவு கற்புரம் விளைந்து கொண்டிருந்தது என்றும் ஆலய புசைக்கு இக் கற்புரத்தையே பயன்படுத்தி வந்தனர். அதனை விற்பனை செய்ய ஆரம்பித்தபோது கல்லாக மற்றமடைந்து இன்றும் திருக்குளத்தின் நடுவிலே காணப்படுகின்றது.


போர்த்துக்கேயர்,ஒல்லாந்தர்,ஆங்கிலேயர் ஆகிய அந்நியரின் படையெடுப்புக் காலங்களில் சைவம் அழித்தொழிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஆலயங்களை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. அந்தவகையில் கந்தவன சுப்பிரமணியர் தேவஸ்தானத்தையும் அழிப்பதற்கு வந்த கூலிப்படையினர் வன்னிமரம்காணப்படும் வடதிசையில் அழகான நறுமணம் கமழும் புக்களைக் கண்டு அவற்றை கொய்து முகர்ந்போது கண்கள் பார்வையை இழக்க கோயிலை உடைக்க முடியாது திரும்பிச் சென்றார்கள்.



பழையவர் என அழைக்கப்படும் சண்முகப் பெருமான் அன்னியரின் ஆட்சிக் காலத்தில் இந்து ஆலயங்கள் அழிக்கப்படடுக் கொண்டிருந்த வேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் குமரபுரம் எனும் ஆலயத்தில் இருந்து கடலினுாடாக வாணிபம் செய்பவா்களின் மரக்கலத்தினுாடாக மறைத்துக்கொண்டுவந்து இங்கு பிரதிஸ்டை செய்யப்பட்டது


மஹா மண்டபத்தில் வீற்றிருந்து அருளாட்சி கொண்டிருக்கும் சண்முகப்பெருமான்ஆலயத்திலேயே கருவுட்டப்பட்டு மிகவும் அழகானவாராக வார்த்தெடுக்கப்பட்டது. இதற்காக முருகனடியார்கள் தங்க நகைகளை தாமாக முன் வந்து ஈகை செய்தார்கள். எம் பெருமானின் தெய்வீகவருளால் ஆறுமுகங்களும் வேறுபாடின்றி ஒரேமாதிரி அழகாக காட்ச்சியளிக்கிறார். அவரைப் பார்க்கும் அடியார்களைப் பார்த்து புன்முறுவல்செய்வது போல காட்சி கொடுத்து அடியாாகளின் முகத்தில் புன்னகையைத் தோற்றுவித்துஅருளாட்சிசெய்கின்றார்.


அருநகிரிநாதர் கந்தவன சுப்பிரமணியர் மீது ''உறவு சிங்கிகள்'' எனும் அடியுடன் தொடங்கும் திருப்புகழைப் பாடியுள்ளார்.


முன்னொரு காலத்தில் தேர் உற்சவத்தின் போதுதேர் வடக்கு வீதியை அடைந்தபோது தேர் நகராது நின்றுபோனது வடக்கில வீற்றிருக்கும் சல்லியம்பதிப் விநாயகப் பெருமான் ஆலயம் சென்று அவருக்குக் காணிக்கை கொடுத்து வேண்டியபோது தேர் நகரத் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வெரு வருடமும் தேர் உற்சவத்தின் போது சண்முகர் தோில ஆரோகணம் செய்ய முன்னர் சல்லியம்பதிப் விநாயகப் பெருமானுக்கு நைவேத்தியம் எடுத்துச் சென்று வழிபடும் மரபு முறையுள்ளது.


திருவாமகரூர் தேரழகு கந்தவனத்து வீதியழகு என்று அன்று தொட்டு இன்றும் கூறப்படுகிறது. இவ்வாறு கந்தவனத்து வீதியழகை எடுத்துக் கூறுகிறார்கள்



உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் கண்பார்வையற்ற ஒரு தமிழ்ப் புலவர் சண்முகப் பெருமான் மீது நான்மணிமாலை எனும் பதிகத்தைப் படி தவமிருந்து கண்பார்வையைப் பெற்றதாக அவர் பாடிய பதிகத்தில் கூறப்படுகிறது. நவாலியுர் சோமசுந்தரப் புலவரும் கந்தவனம் மீது பேரன்பு கொண்டு பக்தியுடன் நான்மணிமாலை பதிகத்தையும் திருப்பள்ளியெழுச்சி போன்றவற்றையும் பாடியுள்ளார்.


மகப்பேறு வேண்டி கந்தவனம் மீது தவமிருந்து இங்கு கிடைக்கும் மாங்கனியை உண்டு மகப்பேறு பெற்றுள்ளார்கள்.இன்னும் மகப்பேற்றை வேண்டி அடியார்கள் அம் மாங்கனியை பெறுவதற்காக ஆலய தரிசனம் செய்துகொண்டிருக்கிறார்கள்.


கந்தவன சண்முகப் பெருமானை கரியான வேலவர், கந்தவனக்கடவை, கந்தாரணியம், நயினார்,ஆறுமுகன் எனனும் பல நாமங்கள் கொண்டு அழைக்கின்றனர்.


கந்தவனப் பெருமானின் மகோற்சவங்களை ஊர்மக்களும் அயலுார்மக்களும் பங்கேற்று சிறப்பாக விழாவெடுத்து அவரின் அருளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.


வருடாந்த மகோற்சவம் ஒவ்வொரு வருடமும் ஆனித் திங்கள் புாரணை திதியை தீர்த்தோற்சவமாக கொண்டு முதல் பதினைந்து நாட்கள் மகோற்சவம் நடைபெறும்.


கந்த சஷ்டி உற்சவமும் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து சட்டி முடிவுறும் வரை உற்சவம் நடைபெறும்.



அந்த வகையில் நாளைய முதல் இந்த வருடத்துக்கான திருவிழா ஆரம்பமாக உள்ளது. என்ன கவலை இந்தமுறை வீட்டில் சும்மா இருந்தும் ஆலய திருவிழாவில் பங்குபற்ற முடியவில்லை. கோவில் வீதி மணலில் இரவு நேர மின் விளக்கில் மேளநாதஸ்வரங்கள் முழங்க உறவுகளுடன் வலம் வருவது என்றுமே இனிமையானது. அது இப்போதைக்கு என் வாழ்வில் அதுவும் இங்கே கிடைக்காது எனபது ஏமாற்றமே. பாடல் பெற்ற தளம் அன்றி நான் ஐந்தாம் ஆண்டு படிக்கும் நேரம் எம் பாடப்புத்தகத்திலும் அமைந்திருந்த எங்கள் வீட்டு வெளியில் இருக்கும் ஒரு ஆலய திருவிழாவுக்கு செல்ல முடியாவிட்டால் எப்படி இருக்கும்? பழைய நினைவுகள் மீண்டு வருகின்றன.


மேலதிக விபரங்களுக்கு எங்கள் தளத்தை நாடுங்கள்: http://polikandy.com


Share:

Wednesday, June 9, 2010

200+ பதிவு. சாக்கடைகளுக்கு ஒரு சாட்டையடி!



வணக்கம் பதிவுலக நண்பர்களே, எதிரிகளே, முதுகெலும்பில்லாத நரிகளே!

ஏன் இப்படி ஒன்று என பார்க்கின்றீர்களா. காரணம் இல்லாமல் இல்லை. கடந்த காலத்தில் நான் ஓய்வாக இருப்பதால் தினமும் ஒரு இடுகையை இட்டு வந்துள்ளேன் என் மனதுக்கே இப்போதுதான் நான் ஓரளவு நல்ல இடுகைகளை தருகின்றேன் என கடந்த முப்பது நாப்பது பதிவுகளை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தான் இப்படி ஒரு சூழ்ச்சி, நயவஞ்சகம், முதுகெலும்பில்லாத நரிகள் செய்த ஒரு வலையில் மாட்டாமல் வெளிவந்திருக்கின்றது இந்த சுறா.(சும்மா பில்ட் அப்புக்குதான் சுறா.)

நேற்று காலை நான் கண்விளித்ததே ஒரு சக பதிவரின் தொலைபேசி அழைப்பில் எனக்கு கிடைத்த தகவல் எனக்கு நம்ப முடியாமல் இருந்தது. அந்த தகவல் என்னவென்றால் என் தளத்துக்கு செல்ல முடியவில்லை. காரணம் இரண்டு ஒன்று சில தவறான தகவலை நான் பரப்ப முற்பட்டதற்காய் தளம் முடக்கப்பட்டிருக்க வேண்டும் இல்லை சில நய வஞ்சகர்களால்(கடுமையான கெட்ட வார்த்தைகளால் திட்டணும் என்றாலும் நாகரிகம் கருதி தவிர்க்கின்றேன்.) என் தளம் களவாடப்பட்டிருக்கணும். என்ன நடந்தது என தெரியாமல் இருக்கவே என் மினஞ்சல் இயக்க முற்பட்ட போது அதுவும் முடக்கப்பட்டது. உடனடியாய் ஒரு சக பதிவருடன் தொடர்பை ஏற்படுத்தி என் தளத்தையும் மினஞ்சலையும் ஒரு நிமிடத்தில் மீளப்பெற்றேன்.

இது நடக்க முதல் நாள் இரவு அதிகாலை மூன்று மணிவரை நான் என் மினஞ்சல் மற்றும் தளத்தை பாவித்துக்கொண்டே இருந்தேன். அதன் பின் காலை ஏழு மணிக்குள் இது நடந்தேறியுள்ளது. ஆனால் அவரின் துரதிஷ்டம் களவாட முற்பட்ட நிலையில் தானியங்கி முறையில் என் கணக்குகள் முடக்கப்பட்டு களவாடுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நான் தூங்கிக்கொண்டிருந்த போதும் கூட என் தளத்தை களவாடப்பட்டு இருப்பதைக் கண்டு அவரை இனம்காண உதவிய என் சக பதிவுலக நண்பர்களுக்கு என் நன்றிகள். அந்த முட்டாளுக்கு வெறுத்துப்போயிருக்கும். இன்னும் ஒரு சிலரிடமும் கைவைத்து தோல்வியில் முடிந்திருக்கின்றது அவர் முயற்சி.


என் தளம் களவாட காரணம் என்ன? பதிவுலகை பொறுத்தவரை எனக்கு எதிரிஎன்று யாரும் இல்லை. சரி நான் ஒரு பிரபல பதிவர் என்றாலும் பரவாயில்லை. வளர்ந்து வரும் ஒரு பதிவரான என் வலைப்பூவை முடக்கி என்ன இலாபம். ஆனால் முடக்க முயற்சித்த அந்த முடவனுக்கு ஒரு நன்றி. நீங்கள் முடக்க முயற்சித்த அன்று நான் ஒரு பதிவும் இடாமலே என் தளத்துக்கு பல நண்பர்கள் வந்து போய் உள்ளனர். வழக்கமாய் பதிவு போடாவிட்டால் வருவோர் எண்ணிக்கை குறையும் ஆனால் இங்கே மாறி நடந்தது.

தொலைபேசி வாயிலாக,மூஞ்சிப்புத்தக வாயிலாக என பல வகையிலும் என்னை தொடர்பு கொண்டு விசாரித்த சகல பதிவுலக நண்பர்களுக்கும் என் நன்றிகள். உங்கள் உதவியால் தான் மீண்டும் வந்துள்ளேன். இந்த தடையால் என் பதிவுகள் தளராது. தொடர்ந்து நான் எழுதிக்கொண்டிருப்பேன். எந்த இலாபமும் இன்றி நண்பர்களை மட்டும் கொடுத்திருக்கும் பதிவுலகத்தை விட்டு நான் ஒதுங்க மாட்டேன்.

தளத்தை முடக்க முற்பட்ட முட்டாளே,
ஒரு தடவை ஹக பண்ண முயலும் முன் நூறு தடவை யோசிச்சிட்டு செய் அப்புறம் யோசிக்கவே முடியாது. இப்போது கூட உன் நிலை அதுதான். பதிவுலகில் கருத்து மோதல் வரலாம் எழுத்தை எழுத்தால் மோதுங்கள். அதை விடுத்து முதுகெலும்பு இல்லாமல் ஒருவனை முடக்கி அதில் வெற்றி காண்பது அழகா? உனக்கு எழுத தெரியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது. நாங்கள் எழுதுகின்றோம் பிடித்தால் படி இல்லாவிட்டால் போய் ப.... பதிவுகள் பலர் எழுதுகின்றனர் எல்லோரின் எல்லாப்பதிவும் ஹிட் ஆவதில்லை இதில் யாழ் தேவியில் நான் இணைக்கும் பதிவுகளுக்கு வாக்குகள் விழுவதே அபூர்வம் இப்போது பல வாக்குகள் விழுகின்றன. ஆனால் மறை வாக்குகள். இதை பற்றி யாழ்தேவியுடன் பேசி அந்த நயவஞ்சகர்களையும் இனம் கண்டாயிற்று. இப்படி எல்லா இடமும் அடிக்கப்போய் கடைசியில் அடி வாங்கிடாதிங்க. உங்களை போல நான் அடிச்சால் தாங்க மாட்டிங்க. எழுத வந்த இடத்தில் எழுதுவம் பிடிச்சிருந்தா வாக்குப்போடுவம் இதுதான் எனக்கு தெரிந்த பதிவுலக அரசியல். அதை விட்டிட்டு சாக்கடையை இங்கேயும் கொண்டுவந்தால் நான் பேசமாட்டேன். ஏனென்றால் நாங்கள் சாக்கடை முன்னால் பேச மாட்டோம்.(உபயம் வேட்டைக்காரன்)

அப்புறம் இன்னொன்று சொல்ல மறந்திட்டன். இது என் 203வது பதிவு. இத்தனை நாள் எனக்கு ஆதரவளித்த வாசகர்கள்,சக பதிவர்கள்,வாக்காளர்கள்,பின்னூட்ட நண்பர்கள்,அனானிகள்,திரட்டிகள் என எல்லோருக்கும் என் நன்றிகள்.

இருநூறாவது பதிவில் இதை குறிப்பிடலாம் என எண்ணி இருந்தேன் இருந்தும் மறந்து விட்டேன். பரவாயில்லை. நம் நண்பர்கள் தானே இதை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றேன். நம்பிக்கையை கேடுப்பீர்களா என்ன.

என் பதிவுலக பயணம் தொடரும்............தடைகளை படிக்கற்களாக மாற்றி.
Share:

Monday, June 7, 2010

சீறி வரும் சிங்கம் சிம்பாவே.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிம்பாவே-இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதிப்போட்டியில் மோதப்போகும் அணிகள் எவை எவை என தெரிவும் ஆகிவிட்டன. ஆனால் இந்த தொடர் தொடங்கும் போது பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தான் ஆரம்பித்தது வழக்கம் போல சிம்பாவேயை ஓரம் கட்டிவிட்டு இந்திய இலங்கை அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நடந்தது என்ன. வீரர்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென நினைத்தார்களோ இல்லை சிம்பாவே தானே என இளக்காரமாய் நினைத்தார்களோ தெரியாது இரண்டாம் தர இந்திய அணியை தெரிவு செய்ததாக கூறி அனுப்பி வைத்தனர் இந்திய தெரிவுக்குழுவினர். கெளரவம் பார்த்து இலங்கையும் தன் வழக்கமான அணியை விடுத்து இரண்டாம் தர அணி ஒன்றை அனுப்பி வைத்தது.

போட்டிகளை பார்க்க முதல் அனுப்பி வைக்கப்பட்ட அணிகள் பற்றி கொஞ்சம் பார்க்க வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை அவர்களின் வழக்கமான மூன்று ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இல்லை. சச்சின் மகா போர்மில் இருக்கின்றார் இவர் இல்லாதது நட்டம் சேவாக்கும் இல்லை. இவர் காயம் காரணமாக இழந்த போர்மை மீட்க ஒரு வாய்ப்பு அதுவும் வழங்கவில்லை. அடுத்து கம்பீர் அண்மைக்காலமாக பெரிதாக இவர் பிரகாசிக்கவில்லை. அடுத்து தல தோணி இல்லை யுவராஜ் இல்லை பந்து வீச்சிலும் முக்கியமானவர்கள் இல்லைதான் ஆனால் இந்தியாவின் வருங்கால அணி என எதிர்பார்க்கப்படும் இளைய வீரர்களை கொண்ட ஒரு அணிதான் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. வீரர்கள் அனைவரும் இளையவர்கள் ஆனால் ஓரளவு அனுபவம் உள்ளவர்கள் தான். இப்படியான ஒரு அணியாக வந்த அவுஸ்திரேலியா தான் T20 இறுதி போட்டி வரை தோல்வி இல்லாமல் வீறு நடை போட்ட அணி. அப்படி இருக்கையில் ஐ.பி.எல்லால் வளர்க்கப்பட்ட வீரர்கள் என்னத்தை பெரிதாய் கிழித்தனர் இப்படி சொதப்ப தான் ஐ.பி.எல் என்னும் களியாட்டமா?


இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் முரளி விஜய் இதில் கார்த்திக்கின் விக்கெட் காப்பு படு மோசம் அப்படி இருந்தவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கினார்கள் என்று தெரியவில்லை. மறுபக்கம் விஜய் ஐ.பி.எல்லில் முதலில் பிரகாசித்தாலும் உலக கிண்ண போட்டியில் அவர் போட்ட மொக்கை எல்லோருக்கும் தெரியும் அப்படி இருக்கையில் இது தேவையா? தினேஷ் கார்த்திக்கு பதில் விக்கெட் காப்பில் ஈடுபடுவதுடன் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்த ராபின் உத்தப்பாவை அனுப்பி இருக்கலாமே? நமன் ஒஜாவை எதற்காக பயன்படுத்தாமல் விட்டார்கள் என தெரியவில்லை. அந்த வீரருக்கு விஜயை தவிர்த்து வாய்ப்பு வழங்கி இருந்தால் சிலவேளை அவர் நம்பிக்கை அளித்திருக்கக்கூடும். கார்த்திக் சொதப்பிய நேரம் அவரை விட ஓஜா சிறப்பாகவே விக்கெட் காப்பும் செய்தார். விராத் கோலி, மற்றும் ரோஹித் ஷர்மா போன்றோர் ஓரளவு திருப்திப்படுத்தினர்.

அடுத்தவர் தலைமைப் பொறுப்பை ஏற்று சின்னப்பிள்ளை ஆட்டம் ஆடிய ரைனா. தன் பாட்டுக்கு துடுப்பாட்டத்தில் கலக்கிய அவருக்கு இந்த தொடர் எல்லாவகையிலும் கறுப்பாகிப்போனது. ஒரு தலைவருக்கு உரிய பண்புகள் இன்னும் அவருக்கு போதியளவு இல்லை என்பதுடன் கிரிக்கெட் விதிகளே தெரியாமல் ஒருவர் அணிக கப்டனாக ஆடிய அவமானமும் கிடைத்தது. அவ்வளவுக்கு அறிவில்லாமல் ஆடுகின்றாரா இவர்? ஆனால் இலங்கை தெரிவாளர்களுடன் ஒப்பிடுகையில் இந்திய தெரிவாளர்கள் செய்தது ஒரு விதத்தில் நல்ல விடயம். இந்தியாவின் அடுத்த தலைமுறை தலைவர் யார் என்ற கேள்விக்கு இப்போது ஓரளவுக்கு அவர்களுக்கு விடை கிடைத்திருக்கும். ரைனாவின் தலைமைப் பண்பின் வள்ளலும் விளங்கி இருக்கும். எனக்கென்னவோ இந்தியாவிற்கு பத்தொன்பது வயதுக்குட்பட்ட போட்டியில் உலக கிண்ணம் வென்று கொடுத்த கோலி பொருத்தமாக இருப்பார் என தோன்றுகின்றது. இப்போதைக்கு துடுப்பாட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தும் அவருக்கு தலைமைப் பொறுப்பு பெரிய சுமையாக இருக்காது என நம்புகின்றேன்.

அடுத்தவர் ஜடேயா, ஒருவேளை நம் இலங்கையில் சனத்தை வைத்திருப்பது போல இவரை வைத்திருக்க வேண்டும் என்ற மரியாதை இருக்கின்றதோ? கிரிக்கெட்டின் எல்லா துறையையும் மறந்து விட்டார். தன்னை நிரூபிக்க கிடைத்த நல்ல ஒரு வாய்ப்பு முற்று முழுதாக அதை வீணாக்கி விட்டார். இனியும் இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் தெரிவுக் குழுவும் தோனியும் தங்கள் தலையில் மண்ணை அள்ளிப்போடுகின்றார்கள் என்றே சொல்லலாம். கொஞ்ச காலத்துக்கு இவர் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது.

தன் பெயர் சொல்ல ஒரு வீரர் வேண்டும் என்பதற்காய் தோணி இவரை வளர்க்கின்றார் என நினைத்தாலும் இது அவர் பெயரை கெடுக்கும் பிள்ளையாய் இருக்கின்றது. இவரைவிட இன்னும் பல புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். சகலதுறை வீரர் தான் வேண்டும் என்கிறார் தோணி இந்த தொடரை பொருத்தவரை அஷ்வின் தன் பங்கை மிக சிறப்பாக செய்துள்ளார் எனவே தொடர்ந்து அவருக்கு வாய்ப்பை கொடுத்தால் அது பலனளிக்கும். மறு பக்கம் ரைனா,யூசுப்,யூவி என மற்ற வீரர்களையும் தோணி பயன்படுத்தலாமே. வரும் தொடர்களிலாவது சிந்திப்பாரா பார்ப்போம். ஐ.பி.எல்லில் சென்னைக்காய் அஷ்வினை நம்பியவர் நாட்டுக்காய் நம்பினால் எல்லோருக்கும் அது நல்லது. பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை அஷ்வின் மட்டுமே ஆறுதல் ஆனால் மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பை வழங்கி அவர்களின் பலம் பலவீனத்தை தெரிவாளர்கள் அறிந்திருப்பர்.


கார்த்திக்,விஜய்,ரைனா,கோலி,ரோஹித் ஷர்மா,யூசுப் பதான், ஜடேயா போன்றோர் சர்வதேசப்போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளவர்களே. எனவே இந்தியாவின் இரண்டாம் தர அணி என சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. சிம்பாவேயையும் இலங்கையையும் சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஒரு நாடு சார்பாக அனுப்பப்பட்ட அணியே இது இதில் முதல் தரம் இரண்டாம் தரம் என்று சொல்ல முடியாது. அணி அணி தான் வெற்றி வெற்றி தான் தோல்வி தோல்விதான். இது இலங்கைக்கும் பொருந்தும். தில்ஷான் தலைமையில் களம இறங்கிய இலங்கையும் இன்று சிம்பாவேயிடம் தோல்விகண்டு இறுதிப்போட்டிக்கு காத்திருக்கின்றது. சங்கா,மகேல,முரளி,சனத் என முன்னணி வீரர்கள் இல்லை என்றாலும் அணித்தலைவராக பிரகாசிக்காத தில்ஷான் தலைமையில் அணி அனுப்பப்பட்டது.

ஆரம்ப போட்டியில் தானே விக்கெட் காப்பாளராக ஆடிய தில்ஷான் தொடர்ந்து வந்த போட்டிகளில் சந்திமல் என்னும் அற்புதமான இளைய வீரர் ஒருவரை இனம்காண வைத்திருக்கின்றார். இலங்கையை பொறுத்தவரை தில்ஷான்,தரங்க, சமரவீர, அஞ்சலோ மத்தியூஸ், கபுகேதர, குலசேகர,டில்ஹார போன்ற வீரர்கள் சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் மிக்கவர்கள் அப்படி இருக்கையில் இவர்களும் இரண்டாம் தர அணி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இலங்கை தெரிவாளர்கள் ஒரு அற்புதமான தலைவரை தெரிவு செய்யும் ஒரு நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டார்கள் என்றே சொல்வேன். தில்ஷான் ஒரு சிறந்த தலைவர் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அடுத்து டில்ஷானை தலைமைப்பொறுப்பில் வளர்க்க வேண்டிய எந்த ஒரு காரணமும் இலங்கை கிரிக்கெட்டுக்கும் இல்லை. காரணம் சங்கா ஓய்வு பெற முன் தில்ஷான் போய்விடுவார். அப்படி இருக்கையில் அடுத்த தலைவர் என கருதப்பட்ட கபுகேதரவுக்கு வாய்ப்பளித்து பார்த்திருக்கலாம் என்பது என் கருத்து.


மொத்தத்தில் இரண்டாம் தர அணி என்ற பெயரில் சென்ற இரண்டு அணிகளுக்கும் உண்மையில் அனுபவம் குன்றிய சிம்பாவே நல்ல பாடம் புகட்டியுள்ளது. அவர்களின் கூட்டு முயற்சிக்கும்,விளையாட்டின் மேல் உள்ள ஈடுபாட்டுக்கும் கிடைத்த வெற்றி தான் இது. இரண்டு கிரிக்கெட் வல்லரசுகள் பங்கு பற்றிய தொடரில் அவர்களை தோற்கடித்து அவர்கள் இருவரையும் விட அதிக போட்டிகளில் வென்று அதிக புள்ளிகளை பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டியில் நுழைந்திருக்கிறது சீறிப்பாயும் சிம்பாவே. டெஸ்ட் அந்தஸ்து பறிக்கப்பட்டு கிரிக்கெட்டில் பல ஒடுக்குமுறைகளை சந்தித்த சிம்பாவேக்கு இது நிச்சயம் மிகப்பெரிய மருந்து. முதல் போட்டியில் சிம்பாவே வென்றபோது ஏதோ வென்றுவிட்டார்கள் என நினைத்தாலும். அந்த போட்டியில் சிம்பாவேயின் பலம் அபாரமாக வெளிப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நல்ல ஓட்ட எண்ணிக்கையை பெற்றாலும் அபார துடுப்பாட்ட உதவியுடன் ஓட்ட எண்ணிக்கையை துரத்தி மலைக்க வைத்தது. தொடரை பொறுத்தவரை சிம்பாவேயின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் மிகப்பெரிய அரணாக இருந்து சிம்பாவேயின் வெற்றியில் பெரும் பங்காற்றினர். இருவரும் விக்கெட் விழுவதை தவிர்த்ததுடன் மிக சிறப்பாக ஓட்டங்களை குவித்து பின்னர் வரும் வீரர்களுக்கு நம்பிக்கை கொடுக்க மற்றவர்கள் வெற்றிகரமாய் அதை முடித்து வைத்தனர். மசகட்சா,டெயிலர் என்ற அந்த இரண்டு வீரர்களும் எல்லா வீரர்களையும் விட சிறப்பாக ஆடினார் என்றால் அது மிகை இல்லை.

இப்படி துடுப்பாட்டத்தில் எல்லோரும் கை கொடுக்க மறு புறம பந்து வீச்சாளர்களும் சில போட்டிகளில் அசத்தினர். அனுபவம் மற்றும் இளம் ரத்தம் வெறி என்பன சேர்ந்து சிம்பாவே கிரிக்கெட்டில் ஒரு மணி மகுடத்தை கொடுத்திருக்கின்றது. மற்ற இரண்டு அணிகளையும் விட சிம்பாவேயின் களத்தடுப்பு அபாரமாக இருந்தது உண்மை. பெருமளவான ஓட்ட எண்ணிக்கையை கடுப்படுத்தியது இந்த படை. இது மற்ற இரண்டு அணி வீரர்களுக்கும் நல்ல பாடமாக அமைந்தது.

கத்துக்குட்டி அணி, இரண்டாம் தர அணி என விமர்சிக்கப்பட்ட அணி இப்போது தங்கள் விளையாட்டின் மூலம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இறுதிப்போட்டியிலும் வென்று சாதனை படித்தாலும் ஆச்சரியமில்லை. காரணம் மற்ற இரண்டு அணிகளையும் விட கிண்ணம் வெல்ல சகல தகுதியும் இந்த அணிக்கு உண்டு. சிம்பாவே, நட்சத்திரங்கள் என்பனவற்றை தவிர்த்து ஒரு கிரிக்கெட் அணியாக பார்த்தால் அசுர வளர்ச்சியைக் காட்டும் சிக்கும்புராவின் இந்த புத்துப்படைக்கு என் வாழ்த்துக்கள். உண்மையில் ஒரு கிரிக்கெட் ரசிகனாக சொல்கின்றேன். இலங்கை,இந்திய ரசிகர்கள் கோபிக்கபடாது. இந்த முறை கிண்ணத்தை சிம்பாவே வெல்ல வேண்டும் அதுதான் அவர்களின் கடுமையான உழைப்புக்கும் விளையாட்டின் மீதான ஈடுபாட்டுக்கும் கிடைக்கும் பரிசு. சிங்க சீற ஆரம்பித்திருக்கிறது. மிக விரைவில் பல ராஜ்ஜியங்கள் விழும் என நம்புகின்றேன். மீண்டும் ஒருதடவை சிம்பாவே கிரிக்கெட்டுக்கு என் வாழ்த்துக்கள்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive