உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Friday, July 31, 2009

நான் விருது கொடுத்த சுவாரஸ்யபதிவர்கள்.

பட்டாம்பூச்சியை பறக்க விட்டாச்சு. அடுத்து சுவாரஷ்யபதிவர் விருதை அறுவரிடம் ஒப்படைத்து விட்டால் என் கடமையும் கொஞ்சம் முடிந்து விடும். இந்த விருதை எனக்கு கொடுத்த கடலேறி ஆதிரைக்கு என் நன்றிகள். இப்போது நான் விருதளிக்கபோபவர்கள் நான் பார்த்து ரசித்து மகிழ்பவர்கள். பதிவர்கள் ஒவ்வொருவரும் தமக்கென தனி அடையாளம் கொண்டவர்கள். நான் தெரிவு செய்தவர்கள் ஏற்கனவே இந்த விருதைப் பெற்றிருந்தாலும் நான் அவர்களுக்கு தான் இந்த விருதை அளிக்கப்போகின்றேன். காரணம், நான் படித்து சுவைத்தவர்களுக்கு தானே நான் கொடுக்க முடியும். இந்த சின்னைப்பையன் கொடுப்பதை அந்த பெரியவர்கள் ஏற்பார்கள் என நம்புகின்றேன். அத்தோடு இந்த சங்கிலியை உடையாமல் தொடருமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இதோ என்னைக்கவர்ந்த அந்த சுவாரஸ்ய பதிவர்கள் அறுவர்.

1.லோஷன்-களம்.
இவருக்கு விருது வழங்கும் அளவிற்கு உண்மையில் நான் ஒன்றும் பெரிய பதிவர் அல்ல. ஆனால் என்னை பல வழிகளில் ஆளாக்கிக்கொண்டிருக்கும் இவருக்கு விருது வழங்கி என் மனதை மகிழ்த்தவே வழங்குகின்றேன்.(என் வானொலி அறிவிப்பாளர் பயணத்தில் மட்டுமல்ல பதிவுலகிலும் எனக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்து இப்போதும் என்னை வளப்படுத்திக்கொண்டிருக்கும் என் மதிப்பிற்குரிய அண்ணா.) இவரின் பதிவுகள் பல்சுவை வாய்ந்தவை. அப்பப்போ பரபரப்பாக சில விடயங்களை எழுவது இவரின் துணிச்சல்.என்ன நிறைய எதிர்பார்ப்பை தந்து விட்டு கடைசியில் மொக்கைபோடும் சிங்கபூர் பற்றிய தொடர் பதிவை படிக்கும் போது சிரிப்போடும் அழுகை வருகிறது. அடப்பாவி இப்படி ஏமாற்றிவிட்டாரே என்று.நான் கொடுக்கும் இந்த விருதை ஏற்பீர்கள் என நம்புகின்றேன்.

2.சந்ரு-சந்ருவின் பக்கம்.
எனக்கு அண்மையில் பதிவுலகில் கிடைத்த நல்ல நண்பர். நல்ல தேடல்களும் சமுக அக்கறையுள்ள தேவையான கருத்துகளோடு மசாலா கலந்து ரசிக்கும் படி கொடுக்கும் வல்லவர். எனக்கு பட்டாம்பூத்ச்சி விருது கொடுத்த புண்ணியவான்.(இப்போ அவருக்கே கொடுத்து அந்த இன்ப அவஸ்தையை அவரையும் அனுபவிக்க வைப்பதில் ஒரு சந்தோசம்.)அபாரமான வளர்ச்சி கண்டு வரும் ஒரு நல்ல பதிவர்.

3.பிரபா-விழியும் செவியும்.
எல்லா மட்டத்துக்கும் போய் விழியோடு விழியும் செவியோடு செவியும் வைத்து நாசூக்காக அலசுவது மட்டுமில்லாமல் தன தளத்துக்கு வருவோரை சந்தோசமாகவும் சிந்தனையோடும் திரும்பிப்போக வைக்கும் ஒருவர்.(எனக்கு விருது தருவன் என்றிட்டு இன்னும் தரல நான் முந்திட்டனுன்னா.) எல்லாவகை பதிவிற்கும் சொந்தக்காரர் இந்த பிரபா.

4.Dr.எம்.கே.முருகானந்தன்-மறந்து போகாத சில.
இவர் ஒரு Doctor தான். ஆனால் எழுத்தில் வருவதே நமக்கு மருந்தாகிப்போவதுண்டு. மருத்துவ விடயங்களோடு படித்தவை,பார்த்தவை,ரசித்தவை,கேட்டவையை தரும் சகலதும் அறிந்த ஒரு டாக்டர். இவருக்கு விருது கொடுக்க எனக்கு வயதோ அனுபவமோ போதாமல் இருப்பினும் என் சந்தோசத்துக்காக தருகின்றேன் வாங்கிக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு.(எத்தனை தடவிய நீங்கள் என் சுகவீனத்துக்கு மருந்து தரும் போது வாங்கி இருக்கேன் ஒரு தடவை நீங்கள் என்னிடம் திருப்பி இந்த கனியை வாங்கக்கூடாதா.?)

5.என் எழுத்து இகழேல்-SUMAZLA
பிளாக்கிலேயே பிளாக் பற்றி எழுதும் அசகாய சூரர். நிறைய விடயங்களை இவர் தளத்தில் படிக்கலாம். தமிளிஷில் இவர் தளத்தை பார்த்து பார்த்தே கவரபட்டவன் நான். வித்தியாசத்துக்கு மறுபெயராக இவரை சொல்லலாம்.

6.வண்ணத்துபூச்சியார்
எனக்கு பின்னூட்டம் போடவந்த இந்த பிரபுவை உடனே பின் தொடர்ந்து பார்த்தேன். அசந்து போய்விட்டேன் இவர் பதிவை பார்த்து. தேடலுடன் பல பயன்மிக்க செய்திகளை தரும் இவர் தளம். இன்னும் அதிகம் படிக்க வேண்டும் இன்னும் அதிகம் நானும் எழுத வேண்டுமென ஒரு அவாவை இப்போது எனக்குள் தந்திருக்கின்றார்.

அப்பாடா...............பெரிய வேலை ஒன்று முடிஞ்சிது. விருத்களை கொடுத்து முடிச்சாச்சு அடுத்தது என் ஐம்பதுதான்....... சரி விஜய் அஜித்தும் நானும் என்னும் 50வது பதிவில் என்னைப் பற்றிய பலர் அறியாத உண்மைகளை சொல்லப்போகின்றேன். விஜய் அஜித்துக்கும் எனக்கும் என்ன தொடர்பு.....? அதன் பிறகுதான் சூப்பர் சிங்கர்ஸ் மற்றும் லோஷன் அண்ணாவின் மனம் திறந்த பதில்கள். இன்னும் கொஞ்சம் காத்திருக்கவா மாட்டீர்கள் நண்பர்களே.
Share:

Thursday, July 30, 2009

விருது வாங்கலயோ விருது.

பதிவுலக நண்பர்களுக்கு!

திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுக்கான வாக்கை செலுத்த மறக்காதீர்கள். என் தளத்தில் என்னைப்பற்றி என்னும் பகுதிக்கு கீழ் உள்ள தேர்தல் களத்தில் நீங்களும் குதியுங்கள். மேலதிக விபரங்கள்.http://sshathiesh.blogspot.com/2009/07/blog-post_14.html

பதிவர்கள் பதிவர்களுக்கு விருது வழங்கி உற்சாகப்படுத்தும் காலம் இது.ஒரு சிலருக்கு இதில் உடன்பாடு இல்லை. ஆரம்பத்தில் எனக்கு கூட இதற்கு தகுதி உண்டா என எனக்குள்ளேயே பல கேள்விகள். இப்போது யார் மனதையும் காயப்படுத்தாமல் நானும் பதிவுலகில் ஒரு இடத்தை பிடிக்கவேண்டும் என்ற ஆசை(சுயநலம் என நினைச்சிடாதிங்கப்பா). இதோ நண்பர் Shathru எனக்கு தந்த பட்டாம்பூச்சி விருது நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் தளங்களில் பறக்கப்போகின்றது.

நான் தெரிவு செய்தவர்கள் என்னவோ எனக்கு தெரிந்தவர்களே தான். ஏதோ ஒரு விதத்தில் என்னை கவர்ந்தவர்கள். சாதிக்க நினைப்பவர்கள் சாதித்துக்காட்டியவர்கள். எனவே நான் வழங்கும் இந்த விருதினை ஏற்று இந்த விருதுப்பணியை தொடருமாறு அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.(தயவுசெய்து அட நம்ம பெயர் இல்லையே என யாரும் கோவிக்காதீங்கோ. இன்னும் நிறைய விருது இருக்குங்கோ இப்பிடித்தான் நம்ம பிரபா எனக்கும் பின்னூட்டத்தில சொன்னார் )

உண்மையாக சொல்கின்றேன் இந்த ஐவரை தெரியும் போது நான் பட்ட பாடு இருக்கே இனிமேல் எனக்கு யாரும் விருது கொடுத்தால்(கொடுக்கிறிங்களா தெரியலப்பா?) சந்தோசப்படுவதைவிட சங்கடம் தான் அதிகம் வருமோ தெரியல, யாருக்கு விருதை நான் கொடுப்பதென்று. ஒருவாறு பட்டாம் பூச்சிக்கு ஐவர் சுவாரஷ்யபதிவர் அறுவர் என தெரிந்து விட்டேன். மறுபடி ஒரு விருதில் மற்றவர்களை கவனத்தில் கொள்கின்றேன்.(எஸ்கேப் ஆக வேற வழி தெரியலங்கோ) பட்டாம்பூச்சியை பிடித்துக்கொண்ட கீழ்வரும் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

1.ஹிஷாம் - என் உணர்வுகள்.
என்னுடைய பதிவுலக பிரவேசத்துக்கு காரணமான ஒருவர். பல விடயங்களை மற்றவர்களோடு பகிரும் தீராத அவா கொண்ட இவர் இப்போது இடும் பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. தரமான நல்ல பதிவுகளை தந்த நீங்கள் மீண்டும் மீண்டு வரவேண்டும். தன் தளத்தில் எதற்கும் அஞ்சாமல் மனதில் உள்ளதை உள்ளபடி இடும் ஒருவர்.

2. கடலேறி-ஆதிரை.
இவரை முதலில் எனக்கு முகப்புத்தகம் அதாங்க Face book மூலம் தான் தெரியும். அதன்பின் இவரின் தளத்தில் மையம் கொண்டவன் நான். எல்லா விடயங்களையும் பஞ்சாமிர்தமாக தந்து ரசிக்க வைப்பார். எனக்கு சுவாரஸ்ய பதிவர் விருது தந்த பரந்த மனசுக்காரர். சரித்திரம் முதல் சகலதும் அலசும் சகலகலா வல்லவன்.

3.கலை-ராகலை.
பசுமைக்குள் ஒளிந்திருக்கும் ரணங்களையும் வேதனைகளையும் ரசைனையோடு சொல்லும் கலை தெரிந்தவர் இந்தக்கலை. நீண்ட நாட்களின் பின் மீண்டு வந்திருக்கின்றார். தொடர்ந்து கலை களைகட்ட வாழ்த்துக்கள்.

4.அருண்பிரசாத்.
இவருடய பதிவுலகம் என்னைப்பொறுத்தவரை வேறுபட்டது. நாங்கள் சிலர் மசாலா கலந்து எழுதிக்கொண்டிருக்க, இவரோ கமல் போல பல தரமான முயற்சிகளை எடுப்பவர்.மிகமுக்கியமாக நான் பதிவுலகில் கால்வைக்க எனக்கு பலவிடயங்களை சொல்லிக்கொடுத்தவர். வித்தியாசமான கோணங்களில் பல விடயங்கள் தரும் ஒருவர். தெரியாத பல விடயங்களை தேடி அலசி ஆராய்ந்து தரும் என் நண்பன்.
http://aprasadh.blogspot.com/

5.VSINTHU.

இவர் பதிவில் ஒரு குழந்தைத்தனம் இருக்கும்.(நான் சொல்வது ரசனையை அவர் பதிவின் தரத்தை அல்ல) கவித்துவமும் தன வாழ்வின் அனுபவங்களும் எழுத்தாக வரும் தளம் இவருடையது. இவர் பதிவுகளை படிக்கும் பொது ஏனோ நம் வாழ்வின் சில கட்டங்கள் வந்து போவது தவிர்க்க முடியாத ஒன்று. நீங்கள் இன்னும் பல பதிவுகளை உங்கள் தளத்தில் சிந்தவேண்டும்(எழுதவேண்டும்)

விருது பெற்றோருக்கு மீண்டும் வாழ்த்துகள். இந்த சங்கிலியை அறுத்திடாமல் நீங்களும் கொடுங்களேன்.நான் விருது வழங்கிய சிலருக்கு ஏற்க்கனவே இந்த விருது கிடைத்திருந்தாலும் அன்பாக நான் வழங்கும் இந்த விருதையும் ஏற்ப்பார்கள் என நம்புகின்றேன். காரணம் எனக்கு தெரிந்த என்னைக் கவர்ந்தவர்களுக்கே நான் விருது கொடுக்க முடியும் நண்பர்களே. மீண்டும் சிந்திப்போம் சுவாரஸ்ய பதிவர் விருதுகளோடு.
Share:

Friday, July 24, 2009

அட எனக்கும் வெற்றியுங்கோ -நன்றி உங்களுக்கு.

பதிவுலக நண்பர்களுக்கு!
திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுக்கான வாக்கை செலுத்த மறக்காதீர்கள். என் தளத்தில் என்னைப்பற்றி என்னும் பகுதிக்கு கீழ் உள்ள தேர்தல் களத்தில் நீங்களும் குதியுங்கள். மேலதிக விபரங்கள்.http://sshathiesh.blogspot.com/2009/07/blog-post_14.html

விருது கொடுக்க நான் தகுதி அற்றவனா என்ற பதிவை இட்டிருந்தேன். அந்தப்பதிவிற்கு பல பிரபல பதிவர்கள் வந்து உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றிகள். உங்கள் வருகையின் பின் சரி,ஏதோ நாம் எழுதிறதை பார்த்து ரசித்து ஊக்கப்படுத்த நல்ல நண்பர்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. இந்த நேரத்தில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

விருது வழங்கும் கலாசாரத்தில் இருந்து ஒதுங்கி இருந்த எனக்கு முதல் விருதை வழங்கினார் நண்பர் shanru. பட்டாம்பூச்ச்சியாய் அவர் தந்த விருதை என்னால் தொடர்ந்து பறக்க விடமுடியாமல் போனது. அதன் பின் கடலேறி(ஆதிரை) வழங்கிய சுவாரச்யபதிவர் விருது என்னையும் விருதுலகத்திலிருந்து வெளியே நீ போகமுடியாது என சொல்லவைத்த்தது. இந்த இரண்டு விருதையும் வழங்கிய நண்பர்களுக்கு நன்றிகள்.

அதை தொடர்ந்து பூசரத்தில் இடம்பெற்ற போட்டியில் அமோக வெற்றி ஈட்ட காரணமாக இருந்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள். இந்த வெற்றிகள் என்னையும் பதிவுலகம் ஒரு அளவிற்கு நல்ல பதிவுகளை தருபவனாக ஏற்று இருக்கின்றது என்பதற்கு சான்றாக கருதுகின்றேன். எனவே என் விரதத்தை முடித்த்துக் கொண்டு இந்த சின்னைப்பையன் படித்து ரசிக்கும் என் அபிமான பதிவர்களுக்கு பட்டாம்பூச்ச்சி விருதுகளை பறக்க விட இருப்பதோடு, சுவாரஸ்ய பதிவர்கள் அறுவரை தெரிந்து அவர்களுக்கும் என் சார்பாக விருதை வழங்க நானும் களத்தில் குதித்துவிட்டேன். மிக விரைவில் அந்த விருதுகளோடு சந்திப்போம்.
Share:

Monday, July 20, 2009

விருது கொடுக்க நான் தகுதி அற்றவனா?

பதிவுலகில் அண்மையில் விருது வழங்கும் ஒரு கலாசாரம் பரபரப்பாக பேசப்படுகின்றது. சிலர் தமக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் கொடுக்கின்றார்கள் தகுதியானவர்களை தவறவிடுகின்றார்கள் என்பது ஒரு குற்றச்சாட்டே. உண்மையில் எல்லா பதிவர்களுக்கும் எல்லா பதிவர்களையும் தெரிவதில்லையே.(என்னை எத்தனை பேருக்கு தெரியும் சொல்லுங்க.) அப்படி இருக்கும் போது இந்த பெரிய காலத்தில் அவரவர் தாம் ரசித்து படிக்கும் பதிவர்களுக்கு விருது வழங்குவது என்னைப்பொறுத்தவரை தப்பில்லை.

என்னடா நமக்கு யாரும் விருது கொடுக்கலையே, ஒருவேளை ரொம்ப மட்டமா எழுதுகிறோமோ, அல்லது நான் எழுதிறது பதிவுகள் இல்லையா? என சந்தேகத்தோடு இருக்கும் நேரம் தான் நம்ம பதிவர்களை திசை திருப்பலாம் என நினைத்து திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுக்காக எல்லோரையும் என் தளத்திற்கு அழைத்தேன். ஓரளவிற்கு சிறப்பாக அது சென்றுகொண்டிருக்கின்றது. இப்படிப் போய்க்கொண்டிருந்த என்னுடைய பதிவுலகவாழ்வில் ஒரு தென்புதருவதாக அண்மையில் பதிவர் சந்ரு எனக்கு வழங்கிய பட்டாம்பூச்சி விருது அமைந்தது. பதிவுலகில்அவருக்கு கிடைத்த அந்த விருதை என்னைப்போன்ற ஐந்து பதிவர்களுக்கு வழங்கி உரமூட்டிய அவருக்கு என்றென்றும் என் நன்றிகள். அதுமட்டுமில்லாமல் அவர் இந்த பதிவுலகில் என் தளத்திற்கு வானொலி கட்ஜெட் தந்துதவியமைக்கும் நன்றிகள்.

அதேநேரம் இந்த விருதினை பெற்றுக்கொண்ட என் நண்பர்கள் அத்தனைபேருக்கும் என் வாழ்த்துக்கள். நானும் ஒரு பதிவர் என்ற அங்கீகாரம் எனக்கு கிடைத்திருக்கின்றது என்பது இப்போது எனக்கு ஒரு திருப்தி. ஆனால் இந்த பரந்த பதிவுலகில் நான் ஒரு கடைக்கோடி பதிவர். என்னை விட எத்தனையோ ஜாம்பவான்கள் இருக்கின்றார்கள்.(நான் பதிவுலகில் கால் பதிக்க காரணமாக் இருந்த லோஷன் அண்ணா எதை எழுதினாலும் ஹிட் ஆக எனக்கு எப்போது அப்படி அமையும் என இன்று வரை ஏங்கும் ஒரு சாதாரணமானவன்.) ஏதோ அப்பப்போ மனதில் தோன்றும் எண்ணங்களை உளரித்தள்ளும் நான் பல தரமான பதிவுகளையும் தொடர் ஹிட்களையும் தந்து பதிவுலகில் சாதனை படித்துக்கொண்டிருக்கும் என் சக நண்பர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கும் அளவிற்கு தகுதி அற்றவன்.

இந்த விருது வழங்கினால் அதை இன்னும்சில பதிவர்களுக்கு வழங்கிவந்துகொண்டிருப்பது எனக்கும் தெரியும். ஆனால் குழந்தையாக தவழ்ந்து பதிவுலகில் படித்துக்கொண்டிருக்கும் நான், அதில் டாக்டர் பட்டம் வாங்கும் அளவிற்கு சிறப்பான பதிவை தருபவர்களுக்கு எப்படி விருது வழங்க முடியும் . எனவே சகல பதிவர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பணம் ஆக்குவதோடு என் வாழ்த்துக்களையும் பகிருகின்றேன். எனக்கு இந்தவிருதை வழங்கி சிறப்பித்த நண்பர் சந்ரு, நீங்கள் வழங்கிய விருதை நான் பெரிய கௌரவமாக கருதுவதோடு, அதற்கு மரியாதை செய்கின்றேன். அதேநேரம் என்னால் தொடர்ந்து இந்த விருதினை வழங்கி சிறப்பிக்கமுடியாமல் போனதற்கு உங்களிடம் மன்னிப்புக்கேட்டுக் கொள்கின்றேன்.

மிக விரைவில் ஐம்பதாவது பதிவை சந்திக்கப்போகின்றேன். எனவே எனக்கு உங்கள் ஆதரவை தொடர்ந்து தருவதோடு , தமிழகத்தின் சூப்பர் சிங்கர்ஸ் அஜீஸ்,ரவி,ரேனு,ரஞ்சனி மற்றும் அடுத்த பிரபுதேவா என பட்டம் சூடிய SHERIF மற்றும் கலக்கப்போவது யாரு, ஜோடி புகழ் சிவகார்த்திகேயனோடு இரண்டு நாட்கள் நடைபெற்ற சுவையான சம்பவங்களை தொடர்பதிவுகளாக தரப்போகின்றேன். அதுமட்டுமன்றி பிரபல அறிவிப்பாளர்,பதிவர் லோஷன் அண்ணா அவர்களிடம் எல்லோரும் கேட்க நினைக்கின்ற கேள்விகளை கனியாக நான் தொடுக்க அதற்கு அவரே பதிலளிக்கப்போகின்றார். எனவே அந்த சுவையான பதிவையும் எதிர்பார்த்திருங்கள்.

ஐம்பதாவது பதிவை தொட்டபின் ஒரு அதிரடி வேண்டும் தானே........
Share:

Sunday, July 19, 2009

விஜயின் ஜோடியாக அஜித்தின் குடும்பத்தில் இருந்து ஒருவர்.

விஜய்-அஜித் இந்த இரண்டு பேரும் வெளி உலகிற்கு என்ன நட்பு பாராட்டினாலும் உள்ளுக்குள் குமுறல் இருப்பது என்னவோ உண்மையாகத்தான் இருக்கின்றது. ஆரம்பத்தில் இந்த இரண்டுபேரும் சேர்ந்து ராஜாவின் பார்வை திரைப்படத்தை கொடுத்திருந்தனர். படத்தின் படுதோல்வி இந்த இணையை மீண்டும் இணையவிடாமல் செய்து விட்டது. அதன் பிறகு பேபி ஷாலினியாக கலக்கி எடுத்தவர் குமாரியாக அறிமுகமானது என்னவோ அறிமுகமானது விஜயோடு. அறிமுகப்படத்திலேயே காதலுக்கு மரியாதை செய்த இவர்களின் படம் மிகப்பிரமாண்ட வெற்றியை பெற்றதோடு தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்டது.

அதற்கு பிறகு இரண்டு பேரும் மீண்டும் ஜோடி சேர்ந்த படம் கண்ணுக்குள் நிலவு. படம் என்னவோ வெற்றி பெறாவிட்டாலும் வியாபார ரீதியான படமே நடிப்பார் என சொல்லப்பட்டு வந்த விஜய், வித்தியாசமான கதைக்களத்தோடு வித்தியாசமான கதாபாத்திரத்தில் துணிந்து நடித்த படம். இந்த ஜோடியை தமிழ் நாடே கொண்டாடியது. காதல் ஜோடி என்றால் இப்படி எல்லா இருக்கவேண்டும் என்று ஏங்கியோர் பலர்.(இது திரையில் மட்டும் சொல்கின்றேன்.) காலம் ஓட அஜித்தோடு ஜோடியானார் ஷாலினி.அது அஜித்தை பற்றி ஒரு சில கிசுகிசுக்கள் உலாவந்தநேரம்.(ஹீராவுடன் படு நெருக்கம் என்பதே அது.) இந்த நேரத்தில் தான் ஷாலினி அஜித்தோடு ஜோடி சேர பதறிய ஷாலினியின் தந்தை, நேராக அஜித்திடமே சென்று என் பெண்ணை ஒன்றும் செய்துவிடாதே விட்டுவிடு என சொன்னதாக கூட ஒரு சில தகவல்கள் வெளியானது. அதையும் மீறி காதல் என்னும் கடவுள் இரண்டுபேர் மனதிலும் குடி ஏற இன்று அத்தனை பேரும் மெச்சும் நிஜ ஜோடியாக (அஜித்தும் நல்ல மனிதராகிவிட்டார்.) வாழ்ந்துவருகின்றனர். ஷாலினி எப்படி சிறு வயது முதல் கலக்கினாரோ அதேபோல அவர் தங்கள் ஷாமிலியும் புறப்பட்டார்.

அதுவும் மணிரத்னத்தின் அஞ்சலி திரைப்படத்தில் அறிமுகமான பெருமை கொண்ட ஷாமிலி ஓய் என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் கதாநாயகி என்னும் அந்தஸ்துக்கு உயர்ந்தார். தென்னிந்திய மொழிகளில் இவரின் பிரவேசம் ஆரம்பமாகவேண்டும் என எத்தனையோ பேர் ஏங்க இப்படி ஒரு அறிமுகம் அவருக்கு. அறிமுகப்படத்தில் குடும்ப பாங்கான வேடத்தில் அறிமுகமானவரிடம் நம்மவர்கள் அப்போ கவர்ச்சியா நடிக்க மாட்டிங்களா என்று கேட்க எதற்கும் தான் தயார் என்று தமிழ் சினிமாவிற்கு ஏற்றவர்தான் தான் என்பதை நிரூபித்து விட்டார்.
இதெல்லாம் இருக்கட்டும் தமிழுக்கு வரணுமே. எப்படி அக்காவின் கணவரோடு ஜோடி சேர்ந்து கொஞ்சி குலாவலாமா? முடியாதே.(ஒரு சிலர் தங்கள் மகளை விட குறைந்தவயது நடிகைகள் அல்லது தன்னுடன் நடித்த நடிகையின் மகள் நடிகைகளை ஜோடியாக்கியது வேறு கதை) தமிழில் நடிக்க வைக்கவேண்டுமென பல முன்னணி நிறுவனங்கள் நடிகர்கள் முயற்சிக்க இவர் ஜோடியாகப்போவது யாருடன்?

வேறுயார் தன் அக்காவின் கணவரின் போட்டியாளரும் அக்காவின் முதல் ஹீரோவுமான தளபதியோடு தான்.(ஷாமிலிக்கும் நல்ல எதிர்காலம் இருக்குங்கோ) விஜயின் 51வது படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவதாகவும் அந்த படத்தை சித்திக் அல்லது ஜெயம் ராஜா இயக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.(இது தான் குடும்ப ராசியோ என்பது தெரியவில்லை) வாங்கோ ஷாமிலி தளபதியோட கலக்குங்கோ. முடிஞ்சா உங்க மச்சான் தலையோடையும் ஜோடி சேருங்க.(அரசியல்ல இதெல்லாம் சகயமுங்க. ஆஹா இது அரசியல் இல்லை சினிமா என்ன இருந்தாலும் இரண்டும் ஒன்றுதாங்க.)
Share:

Friday, July 17, 2009

மீண்டும் வாஸ்.

பதிவுலக நண்பர்களுக்கு!

திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுக்கான வாக்கை செலுத்த மறக்காதீர்கள். என் தளத்தில் என்னைப்பற்றி என்னும் பகுதிக்கு கீழ் உள்ள தேர்தல் களத்தில் நீங்களும் குதியுங்கள். மேலதிக விபரங்கள்.http://sshathiesh.blogspot.com/2009/07/blog-post_14.html

என்னுடைய கடந்த பதிவுகளில் ஒன்றில் சமிந்த வாஸ் என்னும் ஒரு அற்புதமான வீரரை இலங்கை தெரிவாளர்கள் அண்மைக்காலங்களில் புறக்கணித்து வருகின்றனர் என இட்டிருந்தேன். இது நம்ம தெரிவாளர்களின் காதுக்கு கேட்டு விட்டதோ என்னவோ?(அவர்களுக்கு தமிழ் தெரியுமா என கேட்கக்கூடாது) இப்போது வாசினை மீண்டும் அழைத்திருக்கின்றார்கள்.

பாகிஸ்தான் அணியுடன் மிக அபாரமான ஆட்டத்தால் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று வீறுகொண்டு எழுந்திருக்கும். இலங்கை அணியில் பந்து வீச்சு ஜாம்பவான்கள் முரளி மற்றும் வாஸ் இல்லாமலே வெற்றி தேடி வந்தது. இப்போது பாகிஸ்தானுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்த இரண்டு பெரும் விளையாடும் வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. முரளியின் இடம் நிரந்தரமாகி இருக்கும் நிலையில் வாஸ் இப்போது பதினாறாவது வீரராக சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றார்.

ஏற்கனவே டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்திருக்கும் இலங்கை அணி இந்த இருவர் கூட்டணி நீண்ட காலத்துக்கு பிறகு மிரட்டினால் பாகிஸ்தானை இலகுவில் சுருட்டி சரித்திர வெற்றியை பதிவு செய்யும். வாசுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. பல இளைய வீரர்கள் சாதித்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில் வாஸ் தனக்கு கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். இல்லையேல் நிச்சயமாக அவருக்கு இன்னுமொரு முறை சந்தர்ப்பம் கிடைக்காமலே போய்விடும்.

அதுமட்டுமில்லாமல் இந்த போட்டியில் சோபிப்பதோடு தொடர்ந்து வரும் போட்டிகளில் அசத்தினாலே தொடர்ந்து விளையாடும் விருப்பம் இருந்தால் வாஸ் தன்னை நிலை நிறுத்த முடியும். அப்படி இல்லாவிட்டால் இந்த போட்டியில் அபாரமாக செயற்பட்டு அணியை வெற்றிபெற வைப்பதோடு தன் கிரிக்கெட் பயணத்தையும் வெற்றியோடு நிறைவு செய்வதே வாஸ் என்னும் சாதனை வீரனுக்கு அழகு.
Share:

சச்சினை பற்றி அப்படிக் கூறவில்லை! -பல்டி அடித்த வினோத் காம்ப்ளி .


பதிவுலக நண்பர்களுக்கு!

திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுக்கான வாக்கை செலுத்த மறக்காதீர்கள். என் தளத்தில் என்னைப்பற்றி என்னும் பகுதிக்கு கீழ் உள்ள தேர்தல் களத்தில் நீங்களும் குதியுங்கள். மேலதிக விபரங்கள்.http://sshathiesh.blogspot.com/2009/07/blog-post_14.html

கிரிக்கெட் உலகில் இந்த காலகட்டம் பரபரப்புக்கு குறைவில்லை.ஆஷசின் முதல் போட்டியில் இங்கிலாந்து வேண்டுமென தாமதப்படுத்தியதாக பாண்டிங் குற்றம் சுமத்த நாங்கள் அப்படி வேண்டுமென செய்யவில்லை என இங்கிலாந்து கப்டன் மறுபக்கம். அதன் பின் பிளிண்டோபின் ஓய்வு என தேவையற்ற நிகழ்வுகளுக்கு மத்தியில் இதெல்லாம் தேவையா என கேட்கவைத்த நிகழ்வு தான் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் வினோத் காம்ப்ளி உலகக்கிரிக்கெட்டின் இன்றைய கடவுளாக போற்றப்படும் சச்சினை பற்றி கூறிய சில கருத்துக்கள்.

அண்மைக்காலங்களில் தொலைக்காட்சிகளில் Reality Show என்னும் ஒரு கருமாந்திரம்(இதை விட எனக்கு இந்த நிகழ்ச்சியை திட்ட வேறு வார்த்தை தெரியவில்லை) எல்லா பிரபலங்களையும் போட்டு வாட்டுவதோடு ஒரு சில பிரபலமில்லாதவர்களையும் பிரபலமாக்கி விட்டிருக்கின்றது. இப்படிப்பட நிகழ்ச்சிகள் தேவையா? அந்தரங்கங்களை போட்டு உடைக்கும் ஒரு நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்க்கின்றார்கள். இது எங்கே போய் முடியப்போகின்றதோ? (அதெல்லாம் இருக்கட்டும் நீ சொல்ல வந்ததை சொல் அதுக்கெதுக்கு இவ்வளவு என்கிறது புரிது. என்ன செய்றது பழகிப்போச்சு..)
சச்சின்-வினோத் காம்ப்ளி பாடசாலை காலத்தில் ஆடிய ஆட்டம் அனைவருக்கும் அத்துப்படி. அதன் பின் சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டுபேர் செய்த சேவையும்(காம்ப்ளி என்னதான் குழப்படி செய்தாலும் டெஸ்டில் ஆயிரம் ஓட்டத்தை விரைவாக கடந்த இந்தியர் என்ற சாதனை இன்னும் அவர் வசமே.) வரலாறுகளே. இந்த நேரத்தில் சச்சின் என்ற நாமம் ஒரு தசாப்தத்தை கடந்து பிறந்த குழந்தைக்கு கூட தெரிந்திருக்க இரண்டாயிரமாம் ஆண்டோடு கிரிக்கெட்டில் அஸ்தமனமாகிப் போய், பலரால் மறந்து போன வினோத் காம்ப்ளி இப்போது தானும் இருக்கின்றேன் என சொல்லாமல் சொல்லி இருக்கின்றார்.

அந்த showவில் காம்ப்ளி சச்சினை பற்றி சொன்னதை எப்படி ஏற்க முடியும். எத்தனை தடவை காம்ப்ளி இந்திய அணிக்குள் மீள வர சச்சின் காரணமாக இருந்தார் என்பது கிரிக்கெட்டை தெரிந்த அனைவருக்கிம் தெரியும்.(இதேபோலத்தான் தினேஷ் மொங்கியா, அஜித் அகார்கர் போன்றவர்களுக்கும் சச்சின் ஆதரவு வழங்கி இருக்கின்றார்.) அப்படி இருக்கும் போது கேவலம் ஒரு கோடி ரூபாவிற்காக (அந்த நிகழ்ச்சியில் உண்மையை பேசி வெற்றி பெற்றால் வழங்கும் பரிசுத்தொகையாம் அது.) தன் உயிர் நண்பனாக பள்ளிக்காலம் முதல் இருந்து வந்தவரை பற்றி எதுவெல்லாம் சொல்லக்கூடாதா அதை எல்லாம் சொல்லி முடித்து விட்டார்.
சரி அவர் மனதில் இருக்கும் ஆதங்கத்தை ஏதோ கொட்டி விட்டார். என்று அந்த பிரச்னையை ஓரளவிற்கு ஒரு சிலர் அதை ஒதுக்கித் தள்ளிக்கொண்டிருக்கும் போது நேற்று முன்தினம் காம்ப்ளி வழங்கிய பேட்டி ஒன்றில் தன்னால் சச்சினுக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்திற்கு வருத்தம் தெரிவித்திருக்கின்றார். அதற்கு பிறகு அவர் சொன்னதுதான் நடிகர்களையே விஞ்சி நிற்க்கின்றது. அதாவது சச்சினைப் பற்றி தான் அப்படி எதுவும் சொல்லவில்லையாம். அது முற்றிலும் தவறான செய்தியாம். தனக்கும் சச்சினுக்கும் கடந்த 26ஆண்டுகளாக நல்ல நட்பு இருந்து வருகின்றது. மிக விரைவில் அவரை சந்தித்து இதை பற்றி விளக்கப்போவதாக சொல்லி இருக்கின்றார். இவை எல்லாவற்றுக்கும் சச்சின் தன் வழக்கமான அமைதியை காத்துக்கொண்டிருப்பதே அவரின் பெருந்தன்மை தான்.
Share:

Wednesday, July 15, 2009

திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுகளை தெரிவு செய்ய வாங்கோ! .

பதிவுலகில் அண்மையில் ஒரு பரபரப்பாக பதிவர்களுக்கான விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த நேரத்தில் பதிவுலகை சேர்ந்த நாமும் அதை படிப்போரும் இணைந்து தமிழ் சினிமாவின் சில துறைகளில் அபிமானம் பெற்றவர்களை தெரிந்து விருது வழங்கலாம் என நினைக்கின்றேன். இது நிச்சயமாக என் தனிப்பாட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லா ஒரு இடம். காரணம் நீங்களே வாக்களிக்கப்போகின்றீர்கள். அதேநேரம் நான் தெரிவு செய்திருக்கும் தெரிவுகளில் உங்கள் தெரிவு அடங்காவிட்டால் பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்களோடு உங்கள் தெரிவையும் சொன்னால் அவற்றையும் கருத்தில் கொள்ள காத்திருக்கின்றேன். எனவே நாம் அனைவரும் சேர்ந்து திரை உலககத்தினருக்கு மகுடம் சூட்ட தயாராகுவோம். இது முற்று முழுதாக உங்கள் அபிமானியை தெரிவு செய்யவே.(சிறந்தவர் யார் என்ற போட்டியல்ல)

இதே நேரம் அண்மையில் என் தளத்தில் நடைபெற்ற திரையில் ஜோடியாக தோன்றி நிஜஜோடியாகி உங்களை கவர்ந்தவர்கள் யார் என்ற போட்டியில் அஜித்-ஷாலினி,சூர்யா-ஜோதிகா,சரத்-ராதிகா போட்டியிட்டனர். அவர்களில் சூர்யா-ஜோதிகா ஜோடி அபார வெற்றியோடு முதலிடம் பிடிக்க அஜித்-ஷாலினி ஜோடி இரண்டாமிடம் பெற்றுள்ளது. சூர்யா-ஜோதிகா ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு தங்கள் வாக்குகளை அளித்து போட்டியை சுவாரஷ்யமாக்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.

அதே நம்பிக்கையோடு இந்த விருது வழங்கும் போட்டித்தெரிவிலும் நீங்கள் பங்கு பற்றுவீர்கள் என நம்புகின்றேன். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். என் தளத்தில் நீங்கள் படிக்கும் பதிவின் வலப்புறம் உள்ள என்னைப்பற்றி என்னும் பகுதிக்கு கீழிருந்து ஒவ்வொரு பிரிவாக உங்கள் வாக்குகளை அளித்து உங்கள் அபிமான பிரபலத்தை வெற்றி பெற வைத்து பதிவுலகம் திரை உலகிற்கு வழங்கும் விருதுகளை நீங்களே வழங்குங்கள். (தயவுசெய்து இங்கே எந்தவிதமான தவறான வாக்களிப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம்.)

அபிமான நடிகர்.

ரஜினி,கமல்,சரத்,விஜயகாந்த்,சத்யராஜ் என்னும் சாதனை நாயகர்களை தவிர்த்து அதன் பின் வந்த அடுத்த தலை முறை நாயகர்களையே நாங்கள் போட்டிக்காக தேர்ந்தெடுத்துள்ளோம்.

அபிமான நடிகை.

குஸ்பு,ரம்பா,சிம்ரன்,ஜோதிகா என கலக்கி தவிர்த்து இப்போது பலரின் தூக்கங்களை கெடுத்து ஜொள்ளு விட வைக்கும் கதாநாயகிகளை இங்கே போட்டிக்காக தருகின்றோம்.

அபிமான இயக்குனர்.

மணிரத்தினம்,பாரதிராஜா,பாலச்சந்தர் என்ற இமயங்களை கடந்து அதன் பின் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாமல் மாறி இருக்கும் இயக்குனர்கள் இவர்கள்.

அபிமான இசை அமைப்பாளர்.

எம்.எஸ்.விஸ்வநாதன்,இளையராஜா,தேவா என்ற இசை சிகர்ணகளை இங்கே போட்டிக்காக நாங்கள் எடுக்கவில்லை. அதன் பின் வந்து மாற்றங்களை தந்து கொண்டிருக்கும் இசை அமைப்பாளர்களே இவர்கள்.

அபிமான ஆண் பாடகர்.

கே.ஜெ.யேசுதாஸ்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் என பாடும் நிலாக்களை நாங்கள் போட்டிக்காமல் எடுக்காமல் அதன் பின் வந்து உங்களை கவர்ந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

அபிமான பெண் பாடகர்.

சுசீலா,ஜானகி என்ற பாடும் குயில்களின் சாதனைகள் அளப்பரியன. இங்கே அதன் பின் வந்து சாதித்துக்கொண்டிருக்கும் குயில்கள் போட்டிக்காக.

அபிமான பாடலாசிரியர்.

வாலி என்னும் மார்க்கண்டேயக்கவிஞர் காலங்களை தாண்டியும் கவி படைக்கும் நேரத்தில் அந்த ஜாம்பவானை இங்கே போட்டிக்குள் கொண்டுவராமல் அதன் பின் சாதித்த சாதித்துக்கொண்டிருக்கும் பாடலாசிரியர்களே இவர்கள்.

.

Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive