Monday, April 27, 2009


அஜால் குஜால் எண்ணங்களோடு வந்தவங்கள் மன்னிக்கணும் இது அது அல்ல.

எம்.குமரன்.son.of மகாலஷ்மி படத்தில் அசின் அறிமுகமானபோதே இந்த புயல் ஒரு கலக்கு கலக்கும் என நான் நினைக்கவில்லை ஆனால் பலர் நினைத்திருப்பீர்கள்.(அப்போ எனக்கு கசத்தது இப்போ இனிக்கிறது) தனக்கு நடிப்பை விட வியாபாரம் நன்றாக இருக்கிறது, எனவே என் ஆசைக்காகத் தான் நடிக்க வந்தேன் என்ற அசினின் தந்தை கேரளாவில் மிகப்பெரிய தொழில் அதிபர். ஆனால் தன் மகளின் ஆசைக்கு தன்னால் இயன்ற அளவு உதவி செய்யலாமென்ற எண்ணத்தில் தன் வியாபாரம் வேலைகளை எல்லாம் வேறு ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு மகளோடு வந்துவிட்டார். படப்பிடிப்பிக்கு அசினுடனேயே வருவார்.

புதிய படங்களை ஒப்புக்கொள்வதிலிருந்து அத்தனை வேலைகளையும் செய்வதும் தந்தை ஜோசெப்தான். அதனால் தான் என்னவோ கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என தமிழக முன்னணி நட்சத்திரங்களோடு மட்டுமன்றி ஹிந்தியிலும் கலக்கிக் கொண்டிருக்கின்றார்.

அசினுடனேயே தந்தை ஒட்டிக்கொண்டு இருப்பதால் எல்லோருக்கும் அது ஒரு இம்சையாகவே இருந்தது(அசினுடன் யாரும் தனிமையில் கதைக்க முடியாதே என ஏக்கம்தான்.) ஏன் அசினின் கையடக்கத் தொலைபேசியைக் கூட ஜோசெப்பே வைத்திருப்பார். அத்தனை வேலைகளையும் பார்த்து பார்த்து செய்த தந்தை இன்று சுகவீனமுற்று வைத்தியசாலையில் படுக்கையில் இருக்கிறார். (தலைப்புக்கு காரணம் இதுதான்) தாய் மட்டும் ஊரிலிருந்து வந்து தந்தையைக் கவனிக்கிறார்.

அசினின் மனம் உடைந்து போய் இப்போது புதுப்படங்களை கூட ஒப்புக்கொள்ளமுடியாமல் தவிர்த்துவருகின்றார். அத்துடன் தன் சொந்த மாநிலத்துக்கு சென்று தேர்தலில் வாக்களிக்க நினைத்தவருக்கு அதுவும் இப்போ எட்டாக்கனியாகி விட்டது.(அசின் என் கூட வந்தால் நான் கூட்டிப்போக தயார் அது வேறு கதை)

வாழ்க்கையில் முதன் முறையாக தந்தை இல்லாமல் பெங்களூர் போய்வந்திருக்கின்றேன் மீண்டும் மும்பை வந்தவுடன் அவரை உடனடியாகப் போய் பார்த்துவிட்டு வந்தேன் என்கிறார் அசின்.(பெற்றவர்களை கவனிக்காத இந்தக்காலத்தில் அசினின் பாசம் பாராட்டலாம் தாய், தந்தை குறை சொல்லும் மற்ற நடிகைகளுக்கும் அவரின் ரசிகர்களுக்கும் இது ஒரு நல்ல பாடம்.)

தந்தை இல்லாமல் இப்போது தன் வேலைகளை செய்ய பழகி வருகின்றாராம் அசின்.(நீங்கள் கூப்பிட்டால் வந்து உதவ எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்) ஆனால் என்ன தான் இருந்தாலும் ஜோசப் குணமடைந்து வர இறைவனை பிரார்த்திப்பதே மனித இயல்பு. அசினுக்கு ஏனோ அண்மைய காலம் சரியில்லை போலத்தான் தெரிகிறது.(சரியான ஜோசியரை பாருங்க மேடம்!)

Sunday, April 26, 2009

நேற்று நடைபெற்ற இலங்கையின் மேல்மாகண சபை தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டிய ஒருவனாக நான் எங்கள் வானொலியில். நேற்று இரவு 9 மணிக்கு "நானாட நீயாட" நிகழ்ச்சியில் ஆரம்பித்து மறுநாள் காலை(இன்று) 6 மணிவரை தொடர்ச்சியாக தேர்தல் கடமையில் இருந்து தூக்கத்தோடு இருந்தாலும் தேர்தல் முடிவு வரும் வரும் என அதிகாலை வரை எதிர்பார்த்து சலித்துப்போய் நன்றாக தூங்கிவிட்டு வந்து எழுதும் பதிவு என்பதால் கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் ஏதோ தோன்றியதை எழுதுகின்றேன்.

தமிழன் என்றாலே உயிருக்கு உத்தரவாதமில்லாதவன் என்றாகிவிட்ட நிலையில் இயற்கையும், சில விபத்துக்களும் கூட தமிழனை கொல்லாமல் விட மாட்டேன் என துரத்திக்கொண்டே இருக்கிறது.

உண்மையில் தமிழன் என்ற உணர்வோடு வாழ்ந்து வரும் தமிழக அரசியல்வாதி(சில சமயங்களில் இவரும் அந்த அணியில் சேர்ந்து கொள்கின்றார் எனும் பொது கவலையாகத்தான் இருக்கிறது.) பழ.நெடுமாறன் அவர்கள்(வயதுக்கும் அவர் செய்த நல்ல காரியங்களுக்கும் இந்த மரியாதை கொடுக்கின்றேன்.) நேற்று மாலை வேளை மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு செல்லும் வழியில் காஸ் நிரப்பி வந்த வாகனத்துடன் இவர் பயணம் செய்த கார் மோதி விபத்துக்குள்ளகியுள்ள நிலையில் காரின் முன்பகுதி முற்றாக சேதமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காரில் பயணம் செய்த ஓட்டுனர், பழ. நெடுமாறன் உட்பட யாருக்கும் எந்த வித ஆபத்துமின்றி பத்திரமாக தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழனை துரத்தும் மரணம் இவரின் கார்க்கதவையும் தட்டி விட்டு சென்றிருக்கிறது. மரண பயம் என்றால் என்ன என்பதை பழ.நெடுமாறன் ஐயாவும் அறிந்து கொள்ள ஆண்டவன் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கின்றார். இதை எல்லோரும் புரிந்து நடந்தால் எல்லாமே மாறிடுமே. நடப்பார்களா?

Tuesday, April 21, 2009

அழகியதமிழ்மகன், குருவி, வில்லு என்ற சுமாரனா படங்களின் பின்னர் பத்திரிக்கையாளர் மாநாட்டில் ஏற்ப்பட்ட "Silence" பிரச்சனை என்பவற்றை தொடர்ந்து விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் திரைப்பட அறிமுகப்பாடல் ஒரு கற்ப்பனையில். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே........ என்னும் Style இல் பாடிப்பாருங்கள். இது யாரையும் புண்படுத்த அல்ல சும்மா ஒரு ஜாலிக்காக.
Silence இல்லை Silence இல்லை Silence என்பது இல்லையே
பத்திரிக்கையாளர் மாநாட்டில் நான் பேசும் போதிலும்
Silence இல்லை Silence இல்லை Silenceஎன்பது இல்லையே
கஷ்டப்பட்டு மூன்று படங்கள் நடித்துக்குடுத்தபோதிலும்- பெரிய
வெற்றி இல்லை வெற்றி இல்லை வெற்றி என்பது இல்லையே


Super Star நாற்காலிக்கு குறிவைத்தபோதிலும்
ரஜினி அந்த இடத்தை இன்னும் எனக்கு விட்டுக்குடுக்கவில்லையே
எம்.ஜி.ஆர், ரஜினி வழியில் நான் போகும் போதிலும்
சிம்பு, தனுஷ் அந்த வழியை விட்டு வைக்கவில்லையே
கொடி அறிமுகப்படுத்தி அரசியலில் குதிக்க முயலும்போதிலும்
அதில் கூட ஜெயிப்பேனா மக்கள் உங்களை கேட்கின்றேன்

கோடி கோடியாக நான் சம்பளம் வாங்கும் போதிலும்
என் படங்கள் கோடி கோடியாக வசூலிக்கவில்லையே
அழகிய தமிழ் மகனாய் மனிதனாகி நின்றேனே
குருவியாக பறக்க முயன்று சிறகொடிந்து போனேனே
வில்லெடுத்து அம்புகொண்டு வெற்றிக் கனி பறிக்க எய்தேனே
அத்தனையும் உடைந்து போக வேட்டைக்காரனாகி வருகின்றேன்

என்னால் முடிந்தவரை நடித்து பார்த்துவிட்டேனே-இப்போ
மகனை கொண்டு பெருமை சேர்க்கும் வேட்டைக்காரன் நானடா
என் பட தோல்விகளால் பலர் துவண்ட போதிலும்
கலங்கமாட்டேன் உங்களை நான் கலங்கவைத்து மகிழ்வேனே.
அஜித்,விக்ரம்,சூர்யா என்று எத்தனை பேர் இருந்தாலும்
தளபதி நான் வேட்டைக்காரன் No.1 நானடா

Sunday, April 19, 2009

எங்கள் வாழ்கையில் நாங்கள் பார்க்காமல் பல அதிசய விடயங்கள் நடந்திருக்கின்றது. சிலவற்றை நம்பி இருக்கின்றோம் சிலவற்றை நம்பமுடியவில்லை. ஆனால் நெருப்பில்லாமல் புகை வருமா என்பது போல் இப்படியான செய்திகள் ஒரு அடிப்படை இல்லாமல் வர சாத்தியமும் இல்லை.

அண்மையில் இப்படித்தான் நான் ஒரு பத்திரிகையில் படித்த ஆச்சரியமான ஒரு உண்மை சம்பவத்தை வலைப்பதிவு மூலமாக உங்களுடன் பகிரலாம் என தோன்றியதால் இந்த பதிவை இடுகின்றேன். இதை பார்த்ததும் நானும் நம்பவில்லை இப்படி நடக்காது இது பொய் என்று தான் யோசித்தேன். ஆனால் அதைப்பற்றி தேடியபோது தான் இது கற்பனை அல்ல, கட்டுக்கதை அல்ல உண்மைச் சம்பவம் என்பதை அறிந்து கொண்டேன்.

சவூதி அரேபியாவில் உள்ள அல்-ஹாஷாபிரதேச ஒரு கிராமத்தில் தான் இந்த அதிசயம் நிகழ்கின்றது. 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முஹாஜித் போராளி ஒருவரை ஒரு பாறை ஒன்றுக்கு பின்னால் வைத்து சுட்டுக்கொன்றிருக்கின்றனர். அதன் போது சிந்திய ரத்தம் இன்னும் உறையாமல் காய்ந்து இல்லாமல் போகாமல் புதிதாக சிந்திய ரத்தம் போல அந்தப் பாறையில் காணப்படுவதாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். (கையில் ஒரு சின்ன காயம் ஏற்பாட்டல் வரும் ரத்தமே சற்று நேரத்தில் உறைந்துவிடும் ஆனால் இங்கே...................?) இதை விட அவர்கள் கூறிய இன்னுமொரு விடயம் புல்லரிக்க வைக்கின்றது. தாங்கள் அந்த குருதியை துடைத்தோ அல்லது கழுவியோ விட்டாலும் மீண்டும் அவ்விடம் வழமைபோல் ரத்தம் கசிந்த இடமாக மாறிவிடுவதாக தெரிவித்த மக்கள் சொன்ன மற்றுமொரு விடயம் இவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடுவது போல் இருந்தது.

இதே பாறை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் 11 cm உயரம் தரையிலிருந்து மேலே எழுந்து 11 நிமிடங்கள் அந்தரத்தில் மிதப்பதாக சொன்னார்கள். ஒரு செக்கன் இரண்டு செக்கன் அல்ல நிமிடங்கள் மிதக்கிறதாம். (நம்பமுடியலையா அதிகம் மூளையைப்போட்டு குழப்பிக்காமல் நேரடியாக சவுதிக்கு சென்று பாத்திட்டு வாங்க.)

அதுக்கு முன்னர் இப்படியான சம்பவங்கள் பற்றி உங்கள் எண்ணங்களை பின்னோட்டங்களாக இட்டிட்டு போங்களேன்.

Wednesday, April 15, 2009


தமிழ்த் திரை உலகின் இயக்குனர் சீமான் மிகப்பெரிய, மிகச் சிறந்த திரைப்படங்களை தந்தவர். புரட்சி சிந்தனை, மனதில் பட்டத்தை தைரியமாக சொல்லும் பக்குவம் என்பன கொண்டவர். இப்படிப்பட்டவர்களுக்கு சோதனைகள் வருவது இயற்கை தானே.

தான் பிறந்த தமிழினத்துக்காக குரல்கொடுத்தவரை கைது செய்ய போலீசார் பல முயற்சி எடுத்தும் பலனின்றி தானாகவே அவர்களிடம் சென்று சட்டத்துக்கு அடிபணிந்த மறத்தமிழனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். எத்தனையோ பேர் முயன்றும் இன்னும் வெளியே கொண்டுவரமுடியாத நிலையில் இன்னும் சிலர் இதே சட்டத்தில் கைது செய்யப்படுவதாலும் இவரது சிறை வாசத்துக்கான முடிவு எப்போது என தெரியாமலே இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் ஒன்றாக கூடி ஆலோசனைகளை நடாத்தி சில முக்கிய முடிவுகளை எடுத்தனர். அரசியலில் பழம் திண்டு கொட்டை போடப்போகும் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, ஆகியோரில் ஒருவர் நிற்கும் ஒரு தொகுதியில் சீமானை நிறுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டிருக்காம். இப்போது மிகவும் பிரபலமாக இருக்கும் சீமானை நிறுத்தினால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேரடியாக தேர்தல் களத்தில் தாமே இறங்கி வேலை செய்யப்போவதாகவும் அறிவித்திருக்கின்றார்கள். அத்துடன் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக நிற்பவர்களை சந்தித்து சீமானையே பொது வேட்பாளராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விட இருக்கின்றனராம்.

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். மீண்டும் ஒருவர் தமிழ் சினிமாவிலிருந்து அரசியலுக்குள் வரப்போகின்றார். ஜெயிப்பாரா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் ஒரு தமிழன், அதிலும் நெஞ்சில் உரமுடைய உண்மைத்தமிழன் வருகையில் மக்கள் நிச்சயம் ஏற்பார்கள். எனவே இயக்குனர் சீமான் எம்.பி. சீமானாக மாறும் நாள் தொலைவில் இல்லை.

Sunday, April 12, 2009

எத்தனை சோதனைகள் வேதனைகள் சின்ன சின்ன சந்தோசங்கள்(இது பலருக்கு கிடைத்ததா என தெரியாது) இப்படிக்கடந்து பொய் நிற்கின்றன கடந்த சில வருடங்கள். வாழ்கையில் எத்தனை எத்தனை மாற்றங்கள். பிறந்த இடம் எங்கோ, வளர்ந்த இடம் எதுவோ, இன்று வாழும் இடம் கூட நிரந்தரமற்ற நிலையில் தான் நாங்கள். நாளை எங்கே என நினைப்பதை விட அடுத்த கணப்பொழுதாவது கொஞ்சம் நிம்மதி கிடைக்குமா என ஏக்கத்துடன் வாழும் வாழ்க்கைதான் இது.

தாய், தந்தை இல்லாத குழந்தைகள், விதைவைகள், தபுதாரர்கள், இதேபோல் இன்னும் எத்தனைபேர் தங்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருநேர சப்பாடவாது கிடைக்குமா என்னும் நேரம் ஒரு புது வருடம். யார் கொண்டாடப்போகிறார்கள்? யார்தான் இந்த ஒருநாளாவது நிம்மதியாக மூச்சுவிடப்போகின்றார்கள்?

மகளின் திருமணத்துக்கு வரமுடியாத பெற்றோர், ஒருநாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு போகக்கூட செலவழிக்காத நேரம், கட்டுப்பாடுகள் எல்லாம் தாண்டித்தான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போகவேண்டும். பொருளாதாரத்தின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கும் இந்த நிலையில் வழமை போலவே ஒரு வருடம் ஓடி இப்போது அடுத்த வருடமாம். அதற்காக பொருட்களின் விலைக்குறைப்பாம், புத்தாடைக் கொள்வனவாம், பல தடபுடல் ஏற்பாடுகளாம் இதெல்லாம் யாருக்காக?
உயிரில்லாத உடல்களுக்கா?, உறவுகளை இழந்த உறவுகளுக்கா, மரணத்தையே பார்த்து பார்த்து மரத்துப்போன மனங்களுக்காக? இல்லை. யாருக்குமே தேவையில்லை இப்படிஒரு புதுவருடம்.

இத்தனை காலமும் வேறு வேறு பெயர்களில் வந்த வருடங்களே பலரது வாழ்க்கைக்கு விரோதியாக இருந்து காயங்களுடன் கடந்து சென்றிருக்கிறது. பிறக்கபோவதோ விரோதி வருடம். இது இனி எத்தனைபேரின் வாழ்க்கையில் விரோதியாக இருக்குமோ தெரியவில்லை. எதுவாக இருப்பினும் பிறக்கப்போகும் ஆண்டாவது பெயரில் மட்டும் விரோதியாக இருக்கட்டும் அனைவர் வாழ்விலும் வசந்தம் வீசி எங்கும் சமாதானமும் அன்பும் அமைதியும் நிலவவேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதோடு அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.(என்ன செய்வது வழமையாக இப்படி சொல்லவது ஒரு Fashion ஆகிவிட்டதே!)

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts