Wednesday, March 19, 2014இளம் கலை-இலக்கிய ஆர்வலர்களின் ஒன்றிணைவில் கடந்த வருட நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டு, வவுனியா மாவட்டத்தில் கலை இலக்கிய ரீதியிலான தொடர்ச்சியான பணிகளை சிறப்பாக செய்து வருகின்ற, தமிழ் மாமன்றம், தனது முதலாவது பொது விழாவான 'இயல் விழா 2014' இனை இம்மாதம்(மார்ச் மாதம்) 30ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, வவுனியா கலாசார மண்டபத்தில் நடாத்தவுள்ளது. இவ் இயல் விழாவில், உலக அளவில் பிரசித்தி பெற்ற சிறந்த பேச்சாளரும், அகில இலங்கைக் கம்பன் கழகத்தினுடைய ஸ்தாபகருமான, கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். காலை 9 மணி தொடக்கம் 12.30 மணி வரை காலை அமர்வும், மாலை 4.00 மணி தொடக்கம் 8.30 மணி வரை மாலை அமர்வும் இடம்பெறவுள்ளது. காலை அமர்விலே பாடசாலை மாணவர்கள் பங்கேற்று விவாதம் புரியும் விவாத அரங்கு "பாரதி மகாகவியாய் நின்று நிலைப்பதற்குப் பெரிதும் காரணமாவது , தேச விடுதலைப்பாடல்களே !, தெய்வ வணக்கப் பாடல்களே!, தமிழ் வாழ்த்துப் பாடல்களே !, பெண் விடுதலைப்பாடல்களே !, சாதி எதிர்ப்புப் பாடல்களே !, சுயசரிதைப் பாடல்களே!" என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது. இவ்விவாத அரங்கிற்குத் தமிழாசிரியர் என். கே. கஜரூபன் அவர்கள் நடுவாண்மை புரியவுள்ளார். காலை அமர்விலே இரண்டாவது நிகழ்வாகத் தமிழ் மாமன்ற உறுப்பினர்கள் களம் காணும் சுழலும் சொற்போர் இடம்பெறவுள்ளது. "வள்ளுவன் கூறும் பெண்மை ஆற்றலில் பெரிதும் சிறந்தவள், கண்ணகியே !, சீதையே !, பாஞ்சாலியே !, தாரையே !, புனிதவதியே !, கைகேயியே !" என்ற தலைப்பில் அமைந்த சுழலும் சொற்போரினை, கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் நடுவுநிலைமை புரிந்து சிறப்பிக்கவுள்ளனர். மாலை அமர்வில் முதல் நிகழ்வாக கவிஞர் ஐங்கரன் அவர்கள் தலைமையில் தமிழ் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கவியரங்கு இடம்பெறவுள்ளது. "நால்வர் நற்றமிழ்" என்ற பொதுத் தலைப்பிலே இடம்பெறும் இக்கவியரங்கில் "நாமார்க்கும் குடியல்லோம் - அப்பர்", "மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் - சம்பந்தர்", "ஆளிலை எம்பெருமான் - சுந்தரர்", "மூர்க்கரொடும் முயல்வேனை - மாணிக்கவாசகர்" என்ற நான்கு தலைப்புக்களில் கவி பாடவுள்ளனர். மாலை அமர்விலே இரண்டாவது நிகழ்வாகவும் விழாவின் சிறப்பு நிகழ்வாகவும் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் தலைமையில், நாட்டின் பல பாகங்களில் இருந்து கலந்து கொள்ளும் சிறப்புப் பேச்சாளர்களும் தமிழ் மாமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் பட்டி மன்றம் இடம் பெறவுள்ளது. இப்பட்டி மன்றம், "செயற்கரும் செய்கை செய்த தீரருள் முன்னிற்பவர், சிறுத்தொண்டரே !, நீலகண்டரே !, கண்ணப்பரே !" என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது. குறைந்து செல்லும் தமிழார்வத்ததை, மீண்டும் துலங்க வைத்து, வவுனியா மாவட்டத்தினுடைய, கலை இலக்கிய ரசனையும், இளம் சமுதாயத்தினுடைய கலை இலக்கிய ஆர்வத்தையும் பெரிதும் உயர்த்திச் செல்ல, இவ் விழா கால்கோளாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

Monday, January 6, 2014


ஒருவரின் புறத் தோற்ற அழகை சொல்ல ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வார்கள். ஆனால் இப்போது  பலர் போடுவதே பாதி ஆடைகளை தான். இந்த போட்டியில் ஏனோ பெண்கள் ஆண்களை வென்று முன்னணியில் நிற்கின்றனர்.


இந்த ஆடை விடயத்தில் ஆண்களில் சிலர் தங்கள் காற்சட்டையை அணியும் விதம் உண்மையில் சிரிக்கிறதா?, அழுவதா?, இல்லை திட்டுவதா ரகத்திலே இருக்கிறது. சில ஆண்கள் தங்கள் உள் ஆடைகள் வெளியே தெரியும் வண்ணம் வழக்கமாக நாம் காற்சட்டைகளை அணியும் இடுப்பு பகுதிக்கு கீழே தங்கள் காற்சட்டைகளை மாட்டிக்கொண்டு அதை இழுத்து இழுத்து நடந்து போவார்கள். கேட்டால் அதுதான் ஸ்டைலாம். இந்த கொடுமை லண்டன் போன்ற நாடுகளில் மட்டுமல நம் இலங்கையிலும் இருக்கின்றது என்பது தான் கொடுமையிலும் கொடுமை. வேட்டிதான் இப்பிடி நழுவும் என்று காற்சட்டை அணிய ஆரம்பிச்சம் இப்போ இதுவும் நழுவினா? கோவிந்தா கோவிந்தா தான். எதை செய்தாலும் நாகரிக வளர்ச்சி என்று எண்ணி மீண்டும் வேடுவர் காலத்துக்கு சென்று கொண்டிருக்கின்றோம் என்பது  நம்மில் பலருக்கு தெரியாது.

                                
இடுப்பு பட்டி அணிந்தாலும் நழுவி விழுவது பாதி விழாத பாதியாய் அணியும் இந்த வகை ஆண்கள் உண்மையில் இந்த நாகரிகத்தின் தோற்றத்துக்கான இடம் அறிந்தால் இனி என்ன  செய்வார்களோ  தெரியவில்லை. அண்மையில் நண்பர் ஒருவருடன் இதை பற்றி பேசிக்கொண்டிருந்த போது இவர்களை பற்றி அவர் சொன்ன விடயம் இதுகள் எல்லாம் ஜெயிலுக்கு போய் வந்ததுகள் என்றார். நான் ஏன் என கேட்க இல்லை லண்டன் ஜெயிலில தான் உள்ள போனா இடுப்பு பெல்ட் கொடுக்க மாட்டார்கள். அப்போ இப்பிடித்தான் கழன்று விழ விழ இழுத்து இழுத்து போட்டிருப்பார்கள. அந்த பாதிப்பு தான் இது என்று.......(உடனே அந்த நண்பர் ஜெயிலுக்கு போய் வந்தவரா என்று நீங்கள் கேட்டா நான் பொறுப்பில்லை) 

ஆனால் அவர் சொன்னதையும் மறுக்க முடியாது. வெள்ளைக்காரன் கழுத்துக்கால குளிர் உள்ள போகக்கூடாது என்று டை(கழுத்துப்பட்டி) கட்டினதா பார்த்து கடும் வெயிலிலும் டை கட்டி போகும் மக்கள் எல்லோ நாங்கள். 

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts