உலக கிண்ண இறுதிப்போட்டி வந்துவிட்டது. நாளை நடக்க இருக்கும் இந்த மெகா யுத்தத்துக்கு எல்லோரும் தயார். அணியின் பலம் பலவீனம் என எல்லாம் பலரால் பிரித்து மேயப்பட்டுள்ள நிலையில் நாளை மோத இருக்கும் அணிகளில் இந்திய அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. முரளி நாளை விளையாடுவார் என பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கும் நிலையில் அவர் எத்தனை ஓவர்கள் வீசுவார் என்பது கேள்வியே....
இந்தியாவில் நடப்பது இந்தியாக்கு பலம் எனிலும் இலங்கை இந்திய இதயங்களை ஓடித்தாலும் ஆச்சரியமில்லை. சச்சின்-முரளி ஜெயிக்கப்போவது யார்?
இந்தியாவில் பிறந்து லண்டனில் வாழும் ஒரு நபரை இன்று என்னால் சந்திக்க முடிந்தது. பிறப்பால் இந்தியாவின் சிங் (உடனே நம்ம மன்மோகன் சிங் என நினைக்கப்படாது) அவரிடம் இறுதிப்போட்டி பற்றி விசாரித்த போது இரண்டில் யார் வென்றாலும் சரியாம் இருந்தாலும் இலங்கை வென்றால் தனக்கு மிகப்பெரிய சந்தோசம் என்றும் சொன்னார். நான் ஏன் என கேட்டேன் I like to see Sri Lankan as a Champion என்றார். இதுதான் சிங்கின் பாசமோ? எல்லா சிங்கும் நல்லா சிங்கி அடிக்கிரான்கப்பா.
இதை நீங்கள் எப்படி எடுப்பீர்களோ தெரியாது. ஆனால் விளையாட்டில் இந்த நாட்டுக்கு தான் சப்போர்ட் பண்ணனும் என்ற கொள்கையில் பண்ண முடியாது. யாரை பிடிக்கிறதோ அவர்களை சப்போர்ட் பண்ணுவதில் என்ன தவறு. சூ மேக்கரை பிடித்தால் அவர் இலங்கையில் பிறக்க கூடாதோ. அல்லது சானியாவின் ஆட்டத்தை பாகிஸ்தான் ரசிகர் ரசிக்கக்கூடாதோ. விளையாட்டில் விளையாடாமல் ரசிப்போம். நாளை நிச்சயம் இரண்டு அணிகளும் ரசனைக்கு விருந்தளிக்கும். ஆனால் என்னங்க அண்ணனும் தம்பியும் அடிக்கடி மோதியதை பார்த்து சலித்துப்போச்சுதுங்க.