Wednesday, April 15, 2009

எம். பி. ஆகின்றார் சீமான்! சூடு பிடிக்கும் அரசியல் களம்.


தமிழ்த் திரை உலகின் இயக்குனர் சீமான் மிகப்பெரிய, மிகச் சிறந்த திரைப்படங்களை தந்தவர். புரட்சி சிந்தனை, மனதில் பட்டத்தை தைரியமாக சொல்லும் பக்குவம் என்பன கொண்டவர். இப்படிப்பட்டவர்களுக்கு சோதனைகள் வருவது இயற்கை தானே.

தான் பிறந்த தமிழினத்துக்காக குரல்கொடுத்தவரை கைது செய்ய போலீசார் பல முயற்சி எடுத்தும் பலனின்றி தானாகவே அவர்களிடம் சென்று சட்டத்துக்கு அடிபணிந்த மறத்தமிழனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். எத்தனையோ பேர் முயன்றும் இன்னும் வெளியே கொண்டுவரமுடியாத நிலையில் இன்னும் சிலர் இதே சட்டத்தில் கைது செய்யப்படுவதாலும் இவரது சிறை வாசத்துக்கான முடிவு எப்போது என தெரியாமலே இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் ஒன்றாக கூடி ஆலோசனைகளை நடாத்தி சில முக்கிய முடிவுகளை எடுத்தனர். அரசியலில் பழம் திண்டு கொட்டை போடப்போகும் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, ஆகியோரில் ஒருவர் நிற்கும் ஒரு தொகுதியில் சீமானை நிறுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டிருக்காம். இப்போது மிகவும் பிரபலமாக இருக்கும் சீமானை நிறுத்தினால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேரடியாக தேர்தல் களத்தில் தாமே இறங்கி வேலை செய்யப்போவதாகவும் அறிவித்திருக்கின்றார்கள். அத்துடன் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக நிற்பவர்களை சந்தித்து சீமானையே பொது வேட்பாளராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விட இருக்கின்றனராம்.

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். மீண்டும் ஒருவர் தமிழ் சினிமாவிலிருந்து அரசியலுக்குள் வரப்போகின்றார். ஜெயிப்பாரா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் ஒரு தமிழன், அதிலும் நெஞ்சில் உரமுடைய உண்மைத்தமிழன் வருகையில் மக்கள் நிச்சயம் ஏற்பார்கள். எனவே இயக்குனர் சீமான் எம்.பி. சீமானாக மாறும் நாள் தொலைவில் இல்லை.
Share:

20 கருத்துரைகள்:

Akkansha said...

Good Idea. Seeman will win.

ராஜ நடராஜன் said...

ஐயா!பதிவரே!ஆமா,வந்தேன்ங்கிற மாதிரியெல்லாம் அதிகம் பின்னூட்டம் போடறதில்லை நான்.என்னமோ சொல்ல வந்தேன் அதுக்குள்ள உங்க பதிவு மக்கர் பண்ணிடுச்சு.

ttpian said...

சீமான் எங்கு நின்றாலும்,நான் அவருக்காக 15 நாட்கள் தேர்டல் வேலை பார்ப்பேன்!
கோ.பதி
காரைக்கால்

chumma said...

தமிழ்த் திரை உலகின் இயக்குனர் சீமான் மிகப்பெரிய, மிகச் சிறந்த திரைப்படங்களை தந்தவர். புரட்சி சிந்தனை, மனதில் பட்டத்தை தைரியமாக சொல்லும் பக்குவம் என்பன கொண்டவர்

// konjam jasthia erukupa .....///

ராஜ நடராஜன் said...

சுய பரிசோதனை எழுத்தை தூக்கிப் போடுங்கள் அன்பரே!பின்னூட்டம் மூணாச்சு என்னாச்சுன்னே தெரியல போங்க.

ராஜ நடராஜன் said...

சுயநலத்துக்குன்னு அரசியலுக்கு நிறைய பேர் வரும்போது அடுத்தவன் நலத்துக்கு குரல் கொடுத்த சீமான் அரசியலுக்கு வருவது வரவேற்க வேண்டியதே.

chumma said...

eppa erukura arasiyal sattatha vachu anth SE vantalum nammalum onnum panna mudiyathu thozha!

shathiesh said...

நீங்கள் சொல்ல வந்ததை தைரியமாக சொல்லுங்கள் ராஜ நடராஜன் அவர்களே உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

புதிய கோணங்கி ! said...

//தமிழ்த் திரை உலகின் இயக்குனர் சீமான் மிகப்பெரிய, மிகச் சிறந்த திரைப்படங்களை தந்தவர். புரட்சி சிந்தனை, மனதில் பட்டத்தை தைரியமாக சொல்லும் பக்குவம்//

//தான் பிறந்த தமிழினத்துக்காக குரல்கொடுத்தவரை கைது செய்ய போலீசார் பல முயற்சி எடுத்தும் பலனின்றி தானாகவே அவர்களிடம் சென்று சட்டத்துக்கு அடிபணிந்த மறத்தமிழனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்//

ஹி ஹி ஹி!
ஆனாலும் நீங்க ரொம்ப ஓவருங்கண்ணா!

koothanalluran said...

S.S சந்திரனும் தேர்தலில் நிற்கிறார். அவரும் சினிமாக்காரார்தேன். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை

Bleachingpowder said...

//சீமான் மிகப்பெரிய, மிகச் சிறந்த திரைப்படங்களை தந்தவர்.//

அப்படியா, கொஞ்சம் அந்த படத்தோட பேரை சொன்னீங்கனா நல்லாயிருக்கும்.

என் சேலை அவிழ்ந்துவிடும் யோகம் இன்னைக்குனு ஒரு பாட்டு வருமே, பாஞ்சாலகுறிச்சி படத்துல அது கூட இவரோடது தான்

Nellaitamil.com said...

ஒருமுறை வாருங்கள். உங்கள் உள்ளம் கவர்ந்த புக்மார்க் தளம்.

குரூப் அமைப்பதற்கான வசதி...
வாரந்திர சிறந்த இடுகைகள் தானியங்கி முறையில் தேர்வு....
ஓட்டளிப்பு பட்டை...
இன்ன பிற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன்....

தளமுகவரி

nellaitamil

Govindarajan said...

Avar edutha ore oru nalla padam "Thambi", matradhu ellame out....Infact he took a movie with karthik and vinitha which was the worst movied in Tamil film Industry. So don't hype a person just because u liked it.

Govindarajan said...

He took a worst tamil movie with Karthik and Vineetha, where as Vineetha has been raped in a market in front of 100's of peoples.

தமிழ்த் திரை உலகின் இயக்குனர் சீமான் மிகப்பெரிய, மிகச் சிறந்த திரைப்படங்களை தந்தவர்

Ha Ha Ha.....

KathaiKalam said...

சீமான் எங்கு நின்றாலும்,நான் அவருக்காக 15 நாட்கள் தேர்டல் வேலை பார்ப்பேன்!

Elayaraja
Cuddalore...

ஜுர்கேன் க்ருகேர் said...

wish him all the best!

m bala said...

இயக்குனர் சீமான் எம்.பி. சீமானாக மாறுதல் நல்லது தன்.

Guduvancheri said...

Great joke. 1,00,000 of people alive to talk like Seeman when they get mike. I also can talk like Seeman if I get a stage and mike. So politics is different.

மஞ்சூர் ராசா said...

அவர் இயக்கிய படங்களில் தம்பி ஒன்றுதான் கொஞ்சம் தேறும்.
இதற்கு போய் இவ்வளவு பில்டப் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலெ!

கூடுவாஞ்சேரி சொன்ன மாதிரி மைக் கிடைச்சா பலரும் சீமான் போலதான் பேசுவார்கள்.

Anonymous said...

நான் தமிலிஷ் தளத்தில் இதுவரை முப்பது வாக்குகளை பெற்றுக்கொள்ள காரணமாக இருந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் என் வலைப்பூவுக்கு வந்து செல்லும் என் ப்ரியமானவர்களுக்கும் பின்னூட்டம் தந்து என்னை ஊக்கப்படுத்துபவர்களுக்கும் என் பதிவுகளுக்கு வாக்குபோடாதவர்களுக்கும் ஒரு சிறிய சாதனையை தமிலிஷ் இல் நான் செய்ய உதவிய அனைவருக்கும் என் நன்றிகள். தொடர்ச்சியாக நீங்கள் தரும் ஆதரவு நிச்சயம் என்னை வளப்படுத்தி மென்மேலும் நல்ல பதிவுகளை தர என்னை தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. எழுதும் பதிவுகளுக்கு தகுந்த வரவேற்ப்பு கிடைக்காத நேரத்தில் வருந்தும் மனம் உங்களின் இப்படியான வாக்குகள் மற்றும் தொடர்ந்து என்தளத்தில் தடம்பதித்து செல்வதால் இல்லாமல் சென்றுவிடுகின்றது. மிகக் குறுகியகாலத்தில் எனக்கு நீங்கள் தரும் ஆதரவுக்கு என்றென்றும் என் நன்றிகள்.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Get Some Cool Stuff
in your inbox

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox