இளைய தளபதியாக ஒரு சில வருடங்களுக்கு முன் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்த விஜய் இன்று இளைய தலைவலியாகவும் சர்தாஜி ஜோக்கர் போலவும் வலம் வந்து கொண்டிருக்கின்றார். காரணம் அந்த மூன்று படங்களும் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மூன்று படங்களும் விஜய் ரசிகர்களுக்கே பிடிக்காத படங்களாக மாற சந்தில் சிந்து பாடும் கூட்டத்துக்கு அது வாய்ப்பாகி போனது. நம்மில் எத்தனையோ பதிவர்கள் தங்கள் தளத்துக்கு ஹிட்ஸ் கூட்டவும் பிரபல்யபபடுத்தவும் விஜய் என்னும் பெயர் ஆணிவேராகிப்போனது. விஜயை தாக்கினால் பதிவு பிரபலம் என்ற கணக்கில் இன்றைய நிலை. இதெல்லாம் கில்லி,சிவகாசி வரும் போது இல்லையே. ஆனால் இப்போது அந்த திரைப்படங்களையும் போட்டு தாக்குகின்றனர் சில பதிவர்கள். ஒன்று மட்டும் புரியவில்லை அன்று வெற்றி பெற்ற படங்கள் என சொல்லப்பட்ட இந்த படங்கள் இன்று ஏன் உங்களுக்கு மொக்கையாகின.
சரி என்ன செய்வது இதை பற்றி எழுதப்போனால் எனக்கு தாக்குதல் மட்டுமே மிஞ்சும் வேறு பலனில்லை. ஆனால் வேட்டைக்காரனை புறக்கணிப்போம், வேட்டைக்காரன் தோல்விப்படமாகும் என சொல்லிவருபவர்கள் இதே வேட்டைக்காரன் வெற்றி பெற்றுவிட்டால் என்ன நடக்கும் என சிந்தித்ததில்லை. எல்லாத் தடைகளையும் தாண்டி வேட்டைக்காரன் வசூல் வேட்டை ஆடிவிட்டால்?
1.மூன்று படங்களினாலும் கோமாளியாக்கப்பட்ட விஜய் பழையபடி நம்பர் வன் ஹீரோ ஆகிவிடுவார். மீண்டும் நம் பதிவர்கள் வேறு ஒரு நடிகரை தேடிப்பிடித்து வறுக்க ஆரம்பிப்பர். விஜய் புகழ் பாடும் பதிவுகள் அதிகம் வரும்.
2.விஜயின் ஐம்பதாவது படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரிப்பதுடன் அந்த படம் இன்னும் பல வசூல் சாதனைகளை செய்யும்.
3.பழைய பட பெயர்களை பாவிக்கும் பழக்கம் இன்னும் அதிகரிக்கும்.
4.தமிழ் படங்களை தவிர்த்து ஜேம்ஸ் கமரூனின் அவதார் போன்ற படங்களை பார்க்கும் உயர் ரசனைக்காரர்கள் கூட தமிழ் படங்கள் மேல் காதல் கொள்வர்.(தமிழ் படங்களை கேவலமாக விமர்சித்து வேறு மொழிப்படங்களை நன்றென தூக்கிப்பிடிக்கும் தமிழர்கள்.)
5.இயக்குனர் பாபு சிவனுக்கு வேறு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம்.
6.சண் பிக்செர்சுக்கே தொடர்ந்து விஜய் தன் படங்களை கொடுக்கலாம்.(கொடுத்த அடியை பார்த்தால் இந்த வாய்ப்பு குறைவே.)
7.விஜய் அன்டனி இசை அமைத்தால் வெற்றி என்ற மாயை உருவாவதுடன் விஜய்-விஜய் அன்டனி கூட்டணி தொடரலாம்.(இசை-வித்தியாசாகர் கூட்டணி கொஞ்சகாலம் மிரட்டியது போல்.)
8.ஏற்கனவே படம் பார்க்காமல் விமர்சனம் எழுதும் ஒரு சில பதிவர்கள்(தொப்பி பொருந்தியவர்கள் போடுங்கள்) இனி வாழ்நாளில் அந்த தீர்கதரிசன தவறை செய்யாமல் போகலாம்.
9.இதே பட கூட்டணி மீண்டும் இணையலாம்.
10.விஜய்-த்ரிஷா போல் இந்த ஜோடியும் அடிக்கடி இணையலாம்.( விஜய்-அனுஷ்கா)
11.விஜயை தாக்கி வரும் நகைச்சுவைகள் திசை மாறலாம்.
12.விஜய் மூலம் ஹிட்ஸ் தேடிய பல பதிவர்களின் பதிவுகள் ஹிட் ஆகாமல் போகலாம்.
13.நம் லோஷன் அண்ணா விஜய் ரசிகனாக மாறலாம்.(ஹி ஹி ஹி)
14.நான் இந்த பதிவு போடா காரணமாக இருந்த ஹிஷாம் அண்ணா வேட்டைக்காரன் சொதப்பினால் என போட்ட பதிவினைப்போல சுராவிற்கு போடாமல் தப்பிக்கலாம்.
15.மூக்குடைபட்ட பல பதிவர்கள் வைத்தியசாலியில் அனுமதிக்கப்படலாம்.
16.படத்தை புறக்கணிப்போம் என சொல்லிய சில தமிழ் பற்றாளர்கள்?????? இதை நீங்களே சொல்லுங்கள் அவர்கள் கதி என்னாகும்.
17.இதை விட கொடுமை ஒன்றும் நடக்கும் தொடர்ந்து இதே போன்ற படங்களில் விஜய் நடிக்கலாம்.
23 கருத்துரைகள்:
\\6.சண் பிக்செர்சுக்கே தொடர்ந்து விஜய் தன் படங்களை கொடுக்கலாம்.(கொடுத்த அடியை பார்த்தால் இந்த வாய்ப்பு குறைவே.)\\\
சுறாவையும் ஏற்கனவே சன்பிக்ஸர்ஸ் வாங்கி விட்டதாக கேள்வி.
வென்று விடுமா..?
தோற்றால் பிரசுரிக்கவென ஏற்கனவே எழுதிய பதிவு Draft இல் இருக்கு...
வெல்லுமெனச் சொல்லுறியள்... அதற்கும் ஒன்று எழுதி Draft இல் வைத்திருப்போம். ஆனால், என்னத்தை எழுதுறது...?
லோஷன் அண்ணா, கவனிக்க:
மூக்குடைபட்ட பல பதிவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படலாம்.
ஹாஹா காமடி. வேட்டைகாரன் வெல்வதா?
பலர் வேட்டைக்காரனுக்கு குருவியின் விமர்சனத்தையே மீள்பதிவாக இடத் திட்டமாம். அதுபற்றி ஏதாவது தெரியுமா உங்களுக்கு?
//நம் லோஷன் அண்ணா விஜய் ரசிகனாக மாறலாம்.(ஹி ஹி ஹி)//
அப்படி நடக்க விட்டுடுவமா? நடக்காது
//நான் இந்த பதிவு போடா காரணமாக இருந்த ஹிஷாம் அண்ணா வேட்டைக்காரன் சொதப்பினால் என போட்ட பதிவினைப்போல சுராவிற்கு போடாமல் தப்பிக்கலாம்//
அவர் பதிவு போடுறதே இப்படி எப்பவாவதுதான். அதுக்கும் ஆப்பு வைக்கப்பாக்ககுறீங்களே?
//மூக்குடைபட்ட பல பதிவர்கள் வைத்தியசாலியில் அனுமதிக்கப்படலாம்.//
லோஷன் அண்ணாவுக்கு எச்சரிக்கையா?
//இதை விட கொடுமை ஒன்றும் நடக்கும் தொடர்ந்து இதே போன்ற படங்களில் விஜய் நடிக்கலாம்//
இதுக்காகவாவது படம் தோத்துடணும்பா, தாங்காது என் காது :P
ஹா ஹா ஹா.. நகைச்சுவைப் பதிவு நன்றாக இருந்தது..
17 விஷயமுமே வயிறு குலுங்க சிரிக்க வைத்தன..
ஆனால் 17வது உங்களுக்கே விளங்கிட்டுதே.. ;)
சதீஷ், உம்மைப் போன்றோரை ஆதிரையின் பதிவில் வந்து பின்னூட்டமிட்ட பாரதி,அற்புதன் மாதிரி ஆக்கள் கவனிக்கிறாங்க இல்லையே.. ;)(ஒரு பொதுநலம் தான்)
ஹா ஹா...........
நடக்கட்டும் நடக்கட்டும்....
படம் பாத்திற்று நல்லா இருந்தாச் சொல்லுங்கோ....
//மூக்குடைபட்ட பல பதிவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படலாம்//
நானில்லை...
நான் விஜயை எதிர்த்தும் எழுதிறேல, ஆதரிச்சும் எழுதிறேல....
எண்டாலும் வேட்டைக்காரன் வெல்லோணும் எண்டு இப்ப நினைக்கிறன்... எல்லாம் உந்த எதிர்ப்புகளால தான்...
நிக்காம ஓடு. ஓடு.. ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...வாறன் பாரு வேட்டைக்காரன்..Great EScapeeeeeeeeeeeeeeeeeeeeeeee
விஜயை தாக்கினால் பதிவு பிரபலம் என்ற கணக்கில் இன்றைய நிலை.
சூப்பரண்ணோ..........இவங்கள் எல்லாம் பதிவுலக இடத்தை தக்க வைக்க மட்டும் விஜய் தேவையாங்கண்ணோ.......சதீஸ் கண்டிப்பா வேட்டைக்காரன் வெல்லப்போகுது....பல பேர் மூக்குடைவது உறுதி......
இதையும் படியுங்கள். இது உங்கள் பதிவுக்கு எதிர்ப்பதிவு அல்ல.
வேட்டைக்காரன் தோற்றுவிட்டால்?
ஏதோ படத்தை பாத்துட்டு சங்கீதா இவர டைவோஸ் பண்ணாம இரந்தா சரி..
சதீஸ் உங்களிடம் இருந்து இப்படியான பதிவை எதிர்பார்க்கவில்லை. ஒரு சிலருக்காக அனைத்துப் பதிவர்களையும் வாரியது பிழை. இல்லை இதுவும் விஜயை நக்கல் அடிக்க ஒரு நகைச்சுவைப் பதிவு என்றால் இந்தப் பதிவு நல்ல கலக்கல் பதிவு
ஒரு வேளை தோற்று விட்டால்..
1) சதீஸ் போன்றவர்கள் விஜயின் அடுத்த படத்திற்கு இப்படி பதிவு எழுதிக் கொண்டிருப்பர்.
//ஏற்கனவே படம் பார்க்காமல் விமர்சனம் எழுதும் ஒரு சில பதிவர்கள்(தொப்பி பொருந்தியவர்கள் போடுங்கள்) இனி வாழ்நாளில் அந்த தீர்கதரிசன தவறை செய்யாமல் போகலாம்.//
தொப்பி பொருந்தியவர்கள் போடுங்கள
//நம் லோஷன் அண்ணா விஜய் ரசிகனாக மாறலாம்.(ஹி ஹி ஹி)//
ஏன் இந்தக் கொலை வெறி… அவர் பாட்டுக்கு பதிவு எழுதின கையோட படத்துக்கும் எழுதியிருப்பார்.. இன்று முன்னிரவு பதிவாக வந்தாலும் வரும்.
இன்னும் நீ நம்புறீயா?
///எதுவா இருப்பினும் இன்று மாலை கொழும்பில்(யாருக்காக புலம்ப்யர் தமிழர் புறக்கணிப்போம் என்றனரோ அதே நாட்டில்) சினி சிட்டியில் வேட்டைக்காரன் திரையிடப்பட இருக்கிறதாம். என்னால் இன்று முடியாது பார்ப்போம் நாளை. வேட்டைக்காரனின் வேட்டை ஆரம்பமாகப்போகின்றது.///
நீங்கள் இக்கருத்தின் மூலம் எம் உணர்வுகளை காயப்படுத்துகிறீர்கள்..
நீங்கள் ஒரு விஜய் ரசிகனாக இருப்பதில் தவறு இல்லை,, அது உங்களின் உரிமை,,
அதற்கு முதல் ஓர் தமிழனாக உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள்,, அல்லது எங்களின் சாத்வீக போராட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள்,,,
ஆதரவு வழங்காவிடினும் பரவாஜில்லை,, எம்மை காயப்படுத்தாதீர்கள்,,
ஊடகத்துறையை சேர்ந்த நீங்களே இவ்வாறு செயற்பட்டால்,, அது நியாயமா??
ஹ ஹ ஹ சுமார் மூஞ்சி குமார உலக அழகி ஐஸ்வர்யாராய் வந்து ஐ லவ் யு சொல்றது எப்டி சாத்தியம் இல்லையோ அது மாதிரி நம்ம விஜய் படம் திரை அரங்கில் ஒருவாரம் தாண்டி ஓடுவதும் சாத்தியம் இல்லை ...... விஜய் ரசிகரான நீங்களே இப்படி விஜய கிண்டல் பண்ணா தரமான சினிமா பாக்கறவன் எல்லாம் கிண்டல் பண்ணாமலா இருப்பான் ...
thirunthi nadangada allathu adangungada.
vaikkirom unga ellorukkum aappu
http://vennirairavugal.blogspot.com/2009/12/blog-post_17.html
உங்க போராடற குணம் எனக்கு ரெம்ப பிடுசிருக்கு பாஸு ....
PLEASE READ IDLYVADAI & CABLE SANKAR REVIEWS.
VIAJY IS GETTING ANOTHER AAPPU.
VETTAIKKAARAN FLOP.
///எதுவா இருப்பினும் இன்று மாலை கொழும்பில்(யாருக்காக புலம்ப்யர் தமிழர் புறக்கணிப்போம் என்றனரோ அதே நாட்டில்) சினி சிட்டியில் வேட்டைக்காரன் திரையிடப்பட இருக்கிறதாம்////
கொஞ்சம் சிந்திக்க வைக்கின்றது...
வேட்டைகாரனைப் பற்றிய எனது பதிவு.
கண்டிப்பாக படிக்கவும்.உங்களுக்கு பிடிக்கும்.
http://nenjinadiyil.blogspot.com/2009/12/blog-post_21.html
வட போச்சே.... நாலாவது ஊசி போன வடை .... விஜய்யிடம் இருந்து
Post a Comment