Sunday, November 22, 2009

வானலையில் வெற்றிகரமாக ஒரு வருடம்.

காலம் சிலரை எங்கேயோ கொண்டு போய் விட்டு விடும் இல்லாவிட்டால் வடமராட்சியில் பிறந்து வரணியில் தவழ்ந்து இன்று வெற்றியோடு நான் தவழ்வதை என்னவென்று சொல்வது. சரி விசயத்துக்கு வா என்பது புரிகிறது. வெற்றி வானொலியில் வானலை வழியே உங்களை நான் சந்தித்து இன்றுடன் ஒருவருடமாகிவிட்டது. அதற்காக சில நினைவு மீட்டல்கள் தான் இந்த பதிவு.

நான் கொழும்பில் ஒரு விடுதியில் இருந்த காலம் என் கைத்தொலைபேசியில் எல்லா வானொலிகளையும் கேட்பேன். ஒருநாள் அலைவரிசைகளை செட் செய்யும் பொது தொடர் இசையாக பாடல்கள் ஒலித்த ஒரு அலைவரிசை தட்டுப்பட்டது. பாடல்கள் நன்றாக இருக்கே என கேட்க ஆரம்பித்தேன். சில நாட்கள் செல்ல கற்றது கையளவு என்னும் நிகழ்ச்சியில் நானும் என் கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன். அத்துடன் ஒரு சொல் ஒரு கானம் நிகழ்ச்சியிலும் பங்குபற்றியுள்ளேன். அதை தொடர்ந்து காற்றின் சிறகுகள் நிகழ்ச்சிதான் என்னை மாற்றிப்போட்டது எனலாம். எனக்கும் சுபாஷ் அண்ணாவிற்கும் இடையில் சிறு மோதலோடு தான் பேச்சு ஆரம்பமானது, அதன் பின் என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் நபர் அவர் என தெரியாமல். மோதல் எப்படி காதலாகுமோ அதேபோல எங்களுக்குள்ளும் மோதல் இல்லாமல் போய் நல்ல நட்பு சகோதரத்துவம் ஏற்பட்டது.

இந்த நேரம் தான் எனக்கு வானொலி ஆசை கொஞ்சம் எட்டிப்பார்த்தது. ஒரு இணையத்தில் இயங்கும் பிரபல வானொலியில் நேர்முகத்தேர்வுக்காக போனேன். நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டாலும் அந்த நிலையம் அமைந்துள்ள இடம் ரொம்ப தூரமாக அமைந்தது என் வீட்டுக்காரருக்கு கொஞ்சம் விருப்பமின்மையை ஏற்படுத்தியது. இதை நான் சுபாஷ் அண்ணாவுடன் பகிர்ந்து கொள்ள அவர் சொன்ன வார்த்தை உனக்கு வெற்றியில் ஒரு நேர்முகத்தேர்விற்கு வாய்ப்பினை உண்டு பண்ணிவிடுகின்றேன் ஆனால் மிகுதி உன் கையில் உன் திறமையில் என்றார். நானும் சரி என்று விட்டேன். இந்த இடத்தில் என் பெற்றோருக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம் நான் என்ன செய்தாலும் எனக்கு முழு சுதந்திரம் கொடுப்பவர்கள் இவர்கள். இல்லாவிட்டால் வாழ்க்கையில் விழுந்து போன என்ன தாங்கிப்பிடித்து எழுப்பிவிட்டிருப்பார்களா?


நேர்முகத்தேர்வுக்கான நாளும் வந்தது நான் என் பெற்றோருடனும் ஒரு அண்ணாவுடனும் வெற்றி அலுவலகத்துக்கு போனேன். இதில் இன்னொரு முக்கியமான விடயம் இதுவரை எனக்கு சுபாஷ் அண்ணாவின் முகமே தெரியாது. தொலைபேசியில் பேசியது மாத்திரமே. அலுவலகத்தில் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு காத்திருக்க ஒரு பெண் வந்து என்னை அழைத்து போனார். அவர்தான் பூஜா அக்கா. நேரடியா Recording அறைக்கு என்னை அழைத்து போக அங்கே ஒருவர் இருந்தார். எனக்கு அவரையும் யாரென தெரியாது. அந்த அறைக்குள் இருந்த கண்ணாடியாலான இன்னொரு அறைக்குள் ஒலிவாங்கி இருக்கும் இடத்துக்கு என்னை போகச் சொன்ன அந்த நபர் தானும் உள்ளே வந்து ஒலிவாங்கியை எனக்கு சரி செய்துவிடும் போது உங்கள் பெயர் என கேட்க விமல் என்றார். உடனே நான் நீங்கள் தானே எங்க பாடசாலையில் படித்தீர்கள் என சொல்ல அவரும் ஆமாம் என சொல்லிவிட்டு என் குரலை பதிவு செய்யத் தொடங்கினார்.

செய்தி அறிக்கையை நான் வாசித்துக்கொண்டிருந்த போது லோஷன் அண்ணா உள்ளே வந்து நிறுத்த சொல்லிவிட்டு ஒரு நிகழ்ச்சி செய்ய சொன்னார். நானும் காற்றின் சிறகுகள் செய்து காட்ட Fast ஆக ஒரு நிகழ்ச்சி செய்யும் படி சொல்ல பகல் பந்தி செய்து காட்டினேன். வெளியே வரச்சொல்லி இப்போ சின்ன வயது தானே இன்னும் காத்திருக்கலாமே என்றார். எனக்கும் பயமாக இருக்க தாங்கள் மீண்டும் அழைக்கிறோம் இப்போ போகலாம் என்றார். நானும் வீட்டுக்கு வந்தாலும் சுபாஷ் அண்ணாவை நையப்புடைந்து கொண்டே இருந்தேன். என் குடைச்சலகளுக்கு கோபப்படாமல் பதில் சொல்லியே அவர் களைத்திருப்பார்.(அதற்கு பிறகு அண்மையில் தான் அன்றைய தினம் என்னை எடுப்பதா இல்லையா என்ற விடயத்தில் என்ன முடிவு என்ன பேசினார்கள் என்பதை விமல் அண்ணா மூலம் அறிந்தேன். விமல் அண்ணா உங்களுக்கு என் நன்றிகள். அத்துடன் நீங்கள் நடுநிலையாக நடந்தது மகிழ்ச்சியாக உள்ளது.)

அதன் பின் இன்னும் மூன்று முறை நேர்முகத்தேர்வு எல்லாம் முடிந்து நவம்பர் மாதம் மூன்றாம் திகதி அலுவலகத்தில் நானும் ஒரு ஊழியனாய் இணைந்தேன். ஆரம்பகால பயிற்சிகள் ஆரம்பித்தன. அப்போது எனக்கு இரண்டு பேரைக்கண்டால் பயம் ஒன்று விமல் அண்ணா இன்னொருவர் சந்துரு அண்ணா இரண்டு பேரும் ஏதாவது கேட்டு அன்று ஒரு ரணகப்படுத்தாமல் விடமாட்டார்கள். இன்று விமல் அண்ணா நல்ல அண்ணாவாக நல்லா நண்பனாக மாறினாலும் இன்னும் எனக்குள் அந்த பயம் போகவில்லை. ஆனால் இப்போது தான் உணர்ந்தேன் அது பயம் மட்டுமலல மரியாதையும் என்று.( ஆனால் நம் பாடசாலைக் காலத்தில் விமல் அண்ணா எங்களுக்கு சீனியர் அதை நினைத்தால் இன்றும் நடுங்கும்.) சந்துரு அண்ணாவும் தன் கண்டிப்பை குறைத்தாலும் இன்று நல்ல நண்பனாக அதேநேரம் என் தயாரிப்பு பணிகளில் நல்ல உதவியாக இருக்கின்றார்.

அடுத்து ஹிஷாம் அண்ணா செய்தி வாசிப்பதில் கவனிக்கவேண்டிய விடயங்களை முதலில் சொல்லித்தந்தவர். எங்கள் உதவி முகாமையாளர். பெரிதாக கோபப்படமாட்டார் ஆனால் வேலை சரியாக இருக்கவேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர். இப்போது எங்கள் மாலை நேரத்து வேலை நேர உற்ற நண்பனாக. அடுத்து பிரதீப் அண்ணா, ஆரம்பத்தில் நான் ஒருநாள் இவரிடம் வாங்கிய திட்டு தான் இன்று என்னை பக்குவப்படுத்தியுள்ளது. நன்றி அண்ணா. அதேபோல சகலவிடயங்களையும் சொல்லித்தருவதில் இவருக்கு நிகர் இவரே. ஆரம்பத்தில் எனக்கு பாடல்கள் பற்றிய அறிவை வளர்க்க பெரிதாக உதவியவர் இன்றும் என் பாடல்தெரிவுகளுக்கு ஆதாரமாக விளங்குபவர். செந்தூரன் அண்ணாவுடன் பெரிதாக பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.ஆனால் அவரின் அறிவுரை இன்றும் பயன்படுகின்றது. தான் நாடு விட்டு போகமுதலே எங்கள் கனவில் முதல் தீபத்தை ஏற்றிவைக்கும் வண்ணம் தன் அனுபவத்தை பகிர்ந்து போன அன்பு அண்ணா. இன்றும் வாழ்த்தி இருக்கின்றார். நன்றி அண்ணா.
.

அடுத்து பூஜா அக்கா, நேர்முகத்தேர்வுக்கு சென்ற நேரம் என்னை அழைத்து சென்றவர். இவரின் பகல் பந்தி எனக்கு பல அனுபவங்களை பெற்றுத்தந்த களம். அனேகமாக பகல் பந்தி நிகழ்ச்சி செய்யும் போது அதை பார்த்து பார்த்து நல்ல விடயங்களை கற்றுக்கொண்டேன். இந்த நேரம் தன்னால் முடிந்த அளவு எனக்கு நிகழ்ச்சி பற்றி சொல்லி கொடுத்த அக்காவிற்கு நன்றிகள். அடுத்தவர் வைதேகி அக்கா, இப்போது என் குறைகளை சொல்லி திருத்துவது மட்டுமில்லாமல் உள்ளதை உள்ளபடி சொல்லி விடுவார். ஆரம்பகாலத்தில் என் செய்திகளை அவர் தந்தை சர்வானந்தா அவர்கள் கேட்டு (பிரபல வானொலி அறிவிப்பாளர்.) நன்றாக இருக்கு நல்லா வருவான் என சொல்லி எனக்குள் நம்பிக்கை அளித்தவர்.

சுபாஷ் அண்ணா எப்போதும் மாலையில் வருவார் ஆனால் என் தயாரிப்பு வேலைகள் செய்ய பிள்ளையார் சுழி போட்டவர். முகம் தெரியாமலே உதவியவர் முகத்துக்கு நேரே நல்ல சகோதரனாக மாறிவிட்டார். அடுத்து லோஷன் அண்ணா. என் ஐந்தாம் ஆண்டில் இருந்து நான் தொடர்ந்து வந்த ஒரு சாதனையாளர். வானொலி அறிவிப்புத் துறையில் என் மானசீக குரு. இதை வெறும் பேச்சுக்காக சொல்லவில்லை. எந்தளவிற்கு நான் விஜய் ரசிகன் என நீங்கள் எண்ணுகின்றீர்களோ அதேபோல இங்கே லோஷன் அண்ணாவின் ரசிகன்.(விஜயை ஒப்பிட காரணம் எல்லோரும் என்னை விஜயின் தீவிர ரசிகனென நன்கறிந்திருப்பதே.) இதனால் தானோ என்னவோ அவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு அவர் நிகழ்ச்சி செய்யும் நேரம் அவர் அருகே இருந்து ரசித்து பார்த்திருக்கின்றேன். அத்தனை விடயங்களையும் அறிந்து விட்டீர்களா என கேட்டு எங்கள் ஆவலை அதிகரிப்பதுடன் தெரியாத விடயங்களை தானே சொல்லித்தரும் நல்ல மனது. முகாமையாளர் என்னும் பதவியில் இருந்தாலும் பழகுவதில் அவர் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அண்ணாவே. (அண்ணா உங்களிடம் வேலை செய்த ஒருவர் எனக்கு சொன்னது லோஷன் அண்ணாவின் முகாமைத்துவத்தின் கீழ் வேலை செய்ய முடியாத யாரும் இன்னொருவரின் கீழ் வேலை செய்ய முடியாது என்று. இது என் அனுபவத்திலும் உண்மை.) இப்படி எத்தனையோ இனிமையான நினைவுகள் இருந்தாலும் இந்த பயிற்சிக்காலம் ஒரு முட்படுக்கையே.

நாங்கள் வெற்றியோடு இணைந்து அடுத்த வாரமே ஒரு சில வேண்டத்தகாத சம்பவங்கள் லோஷன் அண்ணாவிற்கு நடக்க உள்ளே வெளியே ஆட்டம் நடந்தேறியது. என்ன நடக்கப்போகின்றது என தெரியாமல் எல்லோரும் விழி பிதுங்கிய நேரம் ஹிஷாம் அண்ணா சொன்னார் நாளை சதீஷ்,வனிதா இருவரும் நிகழ்ச்சி செய்யப்போகின்றீர்கள் ஆனால் உங்கள் பெயர் சொல்லக்கூடாதென. மனதிலே பயமும் வலியும் கலந்திருக்க கடந்தவருடம் நவம்பர் இதே தினம் ஒரு சனிக்கிழமை என் கன்னிக்களம் சுபாஷ் அண்ணாவுடன் அரங்கேறியது நானாட நீயாடாவில். எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்ற பாடலோடு நானும் நதியாக ஓடத்தொடங்கினேன்.அந்த நிகழ்ச்சியில் நான் விட்ட பிழைகள் எல்லாவற்றையும் திருத்தி எனக்கு நல்ல வழி காட்டினார் அவர். இதில் இன்னொரு சந்தோசமும் சேர்ந்துகொண்டது அதுதான் லோஷன் அண்ணா உள்ளே வெளியே ஆட்டம் முடித்து வீட்டுக்கு வந்து விட்டார். எவர் எனக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டரோ அவருடன் என் பயணம் ஆரம்பமானது இரட்டிப்பு சந்தோசம். மறுநாள் விமல் அண்ணாவுடன் அமரகானங்கள் மற்றும் ஒரு சொல் ஒரு கானம். அன்று நான் நன்றாக மாட்டி கொண்டேன். ஆனால் இன்று அதுவும் படிப்பினையாக மாறி உதவி புரிகின்றது. தொடர்ந்து அனேகமாக எல்லோருடைய நிகழ்ச்சியிலும் இருந்து அவர்கள் நிகழ்ச்சி செய்யும் விதத்தை பார்த்து கற்றுக்கொண்டேன்


இப்படியே போகப் போக குறுகிய காலங்களிலேயே வாங்க நீங்க நிகழ்ச்சி வாய்ப்பும் கிடைத்தது. ஒருநாள் சுபாஷ் அண்ணா தன் வீட்டுக்கு கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு போக வேண்டும் என்பதற்காக என்மேல் முழு நம்பிக்கை வைத்து காற்றின் சிறகுகள் நிகழ்ச்சியை ஒப்படைத்தார்.

இதற்கு காரணமும் இல்லாமல் இல்லை, நானாட நீயாட நிகழ்ச்சியில் அடிக்கடி வெளியே சென்று என்னை தனியே செய்ய விட்டு எனக்கு பயத்தை போக்கி அனுபவத்தை வளர்த்தார். அந்த நம்பிக்கையை லோஷன் அண்ணா என்மேல் வைக்க முதல் முறையாக காற்றின் சிறகுகளில் தனி ஆவர்த்தனத்தை தொடங்கினேன். நிகழ்ச்சி முடிந்த உடன் சுபாஷ் அண்ணாவிற்கு அழைப்பெடுத்து சரியாக செய்தேனா என கேட்டேன் அவரும் குறைநிறைகளை சொல்லி மேலும் உதவினார். மறுநாள் காலை லோஷன் அண்ணாவிடம் இருந்து நேற்றைய நிகழ்ச்சி சூப்பர் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் என்ற எஸ்.எம்.எஸ் வந்தது இன்றும் என் தொலைபேசியில் இருக்கிறது அது. இன்று அதே நிகழ்ச்சி எனக்கு வழங்கப்பட்டிருப்பது இன்னொரு ஆச்சரியம். இதை அடுத்து பூஜா அக்காவும் என் மேல் தன் நம்பிக்கை வெளிப்பாட்டை பகல் பந்தியைக் கொடுத்து வெளிப்படுத்த நான் அதை பயன்படுத்திக்கொண்டேன். கிறிஸ்மஸ் தினத்தன்று நத்தார் தாத்தாவாக நான் செய்த அட்டகாசத்துக்கு கிடைத்த பாராட்டுகள் இன்னும் சந்தோஷ அலைகள்.

இப்படியே போகப்போக என்றென்றும் உங்கள் பிரியமானவனாக வலம் வர தொடங்கினேன். இந்த ஆண்டின் முதல் நாள் விடியலில் லோஷன் அண்ணா மூலம் நானும் வனிதாவும் உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டோம். அன்றும் இரவு காற்றின் சிறகுகளோடு வந்த நான் அதன் பின் இரு வாரங்கள் நெருப்பு காச்சலால் வைத்தியசாலையில் இருந்து மீண்டும் வந்தேன். அதன் பின் தொடர்ந்து குதூகல குவியல், இருபது புது இசை, வேகம் விவேகம், கற்றது கையளவு, அதிரடி புதிரடி, வினோத வியூகம், எங்கேயும் எப்போதும், சினிமாலை, விடியல் என பெரும்பாலான நிகழ்ச்சிகள் செய்து விட்டேன். இதில் சினிமாலை நிகழ்ச்சி லோஷன் அண்ணா செய்தது ஒருநாள் அவர் சொன்ன வார்த்தைகள் தான் கஷ்டப்பட்டு ரசித்து ரசித்து தயார் செய்த நிகழ்ச்சி உனக்கு வழங்கியுள்ளேன் கெடுத்துவிடாதே என்று. அதேபோல முழு சுதந்திரத்துடன் உன் ஸ்டைலில் செய் என சொல்லிவிட்டார். ஓரளவிற்கு நன்றாக அந்த நிகழ்ச்சியை கொண்டு செல்கின்றேன் என நம்புகின்றேன். அதேபோல்தான் விடியல் என் மனதுக்குள் ஒரு எட்டாத கோட்டையாக இருந்த நிகழ்ச்சி, சுபாஷ் அண்ணா விடை பெற்று செல்லும் போது உனக்கு இனி காலை நேர நிகழ்ச்சி தான் குறியாக இருக்க வேண்டும் அந்தளவிற்கு உன் செயற்பாடு அமைய வேண்டும் என்பதை எனக்குள் பதித்து போனது. இன்னும் உலாவரும் உற்சாகம், ஏன் எதற்கு எப்படி,அவதாரம், தாம் தூம் மட்டுமே எனக்கு எட்டாக்கனியாக இருக்கின்றன.

இப்படியே சென்ற எனக்கு இன்னொரு வாய்ப்பு செய்தி அறிக்கை மூலம் கிடைத்தது. ஒருநாள் காலை லோஷன் நான் இன்று மதியம் செய்தி வாசி என சொல்ல நானும் சரி சொல்லி விட்டு அலுவலகம் சென்ற நேரம் காலை பதினொன்று நாற்பது. அன்றுதான் என் வாழ்க்கையில் இன்னொரு சரிவை சந்தித்த நாள். ஆனால் அதை யாரிடமும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நான் தடுமாறி செய்தி வாசிக்க உள்ளே சென்றுவிட்டு இறுதி நேரம் வைதேகி அக்காவிடம் கொடுத்து விட்டு வெளியேறிவிட்டேன். இதனால் எல்லோரிடமும் கொஞ்சம் பேச்சு வாங்கவேண்டிய நிலை. அப்போதும் இருநாள் கழித்து மீண்டும் எனக்கு அந்த வாய்ப்பினை லோஷன் அண்ணா வழங்கினார். செய்தி வாசித்து விட்டு வந்ததன் பின்னர் அவர் சொன்ன வார்த்தைகளும் மறக்கவில்லை. சங்ககாரபோல எப்போதும் போர்மில் இரு மஹேல போல அடிக்கடி Form அவுட் ஆகிடாதே என்று. ஒரு சில நாட்களிலேயே காலை நேர செய்தி அறிக்கை வாசிக்கும் வாய்ப்பை லோஷன் அண்ணா வழங்கினார்.


இதுவரை நான் சொன்னவர்கள் உங்களுக்கும் தெரிந்தவர்கள் இவர்களை விட அருந்ததி அக்கா எப்போதும் பெரிய பலம். அறிவுரைகளும் அனுபவ பாடமும் அவரிடம் கிடைக்கும். அடுத்து திஷோ அண்ணா, எப்போதும் சிரித்த முகம் சிறுபிள்ளை போல குறும்புத்தனம். ஆரம்பத்தில் ஒரு பிரச்சனை எனக்கும் அவருக்கும்.ஆனால் அடுத்தடுத்த நாட்களிலேயே எல்லாம் சரியாகிவிட்டது. அண்ணா இந்த நேரத்தில் அந்த சம்பவத்துக்கு உங்களிடம் மன்னிப்பு கோருகின்றேன். இவரை பற்றி சொல்ல வேண்டுமாக இருந்தால் என் பாடல் விருப்பம் அறிந்தவர். அமரகானங்களில் எனக்காக பாடல் போட்டு அசத்தியவர். இப்போதும் இது உனக்கு ஏற்ற பாட்டு போடு என சில பாடல்களை தருபவர்.

அடுத்து செய்திப்பிரிவில் தெரியாதைதை சொல்லித்தரும் பென்சி அண்ணா, தன் வேலையில் கண்ணாயினும் எங்களுக்கு அறிவுரைதரும் ரஜினி அண்ணா என் நண்பர்கள் அருண், விஜய், லெனின்,ஸ்ரியான்(நம்மா சீயான்) என எல்லோரும் என் ஒரு வருட படிக்கட்டை தாங்கி நிற்பவர்கள். இதில் ஜெய்சன் தினேஷ் இருவரும் அடிக்கடி காணாமல் போனாலும் என் வெற்றிப்பயணத்தின் ஒவ்வொரு கற்கள்.

அடுத்து என்னுடன் வெற்றியில் இணைந்து குருவியாக வலம் வந்து இன்று உங்களுக்கும் எனக்கும் இனிய தோழியாக இருக்கும் வனிதா, நாங்கள் இணைந்ததன் பின் இணைந்து இப்போது என் இணைபிரியா நண்பனாக காற்றின் சிறகுகள் நிகழ்ச்சியில் என் பாடல்தெரிவுகளின் குறை நிறைகளை சுட்டிக்காட்டி என் பாடல் அறிவை மேம்படுத்தும் அன்பு நண்பன் ரஜீவ் இவர்களின் துணை என் வெற்றிப் பயணத்தில் கிடைத்தது. வெற்றியில் இப்போது இணைந்தாலும் அனுபவமுள்ள பாபு, பிர்னாஸ், தினேஷா என எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் என்னை மேம்படுத்த உதவுகின்றனர்.
லோஷன் அண்ணா முதல் பிர்னாஸ், தினேஷா வரை ஒவ்வொருவரிடம் இருந்தும் நிறைய கற்றுக்கொண்டிருக்கின்றேன்.

இவர்கள் எல்லாரையும் போல என் வெற்றிப் பயணத்தில் பிரதான பங்காளிகள் என் பிரியமான நேயர்கள். என்னையும் ஒரு அறிவிப்பாளனாக ஏற்றுக்கொண்டு ஆதரவை வழங்கிவரும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகள். உங்களிடம் இருந்து கூட நல்ல பாடல் அறிவு, இன்னும் பல பொது விடயங்களை கற்பதோடு உங்கள் வீட்டில் ஒருவனாக ஏற்று அன்புதரும் நேயர்களும் இருக்கின்றார்கள் என்ற சந்தோசத்தில் உங்கள் அன்புக்கு தலை வணங்குகின்றேன். ஒரு வருடம் கடந்தாயிற்று.... இன்னும் பல வருடம் வெற்றிக்குடும்பத்தோடு வெற்றிகரமாக வலம் வரலாம் என்ற நம்பிக்கையில் இன்று வாழ்த்திய அத்தனை பேருக்கும் நன்றிகளோடு விடைபெறுகின்றேன்.
Share:

25 கருத்துரைகள்:

நந்தரூபன் said...

வாழ்த்துக்கள் மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம்

காற்றின் சிறகுகளில் எதிர்பார்க்கிறோம்

Admin said...

ஒலிபரப்புத் துறையிலே பல சாதனைகள் படைக்க என் வாழ்த்துக்கள்.

Admin said...

ஒலிபரப்புத் துறையானது இன்று பல போட்டிகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில் நாம் எமது இலக்கை அடைய வேண்டியிருக்கின்றது. அந்தவகையில் லோஷன் அண்ணாவின் நிர்வாகத்தின் கீழ் நீங்கள் பணியாற்றுவது உங்களை நல்ல ஒரு நிலைக்கு இட்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் லோஷன் அண்ணா திறமைகளுக்கு முன்னுரிமை கொடுப்பவர். இனிவரும் காலங்களிலும் நல்ல நிகழ்சிகளை படைக்க வாழ்த்துக்கள்.

ப்ரியா பக்கங்கள் said...

வெற்றியின் ஆரம்பகாலத்தில் (மன்னிக்கவும் ஆரம்ப நாளில்) இருந்து நான் ஒரு வெளிநாட்டில் உள்ள நிரந்தர நேயர். எல்லா நிகழ்ச்சியையும் கேட்டு வருபவன். இது அநேகமான வெற்றி அறிவிப்பாளர்களுக்கு தெரியும் .
ஒவ்வொரு அறிவிப்பாளரையும் குரல் அளவில் தெரியும். சதீசன் முதல் முதல் நிகழ்ச்சி செய்ய ஆரம்பித்த போது லோஷனிடம் கேட்டேன். வந்த பதில் "பையன் புதுசு எதிர் பார்த்த படி செய்யுறான்; தொடர்ந்தும் செய்வான் என்று நம்புறோம் ". அப்பவே நினைத்தேன் லோஷன் சொல்லுற அளவில் ஏதோ விஷயம் இருக்கு என்று. உண்மை ; ஏற்கனவே வாழ்த்தும் போது சொன்னதையே இங்கேயும் சொல்லுறன். குரல் உச்சரிப்பு , மொழிப்பற்று நன்று. உங்கள் சேவை தொடர்ந்து தேவை. நானும் உங்களின் ரசிகனே. தொடர் வெற்றிக்கு வித்திடுங்கள்.
பிரியன் ( நெதர்லாந்து)

Anonymous said...

//நேர்முகத்தேர்வுக்கான நாளும் வந்தது நான் என் பெற்றோருடனும் ஒரு அண்ணாவுடனும் //

இது என்ன் பொம்பள புள்ள மாதிரி?

வானொலியில் வாங்கியதிட்டுக்களின் அர்த்தத்தை புரிந்துகொண்டதுபோல் ஏன் பெயரில்லாமல் வரும் பின்னூட்டங்களை புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை?

Unknown said...

வாழ்த்துக்கள் அண்ணா...
தொடர்ந்து கலக்குங்கள்....

உங்கள் அனுபவங்களை சிறப்பாக, சுவாரசியமாக சொல்லிரிருக்கிறீர்கள்....

எனக்கு எல்லாமே விளங்கிச்சு,
அண்டைக்கு மஹேல அடிச்ச 275 ஓட இது மட்டும் விளங்கேல...
// சங்ககாரபோல எப்போதும் போர்மில் இரு மஹேல போல அடிக்கடி போரம் அவுட் ஆகிடாதே என்று.//

ஹி ஹி...

வாழ்த்துக்கள் அண்ணா....

ஆதிரை said...

மேலும் மேலும் வெற்றிநடை போட என் வாழ்த்துக்கள் சதீஷன்...
:)

Subankan said...

வாழ்த்துகள் தல, ச்சீச்சீ தளபதி. தொடர்ந்து கலக்குங்கள்!

//ஓரளவிற்கு நன்றாக அந்த நிகழ்ச்சியை கொண்டு செல்கின்றேன் என நம்புகின்றேன்//

இதில் சந்தேகம் வேண்டாமே

Unknown said...

all the best to reach many more milestones in your career.

வந்தியத்தேவன் said...

வாழ்த்துக்கள் மருமகனே.

எங்கள் முதல் சந்திபிலையே நீங்கள் என்னைக் கவர்ந்துவிட்டீர்கள். இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள்.

யோ வொய்ஸ் (யோகா) said...

வாழத்துக்கள் சதீஷ். நானும் உங்களது காற்றின் சிறகுகள் நிகழ்ச்சியின் ரசிகன், பாடலை நீங்கள் அழகாக வர்ணித்து ஒலிபரப்புவது பிடிக்கும், மேலும் நேற்றைய சினிமாலையில் தம்பிக்கு எந்த ஊரு சிறப்பு நிகழ்ச்சி நீங்கள் தான் செய்தீர்கள் என நினைக்கிறேன். மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்

r.dinesh said...

மனம் கனிந்த வாழ்த்துக்கள்.அனுபவங்களை ரசனையுடன் தந்ததற்கு நன்றி.

“ உங்கள் பதிவு பலரின் வெற்றிக்கு ஒரு படிப்பினையாக இருக்கும்'

மகேல மேல் ஏன் இந்த கொலைவெறி?

பால்குடி said...

சதீஷ், மென்மேலும் வளர என்னுடைய நல்வாழ்த்துக்கள்.

viththy said...

வாழ்த்துக்கள் அண்ணா....
தொடரட்டும் உங்கள்
வெற்றிநடை......

புல்லட் said...

வானொலித்துறையில ஒரு கரைகாண வாழ்த்துக்களடா தம்பி.. கலக்கு.. :-)

காற்றில் எந்தன் கீதம் said...

வாழ்த்துக்கள் நண்பரே !

சுபானு said...

ம்.. கலக்கடா சோதரா.. சாதனைகள் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

அப்படியே பாட்டி ஒன்றும் வைத்தால் போச்சு.. என்ன.. மீண்டும் வாழ்த்துக்கள்..

ARV Loshan said...

வாழ்த்துக்கள் சதீஸ்.. :)
மேலும் பல சாதனை வருடங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன..
உங்கள் படைப்பாற்றல்,தேடல்,ஆர்வம்,முயற்சி,புதுப்பித்தல் போன்றவற்றில் தான் உங்கள் பயணம் தங்கியுள்ளது..

என் மேலுள்ள அன்பினால் சொன்ன நல்ல வார்த்தைகளுக்கு நன்றிகள்..

SShathiesh-சதீஷ். said...

நந்தரூபன் கூறியது...
வாழ்த்துக்கள் மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம்

காற்றின் சிறகுகளில் எதிர்பார்க்கிறோம்

..............................
வாழ்த்துக்களுக்கு நன்றிகள். உங்கள் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய கடுமையாக பாடுபடுவேன்.

SShathiesh-சதீஷ். said...

சந்ரு கூறியது...
ஒலிபரப்புத் துறையிலே பல சாதனைகள் படைக்க என் வாழ்த்துக்கள்.

................................
வாழ்த்துக்கு நன்றிகள்.

SShathiesh-சதீஷ். said...

சந்ரு கூறியது...
ஒலிபரப்புத் துறையானது இன்று பல போட்டிகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில் நாம் எமது இலக்கை அடைய வேண்டியிருக்கின்றது. அந்தவகையில் லோஷன் அண்ணாவின் நிர்வாகத்தின் கீழ் நீங்கள் பணியாற்றுவது உங்களை நல்ல ஒரு நிலைக்கு இட்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் லோஷன் அண்ணா திறமைகளுக்கு முன்னுரிமை கொடுப்பவர். இனிவரும் காலங்களிலும் நல்ல நிகழ்சிகளை படைக்க வாழ்த்துக்கள்.

................................
நிச்சயமாக தொடர்ந்து நல்ல நிகழ்ச்சிகளை லோஷன் அண்ணாவின் வழிகாட்டலில் தருவேன். நன்றி உங்கள் கருத்துக்கு

SShathiesh-சதீஷ். said...

கனககோபி கூறியது...
வாழ்த்துக்கள் அண்ணா...
தொடர்ந்து கலக்குங்கள்....

உங்கள் அனுபவங்களை சிறப்பாக, சுவாரசியமாக சொல்லிரிருக்கிறீர்கள்....

எனக்கு எல்லாமே விளங்கிச்சு,
அண்டைக்கு மஹேல அடிச்ச 275 ஓட இது மட்டும் விளங்கேல...
// சங்ககாரபோல எப்போதும் போர்மில் இரு மஹேல போல அடிக்கடி போரம் அவுட் ஆகிடாதே என்று.//

ஹி ஹி...

வாழ்த்துக்கள் அண்ணா...
................................
உங்கள் வாழ்த்துக்கு நன்றி. மஹேல எப்போதும் காப்பாற்றுவதில்லை சங்கா எப்போது ஒரு குறிப்பிட்டளவு ரன் அடிப்பார் அதை தான் ஒப்பிட்டார் லோஷன் அண்ணா என நினைக்கின்றேன். தப்பெனில் அவரே தான் சொல்லவேண்டும் உங்கள் கேள்விக்கு பதிலை.

SShathiesh-சதீஷ். said...

ப்ரியானந்த சுவாமிகள் கூறியது...
வெற்றியின் ஆரம்பகாலத்தில் (மன்னிக்கவும் ஆரம்ப நாளில்) இருந்து நான் ஒரு வெளிநாட்டில் உள்ள நிரந்தர நேயர். எல்லா நிகழ்ச்சியையும் கேட்டு வருபவன். இது அநேகமான வெற்றி அறிவிப்பாளர்களுக்கு தெரியும் .
ஒவ்வொரு அறிவிப்பாளரையும் குரல் அளவில் தெரியும். சதீசன் முதல் முதல் நிகழ்ச்சி செய்ய ஆரம்பித்த போது லோஷனிடம் கேட்டேன். வந்த பதில் "பையன் புதுசு எதிர் பார்த்த படி செய்யுறான்; தொடர்ந்தும் செய்வான் என்று நம்புறோம் ". அப்பவே நினைத்தேன் லோஷன் சொல்லுற அளவில் ஏதோ விஷயம் இருக்கு என்று. உண்மை ; ஏற்கனவே வாழ்த்தும் போது சொன்னதையே இங்கேயும் சொல்லுறன். குரல் உச்சரிப்பு , மொழிப்பற்று நன்று. உங்கள் சேவை தொடர்ந்து தேவை. நானும் உங்களின் ரசிகனே. தொடர் வெற்றிக்கு வித்திடுங்கள்.
பிரியன் ( நெதர்லாந்து

.........................
எனக்கு மூஞ்சி புத்தகத்தில் வாழ்த்தியமைக்கும் இங்கே வாழ்த்து சொன்னதுக்கும் நீண்டகால வெற்றி நேயர்காக எங்களோடு இருப்பதற்கும் நன்றிகள் சுவாமிஜி

SShathiesh-சதீஷ். said...

பெயரில்லா கூறியது...
//நேர்முகத்தேர்வுக்கான நாளும் வந்தது நான் என் பெற்றோருடனும் ஒரு அண்ணாவுடனும் //

இது என்ன் பொம்பள புள்ள மாதிரி?

வானொலியில் வாங்கியதிட்டுக்களின் அர்த்தத்தை புரிந்துகொண்டதுபோல் ஏன் பெயரில்லாமல் வரும் பின்னூட்டங்களை புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை
.....................
பெயரோடு நியாயமான கருத்துக்களை சொன்னால் வானொலியில் மட்டுமல்ல நேருக்கு நேர் சொன்னாலும் நான் கருத்தில் எடுப்பேன். நீங்களும் நேரே சொல்லுங்கள் உள்ளதை சொல்லுங்கள். நன்றி வருகைக்கு. அப்புறம் பெற்ற தாய் தகப்பனுக்கு நாங்கள் எவ்வளவு பெரியவராக வளர்ந்தாலும் சிகரம் தொட்டாலும் பிள்ளைகள் தான். என் இருபது வயதில் முதல் வேலைக்கு நான் அப்படி சென்றது தவறில்லை. நீங்களோ அந்த பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் தைரியம் கூட இல்லாமல் பெயரில்லாமல் வந்திருக்கின்றீர்கள் இதை என்ன சொல்வது....

Nimalesh said...

congrats thola....... sry for the delayed wish......................................

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox