உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label லோஷன். Show all posts
Showing posts with label லோஷன். Show all posts

Wednesday, June 22, 2011

லண்டன் ரயில்களும் தற்கொலைகளும்



இதமான பனி விழும் காலைப்பொழுது.இலங்கையின் வெள்ளவத்தை தொடர்மாடியில் ஒரு வீட்டில் அலாரம் அடிக்க புத்துணர்ச்சியுடன் அதுதான் இலங்கையில் தன் தாய் தந்தை தங்கையுடன் தான் எதிர்கொள்ளும் இறுதி விடியல் என தெரியாமல் கண்விழித்து கண்ணாடியினூடே கதிரவனை பார்க்கின்றான் கதிர்.

கதிர்!

யாழ்பாணத்தை பிறப்பிடமாக கொண்டு கால சக்கர ஓட்டத்தில் ஓடி ஓடி இன்று தென் இலங்கை பக்கம் கரை ஒதுங்கி இருக்கும் சராசரித் தமிழன். அன்பான அப்பா அம்மா சுட்டித்தங்கை என அழகான குடும்பம் இருந்தும் அழகான காதல் செய்யப்போய் அழுக்காகி போனதால் வாழ்வை தொலைத்துவிட்டு இறுதியில் வந்து சேர்ந்த இடம் கொழும்பு.

வழக்கம் போல சில பல கணினி கற்கை நெறிகளை முடித்துவிட்டு இலங்கை சராசரிக்குடிமகனின் பெருங்கனவாகிய லண்டன் படிப்பை தொடரவேண்டும் என்பதே அவன் அவா. அவனுக்காகவே அவன் குடும்பமும் கொழும்பில் தங்கிவிட்டது. எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை அடுத்தவருக்கு கெட்டதும் நினைப்பதில்லை என்ற கொள்கையுடன் ஒரு இருப்பதே வயது வாலிபனுக்கான மிடுக்குடன் கொழும்பில் வளம் வந்தான். மீண்டும் சில காதல் விளையாட்டுக்கள் தலையெடுக்க முற்பட்டாலும் அவன் காதல் என்னவோ லண்டன் மீது அமைந்துவிட்டது. படிப்பும் முடிய லண்டன் விசாவை பெறுவதற்கான தகுதிகளை பெறுவதற்கு ஆங்கில பரீட்சை அது இது என எல்லாம் செய்து விட்டு காத்திருக்கின்றான்.

தானுண்டு தன் வேலை உண்டு என அவன் இருந்தாலும் அவன் பெற்றோரை அவர்காலத்து நண்பர்கள் விட்டு வைக்கவில்லை.
"என்ன பெடியனை லண்டன் அனுப்பிற வேலையள் நடக்குது போல" இது கதிரின் அப்பாவின் நண்பர் ஒருவர்.
"பின்னே என்ன செய்றது இந்த நாட்டில அவனை வச்சிருந்து என்ன செய்றது. ஏதோ போய்ட்டான் எண்டால் எங்கட குடும்பமும் தல நிமிர்ந்திடும்." பெருமூச்சோடு ஓய்கின்றது பல ஏக்கங்களை மனதிலே சுமந்து திரியும் கதிரின் தந்தையின் இதயம்.
ஒருவாறு ஒருவருக்கு பதில் சொல்லியாச்சு இருந்தாலும் உவங்க கண்ணு எல்லாம் என்ட பெடியன் மேல பட்டா ஒண்டும் சரிவராது இண்டைக்கு அவனுக்கு சுத்திப்போடணும் என நினைத்துக்கொண்டே நடந்து செல்லும் அவரை பார்த்து சிரிக்கின்றது தினமும் மரக்கறி சந்தையில் பார்த்து பழகிய அந்த முகம்.
"என்ன கணேஷ் அண்ணே இப்பிடியே யோசிச்சுக்கொண்டு போனால் முன்னுக்கு வாறது கூட தெரியாது"
"அட சுந்தரேசா, நான் உங்களை கவனிக்கல என்ன சந்தைக்கோ?"
"ஓமண்ண என்ட மகளும் மருமகனும் இண்டைக்கு மத்தியான சாப்பாட்டுக்கு வீட்ட வரீனமாம். அதுதான் உதில கறியை கிரியை வாங்கிட்டு போவம் எண்டு வந்தன்"
"ஒ அதுசரி உங்க மருமகன் கட்டார் போறதா சொன்னிங்க என்ன மாதிரி எப்ப போறார். அதுக்கு தான் வந்திருக்கினமோ"?
"இல்லை இல்லை அது அந்த ஏஜென்சி காரன் ஏமாத்தி போட்டான். இப்ப இங்கேயே ஒரு பிசினஸ் செய்யலாம் என நினைக்கிறார். என்ன செய்றது எல்லாம் விதி"
"ம ஏதோ என்ட மகனுக்கும் போடா போறம் ஆனால் லண்டனுக்கு உந்த ஏஜென்சியளுக்கு எல்லாம் நான் போகமாட்டேன். எங்களிட்ட எல்லாம் இருக்கு பிறகேன் உந்த ஏமாத்திற கள்ளன்களிட்ட எங்கட காசை"
"என்ன ஸ்டுடென்ட் விசாவோ...?"
"ஓமோம்"
"இப்ப அங்கே கொஞ்சம் கஷ்டம்போல இருக்கு........எல்லாம் ஏற்ப்பாடு பண்ணிட்டியல் தானே"
"அதெல்லாம் ஓகே அவன் அங்க போய் இறங்கிட்டான் எண்டா அப்புறம் எல்லாம் ஓகே"
"ஏதோ பார்த்து நல்லதை செய்யுங்கோ. அவன் நல்லாய் இருந்தா சந்தோசம்"
"ம நான் வாறன் எனக்கு நிறைய வேலை இருக்கு" என சொல்லிக்கொண்டே இவனுக்கும் என்ட பிள்ளை போறது பிடிக்கல. எல்லாரும் சரியான எரிச்சல் பொறாமை பிடிச்சவன்களாய் இருக்காங்க. கணேஷின் மனம் உள்ளுக்குள் சொல்லிக்கொல்கின்றது.

கதிர் வீட்டில்.

"அப்பா! இந்த யோகா அக்கா சொன்னவ பெடியனுக்கு விசாவுக்கு கொடுக்க முதல் அந்த வெள்ளவத்தை கடக்கரையில இருக்கிற விசா பிள்ளையாருக்கு ஒரு பூசை செய்திட்டு கொண்டே குடுக்கட்டாம். கட்டாயம் விசா கிடைக்கும் என சொல்லுறா. என்ன நாங்களும் செய்வமா? பெடியன் போகணும் ............." கதிரின் அம்மா ஜெயந்தி.

"நானும் அதை நினைச்சன் எனக்கும் ஒரு சிலர் அந்த பிள்ளையாரை பற்றி சொல்லி இருக்கினம், அங்க பூசை வச்சா தப்பாதாமே. ஏன் அந்த குறையை மட்டும் வைப்பான். விசாவுக்கு குடுக்கிற அண்டைக்கு காலமை இந்த பூசையை செய்திட்டு கொண்டு போய் குடுப்பம்." - கணேஷ்.

புகைப்படங்கள்,பாஸ்போர்ட், விண்ணப்பபடிவங்கள் என எல்லாம் தயார் செய்தாயிற்று.
"அடுத்த திங்கள் கிழமை கொடுக்கணும்...ஏம்மா திவ்யா எங்க அண்ணாவை கூப்பிடு இதில ஒரு கையெழுத்து போடணும்....எல்லாத்தையும் இண்டைக்கே ரெடியாய் வச்சால் நாளைக்கு ஒருநாள் கோவில் வேலையளை பார்க்கலாம் நாளைஇண்டைக்கு அப்பிளை பண்ணினால் சரியாய் பெப்ரவரிக்கு விசா கிடைச்சிடும்......" என்று கணேஷன் சொல்வதை கூட கேட்காமல்
"அண்ணா டேய் அண்ணா .......அண்ணா டேய்...." இது திவ்யா
"அடியேய் உனக்கு எத்தனை தரம் சொல்லி இருப்பேன் ஒண்டில் அண்ணா எண்டு கூப்பிடு இல்லாட்டி கதிர் எண்டு கூப்பிடு எண்டு எதுக்கிடி இப்பிடி இரண்டையும் சேர்த்து கூப்பிட்டு என்ன அவமானப்படுத்துறாய்.....உன்னை...." இது கதிர்.
"அடிக்காதடா உன்னை அப்பா கூப்பிட்டார்" - திவ்யா
"எதுக்கடி?"
"ஆஹ உன் ஆட்டோகிராப் வாங்கி வைக்க தான். ஐயா லண்டன் போறார் எல்லே பிறகு அங்கே போய் லண்டன் இளவரசியை பார்த்து பிடிச்சிட்டா அதுதான் இப்பவே......." என்று திவ்யா சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் தலையில் ஒரு குட்டு வைத்துவிட்டு மெதுவாக அப்பாவை நோக்கி போக திவ்யா இரவு செய்தி கேட்பதற்காக வெற்றி எப் எம்மை போட்டுவிட அதில் "ம் ஒருமாதிரி விமல் இண்டைக்கு அவுட் ஆகாமல் நல்லா விளையாடிடிங்க ஆனால் அடுத்ததா ஒருத்தர் ஆடு ஆடு என ஆடி கையில ஒரு பெரிய கட்டோடு உங்களை எங்களை ஆட வைக்க வந்திருக்கின்றார் எனவே நாங்க இப்ப போகப்போறோம் மீண்டும் சந்திக்கலாம் ஒ வந்திருக்கிறவர் பெயரை நான் சொல்ல மாட்டேன் நீங்களும் சொல்லவேண்டாம் விமல் வெற்றியின் செய்தியை தொடர்ந்து நானாடா நீயாட நிகழ்ச்சியோடு இணைந்திருக்கலாம் விடை பெற்றுக்கொள்ளும் நாங்கள் என்றும் அன்புடன் விமல் ஏ.ஆர்.வி.லோஷன்...இப்பிடி சொன்னதுக்காக எல்லாம் டெரரா முறைக்கப்படாது.. பாய்" என்று போக திவ்யா செய்துயுடன் அமர மறுபுறம் கதிரும் அம்மா அப்பாவும் இறுதிக்கட்ட படிவங்கள் நிரப்பி சரிபார்க்கும் வேலையில் மும்முரமாக இருந்தனர்.

அம்மா அப்பா கதிர் என மூவரின் குரல்களும் பல விவாதங்களை செய்தாலும் மிக குறுகிய நேரத்தில் வெற்றி எப்.எம் செய்திகள் என்ற தீமுடன் செய்தி ஆரம்பமானது. வழக்கம் போல வெற்றி எப்.எம் செய்திகள் செய்தி ஆசிரியர்........வாசிப்பவர்........என்ற வழக்கமான விடயங்கள் கடந்து தலைப்புச் செய்திகள் என்று வரும் போது கூட திவ்யா கூர்ந்து கவனிக்கவில்லை. ஆனால் முக்கிய செய்திகளில் மூன்றாவதாக வந்த செய்தி முழு புலனையும் உல் நாட்டு செய்திகள் திவ்யாவை மட்டுமன்றி முழு குடும்பத்தையும் கொண்டு சென்றது.

"...........மாணவர் விசா மூலம் இங்கிலாந்து சென்று கற்கை நெறியை மேற்கொண்டு வரும் இலங்கை மாணவர்கள் இங்கிலாந்து குடிவரவு புதிய சட்டங்களின் படி வரும் ஏப்ரில் மாதம் முதல் மட்டுப்படுத்தப்பட்ட மணி நேரமே வேலை செய்யலாம். வெளிநாட்டில் இருந்து வரும் பெருமளவானோரின் எண்ணிக்கையை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....................................." என அந்த செய்தி நீண்டு கொண்டு செல்ல அனைவர் முகத்திலும் ஒரு ஏமாற்ற பிரதிபலிப்பு. இருப்பினும் செய்தியில் இருந்து புலனை திருப்பி மனதை ஆசுவாசப்படுத்தி எல்லாவற்றையும் சரி பார்த்து முடிக்கவும்.

"நேயர்கள் இந்த சனி இரவு நானாட நீயாட நிகழ்ச்சியோடு இணைந்திருக்கின்றீர்கள். உங்களை ஆட வைக்கும் பாடல்களோடு கொஞ்சம் கருத்துக்களை சொல்லும் பாடல்களாகவும் இன்றைய நானாட நீயாட பாடல்கள் வரபோகின்றன........................இதோ வருகிறது இது நம்மண்ணின் பாடல் மண் பெருமையை சொல்லும் மண் பட பாடல் லண்டன் பிரான்ஸ் கனடா என ஓடாமல் இங்க இருந்தா எவ்வளவு சந்தோசமா இருக்கலாம் ஆனால் ஓடிக்கொண்டே இருக்கிறாங்களே" என சொல்லிவிட்டு லண்டனுக்கு போகவில்லை பாரிசுக்கும் ஓடவில்லை சொந்த மண்ணில் தானிருந்தோம் உற்சாகமாக ....................என பாடல் ஒலிக்கவும் கதிர் விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து போடவும் சரியாக இருந்தது......

(தொடரும்.......)

Share:

Sunday, June 5, 2011

சூப்பர் ஸ்டார் லோஷன்.

லோஷன்!
இந்த பெயர் சொன்னதன் பின் எனக்கு அதற்க்கு மேல் சொல்ல என்ன இருக்கு என தெரியவில்லை. நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமா என்ன? ஆனால் எனக்கும் அவருக்கும் இருக்கும் உறவை பற்றி சில சுவாரஷ்யங்களை சொல்லலாமே. கடந்த முறை அவர் பிறந்த நாளுக்கும் என் பதிவு தாமதமாக வந்தது. அப்போது அவரின் ரசிகர்கள் பதிவுலகை தொடரும் வானொலி நண்பர்கள் சிலர் லோஷன் அண்ணா பற்றி வந்த பதிவுகளை வாசித்துவிட்டோம் ஆனால் நீங்கள் எழுதப்போகும் பதிவுக்கு வெயிட்டிங் என்றார்கள். உண்மையில் சந்தோசமாக இருந்தது.....


ரகுபதி பாலசிறீதரன் வாமலோஷணன்(பேரை சொல்லும்போதே களைக்குது பாஸ்) இந்த பெயர் எனக்கு அறிமுகமானது என் சிறுபிராயத்தில். சக்தியின் முத்துக்கள் பத்து தான் என்னை இவர் பக்கம் திரும்ப வைத்த நிகழ்ச்சி. எதிர்காலத்தில் இவருடனே வேலை செய்யபோகின்றேன் இப்படி ஒரு நல்ல உறவு எனக்கும் அவருக்கும் இருக்கப்போகின்றது என எதுவுமே தெரியாமல் ஒரு பெரிய மனிதர் என்ற எண்ணத்தில் இவர் நிகழ்ச்சிகளை ரசிக்க தொடங்கினேன். அதுதான் அவரின் வானொலி ஆரம்ப கால கட்டம் என்பது கூட தெரியாமல்..........அந்த வயதில் எனக்கு யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை லோஷன் அண்ணாதான் சிறந்த அறிவிப்பாளர் அதேபோல இவ்வளவு உயரத்தை தொடப்போகின்றார் எனவே இவரை ரசி என்று. தானாக சிறு வயதில் வந்தது இதுதான் அவர் கைங்கரியம். நான் எப்போதும் இவரை சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒப்பிட்டு பார்ப்பேன் காரணம் சிறுவர் முதல் பெரியோர் வரை அத்தனை பேரையும் தன குரலில் கட்டி வைத்திருக்கிறாரே.

சக்தியில் தொடங்கிய பயணம் என்றென்றும் புன்னகை என தினமும் காலை சூரிய ராகங்களில் தொடர்ந்து ஒவ்வொரு விடியலும் எனது பெயர் சொல்லுதே என அவர் பட்டையை கிளப்பும் இன்றுவரை நான் அவர் ரசிகன். என் வெற்றி அறிமுகம் எப்படியானது வெற்றி அனுபவங்கள் என்ன என்பதெல்லாம் என் கீழ்வரும் பதிவுகளில் சொல்லி உள்ளேன். ஆனால் அதையும் மீறி எனக்கும் அவருக்கும் இடையில் நடந்த சில சுவாரஷ்யங்கள் நினைத்து பார்க்கும் போது இன்றும் உயர்ந்து நிற்கின்றார்.







முதலில் லோஷன் அண்ணாவிடம் எனக்கு மிக பிடித்ததே சரியோ தப்போ பட்டதை பட்ட படி சொல்லுவது. உண்மையில் பலருக்கு இது இருப்பது குறைவு. எனக்கு இவரிடம் மிகப்பிடித்ததும் இதுவே. லோஷன் அண்ணாவுக்கும் எனக்கும் உள்ள உறவில் எனக்கு பல சந்தேகங்கள். இது ஒரு குருசிஷ்யனுக்கானதா? ஒரு கலைஞனுக்கும் ரசிகனுக்குமானதா? இல்லை ஒரு மேலதிகாரிக்கும் அவர் தலைமையில் வேலை செய்த ஒரு ஊழியருக்கானதா? இல்லை சகபதிவர் என்னும் உறவா? இல்லை ஒரு அண்ணா தம்பி உறவா? இல்லை வயது வித்தியாசங்கள் மறந்து எல்லாம் பேசும் ஒரு நண்பனா? சத்தியமாக இந்த கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் நம் உணர்வு மட்டுமே.

வானொலியில் நான் பணிபுரியும் நேரம் அவரை பார்த்து வியந்திருக்கின்றேன். பல விடயங்களை அத்துப்படியாக தெரிந்து வைத்திருக்கின்றார். இணையம் இல்லாமல் பல விடயங்களை தன்னுள்ளே கொண்டு திரியும் ஒரு விக்கிபீடியா. (அதனால தான் விக்கி லீக்ஸ் வந்துதா என கேட்கப்படாது) இவை எல்லாவற்றையும் மீறி அடுத்தவர்களை மதிக்க தெரிந்த மனிதன். அவரின் வயதில் பாதிக்கு கொஞ்சம் தான் எனக்கு கூட (அப்பாடா லோஷன் அங்கிள் என நான் கூப்பிட காரணம் சொன்னாச்சு) ஆனால் நாங்கள் கூட ஒரு விடயம் சொல்லி அது சரி எண்டால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவர். சரியை சிறுவன் சொன்னாலும் அதை மதிக்கும் மதிப்புக்குரியவர். அதனால் தான் இன்று எல்லோரும் அவரை மதிக்கின்றனர்.

என் வானொலி ஆரம்ப நாட்களில் என் மேல் அதிகம் நம்பிக்கை வைத்தவர் அதனால் தான் அத்தனை நிகழ்ச்சிகளும் செய்யும் வாய்ப்பை நான் பெற முடிந்தது. என்னை தட்டிக்கொடுத்து வளர்த்து விட்டவர். அதேநேரம் நான் தவறு செய்யும் போது தட்டி நிமிர்த்தவும் அவர் தவறவில்லை. சில நாட்கள் அவர் மேல் நான் கோபப்பட்டதும் உண்டு மனதில். ஆனால் அவை எல்லாம் உடனே மறைந்துவிடும் காரணம் அடுத்த தடவை அவரை சந்திக்கும் போது இன்னொரு பரிமாணத்துக்கு எங்களை கொண்டு போய்விடுவார்.

செய்தி வாசிக்க எனக்கு வாய்ப்பு வழங்கும் போது பொதுவாக எல்லோருக்கும் மணித்தியால செய்தி வாசிக்க கொடுத்துவிட்டு தான் பிரதான செய்தி கொடுப்போம் ஆனால் இங்கே மணித்தியால செய்தியும் இல்லை பிரதான செய்தி வாசிக்க போதிய ஆட்களும் இல்லை எனக்கு உன்னில் நம்பிக்கை இருக்கு என என்னையே என்னால் நம்பவைத்தவர். என் தனி ஆவர்த்தன நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு நன்றாக இருக்கு என அவர் போட்ட குறுந்தகவல்கள் இன்றும் என்னிடம் இருக்கின்றன. ஆரம்ப நாட்களில் ஒரு இமயத்தை பார்ப்பதை போல அவரை வியந்து தூர நின்று பார்த்துக்கொண்டிருந்த என்னை அவரை நெருங்க வைக்க சில நாட்களே போதுமாய் இருந்தது. நெருங்கி பழகும் குணம் மட்டுமன்றி 04.02.2009 அன்று நடந்த ஒரு சம்பவத்தில் என்னை கடுமையாய் கடிந்து கொண்ட அடுத்த நிமிடமே நான் செய்தி வாசித்துவிட்டு வெளியே வந்ததும் செய்தி SUPERடா என்று சொல்லும் போது அவர் மேல் இருந்த கோபமே எங்கே போனது என தெரியவில்லை.

சில காலம் கடந்து வெற்றியின் காலை நேர செய்தி வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் என் அலுவலகத்தில் உயர் அதிகாரி, பத்து வருடங்கள் சாதித்த சாதனையாளர், அளவில்லா ரசிகர்கள் எல்லோரும் வியந்து பார்க்கும் மனிதர் அவர் நினைத்திருந்தால் காலையில் உனக்கு செய்தி இருக்கு ஆறுமணிக்கெல்லாம் என்று சொல்லிட்டு போயிருக்கலாம். ஆனால் காலை செய்தி உனக்கு போடுறேன் விடிய நான் வரும் போது உன்னை ஏத்த உன் வீட்ட வருவேன் இத்தனை மணிக்கு ரெடியாய் நில்லு என சொல்லி முதல் நாள் முதல் அந்த கடமையில் மாற்றம் வரும் வரை தினமும் என்னை ஏற்றி வந்தவர் இவர். இதை நான் சொல்ல காரணம் அறிமுகணாம ஒரு சில மாதத்திலேயே எனக்கு இப்படி என்றால் அவர் எந்தளவுக்கு தன கீழ் வேலை செய்த ஏனைய அறிவிப்பாளர்களுடன் எப்படி நடந்திருப்பார் என நீங்களும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். இதுதானே ஒரு நல்ல தலைவனுக்கும் மனிதனுக்கும் அழகு.


காற்றின் சிறகுகள் நிகழ்ச்சி சுபாஷ் அண்ணா சென்ற பின்னர் எனக்கு தருவதாக சொல்லப்பட்டாலும் பின்னர் அதை ரஜீவிடம் கொடுத்த நேரம் மனதளவில் நான் காயப்பட்டாலும் அந்த நிகழ்ச்சியை ரஜீவை கொண்டு வீழ்ச்சி பெற விடாமல் செய்யும் போது ஒரு சிறந்த மேலதிகாரியாக அவரின் அந்த முடிவை ரசித்தேன். காரணம் அந்த இடத்தில் நிச்சயம் என்னால் சுபாஷ் அண்ணா இல்லாத குறையை தீர்த்திருக்க முடியாது. எனவே அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்காக தனி மனிதர் என்ற பாசம் மீறி கடமைக்கு மதிப்பு கொடுக்கும் ஒருவர். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மகுடம் சூட்டுவது போல தான் செய்த சினிமாலை நிகழ்ச்சியை என்னிடம் கொடுத்து அதற்க்கு ஆலோசனையை சொல்லி என்னை மெருகேற்றி அழகு பார்த்தவர். இந்த மனது உண்மையில் அவர் மேல் இன்னும் எனக்கு அவாவை கொண்டுவந்தது. இதை தொடர்ந்து விடியலை செய் என என்னிடம் ஒரு நாள் கொடுக்கும் போது அதை நான் நம்பவே இல்லை. ஆனால் அன்று மாலை முதல் எனக்கு ஆலோசனைகள் சொல்லி வெற்றியின் ஏனைய நிகழ்ச்சிகள் மூலம் நாளை ஒரு வித்தியாசமான சிறப்பான விடியல் இருக்கு என விளம்பரபடுத்த வைத்து அந்த நிகழ்ச்சியை என்னை செய்ய வைக்க யாருக்கு மனது வரும். அவர் எங்கோ ஒரு இமயத்தில் நின்று எங்களையும் தன்னுடன் வர சொல்லி இழுக்கின்றார் ஆனால் மன்னிக்கணும் அண்ணா எங்களால் நீங்கள் நிற்கும் இடத்துக்கு வரவே முடியாது.



செய்தி வாசிக்கும் போது எனக்கு ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே வாசிக்கும் பழக்கம் உண்டு. இதை பல தடவை கண்டித்ததுடன் ஒருமுறை அது பிரச்சனையை உருவெடுத்த நேரம் என்னை காப்பாற்றி அதன் பின் கண்டித்து திருத்திய நல்ல தல. இதே உடல் நிலை பிரச்சனையால் நான் வானொலியை விட்டு போகப்போகின்றேன் என நான் ஒருமுறை கூறியபோதுகூட யோசிச்சு முடிவெடு சில நாட்கள் விடுமுறை எடுத்து ரெஸ்ட் எடுத்திட்டு திருப்பி வா என சொல்ல எந்த மேலதிகாரியால் முடியும். இதுதான் இன்று அவரால் பல அறிவிப்பாளர்கள் உருவாகவும் உங்களை என்னை போன்ற ரசிகர்கள் அவருக்கு இருக்கவும் காரணம். அவதாரம் நிகழ்ச்சியை அவருடன் செய்ய நான் ஆசைப்பட்ட வேலை அதை செய்ய அனுமதி தந்ததுடன் நான் பயமாய் இருக்கு என சொல்ல எதுக்கு பயம் செய்டா என தட்டி தந்ததுடன் நிகழ்ச்சி முடியும் வரை ஒரு இடமும் என்னை தர்மசங்கட படவோ இல்லை பயம் என்ற எண்ணம் வரவோ விடாமல் சாதாரணமாக இருந்து என்னையும் செய்யவைத்தார்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அவர் வீட்டில் பொங்கல் இவர் பொங்குவதில்லை. அதுதான் நாடு முழுக்க இவர் குரல் கேட்டு பொங்கி கொண்டாடுகின்றதே. அத்தியாவசிய தேவை தவிர தான் விடுப்பு எடுப்பது எப்போதாவதே. இப்போதுதான் ஒரு வருடம் முத்த ல்தொடக்கம் ஞாயிறு லீவு என நினைக்கின்றேன். இந்த கடமையுணர்வு எப்போதும் வானொலி பற்றி சிந்திக்கும் அவர் புலன்கள் என ஒரு சிறந்த தன்னிகரில்லா ஊடகவியலாளர். சூப்பர் ஸ்டார் என இவரை நான் சொல்ல இன்னொரு காரணம் உண்டு அவருக்கும் ரசிகர்கள் நிறைய இவருக்கும் நிறைய இரண்டுபேரும் ரொம்ப சிம்பிள். அவரும் தன ரசிகர்களுக்கு ஏதாவது செய்யணும் என நினைக்கின்றார் இவரும் நினைக்க மாட்டாரா என்ன? அண்ணே எப்போ அண்ணே அடுத்த கட்டம்.....(அப்பாடா சும்மா கொளுத்திப்போட்டிருக்கேன்......)


இனி லோஷன் அங்கிளின் இன்னொரு பக்கம்.................


அடுத்து பதிவுலகில் என்னை அழைத்து வந்தவர் இவர் தான். டேய் உன் பதிவுகள் உதவாது திருத்து என என் மொக்கைகளை கண்டித்த மொக்கை சிங்கம். எங்கள் அதிகார மைய முன்னாள் தலைவர்....எங்கள் அரட்டை குழுவின் அங்கிள்.....ஆனாலும் பாருங்கோ அரட்டை எண்டு வந்தால் அங்கிள் தொல்ல தாங்க முடியாது. நம்ம மாமாவையும் குஞ்சுவையும் அப்பப்ப என்னையும் பந்தாடுவது அங்கிள் தான்.....இன்னொரு முக்கியமான விஷயம்... யாராவது இருவருக்கு இடையில் பத்த வைத்திட்டு பறந்திடுவார். ஆனாலும் அப்பப்ப தன தலையிலும் பத்த வைத்துக்கொள்வார்.

என்ன தான் இருந்தாலும் இந்த மனிசனை வாட்டி எடுக்கிறது கொஞ்சம் கஷ்டமாய் இருக்கு. சிங்கம் ஒரு நாளைக்கு சிக்காமலா போய்டும் எங்க கும்மில நல்லாய் வறுத்தெடுத்தா தான் எங்கள் எல்லோருக்கும் மன திருப்தி...அப்புறம் இந்த பிறந்த நாள் தன பதினாறாவது பிறந்த நாள் என சொன்னார் அங்கிள். எனக்கென்னவோ பயமாய் தான் கிடக்கு.....இன்னுமொன்று சொல்லிட்டு போறேன்...அங்கிளின் இன்னொரு பக்கம் என்ற இந்த கடைசி பகுதிக்கு எப்பிடியும் நான் கும்மியில கும்பாபிசேகம் செய்யப்படுவேன்....நேரம் ஆகிறது வரட்டே.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் லோஷன் அண்ணாவுக்கு என் குடும்பத்தினர் சார்ப்பாகவும், பதிவர்கள் சார்பாகவும், ஏனைய வானொலி அறிவிப்பாளர்கள் சார்ப்பாகவும், என் போன்ற உங்களை போன்ற அவர் ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்.

ட்ரீட் கேட்டா கிடைக்கவா போகுது..அதனால கேட்கமாட்டேன்...
Share:

Monday, February 14, 2011

வெற்றி FM - லங்கா ஸ்ரீ FM இல் பாடகர் சத்யன் மற்றும் நான்.

வெற்றி FM பிறந்தநாள்.



இலங்கையில் இருக்கும் தனியார் வானொலியில் தனக்கென தனி இடம் பிடித்து இன்று உச்சத்தை தொட்டிருக்கும் அண்ணை உருவாக்கிய வெற்றிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வெற்றியின் முதல் பிறந்த நாள் முதல் கூட இருந்து ஒவ்வொரு படிகளையும் கடக்க பயணித்தவனில் நானும் ஒருவன் என்பதில் எனக்கும் சந்தோசம்.

மிக வேகமான வளர்ச்சி சிறந்த அறிவிபபளர்கள் எல்லாவற்றும் மேலாக லோஷன் அண்ணாவின் வழிகாட்டல் என வெற்றியின் வெற்றியை பற்றி சொல்ல தேவை இல்லை. வெற்றியின் ஆரம்ப நாட்கள் என்றுமே பொற்காலம் தான். காரணம் சிறிய குழு என்றாலும் அத்தனை ஜாம்பவான்களும் ஒரே குழுவில் இருந்தனர். அவர்கள் அனைவருடனும் சிறு காலம் பணியாற்ற கிடைத்தது என் பாக்கியம்.

இன்று பல புதிய அறிவிப்பாளர்களையும் சேர்த்துக்கொண்டு வீறுநடை போட்டுகொண்டிருக்கும் வெற்றிக்கு வெற்றியின் முதல் குழந்தை(வெற்றி அறிமுகப்படுத்திய முதல் ஆண் அறிவிப்பாளர் நான் தான்) என்ற ரீதியில் என் வாழ்த்துக்கள். வெற்றியால் தான் இன்று எனக்கு பல வாய்ப்புக்கள் வந்து போகின்றன. அப்படிப்பட்ட வெற்றியின் வெற்றியின் காரணகர்த்தாக்கள் ஆகிய அத்தனை நேயர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

லங்காஸ்ரீ FM இல் பிரபல பின்னணி பாடகர் சத்யன்


தென் இந்தியாவின் பிரபல பின்னணி பாடகர் மாத்தியோசி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் பட பாடல்கள் புகழ் சத்யன் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று லங்காஸ்ரீ FM இல் லண்டன் நேரப்படி மாலை 4 மணி முதல் 5 மணி வரை நேரடியாக பங்குபெறுகின்றார். இனிய ஒரு மாலை பொழுதுக்கு தயாராகுங்கள்.

லங்காஸ்ரீ FM இல் நான்


காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக இன்று இரவு 9 மணி முதல் 10 மணிவரை லங்கா ஸ்ரீ வானொலியின் ஊடாக உங்களை சந்திக்கப்போகின்றேன். இப்படி இடை இடையிடையே கடல் கடந்தும் என் வானொலிப்பயணம் தொடர்கின்றது மனதுக்கு திருப்தி. இரவு வானலைகளில் சந்திப்போம்.

நிகழ்ச்சியை கேட்க இங்கே செல்லுங்கள். http://www.lankasri.fm/



அட இதை மறக்க முடியுமா கொண்டாடும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். நான் ப்ரீயாத்தான் இருக்கேன். பிகாஸ் ஐ ஆம் பச்சிளம் பாலகன்.
Share:

Sunday, July 18, 2010

ரஜினி என் குரு-விஜய் பல்டி+லோஷன் அண்ணாவுக்கு விருது.

நடிகர் விஜய்க்கு இது போதாத காலம். இவனெல்லாம் இனி சினிமாவுக்கு தேவையா என்ற ரீதியில் இன்று விஜய் நிலை. நடிக்கத்தேரியாது. கெட் அப் மாற்றுவதில்லை. பத்து படத்தில் ஒரே மாதிரி நடிப்பது என்ற விமர்சனங்கள் ஓரளவுக்கு உண்மையாக இருக்கும் நிலையில் இப்போது சித்திக், ராஜா என்று நம்பிக்கை தரும் இயக்குனர்களுடன் விஜய் சேர்ந்திருக்கும் நிலையில் இந்த களங்கங்கள் கடந்து மீண்டு எழுவாரா? அல்லது மீண்டும் அதே குட்டையில் இந்த இயக்குனர்களையும் கொண்டு சென்று தன்னையும் கேவலப்படுத்தி அவர் ரசிகர் எம்மையும் அவமானப்படுத்துவாரா தெரியவில்லை.

ஒரு விஜய் ரசிகர் என்றாலும் விஜயின் இந்த பெட்டியில் இருக்கும் பல்டி எனக்கும் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் தன் குரு ரஜினி என்றவர் அதன் பின் எம்.ஜி.ஆர் பக்கம் சாய்ந்து விட்டு. மீண்டும் இப்போது தன் குரு ரஜினி என்கிறார். வேண்டாம் விஜய் இந்த பல்டி. இது உங்களை மட்டுமல்லா உங்கள் ரசிகர் என சொல்லும் எமக்கும் கேவலம். உங்கள் முடிவில் நீங்கள் தான் தெளிவாய் இருக்க வேண்டும். ஆலோசனை கேட்பது சரியானது ஆனால் முடிவை சரியாய் தெளிவாய் நீங்கள் எடுங்கள் அதுவே நல்லது. இன்னும் நம்புகின்றோம் அந்த நம்பிக்கையை காப்பாற்றுவீர்கள் என்று.





பி.கு: இந்த பதிவை தயார் செய்து கொண்டிருந்த வேளை கொழும்பு பல்கலைக்கழகம் வழங்கும் இந்த வருடத்துக்கான சிறந்த பிளாக்கர் என்ற விருதை லோஷன் அண்ணா வென்று இருக்கின்றார். ரொம்ப சந்தோசம் எங்களுக்கும். அண்ணே ட்ரீட் வேணும். முக்கியமான விஷயம். மீண்டும் ஒருதடவை விருதை வென்ற அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். இன்னொரு விஷயம் இந்த பதிவுக்கு நான் அவரிடம் திட்டு வாங்குவது உறுதி ஏன் தெரியுமா? முடிந்தால் யாரும் சொல்லுங்கள்.
=>


=>


=>


=>


=>


=>


=>


=>


=>


வேற ஒன்றும் இல்லை விஜய் பற்றிய பதிவுடன் தன்னையும் போட்டிட்டாயே என்று கோபப்படுவார். ஏனென்றால் விஜய் மீது அவருக்கு ரொம்ப பாசம். அப்பிடி கொபிச்சால் உங்களுக்கு தனி பதிவு போட்டு கும்மிடமாட்டோம். எவ்வளவோ பண்றம் இதை பண்ண மாட்டமா?


Share:

Wednesday, March 24, 2010

மிருகங்கள் மனிதனானால்-ஒரு உண்மை பதிவு.


ஒரு ஊரில ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாவாம்(அது உழுந்து வடையா பருப்பு வடையா என்று இன்றுவரை யாரும் என் சந்தேகத்தை தீர்க்கவில்லை.) அந்தவழியால் வந்த காக்கை ........அடேய் நிறுத்தடா இதுதான் காலம் காலமாய் தெரியுமே என்று யாரப்பா சவுண்ட் விடிறது.....சரி சரி இந்த கதை தெரியுமா நான் இன்னொரு கதை சொல்றன்.

ஒரு கிராமத்தில் இருந்த பத்து பசுக்கள் ஒன்றாக காடுப்பகுதிக்கு அண்மையில் இருந்த புல்வெளிக்கு மேயப்போவது வழக்கம். எப்போதும் ஒன்றாகவே போகும் இவை ஒரு முறை பிரச்சனை பட்டு.......டாங்.........அடேய் என்னடா கதை சொல்றாய்......அடடா இதுவும் தெரியுமா. சரி இந்தக்கதைகள் தெரியும் தானே நேரடியா விசயத்துக்கே வந்திவிடுகின்றேன்.

முதல் கதையில் பாட்டியிடம் வடையை திருடியது காகம் அதே காகத்தை ஏமாற்றியது நரி இப்படி காலம் காலமாக நம் பிஞ்சு மனங்களிலேயே விதை விதைத்து விட்டனர் நம் பாட்டா பாட்டி தொடக்கம் ஆசிரியர் வரை. என் கோபம் என்னவென்றால் அதென்ன எதற்கெடுத்தாலும் மிருகங்களை வைத்தே கதை சொல்வது அவற்றை தப்பாக காட்டுவது. ஏன் நம் முன்னோர்கள் சமகாலத்தவரை வைத்தது கதை சொன்னால் என்ன?ஒருவேளை அந்த மிருகங்களுக்கு இது தெரிந்தால் அவை நம்மை என்ன செய்யும்.

முதலில் மனிதர்கள் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. மனிதரில் நாம் எப்படி ஆண் பெண் என இரண்டு இனம் இருக்கின்றோம அதேபோல மற்ற மிருகங்களிலும் இருக்கின்றன. இதற்கடுத்து பேசும் மொழி வேறுபடுகின்றது இனம் மதம் குலம் கோத்திரம் இன்னும் என்னவென்னவோ எல்லாம் சொல்லி மனிதரில் பல வகை சொல்கின்றனர் சிலர். ஏன் இந்த பாகுபாடு மிருகங்கள் குலம் கோத்திரம் பார்க்கின்றனவா? மதத்துக்காக நாட்டுக்காக இனத்துக்காக என்று வேண்டுமென்றே சண்டை பிடிக்கின்றனவா?

ஆறாவது அறிவென்ற ஒன்று மற்ற மிருகங்களை விட இருக்கின்றது என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு செய்வது சரியான காரியமா? ஒரு தடவையாவது சிந்தித்திருக்கின்றோமா நாங்கள் மிருகங்கள் எங்களை பற்றி என்ன நினைக்குமென்று. நாய் போல மாடு போல என்று பேசுகின்றோம். அவை நிச்சயம் தங்களில் கெட்டவர்களை நீ அந்த மனிதன் போல இந்த மனிதன் போல என திட்டி கேவலமாக பேசாதென்பதற்கு என்ன நிச்சயம்.. அதேபோல எங்களை விட தங்களுக்கு அறிவு கூட என நினைத்துக்கொண்டு அவை செயற்படவில்லை என்பதற்கு என்ன நிச்சயம். ஏதாவது ஆராய்ச்சிகள் செய்து பார்ப்பதென்றால் முதலில் மற்ற மிருகங்களுக்கு செய்து பார்க்கின்றோம். அதே போல மிருகங்கள் செய்து பார்த்தால் இந்த உலகில் நாம் யாருமே இருக்க முடியாது.

காரணம் மிருகங்களுடன் போட்டி போட நிச்சயம் ஒரு சாதாரண மனிதனால் முடியாது. ஒரு நாயை அடிக்கவே கல்லை தேடுகின்றோம் அப்படி இருக்கையில் கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒரு ஆராச்சி செய்வதேன்றாலோ அல்லது ஒரு சின்ன வேலையை செய்வதேன்றாலோ கருவி இல்லாமல் செய்ய மனிதனால் முடியாமல் போய்விட்டது. இதே உலகத்தில் தங்களுக்கான உலகத்தில் மிருகங்கள் என்ன நேர்த்தியாக வாழ்கின்றன. எனக்கு ஒரு ஆசை மிருகங்கள் மனிதர்கள் ஆகிய எங்களை பற்றி என்ன நினைக்கின்றன அவர்களின் உலகில் இந்த மனிதன் என்பவன் எப்படி? ஒரு தாவரமா அல்லது வேற்றுக்கிரக வாசியா? நம் சினிமா ஹீரோக்கள் கூட இதுவரை பஞ்ச டயலாக்குகளில் மிருகங்களுடன் தான் தங்களை ஒப்பிடுகின்றனர் அப்படியானால் அவர்கள் மனிதனை விட மிருகங்கள் சிறந்தவை என ஒப்புக்கொள்கின்றனரா? மிருகங்கள் பலவற்றை நாம் கட்டிப்போட்டு வைக்கின்றோம் நம் பாதுகாப்புக்கென்று. அதே மிருகங்கள் இவன்களால் நாங்கள் அளிக்கின்றோம் இவனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நம்மை கட்டிப்போட ஆரம்பித்தால்.

மனிதர்கள் உன்னதமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் கொஞ்சமாவது படித்துக்கொள்ளலாம் மிருகங்களிடம். மிருகங்கள் மனிதரானால் இந்த உலகம் தாங்காது அவற்றை அவர்கள் வாழ்வியலிலேயே விட்டு விடுவோம். மிருகங்களை அடைத்து வைத்து காட்சிப்படுத்த மிருகக்காட்சி சாலை அதே மிருகங்கள் மாறி விட்டால் மனிதக்காட்சி சாலை எப்படி இருக்கும்?

இன்று இந்தப்பதிவிட காரணம். லோஷன் அண்ணாதான். ஏனோ இன்று காலையில் (நீண்ட நாட்களுக்கு பின்) எழுந்து விடியல் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது குறு சிஷ்யன் படத்தில் இடம்பெற்ற திப்பு பாடிய நடிக்கிறான் என்ற பாடலை கேட்கும் போதுதான் இந்த கோபம், இந்த சிந்தனை வந்தது. இந்த பதிவிட தூண்டிய லோஷன் அண்ணாவிற்கும் வெற்றியின் விடியலுக்கும் நன்றிகள்.
Share:

Monday, March 22, 2010

வெற்றி வானலையில் விடை பெறல்.



இன்று நாளை என இழுத்தடித்துக்கொண்டு வந்த என் வானொலி நிறைவுப் பகுதியின் நிறைவுப்பதிவிற்கு ஒரு முடிவு கட்டலாம் என்ற நினைப்பில் இப்போது இந்தப் பதிவு. இது இழுபடக் காரணம் பல. ஒன்று என்னால் இன்னும் முழுமையாக வானொலியில் இருந்து விடை பெற்ற அந்த சோக தருணத்தில் இருந்து மீளமுடியவில்லை. அதேநேரம் இந்தப் பதிவை எழுதலாம் என்றால் மனம் வரவே இல்லை. இதோ இப்போது பணக்காரன் படத்தை பார்த்துக் கொண்டே எழுதுகின்றேன். இதில் என்ன கொடுமை என்றால் நான் விடை பெற்ற நாளுக்கு முதல் நாளில் என் இறுதிப் பாடலாக ஒலித்த மரத்தை வச்சவன் பாடல் என்னை மீண்டும் எங்கோ இழுத்துப்போகின்றது. காத்திருப்பவர் எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு உண்மையில் ஒரு வெறியை தரும் வரி இது.

வெற்றி வானொலி ஒரு சாதாரண ரசிகனாக அதன் ஆரம்ப காலத்திலேயே நான் ரசித்துக் கேட்ட வானொலி. சுபாஷ் அண்ணாவுடன் வந்த சின்ன முரண்பாடு என்னையும் அங்கேயே வேலை செய்ய வைக்கும் என நான் நினைக்கவில்லை. ஆனால் விதி யாரை விட்டது. என்னையும் எங்கோ கொண்டு சென்று விட்டது. இதை பற்றிய என் முன்னைய பதிவை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

நவம்பர் 3, 2008 ஆரம்பித்த பயணம் 2010 மார்ச் பத்தாம் திகதியோடு முற்றுப்பெற்று விட்டது. இந்த முற்றுப்பெறுகை என்னை நிச்சயமாக பாதித்தே இருக்கின்றது. காரணம் இல்லாமல் இருக்குமா? ஒரு குறுகிற காலத்திலேயே ஒரே குடும்பமாக பழகிய வெற்றிக் குழுவினர். என்னையும் தங்களில் ஒருவனாக நினைக்கும் என் பிரியமான நேயர்கள். அத்துடன் பல பிரபலங்களின் நட்பு. இவை எல்லாவற்றையும் ஒரே நாளில் விட்டு வர யாருக்கு மனது வரும். என் குரல் முதல் நாள் ஒலிக்க ஆரம்பித்ததிலிருந்து என் குறை நிறைகளை சுட்டிக்காட்டி என்னை வளர்த்தெடுத்த வெற்றிக்குடும்பமும் நேயர்களும் இன்னும் சில இத்துறை சார் நண்பர்களுக்கும் முதலில் என் நன்றிகளை சொல்லிவிட்டு. இறுதி நாளில் நடந்த மறக்கமுடியா நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றேன்.

என் உயர் கல்விக்காக போகப்போகின்றேன் என்கின்ற காரணமே நான் வெற்றி வானொலியை விட்டு ஒரு அறிவிப்பாளன் என்கின்ற நிலையில் பிரிய காரணம். முதல் நாள் இரவு நான் காற்றின் சிறகுகள் நிகழ்ச்சி செய்யும் போது மறுநாள் ஆகாய முகவரியை நிறுத்தி விட்டு உன்னுடைய சிறப்பு நிகழ்ச்சியாக செய்வோம் என சொன்னார். உடனடியாக ரஜீவும் நானும் சேர்ந்து அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டோம். மறுநாள் மதியம் நான் அலுவலகம் சென்று விட்டேன். காரணம் நான் வழக்கமாக வரும் மாலைப்பொழுதில் வேலை செய்யும் எல்லோரையும் ஒன்றாக காண்பதென்பது எப்போதாவது நடக்கும் ஒரு அதிசயம். எல்லோருடனும் என் இறுதி நிமிடங்களில் சந்தோசமாகா இருக்கவேண்டும் என்ற காரணத்துக்காக சென்றேன். என் எதிர்பார்ப்புப்போலவே எல்லோரும் அங்கே பிரசன்ட். எல்லோருடனும் மனம் விட்டு பேசிவிட்டு இன்னொரு முக்கியமான விடயத்தை செய்யும் வாய்ப்பு எனக்கு அன்றுதான் கிடைத்தது. வழக்கமாக புதியவர்கள் தங்கள் அறிமுக நாளில் லோஷன் அண்ணாவின் ஆசீர்வாதத்துடன் தான் கலையகம் செல்வார்கள் என கேள்விப்பட்டிருக்கின்றேன். எனக்கு அந்த கொடுப்பனை அமையவில்லை காரணம் என்னவென பலருக்குத் தெரியும். எனக்கும் மனதுக்குள் இது ஒரு பெரிய குறையாகவே இருந்து வந்தது. ஆனால் இது என்று கழுவப்படும் என ஏங்கிய எனக்கு என் இறுதி நாள் நிகழ்ச்சியை செய்யும் முன் தான் அந்த வாய்ப்புக் கிடைத்தது. அந்த மன நிறைவுடன் நான் என் இறுதி நிகழ்ச்சியில்......

இரவு 7.30அளவில் அலுவலகம் சென்றுவிட்டேன். மனதுக்குள் பட படப்பு. இதற்குள் Face bookஇலும் என் கடைசி நிகழ்ச்சி பற்றி சிலர் தங்கள் வாழ்த்துக்களுடன் கூடிய அறிவிப்பை செய்து விட்டனர். இந்த இடத்தில் நன்றிகள். என் கடைசி செய்தியை வாசிக்கப்போகின்றேன். எனக்குள் இதே போல ஒரு டென்சன் வேறு ஒருநாளும் இருந்ததில்லை. தயாராகிவிட்டேன். செய்திக்கும் இறுதி நிகழ்ச்சிக்கும். இதில் நானும் ரஜீவும் எடுத்துக்கொண்ட ஒரு சபதம் எக்காரணம் கொண்டும் நிகழ்ச்சியில் கண்கலங்கக்கூடாது என்று. அதில் தெளிவாகவும் இருந்தோம். என் செய்தியை வாசிக்க நான் கலையகத்துக்கு சென்ற வேளை அங்கே நிகழ்ச்சி செய்து கொண்டிருந்தது பூஜா அக்கா . எனக்காக அவர் நிகழ்ச்சியில் மகராசன் தோஸ்து நீ பாடலுடன் விடைபெற்று செல்லும் போதே "அடேய் சதீஷ் போறியாடா ரொம்ப நல்ல பழகிட்டு போறியா தம்பி" என கவலைப்பட எனக்கும் முதல் கலக்கம் ஆரம்பித்தது அக்கா நான் செய்தி வாசிக்கணும் வேண்டாம் விட்டுடுங்க என அவரையே கலாய்த்துவிட்டு செய்திக்கு தயாராகிவிட்டேன் மனதில் வலியோடு.

செய்தி வாசித்து விட்டு வேப்ப மரம் புளிய மரம் பாடலோடு என் இறுதி நிகழ்ச்சி ஆரம்பமானது. ரஜீவிடம் போர்ட்டை கையாளும் படி சொல்லிவிட்டு நான் மறு ஒலிவாங்கியில் அமர பூஜா அக்கா மீண்டும் கலையகம் வந்தார். வந்தவர் எனக்கு வாழ்த்து சொல்லிவிட்டு கண்கலங்கிவிட்டார். நானும் கொஞ்சம் அப்செட் ஆக அந்த இடத்தை கலகலப்பாக்கியது ரஜீவ். அக்கா வேண்டாம் இன்னும் நிகழ்ச்சி ஆரம்பிக்கவில்லை. நாங்கள் நிகழ்ச்சி செய்யணும் என சொல்ல ஒருவாறு அந்த பிரியாவிடை முடிந்தது. ஆரம்பத்தில் வெளியில் இருந்து பேசிய ரஜீவ் இப்போது சொன்ன வசனம் எனக்கு இன்னும் வலியைக் கொடுத்தது. சதீஷ், வெளியில் இருக்கும் போது இதுதா கடைசி நிகழ்ச்சி என்றாலும் எனக்கு அது பெரிதா தோணல இந்த நிமிடம் ரொம்ப கவலையா இருக்கு சதீஷ் என்ற வார்த்தை என்னை கொஞ்சம் வலியை உணரவைத்தது. நேயர்கள் கேட்கும் கேள்விக்கும் தான் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லவேண்டும் என்றவுடன் கொஞ்சம் பயமாய் தான் போய்விட்டது. ரஜீவ் என்னத்தை கேட்பாரோ அதைவிட நம் அன்பு நேயர்கள் என்னத்தை கேட்டு திக்கு முக்காட வைத்துவிடுவார்களோ என்ற பயம். ஆனால் அட நம் நேயர்களிடம் மறைக்க என்னதான் இருக்கு எந்த கேள்வியாய் இருந்தால் என்ன ஒரு கை பார்த்து விடலாம் என்று முடிவோடு. நல்ல ஜாலியாக ஆரம்பித்தோம் நிகழ்ச்சியை.

இடையில் வெளியே சென்று மூஞ்சிப்புத்தகத்தை திறந்து பார்த்தால் ஒரு நண்பர் சதீஷ் தன் இறுதி செய்தி அறிக்கையை இப்போது வாசித்து முடித்துவிட்டார் என போடா இன்னொருவரோ சதீஷின் இறுதி நிகழ்ச்சி வெற்றியில் என போட கொஞ்சம் அசந்து போனேன். என்னடா இது கிரிக்கெட் ஸ்கோர் போடிறது போல போடுகின்றார்களே என கமென்ட் போட்டு விட்டு அந்த நண்பர்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பை நினைத்து வியந்தேன். அதேநேரம் எஸ்.எம்.எஸ். வாயிலாக மற்ற வானொலிகளின் அறிவிப்பாளர்கள் சிலரின் வாழ்த்தும் வந்து சேர்ந்தது. அந்த அன்பான நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.

நேயர்களின் கேள்விகள் ஆரம்பமானது. தொலைபேசியில் வந்த நேயர்களுடன் என்னையே பேசச் சொல்லி விட்டு விட்டார் ரஜீவ். காரணம் உங்களுடன் தானே அவர்கள் பேச எடுப்பார்கள் என்று. அதேநேரம் யாரும் கேள்வி கேட்டால் அதை தான் குறிப்பெடுத்துக்கொண்டு தன் ஸ்டைலில் என்னை போட்டு தாக்க தொடங்கினார் ரஜீவ்.

அங்கே என்னை நோக்கி வந்த கேள்விக்கணைகள் சிலவும் அதற்கான என் பதில்களும்.

கேள்வி: உங்கள் சொந்த இடம்,குடும்பம்.?

பதில்: என் சொந்த இடம் யாழ்ப்பாணம், பிறந்தது அங்கே அதன் பின் கல்வி வவுனியாவில் இப்போது இங்கே. அம்மா அப்பாவிற்கு ஒரே பிள்ளை.

கேள்வி: வெற்றிக்கு வந்த விதம்?


கேள்வி: வெற்றில் பிடித்தவர்?

பதில்: சந்தேகமே இல்லை லோஷன் அண்ணாதான். காரணம் என் ஐந்தாம் ஆண்டில் இருந்து அவரை நான் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். முதலில் நான் அவருக்கு ரசிகன் அதற்க்கு பின்தான் அவர் முகாமைத்துவத்தில் வேலை செய்யும் ஒரு அறிவிப்பாளன்.

கேள்வி: லோஷன் அண்ணாவை தவிர வேறு யாரை வெற்றியில் பிடிக்கும்?

பதில்: ரஜீவ் உங்களை தான் சொல்லணும் காரணம் நீங்கள் தான் எனக்கு அருகில் இருக்கின்றீர்கள் என சொல்லிவிட்டே நான் சொன்னது. எனக்கு வெற்றியில் யாரையும் பிடிக்கதென்று இல்லை.

லோஷன் அண்ணா- பல தடவை இவரிடம் நான் திட்டும் வாங்கி இருக்கின்றேன் அப்போதெல்லாம் சொல்வார் என் தம்பி செந்துவிர்க்கும் இப்படிதான் செய்வேன் விரும்பினால் கேட்டுப்பார் என்று. அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன் தொழிலில் அண்ணன் தம்பி எல்லாம் இல்லை எல்லோரும் சமம்தான் அதேபோல்தான் எங்களையும் தன் தம்பி போல நினைத்து தான் நடத்துகின்றார் என்று.

ஹிஷாம் அண்ணா- உதவி முகாமையாளர் என்பதை மீறி நல்ல நண்பர். மாலையில் எங்களுடன் அரட்டை ஆகட்டும் சண்டை(வம்புச் சண்டை தான்) இன்னும் உணவருந்த செல்வதாகட்டும் ரஜீவை போட்டு கலாய்ப்பதாகட்டும் சார்தான் முன்னோடி.

விமல் அண்ணா- இவரை நான் சரியாக புரிந்து கொண்டது அண்மையில் தான். ஒருமுறை மவிண்ட்லவனியா கடற்கரையில் வைத்து அவர் எனக்கு சொன்னது என்ஜாய் பண்ணும் போது பண்ணனும் வேலை செய்யும் போது செய்யணும் அப்படியான ஒரு அண்ணன் உனக்கு கிடைப்பாரா இதோ என்னை பார் என்று அவர் சொன்னதுதான் அவரை நான் புரிந்து கொண்ட சந்தர்ப்பம்.

பிரதீப் அண்ணா- காற்றின் சிறகுகள் நிகழ்ச்சி என்னிடம் தந்தபோது நான் ஆரம்பத்தில் பயந்தேன் என்னால் எப்படி பாடல்களை பக்காவாக போடமுடியும் என்று. ஆனால் என் பாடல் தெரிவுகளை நெறிப்படுத்தி உங்களுக்கு பிடித்த பாடல்களை நான் தர காரணம் இவர்தான்.

சந்துரு அண்ணா- நல்ல நண்பர். எப்போதும் பார்க்க டெரர் போல இருப்பார் என பலர் நினைப்பார். ஆனால் அந்தளவிற்கு என்ஜாய் பண்ணக்கூடியவர். நம்மை எப்போதும் கலாய்ப்பது இந்த தலைதான்.

பூஜா அக்கா- இந்த நிகழ்ச்சிக்கு நான் வரும்போது அவர் கண்கலங்கி வாழ்த்தியதே அவரின் அன்புக்கான ஒரு சாட்சி.

வைதேகி அக்கா- பல விடயங்களை பேசினாலும் அநேகமாய் எனக்கும் அவருக்கும் இடையில் வேண்டுமென்றே வம்புச்சண்டை பிடிப்போம்.

ரஜீவ்- தன் சொந்த விடயங்களையும் பகிர்ந்து கொள்ளும் நல்ல நண்பன். நான் காற்றின் சிறகுகள் பாடல்களை இட்டவுடன் முதலில் பார்த்து திருத்துவது இவர்தான்.

வனிதா- என்னுடன் அறிமுகமான என் நண்பி. அண்மைக்காலமாக தான் எங்கள் நட்பு இறுக்கமானது. நீங்கள் இன்னும் பயணிக்க நிறைய தூரம் இருக்கு. உங்களிடம் திறமை இருக்கு அதேநேரம் வெற்றியில் உங்களுக்கு சாதிக்க நிறைய வாய்ப்புகளும் இருக்கு சாதிக்க இந்த அன்பான நண்பனின் வாழ்த்துக்கள்.

தினேஷா- பழக பெரிதான வாய்ப்புக்கள் கிடைக்காவிட்டாலும். எங்கள் அலுவலகத்தில் என்னை அண்ணா என கூப்பிடும் ஒரே தங்கை. உங்களுக்கும் இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள். .

பாபு- உண்மையில் என்னை விட நான்கு வயது அதிகம் ஆனால் பாபு எனதான் கூப்பிடுவேன். அனுபவமும் என்னைவிட அதிகமானவர். பாபு சரியான இடத்துக்கு வந்திட்டிங்க. இனி நீங்களும் மேலே போக வாழ்த்துக்கள்.

டிஷோ அண்ணா- என்னுடைய விருப்பம் அறிந்து பாடல் போடும் அண்ணா. அதாவது எனக்கு எந்த எந்த பாட்டுகள் பிடிக்குமோ அந்த பாடல் களை போடுபவர். அமரகானங்கள் நான் செய்யும் போது பாடல்களை போட்டு அசத்தியவர்.

அருந்ததி அக்கா- எப்போதெல்லாம் ஏதும் குழப்பத்தில் இருந்தால் தீர்த்து வைப்பவர். நல்ல ஒரு வழிகாட்டி.

கேள்வி: வெற்றியில் செய்ததில் பிடித்த நிகழ்ச்சி?

பதில்: நானாட நீயாட காரணம் என் முதல் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி என்றால் எங்கிருந்துதான் எனக்கு ஒரு எனெர்ஜி வருமோ தெரியாது. அடுத்து விடியல் ஒருநாள் முழுவதும் இன்னொருநாள் சிறு பகுதியும் செய்துள்ளேன். இந்த துறைக்கு வரும் என்னைப்போன்ற பலரின் இலட்சியமாக இருக்கும் கட்டாயம் செய்ய வேண்டும் என ஆசைப்படும் நிகழ்ச்சி.

கேள்வி: வெற்றியில் இதுவரை செய்யாத நிகழ்ச்சி?

பதில்: ரஜீவ் உங்கள் நிகழ்ச்சிதான். தாம் தூம், ஏன் அதற்கு அப்படி இந்த இரண்டும் இன்னும் எட்டவே இல்லை.

கேள்வி: செய்தி வாசிப்பது தனி ஸ்டைலில் இருக்கும் அதெப்படி யாரிடம் கற்றீர்கள் அப்படி முடிகின்றது?

பதில்: இதற்காக தனியாக கற்றது என்றில்லை. வெற்றியில் தந்த பயிற்சி அதே போல என் ஆசிரியர்கள். பாடசாலை காலத்திலேயே இந்த திறனை வளர்த்துக்கொண்டேன்.

கேள்வி: வெற்றியில் முதல் நாள் முதல் நிகழ்ச்சி?

பதில்: முதல் நாள் அமைதியாக சந்தோசமாக ஆரம்பமானது. முதல் நிகழ்ச்சி சுபாஷ் அண்ணாவுடன் சேர்ந்து எல்லாப்புகழும் ஒருவனுக்கே நீ ஓடிக்கொண்டிரு என்ற பாடலோடு ஊட ஆரம்பித்தேன் ஓடிக்கொண்டிருக்கேன்.

கேள்வி: ஒரு துடிப்பான ஒலிபரப்பாளனாக நல்ல எழுத்தாற்றல் கொண்டவனாக அதை விட நல்ல நண்பனாக எங்களுக்கு தெரிந்த இவனின் அடுத்த பரிமாணம் என்ன? இதை கேட்டவர் ஒரு போட்டி வானொலியில் வேலை செய்யும் அறிவிப்பாளர்.

பதில்: நல்ல நண்பன் என்று சொன்னது உண்மையில் மற்ற இரண்டு விடயங்களையும் விட சந்தோசமானது. காரணம் இந்த துறையில் போட்டி இருக்கு அதை விட நட்பு இருக்கின்றது என்பதை உணர்த்திவிட்டீர்கள். அடுத்த பரிமாணம் என்ன எதையும் ப்ளான் பண்ணல என் வாழ்க்கையில் எல்லாம் தன் பாட்டில் நடக்கின்றது. ஓடுவோம் ஓடிக்கொண்டே இருப்போம். அதேபோல நம்பிக்கையோடு போராடிக்கொண்டே இருப்போம்.

கேள்வி: வெற்றியில் இருந்து போகும் நீங்கள் இந்த துறையை விட்டு ஒரேயடியாக போய் விடுவீர்களா அல்லது படிப்பு முடித்து வருவீர்களா?

பதில்: உண்மையில் அந்தக்கணம் நான் இந்த துறையில் மீண்டும் வருவேன் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் படிப்பை முடித்த பின் எப்படியும் என் வாழ்க்கை இன்னொரு மாற்றத்துக்குள் சென்று விடும் என எனக்குத் தெரியும். எனவே வாய்ப்புக்குறைவு என்றே சொனேன். சொல்லிவிட்டு எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்து படுத்தால் இரவில் தூக்கம் இல்லை. இன்னும் நான் தூங்க தொடங்கவில்லை. நேசித்த ரசித்த தொழில் அதைவிட பாசமான சொந்தங்களான நேயர்கள் இவர்கள் இல்லாமல் வாழ்க்கை ஏனோ வெறிச்சோடிப்போய் இருக்கின்றது. இன்றும் நேயர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் எஸ்.எம்.எஸ் எல்லாம் என்னை மீண்டும் வா வா என்கின்றது. அந்த இறுதி நிகழ்ச்சியை கேட்டு அழுதோம் என சொல்லும் நேயர்கள் பலர் அதை விட இதே துறையில் இருக்கும் பலர் இவர்கள் எல்லாம் எனக்காக ஒரு சொட்டுக்கண்ணீர் வடித்தனர் இந்த பாசம் எங்கே கிடைக்கும். உறவுகள் பெரிதாக இல்லை என்று சொன்ன எனக்கு இதோ உனக்கு ஒரு அக்கா ஒரு அண்ணா தம்பி தங்கை என ஒவ்வொரு உறவும் இருக்கு என்று கலையகத்துக்கு அழைப்பெடுத்து அழுத அந்த நல்லுள்ளங்களுக்கு நான் என்ன செய்யப்போகின்றேன்.

என்னால் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும். இன்னும் இந்த துறையில் படிக்க சாதிக்க நிறைய இருக்கும் போது நான் இதுவரை செய்த நிகழ்ச்சிகளை கேட்டு எனக்கும் ஆதரவளித்தவர்களுக்கு நன்றிகள் ஆனால் உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை இந்த பதிவின் இறுதியில் சொல்கின்றேன்.

கேள்வி: உங்கள் காதல் கதை?

பதில்: என் பெற்றோரை தொழிலை காதலிக்கின்றேன். ஆனால் நீங்கள் என்ன கேட்கின்றீர்கள் என தெரியும் என் வாழ்விலும் ஒரு காதல் வந்தது ஆனால் சில காரணங்களால் அது தோற்றுவிட்டது. இந்த இடத்தில் அந்த நபருக்கு என் நன்றிகள். காரணம் இன்று நான் சந்தோசமாக இருக்கவும் இத்தனை சொந்தங்களை பெறவும் காரணமாக இருந்தது அந்த காதல் தோல்விதான். கேள்வி கேட்டவரே போதுமா?
நினைவில் நின்ற கேள்விகளை மீட்டு இங்கே பகிர்ந்துள்ளேன். நிகழ்ச்சி நடந்துகொண்டே இருக்கும் போது என் தனிப்பட்ட தொலைபேசிக்கே பல எஸ்.எம்.எஸ்களும் அழைப்புக்களும் வந்திருந்தன. அதில் மற்ற வானொலி, தொலைக்காட்சியில் இருந்து சாதித்தவர்கள் சிலரும் அடங்கி இருந்தது எனக்கு கவலையிலும் சந்தோசம் கொடுத்தது, காரணம் என்னையும் இவர்கள் கவனித்திருக்கின்றார்களே என்று. இன்றும் அந்த நட்புக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அதிலும் ஒருவர் தாங்கள் ஒரு குட்டி லோஷனை மிஸ் பண்ணப்போகின்றோம் என என் மீது கொண்ட அன்பு மேலீட்டால் சொல்லிவிட்டார். அதேபோல இன்னொரு அறிவிப்பாளரும் அவர் நண்பன் ஒருவர் இதை சொன்னதாக சொன்னார். உண்மையில் நீங்கள் அப்படி சொன்னது சந்தோசம் காரணம் என் குருவும் நான் ரசித்து ரசித்து வளர்ந்தவரும் அவர்தான். இதை விட பெரிய விடயம் வேறு என்ன இருக்கும் எல்லோருக்கும் அந்த துறையில் வரும் போது சாதித்த ஒருவரை போல தாங்களும் வர வேணும் என்பதே இலட்சியமாக இருக்கும். அந்த அன்பு வார்த்தைகளுக்கு நிச்சயம் நான் தகுதியானவன் இல்லை. நான் இன்னும் படிக்கவே பல இருக்கின்றது. அதைவிட இன்னொரு சுவாரஷ்யமான விடயமும் நான் இதில் சொல்ல வேண்டும். சினிமாலை நிகழ்ச்சியை அடுத்தவாரத்தில் இருந்து நீதான் செய்யப்போகின்றாய் என அப்போது நான் சொன்ன விடயம் அண்ணா வெற்றியின் ஒரு அறிவிப்பாளனாய் அந்த நிகழ்ச்சி எனக்கு கிடைப்பது சந்தோசம் ஆனால் உங்களின் ஒரு ரசிகனாக எனக்கு அது கவலை. காரணம் உங்களுக்காகவே சினிமாலை கேட்டவன் நான். இனி நான் எப்படி அதை செய்வேன்?

நிகழ்ச்சியில் இடை இடையே ரஜீவ் தன் சொல்லாளுமையாலும் தகுந்த பாடல்களினாலும் கலங்கடித்து விட்டார். இனி ஒரு அறிவிப்பாளனாய் இந்தக் கலையகத்துள் வர முடியாதே. நேயர்களின் தொலைபேசி அழைப்பெடுக்க முடியாதே. உங்கள் கவிதைகளை வாசிக்க முடியாதே, காற்றி சிறகுகளின் ஆகைய முகவரியில் உங்கள் கடிதங்களுக்கு குரல் கொடுக்க முடியாதே என என்னும் போது கலங்கத் தொடங்கினேன். அந்த நேரம் பார்த்து ஒலித்த பாடல் விடுகதையா இந்த வாழ்க்கை. பொதுவாக நான் பாடல் தெரிவுகளை செய்யும் போது நம்மை அந்த இடத்தில் வைத்து பார்த்து தான் தெரிவு செய்வேன். இது கொஞ்சம் ஓவர் தான் ஆனால் இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் என்னை வாளால் வெட்டியது போல இருந்தது. அதில் வந்த ஒரு வரி வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்..... என்று வந்தது நான் போவதும் வாழ்வை தேடி கிடத்தட்ட வடக்கே தானே. அழுதே விட்டேன். ரஜீவும் நானும் கலங்கி இருக்க அதன் பின் வந்த எந்த அழைப்பையும் நான் எடுத்துப் பேசவில்லை. பேசும் நிலையில் நான் இல்லை. ஏதோ ஒரு கவசம் இல்லாமல் போவது போல இருந்தது. ஏதோ பெரிய இழப்பு என்று வாட்டியது.

இந்த நிகச்சியை எப்படியாவது பதிவு செய்ய வேண்டும் என்று பார்த்து ஒன்றல்ல இரண்டு ஏற்பாடு செய்தேன். அலுவலகத்தில் இணையத்தில் வெற்றி ஒலிக்கும் நேரம் அதேபோல வீட்டில் கசட்டில் ஒலிப்பதிவு செய்தால் இடையில் நம் இணைய ஒலிபரப்பு தடைப்பட்டுப்போக அதை கைவிட வேண்டிய நிலை. சரி வீட்டில் சரியாய் இருக்கும் தானே என்று வந்து பார்த்தால் நன் செய்தி வாசிப்பதும் இறுதியில் விடைபெறுவதும் மட்டும் இருக்கின்றது. என்ன கொடுமை சார் இது. ஒருவாறு வழக்கம் போல விடை பெற என்ற எண்ணத்தில் எங்கள் மன நிலையை இலகுவாக்கி கொண்டோம். புதியவர்கள் வரப்போகின்றார்கள் அவர்களுக்கும் நேயர்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் என் நானாட நீயாட விடைபெறல் ஸ்டைலில் வரட்டாவுடன் விடை பெற்றேன். இறுதிப்பாடல் நாடோடி நண்பா போகாதே.............எனை ஈன்ற பூமி எனை அங்கு தேடும் என் தொட்ட பூவெல்லாம் காணாமல் வாடும் எனவே வருவேன் என்பதே வெற்றியில் என் இறுதி வார்த்தைகள்.

ஒருவாறு விடைபெற்று வீடு வந்து சேர்ந்தேன். வந்திருந்த எஸ்.எம்.எஸ்கள் எல்லாவற்றுக்கும் பதில் அனுப்பிக்கொண்டிருந்த போது லோஷன் அண்ணாவின் எஸ்.எம்.எஸ் வந்தது அதை அப்படியே இங்கே இடுவிடுகின்றேன். Good show da. Sentimental. All the best for ur new future. Its all in the game of life. Thanks for the nice words about me. take care. தொடர்ந்து காலையிலும் எனக்கு வாழ்த்தியதோடு என்னைப் பற்றி நன்றாக கூறி இருந்தார். அண்ணா நன்றி மட்டும் தான் என்னால் சொல்ல முடியும் ஆனால் நான் தடுமாறிய வேளைகளிலும் இன்னும் சில சூழ்நிலைகளிலும் எனக்கு ஆதரவாகவும் ஆலோசனைகளை தந்தமைக்கும் நன்றி மட்டும் தான் சொல்லமுடியும். அதே போல வெற்றிக் குடும்பமும் நீங்களும் சொல்லித்தந்த இந்த தொழிலை இந்த கலையை நான் எங்கிருந்தாலும் உங்கள் பெயரை காப்பாற்றுவது மட்டுமே நான் செய்யும் கைம்மாறு.

வெற்றிக்குடும்பமே, ஜேசன்,தினேஷ்,செய்திப் பிரிவை சேர்ந்த பென்சி அண்ணா,ரஜினி அண்ணா, அருண்,விஜய்,லெனின்,சிறியான் இன்னும் அங்கே இருக்கும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் உயர் அதிகாரிகளுக்கும் உங்கள் அன்புக்கு நன்றி. என் பிரியமான நேயர்களே, உங்களை ரொம்பவே விட்டு செல்கின்றேன். இந்த இழப்பை எப்படி ஈடு செய்வேன் தெரியவில்லை. வெற்றிக்கான உங்கள் ஆதரவுக்கு நன்றி. அதேபோல ஒரு நாள் நானும் புதுமுகம்தான் எனவே அடுத்து புதிதாய் வருபவர்களுக்கும் உங்கள் ஆதரவைக் கொடுங்கள். உங்கள் ஆதரவு இல்லாவிட்டால் எந்த ஒரு அறிவிப்பாளரும் நிலைக்கமுடியாது. எனவே அவர்களையும் வளர்த்துவிடுங்கள். பதிவுலக நண்பர்களே பின்னூட்டத்திலும் சரி சில பதிவுகளிலும் சரி என்னை பற்றி நல்ல விதத்திலும் சரி குறைகளையும் சரி விமர்சித்த உங்களுக்கும் என் நன்றிகள்.

அந்த சந்தோஷமான செய்தி என்ன..... சிலவேளை நான் என் கல்வியோடு நான் செல்லும் நாட்டில் இருந்து இயங்கும் ஒரு சர்வதேச வானொலியில் இணைந்து மீண்டும் இதே துறையில் பயணிக்கும் வாய்ப்பிருக்கின்றது.....ஒரு நண்பர் இது பற்றி பேசி இருக்கின்றார்.......இந்த துறையை விட்டு இருக்க முடியாது....எனவே சிந்திப்போம் என்ற நம்பிக்கையில் இப்போது விடைபெறுகின்றேன் விடைபெறும் நான் என்றென்றும் ப்ரியமுடன் உங்கள் பிரியமானவன் சதீஷ்.
Share:

Sunday, November 22, 2009

வானலையில் வெற்றிகரமாக ஒரு வருடம்.

காலம் சிலரை எங்கேயோ கொண்டு போய் விட்டு விடும் இல்லாவிட்டால் வடமராட்சியில் பிறந்து வரணியில் தவழ்ந்து இன்று வெற்றியோடு நான் தவழ்வதை என்னவென்று சொல்வது. சரி விசயத்துக்கு வா என்பது புரிகிறது. வெற்றி வானொலியில் வானலை வழியே உங்களை நான் சந்தித்து இன்றுடன் ஒருவருடமாகிவிட்டது. அதற்காக சில நினைவு மீட்டல்கள் தான் இந்த பதிவு.

நான் கொழும்பில் ஒரு விடுதியில் இருந்த காலம் என் கைத்தொலைபேசியில் எல்லா வானொலிகளையும் கேட்பேன். ஒருநாள் அலைவரிசைகளை செட் செய்யும் பொது தொடர் இசையாக பாடல்கள் ஒலித்த ஒரு அலைவரிசை தட்டுப்பட்டது. பாடல்கள் நன்றாக இருக்கே என கேட்க ஆரம்பித்தேன். சில நாட்கள் செல்ல கற்றது கையளவு என்னும் நிகழ்ச்சியில் நானும் என் கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன். அத்துடன் ஒரு சொல் ஒரு கானம் நிகழ்ச்சியிலும் பங்குபற்றியுள்ளேன். அதை தொடர்ந்து காற்றின் சிறகுகள் நிகழ்ச்சிதான் என்னை மாற்றிப்போட்டது எனலாம். எனக்கும் சுபாஷ் அண்ணாவிற்கும் இடையில் சிறு மோதலோடு தான் பேச்சு ஆரம்பமானது, அதன் பின் என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் நபர் அவர் என தெரியாமல். மோதல் எப்படி காதலாகுமோ அதேபோல எங்களுக்குள்ளும் மோதல் இல்லாமல் போய் நல்ல நட்பு சகோதரத்துவம் ஏற்பட்டது.

இந்த நேரம் தான் எனக்கு வானொலி ஆசை கொஞ்சம் எட்டிப்பார்த்தது. ஒரு இணையத்தில் இயங்கும் பிரபல வானொலியில் நேர்முகத்தேர்வுக்காக போனேன். நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டாலும் அந்த நிலையம் அமைந்துள்ள இடம் ரொம்ப தூரமாக அமைந்தது என் வீட்டுக்காரருக்கு கொஞ்சம் விருப்பமின்மையை ஏற்படுத்தியது. இதை நான் சுபாஷ் அண்ணாவுடன் பகிர்ந்து கொள்ள அவர் சொன்ன வார்த்தை உனக்கு வெற்றியில் ஒரு நேர்முகத்தேர்விற்கு வாய்ப்பினை உண்டு பண்ணிவிடுகின்றேன் ஆனால் மிகுதி உன் கையில் உன் திறமையில் என்றார். நானும் சரி என்று விட்டேன். இந்த இடத்தில் என் பெற்றோருக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம் நான் என்ன செய்தாலும் எனக்கு முழு சுதந்திரம் கொடுப்பவர்கள் இவர்கள். இல்லாவிட்டால் வாழ்க்கையில் விழுந்து போன என்ன தாங்கிப்பிடித்து எழுப்பிவிட்டிருப்பார்களா?


நேர்முகத்தேர்வுக்கான நாளும் வந்தது நான் என் பெற்றோருடனும் ஒரு அண்ணாவுடனும் வெற்றி அலுவலகத்துக்கு போனேன். இதில் இன்னொரு முக்கியமான விடயம் இதுவரை எனக்கு சுபாஷ் அண்ணாவின் முகமே தெரியாது. தொலைபேசியில் பேசியது மாத்திரமே. அலுவலகத்தில் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு காத்திருக்க ஒரு பெண் வந்து என்னை அழைத்து போனார். அவர்தான் பூஜா அக்கா. நேரடியா Recording அறைக்கு என்னை அழைத்து போக அங்கே ஒருவர் இருந்தார். எனக்கு அவரையும் யாரென தெரியாது. அந்த அறைக்குள் இருந்த கண்ணாடியாலான இன்னொரு அறைக்குள் ஒலிவாங்கி இருக்கும் இடத்துக்கு என்னை போகச் சொன்ன அந்த நபர் தானும் உள்ளே வந்து ஒலிவாங்கியை எனக்கு சரி செய்துவிடும் போது உங்கள் பெயர் என கேட்க விமல் என்றார். உடனே நான் நீங்கள் தானே எங்க பாடசாலையில் படித்தீர்கள் என சொல்ல அவரும் ஆமாம் என சொல்லிவிட்டு என் குரலை பதிவு செய்யத் தொடங்கினார்.

செய்தி அறிக்கையை நான் வாசித்துக்கொண்டிருந்த போது லோஷன் அண்ணா உள்ளே வந்து நிறுத்த சொல்லிவிட்டு ஒரு நிகழ்ச்சி செய்ய சொன்னார். நானும் காற்றின் சிறகுகள் செய்து காட்ட Fast ஆக ஒரு நிகழ்ச்சி செய்யும் படி சொல்ல பகல் பந்தி செய்து காட்டினேன். வெளியே வரச்சொல்லி இப்போ சின்ன வயது தானே இன்னும் காத்திருக்கலாமே என்றார். எனக்கும் பயமாக இருக்க தாங்கள் மீண்டும் அழைக்கிறோம் இப்போ போகலாம் என்றார். நானும் வீட்டுக்கு வந்தாலும் சுபாஷ் அண்ணாவை நையப்புடைந்து கொண்டே இருந்தேன். என் குடைச்சலகளுக்கு கோபப்படாமல் பதில் சொல்லியே அவர் களைத்திருப்பார்.(அதற்கு பிறகு அண்மையில் தான் அன்றைய தினம் என்னை எடுப்பதா இல்லையா என்ற விடயத்தில் என்ன முடிவு என்ன பேசினார்கள் என்பதை விமல் அண்ணா மூலம் அறிந்தேன். விமல் அண்ணா உங்களுக்கு என் நன்றிகள். அத்துடன் நீங்கள் நடுநிலையாக நடந்தது மகிழ்ச்சியாக உள்ளது.)

அதன் பின் இன்னும் மூன்று முறை நேர்முகத்தேர்வு எல்லாம் முடிந்து நவம்பர் மாதம் மூன்றாம் திகதி அலுவலகத்தில் நானும் ஒரு ஊழியனாய் இணைந்தேன். ஆரம்பகால பயிற்சிகள் ஆரம்பித்தன. அப்போது எனக்கு இரண்டு பேரைக்கண்டால் பயம் ஒன்று விமல் அண்ணா இன்னொருவர் சந்துரு அண்ணா இரண்டு பேரும் ஏதாவது கேட்டு அன்று ஒரு ரணகப்படுத்தாமல் விடமாட்டார்கள். இன்று விமல் அண்ணா நல்ல அண்ணாவாக நல்லா நண்பனாக மாறினாலும் இன்னும் எனக்குள் அந்த பயம் போகவில்லை. ஆனால் இப்போது தான் உணர்ந்தேன் அது பயம் மட்டுமலல மரியாதையும் என்று.( ஆனால் நம் பாடசாலைக் காலத்தில் விமல் அண்ணா எங்களுக்கு சீனியர் அதை நினைத்தால் இன்றும் நடுங்கும்.) சந்துரு அண்ணாவும் தன் கண்டிப்பை குறைத்தாலும் இன்று நல்ல நண்பனாக அதேநேரம் என் தயாரிப்பு பணிகளில் நல்ல உதவியாக இருக்கின்றார்.

அடுத்து ஹிஷாம் அண்ணா செய்தி வாசிப்பதில் கவனிக்கவேண்டிய விடயங்களை முதலில் சொல்லித்தந்தவர். எங்கள் உதவி முகாமையாளர். பெரிதாக கோபப்படமாட்டார் ஆனால் வேலை சரியாக இருக்கவேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர். இப்போது எங்கள் மாலை நேரத்து வேலை நேர உற்ற நண்பனாக. அடுத்து பிரதீப் அண்ணா, ஆரம்பத்தில் நான் ஒருநாள் இவரிடம் வாங்கிய திட்டு தான் இன்று என்னை பக்குவப்படுத்தியுள்ளது. நன்றி அண்ணா. அதேபோல சகலவிடயங்களையும் சொல்லித்தருவதில் இவருக்கு நிகர் இவரே. ஆரம்பத்தில் எனக்கு பாடல்கள் பற்றிய அறிவை வளர்க்க பெரிதாக உதவியவர் இன்றும் என் பாடல்தெரிவுகளுக்கு ஆதாரமாக விளங்குபவர். செந்தூரன் அண்ணாவுடன் பெரிதாக பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.ஆனால் அவரின் அறிவுரை இன்றும் பயன்படுகின்றது. தான் நாடு விட்டு போகமுதலே எங்கள் கனவில் முதல் தீபத்தை ஏற்றிவைக்கும் வண்ணம் தன் அனுபவத்தை பகிர்ந்து போன அன்பு அண்ணா. இன்றும் வாழ்த்தி இருக்கின்றார். நன்றி அண்ணா.
.

அடுத்து பூஜா அக்கா, நேர்முகத்தேர்வுக்கு சென்ற நேரம் என்னை அழைத்து சென்றவர். இவரின் பகல் பந்தி எனக்கு பல அனுபவங்களை பெற்றுத்தந்த களம். அனேகமாக பகல் பந்தி நிகழ்ச்சி செய்யும் போது அதை பார்த்து பார்த்து நல்ல விடயங்களை கற்றுக்கொண்டேன். இந்த நேரம் தன்னால் முடிந்த அளவு எனக்கு நிகழ்ச்சி பற்றி சொல்லி கொடுத்த அக்காவிற்கு நன்றிகள். அடுத்தவர் வைதேகி அக்கா, இப்போது என் குறைகளை சொல்லி திருத்துவது மட்டுமில்லாமல் உள்ளதை உள்ளபடி சொல்லி விடுவார். ஆரம்பகாலத்தில் என் செய்திகளை அவர் தந்தை சர்வானந்தா அவர்கள் கேட்டு (பிரபல வானொலி அறிவிப்பாளர்.) நன்றாக இருக்கு நல்லா வருவான் என சொல்லி எனக்குள் நம்பிக்கை அளித்தவர்.

சுபாஷ் அண்ணா எப்போதும் மாலையில் வருவார் ஆனால் என் தயாரிப்பு வேலைகள் செய்ய பிள்ளையார் சுழி போட்டவர். முகம் தெரியாமலே உதவியவர் முகத்துக்கு நேரே நல்ல சகோதரனாக மாறிவிட்டார். அடுத்து லோஷன் அண்ணா. என் ஐந்தாம் ஆண்டில் இருந்து நான் தொடர்ந்து வந்த ஒரு சாதனையாளர். வானொலி அறிவிப்புத் துறையில் என் மானசீக குரு. இதை வெறும் பேச்சுக்காக சொல்லவில்லை. எந்தளவிற்கு நான் விஜய் ரசிகன் என நீங்கள் எண்ணுகின்றீர்களோ அதேபோல இங்கே லோஷன் அண்ணாவின் ரசிகன்.(விஜயை ஒப்பிட காரணம் எல்லோரும் என்னை விஜயின் தீவிர ரசிகனென நன்கறிந்திருப்பதே.) இதனால் தானோ என்னவோ அவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு அவர் நிகழ்ச்சி செய்யும் நேரம் அவர் அருகே இருந்து ரசித்து பார்த்திருக்கின்றேன். அத்தனை விடயங்களையும் அறிந்து விட்டீர்களா என கேட்டு எங்கள் ஆவலை அதிகரிப்பதுடன் தெரியாத விடயங்களை தானே சொல்லித்தரும் நல்ல மனது. முகாமையாளர் என்னும் பதவியில் இருந்தாலும் பழகுவதில் அவர் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அண்ணாவே. (அண்ணா உங்களிடம் வேலை செய்த ஒருவர் எனக்கு சொன்னது லோஷன் அண்ணாவின் முகாமைத்துவத்தின் கீழ் வேலை செய்ய முடியாத யாரும் இன்னொருவரின் கீழ் வேலை செய்ய முடியாது என்று. இது என் அனுபவத்திலும் உண்மை.) இப்படி எத்தனையோ இனிமையான நினைவுகள் இருந்தாலும் இந்த பயிற்சிக்காலம் ஒரு முட்படுக்கையே.

நாங்கள் வெற்றியோடு இணைந்து அடுத்த வாரமே ஒரு சில வேண்டத்தகாத சம்பவங்கள் லோஷன் அண்ணாவிற்கு நடக்க உள்ளே வெளியே ஆட்டம் நடந்தேறியது. என்ன நடக்கப்போகின்றது என தெரியாமல் எல்லோரும் விழி பிதுங்கிய நேரம் ஹிஷாம் அண்ணா சொன்னார் நாளை சதீஷ்,வனிதா இருவரும் நிகழ்ச்சி செய்யப்போகின்றீர்கள் ஆனால் உங்கள் பெயர் சொல்லக்கூடாதென. மனதிலே பயமும் வலியும் கலந்திருக்க கடந்தவருடம் நவம்பர் இதே தினம் ஒரு சனிக்கிழமை என் கன்னிக்களம் சுபாஷ் அண்ணாவுடன் அரங்கேறியது நானாட நீயாடாவில். எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்ற பாடலோடு நானும் நதியாக ஓடத்தொடங்கினேன்.அந்த நிகழ்ச்சியில் நான் விட்ட பிழைகள் எல்லாவற்றையும் திருத்தி எனக்கு நல்ல வழி காட்டினார் அவர். இதில் இன்னொரு சந்தோசமும் சேர்ந்துகொண்டது அதுதான் லோஷன் அண்ணா உள்ளே வெளியே ஆட்டம் முடித்து வீட்டுக்கு வந்து விட்டார். எவர் எனக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டரோ அவருடன் என் பயணம் ஆரம்பமானது இரட்டிப்பு சந்தோசம். மறுநாள் விமல் அண்ணாவுடன் அமரகானங்கள் மற்றும் ஒரு சொல் ஒரு கானம். அன்று நான் நன்றாக மாட்டி கொண்டேன். ஆனால் இன்று அதுவும் படிப்பினையாக மாறி உதவி புரிகின்றது. தொடர்ந்து அனேகமாக எல்லோருடைய நிகழ்ச்சியிலும் இருந்து அவர்கள் நிகழ்ச்சி செய்யும் விதத்தை பார்த்து கற்றுக்கொண்டேன்


இப்படியே போகப் போக குறுகிய காலங்களிலேயே வாங்க நீங்க நிகழ்ச்சி வாய்ப்பும் கிடைத்தது. ஒருநாள் சுபாஷ் அண்ணா தன் வீட்டுக்கு கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு போக வேண்டும் என்பதற்காக என்மேல் முழு நம்பிக்கை வைத்து காற்றின் சிறகுகள் நிகழ்ச்சியை ஒப்படைத்தார்.

இதற்கு காரணமும் இல்லாமல் இல்லை, நானாட நீயாட நிகழ்ச்சியில் அடிக்கடி வெளியே சென்று என்னை தனியே செய்ய விட்டு எனக்கு பயத்தை போக்கி அனுபவத்தை வளர்த்தார். அந்த நம்பிக்கையை லோஷன் அண்ணா என்மேல் வைக்க முதல் முறையாக காற்றின் சிறகுகளில் தனி ஆவர்த்தனத்தை தொடங்கினேன். நிகழ்ச்சி முடிந்த உடன் சுபாஷ் அண்ணாவிற்கு அழைப்பெடுத்து சரியாக செய்தேனா என கேட்டேன் அவரும் குறைநிறைகளை சொல்லி மேலும் உதவினார். மறுநாள் காலை லோஷன் அண்ணாவிடம் இருந்து நேற்றைய நிகழ்ச்சி சூப்பர் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் என்ற எஸ்.எம்.எஸ் வந்தது இன்றும் என் தொலைபேசியில் இருக்கிறது அது. இன்று அதே நிகழ்ச்சி எனக்கு வழங்கப்பட்டிருப்பது இன்னொரு ஆச்சரியம். இதை அடுத்து பூஜா அக்காவும் என் மேல் தன் நம்பிக்கை வெளிப்பாட்டை பகல் பந்தியைக் கொடுத்து வெளிப்படுத்த நான் அதை பயன்படுத்திக்கொண்டேன். கிறிஸ்மஸ் தினத்தன்று நத்தார் தாத்தாவாக நான் செய்த அட்டகாசத்துக்கு கிடைத்த பாராட்டுகள் இன்னும் சந்தோஷ அலைகள்.

இப்படியே போகப்போக என்றென்றும் உங்கள் பிரியமானவனாக வலம் வர தொடங்கினேன். இந்த ஆண்டின் முதல் நாள் விடியலில் லோஷன் அண்ணா மூலம் நானும் வனிதாவும் உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டோம். அன்றும் இரவு காற்றின் சிறகுகளோடு வந்த நான் அதன் பின் இரு வாரங்கள் நெருப்பு காச்சலால் வைத்தியசாலையில் இருந்து மீண்டும் வந்தேன். அதன் பின் தொடர்ந்து குதூகல குவியல், இருபது புது இசை, வேகம் விவேகம், கற்றது கையளவு, அதிரடி புதிரடி, வினோத வியூகம், எங்கேயும் எப்போதும், சினிமாலை, விடியல் என பெரும்பாலான நிகழ்ச்சிகள் செய்து விட்டேன். இதில் சினிமாலை நிகழ்ச்சி லோஷன் அண்ணா செய்தது ஒருநாள் அவர் சொன்ன வார்த்தைகள் தான் கஷ்டப்பட்டு ரசித்து ரசித்து தயார் செய்த நிகழ்ச்சி உனக்கு வழங்கியுள்ளேன் கெடுத்துவிடாதே என்று. அதேபோல முழு சுதந்திரத்துடன் உன் ஸ்டைலில் செய் என சொல்லிவிட்டார். ஓரளவிற்கு நன்றாக அந்த நிகழ்ச்சியை கொண்டு செல்கின்றேன் என நம்புகின்றேன். அதேபோல்தான் விடியல் என் மனதுக்குள் ஒரு எட்டாத கோட்டையாக இருந்த நிகழ்ச்சி, சுபாஷ் அண்ணா விடை பெற்று செல்லும் போது உனக்கு இனி காலை நேர நிகழ்ச்சி தான் குறியாக இருக்க வேண்டும் அந்தளவிற்கு உன் செயற்பாடு அமைய வேண்டும் என்பதை எனக்குள் பதித்து போனது. இன்னும் உலாவரும் உற்சாகம், ஏன் எதற்கு எப்படி,அவதாரம், தாம் தூம் மட்டுமே எனக்கு எட்டாக்கனியாக இருக்கின்றன.

இப்படியே சென்ற எனக்கு இன்னொரு வாய்ப்பு செய்தி அறிக்கை மூலம் கிடைத்தது. ஒருநாள் காலை லோஷன் நான் இன்று மதியம் செய்தி வாசி என சொல்ல நானும் சரி சொல்லி விட்டு அலுவலகம் சென்ற நேரம் காலை பதினொன்று நாற்பது. அன்றுதான் என் வாழ்க்கையில் இன்னொரு சரிவை சந்தித்த நாள். ஆனால் அதை யாரிடமும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நான் தடுமாறி செய்தி வாசிக்க உள்ளே சென்றுவிட்டு இறுதி நேரம் வைதேகி அக்காவிடம் கொடுத்து விட்டு வெளியேறிவிட்டேன். இதனால் எல்லோரிடமும் கொஞ்சம் பேச்சு வாங்கவேண்டிய நிலை. அப்போதும் இருநாள் கழித்து மீண்டும் எனக்கு அந்த வாய்ப்பினை லோஷன் அண்ணா வழங்கினார். செய்தி வாசித்து விட்டு வந்ததன் பின்னர் அவர் சொன்ன வார்த்தைகளும் மறக்கவில்லை. சங்ககாரபோல எப்போதும் போர்மில் இரு மஹேல போல அடிக்கடி Form அவுட் ஆகிடாதே என்று. ஒரு சில நாட்களிலேயே காலை நேர செய்தி அறிக்கை வாசிக்கும் வாய்ப்பை லோஷன் அண்ணா வழங்கினார்.


இதுவரை நான் சொன்னவர்கள் உங்களுக்கும் தெரிந்தவர்கள் இவர்களை விட அருந்ததி அக்கா எப்போதும் பெரிய பலம். அறிவுரைகளும் அனுபவ பாடமும் அவரிடம் கிடைக்கும். அடுத்து திஷோ அண்ணா, எப்போதும் சிரித்த முகம் சிறுபிள்ளை போல குறும்புத்தனம். ஆரம்பத்தில் ஒரு பிரச்சனை எனக்கும் அவருக்கும்.ஆனால் அடுத்தடுத்த நாட்களிலேயே எல்லாம் சரியாகிவிட்டது. அண்ணா இந்த நேரத்தில் அந்த சம்பவத்துக்கு உங்களிடம் மன்னிப்பு கோருகின்றேன். இவரை பற்றி சொல்ல வேண்டுமாக இருந்தால் என் பாடல் விருப்பம் அறிந்தவர். அமரகானங்களில் எனக்காக பாடல் போட்டு அசத்தியவர். இப்போதும் இது உனக்கு ஏற்ற பாட்டு போடு என சில பாடல்களை தருபவர்.

அடுத்து செய்திப்பிரிவில் தெரியாதைதை சொல்லித்தரும் பென்சி அண்ணா, தன் வேலையில் கண்ணாயினும் எங்களுக்கு அறிவுரைதரும் ரஜினி அண்ணா என் நண்பர்கள் அருண், விஜய், லெனின்,ஸ்ரியான்(நம்மா சீயான்) என எல்லோரும் என் ஒரு வருட படிக்கட்டை தாங்கி நிற்பவர்கள். இதில் ஜெய்சன் தினேஷ் இருவரும் அடிக்கடி காணாமல் போனாலும் என் வெற்றிப்பயணத்தின் ஒவ்வொரு கற்கள்.

அடுத்து என்னுடன் வெற்றியில் இணைந்து குருவியாக வலம் வந்து இன்று உங்களுக்கும் எனக்கும் இனிய தோழியாக இருக்கும் வனிதா, நாங்கள் இணைந்ததன் பின் இணைந்து இப்போது என் இணைபிரியா நண்பனாக காற்றின் சிறகுகள் நிகழ்ச்சியில் என் பாடல்தெரிவுகளின் குறை நிறைகளை சுட்டிக்காட்டி என் பாடல் அறிவை மேம்படுத்தும் அன்பு நண்பன் ரஜீவ் இவர்களின் துணை என் வெற்றிப் பயணத்தில் கிடைத்தது. வெற்றியில் இப்போது இணைந்தாலும் அனுபவமுள்ள பாபு, பிர்னாஸ், தினேஷா என எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் என்னை மேம்படுத்த உதவுகின்றனர்.
லோஷன் அண்ணா முதல் பிர்னாஸ், தினேஷா வரை ஒவ்வொருவரிடம் இருந்தும் நிறைய கற்றுக்கொண்டிருக்கின்றேன்.

இவர்கள் எல்லாரையும் போல என் வெற்றிப் பயணத்தில் பிரதான பங்காளிகள் என் பிரியமான நேயர்கள். என்னையும் ஒரு அறிவிப்பாளனாக ஏற்றுக்கொண்டு ஆதரவை வழங்கிவரும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகள். உங்களிடம் இருந்து கூட நல்ல பாடல் அறிவு, இன்னும் பல பொது விடயங்களை கற்பதோடு உங்கள் வீட்டில் ஒருவனாக ஏற்று அன்புதரும் நேயர்களும் இருக்கின்றார்கள் என்ற சந்தோசத்தில் உங்கள் அன்புக்கு தலை வணங்குகின்றேன். ஒரு வருடம் கடந்தாயிற்று.... இன்னும் பல வருடம் வெற்றிக்குடும்பத்தோடு வெற்றிகரமாக வலம் வரலாம் என்ற நம்பிக்கையில் இன்று வாழ்த்திய அத்தனை பேருக்கும் நன்றிகளோடு விடைபெறுகின்றேன்.
Share:

Wednesday, September 30, 2009

லோஷனுடன் அந்தரங்கம். பகுதி- 1



லோஷன். இந்த பெயர் இலங்கை வானொலி வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர். தமிழ் சினிமாவில் எப்படி ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நடிகர்கள் ஆண்டார்களோ அப்படி இப்போது இலங்கை வானொலிகளின் சூப்பர் ஸ்டார் லோஷன் அண்ணா தான். கடந்த பத்து வருடங்களாக அறிவிப்பு துறையில் கலக்கிக்கொண்டிருக்கின்றார். அங்கே கலக்கியது போதாதென்று இப்போது பதிவுலகிலும் தன்னை ஒரு முன்னணி பதிவராக நிலை நிறுத்தி பல பதிவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் லோஷன் அண்ணாவை என் ஐந்தாம் ஆண்டில் இருந்து வானொலியில் தொடர்ந்தவன் நான்.

முதல் முறையாக பார்த்த நாளே இன்னும் நினைவை விட்டு அகலா நிலையில் இன்று அவருடன் அருகாமையில் இருப்பது மகிழ்வளிக்கிறது. லோஷன் அண்ணாவிடம் பலருக்கு பல கேள்விகளை கேட்க மனதில் ஆசை இருக்கும் ஆனால் சந்தர்ப்பம் கிடைக்காது. சிலருக்கு இந்த கேள்வியை கேட்டால் அவர் எப்படி பதில் சொல்வார்? சங்கடப்படுவாரா என தாங்கள் சங்கடப்பட்டு கேட்காமல் விட்டோரும் பலர். இப்போது என் முறை கேள்விகளால் அவர் அந்தரங்கங்களுடன் உங்களை சந்திக்கின்றேன்.


லோஷன் அண்ணாவுடன் நான்...இரண்டு பேரும் பக்கத்திலேயே நின்று கொண்டு தொலைபேசியில் எங்களுக்குள் பேசவில்லை.
இங்கே நான் கேள்விகளை கேட்க லோஷன் அண்ணா தன் மனம் திறந்து உள்ளதை உள்ளபடி கொட்டி உள்ளார். இப்படி ஒரு பதிவு இடப்போகின்றேன் என அவரிடம் கேட்டவுடன் தலை ஆட்டிவிட்டார். இந்த நேரத்தில் அவருக்கு என் நன்றிகள். என்னிடம் பதிலகை அவர் ஒப்படைத்து இன்று கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. நேரம் கிடைக்காமல் இழுபட்டு இப்போதுதான் அந்தரங்கத்தை உங்களிடம் சொல்ல நேரம் வந்திருக்கின்றது. எந்த கேள்வியானாலும் உள்ளதை உள்ளபடி சொல்கின்றேன் என தன் மன ஓட்டத்தை கொட்ட தயாரான லோஷன் அனாவே இனி உங்களுடன் அடிக்கடி பேசப்போகின்றார்.
இன்னும் பல உண்மைகளை அவர் வாயிலிருந்தே கறக்க தயாராகுங்கள். நீங்களும் உங்கள் கேள்விகளை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் பரிசீலனையின் பின் கேள்விகளுக்கான விடைகளுடன் பதிவு தொடர்ந்து உங்களை நாடிவரும். ஆனால் இங்கே யாரும் பின்னூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படமாட்டாது என்பதையும் சொல்லிவிடுகின்றேன்.
உங்கள் கேள்விக் கணைகளை அனுப்புங்கள். sshathiesh@gmail.com
இதோ என் கேள்விகளும் அதற்கான லோஷன் அண்ணாவின் பதில்களும் கேள்வி பதில் வடிவில்? ஆரம்பத்தில் சிறிது சிறிதாக ஆரம்பிப்போம் அப்புறம் கேட்போம் கேட்க வேண்டிய கேள்விகளை..... லோஷன்.
கேள்வி: பிறந்து தவழ்ந்து வளந்த மண்ணைப்பற்றி சொல்லுங்களேன்?
லோஷன் அண்ணா: யாழ்ப்பாணத்தில் அழகிய கிராமம் இணுவில். ஆனால் அங்கு வசித்து 7 வருடங்களுக்கு உட்பட்ட காலமே.வாழ்க்கையில் பெரும்காலம் கொழும்பிலேயே வசித்துள்ளேன்.
கேள்வி: குடும்பப்பின்னணி பற்றி சொல்லுங்களேன்?
லோஷன் அண்ணா:அழகான ,அன்பான அக்கறையான மனைவி,குறும்பும் குழப்படியுடனும் குதூகலம் தரும் ஒன்றரை வயது செல்லமகன். அன்பால் இணைந்த அப்பா அம்மாவுடன் இரு இளைய சகோதரர்கள்.
கேள்வி: உங்களுக்கே செல்லம் கிடைத்துள்ள நிலையில் நீங்கள் அம்மா செல்லமா அப்பா செல்லமா?
லோஷன் அண்ணா: எப்போதுமே அம்மா செல்லம்.
கேள்வி: உங்கள் கண்டிப்பில் வளர்ந்தவர்கள் நிறையப்பேர் உங்களை வீட்டில் கண்டிப்பவர் யார்?
லோஷன் அண்ணா:செல்லமாக இருந்தாலும் அதிகம் கண்டித்தவர்/ கண்டிப்பவர் அம்மாதான். இப்போது இன்னொருவர் சேர்ந்துள்ளார். தேவையான நேரம் கண்டிக்கும் என் மனைவி. (தண்டிப்பதில்லை என்பதை தெளிவாக அறிவித்து விடுகின்றேன்.)
கேள்வி: மறக்கமுடியாத பாடசாலை கால பசுமை நினைவுகளை மீட்டுங்கள்?
லோஷன் அண்ணா: இப்போது அறுவடை செய்யும் எல்லாமே பாடசாலைக் காலத்தில் விதைத்த பல தமிழ் விதைகள் தான். நான் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் படித்தேனோ இல்லையோ விவாதம், பேச்சு, நாடகம், கவிதை, சிறுகதை எழுதுதல், வில்லுப்பாட்டு மட்டுமின்றி கிரிக்கெட், சதுரங்கம் என்பவற்றில் அதிகம் ஈடுபட்டேன். இன்று என் ஊடகத்துறையில் அவை அனைத்துமே மிக உதவியாக இருக்கின்றன.
கேள்வி: வானலையின் சிங்கம் படிப்பில் சிங்கமா?
லோஷன் அண்ணா: எனது முன்னைய வகுப்பாசிரியை ஒருவர் சொன்னது போல கா.பொ.த.சா/தரம் O/L வரை மொக்கர்களின் வகுப்பில் முதலாம் பிள்ளை தான். (8 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு வரை.) A/L தான் தடுமாறி சராசரி ஆகிவிட்டேன்.கவனக்கலைப்பான்களில் கலைந்து விட்டாலும்- எதிர்பார்த்த பெறுபேறுகள் வராவிட்டாலும் பல்கலைக்கழகம் கிடைத்தும்- பின் ஊடகத்துறையின் மேல் வந்த ஈடுபாட்டால் செய்யவில்லை.
கேள்வி: காதலில் விழுந்த அனுபவம் உண்டா?
லோஷன் அண்ணா: உண்டு.
கேள்வி: நிறங்களில் நெஞ்சை கொள்ளை கொண்டது?
லோஷன் அண்ணா: கறுப்புதான் எனக்கு பிடித்த கலர்!
கேள்வி: நன்றாக ஒரு பிடி பிடிக்கும் உணவு?
லோஷன் அண்ணா: பசிக்கும் நேரத்தில் ருசியான எதுவும்... பால் அப்பம், சில்லி பரோட்டா & Submarines
கேள்வி: எழுத்தால் உங்களை வென்றவர்கள்?
லோஷன் அண்ணா: மகாகவி பாரதி, சுஜாதா, வைரமுத்து மற்றும் வலையுலகில் பலர்.
கேள்வி: ஆட ஆசைப்படும் விளையாட்டு?
லோஷன் அண்ணா: எப்போதுமே கிரிக்கெட்.
கேள்வி: பார்த்து பரவசப்படும் விளையாட்டு?
லோஷன் அண்ணா: கிரிக்கெட்,கால்பந்து, டெனிஸ்( பெண்கள் டெனிஸ் மட்டுமல்ல.)
கேள்வி: கொள்ளைகொண்ட விளையாட்டு வீரர்கள் மூவர்?
லோஷன் அண்ணா: ஐவரை சொல்கின்றேன். - 5 தான் எனது அதிஷ்ட இலக்கம்.
முத்தையா முரளிதரன்.
அலன் போடர்.
ரொஷான் மஹாநாம.
மத்தியூ ஹெயடன்.
ஆந்திரே அகாசி.(டென்னிஸ்.)
கேள்வி: இசையால் வருடிய இசை அமைப்பாளர்கள்.?
லோஷன் அண்ணா: 80 களின் இளையராஜா.
90 களின் ஏ.ஆர.ரகுமான்.
90 களிலிருந்தும் இப்போதும் வித்யாசாகர்.
கேள்வி: குரலால் மயக்கிய பாடக பாடகியர்?
லோஷன் அண்ணா: S.P. பாலசுப்ரமணியம்.
P. சுசீலா.
சித்ரா.
சுஜாதா.
ஸ்ரேயா ஹோஷல்.

கேள்வி: கடவுள் நம்பிக்கை?

லோஷன் அண்ணா: தனிப்பட்ட முறையில் இல்லை. அன்புக்குரியோருக்காக கொஞ்சம். அதிகம் நம்பும் கடவுள்-லோஷன்.

கேள்வி: முதல் வேலை அனுபவம்?

லோஷன் அண்ணா: முதல் நாளே ஒலிவாங்கியில் குரல் ஒலித்தது. முதல் வேல மட்டுமல்ல இப்போதும் அதே ஒலிபரப்பாளர் வேலை தான்.........ஒவ்வொரு நாளும் புதிதாய்........

கேள்விக்கணைகளும் பதில் கனிகளும் தொடரும்............
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox