Tuesday, March 23, 2010

ப்ளீஸ்....பதிவர் சந்திப்பில் வெளிவந்த உண்மைகள்.

ப்ளீஸ் நானும் ஒரு பதிவு எழுதி இருக்கேன் நம்ம ப்ளீசை பற்றி. ப்ளீஸ் வந்து படிச்சிட்டு ப்ளீஸ் ஒரு வோட்டுப் போட்டிட்டு ப்ளீஸ் யாரும் சீரியஸா எடுக்காமல் ப்ளீஸ் அப்பிடியே வந்த வழியே போய்டுங்க.

முதலில் நடந்ததை என் பங்குக்கு சொல்லிவிடுகின்றேன். அதன் பின் அன்றைய பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்களை பற்றிய திடுக்கிடும் உண்மைகளை வெளியிட இருக்கின்றேன்.

வாங்க விசயத்துக்கு போகலாம்....

வெள்ளி இரவு ஒரு பத்து முப்பது இருக்கும். என் கைப்பேசி பாட ஆரம்பித்தது. பார்த்தால் ஒரு புது இலக்கம். சரி யாரென பார்ப்போம்.

ஹலோ!
ஹலோ! நான் சுபாங்கன் கதைக்கிறன்.....
ஹலோ யார்?
நான்தான் ஐந்தறைப்பெட்டி சுபாங்கன்.( என்னது சவப்பெட்டி பென்சில் பெட்டி மாதிரி உங்கள் வீட்டில் இருக்கிறது ஐந்தறை அதுவும் பெட்டி மாதிரி போலவா?)
ஆ சொல்லுங்க....
நம்ம பவன் வந்திருக்கான் நாளைக்கு சும்மா ஒரு சின்ன சந்திப்பு கோல் பேசில் நடத்தலாம். வருவிங்களா?
என்ன ப்ளான் வச்சிருக்கிங்க?
பெரிதா ஒன்றும் இல்லை அங்கேயே வந்து பார்த்துக்கொள்வோம்.
அதுசரி நம்ம ஏரியாவில் இருந்து யார் யார் வாரார்?
கான்கொன்,ஆதிரை பாட்டா, புல்லட் தாத்தா வருவாங்க.
சரி...
கட்டாயம் வருவிங்கதானே...
சரி வாறன் வாறன்...


இப்படியே உரையாடல் முடிந்த பின். மறுநாள் ஆதிரை அண்ணருடன் பேசி மாலை நான்கு முப்பதுக்கு வெள்ளவத்தை ஆர்பிக்கோவிற்கு முன்னால் வரவும் என்றும் தனக்கு அங்கெ இன்னொரு சைடு பிசினஸ் இருப்பதாகவும் சொன்னார். மதியம் நம்ம குட்டி வந்தியத்தேவன்(லோஷன் அண்ணாதான் இந்த அறிவிப்பை விடுத்தவர்.) கான்கொன் கோல் பண்ணினான். என்ன வார ஐடியா இருக்கா என்று கேட்க. தன்னிடம் ஆதிரை அண்ணாவின் நம்பர் இல்லையாம் நீங்கள் எப்படி போகின்றீர்கள் நானும் வருகின்றேன் என்றான். சரி என எங்கள் ராணுவ ரகசியங்களை சொல்லி விட்டு நகரவில்லை ஆதிரை அன்னார் அலைப்பெடுத்தார். சரியாக நான்கரைக்கு வந்துவிடுவீர்களா என கேட்டார். ஏனண்ண என கேட்டன். இல்லை புல்லட் இப்போதான் திருப்பள்ளி எழுச்சி பாடுகின்றாராம் அதுதான் தனிய வந்து நிக்கனுமே என கவலைப் பட்டார்.(கவனிக்கவேண்டிய விடயம் இப்போதெல்லாம் மனிதர் தனிய தனிய என அடிக்கடி சொல்கின்றார் எதுக்கும் வீட்டில சொல்லுறது நல்லம் வேற என்னது இவருக்கும் ஒரு மலேசியா சிங்கப்பூர் இல்லாவிடாலும் இன்னொரு நாட்டிலாவது சிக்காமலா போய்விடும்.)

ஒருவாறு நான்கரைக்கு வந்து சேர்ந்தோம் அவ்விடத்தில். ஐந்து நிமிடத்துக்குள் குளித்துவிட்டு(கவனிக்க.) நம் புல்லட் ஆட்டோ பிடித்து வந்தாராம். வந்தவர் ஆர்பிக்கோவிற்குள்நிற்கும் பிள்ளையை பார்க்கணும் என நினைத்து விட்டார் போல ஆதிரை பட்டாவின் ஸ்பான்சரில் தாக சாந்தி செய்தார். அப்புறம் பஸ் ஏறி வந்தோம். டிக்கெட் எடுத்தது அண்ணல் புல்லட் தான். வந்து சற்று நேரத்தில் எல்லோரும் கூடி விட்டோம். இனி வரோவின் பதிவை படியுங்கள் புரியும். அதன் பின் இவர்களை பற்றிய உண்மைகளை படியுங்கள்.


நான் ரெடி யார் யார் என கண்டு பிடிப்பது இலகு பின்னூட்டத்தில் யார் யார் என சொல்லுங்களேன்.

*பங்குகளை இதுவரை பேசி வந்தவர் தன் வாழ்க்கையை பங்கு போட இருப்பவரை தேடி பறந்து போக இருப்பதாக பட்சி சொல்கின்றது. பறக்கும் இடமும் ஏற்கனவே தேவர் பதிவர் இருக்கும் இடம் என அந்த பட்சி சொன்னது.

* தான் இறங்கும் எல்லா களத்திலும் தலையாக இருக்கும் உடலமைப்பிலும் தல போல இருக்கும் இவர் சந்திப்புக்கு வந்த போது தன் வாகனத்தை நிறுத்தமுடியாமல் செய்தவர்கள் மீது கொண்ட கோபத்தால் அந்தக்களத்திலும் தலையாகியே தீருவேன் என்ற வைராக்கியத்தில் நித்தியானந்தரின் ஆசியுடன் களம் இறங்க இருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

*தினமும் பதிவிடும் பதிவர் தான் இருக்கும் துறையை விட மேக்கப்போடும் தொழிலே தன்னுடனும் தன் ரசிகர்கள் படம் எடுக்க மொய்ப்பார் என்ற காரணத்தால் அந்த துறையில் வந்து பலரை வசியம் செய்ய தயாராகிவிட்டார்.

*ப்ளீஸ் சை பிரபலப்படுத்தியவர் மூஞ்சிப்புத்தகத்தில் தன் சொந்த photo போட காரணம் சொந்தக்காரியா வரப்போறவர் சொன்ன அட்வைஸ் தானாம். யானை எவ்வளவு பலம் வாய்ந்தது என்ற வார்த்தை தானாம் அவரை மாற்றி இருக்கின்றது, ஆனால் இதனால் பலர் கலங்கி இருப்பதாக கேள்வி. எல்லாம் இனி தமக்கு கிடைக்காதே என்றுதான்.

*பிள்ளையாரோடு நெருங்கிய பதிவர்(இருக்கும் இடம்) அன்மைக்கலாமாக தன் சிரிப்பை தொலைத்து விட்டாராம். காரணத்தை தேடிக்கொண்டிருப்பதாக பல்கலை கழகத்தில் இருந்து செய்திகள் வெளியாகின்றன. அதேநேரம் மலேசியா இல்லாவிட்டால் என்ன மாலைதீவிலாவது பிடிப்பேன் என வலை வீசி தேடுவதாக கேள்வி.

*பெண்களின் இதயத்தை துளைத்தெடுக்க முயன்று முடியாமல் போன கோவா பதிவர் மீது இப்போது எல்லோரும் ஒரு ஜாக்கிரதையான கண் வைத்திருந்த நேரம் தான் கோவா பதிவர் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு பின் காணாமல் போய்விட்டார். விசாரித்ததில் வாலிபா வா வா என யாரோ அழைத்து தான் போனதாக கேள்வி.

*ரயில் ஏறி சந்திக்க வந்த பதிவர் தன் தளத்தில் பிளந்து கட்டினாலும் அமைதியை மெயின்டெயின் செய்தார் விசாரித்ததில் கிடைத்த உண்மை ரயிலில் பார்த்த கிளி வேட்டைக்காரன் படம் போல வேட்டியாடக்கூடியது என்ற நினைப்பில் இருந்தவருக்கு 5 star படம் போல ஆகியதே காரணம் என சொல்லப்படுகின்றது.

*பெட்டிக்குள் எழுதி பழக்கமான பதிவர் யாழில் சென்று ரெஜினோ ஐஸ்கிரீம் சாப்பிட்டபோது கிடைத்த அனுபவத்தில் இங்கே வந்தார். போகும் போது வழியில் எங்காவது கட்டம் கட்டலாம் என வந்தவரை கட்டம் கட்டி அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகின்றது.

இந்த உண்மைகள் எல்லாம் வடிகட்டிய பொய்கள். ப்ளீஸ் இதை யாரும் சீரியஸாக எடுக்காதீர்கள். ப்ளீஸ் என்னை கட்டம் கட்டி அடித்து விடாதீர்கள். ப்ளீஸ் நான் ரொம்ப பாவம்...ப்ளீஸ் இதை இங்கேயே விட்டு விடுங்கள். ப்ளீஸ் கொஞ்சம் சிரித்துக்கொண்டுதான் போங்களேன் ....ப்ளீஸ் உங்களுக்கு என் மேல் கோவமா....எதையும் தாங்கும் இதயம் கொண்ட நம் ப்ளீஸ் புகழ் கான்கொன் உங்களை தன் தளத்துக்கு அழைக்கின்றார். கோபம் வந்த அவரை கும்முங்க. காரணம் நாங்கள் எல்லாம் ப்ளீஸ் பதிவு போட அவர் தானே காரணம்....ப்ளீஸ்...ப்ளீஸ்...எனக்காக இதை செய்யுங்கள்....
Share:

10 கருத்துரைகள்:

KANA VARO said...

பதிவுக்கும் என் லிங்க் இக்கும் நன்றி (நான் முக்கி முக்கி எழுதினதை சிம்பிள் ஆ லிங்க் குடுக்கிறீங்க ஹி ஹி )

///தினமும் பதிவிடும் பதிவர் தான் இருக்கும் துறையை விட மேக்கப்போடும் தொழிலே தன்னுடனும் தன் ரசிகர்கள் படம் எடுக்க மொய்ப்பார் என்ற காரணத்தால் அந்த துறையில் வந்து பலரை வசியம் செய்ய தயாராகிவிட்டார்//

இது யாரை? ஒண்ணுமே புரியலையே!

SShathiesh-சதீஷ். said...

VARO கூறியது...
//பதிவுக்கும் என் லிங்க் இக்கும் நன்றி (நான் முக்கி முக்கி எழுதினதை சிம்பிள் ஆ லிங்க் குடுக்கிறீங்க ஹி ஹி //

ஏதோ பிழைச்சுப்போகட்டும் என்று லிங்க் கொடுத்த பெரிய சீன போடிரிங்க.....சும்மா லோலாய்.........நண்பரே உங்கள் பதிவில் என்ன இல்லை என்று நாங்கள் எழுதுவது.

/////தினமும் பதிவிடும் பதிவர் தான் இருக்கும் துறையை விட மேக்கப்போடும் தொழிலே தன்னுடனும் தன் ரசிகர்கள் படம் எடுக்க மொய்ப்பார் என்ற காரணத்தால் அந்த துறையில் வந்து பலரை வசியம் செய்ய தயாராகிவிட்டார்//

இது யாரை? ஒண்ணுமே புரியலையே!//

இம்புட்டு இருக்கும் போது இதை மட்டும் நீங்கள் தொடும் போதே யாரென தெரியலையா இவர் யாரென உங்களுக்கு தெரியாவிட்டால் பரவாயில்லை. மற்றவர்களுக்கு தெரிந்தால் போதும். உங்களை பற்றி நான் அப்பிடி சொல்வேனா என்ன ....

பனித்துளி சங்கர் said...

ஆஹா இது நல்லா இருக்கே ! பகிர்வுக்கு நன்றி !

கன்கொன் || Kangon said...

அட....

ப்ப்பிளீஸ்... ப்ப்பிளீஸ் அந்த ப்ப்பிளீஸ விடுங்கோவன்.... :D

'//ஹலோ! ஹலோ! நான் சுபாங்கன் கதைக்கிறன்....
ஹலோ யார்?//

ஹா ஹா... பெருத்த அவமானம்.. :P

//மதியம் நம்ம குட்டி வந்தியத்தேவன்(லோஷன் அண்ணாதான் இந்த அறிவிப்பை விடுத்தவர்.) கான்கொன் கோல் பண்ணினான். //

அதாவது சொ.செ.சூனியம் வைக்கிற பெடியன்?

ஆதிரை தாத்தா, புல்லட் பாட்டா என்பதோடு குழந்தை கன்கொன் எண்டு சொல்லேலயா? பெருத்த அவமானம்... :(

அதில சொல்லியிருக்கிற ஆக்கள நான் கண்டுபிடிச்சிற்றன்... கண்டுபிடிச்சிற்றன்....
ஆனா சொல்ல மாட்டன்... அஸ்கு புஸ்கு அப்பளம் வடை....

Subankan said...

வேணாம், வலிக்குது, அழுதுடுவன். இதெல்லாம் ஓவரு

ஆதிரை said...

பிளீஸ்... உந்தப் பிளீஸை இப்பவே விட்டிடுவோம்...

படங்களுக்கு நன்றி ஏழுமணி சதீஸன்...

SShathiesh-சதீஷ். said...

@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி.

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

//அட....

ப்ப்பிளீஸ்... ப்ப்பிளீஸ் அந்த ப்ப்பிளீஸ விடுங்கோவன்.... :D//

பிளீஸ் அதை மட்டும் விட சொல்லாதீங்க பிளீஸ்

//ஆதிரை தாத்தா, புல்லட் பாட்டா என்பதோடு குழந்தை கன்கொன் எண்டு சொல்லேலயா? பெருத்த அவமானம்... :(//

மன்னிக்கவும் நான் அந்த தவறை விட்டு விட்டேன் குழந்தை கான்கொன் இல்லை குழந்தை கொடுக்கும் வயதை தாண்டிய கான்கொன் என குறிப்பிட்டிருக்க வேண்டும்.

SShathiesh-சதீஷ். said...

@Subankan

இல்லடா ராசா அலுதிடாதா...பிள்ளைக்கு எங்கடா வலிக்கிறது...இது நம்ம புல்லட் அண்ணாவின் கோவா போல இல்லை...

SShathiesh-சதீஷ். said...

@ஆதிரை

ப்ளீஸ் அதை மட்டும் விட சொல்லாதிங்க நான் ஏழு மணி நீங்கள் எட்டு மனியாமே....

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive