Tuesday, March 16, 2010

தேர்தல் களத்தில் குதிக்கின்றார் கான்கொன்.


நேற்றைய கும்மியின் பயனாக இன்று நானும் எங்கள் அன்பு நமீதா வருங்கால அமைச்சர் (எந்த நாட்டுக்கு என்று கேட்டு என்னை வம்பில் மாட்டக்கூடாது.) கௌரவ அதி மேன்மை தங்கிய கான்கொன்னுடன் வெள்ளவத்தை பீச்சுக்கு செல்ல திட்டம் தீட்டினோம். என்னடா பெரிய திட்டம் என கேட்கப்படாது ஒன்றும் இல்லை, உடனடியா நடக்கும் என்ற ஒரு விஷயம் கொஞ்சம் தமதமாகிப்போக தூக்கமும் இல்லை கனவும் இல்லை கலரும் இல்லை என போகும் வெறுத்த என் வாழ்க்கைக்கு இன்றாவது ஒரு விடிவெள்ளி(மாலையில் எப்பிடிடா என கேட்கப்படாது) கிடைக்காதா என தேடிப்பார்க்க என வைத்துக்கொள்ளுங்கள்.


போக முன் ஒரு அரை மணிநேரத்துக்கு முன்னர் எனக்கு அழைப்பெடுப்பதாக சொன்ன எங்கள் அன்புத் தம்பி. மன்னிக்கவும் தலைவர். சொன்னபடி எடுத்து தோளைத்துவிட்டார். இவன் எங்க டைமுக்கு வரப்போறான் என்ற நினைப்பில் நானும் ஆறுதலா வெளிக்கிட வந்திட்டானப்பா நேரத்துக்கு. அரசியலில் இறங்கப்போகும் தம்பியே ஆரம்பமே தப்பா இருக்கே. இப்பிடி நேரத்துக்கு வரக்கூடாது. ஒரு மாதிரி நடைராசா வாகனத்தில் நாங்களும் பிரயாணம் செய்து பீச்சுக்கு வந்தோம். தம்பி, வழக்கமா இப்படி கடல் ஐ பார்க்க (கடலை அல்ல என்பதை அடிக்கடி சொன்னார்.) வருவதாக சொன்னார். கொஞ்சநேரம் இருக்காது தொலைவில் வந்த காதல் ஜோடி ஒன்றை பார்த்து நான் எப்போ இப்படி வாறது என்ற பெருமூச்சுடன் நிற்க இன்னொரு நண்பர் எங்களோடு இணைந்து கொண்டார். அவர் வருகை எனக்கு பலமாகிப் போனது. காரணம் எங்கள் சிங்கத்தின் வீரச்செயல்களை அடுக்கி வைத்தார் அந்த நபர்.

பல விடயங்களை அலசி ஆராய்ந்த எங்கள் பொதுக்குழு(எல்லாம் பில்ட் அப்தான். ) பல விசயங்களை பேசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி அந்த வழியால் சென்ற புகையிரதம் எண்களை குழப்பியது. கொதித்தெழுந்த எங்கள் தன்மான சிங்கம். தான் அரசியலில் நுழைந்து முதல் வேலையாக இந்த தண்டவாளங்களை இந்த பீச்சில் இருந்து தள்ளி வைக்கவேண்டும் என்ற தன் முக்கியமான பிரதான கோட்பாட்டை முன்வைத்தார். பாவம் வழக்கமா வருபவருடன் வரும் போது கஷ்டப்பட்டிருப்பார் போல. விடுங்கப்பா அவர் கஷ்டம் அவருக்கு தானே தெரியும்,

அதை விட இன்னொரு கருத்து பாருங்க இப்படிப்பட்ட அரசியல் வாதி கண்டிப்பா எந்த நாட்டில் இருக்க வேண்டும் என நீங்களே முடிவு செய்யுங்க இந்தியாவின் லாலு பிரசாத் யாதவ்வை அழைத்து வந்துதான் இதை செய்யணும் என்ற கதை வேறு. (இப்போ சொல்லுங்க இவர் எந்த நாட்டு அரசியல் வாதி என நான் சந்தேகப்பட்டது சரிதானே.) என்ன செய்றது எத்தனையோ பேர் அரசியலுக்கு வரும் போது இப்படிப்பாட அறிவாளி நல எண்ணம் படைத்த எங்கள் அன்புத் தளபதி, நமீதாவின் கொள்கை பரப்புச் செயலாளர் கான்கொன் வருவதில் என்ன தப்பு. ஒருவாறு மழைக்குள் நனைந்தபடி வீடு வந்து சேர்ந்தோம்.(நிறைய நாட்களின் பின் தான் குளிக்கின்றேன் என்ற உண்மையை சொன்னார். நீர்வள போக்குவரத்து அமைச்சராக இருக்க தகுதியான்a எங்கள் தலைவரின் பேட்டி இதோ.நானும் ரொம்ப நாளை ஒரு மொக்கை பதிவு போட்டு மொக்கை பதிவராகனும் என பார்த்தால் நடக்கிதில்லையே. ஏன்பா யாரங்கே என்னையும் கவனியுங்கப்பா.


அப்புறம் அந்த வானொலிப் பதிவு இன்னும் இழுபடுகின்றது. இன்றோ நாளையோ இட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு தட்டச்சுகின்றேன். பார்க்கலாம்.
Share:

10 கருத்துரைகள்:

Bavan said...

நான்தான் முதலாவது....

SShathiesh-சதீஷ். said...

பாத்து பாத்து பிறகு எல்லாத்திலும் முதலாவதாய் நிக்கணும்.

கன்கொன் || Kangon said...

//வருங்கால அமைச்சர் //

வெறும் அமைச்சர் தானோ? :(


//சொன்னபடி எடுத்து தோளைத்துவிட்டார்.//

நேர முகாமைத்துவம்

//இப்படி கடல் ஐ பார்க்க (கடலை அல்ல என்பதை அடிக்கடி சொன்னார்.) வருவதாக சொன்னார். //

ரொம்ப நன்றி சதீஷ் அண்ணா... மிக்க நன்றி...


//அடிக்கடி அந்த வழியால் சென்ற புகையிரதம் எண்களை குழப்பியது. //

ஒரே சத்தமும், ஒரே அதிர்வும் எரிச்சலாக இருந்தது... :(

//பாவம் வழக்கமா வருபவருடன் வரும் போது கஷ்டப்பட்டிருப்பார் போல. //

அவ்வ்வ்வ்வ்....
நான் தனியாத்தான் போறனான்...


//(நிறைய நாட்களின் பின் தான் குளிக்கின்றேன் என்ற உண்மையை சொன்னார்//

இதையெல்லாம் பொது இடத்தில சொல்லப்படாது... அவமானமா இருக்கெல்லோ? :)

எல்லாம் சரி...
அந்த வீடியோவில பல்லை இளிச்சுக் கொண்டு நிக்கிற தம்பி யாரு?


நீங்க மொக்கைப் பதிவர் தான் ஏற்றுக் கொள்றம்....
என்னா கொலைவெறி.... :D

Bavan said...

//எந்த நாட்டுக்கு என்று கேட்டு என்னை வம்பில் மாட்டக்கூடாது.//

எந்த நாட்டுக்கு??..:p

//தூக்கமும் இல்லை கனவும் இல்லை கலரும் இல்லை என போகும் //

தூக்கம் இல்லையென்றால் கனவு எப்பிடி வரும்? கனவுக்கும் கலருக்கும் என்ன சம்பந்தம்.. விளக்கவும்..:p

//நடைராசா வாகனத்தில் நாங்களும் பிரயாணம் செய்து பீச்சுக்கு வந்தோம்.//

கொம்பரபிளா இருந்துதா? வாகனம்..:p

// நான் எப்போ இப்படி வாறது என்ற பெருமூச்சுடன் நிற்க இன்னொரு நண்பர் எங்களோடு இணைந்து கொண்டார். அவர் வருகை எனக்கு பலமாகிப் போனது. காரணம் எங்கள் சிங்கத்தின் வீரச்செயல்களை அடுக்கி வைத்தார் அந்த நபர்//

வாவ்(wow) இன்டர்ஸ்டிங்....

//பல விடயங்களை அலசி ஆராய்ந்த எங்கள் பொதுக்குழு(எல்லாம் பில்ட் அப்தான். )//

உங்கள் குழுவின் திறமையைப் பாராட்டுகிறேன்..:p

//இந்த தண்டவாளங்களை இந்த பீச்சில் இருந்து தள்ளி வைக்கவேண்டும் என்ற தன் முக்கியமான பிரதான கோட்பாட்டை முன்வைத்தார். பாவம் வழக்கமா வருபவருடன் வரும் போது கஷ்டப்பட்டிருப்பார் //

அட அட அட... விசியம் சூடு பிடிக்குது... யார்அவர் அதுதான் வழக்கமா தலைவர் ஐயா கன்கொனுடன் வருபவர்??

//இப்போ சொல்லுங்க இவர் எந்த நாட்டு அரசியல் வாதி என நான் சந்தேகப்பட்டது சரிதானே//

அதிலென்ன சந்தேகம் 100% சரி..

//இப்படிப்பாட அறிவாளி நல எண்ணம் படைத்த எங்கள் அன்புத் தளபதி, நமீதாவின் கொள்கை பரப்புச் செயலாளர் கான்கொன் வருவதில் என்ன தப்பு//

என்னாதுதுதுதுது? #பட்டங்களை_கேட்டு_அதிர்ச்சி

//ஒருவாறு மழைக்குள் நனைந்தபடி வீடு வந்து சேர்ந்தோம்.(நிறைய நாட்களின் பின் தான் குளிக்கின்றேன் என்ற உண்மையை சொன்னார்.//

சீச்சீ...

வீடியோ

யானை ஏற்கனவே இருக்குதப்பா... காண்டாமிருகம் சரிவரும்..:p

யாரங்கே வாக்கை இந்தாளின்ர வயித்தில குத்துங்கடா...

நமீதா விடயங்கள் உள்ள வீடியோவை 18+ என்று போடாமையைக் கண்டிக்கிறேன்..:p

சென்சார் பண்ணும்படி கேட்டுக்கொள்கிறேன்..:p

Bavan said...

// SShathiesh கூறியது...
பாத்து பாத்து பிறகு எல்லாத்திலும் முதலாவதாய் நிக்கணும்//

ஹீஹீ...

// கன்கொன் || Kangon கூறியது...//

//அவ்வ்வ்வ்வ்....
நான் தனியாத்தான் போறனான்..//

நம்பிட்டம்..

சதீஸ் அண்ணா,

எங்கள் தலைவர் மருதானை தெரியாமல் அல்லாடிய கதை தெரியுமா???

Bavan said...

//(எந்த நாட்டுக்கு என்று கேட்டு என்னை வம்பில் மாட்டக்கூடாது.//

எந்த நாட்டுக்கு??...:p

//தமதமாகிப்போக தூக்கமும் இல்லை கனவும் இல்லை கலரும் இல்லை//

தூக்கம் இல்லாட்டி கனவு வராது.. கனவுக்கும் கலருக்கும் என்ன சம்பந்தம்??

பின்னவீனத்துவமா??..:p

//என் வாழ்க்கைக்கு இன்றாவது ஒரு விடிவெள்ளி(மாலையில் எப்பிடிடா என கேட்கப்படாது)//

அதுதானே மாலையில் எங்க விடிவெள்ளி??

// நடைராசா வாகனத்தில் நாங்களும் பிரயாணம் செய்து பீச்சுக்கு வந்தோம்//

கொம்பரபிளா இருந்ததா??

//இன்னொரு நண்பர் எங்களோடு இணைந்து கொண்டார். அவர் வருகை எனக்கு பலமாகிப் போனது. காரணம் எங்கள் சிங்கத்தின் வீரச்செயல்களை அடுக்கி வைத்தார்//

அட அட அட நண்பன் உடையோன் படைக்கு அஞ்சான்..ஹீஹீ

// லாலு பிரசாத் யாதவ்வை அழைத்து வந்துதான் இதை செய்யணும் என்ற கதை வேறு//

விளங்கினமாதிரித்தான்

//அறிவாளி நல எண்ணம் படைத்த எங்கள் அன்புத் தளபதி, நமீதாவின் கொள்கை பரப்புச் செயலாளர் கான்கொன் //

ஸ்ஸ்ஸ்சபாபா..... முடியல... பட்டங்கள் பார்த்து மயக்கம் வருது..

//(நிறைய நாட்களின் பின் தான் குளிக்கின்றேன் என்ற உண்மையை சொன்னார்//

சீச்சீ...

பேட்டி

நமீதாவின் விடயங்களை வீடியோவில் இணைத்திருப்பதை என்னைமாதிரி சின்னப்பிள்ளைகள் பார்த்தால் என்னாவது???

யானை ஏற்கனவே இருப்பதால் காண்டாமிருகத்தை சின்னமாகக்கொள்ளவும்..

அல்லது நயந்தாராவின் பச்சையை வைக்கலாம்..:p

சதீஸ் அண்ணே சும்மா பின்னிட்டீங்க..

Unknown said...

பிளாகர் கன்கொன் || Kangon //எல்லாம் சரி...
அந்த வீடியோவில பல்லை இளிச்சுக் கொண்டு நிக்கிற தம்பி யாரு?//

சும்மா இருக்கிற சிங்கத ஏன்டா தட்டி எழுப்புற????

KANA VARO said...

டோட்டல் டமேச்...

அது சரி அப்பு லண்டன் பார்ட்டி ???

Subankan said...

அட அட அட, இதெல்லோ பதிவு. அமைச்சர் கங்கோன் வாழ்க

வீடியோவைப் பார்த்தால் இவர் காமடி அரசியல்வாதியாயில்ல தெரியுது?

SShathiesh-சதீஷ். said...
This comment has been removed by the author.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive