Tuesday, April 13, 2010

விரோதியே...! வித்தியாசமான புதுவருட வாழ்த்து.விரோதியே...!

புத்துயிர் கிடைக்குமென்று உலகமே எதிர்பார்க்க
புதிய வருடமாய் நீ வந்தாய் என் விரோதியே..
பெயரில் இருப்பது போல் நீ இருக்கக்கூடாதென்று
பெயர் தெரியா நண்பர்களுக்காக கூட வேண்டினேன்

ஆனால்?

வாழ்த்துக்கள் பலவோடு விரோதியை வரவேற்றோம்
வளமெல்லாம் கிட்டட்டும் நம் விரோதிகளுக்கு கூட என்று
சில களமாடிப்போனதுவோ? பல நெஞ்சை களவாடிப்போனவர்களை
பொல பொலவென கரை புரண்டது கண்ணீர்
கல கலவென இருந்த நம் வாழ்வில்

நேசித்த நெஞ்சம் ஒன்று நோகடித்து சென்று
நிமிடங்கள் நாட்களாகி ஆண்டு இரண்டு ஓடிவிட
புதிய சொந்தங்கள் என் வாழ்வில் கோலமிட
புத்தம் புதிதாய் நான் பிறந்தேன் உன் மடியில்

வானலை வாழ்க்கையதில் வழுக்காமல் பயணித்தேன்
வாழும் காலச் சுவடை எழுத்தாக மாற்ற எண்ணி
வானலை நண்பர்கள் உதவியினால் இப்பதிவுலகம் புகுந்து கொண்டேன்.
வாசக நெஞ்சங்களே வணங்குகின்றேன் உங்களுக்கு வாழ்த்துகின்றேன்.

ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கை பாடம் கற்பிக்க
என்னருமை பெரிய தந்தையையும் பறிகொடுத்தேன்
வாழ்வோடு வாளின்றி போராடிக்கொண்டிருந்த நேரம்
வாழ்வுனக்கு வடக்கே என்று அசரீரி ஒலித்ததுவோ?
வாழ்வை நான் தேடி வடக்கே போவதற்கு - புது
வாழ்வை எனக்களித்த வானலையை வாஞ்சை இன்றி பிரிந்துள்ளேன்

விகிர்தியே...!

விரோதியை வழியனுப்பி வரவேற்கிறோம் உன்னை - நாம் செய்த
விரோதங்கள் நீ மறந்து தரவேண்டும் விமோசனத்தை
வெற்றிகள் சேரட்டும் வாழ்வில் வேதனைகள் மறைந்துபோக- என்
வெற்றிக் குடும்பத்திற்கு வாழ்த்துகின்றேன் மனதார

பாசத்தலைவனின் அதிமேதாவித் தனத்தினால்
புதுவருடப்பிறப்பை கொன்று சித்திரை திருநாளை கொண்டாடும்
தமிழ் நாட்டு உறவுகளுக்கு இந்த
தமிழ் சொந்தத்தின் தன்னலமற்ற வாழ்த்துக்கள்.

நான் எழுதும் மொழி புரியாவிட்டாலும்
நான் இடும் இடுகையை பார்க்காவிட்டாலும்
நம் நாட்டில் நம்மோடு வாழும்
நம் சிங்கள சகோதரர்களுக்கு ஒரு தமிழனின் வாழ்த்துக்கள்

பாலர் வகுப்பு முதல் என் பாடையோடு கூட வர காத்திருக்கும்
பாசக்கார பயலுகள் என் நண்பர்களுக்கு நயமான வாழ்த்துக்கள்
உயிருக்கு உயிராயும் சொல்லுக்காய் உறவாயும்
உயிரை கொடுக்கும் சொந்தங்களுக்கும் உயிரை பறிக்கும் சொத்தைகளுக்கும் ஒரு
உண்மையான உறவின் வாழ்த்துக்கள்

முகம்தெரியாமல் என்னை விரும்பி தங்களில் ஒருவனாக்கி
அகம் மகிழ்ந்து நின்ற என் வெற்றி நேயர் சொந்தங்களுக்கு
உங்கள் ப்ரியமானவனின் பிரியமான வாழ்த்துக்கள்
பதிவுலக பெருந்தகைகள் பல இருக்க
பச்சிளம் பாலகனாய் நான் பதியும்
பதிவுகளுக்கு ஆதரவளிக்கும்
பதிவுலக பெருமக்களுக்கு இந்த சிறுமகனின் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் சொல்லிவிட்டேன்
வந்துவிடு விகிர்தியே விக்கினங்கள் தீர்த்துக்கொண்டு....பி.கு:இந்த படத்தினை கனடாவில் இருந்து டிசைன் செய்து மூஞ்சிப்புத்தகத்தில் இட்ட என் ஆருயிர் நண்பன் திலக்குக்கு என் நன்றிகள்.
Share:

11 கருத்துரைகள்:

வந்தியத்தேவன் said...

புதுவருட வாழ்த்துக்கள் மருமகனே

SShathiesh-சதீஷ். said...

@வந்தியத்தேவன்


வாழ்த்துக்கு நன்றி மாமா. உங்களுக்கும் என் வருங்கால மாமிக்கும்(சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா போன்ற) உரித்தாகட்டும்.

Thusha said...

இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள் தம்பி.....

What happened to your template????

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

sivaG said...

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!!!

SShathiesh-சதீஷ். said...

@Thusha
வாழ்த்துக்கு நன்றி. ஏன் டெம்பிளேட் நன்றாக இல்லையா?

SShathiesh-சதீஷ். said...

@www.bogy.in
வாழ்த்துக்கு நன்றி. உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

SShathiesh-சதீஷ். said...

@sivaG
வாழ்த்துக்கு நன்றி.

SShathiesh-சதீஷ். said...

@JKR

உங்களுக்கும் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கு நன்றி.

கன்கொன் || Kangon said...

புதுவருட வாழ்த்துக்கள் சதீஷ் அண்ணே...

Template அழகாக உள்ளது.... :))

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

நன்றி டெம்பிளேட் நிஜமா அழகாய் இருக்கா?

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive