உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Monday, June 20, 2011

தமிழுக்கு ஒரு தமிழனின் கடிதம்!



எத்தனை எத்தனையோ காரணங்களுக்காக தாய் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து இன்று எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களில் ஒருவனாக தமிழுக்கு நான் எழுதும் கடிதம். நிச்சயம் இது என் ஆதங்கம் மட்டுமல்ல பல பேரின் ஆதங்கம்.

என் இனிய தமிழே! என்னை வாழவைக்கும் தமிழே! என் உயிரினும் மேலான தமிழே! என நான் உன்னை விழிக்க மாட்டேன். காரணம் இன்று பலர் உயிரிழக்க காரணமாக இருந்த உன்னை எப்படி நான் அப்படி அழைப்பது. இது நீ செய்த பாவமா இல்லை நாங்கள் செய்த பாவமா? இலங்கையில் ஒரு புறம் தமிழன் அழிந்து கொண்டிருக்க இந்தியாவில் மத்திய அரசோ தமிழனின் கத்தும் குரலையும் கணக்கெடுக்காமல் விட்டுவிட்டது. இந்த நிலையில் தம் நாடு விட்டு உறவு விட்டு எங்கெங்கோ வாழும் என் போன்றவர்கள் தான் உன்னை காப்பாற்ற போகின்றார்களாம். இந்த கொடுமையை சொன்னால் எனக்கு சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.

உன்னை தன் நாவினின்று பிறக்க வைக்கும் பல நல்லுயிர்களை நான் காண்பது இங்கே அரிதாகிவிட்டது. பெரும்பாலும் வேற்று நாட்டுக்காரர் தான் அதனால் தமிழ் பேசும் நபர்களை காண்பது அரிதாகிவிட்டது என நான் காரணம் சொன்னால் நீ என்னை அடித்தே கொல்ல வேண்டும் தமிழர்கள் பலர் இருந்தும் அங்கே உன்னை தேட வேண்டி இருக்கின்றது. சில நேரங்களில் நம்மை பற்றி அடுத்தவர்கள் சொல்வதை தமிழர்கள் நாம் உண்மையாக்கி உனக்கு அபகீர்த்தி தந்துவிடுவோமா என பயமாக இருக்கின்றது.

புலம்பெயர் தமிழர்கள். இன்று பல்வேறு விதத்தில் பெயர் சொல்லும் பெரிய சக்தி. ஆனால் எங்கள் மொழியை காப்பாற்ற தெரியாமல் நாங்கள் போடும் கூத்தை நினைத்தால் நான் வெட்கி தலைகுனிகின்றேன். இருபது இருப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே வந்து சேர்ந்த ஆண்கள் சொந்த நாட்டு பெண்களை திருமணம் முடித்து அல்லது அதன் பின் பெண்கள் வர என இன்று பல அந்நிய நாடுகளில் தமிழர்கள் எண்ணிக்கை பல. அதுவும் லண்டனில் முக்கிய ஒரு மொழியாக சேர்த்துக்கொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்று விட்டாய் நீ. தமிழ் நாட்டிலேயே செம்மொழியாக்க செலவழித்த ஆண்டுகள் பல இருக்கையில் செந்நிறத்தவனே நின் சிறப்பறிந்து தந்த பெருமை அது. அப்படி இருக்கையில் உன் பெருமையை உன்னை சொல்லியே வயிறு கழுவும் நம்மில் சிலரும் உன்னையே மூச்சு, பேச்சு என வாழும் சிலரும் உன்னை வைத்து வியாபாரம் செய்வதை என்னால் பொறுக்கமுடியவில்லை.

தனியே வந்து பின் துணையை தேடி அதன் விதைகளை கனிகளாக்கி அறுவடை செய்யும் நம்மவர்கள் நம் பழையதையும் உன்னையும் மறந்துவிட்டார்களா என பயம்தான் வருகின்றது. எவனை பார்த்தாலும் ஹாய் சொல்கின்றான் தமிழன். சரி அதுதான் அறிமுகம் என நினைத்தால் அதை தொடர்ந்து வந்து விழுகின்றது உன் தலை. காரணம் அவன் பேசும் தமிழில் நீ செத்துப்போகின்றாய். ஆங்கில மொழி சரளமாய் புகுந்து Goal அடிக்கிறது. மூச்சுக்கு முன்னூறு தடவை தமிழ் தமிழ் என உன்னை அழைக்கும் தமிழன் தன் சுய நலனுக்காய் உன்னையே விற்கவும் தயங்குவதில்லை. இருப்பினும் நம்மூத்தோர் இன்றும் தமிழை பேசினால் அது அமிர்தம் தான். ஆனால் அவர்கள் தான் பேச தயங்குகின்றார்கள்.

வீட்டில் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என தங்கள் குழந்தையிடம் கண்டிக்கும் உன் பிள்ளைகள் அங்கே தொடங்குகின்றார்கள் உன் முதல் கள பலியை. அதன் பின் உன்னை அறிந்து கொல்ல(எழுத்துப்பிழை அல்ல) , படிக்க என அதுக்கு வேறு பிரத்தியேக வகுப்புக்கள், பரீட்சைகள் வைத்து அதில் என் பிள்ளை சித்தி அடைந்துவிட்டான் என ஸ்வீட் எடு கொண்டாடு என கொண்டாடி உன்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்துகின்றார்கள். உன்னை தாய் மொழியாய் பெற்றவர்கள் உன்னையே தனி வகுப்புக்கு சென்று கற்று அதை வெற்றியாய் கொண்டாடும் இழிச்செயலை என்ன சொல்வேன். சிறுவயதில் பிள்ளையின் மனதில் விதைக்கும் விஷம் விருட்சமாகும் போது What is this Culture? Why you waste to your time for tamil? என அந்த பிள்ளை கேட்கும் நிலைக்கு வளர்த்து விடுகின்றது. பிறப்பு முதல் இறப்பு வரை நாம் செய்யும் சடங்குகள் புலம்பெயர் தமிழர்களின் அடுத்த தலைமுறையிடம் கேலிக்குரியதாக இருக்கின்றது. இது சொல்வதற்கு வெட்கமாய் இருக்கின்றது.

பிள்ளை குழப்படி செய்தால் பிள்ளையை தண்டிக்க முடியாது. என்மேல் கைவைக்க நீங்கள் யார் நான் இந்த நாட்டு குடிமகன் என பெத்த தாய் தந்தையையே உருட்டுகின்றது மிரட்டுகின்றது விவரம் அறிந்த குழந்தை. அதை தாண்டியதும் குடி கும்மாளம் டிஸ்கோ பப் என பிள்ளையின் அட்டகாசம் உன்னையும் உன் பண்பாட்டையும் கொல்வதற்கான வலை விரிகின்றது. இதை தட்டிக்கேட்க முடிவதும் இல்லை தடுக்க முடியவும் இல்லை. பையன்கள் இப்படி என்றால் பெண்களோ அரைகுறை ஆடையும் கையில் ஆறாவது விரலும் நிழலில் இன்னொரு நிழலும் மனதில் பல இதயங்களும் என மாறி அடுத்த தலைமுறையின் தலை எழுத்தை இடியப்ப சிக்கல் ஆக்கிவிடுகின்றார்கள். இதற்கெல்லாம் பாவிக்கப்படுவது உன் பெயர் தமிழே.

சடங்கு சம்பிரதாயத்துடன் நடந்த கல்யாணங்கள் மாறிப்போய் தென் இந்திய பிரபலங்களின் சிறப்பு வருகைகளில் நடக்கிறது எம்மவரின் பிறந்த நாள் கல்யாண நாட்கள். தமிழன் என்பதற்கு எந்த ஒரு சான்றும் இன்றி கடந்து போகின்றான் தன் மானமும் பிறர் மானமும் பற்றி அடிக்கடி பேசும் தமிழன். உண்மையில் இந்த இடத்தில் ஒரு பட வசனம் தான் நினைவுக்கு வருகின்றது. அதிகமாய் தன் மானம் பற்றி கதைப்பதும் தமிழன் தான் அதேபோல தன் மானத்தை காப்பாற்றாமல் நாறடிப்பவனும் அவன்தான்.

அண்மையில் ஒரு வானொலியில் இதை ஒரு தலைப்பாய் எடுத்து சிலரிடம் இதை பற்றி கேட்ட ஒரு நிகழ்சி நடந்தது. உண்மையில் அதை கேட்கும் போது இப்படி ஒரு நிகழ்ச்சி செய்ய வேண்டிய நிலைக்கு தமிழன் வந்துவிட்டானே என்ற வெட்கம் தான் எனக்கு வந்தது. அதில் ஒருவர் இந்த நவ நாகரிகத்துக்கு நாங்கள் மாற வேண்டும் என்பதற்காய் ஏற்க முடியாத உன்னை கேவலப்படுத்தும் காரணியை சொல்கின்றார். ஒரு தாய் சொல்கின்றார் தன் பெண்ணுக்கு தானே கட்டை சட்டையும் அதுவும் இதுவும் கொடுப்பேன் என. எங்கே போகிறது தமிழே உன் கலாசாரம். ஆனால் அதே நிகழ்சியில் இன்னொரு பெண் கூறிய கருத்து எனக்கு மிகப்பெரிய சந்தோசத்தையும் என் மனநிலையையும் பிரதிபலித்தது. நாம் தெளிவாக் திடமாக இருந்தால் எந்த நண்பியும் என்னை இந்த உடுப்பு போடு என கட்டளை இடமாட்டாள் அங்கே இங்கே என இரவில் கூப்பிட மாட்டாள் அதேபோல தண்ணி கிண்ணி என இழுக்க வைக்க மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் எம் மன திடம் வேண்டும் என அவர் சொன்ன கருத்துக்கு என்னையறியாமல் புல்லரித்துவிட்டேன். நானும் எத்தனயோ வழிகளை தாண்டி வந்தவன் இன்றும் என் நண்பர்கள் சிலர் கட்டாயப்படுத்தியும் எந்த கெட்ட பழக்கத்துக்கும் அடிமையாகவில்லையே. உண்மையில் எங்கள் மனம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும் என அவர் சொன்னது எத்தனை உண்மை என உன்னை வைத்து வியாபாரம் செய்யும் நபர்கள் ஏன் சிந்திக்கவில்லை.

அண்மையில் லண்டனில் ஒரு தமிழ் கலை நிகழ்ச்சிக்கு அறிவிப்பு செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என்னை கோட் சூட்டில் தான் வரவேண்டும் என சொல்லிவிட்டார்கள்.(கடைசில என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டாங்களே.) அந்த நிகழ்ச்சியின் பிரதம விருந்தினர் இங்கிலாந்து அமைச்சர் ஒருவர். தமிழை சொல்ல போகின்ற தமிழில் நடக்கப்போகின்ற ஒரு விழாவுக்கு எதுக்கு ஒரு ஆங்கில அமைச்சர். அவருக்கு அந்த நிகழ்வில் என்ன புரியப்போகின்றது. ஏன் இப்படி அவரை அழைத்தீர்கள் என கேட்டதுக்கு அவர் வந்தால் தான் ஏதும் கிடைக்கும் என்றார்கள். உன்னை விற்று பிழைப்பு நடத்தும் இந்த கூத்து தேவையா தமிழே. அதை விட இன்னொருகொடுமை அங்கே நிகழ்ச்சி செய்த பிள்ளைகள் கதைத்த தமிழுக்கு எமி ஜாக்சன் நமிதா பேசும் தமிழ் எவ்வளவோ மேல். வரவேற்புரை செய்த பையனின் தமிழ் அறிவை எண்ணி நான் உன்னையே கடிந்துகொண்டேன். இறுதியில் அந்த விழா தலைவர் உரையாற்றும் போது சொன்னா பாருங்க. இந்த விழாவுக்கு நான் ஆங்கிலத்தில் தான் என் உரையை தயார் செய்து வைத்திருந்தேன் அதனால் இப்போது தமிழில் சிறிது பேசும் போது தவறு வந்தால் மன்னித்துவிடுங்கள் என்று. என்ன கொடுமை இது. தமிழ் விழாவுக்கு எதற்கு ஆங்கில உரை. (இதுவும் அதுக்கு தான்.) அத்துடன் தமிழ் கதைக்க நடுக்கம் வருதாம். இதில் இன்னுமொன்றை சொல்கின்றேன் அங்கே வந்த அதிகாரியும் விருந்தினருமான ஒருவர் நான் பேசிய தனி தமிழ் கேட்டு தான் சந்தோசமாக இருந்ததாக என்னை வாழ்த்திவிட்டு போன போது அவர்களுக்காய் ஆங்கில மோகம் கொண்டு கத்தியவர்கள் கொஞ்சம் சிந்தித்திருப்பார்கள் என நினைக்கின்றேன்.

நான் கேட்பது எல்லாம் உன்னை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம் என்று தான். உன்னை பேச சுவாசிக்க பிடிக்கவில்லை என்றால் அவர்கள் எதையும் பேசிவிட்டு போகட்டும் பிரச்சனை இல்லை. ஆனால் உன் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டாமே. உன்னை பற்றி அறியா விட்டால் தெரியாவிட்டால் உன்னை பற்றி பேசாமல் இருக்கலாமே. உன் பெயரை சொல்லி வேறு வேறு காரியங்களுக்கு பணத்தை கொள்ளை அடிக்காமல் இருக்கலாமே. எல்லாவற்றுக்கும் மேலாய் உன்னை வாள வைக்காவிட்டாலும் வாழ்விழக்க வைக்கமால் இருக்கலாமே என்பதுதான். நீ கேட்கலாம் நீயும் இதில் ஒருவன் தானே என்று. நான் எங்கும் நெஞ்சு நிமிர்த்தி சொல்வேன் உன்னை நான் எங்கும் எதற்கும் என் சுய நலத்துக்காய் பாவித்ததில்லை. அதே போல இங்கும் பலர் இருக்கலாம் ஆனால் இந்த பதிவின் தொப்பி அளவானவர்கள் செய்வது என்னை உன்னை என் உன் வீட்டு பக்கத்துவீட்டு காரனை கூட பாதிக்கிறது. இது தனி மனித சொத்தல்ல நினைத்தவர் நினைத்தபடி நடக்க. எனவே நீ தான் உன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் தமிழே.....

தொப்பி அளவானவர்களே நீங்களே உங்களை கேட்டுக்கொள்ளுங்கள். தமிழ் என சொல்லவும் தமிழன் என புளங்காகிதம் கொள்ளவும் உங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று. நான் என்னையும் இந்த கேள்வியை கேட்டு பார்க்கின்றேன். சுய பரிசோதனைக்காய்.

இப்படிக்கு,
தமிழன்.(இப்படிதான் எல்லோரும் சொல்கின்றார்கள்.)
Share:

Friday, November 5, 2010

தூரதேச சிறகில்லா பறவையின் தீபாவளி வாழ்த்து!

ஹாய்! எல்லோரும் எப்பிடி இருக்கிறிங்க? நானும் ஒரு பதிவரா என்று கேட்கப்படாது. என்ன செய்வது நம் நாட்டை விட்டு வெளிநாடு வந்து நடுவாற்றில் நிற்கும் நமக்கு இப்படி ஆடிக்கொரு அமாவாசைக்கு ஒரு பதிவு தான் இடமுடியும். நம்மவர்களை மறக்கலாமா என்ன. இதோ நாடு இரவிலும் உங்கள் எல்லோரையும் மறக்காமல் என் உள்லாம் வால்த்துக்கின்றது ஏற்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில். மிக விரைவில் சந்திப்போம். அதுவரை என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

Share:

Friday, May 21, 2010

காதல் மொழி எது?- கல்வி



* கட்டாயக்கல்வியின் வயதெல்லை 5-16

* பாடசாலைகளின் வகைகள் TAB, IC, Type II, Type III

* கிராமப்புறங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வகைப் பாடசாலை இசுறு என அழைக்கப்படும்.

* இலவசக் கல்வி முறையை அறிமுகப்படுத்திய நாடு நெதர்லாந்து.

* உலகில் முதன் முதல் கல்வித்துறையில் பரீட்சைகளை நடத்திய நாடாக சீனா பெருமை பெறுகின்றது.

* இலங்கையில் கல்வித்துறைக்கான நிர்வாக கட்டமைப்புக்களுக்கான கூறுகள்.
கல்வி அமைச்சு

மாகாணக் கல்வி அமைச்சு.
மாகாணக் கல்வித் திணைக்களம்.
வலயக் கல்வி அலுவலகம்
கோட்டக் கல்வி அலுவலகம்.
பாடசாலை.

உலகில் உள்ள ஒரு சில மொழிகளும் அதற்கான சிறப்பு பெயர்களும்.

தமிழ் - பக்தி மொழி.
ஆங்கிலம் - வணிக மொழி.
பிரெஞ்சு - காதல் மொழி
இத்தாலி - இசை மொழி
கிரேக்கம் - சட்ட மொழி
உருது - கவிதை மொழி
Share:

Wednesday, April 21, 2010

ஐ.பி.எல். நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரை இறுதிப்போட்டி பற்றிய அலசல் தமிழில் வீடியோ.

ஹாய் பிரண்ட்ஸ், பதிவை எழுத்தில தந்து ரொம்ப போரடிச்சு போச்சு. இன்றைக்கு இந்த பதிவை போடணும் அதேநேரம் போட்டியும் பார்க்கணும் என்பதற்காக இதுவரை வேறு சம்பவங்களையும் இன்னும் சில வீடியோக்களையும் இணைப்பாக இட்டு பதிவு தந்துள்ளோம். முதல் முறையாக நான் என்ன சொல்ல நினைக்கின்றேனோ அதை வீடியோவாக உங்களுக்காக தருகின்றேன்.

இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போட்டி பற்றிய என் அலசலான பதிவு இது எனவே இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கின்றேன்.


Share:

Tuesday, April 13, 2010

விரோதியே...! வித்தியாசமான புதுவருட வாழ்த்து.



விரோதியே...!

புத்துயிர் கிடைக்குமென்று உலகமே எதிர்பார்க்க
புதிய வருடமாய் நீ வந்தாய் என் விரோதியே..
பெயரில் இருப்பது போல் நீ இருக்கக்கூடாதென்று
பெயர் தெரியா நண்பர்களுக்காக கூட வேண்டினேன்

ஆனால்?

வாழ்த்துக்கள் பலவோடு விரோதியை வரவேற்றோம்
வளமெல்லாம் கிட்டட்டும் நம் விரோதிகளுக்கு கூட என்று
சில களமாடிப்போனதுவோ? பல நெஞ்சை களவாடிப்போனவர்களை
பொல பொலவென கரை புரண்டது கண்ணீர்
கல கலவென இருந்த நம் வாழ்வில்

நேசித்த நெஞ்சம் ஒன்று நோகடித்து சென்று
நிமிடங்கள் நாட்களாகி ஆண்டு இரண்டு ஓடிவிட
புதிய சொந்தங்கள் என் வாழ்வில் கோலமிட
புத்தம் புதிதாய் நான் பிறந்தேன் உன் மடியில்

வானலை வாழ்க்கையதில் வழுக்காமல் பயணித்தேன்
வாழும் காலச் சுவடை எழுத்தாக மாற்ற எண்ணி
வானலை நண்பர்கள் உதவியினால் இப்பதிவுலகம் புகுந்து கொண்டேன்.
வாசக நெஞ்சங்களே வணங்குகின்றேன் உங்களுக்கு வாழ்த்துகின்றேன்.

ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கை பாடம் கற்பிக்க
என்னருமை பெரிய தந்தையையும் பறிகொடுத்தேன்
வாழ்வோடு வாளின்றி போராடிக்கொண்டிருந்த நேரம்
வாழ்வுனக்கு வடக்கே என்று அசரீரி ஒலித்ததுவோ?
வாழ்வை நான் தேடி வடக்கே போவதற்கு - புது
வாழ்வை எனக்களித்த வானலையை வாஞ்சை இன்றி பிரிந்துள்ளேன்

விகிர்தியே...!

விரோதியை வழியனுப்பி வரவேற்கிறோம் உன்னை - நாம் செய்த
விரோதங்கள் நீ மறந்து தரவேண்டும் விமோசனத்தை
வெற்றிகள் சேரட்டும் வாழ்வில் வேதனைகள் மறைந்துபோக- என்
வெற்றிக் குடும்பத்திற்கு வாழ்த்துகின்றேன் மனதார

பாசத்தலைவனின் அதிமேதாவித் தனத்தினால்
புதுவருடப்பிறப்பை கொன்று சித்திரை திருநாளை கொண்டாடும்
தமிழ் நாட்டு உறவுகளுக்கு இந்த
தமிழ் சொந்தத்தின் தன்னலமற்ற வாழ்த்துக்கள்.

நான் எழுதும் மொழி புரியாவிட்டாலும்
நான் இடும் இடுகையை பார்க்காவிட்டாலும்
நம் நாட்டில் நம்மோடு வாழும்
நம் சிங்கள சகோதரர்களுக்கு ஒரு தமிழனின் வாழ்த்துக்கள்

பாலர் வகுப்பு முதல் என் பாடையோடு கூட வர காத்திருக்கும்
பாசக்கார பயலுகள் என் நண்பர்களுக்கு நயமான வாழ்த்துக்கள்
உயிருக்கு உயிராயும் சொல்லுக்காய் உறவாயும்
உயிரை கொடுக்கும் சொந்தங்களுக்கும் உயிரை பறிக்கும் சொத்தைகளுக்கும் ஒரு
உண்மையான உறவின் வாழ்த்துக்கள்

முகம்தெரியாமல் என்னை விரும்பி தங்களில் ஒருவனாக்கி
அகம் மகிழ்ந்து நின்ற என் வெற்றி நேயர் சொந்தங்களுக்கு
உங்கள் ப்ரியமானவனின் பிரியமான வாழ்த்துக்கள்
பதிவுலக பெருந்தகைகள் பல இருக்க
பச்சிளம் பாலகனாய் நான் பதியும்
பதிவுகளுக்கு ஆதரவளிக்கும்
பதிவுலக பெருமக்களுக்கு இந்த சிறுமகனின் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் சொல்லிவிட்டேன்
வந்துவிடு விகிர்தியே விக்கினங்கள் தீர்த்துக்கொண்டு....



பி.கு:இந்த படத்தினை கனடாவில் இருந்து டிசைன் செய்து மூஞ்சிப்புத்தகத்தில் இட்ட என் ஆருயிர் நண்பன் திலக்குக்கு என் நன்றிகள்.
Share:

Tuesday, September 1, 2009

கொலை வழக்கில் சிக்குவாரா பாவனா?



நடிகைகளுக்கு இப்போ போதாத காலம் போலே. சினேகா தானாக வலையில் விழுந்து போனார். சோனியா நீதிமன்றம் ஏறுகின்றார். அந்த வரிசையில் இப்போது பாவனா. பாவனாவின் இந்த பிரச்சனைக்கு வர முதல் இன்னொரு விடயம்.

சித்திரம் பேசுதடியிலேயே பாவனாவை பார்த்து கவிழ்ந்தவன் நான். அந்த பாவனைக்கு இன்று ஒரு பிரச்சனை என்றால் விட்டுவிடலாமா? என்னை போன்ற பாவனா ரசிகர்கள் எத்தனை பேர் நொந்து நூலாகி நூடில்ஸ் ஆகி போயிருப்பர். சரி பாவனாவை டாவடிச்சது போதும் விசயத்துக்கு வா என மூத்த பிரபல பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள் என்னை திட்டுவிங்க என தெரியும். விடுங்கப்பா நான் சொல்றத பாவனா பார்க்க மாட்டாங்க. மனதை தேற்றுங்க போட்டியாளர்களே.இன்னும் நான் விஷயத்தை சொல்லாட்டி என் தல (அஜித்தை சொல்லலப்பா) போயிடும்.




ஒரு பக்கம் புல்லட் பாவனாவை குறிவைக்க மற்ற பக்கம் வந்தி அண்ணா பாவனா மாதிரி பொண்ணுதான் வேணுமெண்டுதான் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்காராம். இப்படி எல்லாப்பக்கத்தாலும் பாவனைக்கு தொந்தரவெண்டால் அந்த பொண்ணு என்னதான் செய்யும் உங்களை தான் கொலை செய்யும். ஆனால் இப்போது இன்னுமொரு கொலையில் பாவனா மாட்டுவார் போல தெரிகின்றது. சாட்சியாகத்தானுங்கோ. முத்தூட் அதிபர் பால் ஜோர்ஜ் கொலை சம்பந்தமாக பாவனாக்கும் தொடர்பிருக்கும் என்று சொல்லப்படும் நிலையில் ஊடகங்கள் அவருடன் பேச தொடர்பெடுக்க அந்த தொடர்பு டைவேர்ட் ஆகி பாவின் மனேஜரிடம் செல்கின்றது. கேட்கும் கேள்விக்கும் அவரின் பதிலோ கொலை இடம்பெற்ற சமயம் பாவ் மலையாள படம் ஒன்றில் நடித்துக்கொண்டிருந்தார் பிறகு எப்படி அவர்க்கு அதில் சம்பந்தம் இருக்கும் என இவர்களையே திருப்பிக் கேட்கின்றார். அதுவாவது பரவாயில்லை பால் ஜோர்ஜை யாரெண்டே பாவனைக்கு தெரியாது என இன்னொரு விடயத்தை சொல்லி இருக்கின்றார்.



இதேநேரம் இன்னொரு தகவலாக கொலை நடந்த சமயம் பாவனா ஜோர்ஜின் காருக்குள் இருந்ததாகவும் இந்தவிடயம் வெளியே தெரிந்தால் தான் பெயருக்கு பங்கம் வந்துவிடும் என்பதற்காக ஜோர்ஜின் உதவியாளரின் உஅத்வியுடன் அவ்விடத்தை விட்டு எஸ்கேப் ஆனதாகவும் சொல்லப்படுகின்றது.அதேநேரம் அந்த காரில் பாவனாவின் உடைகளும் கைப்பை ஒன்றும் இருந்ததாகவும் அது இப்போது போலீசாரிடம் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த பூனையும் பால் குடிக்குமா இல்லையா என்பது இன்னும் சற்று நாளில் தெரிந்துவிடும்.

பி.கு:புல்லட் தான் கொள்கையை மாற்றியதாகவும் வந்தி அண்ணா உடனடியாக தான் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டதாகவும் ஒரு கதை அடிபடுகின்றது. எல்லாம் பட்டு தெளிந்தபின்தான்.
Share:

Thursday, May 14, 2009

கத்தால கண்ணழகிக்கு அது பிடிக்காதாம்! கேளுங்க! கேளுங்க! கேளுங்க!

"நல்ல அழகாகத்தான் இருக்கிறார், நடனத்திலும் சளைக்காதவர் தமிழ் சினிமாவை கலக்குவார்" இது தமிழ் சினிமாவின் ஆர்வலர்கள் ஸ்னிக்தா "கத்தால கண்ணால குத்தாத" என பாடிக்கொண்டு அறிமுகமானபோது சொன்ன வசனம். மராத்தி, ஹிந்தி மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக்கொண்டிருந்தவர் இல்லாத இடுப்பாலே என தன இடுப்பை ஆட்டி ஆட்டி ஆட்டம் போட்டே பிரபலமாகிவிட்டார். என்ன செய்ய பல இளைஞர்களின் தூக்கமும் கொஞ்சம் கெட்டுத்தான் போச்சு.

ஆனாலும் இப்போ அவர் தன் செவ்விதழ் திறந்து சொன்ன வார்த்தைகள் தான் காதல் கோட்டை கட்டிய எத்தனையோ பெயரை முகவரி இல்லாமல் செய்யப்போகின்றது. அவர் அழகை பார்த்து ஆண்கள் பயப்பட்டுக்கொண்டிருக்கும்போது(வேறொன்றுமில்லை காதலில்தான்.) ஸ்னிக்தாவோ தனது பயப்பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் பயப்படுத்தி விட்டார். பத்திரிகையாளர்களைக் கண்டால் பயமாம்(கேட்கக்கூடாத கேள்வியை கேட்காதிங்கப்பா செல்லம் பயப்படுகிதெல்லா)

அடுத்ததா சிக்கியது இவங்க என்ன சொல்றாங்கன்னே என தெரியமுடியாத பல்லிகள்.(எல்லா நடிகைகளும் பல்லி கரப்பான் பூச்சி என ஒரு லிஸ்ட் வைத்திருப்பார்கள்.) தனிமையில் பிடிச்சது பொம்மைகளாம்(அதைத்தான் கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பாரா? நானும் பொம்மைமாதிரி இருப்பேனே.) பருப்புசாதம் என்றா உயிரையே விடும் ஸ்னிக்தா உயிரினும் மேலான காதலை ஒரு நோயென சொல்லிவிட்டு காதலே தனக்கு பிடிக்காதாம். அதைவிட கொடுமை ஆண்கலென்றாலே பிடிக்காதாம்.(எப்பிடிதாயே நடிப்புலகத்துக்கு வந்திங்க.)

ஆண்களை பிடிக்காத அம்மணி எப்படித்தான் ஆண்களுடன் சேர்ந்து கட்டிப்பிடித்து காதல் காட்சிகளில் எல்லாம் நடிக்கின்றாரோ தெரியவில்லை. நண்பர்களே! இனிமேல் ஸ்னிக்தா பின்னால் அலையாதிங்க ஏனென்றால் அவங்களுக்கு தான் அது(காதல்+ஆண்களை) பிடிக்காதாமே.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox