Sunday, May 9, 2010

எண் விளையாட்டு விளையாடலாம் வாங்க.


ஒரு அதிசய எண் 123456789,
இப்போ நீங்கள் செய்யப்போறது என்னவென்றால் ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் ஒரு எண்ணை தெரிந்து எடுங்கள். அந்த எண்ணை ஒன்பதால் பெருக்கி வரும் விடையை இந்த அதிசய எண்ணினால் பெருக்குங்கள். விடையை பாருங்கள் என்ன அதிசயமென்று.

உதாரணம் :
1x9x123456789=1111111101
2x9x123456789=2222222202
3x9x123456789=3333333303
4x9x123456789=4444444404
5x9x123456789=5555555505
6x9x123456789=6666666606
7x9x123456789=7777777707
8x9x123456789=8888888808
9x9x123456789=9999999909

இது இப்படியே இருக்கட்டும் அடுத்ததை பார்க்கலாம்.

ஒரு மூன்று இலக்க எண்ணை எழுதுங்கள்.(உதாரணம் 369)
அதே எண்ணை மீண்டும் எழுதி ஆறு இலக்க எண்ணாக மாற்றுங்கள். (உதாரணம் 369369)
கிடைத்த எண்ணை ஏழினால் பிரியுங்கள்(வகுத்தல்) (உதாரணம் 52767)
வரும் விடையை பதினொன்றால் வகுத்துக்கொள்ளுங்கள். (உதாரணம் 4797)
வரும் விடையை பதின்மூன்றால் வகுத்தெடுங்கள்.
அட இப்போ வரும் விடையை பாருங்கள் உங்களுக்கு ஆச்சரியம் கிடைக்கும். விடை மீண்டும் அதே எண் 369

அடுத்ததாய் நாங்கள் பார்க்கப்போறது ஒரு மாயா சதுரம். இந்த சதுரத்தை கவனமாய் பாருங்கள்.

96 11 89 68
88 69 91 16
61 86 18 99
19 98 66 81

இப்போ மேலே இருக்கும் அந்த சதுரத்தில் இருக்கும் எண்களை இடமிருந்து வலம் கூட்டுங்கள் அடுத்து வலம் இருந்து இடம் கூட்டுங்கள் மேலிருந்து கீழ் கூட்டுங்கள் எப்பிடி கூடினாலும் வாறது ஒரே விடை 264 தாங்க.

இப்போ இந்த சதுரத்தை அப்பிடியே தலை கீழாய் மாத்திப்போடுங்கள்.

18 99 86 61
66 81 98 19
91 16 69 88
89 68 11 96

இப்போதும் முதல் போல கூட்டிப்பாருங்கள். வரும் விடை என்னங்க?
ஒன்றும் யோசிக்காதிங்க அதே 264 தாங்க.
Share:

9 கருத்துரைகள்:

கன்கொன் || Kangon said...

ஆகா......

எப்பிடித் தல? எப்பிடி?

நல்லாருக்கே....

பகிர்வுக்கு நன்றி தல...

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

அண்ணே வாங்கோ வாங்கோ. இப்போ எண் விளையாட்டு விளையாடிட்டிங்களா அப்புறம் செத்து செத்து விளையாடுவம் வாறிங்களா?

Bavan said...

Thanks 4 sharing BOSS.. ;))))

Bavan said...

//@கன்கொன் || Kangon

அண்ணே வாங்கோ வாங்கோ. இப்போ எண் விளையாட்டு விளையாடிட்டிங்களா அப்புறம் செத்து செத்து விளையாடுவம் வாறிங்களா?//

அய்... ரெண்டு பேரும் சுறா படத்துக்கு போறீங்களா?..:p

SShathiesh-சதீஷ். said...

@Bavan

வருகைக்கு நன்றி boss

SShathiesh-சதீஷ். said...

@Bavan
ஐ நான் போகமாட்டேன் அங்கே போனால் செத்து செத்ததெல்லாம் விளையாட முடியாது மவனே சாவு மட்டும் தான்.

ஆதிரை said...

இரண்டாவது புதிரில் திரும்பவும் 13 ஆல் வகுத்தால் தான் அதே விடை கிடைக்கும். (அதாவது ஒரு மூன்றிலக்க எண்ணை 1001 (= 7*11*13) இனால் பெருக்குவதன் மூலம் அந்த எண் ஒரே வடிவ ஆறிலக்க எண்ணாக மாறும்)

பின்னூட்டமிட்டு ஆஹா ஓஹோ என்ற கன்கொனை இனியுமா நம்பப் போறீர்கள்?

SShathiesh-சதீஷ். said...

@ஆதிரை

சரியாய் சொன்னீர்கள். அந்த வரியை தவற விட்டுவிட்டேன் இப்போ திருத்திக்கொள்கின்றேன். கான்கொனின் ரகசியம் அம்பலமா? ஏனன்னா அவனிடம் உங்களுக்கு இப்படி கோபம். பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள்.

கன்கொன் || Kangon said...

@ ஆதிரை அண்ணா

அதை நான் கவனிக்கவில்லை...
உண்மையைச் சொல்லப் போனால் நான் கணிப்பை மேற்கொள்ளாமல் மேலோட்டமாகத்தான் மனக்கணக்குப் பார்த்தேன்...

மனக்கணக்குகள் அதிகளவில் பிழைப்பது போல் இங்கும் பிழைத்துவிட்டது.... :(

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive