Saturday, May 22, 2010

சைவர்களின் இறந்தவருக்கான கிரியைமுறைஇந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒருநாள் இந்த மண்ணை விட்டு செல்லத்தான் வேண்டும். அவர் ஆள்பவனாக இருந்தாலம் சரி அடிமையாக இருந்தாலும் சரி. இது காலம் காலமாக நான் உணர்ந்து கொண்டிருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மை. மண்ணில் ஒரு உடலில் ஆன்மா வாழும்வரை அந்த ஆன்மா தான் பின்பற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டே அவர்களுக்கான இறுதிச் சடங்குகள் இடம்பெறுகின்றன. ஆனால் இதி கூட கவலைக்கிடமான விஷயம் சில இடங்களில் இந்த சடங்கை செய்ய வருபவர்களே தப்பாக செய்வதும் சில பெரியவர்கள் இதை அறியாமல் தப்பாய் வழிநடத்துவதும் சிலர் ஏனோ தானோ என்று செய்வதும் இன்று பல இடங்களில் நடந்தேறுகின்றது.

இன்றைய இளம் தலைமுறையில் பலருக்கு இந்த சடங்குகள் சம்பிரதாயங்கள் தெரியாமல் இருப்பது கண்கூடு. அதற்க்கு நானும் விதி விலக்கல்ல. அப்படி இருக்கையில் இந்த பதிவு எப்படி என நீங்கள் கேட்கலாம். இன்று காலை எனக்கு உறவினர் ஒருவரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில் தன தந்தையின் நினைவேட்டுக்கு பல அரிய விஷயங்களை சேர்க்கவேண்டும் அதில் இந்த சடங்குகள் சம்பந்தமான விடயம் கட்டாயம் இடம்பெற வேண்டும் காரணம் பலர் அறியாமல் தடுமாறுகின்றனர் என்று சொன்னார். அதற்கு என்னாலான உதவியாக இதை செய்ய சில மூத்தோரிடமும் சில நூல்களிலும் படித்து அதன் தொகுப்பாக இதை இங்கே தருகின்றேன்.

இந்த வழக்குகள் சில இடங்களில் மாறி இடம்பெறுகின்றது என்றாலோ? மேலதிக கருத்துக்கள் நடைமுறைகள் உங்களுக்கு தெரிந்திருந்தாலோ பின்னூட்டத்தில் சொன்னால் நம்மை போல் பலர் அறியக்கூடியதாக இருக்கும்.

ஒரு மனிதனாக ஒரு நாட்டவனாக ஒரு தமிழனாக ஒரு உயிராக பிறந்தாலும் நானும் ஒரு சைவ சமயத்தை பின்பற்றுபவன். இங்கே நான் இடும் சடங்குகள் பற்றிய இடுகை சைவ சமயத்தை சார்ந்தவர்களுக்கே. சைவர்கள் பிறப்பது முதல் இறப்பது வரை பல்வேறு சடங்குகளை சந்திப்பவர்கள். அந்த வகையில் இறந்ததன் பின் செய்யப்படும் சடங்குகள் அபரக்கிரியை என அழைக்கப்படுகின்றது. அதாவது அபாரம் என்றால் பிந்தியது எனவே பிந்திய கிரியை என இது பொருள்படுகின்றது. இந்த சடங்குகளை செய்வதன் மூலமே பிதிர்கள் சாந்தி அடைகின்றன என்ற நம்பிக்கை உண்டு.

இந்த அபரக்கிரியையில் சூர்ணோத்சவம்(மரணச்சடங்கு), தகனம், அஸ்திசஞ்சயனம்(காடாற்று), அந்தியேட்டி, பாசாணபூசை, ருத்திர பலி, நவசிராத்தம், ஏகோத்திரவிருத்திசம்கிதை, இடபதானம், ஏகோதிட்டம், மாசியம், சோதகும்பசிராத்தம், சுவர்க்கமாதேயம், வைதரணிகோதானம், சபிண்டீகரணம்(வீட்டுக்கிரியை) சிராத்தம் முதலிய கியைகள் நடைபெறுகின்றன.

இதிலே தகனத்துக்கு முன்னர் இறந்தவரின் உடலுக்கு விசேட அந்தியேட்டி நிருவாண அந்தியேட்டி ஆகியவை இடம்பெறும். மாமிச உணவு உண்ணாத நாலாம் வருணத்தாருக்கும் இறந்தவரின் உடலில் (பிறேதத்தில்) சமய அந்தியேட்டி தகனம் செய்ய முன் செய்யப்படுவதே வழக்கம். இந்த கிரியைகளை செய்யும் ஆசாரியாரும் செய்விக்கும் கர்த்தாவும் இவை பற்றிய முழுமையான விளக்கத்தை தெரிந்து கொண்டு செய்தால் தான் முழுமையான நன்மை கிட்டும். மரணச் சடங்கு தொடக்கம் பாஷாணபூசை வரையுள்ள கிரியைகளை சைவ ஆசாரியர்களும் சபிண்டீகரணம் சிராத்தம் முதலிய கிரியைகளை பிராமண ஆசாரியார்களும் செய்து வைக்கிறார்கள்.

ஒருவர் நோய்வாய்ப்பட்டு அல்லது வாவ்திபமடைந்து மரணப்படுக்கையில் இருக்கும்பொழுது அவரது பாவங்கள் நீங்கி நற்கதி அடையும் பொருட்டு பசு தானம் செய்யப்படுவது வழக்கம். இதனை உத்திராந்தி தானம் என்பர். இது உயிர் உடலை விட்டு பிரியும் நேரம் செய்யும் கிரியையாகும். பின்னர் திருமுறைகள் ஓத வேண்டும். திருநீறு அணிவித்து புண்ணிய தீர்த்தம் அல்லது பால் பருக்கி வலது காதில் பஞ்சாட்சர மந்திரம் ஓத வேண்டும்.
மரணனமடைந்தவரை உடலுக்கு குளிப்பாட்டி அவரை அலங்கரித்து தர்ப்பைப்புல் பரப்பி தலை தென் புறம் வைக்க பிரேதத்தை வைத்து படுத்த வேண்டும். இறந்தவரின் உடலின் தலைப்பகுதியில் விளக்கேற்றி வைக்கவேண்டும்.

மரணச் சடங்கு - சூர்ணோத்சவம்.

இறந்தவர் தகப்பனாக இருப்பின் அவரின் மூத்த மகனும் தாயாக இருப்பின் கடைசி மகனும் கிரியை செய்வதே முறை. பிள்ளைகள் இல்லாதவிடத்தோ அல்லது அவர்களால் கிரியை செய்யமுடியாத சந்தர்ப்பங்களில் கீழ்வரும் ஒழுங்கில் பிவருவோர் கிரியை செய்ய உரித்துடையவர்கள்.
மகன்
மனைவி
மகள்
இறந்தவரின் அண்ணன்
இறந்தவரின் இளைய சகோதரர்
இறந்தவரின் சகோதரரின் மகன்
இறந்தவரின் தந்தை
இறந்தவரின் தாய்
இறந்தவரின் மருமகன்
இறந்தவரின் சகோதரி
இறந்தவரின் சகோதரியின் மகன்
தந்தை வழி சபிண்டன்
சமானோதகன்
தாய்வழிச் சபிண்டன்
தாயின் சமானோதகன்
சீடன்
குறு
மகளின் கணவன்
நண்பன்
அரசன்

இதேபோல மகனால் மரணச்சடங்கை தொடர்ந்து இடம்பெறும் கிரியை செய்ய முடியாதென்றால் இன்னொருவர் அந்த கிரியையை செய்யலாம். ஆனால் இவரையும் சேர்த்து வைத்தே ஆரம்ப கிரியை செய்யவேண்டும். பொதுவாக அந்தியேட்டி கிரியை இறந்தவரின் 31 ஆம் நாள் செய்யப்படுவதே வழக்கம். இந்த தினத்தை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது.

மரணக்கிரியை நடைபெற இருக்கும் இடத்தில் மண்டபம் அமைத்து வெள்ளை கட்டி, மாவிலை ,தோரணம், பூக்களால் அலங்கரித்து அந்த இடத்தினை சாணத்தினால் மெழுக வேண்டும். மரணக்கிரியை செய்யும் வேளை நடுவில் ருத்திரகும்பமும், அதனை சுற்றி அட்ட திக்கு பாலகர் கும்பமும்,மேற்குப் பக்கத்தில் புண்ணியாகவாசன கும்பமும், கிழக்குப் பக்கத்தில் உரல், உலக்கை, பேருக்கு பதில் மணி, மயானத்துக்கு கொண்டு செல்லும் மண்குடக்குடக் கும்பம் வைக்க வேண்டும். அபிஷேகம் செய்யும் முகமாக பிறேதத்தினை வீட்டின் தென் புறத்தில் வடக்கு நோக்கி தலை தெற்குப் பக்கம் இருக்கும் வண்ணம் கிடைத்த வேண்டும். அதன் பின்னர் கர்த்தா அரப்பு எண்ணெய் முதலியவற்றை சிரசில் வைக்க வேண்டும். பின் அரிசிமா, மஞ்சள் மா, அபிஷேகக் கூட்டு,பால்,தயிர்,இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். கர்த்தா மேற்கு முகமாக நின்று கீழிருந்து மேலாக அவரின் புறங்கையினால் வேறு ஒருவர் உதவியுடன் இந்த பிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின் கும்ப அபிஷேகம் நடைபெறும். அதாவது பன்னீர் போன்ற வாசனைப் பொருட்கள் முதலியவற்றை சிரசிலே சாத்த வேண்டும். பின்னர் பிரேதத்தை அலங்கரித்து மண்டபத்துக்கு கொண்டு வந்து தெற்கு பக்கமாக தலையை வைத்து திருநீறு பூச வேண்டும். பின்னர் சுண்ணம் இடிக்கப்படும்.அறுகு, மஞ்சள் போடி போன்றனவற்றை உரலில் இட்டு பேருக்கு பதிலாக மணியடித்து பத மந்திரம் சொல்லி எட்டுத்தரம் இடித்து பின்பு, திருப்போர்சுன்னப்பாடி சுன்னமிடிக்க வேண்டும். சுண்ணமிடித்து சுண்ணப்பொடியும் சேர்த்து பிரேத அபிஷேகம் நடைபெற வேண்டும்.

சுண்ணம் இடிக்கும் தறுவாயில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உட்பட உரித்துடைய சந்ததிக்காரர்கள் பந்தம் பிடிப்பது வழக்கம். பின்னர் பெண்கள் வாய்க்கரிசி இட்டு பிரேதத்தின் வாய்,கை,,கால்,விரல்கள் ஆகியவற்றைக் கட்டி பூத உடலை வஸ்திரத்தினால் மூடி பாடையில் வைத்துக் கட்டி கால் முன்பக்கமாக இருக்கும் படி மயானத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். கொள்ளி வைக்க இருப்பவர் நெருப்புச் சட்டியுடன் பூத உடலுக்கு முன்பாக செல்ல ஆசௌச உரிமையாளர்கள் பிரேதத்தின் பின் புறம் செல்ல வேண்டும். ஏனையோர் பின் செல்லக்கூடாது. மயானத்தை அடைந்ததும் முதலில் தலைப்பக்கமும் பின்னர் கால்புறமும் செல்லக்கூடிய வகையில் பிரேதத்தை உள்நுழைக்க வேண்டும். மயானத்தில் வடக்கு தெற்காக விறகினை அடுக்கு அதன் மேல் பிரேதத்தினை வைத்து வாய்க்கரிசி இடுபவர்கள் இட வேண்டும். பின் கர்த்தா மட்குடத்தை இடது தோளில் வைத்து சிதையை இடப்பக்கமாக சுற்றி வந்து குடத்தை தலைப்பக்கத்தில் வைத்து கும்ப நீர், அரிசி, பவுன் அல்லது காசுடன் வாய்க்கரிசியிட்டு முன்போல குடத்தினை இடதுபுற தோளில் வைத்துக் கொண்டு கொள்ளிக்கட்டையை ஏந்திய வண்ணம் மீண்டும் இடப்புறமாக மூன்று முறை சுற்றி வர ஒவ்வொரு சுற்றின் போதும் குடத்தில் கத்தி நுனியினால் துவாரமிட்டு சுற்றி முடித்த பின் தலைப்பாகத்தில் தெற்கு முகமாக நின்று பின்புறமாக பிரணவம் சொல்லி கொள்ளியை பிரேதத்தின் சிரசில் வைத்து குடத்தை முன்புறமாக உடையும்படி போட்டு விட்டு, பின்பு கால்மடில் சென்று பவித்திரம், பூணூல் ஆகியவற்றை ஆகியவற்றை சிதையில் போட்டு திரும்பி பாராமல் செல்ல வேண்டும்.

இந்தப்பதிவு இன்னும் தொடரும். இதன் பின் செய்ய வேண்டிய கடமைகள் என்ன முழு விபரத்துடன் விரைவில் இதன் தொடர்ச்சி...காத்திருங்கள்.
Share:

18 கருத்துரைகள்:

சௌந்தர் said...

பல விஷயம் தெரிந்து வைத்து இருக்கிறார் சதீஷ்... முக்கியமான சடங்குகள் பற்றி தெரிந்து அனைவரும் கொள்ளவேண்டும்

சௌந்தர் said...

இங்கு {இந்தியா} அப்பாக்கு இளையமகன் தான் இறுதி சடங்குகள் செய்யவேண்டும் அம்ம்வுக்கு முத்த மகன் இறுதி சடங்குகள் செய்யவேண்டும்

Anonymous said...

இந்து முறையில மட்டும் இல்லப்பு... வேறு சில முறையிலையும் செத்தா எரிக்கிறாங்க...!

வியா (Viyaa) said...

நன்றி நண்பரே..இதன் வழி நானும் நிறைய அறிந்துக் கொண்டேன்..

SShathiesh-சதீஷ். said...

@soundar

தெரிந்து வைத்திருந்தேன் என்பது தவறு. என் பெரியப்பாவின் இறுதிச் சடங்கில் கூடவே நின்று சகல சடங்கிலும் கலந்து கொண்டதால் அண்மையில் தான் இவற்றில் பலவற்றை அறிந்தேன். அத்துடன் சில நூல்களில் இருந்து படித்து தெரிந்ததன் தொகுப்புதான் இது. இவை பற்றி இன்னும் தொடரும் பதிவுகள் வர இருக்கின்றன.

SShathiesh-சதீஷ். said...

@soundar

தகவலுக்கு நன்றி.

SShathiesh-சதீஷ். said...

@Anonymous

வேறு எந்த முறையில் என சொல்லுங்கப்பு. அப்பு நான் இங்கே சொல்வதெல்லாம் சைவர்கள் முறை பற்றியதுதான். எனக்கு தெரிந்ததும் அதுதான் அப்பு.

SShathiesh-சதீஷ். said...

@வியா (Viyaa)

முதல் முறையாக வந்துள்ளீர்கள் சந்தோசம் தொடர்ந்து வாருங்கள் இதன் தொடர்ச்சி எழுத இருக்கின்றேன்.

ARV Loshan said...

நல்லாத் தானேடா இருந்தாய்.. ;)
எதுக்கும் அவசரப்படாதே.. எல்லாம் சரியா வரும்..


அவ வருவா.. ;)
அப்பிடின்னு மாமா சொல்ல சொன்னார்

ஆதிரை said...

சதீஸ்,

என்னப்பன் நடந்தது???

கன்கொன் || Kangon said...

// LOSHAN said...

நல்லாத் தானேடா இருந்தாய்.. ;)
எதுக்கும் அவசரப்படாதே.. எல்லாம் சரியா வரும்..


அவ வருவா.. ;)
அப்பிடின்னு மாமா சொல்ல சொன்னார் //

:)))

எந்த மாமா? :P

rkajendran2 said...

அன்புள்ள ஆசிரியருக்கு,
எனக்கு மகன் கிடையாது. நான் இறந்தால் எனது மகள் அல்லது மருமகனை கொண்டு எனக்கு கொள்ளி வைக்கலாமா?

Bavan said...

தகவலுக்கு நன்றி அண்ணா,

வாழ்த்துக்கள்..:p

SShathiesh-சதீஷ். said...

@LOSHAN

எவா வருவா அண்ணா? எனக்கு எவா அவா என்று தெரியாதே...என்னை விட மாமன் ரொம்ப வேகமோ?

SShathiesh-சதீஷ். said...

@ஆதிரை

ஆடு மாடு எல்லாம் நடந்தது. எல்லாம் காலம் செய்த கோலம சித்தப்பு.

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

நல்ல கேள்வி இப்போது மாமாமார் அதிகரித்ஹ்டு விட்டனர்

SShathiesh-சதீஷ். said...

@rkajendran2

உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் ஆம் என்பதே. என் பதிவில் இதை பற்றி முழு விபரமும் குறிப்பிட்டுள்ளேன். மகன் இல்லாவிட்டால் யார் யார் இதில் ஈடுபடலாம் என்ற ஒழுன்குமுரையையும் இட்டுள்ளேன். மீண்டும் படித்துப் பாருங்கள் முழு விளக்கம் கிடைக்கும் என நம்புகின்றேன்.

SShathiesh-சதீஷ். said...

@Bavan

எதுக்கு சீடன் மாமா வாழ்த்திரிங்க

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive