
இன்றைய உலகில் பல்வேறு காரணங்களுக்காக தனிமையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. இது அந்த நபர்களின் மனதை உளைச்சலுக்கு உள்ளாக்குவதுடன் நடைமுறைசிக்கல்களையும் உருவாக்குகின்றது. தனியாக வாழ்பவர்களுக்கும் மன வாழ்க்கையில் நிம்மதி இன்றி தவிப்பவர்களுக்கும் அவர்களின் வாழ்நாளின் பிற்பகுதியில் மாரடைப்பு போன்ற நோய்கள் வர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது.
1963ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆய்வினை நடத்தி வரும் இஸ்ரேலின் அமைப்பொன்று இதற்காக அதிகாரிகளிடமும் நகராட்சி ஊழியர்களையும் இதற்குள் உட்படுத்தி இருக்கின்றது. 1963ஆம் ஆண்டிலிருந்து தனிமையில் வாழ்பவர்கள் தங்களின் வாழ்நாளில் 49வயதுக்கு மேற்பட்ட காலத்தில் நீரிழிவு,மற்றும் இதய நோய்களினால் உயிரிழந்துள்ளனர். இப்படி தனியாக வாழ்பவர்களில் மாரடைப்பால் இறந்தவர்கள் சதவீதமாக உள்ள நிலையில் மணவாழ்வு முறிவடைந்த பின்னர் இறந்தவர்கள் சதவீதம் தான். இரத்த அழுத்தம், உடல் பருமன்,புகைப்பிடித்தல்,நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்பு சாதாரண வாழ்வை மனிதர்களை விட தனிமையில் வாழ்பவர்களுக்கு அதிகம்.
நண்பர்களே, இந்த உலகம் போகும் போக்கில் நம்மில் பலர் தனிமையில் வாழவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. தொழில்,படிப்பு,கடந்தகால நாட்டு சூழல் என்பன....அதேநேரம் இன்று கூட்டுக்குடும்பம் என்பது இல்லாமல் போய்விட்டது. எப்போதாவது நாம் நம் சொந்த கிராமத்துக்கு செல்லும் போது அந்த நினைவுகள் மலருகின்றன. ஆனால் சில நேரங்களில் அதுவும் வெறுப்பாகி விடும். சிலருக்கிடையிலான மனக்கசப்பு அந்த சுகத்தையும் கெடுத்துவிடும். பாட்டன் பாட்டி முதல் அவர்கள் பேரன் பேத்தி மாமன் மாமி சித்தப்பன் பெரியப்பன் என்று எல்லோரும் எந்த பிரச்சனையும் இன்றி ஒரே இடத்தில் சந்தோசமாக வாழ்ந்தால் அந்த வாழ்வு கசக்குமா? நோய்கள் தான் வருமா? இல்லை ஆய்வு தான் நடக்குமா? நான் இப்படி பதிவிடுவேனா? நீங்களும் தான் இதை படிப்பீர்களா?
அடுத்து மண வாழ்க்கை. இன்று காதலே விலைபேசப்படுவது சாதாரணமாகிவிட்டது. அண்மையில் எனக்கு படிப்பித்த ஒரு ஆசிரியரை சந்தித்தேன். அப்போது அவர் சொன்ன ஒருவிடயம் என்னவெனில் அன்று கண்ணதாசன் மலருக்கு மலர் தாவும் பல வண்டுகள் அந்த வண்டுகளுக்கு உதாரணம் இன்றைய சில ஆண்கள் என்று அன்று சொன்னதாக சொல்லிவிட்டு அதை இன்று மாற்ற வேண்டும் அந்த உதாரணம் இன்று ஆண்கள் இல்லை சில பெண்கள் என சொன்னார்(கவனிக்க சில பெண்கள் தான் நான் சொல்லப்போவதும் ஒட்டுமொத்த பெண்களை அல்ல சிலரைத்தான்.) இன்று சிலருக்கு காதல் என்னும் போர்வையில் காமம் தேவைப்படுகின்றது. அந்த மோகம் முடிந்த பின்னர் வாழ்க்கை வெறுத்துப்போகின்றது. இதனால் சில காதல் திருமணங்கள் முறிந்து விடுகின்றன. இன்னும் சிலவோ ஒன்றல்ல இரண்டல்ல ஒரே நேரத்தில் பத்தை காதலித்து பாயாசமும் கொடுக்கின்றன. (எப்பிடித்தான் மெயின்டெயின் செய்றாங்களோ? நான் சொன்னது நேரத்தை.) இவர்களின் வாழ்வு எப்படி முடியும் என நான் சொல்லத்தேவை இல்லை. இதை விட காதல் என்ற கடவுளால் இணையும் சில மனங்களும் மணமான பின் முறிவது வேதனையே.
அடுத்து பேசிச் செய்யும் திருமணங்கள். இதில் எனக்கு பெரும்பாலும் உடன்பாடு இல்லை. ஆனால் சில காதல் திருமணங்கள் தோற்கும் போது இது அதை விட மேல் என தோன்றும். ஆனால் பெரியோர் பார்த்து நல்ல நேரத்தில் நடத்தி வைக்கும் திருமணங்களும் திசை மாறிப்போகும் காலமிது. இந்த மண முறிவுகள் எதற்கு? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் நம் தமிழர் பண்பாடு. காதலிக்கின்றீர்கள் என்றால் கடைசிவரை இவனுடன் அல்லது இவளுடன் தான் வாழ்வேன் என காதலியுங்கள். காதலில் காமம் இருக்கலாம் காமத்துக்காக காதல் வேண்டாம் அது நிலைக்காது. அதேபோல திருமணவாழ்வில் இணைய முன் சிந்தியுங்கள் அதன் பின் சேருங்கள் கடைசிவரை உங்கள் முடிவை மாற்றாது வாழுங்கள். இந்த நோய் என்ன எதுவுமே உங்கள் வாழ்வை அழிக்காது.