உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Tuesday, October 5, 2010

காதலி = அரசியல்வாதி



இரவினில் ஒரு நாள் இருதயம் கேட்டேன் - அவள்

இருவிழியூடு வந்து உயிரினை பறித்திட்டாள்

வாழ்வினில் என்றும் வாய்மையை கேட்டேன் - அவள்

வாயில் வந்ததை சொல்லி வாழ்க்கையை சிதைத்தாள்.


பிரியாதவரமொன்றை ப்ரியமானவளிடம் கேட்டேன்

ஏளனம் செய்து எனை ஏங்கவைத்து சென்றுவிட்டாள்

அன்பே உன்னை நான் மீண்டும் மீண்டும் அழைக்கையிலும்

மீளாத்துயில் கொண்டவள் போல் செவிடியாய் ஆகிவிட்டாய்


குற்றம் செய்தவனே சுற்றவாளி ஆகும் நாட்டில்

வழக்காடல் ஏதும் இன்றி குற்றவாளி ஆக்கப்பட்டேன்

அரசியல்வாதிபோல உன் அறிக்கைகள் இருந்தாலும் - என்

கூட்டணிக்கு இணங்காத உன் அறிக்கைக்கு பலன் ஏது.


தூதுவர் பலர் இருந்தும் தூதேதும் வரவில்லை

நானாக தூதனுப்பி பலனேதும் கிட்டவில்லை

காலத்துக்கு காலம் கூட்டணி மாற்றிக்கொள்ள - நான்

அரசியல்வாதியல்ல அநியாயக்காரனும் அல்ல

நிஜமான கூட்டணிக்கு தோல்வி கிடையாது -நின்


நிலைமாறும் கூட்டணிக்கு என்றுமே வாழ்வில் வெற்றி கிடையாது
Share:

Friday, May 21, 2010

காதல் மொழி எது?- கல்வி



* கட்டாயக்கல்வியின் வயதெல்லை 5-16

* பாடசாலைகளின் வகைகள் TAB, IC, Type II, Type III

* கிராமப்புறங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வகைப் பாடசாலை இசுறு என அழைக்கப்படும்.

* இலவசக் கல்வி முறையை அறிமுகப்படுத்திய நாடு நெதர்லாந்து.

* உலகில் முதன் முதல் கல்வித்துறையில் பரீட்சைகளை நடத்திய நாடாக சீனா பெருமை பெறுகின்றது.

* இலங்கையில் கல்வித்துறைக்கான நிர்வாக கட்டமைப்புக்களுக்கான கூறுகள்.
கல்வி அமைச்சு

மாகாணக் கல்வி அமைச்சு.
மாகாணக் கல்வித் திணைக்களம்.
வலயக் கல்வி அலுவலகம்
கோட்டக் கல்வி அலுவலகம்.
பாடசாலை.

உலகில் உள்ள ஒரு சில மொழிகளும் அதற்கான சிறப்பு பெயர்களும்.

தமிழ் - பக்தி மொழி.
ஆங்கிலம் - வணிக மொழி.
பிரெஞ்சு - காதல் மொழி
இத்தாலி - இசை மொழி
கிரேக்கம் - சட்ட மொழி
உருது - கவிதை மொழி
Share:

Saturday, April 17, 2010

திருமணம் முடிக்கப்போறிங்களா ஆபத்து காத்திருக்கின்றது.



இன்றைய உலகில் பல்வேறு காரணங்களுக்காக தனிமையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. இது அந்த நபர்களின் மனதை உளைச்சலுக்கு உள்ளாக்குவதுடன் நடைமுறைசிக்கல்களையும் உருவாக்குகின்றது. தனியாக வாழ்பவர்களுக்கும் மன வாழ்க்கையில் நிம்மதி இன்றி தவிப்பவர்களுக்கும் அவர்களின் வாழ்நாளின் பிற்பகுதியில் மாரடைப்பு போன்ற நோய்கள் வர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது.

1963ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆய்வினை நடத்தி வரும் இஸ்ரேலின் அமைப்பொன்று இதற்காக அதிகாரிகளிடமும் நகராட்சி ஊழியர்களையும் இதற்குள் உட்படுத்தி இருக்கின்றது. 1963ஆம் ஆண்டிலிருந்து தனிமையில் வாழ்பவர்கள் தங்களின் வாழ்நாளில் 49வயதுக்கு மேற்பட்ட காலத்தில் நீரிழிவு,மற்றும் இதய நோய்களினால் உயிரிழந்துள்ளனர். இப்படி தனியாக வாழ்பவர்களில் மாரடைப்பால் இறந்தவர்கள் சதவீதமாக உள்ள நிலையில் மணவாழ்வு முறிவடைந்த பின்னர் இறந்தவர்கள் சதவீதம் தான். இரத்த அழுத்தம், உடல் பருமன்,புகைப்பிடித்தல்,நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்பு சாதாரண வாழ்வை மனிதர்களை விட தனிமையில் வாழ்பவர்களுக்கு அதிகம்.

நண்பர்களே, இந்த உலகம் போகும் போக்கில் நம்மில் பலர் தனிமையில் வாழவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. தொழில்,படிப்பு,கடந்தகால நாட்டு சூழல் என்பன....அதேநேரம் இன்று கூட்டுக்குடும்பம் என்பது இல்லாமல் போய்விட்டது. எப்போதாவது நாம் நம் சொந்த கிராமத்துக்கு செல்லும் போது அந்த நினைவுகள் மலருகின்றன. ஆனால் சில நேரங்களில் அதுவும் வெறுப்பாகி விடும். சிலருக்கிடையிலான மனக்கசப்பு அந்த சுகத்தையும் கெடுத்துவிடும். பாட்டன் பாட்டி முதல் அவர்கள் பேரன் பேத்தி மாமன் மாமி சித்தப்பன் பெரியப்பன் என்று எல்லோரும் எந்த பிரச்சனையும் இன்றி ஒரே இடத்தில் சந்தோசமாக வாழ்ந்தால் அந்த வாழ்வு கசக்குமா? நோய்கள் தான் வருமா? இல்லை ஆய்வு தான் நடக்குமா? நான் இப்படி பதிவிடுவேனா? நீங்களும் தான் இதை படிப்பீர்களா?

அடுத்து மண வாழ்க்கை. இன்று காதலே விலைபேசப்படுவது சாதாரணமாகிவிட்டது. அண்மையில் எனக்கு படிப்பித்த ஒரு ஆசிரியரை சந்தித்தேன். அப்போது அவர் சொன்ன ஒருவிடயம் என்னவெனில் அன்று கண்ணதாசன் மலருக்கு மலர் தாவும் பல வண்டுகள் அந்த வண்டுகளுக்கு உதாரணம் இன்றைய சில ஆண்கள் என்று அன்று சொன்னதாக சொல்லிவிட்டு அதை இன்று மாற்ற வேண்டும் அந்த உதாரணம் இன்று ஆண்கள் இல்லை சில பெண்கள் என சொன்னார்(கவனிக்க சில பெண்கள் தான் நான் சொல்லப்போவதும் ஒட்டுமொத்த பெண்களை அல்ல சிலரைத்தான்.) இன்று சிலருக்கு காதல் என்னும் போர்வையில் காமம் தேவைப்படுகின்றது. அந்த மோகம் முடிந்த பின்னர் வாழ்க்கை வெறுத்துப்போகின்றது. இதனால் சில காதல் திருமணங்கள் முறிந்து விடுகின்றன. இன்னும் சிலவோ ஒன்றல்ல இரண்டல்ல ஒரே நேரத்தில் பத்தை காதலித்து பாயாசமும் கொடுக்கின்றன. (எப்பிடித்தான் மெயின்டெயின் செய்றாங்களோ? நான் சொன்னது நேரத்தை.) இவர்களின் வாழ்வு எப்படி முடியும் என நான் சொல்லத்தேவை இல்லை. இதை விட காதல் என்ற கடவுளால் இணையும் சில மனங்களும் மணமான பின் முறிவது வேதனையே.

அடுத்து பேசிச் செய்யும் திருமணங்கள். இதில் எனக்கு பெரும்பாலும் உடன்பாடு இல்லை. ஆனால் சில காதல் திருமணங்கள் தோற்கும் போது இது அதை விட மேல் என தோன்றும். ஆனால் பெரியோர் பார்த்து நல்ல நேரத்தில் நடத்தி வைக்கும் திருமணங்களும் திசை மாறிப்போகும் காலமிது. இந்த மண முறிவுகள் எதற்கு? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் நம் தமிழர் பண்பாடு. காதலிக்கின்றீர்கள் என்றால் கடைசிவரை இவனுடன் அல்லது இவளுடன் தான் வாழ்வேன் என காதலியுங்கள். காதலில் காமம் இருக்கலாம் காமத்துக்காக காதல் வேண்டாம் அது நிலைக்காது. அதேபோல திருமணவாழ்வில் இணைய முன் சிந்தியுங்கள் அதன் பின் சேருங்கள் கடைசிவரை உங்கள் முடிவை மாற்றாது வாழுங்கள். இந்த நோய் என்ன எதுவுமே உங்கள் வாழ்வை அழிக்காது.
Share:

Thursday, September 17, 2009

காதல்,அழகு,கடவுள்,பணம்-என் பார்வையில்.

இது தொடர் பதிவுகளின் காலம். நான் எழுத நினைக்கும் பதிவுகளை கூட எழுதமுடியாமல் இப்படி தொடர்பதிவு எழுத வேண்டுமே என்னும் ஆதங்கமும் உண்டு. என்ன செய்வது நண்பர்கள் அழைக்கும் போது அவர்கள் அன்புக்கு கட்டுப்பட்டு தானே நடக்கவேண்டும்.

அண்மையில் நண்பர் யோ வாயிஸ் தன் சார்பாக பள்ளிபயின்றதொரு காலம் என்னும் தலைப்பில் என்னை விளையாட கூப்பிட்டார். தப்பித்து விட்டேன். காரணாம் ஏற்கனவே அதே விடயத்தை நான் என் பள்ளிக்காலம் என்னும் தலைப்பில் எழுதிவிட்டேன். எனவே அந்த பதிவிற்கான இணைப்பை இங்கே கொடுக்கின்றேன். என்னை மன்னித்துவிட்டு அதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

அதை தொடர்ந்து அடுத்த அழைப்பு. இந்த முறை புதிய நண்பர் ஒருவர். காதல்,அழகு,கடவுள்,பணம் என மருதமூரான் அழைக்க இன்று இந்த பதிவு. இந்த பதிவை தொடங்க முன் இன்னொரு வேதனையான விடயம் அண்மைய என் பதிவுகள் எதுவும் தமிழிச் தளத்தில் ஹிட் அடிக்கவில்லை. என் புலம்பலை விட்டு விட்டு விடயத்துக்கு போகலாமா?

காதல்.


சொல்லும் போதே இனிக்கும் மந்திர சொல். மாயாஜால வாழ்க்கை. சிலருக்கு இது வாழ்க்கை சிலருக்கு இது பொழுதுபோக்கு. தாய் பிள்ளை மேல் கணவன்-மனைவி ஒருவருக்கிடையில், பிள்ளை தாய் மேல், ஒரு உயிர் இன்னொரு உயிரிடத்தில் என்று எல்லோரும் காதலின்றி வாழமுடியாது. காதலன் காதலி தங்களுக்கிடையில் வைக்கும் காதல் தான் இன்று காதல் என்றவுடன் பலருக்கு நினைவு வருகின்றது. அந்த பக்கத்தில் பார்த்தால் நானும் எத்தனையோ நல்ல காதல்களையும் காமக்காதல்களையும் பார்த்திருக்கின்றேன். பார்த்துக்கொண்டிருக்கின்றேன். காதல் என்னும் அற்புதம் காதலர்களுக்கிடையில் சிக்கி சின்னாபின்னமாகி அதன் புனித்ததை இழந்து கொண்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையே.

அழகு.


எம் மனதை பறிகொடுத்து நாங்கள் லயித்துப் போகும் இடங்கள் ஒவ்வொன்றும் அழகே. ஆனால் இந்த அழகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக தெரிவதுதான் இயற்கையின் விந்தை. குழந்தையின் புன் சிரிப்பு முதல் மரணித்தவனின் மரண படுக்கை வரை ஏதோ ஒரு அழகு இருக்கத்தான் செய்கின்றது.

கடவுள்.


எங்களை மிஞ்சிய ஒரு சக்தி. எனக்கு கடவுள் மேல் முழு நம்பிக்கை உண்டு. அப்பப்போ எனக்கும் அவருக்கும் சண்டை வரும். அப்புறம் எல்லாம் நன்மைக்கே என கடவுளையே மன்னித்து விடுவேன். ஒவ்வொருவருக்கும் தங்களை விட ஏதோ ஒன்று மேலே இருக்கின்றது என்னும் எண்ணம் எப்போது வருகின்றதோ அப்போதே கடவுள் நம்பிக்கை வந்து விடுகின்றது. என் மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் நான் எம் மதத்துக்கும் சம்மதம் சொல்லும் மனம் கொண்டவன். அதே நேரம் சில நல்ல மனித உள்ளங்களிலும் கடவுளைக் கண்டுள்ளேன்.

பணம்.


இந்த பிசாசுதான் இன்று இங்கே கொடுத்த நான்கு வகைகளுக்குள்ளும் முதன்மையாகி நிற்கிறது. காதலுக்கும் காசு வேணும், அழகாய் இருப்பதை விட காசை அடுக்கி வைப்பவனையே பலர் ஏற்கின்றனர். கடவுளை பார்க்கணும் என்றாலே காசு தான் தேவைப்படுகின்றது. ஒருமுறை நான் இந்தியா போனபோது சிதம்பரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எத்தனையோ மக்கள் சிதம்பரத்தானை தரிசிக்க முட்டி மோதிய வேளை சிதம்பர ரகசியத்தை பார்க்க பணம் வாங்கிவிட்டு ரகசியத்தை மாத்திரம் சொல்லா குறையாக எல்லாவற்றையும் சொன்ன அந்தணர்களை நினைக்கும் போது இன்றும் வேதனையாக இருக்கின்றது. இந்த சிறிய சம்பவமே பணம் எந்தளவிற்கு முக்கியம் என்பதை சொல்லிவிடும. அதேநேரம் முத்து திரைப்பட பாடல் போல கழுத்துக்கு கீழே பணம் இருக்கும் வரை தான் நீ எஜமான் இல்லை பணம் தான் உனக்கு எஜமான் என்பது வாழ்க்கையின் ஓட்டத்தில் புரியாதவர்கள் பலர் இன்னமும் இருக்கின்றார்கள்.

என் மனதை சொல்லி விட்டேன். இப்போ இன்னும் நான்கு பேர் மனதை திறக்கவேண்டுமல்லவா.

புல்லட்-எப்போது எடக்கு முடக்காக எழுதும் இவரை இப்படி எடக்கு முடக்கான விடயங்களில் இழுத்து சீரியஸாக எழுத வைக்கும் ஒரு முயற்சி. நடக்குமா புல்லட்.?

கடலேறி- நான் லோஷன் அண்ணாவிடம் கேள்வியைக்கேட்டுவிட்டு பதிவேற்றாமல் இருக்கும் போது வந்தி அண்ணரிடம் கேள்வியால் துளைத்து எனக்கு முதல் பதிவிட்ட குற்றத்துக்காக இந்த தண்டனை.

பிரபா-பிறந்தநாளுக்கு பிறகு மனிதர் சந்தோசமாக இருக்கின்றார். விடலாமா. இதோ அஞ்சல் கோலை கொடுத்துவிட்டேன். எப்புடி?


சிந்து-இலங்கையை சேர்ந்த இப்போது பங்களாதேஷில் இருந்து எழுதும் பதிவர். என்னை ஏற்கனவே வம்பில் மாட்டி விட்டதற்காக இந்த பழிவாங்கல்.

நண்பர்களை அழைத்தமைக்கு நான் கூறிய காரணங்கள் சும்மா ஒரு சுவாரஷ்யத்துக்காகவே உண்மையில் அத்தனைபேரும் நல்ல தரம் மிக்க படைப்பை தருபவர்கள். இந்த தொடரை தொடர்வார்கள் என நம்புகின்றேன்.

எல்லாம் சொன்னாச்சு காதல் என்னும் தலைப்பிட்டு விட்டு என் காதலியை பற்றி சொல்லாமல் விடலாமா? இதோ அவர் படத்தையே தருகின்றேன். எப்பிடி இருக்காங்க ஜோடி பொருத்தம் எப்புடி என சொல்லிட்டு போங்கோ.

=>



=>




=>





=>




=>




=>






=>




Share:

Tuesday, June 16, 2009

உங்கள் துணை எப்படிப்பட்டவர்?

காதல்! உலகத்தில் இருபது முதல் அறுபதுவரை அத்தனைபேரையும் கட்டிப்போடும் மந்திர சக்தி. காதலில் ஜெயிப்பது தோற்பதை விட அதை கடந்து வராதவர்கள் ஒருசிலர். அப்படி கடக்காதவர்கள் பிறவிப்பயன் அற்றவர்களே. ஒவ்வொருவருக்கும் காதல் வந்தபின் அவரவர் துணையை
பற்றி அறிய ஆவலாக இருக்கும். அவர் தன் மேல் அன்பு எவ்வளவு வைத்திருக்கின்றார், தனக்காக என்ன எல்லாம் செய்வார் இப்படி பல. அப்படியானவர்களுக்கு இந்த பதிவு.(திருமணமானவர்களும் தங்கள் துணை பற்றி அறியலாம்.)

இதை நானாக சொல்லவில்லை நான் இன்னொரு இடத்தில் படித்ததை உங்களிடம் பகிருகின்றேன். (யான் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறவேண்டும்.)

முதலில் உங்கள் பிறந்த ஆண்டு, மாதம், திகதி ஆகியவற்றை கூட்டி எடுங்கள். அதுதான் உங்கள் காதல் எண்.(இதேபோல உங்கள் துணையின் எண்ணையும் கூட்டி எடுங்கள்) உதாரணம்: பிறந்த திகதி 8 பிறந்த மாதம் 8 ஆண்டு 1988 என்றால் 8+8+1+9+8+8=42 பின் 4+2 அதையும் கூட்டுங்கள். 6 என்பது தான் காதல் எண்.

எண் ஒன்று.

ஆண்.

உங்கள் துணையிடம் விசுவாசமாகவும், பெருந்தன்மையோடும், நன்றிமிக்கவர்களாகவும் இருக்கும் நீங்கள் மனைவியின் செயலை குறை சொல்வதை தவிர்ப்பது நல்லது. அதன் பின் உங்கள் வாழ்க்கை சொர்க்கம்தான்.

பெண்.

வாழ்க்கையின் இறுதிவரை அனுபவித்து வாழும் நீங்கள் தன் துணை தன்னைவிட எல்லா விடய்த்திலும் உயர்ந்து நிர்க்கவேண்டும் என எதிர்பார்ப்பவர்.(சமையலிலுமா தெரியவில்லை.) அப்படிப் பட்டவர் கிடைத்து விட்டால் பாராட்டவும் தவறமாட்டார். லட்சியவாதி ஆனா நீங்கள் நகைச்சுவை உணர்வோடு புத்திசாலிகளாகவும் இருப்பீர்கள்.

எண் இரண்டு.

ஆண்.

காதல் மன்னன் பட்டம் உங்களுக்குத்தான். உங்கள் துணையை அனுசரித்து போவதில் நீங்கள் தான் கில்லாடிகள். அவரின் எத்தகைய பிரச்சனைகளையும் இலகுவாக அணுகி தீர்த்து வைப்பீர்கள்.

பெண்.
கணவர் எள் கொண்டு வா என்றால் என்னை கொடுப்பவர் நீங்கள். உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டால்சினுங்கிகளான நீங்கள், நீங்கள் செய்யும் எல்லா விடயங்களையும் உங்கள் அழகையும் உங்கள் துணை பாராட்ட வேண்டுமென எதிர்பார்ப்பவர். சுற்றி இருப்பவர்களை கலகலப்பாக வைத்திருப்பீர்கள்.

எண் மூன்று.

ஆண்.

இந்த காலத்து ராமனுங்க நீங்க. இன்னொருபுறம் வாரி வழங்கும் கர்ணன். எல்லா விடயங்களையும் விளையாட்டாக எடுக்கும் நீங்கள் சிறந்த பேச்சாளர். பொறாமை என்றால் அது என்ன விலை என கேட்பவர்கள்.

பெண்.

ஆண்மை நிறைந்த ஒருவரை எதிர்பார்க்கும் நீங்கள் அழகை பெரிதாக பார்க்கமாட்டீர்கள். நாகரிகம் பிடிக்காது. எல்லா கருமமும் உங்களுக்கு தூசு. எதற்கும் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள்.

எண் நான்கு.

ஆண்.

உங்கள் துணையை அதிகமாக நேசிப்பீர்கள். தூர சிந்தனையோடு பெருந்தன்மையான நீங்கள் உங்களவருகாக உயிரைக்கூட கொடுப்பீர்கள். பூரண சுதந்திரம் கொடுக்கும் நீங்கள் தான் கணவராக வரவேண்டுமென எல்லோரும் எதிர்பார்ப்பர்.

பெண்.

உங்களை யார் நேசித்தாலும் அவரிடம் விசுவாசமாக இருப்பீர்கள். உங்களை நேசிப்பவர் சந்தோசமாக இருக்க நீங்கள் தான் காரணமாக இருப்பீர்கள்.

எண் ஐந்து.

ஆண்.

பெண்களிடையே உங்களுக்கு மவுசு அதிகம். உங்கள் கடைக்கண் பார்வைக்கு பலர் ஏங்குவர். ஆனால் உங்கள் போக்கு அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் அதேசமயம் சந்தோசத்தையும் கொடுக்கும். புரியாத புதிரான நீங்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்வீர்கள்.

பெண்.

இவள் தான் பெண் என சொல்லவைக்கும் நீங்கள் பேராசையும் கொண்டவர்கள். ஆனால் உங்களை மனைவியாக அடைந்தவர்களுக்கு வாழ்க்கை சொர்க்கம்தான்.

எண் ஆறு.

ஆண்.

கடவுளும் காதலும் வேறு இல்லை என வாழ்பவர். பெண்களை மதிக்க தெரிந்தவர்கள். அழகாய் போற்றும் நீங்கள் கவிதைகள் எழுதுவதில் கில்லாடிகள்.

பெண்.

குப்பைமேட்டை கூட கோவிலாக்கும் நீங்கள் உங்கள் துணைதான் உலகம் என வாழ்வீர்கள். தாய்மை உணர்வு மிக்க நீங்கள் அது எல்லோரிடமும் இருக்கவேண்டும் என எதிர்பார்பதோடு நல்ல வாழ்க்கை வாழ்வீர்கள்.

எண் ஏழு.

ஆண்.

கற்பனையிலேயே காலத்தை கடத்தும் நீங்கள் காரியத்தில் கண்ணானவர்கள். உங்கள் துணை உங்களை காதலிக்கும் போதே அவள் ஏன் என்னை காதலித்தாள், என்னிடம் எதை எதிர்பார்க்கின்றாள் என தேவை அற்றவர்ரை யோசித்தே உங்கள் வாழ்க்கையை நாசமாக்கி விடுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கை வெற்றி உங்கள் கையிலேயே.

பெண்.

உங்களுக்கு சாப்பிடுவது, உடை அணிவது ஏன் தூங்குவது கூட ஏனோ தானோ தான். பணம், உதவி எல்லாமே உங்களுக்கு அனாவசியம். அபூர்வப்பிரவிகளான நீங்கள் யாருக்கும் அடங்கா தனிக்காட்டு ராணிகள். ஆனால் வெளிவேசம் போடத்தெரியாதவர்கள்.

எண் எட்டு.

ஆண்.

பொறாமையாலே அழியும் நீங்கள் சமூக அந்தஸ்திலும், பொருளாதார ரீதியாகவும் பெரியவர்கள். சொர்க்கமான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் ஆனால் மனம் தளர மாட்டீர்கள். வெற்றியின் சிகரம் உங்களுக்காக காத்திருக்கும். பிறக்கும்போதே சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் உங்களுடன் வந்துவிடும்.

பெண்.

கலை, கவர்ச்சி நிறைந்த நீங்கள். முதலில் அகம்பாவம் பிடித்தவர் போல இருப்பீர்கள். ஆனால் பழகிப்பார்த்தால் நீங்கள் தான் தேன். நினைத்ததை அடைய தவறமாட்டீர்கள். அதிகாரமும், பணமும் கொண்ட ஒருவர்தான் உங்கள் துணையாக வருவார். அதை எதிர்பார்ப்பவர் நீங்கள்தான். உங்களுக்கு உணர்ச்சி கூடினால் ஒருவரை உச்சத்திலும் ஏற்றுவீர்கள் அங்கிருந்து தள்ளியும் விடுவீர்கள்.

எண் ஒன்பது.

ஆண்.

சுறுசுறுப்போடு, உறுதியோடு செயற்பட்டு எல்லாவற்றையும் அடைவீர்கள். எதை கொடுத்தாலும் சிறப்பாக செய்யும் நீங்கள் அரசியலில் நுழைந்தால் அதிரடிதான்.

பெண்.

உங்களோடு வாழ்வது தான் வாழ்க்கை என துணையை ஏங்கவைக்கும் சாமர்த்திய சாலிகள்.

இப்போ, உங்கள் துணையையும் உங்களையும் ஒப்பிட்டு இருப்பீர்கள். இது உங்களுக்கும் பொருந்துகிறதா என சோதித்து விட்டு உங்கள் வாழ்க்கையை சந்தோசமாக வாழுங்கள். நம்பவேண்டியத்தை நம்புங்கள் தேவை அற்றத்தை நம்பாதீர்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.
Share:

Thursday, May 14, 2009

கத்தால கண்ணழகிக்கு அது பிடிக்காதாம்! கேளுங்க! கேளுங்க! கேளுங்க!

"நல்ல அழகாகத்தான் இருக்கிறார், நடனத்திலும் சளைக்காதவர் தமிழ் சினிமாவை கலக்குவார்" இது தமிழ் சினிமாவின் ஆர்வலர்கள் ஸ்னிக்தா "கத்தால கண்ணால குத்தாத" என பாடிக்கொண்டு அறிமுகமானபோது சொன்ன வசனம். மராத்தி, ஹிந்தி மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக்கொண்டிருந்தவர் இல்லாத இடுப்பாலே என தன இடுப்பை ஆட்டி ஆட்டி ஆட்டம் போட்டே பிரபலமாகிவிட்டார். என்ன செய்ய பல இளைஞர்களின் தூக்கமும் கொஞ்சம் கெட்டுத்தான் போச்சு.

ஆனாலும் இப்போ அவர் தன் செவ்விதழ் திறந்து சொன்ன வார்த்தைகள் தான் காதல் கோட்டை கட்டிய எத்தனையோ பெயரை முகவரி இல்லாமல் செய்யப்போகின்றது. அவர் அழகை பார்த்து ஆண்கள் பயப்பட்டுக்கொண்டிருக்கும்போது(வேறொன்றுமில்லை காதலில்தான்.) ஸ்னிக்தாவோ தனது பயப்பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் பயப்படுத்தி விட்டார். பத்திரிகையாளர்களைக் கண்டால் பயமாம்(கேட்கக்கூடாத கேள்வியை கேட்காதிங்கப்பா செல்லம் பயப்படுகிதெல்லா)

அடுத்ததா சிக்கியது இவங்க என்ன சொல்றாங்கன்னே என தெரியமுடியாத பல்லிகள்.(எல்லா நடிகைகளும் பல்லி கரப்பான் பூச்சி என ஒரு லிஸ்ட் வைத்திருப்பார்கள்.) தனிமையில் பிடிச்சது பொம்மைகளாம்(அதைத்தான் கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பாரா? நானும் பொம்மைமாதிரி இருப்பேனே.) பருப்புசாதம் என்றா உயிரையே விடும் ஸ்னிக்தா உயிரினும் மேலான காதலை ஒரு நோயென சொல்லிவிட்டு காதலே தனக்கு பிடிக்காதாம். அதைவிட கொடுமை ஆண்கலென்றாலே பிடிக்காதாம்.(எப்பிடிதாயே நடிப்புலகத்துக்கு வந்திங்க.)

ஆண்களை பிடிக்காத அம்மணி எப்படித்தான் ஆண்களுடன் சேர்ந்து கட்டிப்பிடித்து காதல் காட்சிகளில் எல்லாம் நடிக்கின்றாரோ தெரியவில்லை. நண்பர்களே! இனிமேல் ஸ்னிக்தா பின்னால் அலையாதிங்க ஏனென்றால் அவங்களுக்கு தான் அது(காதல்+ஆண்களை) பிடிக்காதாமே.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox