உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts

Thursday, September 17, 2009

காதல்,அழகு,கடவுள்,பணம்-என் பார்வையில்.

இது தொடர் பதிவுகளின் காலம். நான் எழுத நினைக்கும் பதிவுகளை கூட எழுதமுடியாமல் இப்படி தொடர்பதிவு எழுத வேண்டுமே என்னும் ஆதங்கமும் உண்டு. என்ன செய்வது நண்பர்கள் அழைக்கும் போது அவர்கள் அன்புக்கு கட்டுப்பட்டு தானே நடக்கவேண்டும்.

அண்மையில் நண்பர் யோ வாயிஸ் தன் சார்பாக பள்ளிபயின்றதொரு காலம் என்னும் தலைப்பில் என்னை விளையாட கூப்பிட்டார். தப்பித்து விட்டேன். காரணாம் ஏற்கனவே அதே விடயத்தை நான் என் பள்ளிக்காலம் என்னும் தலைப்பில் எழுதிவிட்டேன். எனவே அந்த பதிவிற்கான இணைப்பை இங்கே கொடுக்கின்றேன். என்னை மன்னித்துவிட்டு அதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

அதை தொடர்ந்து அடுத்த அழைப்பு. இந்த முறை புதிய நண்பர் ஒருவர். காதல்,அழகு,கடவுள்,பணம் என மருதமூரான் அழைக்க இன்று இந்த பதிவு. இந்த பதிவை தொடங்க முன் இன்னொரு வேதனையான விடயம் அண்மைய என் பதிவுகள் எதுவும் தமிழிச் தளத்தில் ஹிட் அடிக்கவில்லை. என் புலம்பலை விட்டு விட்டு விடயத்துக்கு போகலாமா?

காதல்.


சொல்லும் போதே இனிக்கும் மந்திர சொல். மாயாஜால வாழ்க்கை. சிலருக்கு இது வாழ்க்கை சிலருக்கு இது பொழுதுபோக்கு. தாய் பிள்ளை மேல் கணவன்-மனைவி ஒருவருக்கிடையில், பிள்ளை தாய் மேல், ஒரு உயிர் இன்னொரு உயிரிடத்தில் என்று எல்லோரும் காதலின்றி வாழமுடியாது. காதலன் காதலி தங்களுக்கிடையில் வைக்கும் காதல் தான் இன்று காதல் என்றவுடன் பலருக்கு நினைவு வருகின்றது. அந்த பக்கத்தில் பார்த்தால் நானும் எத்தனையோ நல்ல காதல்களையும் காமக்காதல்களையும் பார்த்திருக்கின்றேன். பார்த்துக்கொண்டிருக்கின்றேன். காதல் என்னும் அற்புதம் காதலர்களுக்கிடையில் சிக்கி சின்னாபின்னமாகி அதன் புனித்ததை இழந்து கொண்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையே.

அழகு.


எம் மனதை பறிகொடுத்து நாங்கள் லயித்துப் போகும் இடங்கள் ஒவ்வொன்றும் அழகே. ஆனால் இந்த அழகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக தெரிவதுதான் இயற்கையின் விந்தை. குழந்தையின் புன் சிரிப்பு முதல் மரணித்தவனின் மரண படுக்கை வரை ஏதோ ஒரு அழகு இருக்கத்தான் செய்கின்றது.

கடவுள்.


எங்களை மிஞ்சிய ஒரு சக்தி. எனக்கு கடவுள் மேல் முழு நம்பிக்கை உண்டு. அப்பப்போ எனக்கும் அவருக்கும் சண்டை வரும். அப்புறம் எல்லாம் நன்மைக்கே என கடவுளையே மன்னித்து விடுவேன். ஒவ்வொருவருக்கும் தங்களை விட ஏதோ ஒன்று மேலே இருக்கின்றது என்னும் எண்ணம் எப்போது வருகின்றதோ அப்போதே கடவுள் நம்பிக்கை வந்து விடுகின்றது. என் மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் நான் எம் மதத்துக்கும் சம்மதம் சொல்லும் மனம் கொண்டவன். அதே நேரம் சில நல்ல மனித உள்ளங்களிலும் கடவுளைக் கண்டுள்ளேன்.

பணம்.


இந்த பிசாசுதான் இன்று இங்கே கொடுத்த நான்கு வகைகளுக்குள்ளும் முதன்மையாகி நிற்கிறது. காதலுக்கும் காசு வேணும், அழகாய் இருப்பதை விட காசை அடுக்கி வைப்பவனையே பலர் ஏற்கின்றனர். கடவுளை பார்க்கணும் என்றாலே காசு தான் தேவைப்படுகின்றது. ஒருமுறை நான் இந்தியா போனபோது சிதம்பரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எத்தனையோ மக்கள் சிதம்பரத்தானை தரிசிக்க முட்டி மோதிய வேளை சிதம்பர ரகசியத்தை பார்க்க பணம் வாங்கிவிட்டு ரகசியத்தை மாத்திரம் சொல்லா குறையாக எல்லாவற்றையும் சொன்ன அந்தணர்களை நினைக்கும் போது இன்றும் வேதனையாக இருக்கின்றது. இந்த சிறிய சம்பவமே பணம் எந்தளவிற்கு முக்கியம் என்பதை சொல்லிவிடும. அதேநேரம் முத்து திரைப்பட பாடல் போல கழுத்துக்கு கீழே பணம் இருக்கும் வரை தான் நீ எஜமான் இல்லை பணம் தான் உனக்கு எஜமான் என்பது வாழ்க்கையின் ஓட்டத்தில் புரியாதவர்கள் பலர் இன்னமும் இருக்கின்றார்கள்.

என் மனதை சொல்லி விட்டேன். இப்போ இன்னும் நான்கு பேர் மனதை திறக்கவேண்டுமல்லவா.

புல்லட்-எப்போது எடக்கு முடக்காக எழுதும் இவரை இப்படி எடக்கு முடக்கான விடயங்களில் இழுத்து சீரியஸாக எழுத வைக்கும் ஒரு முயற்சி. நடக்குமா புல்லட்.?

கடலேறி- நான் லோஷன் அண்ணாவிடம் கேள்வியைக்கேட்டுவிட்டு பதிவேற்றாமல் இருக்கும் போது வந்தி அண்ணரிடம் கேள்வியால் துளைத்து எனக்கு முதல் பதிவிட்ட குற்றத்துக்காக இந்த தண்டனை.

பிரபா-பிறந்தநாளுக்கு பிறகு மனிதர் சந்தோசமாக இருக்கின்றார். விடலாமா. இதோ அஞ்சல் கோலை கொடுத்துவிட்டேன். எப்புடி?


சிந்து-இலங்கையை சேர்ந்த இப்போது பங்களாதேஷில் இருந்து எழுதும் பதிவர். என்னை ஏற்கனவே வம்பில் மாட்டி விட்டதற்காக இந்த பழிவாங்கல்.

நண்பர்களை அழைத்தமைக்கு நான் கூறிய காரணங்கள் சும்மா ஒரு சுவாரஷ்யத்துக்காகவே உண்மையில் அத்தனைபேரும் நல்ல தரம் மிக்க படைப்பை தருபவர்கள். இந்த தொடரை தொடர்வார்கள் என நம்புகின்றேன்.

எல்லாம் சொன்னாச்சு காதல் என்னும் தலைப்பிட்டு விட்டு என் காதலியை பற்றி சொல்லாமல் விடலாமா? இதோ அவர் படத்தையே தருகின்றேன். எப்பிடி இருக்காங்க ஜோடி பொருத்தம் எப்புடி என சொல்லிட்டு போங்கோ.

=>



=>




=>





=>




=>




=>






=>




Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox