இன்றைய தினம் இடக்கை பழக்கம் கொண்டவர்களுக்கான நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இடக்கைப் பழக்கம் கொண்டவன் என்ற ரீதியில் எனக்கும் சந்தோசமே. இந்த உலகத்தில் எத்தனையோ விடயங்களுக்காக நாட்கள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இடது கை பழக்கம் உள்ளவர்களுக்காகவும் ஒரு நாள். எழுவது(இரண்டு கையாளும் ஓரளவிற்கு முடியும்) சாப்பிடுவதை தவிர என் பழக்கம் இடக்கையே. என்ன காரணமோ தெரியாது, இடதுகையை பயன்படுத்துவதில் எனக்கு ஏதோ ஒரு பெருமை. ஆனால் சிலர் இந்த இடதுகைப் பழக்கத்தை விரும்புவதில்லை. உலகிலே ஆண்டவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையையும் சில முடியாத விடயங்களையும் கொடுக்கின்றான். அந்த வகையில் நாம் இடக்கையை ஒரு நல்ல கொடையாக எடுத்துக்கொண்டால் எங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
இடதுகைப் பழக்கவழக்கம் உள்ளவர்கள் பற்றிய சில விடயங்களை நண்பர் பிரபா தன் தளத்தில் http://prapaactions.blogspot.com/2009/08/blog-post_12.htmlஎழுதியுள்ளார். அதனையும் படித்துப்பாருங்கள். இடதுகைப் பழக்கம் உள்ள நண்பர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.














