
தல அஜித்தான் இப்போ எல்லா இடமும் டாபிக். நம்ம பதிவுகளில் மட்டும் விட்டிடலாமா. ஏதோ தொடர்ந்து நம் பதிவுகளும் தலைய பற்றியே வருகின்றன. இப்படியே போனால் நானும் தல ரசிகர் ஆகிடுவன் போல.(தளபதி கவலைப்படாதிங்க உங்களை விட்டிட்டு போக மாட்டம் சும்மா இப்படி சொல்வோம்.) சரி அத விடுவோம் தல ஏன் விழாக்களில் தல காடுவதில்லை? இன்று நான் இன்னொருவரின் பதிவில் இதை படித்தேன்.

சரி அவர் சொன்ன காரணம் 1995ஆம் ஆண்டு ஒரு மேடை நிகழ்ச்சியில்
மீனாவுடன் அஜித் நடனமாடிக்கொண்டிருக்கும் போது அங்கே வந்த மீனாவின் அம்மா ஆத்திரபட்டு அஜித்தை அவமானப்படுத்தி மேடையை விட்டு இறக்கியதாகவும் அந்த அவமானம் தாங்காமல் தான் இன்றுவரை அஜித் மேடை நிகழ்ச்சிகளை தவிர்த்து வருவதாகவும் சொல்லி இருந்தார். இதில் எந்தளவு உண்மை என தெரியவில்லை. சிலவேளை அவர் சொல்வதும் உண்மையாக இருக்கலாம் காரணம் ஆசை என்ற ஒரு படம் மட்டுமே அஜித்துக்கு ஓரளவு பெயர் சொல்லும் படியான படமாக இருந்தது அதுவரை.
இப்படி நடந்ததென வைத்துக்கொண்டால் அதன் பின்னர் ஆனந்த பூங்காற்றே படத்தில் இருவரும் ஜோடி போட்டனரே எப்படி.வாலி வந்து வசூல் மழைபொழிந்ததனால் மீனா வேண்டுமென்றால் அஜித்துடன் நடிக்க ஒத்துக்கொண்டிருக்கலாம் ஏன் மீனாவின் அம்மாவே அந்த வாய்ப்பை வாங்கிக்கொடுத்திருக்கலாம். ஆனால் தன் ஆரம்ப படத்திலேயே இயக்குனருடன் நியாயத்துக்காக வாதிட்ட அஜித் நிச்சயமாக சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. இது எப்படி சாத்திய மாயிற்று.

அதை தான் விடுவோம் அதன் பின் சிட்டிசன்,வில்லன் என அஜித் அடுத்த தலைமுறையின் முன்னணி நாயகன் ஆனா பிறகும் இவர்கள் ஜோடி கலக்கி இருக்கின்றதே. இதை எப்படி எடுத்துக்கொள்வது. எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. இது இப்படித்தான் என சரியாக சொல்ல எனக்கு இந்த விடயம் பற்றி எதுவும் தெரியாது. எனவே நேற்று அலுவலகம் சென்றவுடன் விமல் அண்ணா கண்ணில் பட்டார் அவருக்கும் எனக்கும் மூஞ்சிப்புத்தகத்தில் இப்போது அஜித் பற்றிய ஒரு சண்டை போகிறது. உடனே அவரிடமே இதை பற்றி கேட்டேன்.













