
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தை பகுதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.தேங்காய் காலமானார். அன்னார் தென்னம் பிள்ளையின் அன்பு மகளும், தென்னம் கொப்பராவின் பாசமிகு மனைவியும் தென்னம் குரும்பை, இளநீர் ஆகியோரின் தாயாரும், தென்னம் மட்டை,பொச்சு,தென்னோலை ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வெள்ளவத்தையில் உள்ள அவரின் வீட்டு உரிமையாளரின் வயிற்றினுள் நடைபெற்று மறுநாள் காலை மலசலகூடத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள், பதிவுலக பெருமக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்,
கணவன்,பிள்ளைகள்.