Saturday, November 21, 2009

நீ ஹலோ சொல்லவில்லை என்றால்.... இன்று உலக ஹலோ தினம்.


தினம் தினம் ஒரு தினம். அதை அனுதினம் கொண்டாடுவதில் ஒரு சுகம். அந்த வகையில் இன்று ஹலோ தினம். அட எவ்வளவோ தினம் கொண்டாடிட்டோம் இதையும் கொண்டாடிலாம் என கொண்டாட இருப்பவர்களுக்கு இத்தினம் பற்றிய சுவாரஸ்யமும் தெரியட்டுமே. இந்த தினத்தின் பிறப்பு இறப்புகளின் இறுதியில் இருந்து ஆரம்பமாகி இருப்பது இன்னொரு சுவாரஷ்யம்.

எகிப்து-இஸ்ரேல் நாடுகளுக்கிரையில் இடம்பெற்ற போர் நிறைவுக்கு வரும் நேரம் (1973.11.21) இரு நாட்டு தலைவர்களும், அப்படைவீரர்களும், மக்களும் மட்டும் ஹலோ சொல்லி சமாதானம் ஆனால் போதாது உலகமே ஹலோ சொல்லி அமைதியாக இருக்கட்டுமென நினைத்தார்களோ என்னவோ அன்றுமுதல் ஹலோ தினம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதுமுள்ள நாடுகளில் கொண்டாடப்பட்டு வரும் ஹலோ தினத்தின் வயது 37. நிற்க நடக்க ஓட என மலிந்து போய் இருக்கும் தினக் கொண்டாட்டங்களுக்கு நடுவில் ஹலோ தினத்தின் சாரம் பாராட்டப்படக்கூடியதே. உலகமெங்கும் அமைதி நிலவ பாடுபடுவோம் என்னும் கருப்பொருளுக்கே வைக்கலாம் ஒரு சல்யூட்.

எல்லாம் சரி நாம கொண்டாடவேன்டாமா ? நான் ரெடி.....

ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ

என்ன பார்க்கிறிங்க பத்து தரம் சொல்லி நான் ஆரம்பித்து விட்டேன் கொண்டாட்டத்தை நீங்களும் கொண்டாடுங்கள். செலவில்லாமல் ஒரு அமைதிக்கான கொண்டாட்டம். பத்துப் பேருக்காவது ஹலோ சொல்லுங்கள்......

ஹலோ தினம் என்றவுடன் நினைவு வந்த பாடல்
நீ ஹலோ சொல்லவில்லை என்றால் ஒரு கிலோ எடை குறைவேன்........
பார்த்து சொல்லிடுங்க இல்லாட்டில் எடை குறைந்து குறைந்து ஒல்லிப்பிச்சான் ஆகமுதல்.......

ரொம்பநாளாக பதிவிடவில்லை. காரணம் என் பெரியப்பாவின் இழப்பு. இப்போது மீண்டும் வந்துவிட்டேன் இனி கலக்கல் தான். இந்த நேரத்தில் இறந்த செய்தி கேட்டு தொலைபேசி வாயிலாகவும் மூஞ்சிப் புத்தகம் வாயிலாகவும் இதர வழிகளிலும் ஆறுதல் கூறிய நண்பர்கள் நல்லுள்ளங்களுக்கும் என் திடீர் யாழ்ப்பான பயணம் செய்ய வியாபரங்களை தந்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இழப்புகள் இடிந்து போகவல்ல இதயத்திற்கு வாழ்க்கை பாடத்தை படிப்பிக்கவே.
Share:

5 கருத்துரைகள்:

தேவன் மாயம் said...

இழப்புகள் இடிந்து போகவல்ல இதயத்திற்கு வாழ்க்கை பாடத்தை படிப்பிக்கவே.
//

உன்மை நண்பரே!!!ரெடி ஸ்டார்ட்>>>>>>>>...ஹலோ!!!

என்ன கொடும சார் said...

ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ

சுபானு said...

நானும் ரெடி.. ஹலோ ஹலோ ஹலோ
ஹலோ ஹலோ ஹலோ ... எங்க பதிலைக்காணம்..

Unknown said...

பெரியப்பாவின் இழப்புக்கு ஆறுதல் கூறும் அதேவேளை எல்லாமே நம்மை பண்படுத்தத் தான்...

//இழப்புகள் இடிந்து போகவல்ல இதயத்திற்கு வாழ்க்கை பாடத்தை படிப்பிக்கவே.//

உங்கள் மனவுறுதிக்கு வாழ்த்துக்கள் அண்ணா...

தொடர்ந்து உங்கள் பதிவுகள் வரட்டும்....

ஹலோ தினத்தில் உங்களுக்கு ஒரு 'ஹலோ...'

ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ

Atchuthan Srirangan said...

ஹலோ

ஹலோ

ஹலோ

ஹலோ

ஹலோ

ஹலோ

ஹலோ

ஹலோ

ஹலோ

ஹலோ

இப்ப சரியா????

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox