நம்மில் பலர் பயன்படுத்தும் நண்பர்களை இணைக்கும் Facebook தளத்தினால் முன் பின் அறியாதவர்களோடு கூட ஏற்படும் தொடர்பால் செக்ஸ் தொடர்புகள் ஏற்படுவதால் பாலியல் நோய்கள் அதிகரிப்பதாக இங்கிலாந்தின் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உங்கள்
சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்
உங்கள்
சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
எம்
சமூக கருத்துக்கள்
சதீஷ் தொகுத்த
பொது நிகழ்வுகள்
ஒரே தளத்தில்
இன்னும் பல
Wednesday, March 31, 2010
செக்ஸ்க்கு துணைபோகும் Facebook.
நம்மில் பலர் பயன்படுத்தும் நண்பர்களை இணைக்கும் Facebook தளத்தினால் முன் பின் அறியாதவர்களோடு கூட ஏற்படும் தொடர்பால் செக்ஸ் தொடர்புகள் ஏற்படுவதால் பாலியல் நோய்கள் அதிகரிப்பதாக இங்கிலாந்தின் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Wednesday, March 24, 2010
பஞ்சாமிர்தம்= SO+சந்தோசமாக+மழை+கடிதம்+கோபம்.
நானும் ஒரு வானொலி அறிவிப்பாளராக இருந்த காரணத்தால் இதை பற்றி பேச ஓரளவு தகுதி இருக்கும் என நினைக்கின்றேன். இன்று காலை ஒரு தொலைக்காட்சியில் தொலைபேசி வாயிலாக நேயர்களை கலாய்க்கும் நிகழ்ச்சி ஒலி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. பொழுது போகணுமே என்பதற்காக அப்படியே இருந்தேன். அந்த நிகழ்ச்சியின் கடைசி பகுதி தான் அது. அந்தப்பகுதியில் நேயருடன் தொகுப்பாளர் பேசிறார் பேசிறார் பேசிறார் அவர் பேச்சில் so என்ற ஆங்கில வார்த்தை கிட்டத்தட்ட ஐம்பது தடவை வந்து தாண்டவமாடி இருக்கும். அது அவருக்கே கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஒரு வசனம் முடிந்து அடுத்த வசனத்துக்கு இடையில் வந்துவிடும். அந்த சொல்லின் அர்த்தம் வரக்கூடாத இடத்திலும் பேசினாரா என்பது அவருக்கு தான் வெளிச்சம்.(நான் அவர் பேசியதை கவனிக்கவில்லை. soவைத்தான் கவனித்தேன்.)
உலககிண்ணப் போட்டிகளில் ஆடமாடேன்- சச்சின்.
மிருகங்கள் மனிதனானால்-ஒரு உண்மை பதிவு.
Tuesday, March 23, 2010
கூகிளுடன் மோதும் சீனா.
கூகுள் தேடுதள சேவையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுளை நீக்கியதன் மூலம் வாக்குறுதியை மீறிவிட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. கூகுள் மூலம், சீனாவில் உள்ளவர்கள் சீன அரசுக்கு சிக்கலை உண்டாக்கும் திபெத், தியான்மர் சதுக்க படுகொலைகள் மற்றும் மனித உரிமைகள் குழு போன்ற செய்திகள் மற்றும் தகவல்களை பெற முடியாதவாறு தடைவிதிக்கப்படிருந்தது. சீன அரசின் நிர்ப்பந்தம் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கூகுள், மேற்கூறிய சேவைகளை சீனாவில் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ப்ளீஸ்....பதிவர் சந்திப்பில் வெளிவந்த உண்மைகள்.
இப்படியே உரையாடல் முடிந்த பின். மறுநாள் ஆதிரை அண்ணருடன் பேசி மாலை நான்கு முப்பதுக்கு வெள்ளவத்தை ஆர்பிக்கோவிற்கு முன்னால் வரவும் என்றும் தனக்கு அங்கெ இன்னொரு சைடு பிசினஸ் இருப்பதாகவும் சொன்னார். மதியம் நம்ம குட்டி வந்தியத்தேவன்(லோஷன் அண்ணாதான் இந்த அறிவிப்பை விடுத்தவர்.) கான்கொன் கோல் பண்ணினான். என்ன வார ஐடியா இருக்கா என்று கேட்க. தன்னிடம் ஆதிரை அண்ணாவின் நம்பர் இல்லையாம் நீங்கள் எப்படி போகின்றீர்கள் நானும் வருகின்றேன் என்றான். சரி என எங்கள் ராணுவ ரகசியங்களை சொல்லி விட்டு நகரவில்லை ஆதிரை அன்னார் அலைப்பெடுத்தார். சரியாக நான்கரைக்கு வந்துவிடுவீர்களா என கேட்டார். ஏனண்ண என கேட்டன். இல்லை புல்லட் இப்போதான் திருப்பள்ளி எழுச்சி பாடுகின்றாராம் அதுதான் தனிய வந்து நிக்கனுமே என கவலைப் பட்டார்.(கவனிக்கவேண்டிய விடயம் இப்போதெல்லாம் மனிதர் தனிய தனிய என அடிக்கடி சொல்கின்றார் எதுக்கும் வீட்டில சொல்லுறது நல்லம் வேற என்னது இவருக்கும் ஒரு மலேசியா சிங்கப்பூர் இல்லாவிடாலும் இன்னொரு நாட்டிலாவது சிக்காமலா போய்விடும்.)
Monday, March 22, 2010
மு.க. அழகிரி நடிக்கும் தூங்கா நகரம்.
வெற்றி வானலையில் விடை பெறல்.
இன்று நாளை என இழுத்தடித்துக்கொண்டு வந்த என் வானொலி நிறைவுப் பகுதியின் நிறைவுப்பதிவிற்கு ஒரு முடிவு கட்டலாம் என்ற நினைப்பில் இப்போது இந்தப் பதிவு. இது இழுபடக் காரணம் பல. ஒன்று என்னால் இன்னும் முழுமையாக வானொலியில் இருந்து விடை பெற்ற அந்த சோக தருணத்தில் இருந்து மீளமுடியவில்லை. அதேநேரம் இந்தப் பதிவை எழுதலாம் என்றால் மனம் வரவே இல்லை. இதோ இப்போது பணக்காரன் படத்தை பார்த்துக் கொண்டே எழுதுகின்றேன். இதில் என்ன கொடுமை என்றால் நான் விடை பெற்ற நாளுக்கு முதல் நாளில் என் இறுதிப் பாடலாக ஒலித்த மரத்தை வச்சவன் பாடல் என்னை மீண்டும் எங்கோ இழுத்துப்போகின்றது. காத்திருப்பவர் எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு உண்மையில் ஒரு வெறியை தரும் வரி இது.
கலைஞருக்கு எதிராக விஜய்?- சண் டி.வி ஆதரவு.
Saturday, March 20, 2010
சென்னை சூப்பர் கிங்ஸ்- சாப்பாட்டு ராமர்களாக.
சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்காக வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் உள்ள கப்புசினோ காஃபி ஷாப்பில் தான் உணவு தயார் செய்யப்பட உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சர்வதேச வீரர்கள் ஒவ்வொரும் தங்கள் விரும்பமான உணவுகளை தெரிவித்திருப்பதால், கிளப் சாண்ட்விச் முதல் வீச்சு புரோட்டா வரை உலகளாவிய உணவு வகைகள் தயாரிக்கப்பட உள்ளன.சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்களின் பிடித்தமான ஐட்டங்கள் குறித்து 'செப்' பர்வீன் ஆனந்திடம் கூறியுள்ளனர்.
தோனிக்கு பட்டர் சற்று தூக்கலாக பட்டர் சிக்கன், மாத்யூ ஹெய்டனுக்கு கல் தோசையுடன் பிரான் கறி விருப்பமாம்.முரளிதரனுக்கு சாபா புலுசு எனப்படும் மீன் உணவு, சுரேஷ் ரெய்னாவுக்கு சிக்கன் சாண்ட்விச்சும் தேவையாம்.அல்பி மார்க்கெல்லுக்கு கிளம் சாண்ட்விச் மற்றும் பனானா மில்க்ஷேக், பாலாஜிக்கு பெப்பர் சிக்கன் கிரேவியுடன் வீச்சு புரோட்டா சாப்பிட ஆசை.
ஆனால் பார்திவ் பட்டேலுக்கு வேக வைத்த சாதத்துடன் பருப்பு மற்றும் ஜீரா ஆலு என்ற சைவ உணவு தான் விருப்பம் என தெரிவித்துள்ளார்.மேலும் ஜொகிந்தர் ஷர்மாவுக்கு கொண்டை கடலையுடன் பாதுராவும், சுப்ரமணியம் பத்ரிநாத்துக்கு மட்டன் பிரியாணியும் தயாரித்து தர பார்க் ஷெரட்டன் தயாராகி வருகிறது.
நன்றி தட்ஸ்தமிழ்.
Tuesday, March 16, 2010
தேர்தல் களத்தில் குதிக்கின்றார் கான்கொன்.
பல விடயங்களை அலசி ஆராய்ந்த எங்கள் பொதுக்குழு(எல்லாம் பில்ட் அப்தான். ) பல விசயங்களை பேசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி அந்த வழியால் சென்ற புகையிரதம் எண்களை குழப்பியது. கொதித்தெழுந்த எங்கள் தன்மான சிங்கம். தான் அரசியலில் நுழைந்து முதல் வேலையாக இந்த தண்டவாளங்களை இந்த பீச்சில் இருந்து தள்ளி வைக்கவேண்டும் என்ற தன் முக்கியமான பிரதான கோட்பாட்டை முன்வைத்தார். பாவம் வழக்கமா வருபவருடன் வரும் போது கஷ்டப்பட்டிருப்பார் போல. விடுங்கப்பா அவர் கஷ்டம் அவருக்கு தானே தெரியும்,
அதை விட இன்னொரு கருத்து பாருங்க இப்படிப்பட்ட அரசியல் வாதி கண்டிப்பா எந்த நாட்டில் இருக்க வேண்டும் என நீங்களே முடிவு செய்யுங்க இந்தியாவின் லாலு பிரசாத் யாதவ்வை அழைத்து வந்துதான் இதை செய்யணும் என்ற கதை வேறு. (இப்போ சொல்லுங்க இவர் எந்த நாட்டு அரசியல் வாதி என நான் சந்தேகப்பட்டது சரிதானே.) என்ன செய்றது எத்தனையோ பேர் அரசியலுக்கு வரும் போது இப்படிப்பாட அறிவாளி நல எண்ணம் படைத்த எங்கள் அன்புத் தளபதி, நமீதாவின் கொள்கை பரப்புச் செயலாளர் கான்கொன் வருவதில் என்ன தப்பு. ஒருவாறு மழைக்குள் நனைந்தபடி வீடு வந்து சேர்ந்தோம்.(நிறைய நாட்களின் பின் தான் குளிக்கின்றேன் என்ற உண்மையை சொன்னார். நீர்வள போக்குவரத்து அமைச்சராக இருக்க தகுதியான்a எங்கள் தலைவரின் பேட்டி இதோ.
Saturday, March 13, 2010
கில்லியை தொடரும் கிரிக்கெட்.
கிரிக்கெட், விளையாட்டுகளில் எனக்கு ஓரளவு தெரிந்த விளையாட்டு எனக்கு பெரிதாக விளையாட தெரியாவிட்டாலும் அதை பற்றிய ஓரளவு அறிவை வளர்த்து வைத்துள்ளேன். 1999 பிற்பட்ட காலப்பகுதியில் இருந்து தான் கிரிக்கெட் பற்றி நான் அறிந்து கொண்டேன். எனவே என்னை கவர்ந்த வீரர்கள் அதன் பின் வந்த வீரர்களாக தான் இருக்கும். பெரியவர்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
என்ன ஒரு சகல துறை வீரர் பாருங்க.