ஈகோ இல்லாமல் பெண்களை சரிசமமாக பார்க்க வேண்டும் என்றும், பெண்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்றும் நடிகைகள் கூறியுள்ளனர். ஆண்டுதோறும் மார்ச் 8ம்தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று 100வது ஆண்டு மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மாதராய் பிறந்து திரையுலகில் சாதித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் மகளிர் தினத்தையொட்டி தினமலர் டாட் காம் வாசகர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளனர்
த்ரிஷா
எனக்கு எல்லா நாளும் பெண்கள்தினம்தான். எனக்கு வீட்ல, வெளில நல்லா சப்போர்ட் இருக்கு. அதனால்தான் நிறைய வேலை செய்ய முடியுது. அம்மா என்னுடைய தேவைகள் எல்லாத்தையும் கவனித்துக் கொள்வதால் நடிப்புத் துறையில் சரியாக செல்ல முடிகிறது. வேலையை சந்தோஷமாக செய்ய முடிகிறது. இதுவரைக்கும் எனக்கு பெரிய பிரச்னை எதுவும் இருந்ததில்லை. என் வாழ்க்கையில் குறைபடும்படியா எதுவும் இல்லை. பெண்கள் முன்னேறி நிறைய சாதிக்கணும். நாட்டுக்கே பெருமை சேர்க்கணும்
ப்ரியாமணி
முதல்ல பெண்களா பிறந்ததுக்கு பெண்கள் எல்லாரும் பெருமைப்படணும். இப்ப இருக்குற காலகட்டத்துல ஆணுக்கு நிகரா, எல்லா துறைகளிலும் பெண்கள் இருக்காங்க. உதாரணத்துக்கு கல்பனா, சுனிதா, சானியா மிர்சா... இப்படி நிறைய வெற்றி பெற்றவர்களை சொல்ல முடியும். உலக அளவில் நம் பெருமையை எடுத்துட்டு போயிருக்காங்க. நம்மாலும் சாதிக்க முடியும்னு வெற்றிய கொடுத்திருக்காங்க. ரொம்ப பெருமையா இருக்கு. வாழ்த்துக்கள். நிறைய பெண்கள் தைரியமா வெளில வந்து சாதிக்கணும்
சந்தியா
நாங்க ஜெயிச்சிட்டோம், சாதிச்சிட்டோம்னு எல்லாம் பெண்கள் சொல்லிக் கொண்டாலும், இந்தியாவில் பெண்கள் இந்த அளவு வெளியே வர ஆண்கள்தான் காரணம். சமுதாயத்தில் பெண்களும் நல்ல நிலைக்கு வரணும்னு ஆண்கள் விரும்புறாங்க. என் குடும்பத்தில் எனக்கு அப்பாவும், அண்ணாவும் ரொம்ப உதவுறாங்க. அதனால்தான் சந்தியாவா, என்னால இந்த துறைக்கு வர முடிந்தது. ஒவ்வொரு குடும்பத்திலும் அப்பா, அண்ணா, கணவர் என் எல்லாரும் உதவி செய்தால் பெண்கள் நிறைய சாதிக்க முடியும்னு நம்புறேன்
சானாகான்
பெண்கள்னா ஒரு பவர் இருக்குன்னு நான் நினைக்கிறேன். எல்லா இடங்களிலும் பெண்கள் இருக்காங்க. ஒரு குடும்பத்தில் கண்ட்ரோல் பாயிண்ட் அந்த வீட்டில் இருக்கும் பெரிய பாட்டிதான்னு சொல்வேன். பெண்களுக்கு மிகப்பெரிய மரியாதை இங்கே இருக்கு. பெண்களுக்கு இப்ப நிறைய விழிப்புணர்வு வந்திருக்கு. யாரும் வீட்டில் சும்மா இருக்க விரும்புறதில்லை. எனக்கு எங்க அம்மாவோட சப்போர்ட் ரொம்பவே இருக்கு. அது மாதிரி எல்லா பெண்களுக்கும் ஒரு சப்போர்ட் தேவைப்படுது. இந்த தினத்தில் ஆண்கள்கிட்ட கேட்டுக்கிறேன். ஈகோ இல்லாம எல்லோரையும் சரி சமமா பாருங்க. நன்றி! வாழ்த்துக்கள்
மீனாட்சி
என்னை பொறுத்தவரைக்கும் இன்னும் எங்காவது ஒரு இடத்தில் ஆணாதிக்கம் இருக்கத்தான் செய்கிறது. விரைவில் இதெல்லாம் மாறும்னு நினைக்கிறேன். ஈகோ, தான் என்பதெல்லாம் இல்லாமல் பெண்களை அரவணைத்து செல்ல வேண்டும். ஆண்கள் இல்லன்னா பெண்கள் இல்லை. அவங்களால எதையும் தனியா சாதிக்க முடியாது. நான் பெண்ணா பிறந்ததற்கு ரொம்ப சந்தோஷப்படுறேன். பெருமைப்படுறேன். அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்
ரம்பா
ஒவ்வொரு நாளும் மகளிர் தினம்தான். அம்மா, தங்கை, மனைவி, அக்கா இப்படி எந்த பெண் உறவாக இருந்தாலும் காலையில் காபி கொடுக்குறதுல தொடங்கி, ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். இந்தியாவில் மார்ச் 8ம்தேதி பெண்கள் தினம் கொண்டாடுவதில் பெருமையா இருக்கு. எனக்கு இந்திராகாந்தியை ரொம்ப படிக்கும். அவங்க பெஸ்ட் வுமன். அடுத்து என் அம்மாவ ரொம்ப பிடிக்கும். அவங்க இல்லன்னா இன்னிக்கு இந்த ரம்பா இல்லை. அதனால பெண்ணா பிறந்ததுக்கு பெருமைப்படுறேன். உலகத்தில் இருக்குற எல்லா பெண்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
உலகத்தின் கருப்பொருளாய் விளங்கும் பெண்கள் எல்லோருக்கும் என் இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள். தினமலருக்கு நன்றிகள்.
0 கருத்துரைகள்:
Post a Comment